எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 15, 2020

எல்லாம் கொரோனாவால் வந்தது தான்! :)

இந்தக் கொரோனா வந்தாலும் வந்தது. பழைய ஆசாரங்கள் எனப்படுபவற்றுக்கு மீள் பதவி! ஆமாம், இப்போல்லாம் யாரும் யாருடைய எச்சில் உணவையும் தொடுவது இல்லை. இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கும்போது கூடக் கவனமாக இருக்கிறார்கள். அதிலும் தொலைக்காட்சித் தொடர்களில் காதலன், காதலி என்றாலோ அல்லது கணவன், மனைவி என்றாலோ ஒருத்தர் எச்சிலை இன்னொருத்தர் சாப்பிட்டே ஆகணும் போல! ஒரே தம்பளரில் இருந்து பழச்சாறோ அல்லது, இளநீரோ அல்லது ஐஸ்க்ரீமோ அல்லது சாப்பாடோ சாப்பிடுவார்கள் அல்லது ஊட்டி விட்டுக் கொள்ளுவார்கள். எனக்கு அதைப் பார்க்கையிலேயே பற்றிக்கொண்டு கோபமாக வரும். இந்த மாதிரிக் காட்சிகளில் எல்லாம் பணத்துக்காக நடிக்கிறாங்களே என இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் வரும். இன்னும் சிலர் இந்த எச்சிலைப் பொதுவாகக் கடைப்பிடித்தாலும் தங்களுக்கு நெருங்கியவர்கள் எனில் எந்த எச்சில், பத்தும் பார்க்க மாட்டார்கள். அவர்கள் வீட்டுப் பாத்திரத்திலேயே அதாவது சமைக்கும் பாத்திரத்திலேயே கையைப் போட்டு எச்சில் பண்ணிச் சாப்பிட்டால் மிதமிஞ்சிய சந்தோஷம், பெருமையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த எச்சில் அவர்களைப் பொறுத்தமட்டில் பிரசாதம் என நினைக்கிறார்களோ என எனக்குத் தோன்றும்.

ஆனால் எனக்கு என்னமோ எப்போதுமே இந்த எச்சில் பிடிக்காது.பிறந்த வீட்டுப் பக்கம் ரொம்பவே ஆசாரம் பார்ப்பார்கள்.  எங்க வீடுகளில் எதையும் கடித்துச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட நேர்ந்தால் உடனே தனியாகக் கைகழுவவென உள்ள இடத்திற்குப் போய்க் கை கழுவ வேண்டும். கை கழுவாமல் வீட்டில் உள்ள மற்றப் பொருட்கள் எதையும் தொடக் கூடாது. முக்கியமாய்ச் சாப்பிடுகையில் அப்போதெல்லாம் உள்ள மரபுப்படிக் கீழே உட்கார்ந்து தான் சாப்பிடவேண்டும். தட்டோ, இலையோ அதில் நம் இடக்கை தவறியோ அல்லது நாமே பிடித்துக் கொண்டால் இடக்கையை நன்கு அலம்பினால் தான் சாப்பாட்டுப் பாத்திரத்தைத் தொடலாம். அல்லது பக்கத்திலேயே எடுத்து வைத்திருக்கும் மோர், ஊறுகாய், நெய் போன்றவற்றைத் தொடலாம். அநேகமாக இவை எல்லாம் பரிமாறப் பட்டாலும் சில சமயங்களில் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுகையில் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் இவை. நாமாக எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடால் எல்லாவற்றையும் எதிரே வைத்துக் கொள்ளுவதோடு மோர், தயிர், ஊறுகாய், நெய் ஆகியனவும் பக்கத்தில் இருக்க வேண்டும். தட்டில் இடக்கையால் குழம்போ, ரசமோ பரிமாறிக்கொண்டால் உடனே இடக்கையைப் பக்கத்தில் இருக்கும் நீர் நிறைந்த செம்பிலிருந்து நீரைக் கீழே விட்டுக் கொண்டு (அதுவும் அந்தக் கையால் பாத்திரத்தை நேரடியாகத் தொடாமல் சாய்த்து விடவேண்டும்) அதைத் தொட்டுக் கை கழுவிய பின்னர் எடுக்கலாம்.

இப்போதெல்லாம் தட்டில் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு நாற்காலி, அல்லது சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, அல்லது வலக்கையில் சாப்பாடும், இடக்கையில் புத்தகமுமாகவோ சாப்பிடுகின்றனர். அப்போது சாப்பாட்டைச் சாப்பிட்ட வலக்கையாலேயே சாதம் வைத்திருக்கும் பாத்திரத்தில் இருந்தும், சாம்பார், ரசம் அல்லது காய்கள் தேவை என்றாலும் அதே சாப்பிட்ட கையாலேயே போட்டுக் கொள்ளுகின்றனர். இது எச்சில் பரவுவதோடு மட்டுமில்லாமல் மொத்த சாப்பாடும் மிஞ்சினால் மாலைக்குள்ளாக வீணாகிவிடும். அம்பேரிக்காவில் இருக்கிறவங்க எல்லாம் உடனடியாகக் குளிர்சசதனப் பெட்டியில் வைத்தாலும் அதைத் திரும்பச் சூடு பண்ணுகையில் உணவின் தரம் சுமாராகத் தான் இருக்கும். ஆனாலும் இதைப் பலரும் ஒத்துக் கொள்ளுவது இல்லை. எச்சில் என்ன ஒட்டிக்கொள்ளவா செய்கிறது? என்று கேட்பார்கள்.

இன்னும் சிலர் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் எச்சில் பண்ணிக் காபி, தேநீர் குடித்தாலோ, தண்ணீர் குடித்தாலோ அந்தத் தம்பளர்களைக் கழுவுவதற்குத் தனியாகப் போடாமல் எல்லாப் பாத்திரங்களுடனும் போட்டு விடுவார்கள். வந்திருக்கும் விருந்தினர் நமக்கு உயர்வானவர் தான். ஆனால் அவர் எச்சில் உயர்வா என்ன? அவர் வாயில் உள்ள (பாக்டீரியாக்கள்) கொரோனா போன்ற நுண்ணுயிரிகள் அவரையும் அறியாமல், நமக்கும் தெரியாமல் அந்தக் குடித்த தம்பளர்களில் இருந்து மற்றப் பாத்திரங்களுக்குப் பரவ வாய்ப்பு உண்டு. இது தான் இப்போக் கொரோனா விஷயத்திலும் நடந்து வருகிறது. இன்னும் சிலர் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை நமக்குச் சமமாக மதிப்பதாக நினைத்துக் கொண்டு அவங்க சாப்பிடும் தட்டு, குடிக்கும் தம்பளர்களையும் எல்லாப் பாத்திரங்களோடு சேர்த்தே போட்டுக் கழுவும்படி விடுவார்கள். நாம் அதைத் தற்செயலாகப் பார்த்துவிட்டுக் கேட்டால், "நான் இதெல்லாம் பார்ப்பதில்லை! அவளும் நம்மை மாதிரித் தானே!" என்பார்கள். நிச்சயமாய்! நம்மை மாதிரித் தான். அதற்காகத் தட்டு, தம்பளர் எல்லாம் கொடுத்து உணவு கொடுப்பதும் சரியே! ஆனால் அதை முதலில் தனியாகக் கழுவ வேண்டாமா? தனி இடத்தில் அதைக் கழுவின பின்னர் மற்றப் பாத்திரங்களோடு சேர்த்தால் சரி. என்னைக் கேட்டால் இந்தப் பாத்திரங்களைத் தனியாக வைப்பதே சரி.  வேலை செய்பவர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவரின் தட்டுக்களையும் தனியாக வைத்தலே சரி.


எங்க வீட்டில் அந்தக் காலங்களில், அதாவது எண்பதுகளின் கடைசி வரையிலும் சாப்பாடுத் தட்டுகள் வைக்கும் இடம் தனியாக இருக்கும். (இப்போவும் ஸ்ரீரங்கத்தில் இதைக் கடைப்பிடிக்கிறோம். அது என்னமோ இந்த விஷயத்தில் இரண்டு பேருமே திருஷ்டிப்படும் அளவுக்கு மஹா ஒற்றுமை! :P)   சாப்பாடுத் தட்டுகளுக்கு என்றே ஒரு ஆப்பைக்கூடு எனப்படும் அகப்பைக் கூடோ அல்லது  சுவற்றில் ஒரு பிறையோ இருக்கும். அந்த இடத்தில் மட்டுமே சாப்பாடுத் தட்டுகள் வைப்போம், எடுப்போம். என்னதான் சாப்பிட்ட பின்னர் சுத்தம் செய்திருந்தாலும் அந்தத் தட்டுக்களைச் சமையலறையின் தொட்டி முற்றத்தில் அந்தக் காலங்களில் அலம்ப மாட்டார்கள். கொல்லைப்புறம் அல்லது கை கழுவும் இடத்தில் தான் அத்தனை தட்டுக்களையும் எடுத்துச் சென்று அலம்பிச் சாப்பிடப் போடுவார்கள். சாப்பிட்ட பின்னர் மீண்டும் கழுவிச் சுத்தம் செய்து அதற்கென்றிருக்கும் இடத்தில் வைப்பார்கள். மத்தியான சமையலில் மீந்ததை வைக்கும் இடத்தில் பழைய சாதம், குழம்பு போன்றவற்றை வைக்க மாட்டார்கள். பழைய குழம்பைச் சூடு செய்யவேண்டுமெனில் அதற்கென இருக்கும் தனி அடுப்பில் சூடு செய்வார்கள். மாதாந்திர விலக்கு நாட்களில் பெண்களுக்குத் தனிச் சமையல் தான் செய்து போடுவார்கள். அதற்கெனத் தனி அடுப்பு, பாத்திரங்கள், புளி, சாம்பார்ப் பொடி, உப்பு, ஊறுகாய் வகைகள் போன்றவை இருக்கும். மற்றப் பருப்பு வகைகள், காய்கள்,  மோர், பால், போன்றவை மட்டும் வீட்டில் உள்ளவற்றிலிருந்து கொடுப்பார்கள். அப்போதெல்லாம் வீட்டு விலக்கானவர்களுக்கு எனப் பத்துப் பதினைந்து வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளைச் சமைக்கச் சொல்லுவார்கள். அவர்களுக்குச் சமையலும் பழக்கம் ஆகும் என்பதால் இந்த ஏற்பாடு. அப்படியே வீட்டில் உள்ளவர்கள் தான் சமைக்க வேண்டும் எனில் வீட்டு விலக்கானவர்களுக்குப் பழைய சாதமும், குழம்பும் அல்லது தனியாக இருக்கும் ஊறுகாயோடு போட்டு விடுவார்கள்.

பின்னர் வீட்டு வேலை எல்லாம் ஆனதற்குப் பின்னர் வீட்டு விலக்கான பெண்களுக்குத் தனியாகச் சமைத்துப் போடுவார்கள். அதில் மிச்சம் இருந்தால் இரவுக்கும் அதையே வைத்துக் கொண்டு விடுவார்கள். ஒவ்வொரு வீடுகளில் காலையில் பழைய சாதம் போட்ட பின்னர் மத்தியானம் காபியோடு ஏதேனும் பக்ஷணம் வாங்கிக் கொடுத்துவிட்டுப் பின்னர் மாலை சூரிய அஸ்தமனம் ஆகும் முன்னர் சாப்பாடு போடுவார்கள். சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் வீட்டு விலக்கானவர்கள் சாப்பிடக் கூடாது எனச் சொல்லுவார்கள். ஆனால் பெரும்பாலும் இதைக் கடைப்பிடித்தது கிராமங்களில் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமே.   அது எல்லோருக்கும் வீட்டில் சமைத்ததாகவோ அல்லது அவர்களுக்கு எனத் தனியாகச் சமைத்ததாகவோ இருக்கும். அதன் பின்னர் மறுநாள் காலை தான் காபி, பழைய சாதம் எல்லாம். பழைய சாதம் இல்லை எனில் ஓட்டலில் இட்லி வாங்கியும் போடுவார்கள்.  எச்சில், பத்தில் இருந்து எங்கேயோ போயிட்டேன். இருங்க மிச்சத்தையும் நாளைக்குச் சொல்றேன். 

66 comments:

  1. மீ ஃப்ர்ஸ்டூ..

    தேம்ஸ்க்கு கேட்டுதோ?!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தேம்ஸ் இப்போ வராது! பனிக்காலம் வேறே! உறையாமல் இருந்தால் சரி! :)))))

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கீதா, இன்று நான் தான் வந்திருப்பேன் ஆனா படு பிஸியாகிட்டேன், எட்டிப்பார்க்க முடியவில்லை..

      Delete
  2. என் கிராமத்து வாழ்க்கை மற்றும் கல்யாணம் ஆன பிறகு மாமியார் வீட்டு வழக்கம் எல்லாம் அப்படியே உங்கள் பதிவு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இவை அதிகப் பழக்கம். என் மாமியார் வீட்டில் கொஞ்சம் மாறுபடும். மற்றவர்களுக்குக் கடுமையாகப் பார்ப்பார்கள். அதே அவங்க உயர்வாக நினைப்பவர்களுக்குப் பார்ப்பதில்லை. சிப்புச் சிப்பா வரும்.

      Delete
  3. கிட்டத்தட்ட அறுபது எழுபது சதவிகிதம் இப்பவும் எங்கள் வீட்டில் உண்டு. சில சமயங்களில் இப்படிப் பார்த்துப் பார்த்து அதிகமாகவும் புது ரூல்ஸ் போடப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அநேகமாக அனைவரும் கடைப்பிடிப்பது பற்றி சந்தோஷமாக இருக்கிறது.

      Delete
  4. பதிவுகளில், பேஸ்புக்கில் இந்தக் கிருமியின் பெயர் பார்த்தாலே சென்று படிக்கவே தோன்ற மாட்டேன் என்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால் அது ஒழிய மாட்டேன்னு அடம் பிடிக்கிறதே! :(

      Delete
  5. எங்கள் வீட்டிலும் உண்டு. இப்போது பல வீடுகளில் குறைந்து போனது தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஆனால் இப்போது பலரும் இதெல்லாம் பார்ப்பதில்லை. எங்கள் உறவுகளிலேயே பலர் இன்னமுமா இதெல்லாம் பார்க்கிறாய்? என என்னைக் கேட்டிருக்காங்க. பலர் வருவதற்கும் தங்குவதற்கும் யோசிப்பதும் உண்டு. எங்களுக்கெல்லாம் சுதந்திரமா இருந்து பழக்கம் என்பார்கள்.

      Delete
  6. நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா விஷயங்களும் எங்கள் வீட்டுக்கும் பொருந்தும். எனக்கும் எச்சில் அருவெறுப்புதான். சில வீடுகளில் சாப்பிட்ட தட்டை அலம்பாமல் அப்படியே மாற பாத்திரங்களோடு கிச்சன் சிங்கில் போட்டு விடுவார்கள். 
    எங்கள் அம்மா வீட்டில் வீட்டிற்கு விலக்காகி குளித்த நான்காம் நாள் கூட கிச்சனில் நுழைய அனுமதி கிடையாது. இது என் கணவருக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நசிராபாதில் நாங்க இருக்கும்போது எங்க வீட்டுக்குச் சாப்பிட வந்த ஓர் பெண்மணி சாப்பிட்ட கை, வாய் எல்லாவற்றையும் சமையல் அறைக்குள் (என்னைக் கேட்கவே இல்லை) போய் அங்கே பாத்திரங்கள் போட்டிருந்த தொட்டி முற்றத்தில் அலம்பிக் கொண்டு வாயையும் கொப்பளித்தார். இத்தனைக்கும் அவர் ஓர் ராணுவ மருத்துவர். இதன் மூலம் தன்னிடம் உள்ள பாக்டீரியாக்கள், கிருமிகள் சமைக்கும் பாத்திரங்களுக்குப் போகும் என்பதே அவர் உணரவில்லை. வீட்டு விலக்காகி நான்காம் நாள் குளிச்சாலும் தனியாக ஒதுங்கி யார் மேலும் படாமல் இருக்கணும். மறுநாள் எழுந்ததுமே பல் தேய்த்து உடனடியாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும். அதன் பின்னர் தான் காபி எல்லாமே குடிக்கலாம்.

      Delete
  7. வீட்ட விலக்கான பெண்களுக்குத் தனிச் சமையல் - இது மட்டும் நான் கேள்விப்பட்டதோ பார்த்ததோ இல்லை. என் மாமனார், அவங்க ஒரு சாப்பாட்டைச் சாப்பிட்டால் அதனைப் பிறகு சாப்பிட மாட்டார். அப்பம் செய்து அதில் ஒன்றை வீட்டுவிலக்கானவர்கள் சாப்பிட்டால் அதன் பிறகு மிகுதியுள்ள அப்பத்தை அவர் சாப்பிட மாட்டார்.

    மற்றபடி எச்சில் தட்டு கிச்சனுக்குள் வருவது என்பதெல்லாம் நினைக்கவே முடியாது. உள் பாத்திரங்கள் தனி, வெளிப் பாத்திரங்கள் தனி.

    அது சரி.... பொதிகைல படம் பார்க்கிறவங்களுக்கு எச்சில் பண்ணும் காட்சி எப்படித் தெரியும்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை, உங்களுக்கு அனுப்பிய செய்தியைப் பார்த்துட்டீங்கனு தெரியுது. வீட்டு விலக்கான பெண்களுக்குத் தனிச் சமையல் என்பது நான் என் தாத்தா(அம்மாவின் அப்பா), எங்க பெரியப்பா(அப்பாவின் அண்ணா) ஆகியோர் வீடுகளில் பார்த்திருக்கேன். வீட்டு விலக்கானவங்க சாப்பிட்டதை வீட்டில் ஆசாரம் மிக்கப் பெரியவங்க யாரும் சாப்பிட மாட்டாங்க! சேஷம் என்பார்கள். என் மாமியார் காபி கூடத் தனியாகத் தான் போட்டுக் கொடுப்பார். காபிக்குனு தனியான அடுப்பு எங்க வீட்டில் இருந்தது என்றாலும் வீட்டு விலக்கானவங்களுக்கு அந்த அடுப்பில் காபி போடும்படி நேர்ந்தால் மீண்டும் அடுப்பு, சிலிண்டர்னு எல்லாத்தையும் துடைப்பார்.

      Delete
    2. ஏன்? பொதிகைன்னா இம்மாதிரிக் காட்சிகள் உள்ள திரைப்படங்களே வராதா? அதோடு தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பார்க்க முடியும். செய்திகளில் பார்க்கலாம். சென்னை ஐஐடியில் ஒருதரம் அறிவு ஜீவி மாணவர்கள் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நடத்திக் காட்டினார்கள்.

      Delete
  8. யாரு கேக்கறா ? நாம சொன்னா நம்மளை முட்டாள் பிற்போக்குனு சொல்லுவாய்ங்க

    ReplyDelete
    Replies
    1. வாங்க எல்கே, பல வருடங்களுக்குப் பின்னர் இந்த ஊரடங்கால் நீங்கள் இங்கே வர ஆரம்பித்துள்ளீர்கள். தொடரட்டும். என்னைப் பிற்போக்குனு மட்டும் சொன்னதில்லை, ரொம்பவே கடுமையா இருப்பதாகவும் சொல்வாங்க.

      Delete
    2. ஊரடங்கு ஒரு காரணமா வெச்சுக்கிட்டேன். உங்க பதிவுகள் எப்பவும் படிப்பேன். ஆனால் கமெண்ட் பண்ண மாட்டேன். மொபைலில் இருந்து படிப்பேன். அதிகாலையில் எழுந்து வெளில சுத்துவதால் மதியம் தூக்கம் அவசியமா இருந்தது . அப்புறம் வெப் டிசைன் பிஸ்னஸ் மாலையில் . சரியா இருக்கும். இனி கொஞ்சம் ஒழுங்கு பண்ணனும்.

      Delete
    3. ஓ அப்படியா? நன்றி எல்கே. தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    உங்களது பதிவை படித்ததும் எங்கள் வீட்டு பழக்கங்கள் அப்படியே என நினைக்கத் தோன்றுகிறது. எங்கள் வீட்டிலும் இதேதான். அதுவும் அம்மா வீட்டில் பின்பக்க வாசல் வழியாக சுற்றி வந்து வீட்டு வாசல் ரேழியில் பல சாக்குகளை கோர்த்த திரை மாதிரியான அமைப்பை மூன்று புறமும் கட்டிக் கொண்டு (ரூம் மாதிரி செய்து கொண்டு அதில் தான் மூன்று நாட்கள் வாசம்) அதற்குள் கழிக்க வேண்டும். இரவு இரவில் கொல்லையை சுற்றி வீட்டு முன் வாசலுக்கு வருவதற்கே பயமாக இருக்கும். டார்ச் அடித்துக் கொண்டே அந்த இருளை கடப்பதற்குள் பட்ட சிரமங்கள் நினைவுக்கு வருகிறது. எங்கள் பாட்டி மிகவும் ஆசாரம். மதியம் எங்களுக்கு அவர்கள் சாப்பிட்டவுடன் உணவு போட்டால், அதை பாட்டி அப்பா, அம்மா, மூவரும் இரவுக்கு சேஷம் என்று பயன்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு வேறு உணவுதான். மாமியார் வீட்டிலும் அப்படியே.. அதனால் நாம் அனைத்திற்கும் வளைந்து நெளிந்து போய் சமாளித்தோம். ஆனால் இந்த கால தலைமுறைகள் ஒன்றும் சொல்வதற்கில்லை.

    எச்சில் தட்டு வைப்பதற்கு ஓரிடம்.அதுவும் எங்கள் அம்மா அந்த எச்சில் தட்டையே ஒவ்வொருத்தர் தட்டையும் தனித்தனியாக எடுத்துச் சென்று முற்றத்தில் ஒரு ஓரமாக பசுஞ்சாணி போட்டு கழுவி அந்த இடத்தில் கொண்டு வைத்த பின், தரையிலும் சாணியை போட்டு எச்சிலிட பழக்கி இருக்கிறார். சாப்பிடும் போது கீழே அமர்ந்து சாப்பிடும் போதும் இரண்டடி தள்ளித் தள்ளித்தான் அமர வேண்டும். எங்களுக்கு அவர்கள்தான் பரிமாறுவார்கள். கடைசியில் அவர்களுக்கு நாங்கள் பரிமாறுவோம். தானே எடுத்துப் போட்டுக் கொண்டதே கிடையாது. இப்போது காலமும், வீடுகளும் நிறையவே மாறி விட்டது.

    /ஒரே தம்பளரில் இருந்து பழச்சாறோ அல்லது, இளநீரோ அல்லது ஐஸ்க்ரீமோ அல்லது சாப்பாடோ சாப்பிடுவார்கள் அல்லது ஊட்டி விட்டுக் கொள்ளுவார்கள். எனக்கு அதைப் பார்க்கையிலேயே பற்றிக்கொண்டு கோபமாக வரும். /

    ஹா. ஹா. ஹா. நமக்கு கோபம் வந்து என்ன செய்ய? அவர்களுக்கு அது தேவாமிர்தமாக இனிக்கிறதே..!
    உண்மைதான்.. கொரானோ வந்து இந்த எச்சில் பத்தை பழையபடிக்கு நினைவுபடுத்துகிறது. அடுத்தவரின் எச்சில் உமிழ் நீர் கூட மற்றவர் மேல் படாமல், நான்கடி தள்ளி நில்..ஒருத்தர் மூச்சு காத்து கூட ஒருத்தர் மேல் படாமல், கையை எதை தொட்டாலும் கழுவு என கூறி பயமுறுத்தி பழைய சம்பிரதாயங்களை கண்டிப்பாக கூறுகிறது. பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நாங்களும் கொல்லைப்பக்கம் போகச் சுற்றித் தான் போகணும். அதுவும் மழைக்காலத்தில் தோட்டத்தில் நீர் நிரம்பிக் கணுக்காலுக்கும் மேல், சில சமயம் முழங்கால் வரைனு இருக்கும். அதில் தான் போயிருக்கோம். நாங்கள் எனில் நானும் எங்க பெண்ணும். நாங்களும் ஒருத்தர் சாப்பிட்ட தட்டில் இன்னொருத்தர் சாப்பிட மாட்டோம். ஆனால் மாமியார் வீட்டில் அது இல்லை. யார் வேண்டுமானாலும் எந்தத் தட்டையும் போட்டுப்பாங்க. எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது முதலில். என் வரையில் எங்க வீட்டில் எனக்குக் கொடுத்திருந்த தட்டையே போட்டுப்பேன். பிறந்த வீட்டில் இருந்தப்போ அம்மா ஊரில் இல்லாத நாட்களிலும், வீட்டில் இருந்தும் விலக்காக இருக்கும் நாட்களிலும் நான் எடுத்துப் போட்டுக் கொண்டு தான் சாப்பிடுவேன். அப்பா, தம்பி முறையே பள்ளி, கல்லூரி போயிடுவாங்க. அண்ணா ஹோசூரில் வேலை. நானும் அம்மாவும் தானே! அம்மாவுக்குப் போட்டுவிட்டு நானும் எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவேன். புகுந்த வீட்டிலும் அப்படித் தான். மாமியார், மாமனார் வரை பரிமாறியதும் கடைசியா நான் உட்காருகையில் எடுத்துப் போட்டுக் கொண்டு தான் சாப்பிடுவேன். ஒரு சில சமயங்களில் எங்காவது கடை, வங்கி அல்லது மின் கட்டணம் கட்டவெனச் செல்லும்போது முன் கூட்டியே சாப்பிட்டுவிட்டுப் போவேன். மாமியார் மாமனார் சாப்பிடுனு சொல்லிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் அப்போவும் குழம்புப் பாத்திரத்தை, ரசப் பாத்திரம், சாதம் எல்லாம் அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சின்னக் கிண்ணத்தில் குழம்பு, ரசம் எடுத்துக் கொண்டு தேவையான காயைத் தட்டிலே போட்டுக் கொள்வேன். ஒரு தட்டில் தேவையான சாதத்தை வைத்துக் கொள்வேன். ஒருவேளை நான் சாப்பிட்டுவிட்டு மிச்சம் இருந்தால் அதை நேரடியாக சாதப் பாத்திரத்தில் போடமுடியாது. அதே போல் குழம்பு, ரசமும். அப்படியே தனியா மூடி வைத்துவிட்டு இரவில் எனக்குச் சாப்பிடுகையில் எடுத்துப்பேன். இதுவே சில சமயம் நான் முன்னால் சாப்பிடும்படி நேர்ந்தால் மாமியார் அந்தக்காலத்தில் இப்படிப் பெண்கள் முன்னால் சாப்பிட்டால் ஆண்கள் ஸ்த்ரீசேஷம்னு சாப்பிடவே மாட்டாங்கனு சொல்லுவார். அதெல்லாம் ஒரு காலம். இப்போல்லாம் அதெல்லாம் எழுத்தில் சொல்வதோடு சரி! நடப்பில் இருக்காது.

      Delete
    2. கீசா மேடம்... சிறிய வயதில் (பாலகன்) எங்க எல்லாருக்கும் வாதா இலையில் அல்லது தையல் இலையில்தான் சாப்பாடு. பிறகு தட்டு வந்த பிறகு, ஒவ்வொருத்தருக்கும் அவருக்குன்னு தட்டு இருக்கும். எந்தத் தட்டையும் எடுத்துக்கலாம் என்று நாங்க இதுவரை நினைத்தது இல்லை. அது யாருக்கும் பிடிப்பதில்லை. வெளி (ஆபீஸ்) நண்பர்கள் வீட்டில் சாப்பிட வந்தால் அவங்களுக்கு பீங்கான் தட்டுகள் (அழகானவை) உபயோகிப்போம். உறவினர்கள் வந்தால், இலைதான்.

      Delete
    3. நாங்களும் வாதா இலையில் சாப்பிட்டிருக்கோம் என்றாலும் அது ஒரு ஆசைக்குத் தான். வாழைப்பூ மடலில் கூடச் சாப்பிட்டிருக்கோம். நீங்க சொல்வது போல் எங்க வீட்டிலும் நண்பர்கள், உறவினர்கள் சாப்பிட வந்தால் இலை அல்லது பழக்கம் இல்லைனால் அவங்களுக்குத் தனியா இருக்கும் நல்ல விசாலமான தட்டுகள். காஃபி கூட எச்சில் பண்ணிச் சாப்பிடவெனத் தனித் தம்பளர்கள், பீங்கான் கப்புகள் வைச்சிருக்கேன். கேட்டுக் கொண்டு அதில் கொடுத்துடுவேன்.

      Delete
  10. பழமையான வழக்கங்கள்ல எனக்கு மிகவும் நெருடுவது ஒன்று உண்டு.

    தளிகை ஆன பிறகு, கண்டருளப்பண்ண நிறைய நேரமாகும். பிறகு ஆண்கள் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அவங்களுக்கே சூடு குறைந்துவிடும். அதற்கு அப்புறம் இடத்தைச் சுத்தம் செய்து பிறகு பெண்கள் சாப்பிட வேண்டும்.

    இந்த வழக்கம் என் மனதுக்கு ஒப்புவதில்லை. என் பெரியம்மா என்னிடம் சொன்னார், 'எனக்கு ஒட்டிக்க ஒட்டிக்க-அதாவது கொதிக்க கொதிக்க சாப்பிடப் பிடிக்கும்.ஆனால் வாழ்க்கையில் அப்படி ஒரு வேளையும் சாப்பிட்டதில்லை' என்று.

    இப்பவும் சில யாத்திரைகளில் செல்லும்போது இதே வழக்கம்தான் அனுசரிப்பார்கள். முதலில் ஆண்களுக்கு பரிமாறிவிட்டு பிறகு தொடர்ந்து பெண்களுக்கு. அதேபோல ஆண்கள்தான் முதலில் எழுந்திருக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லும் மாதிரி எல்லாம் எங்க வீடுகளில் இல்லை, நெல்லை! சமைத்து முடிந்ததுமே நிவேதனம் செய்துடுவோம். இதில் எங்க மாமியார் வீட்டில் தான் முழுச் சமையலும் ஆனபின்னர் நிவேதனம். எங்க அப்பா வீட்டில் எல்லாம் சாதம், பருப்பு ஆனதுமே நிவேதனம் ஆகி விடும். உடனே சமையல் ஆனதும் அப்பா, அண்ணா, தம்பியோடு எப்போவானும் கிளாஸ் இல்லைனா நானும் சாப்பிட்டுவிடுவோம். அடுத்த அரைமணிக்குள் அம்மாவும் சாப்பிட்டு விடுவார். ஆகவே பிரச்னை இல்லை.

      Delete
    2. ஆனால் மாமியார் வீட்டில் காலை 2,3 தரம் காபி பின்னர் தட்டு நிறைய முறுக்கு, தேன்குழல் ஏதேனும் ஸ்வீட் என பக்ஷணங்கள் சாப்பிடுவார்கள். மாமியார் மெதுவாகத் தான் குளிக்கவே போவார். கிராமம் தானே. பள்ளி இருக்கும் மைத்துனர்களுக்கு எனத் தனியாக சாதம் வடித்துப் போட்டுக் கையிலும் கொடுத்துவிடுவார். பின்னர் பத்துமணிக்குக் குளிக்கப் போனால் குளித்து முடித்து வந்து சமைத்து முடிக்கப் பனிரண்டு, பனிரண்டரை ஆகி விடும். சமையல் ஆகிவிட்டது எனத் தெரிந்தால் தான் மாமனார் குளிக்கவே போவார். அதுக்கப்புறமா அவங்க சாப்பிட்டுவிட்டுச் சில, பல சமயங்களில் இலையை விட்டு எழுந்திருக்காமலேயே பழைய கதைகள் பேசிக் கொண்டிருப்பார்கள். இங்கே எனக்குப் பசி பிச்சுக்கும். மயக்கமே வரும். ஒரு தரம் மயங்கியும் விழுந்திருக்கேன். ஆனாலும் இரண்டு மணிக்குத் தான் சாப்பாட்டைக் கண்ணால் பார்க்கலாம். அதுவே நான் சென்னைக் குடித்தனம் வந்த பின்னர் நாங்க இரண்டு பேராக இருந்தப்போ அவர் சாப்பிடும்போதே என்னையும் சாப்பிடச் சொல்லுவார். நான் தான் சாப்பிட மாட்டேன். எனக்குப் புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடணும். ஆகவே அவரை அலுவலகம் அனுப்பி வைச்சுட்டு மெதுவாப் புத்தகத்தை எடுத்துக் கொண்டே சாப்பிடுவேன். அது ஒரூ காலம். இப்போல்லாம் ஏதோ சமையல், சாப்பாடுனு ஆகி விட்டது.

      Delete
    3. யாத்திரைகளில் நாங்க போனப்போ எல்லாம் நவ பிருந்தாவன், அஹோபிலம், கயிலை யாத்திரை போன்றவற்றில் சாப்பாடு இருவருக்கும் சேர்த்துத் தான் கொடுத்தார்கள். தனியாகவெல்லாம் கொடுக்கவில்லை. அதே போல் யார் முன்னாடி சாப்பிட்டாங்களோ அவங்க தான் எழுந்து கை கழுவுவோம். இதில் கூட ஆண், பெண் பார்த்தது இல்லை.

      Delete
  11. மிக அருமையான பதிவு.
    எச்சில் இறக்கடிக்கும் , பத்து பறக்கடிக்கும்னு சொல்லியே அம்மா
    மிரட்டுவார் சின்ன வயதில். அப்படியே பழகி விட்டது.

    புக்ககப் பாட்டியும் நிறைய ஆச்சாரம் பார்ப்பார்.
    இரண்டு வேளையும் சமையல் என்பதால். எல்லோரும் சாப்பிட்ட பிறௌ,
    தையல் இலையில் ரசம் சாதம் , தீட்டு அப்பளம் அதாவது கடையில் வாங்கியது
    காய்ச்சி கொடுப்பார்.
    மாமியாருக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.
    நான் வீட்டுக்கு விலக்கு என்றாலே அவருக்குக் கோபம் வரும்.
    தான் சமையல் செய்ய வேண்டுமே என்று.
    என் பெண் நிறைய உதவி செய்வாள்.
    எல்லாம் மாறியாச்சு.

    ஆனால் ஹைஜீன் என்ற ரூபத்தில் இங்கே நடமாடுகிறது.
    எங்கள் மகள் அதில் நல்ல் கட்டுப்பாடு. பிள்ளைகளையும் பழக்கி இருக்கிறாள்.
    மேஜையில் வைத்து குழம்பு, சாதம் என்று உபயோகிப்பதில்லை.
    அவரவர்க்கு வேண்டும் உணவை எடுத்துக்
    கொண்டு எல்லோரும் சாப்பிடுவோம். தனிதனித் தட்டு தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, வல்லி, என் மாமியாருக்கும் நான் வீட்டு விலக்கு ஆனால் கோபம் வரும் என்பதோடு சீக்கிரம் ஆகிவிட்டேனோ என்றும் சந்தேகிப்பார்.வேலை செய்ய வேண்டி இருக்குனு விலகிடறியானு கூடக் கேட்பார். இத்தனைக்கும் குழந்தைகளுக்கோ, அவருக்கோ சாப்பாடு வேண்டாம்னு சொல்லிடுவோம். வெளியில் வாங்கிக் கொடுத்துடுவார். அவங்க காலம் வேறே, நம்ம காலம் வேறே!

      Delete
  12. முன்னோர்களின் செயல்களின் நலன்கள் உண்டு இதை இன்றைய இளைய சமூகத்தினர் ஏற்றுக் கொள்வதில்லை காரணம் டிகிரி படித்தவர்களாம்.

    படித்த பெண்கள்தான் டிக்டாக்கில் தன்னையும் சீரழித்து, சமூகத்தையும் கேவலப்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இளைய தலைமுறை இதற்குப் படிப்பை மட்டும் காரணம் சொல்லுவதில்லை கில்லர்ஜி. அவங்க ரொம்பப் பெருந்தன்மையோடு நடந்துக்கறாப்போல் சொல்லுவாங்க! என்னிடம் நீ இன்னமும் அப்படியே மாறாமல் இருக்கியே எனச் சிரிப்பார்கள்.

      இந்த டிக்டாக்னா என்னனே எனக்குத் தெரியறதில்லை. ஆர்வமும் இல்லை.

      Delete
    2. டிக்டாக் என்பது யூட்டியூப் போல ஓர் வலைத்தளம் அதில் தன்னைத்தானே ஆபாசமாக காணொளி எடுத்து அல்லது ஆபாசமாக பேசி எடுத்து அல்லது டான்ஸ் ஆடி வெளியிடுகிறார்கள்.

      இதை செய்வது எல்லோருமே படித்த பெண்களே காரணம் என்ன ?

      லைக் கிடைக்கிறதாம் இதைப் பார்த்தவர்கள் அந்த வீட்டில் பெண் எடுப்பார்களா ?

      இதனைக் குறித்து நிறைய எழுதலாம் போர்க்கொடி பறந்து விடும்.

      Delete
    3. ஓஹோ! முகநூலில் பார்த்திருக்கேன் டிக்டாக் எனப்பேசிக் கொள்வதை. விபரம் தெரியாது! ரொம்பக் கொடுமையாக இருக்கே!

      Delete
  13. திரும்பத் திரும்ப எச்சில் எனும் வார்த்தையைப் படிக்கவே எனக்கு பிரட்டிக் கொண்டு வருகிறது:)) ஹா ஹா ஹா நான் எதையும் பொறுப்பேன் ஆனா இந்த எச்சில் மட்டும் பார்க்க முடியாது, ஆரும் சத்தி எடுத்தால் உடனே நானும் குவா குவா என ஓங்காளிப்பேன்.. ஆரும் பிறஸ் பண்ணும்போது பார்க்க மாட்டேன்[குழந்தைகள் விதிவிலக்கு]..

    ஆனா நம் நம் குடும்பத்துள் உணவு ஊட்டுவது, தட்டில் சாப்பிடுவது சகஜம், அப்படி இல்லை எனில் அங்கு அன்பில்லை என்பது போலத்தான் அர்த்தம் எடுப்பேன் நான்.. ஆகவும் எச்சில் எனப் பார்ப்பதை நான் ஆமோதிக்க மாட்டேன், இப்போ நான் சாப்பிடும்போது அக்காவின், அண்ணனின் பிள்ளைகள்[பெரியாட்கள் தான்] ஆனாலும் வந்து சித்தி ஆஆஅ என்பினம் ஒரு வாய் தீத்தி விடுவேன்.. இது எல்லாம் அன்பினால் எழுவது..

    மற்றும்படி, ஏனைய குடும்பங்கள் எனில் ஒருவர் மிகுதியை மற்றவர் எடுக்கக்கூடாதுதான், இங்கு ஸ்கூலில் பழக்கி..பிள்ளைகளும் அப்படி அடுத்தவர்களின் மிகுதியைத் தொடுவதில்லை..

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிஞ்சு, சில குடும்பங்களில் அப்படிச் சாப்பிடுவதை நானும் பார்த்திருக்கேன். நான் அப்படிக் குழந்தைகளுடன் கூடப் ப்கிர்ந்தது இல்லை. சின்ன வயசில் இருந்தே அவங்களுக்குத் துண்டு, சோப்பு, எண்ணெய், சீப்பு, பவுடர்னு எல்லாம் தனி! அதை நான் பயன்படுத்த மாட்டேன். என்னுடையதை அவங்க பயன்படுத்த மாட்டாங்க.

      Delete
  14. நானும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் கீசாக்கா, சாப்பிட்ட கையாலேயே கறண்டியைப் பிடித்து எடுப்பது, அதே கையாலேயே தண்ணியைத் தூக்கிக் குடிப்பது, இதெல்லாம் அவரவர் பழக்க வழக்கங்கள்.. சின்ன வயசில இருந்து அவர்களின் பெற்றோர் பழக்கி இருக்க வேண்டும் இவற்றை, அடுத்தவர்கள் என்ன நினைப்பினம் எனும் நினைவுகூட இல்லாமல் இருப்பார்கள்.

    ஆனா நீங்க சொல்லும் அக்கால பல விசயங்கள் இன்று இல்லாமலேயே போய் விட்டது கடைப்பிடிப்பதும் கஸ்டம், ஆனா எதுவாயினும் சுத்தமாக இருப்பது முக்கியம்.

    நாங்கள் அசைவம் உண்டாலும், அத்தனையும் புறிம்பான பாத்திரங்கள், வெட்டும் board , கரண்டி என அத்தனையும்... கத்திகூட புறிம்பாகத்தான் வைத்திருப்போம். பின்பு கழுவியதும், வெயில் இருப்பின் வெயிலில், இல்லை எனில் ஹீட்டர் வெக்கையில் வைத்து எடுத்த பின்பே, அதற்குரிய இடத்தில் வைப்பேன். நான் இல்லை எனினும் யாரும் கலந்து பாவிக்க மாட்டினம், பழகி விட்டார்கள் வீட்டில்.. அதேபோல வைத்து எடுப்பதும் புறிம்பான செல்ஃப் களில்தான்.

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, தொலைக்காட்சியில் சமையல் செய்முறை செய்து காட்டுபவர்களைப் பார்த்தீர்களானால் ஒரு சின்னக் கரண்டி அல்லது ஸ்பூனால் ருசி பார்க்க எடுப்பார்கள். வாய்க்குள் விட்டுச் சப்பிச் சாப்பிட்டுவிட்டு அந்தச் சமைத்துக்கொண்டிருக்கும் உணவின் மேலேயே அந்தக் கரண்டி அல்லது ஸ்பூனைப் போட்டுக் கலக்குவார்கள். எனக்கு இங்கே குமட்டும்! இன்னும் சிலர் கையில் விட்டு நக்கிச் சாப்பிட்டுவிட்டு அந்தக் கையைக் கழுவாமலேயே உணவில் கரண்டியைப் போடுவார்கள். இதுக்காகவே நான் இந்த சமையல் குறிப்புகளெல்லாம் பார்ப்பது இல்லை. வெங்கடேஷ் பட் செய்முறை கொஞ்சம் பார்த்தேன். அவரும் எச்சில் செய்து தான் ருசி பார்க்கிறார். பின்னர் விட்டுவிட்டேன். இப்போ எங்களுக்கு விஜய் தொலைக்காட்சியே வராது.

      Delete
    2. பெரிய பெரிய தொப்பி தலையை அலங்கரித்தாலும் (!)
      கையில் ஊற்றி நக்கி உப்பு பார்ப்பதும்... வேறு சில தில்லாலங்கடிகளும் எனக்குப் பிடிக்காது...

      நான் சமைக்கும் போது உப்பு பார்ப்பதேயில்லை... நண்பர் யாரையும் அழைத்திருந்தால் மட்டும் கொஞ்சம் சுதாரிப்பாக பார்த்துக் கொள்வேன்...

      Delete
    3. எனக்கும் அதே தான். உப்புப் பார்த்து வழக்கமே இல்லை. இதனால் உப்புச் சேர்க்க மறந்து விடும் சில நாட்களில் இருவருக்கும் வாக்குவாதம் வந்துடும். :( ஸ்வாமிக்கு உப்பு இல்லாமலா நிவேதனம் செய்தேனு கேட்பார். சாம்பார், ரசமெல்லாம் ஸ்வாமிக்கு வைப்பதில்லை. அதோடு மிகுந்த ஆசாரம், பக்தி, தவ வாழ்க்கை வாழ்பவர்கள் உணவில் உப்பில்லாமலே நிவேதனம் செய்வது உண்டு. ஏனெனில் கடல் உப்பு அவர்களுக்கு ஆசாரமற்றது. மலையிலிருந்து எடுக்கப்படும் உப்பே சேர்த்துக் கொள்வார்கள். அது இங்கே தமிழ்நாட்டில் கிடைப்பது அரிது. பொதுவாகவே என் பெரியப்பா தினம் தினம் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யப்படும் சாதம், பருப்பில் உப்பில்லாமல் பண்ணலாம் என்பார்.

      Delete
    4. இலையில் பரிமாறும்போதும் அதுவும் மிகுந்த ஆசாரமானவர்கள் எனில் பருப்பில் உப்புச் சேர்த்திருந்தால் இலையின் மேல்பக்கமே வைக்க வேண்டும் என்பார்கள். பச்சடி, கறி, கூட்டுப்பரிமாறியதும் அதற்குக் கீழே இருக்கும் இடத்தில் பருப்பைப் பரிமாறச் சொல்லுவார்கள். பருப்பில் உப்பில்லை எனில் பாயசத்துக்குப் பக்கம் பரிமாறச் சொல்லுவார்கள். இதை என் பிறந்த வீட்டில் கடுமையாகக் கடைப்பிடித்து வந்தார்கள்.

      Delete
  15. நாம் தினம் பாவிக்கும் பிளேட், மற்றும் கப் களில் விசிட்டேர்ஸ் க்கு உணவு, ரீ குடுப்பதில்லை, புதிதாக வைத்திருப்போம்.. அது விசிட்டேர்ஸ் க்கு மட்டும் என. ஆனா பல வீடுகளில், தாம் குடிப்பதிலேயே விட்டுக்கு வருவோருக்கும் குடுப்பார்கள், அதுவும் ஒருவித அரியண்டமாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நான் தம்பளரில் இருந்து வருபவர்களுக்காகத் தனியே வைச்சிருக்கேன். சிலருக்கு எவர்சில்வர் தம்பளரில் தான் காபி குடிக்கப் பிடிக்கும். ஆனால் எச்சில் செய்து குடிப்பார்கள். ஆகவே அதற்கெனத் தனியாக தம்பளர், வட்டை எனப்படும் டபரா எல்லாமும் உண்டு. தேநீர்க்கோப்பைகளும் 2 டஜன்களுக்குக் குறையாமல் இருந்தன. இப்போச் சிலது தூக்கிப் போடும்படி ஆகி விட்டது. ஒரு டஜனுக்குள் இருக்கின்றன.

      Delete
  16. ஹா ஹா ஹா அம்மா அப்பவுடன் இருந்த காலம் வரை, எங்களுக்கும், பீரியட்ஸ் காலங்களில், புறிம்பான கப், பிளேட், பாய் தலையணை, பெட்சீட் என புறிம்பாக இருக்கும்.. ஒரு அறையை மட்டும்தான் பாவிக்கலாம், வேறு எங்கும் உலாவ முடியாது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு அப்போ வாழ்க்கை வெறுக்கும், சில நண்பிகள் சொல்லுவினம் தம் வீடுகளில் அப்படி இல்லை என, எனக்கு அதைக் கேட்க ஆசையாக இருக்கும்.. ஆனா திருமணமான பின்பும், அப்பா அம்மாவுடந்தான் இருந்தோம், ஆனா நானே அம்மாவிடம் சொல்லிவிட்டேன், என் கணவர் சொல்கிறார், அப்படி எல்லாம் பார்க்க வேண்டாமாம் என ஹா ஹா ஹா இருந்தாலும் அம்மா கிச்சினுக்குள் மட்டும் என்னை விடவில்லை முன்பு கர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடிப் பிஞ்சு, எங்க வீட்டிலும் இப்போல்லாம் ரொம்பப் பார்க்கலைனாலும் சமையலறைக்குள் விடுவதில்லை. அவங்க வரை தனியாகவே இருப்பாங்க! சாப்பாடு எல்லாம் நான் எடுத்துக் கொடுத்துடுவேன். சமையல் முழுவதும் நானே செய்துடுவேன். ஆனால் முன்னைப் போல் தனியாக அறையில் இருப்பதில்லை தான்.

      Delete
  17. கீசாக்கா உங்கள் கருத்தில் ஒன்று மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை, அதாவது நம் வீட்டுக்கு வந்த விருந்தினர் பாவித்தவற்றை மட்டும் தனியாக பிரித்துக் கழுவ வேண்டும், அவர்களிடம் பக்ரீறியா இருக்காதா என்கிறீங்கள் அது தப்பு, அப்படி நினைக்கவே கூடாது, நம்மை நினைச்சு, நம்மை மதித்து, நமக்காகத்தான் நம்மிடம் வருகிறார்கள், நாம் நம் கையால, கையை போட்டுப் பிசைந்து தயாரித்த உணவை உண்கின்றனர்.. பின்பு அவர்கள் பிளேட், கப் ஐ மட்டும் புறிம்பாக பாவிக்க வேண்டும் என்பது மகா தப்பு.. இது ஜாதி பார்ப்பதை விட மோசம்..

    அவர்களதும் எங்களதும் கப் களைப் புறிம்பாகவும், சாப்பிட்ட தட்டுக்களைப் புறிம்பாகவும் கழுவலாம்.. மற்றும்படி அப்படிச் சொல்லக்கூடாது, அப்படி எனில் நாம் மட்டும் பெரிய சுத்தக்காரரோ? நாம் செய்த உணவை அவர்கள் உண்கினமே..

    இன்னொன்று, இப்படி எனில், நாம் வீட்டை விட்டு வெளியே எங்குமே சாப்பிடவே கூடாதே... அடுத்தவர் செய்த உணவை உண்பதில் பக்டீரியா வராதோ? என்னா பேச்சுப் பேசுறீங்க நீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் சொல்லி இருப்பது எல்லாருடைய எச்சில் போல் விருந்தினருடையதும் தவிர்க்க வேண்டிய ஒன்றே. வீட்டில் உள்ள அனைவரது எச்சில் பாத்திரங்களையும் தனியாகத் தானே கழுவித் தனியாகத் தானே வைக்கிறோம். விருந்தினருடையதும் அப்படித் தான் என்பது என் கருத்து. மற்றபடி நம்முடையதையே வீட்டில் சேர்க்கக் கூடாது என்பது என்னோட கட்டாயமான கருத்து. அது யாராக இருந்தாலும். எங்க உறவினர் ஒருத்தர் முக்கியமான விருந்தாளிகள் வந்தால் அவங்க சாப்பிட்ட பாத்திரங்களைத் தனியாகக் கழுவாமல் சமைக்கும் பாத்திரங்கள் எல்லாவற்றுடனும் போட்டுத் தேய்ப்பார். அப்போது அவர் முகமே ஜொலிக்கும். நாம் சொன்னால், அவங்களுக்கெல்லாம் பார்க்கலாமா என்பார்! அது ஏதோ பிரசாதம் போல நினைப்பார். :))))) நானெல்லாம் எங்கள் குழந்தைகளிடமே கண்டிப்புக் காட்டியவள். அங்கே போனாலும் எங்களுக்காகவே அவங்களும் இதை எல்லாம் பார்ப்பார்கள்.

      Delete
  18. இன்னொன்று அதை இந்தியாவில் தான் நாம் பார்க்கிறோம், இலங்கையில் அப்படிக் கிடையவே கிடையாது.. அதாவது சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவி விட்டுச் செல்கின்றனர், அதுவும் சாப்பாட்டு மேசையில் வைத்தே, தட்டில் மிச்சச் சாப்பாடு இருந்தாலும் அதுக்குள் கழுவுகின்றனர், அப்போ அதை எடுத்துச் சுத்தம் செய்வோருக்கு எவ்வளவு அருவருப்பாக இருக்கும்.... அதைப்போல அருவருப்பான விசயம் வேறொன்றுமில்லை.. எனக்கு அப்படி ரி வியில் பார்க்கும்போதே பிரட்டிக் கொண்டு வரும்...

    ஆனா அது நாடகம் படங்களில் மட்டும்தானோ? இல்லை பல வீடுகளில் அப்படி பண்ணுகின்றார்களோ தெரியவில்லை... இங்கிருக்கும் இந்திய நண்பர்கள் யாரும் அப்படிச் செய்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடும் தட்டில் சாப்பாடு மிச்சம் இருக்கையில் கை கழுவும் வழக்கம் எங்களுக்கு இல்லை. தொலைக்காட்சிகள், படங்களில் தான் நானும் பார்க்கிறேன். அது அருவருப்புத் தான். அந்தத் தட்டை அப்படியே எடுத்துக் கொண்டு போய் எல்லாப் பாத்திரங்களோடும் போடுவார்கள்! கஷ்டம்! :(

      Delete
    2. உண்டு . சிலர் வீட்டில் பார்த்ததுண்டு

      Delete
  19. அனைத்தும் தலைகீழ் மாற்றங்கள்...

    அனைத்து பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் சிறுசிறுக தூக்கிப்போட்டு துவம்சம் செய்து கொண்டிருக்கிறது இன்றைய நிலை...

    இயற்கையை சரணடைவதே ஒரே வழி...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திரு தனபாலன். இயற்கை அன்னை கைவிடமாட்டாள். காப்பாற்றுவாள்.

      Delete
  20. முன்பு நீங்கள் பகிர்ந்த போது நிறைய பேசினோம் நினைவு இருக்கிறது.
    சாப்பிட்ட இடத்தை எப்படி துடைக்க வேண்டும் என்று சொல்லி தருவார் மாமியார். எங்கள் வீட்டை விட ஆசாரம் பார்ப்பார் அத்தை.

    அப்பளத்தை இடது கையில் வைத்து சாப்பிடக்கூடாது. உப்பை, ஊறுகாயை இடது கையால் எடுக்க கூடாது


    இப்போது முடிந்தவரை கடைபிடிக்கிறார்கள்.

    சாணித்துணி என்று இருக்கும் பசும் சாணத்தை வைத்து பத்தை ஒத்தி எடுக்க வேண்டும் அப்புறம் துணியால் துடைக்க வேண்டும் அப்புறம் அதை தனியாக அலசி ஒதுக்குபுறமாக காய வைக்க வேண்டும்.

    சாப்பிட்ட இடத்தை துடைக்கும் போது மேலிருந்து கீழாக துடைக்க வேண்டும் மேலே மறுபடி போக கூடாது.

    வீடு துடைக்க வேறு துணி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, பொதுவாகவே இடக்கையால் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என்பார்கள். அதனால் தான் எங்கள் வீட்டில் சாப்பிடுகையில் தண்ணீரே குடிக்கக் கூடாது என்று வற்புறுத்துவார்கள். ரொம்பப் புரையேறினால் மட்டும் விதிவிலக்கு. சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்ய எச்சில் இடும்போது நடுவில் கையை எடுக்கக் கூடாது. தொடர்ந்து இட்டு முடிக்கவேண்டும் எவ்வளவு பெரிய இடமானாலும். இல்லை எனில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். அதே போல் பெருக்குகையில் காலை பெருக்கும்போது வாசலை நோக்கியும் (வீட்டுக்குள் மஹாலக்ஷ்மி இருப்பதால்) மாலை பெருக்கும்போது வீட்டுக்குள்ளும் பெருக்க வேண்டும். மஹாலக்ஷ்மி வாசலில் நிலைப்படியில் இருப்பாள் என்பார்கள். ஆகவே அவள் மேல் படக்கூடாது! இப்போதெல்லாம் காலை ஒரு முறை பெருக்கி வீட்டைச் சுத்தம் செய்தாலே பெரிய விஷயம். மாலை பலரும் பெருக்குவது இல்லை. நான் தான் சுமார் 5 முறையாவது பெருக்குவேன். :))))))))

      Delete
    2. இப்போவும் நான் சாப்பாட்டு மேஜையைச் சுத்தம் செய்யத் தனித்துணி தான் வைத்திருக்கிறேன். அதனால் மற்றவற்றைத் துடைப்பது இல்லை. வீட்டுக்குள் சமையலறைக்குள் சுத்தம் செய்யத் தனித்துணி. தினம் அவற்றை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைத்துக் காயவைத்து விடுவேன்.

      Delete
  21. சிறு வயதிலிருந்தே எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் தனித்தனிதான். விரதநாட்களில் பிறம்பான சமையல் பாத்திரங்கள்.இதேபழக்கம்தான் இப்பொழுதும்.

    ReplyDelete
    Replies
    1. பலரும் இப்படித்தானே பழகி இருக்கோம் மாதேவி. அந்தக்காலப் பெரியவர்களும் நம்மை அப்படியே பழக்கி விட்டார்கள்.

      Delete
  22. நிறைய விஷயங்கள் அம்மா சொல்வதுதான் ஊரில் .எனக்கு குழந்தைகளை முத்தமிடுவது பிடிக்காதுக்கா .எங்க மகளையே உச்சந்தலையில் தான் முத்தமிடுவேன் .இங்கே எல்லாம் பீங்கான் என்பதால் டிஷ் வாஷரில் போடுவேன் முதலில் அலசிட்டே ..இன்னொன்றும் சொல்லணும் எனக்கு இருமல் தும்மல் இருந்தால் விருந்தினர் வரும்போது சமைக்க மாட்டேன் ஆர்டர் தான் .தட்டில் கைகழுவும் பழக்கம் எல்லாம் இல்லவேயில்லை ..கொரோனா வந்ததும் இங்கே சோஷியல் டிஸ்டன்சிங் தனி டவல் இப்படி எத்த்னை ரூல்ஸ் போட்டாங்க ஆனா இதெல்லாம் நம் ஊரில் நம் பாட்டி தாத்தா காலத்தில் இருந்தே பார்த்து செஞ்சுட்டு வரோம் .வீட்டுவிலக்கான பெண்களுக்கு தனி உணவு தனி இருப்பிடம்லாம் ஒரு காரண காரியத்துடன் செய்யப்பட்டதே .தொலைக்காட்சி சீரியல்கள் அதிமுட்டாள்தனம் ..ஒரே தட்டில் சாப்பிடுவது எச்சில் தம்ளரில் குடிப்பது  பெருமையா ?? சீரியல் எடுக்கிறவனை கட்டையால் அடிக்கணும் .எதெதையோ மூட  நம்பிக்கைன்னு சொல்ரவங்க இதை தடுக்காம இருக்காங்களேஎங்க வீட்டில் காபி மக் தனித்தனி ஒருவருடையது இன்னொருவருக்கு மாற்ற கூடாதுன்னு சொல்லியிருக்கேன் அதோட தட்டில் இருந் கைபோட்டு எடுப்பதெல்லாம்   நோ தான் . கொரோனா காலம் கடந்த ஞானத்தை கொண்டுவந்திருக்கு என்பதில் ஐயமேயில்லை .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து கிடைச்சிருக்கு ஏஞ்சல். இதே தான் எங்கள் வீட்டில் கடைப்பிடிப்பதும். இப்போவும் என் கணவர் தண்ணீர் குடிக்கும் சொம்பால் நான் குடிக்க மாட்டேன். அதே போல் நான் குடிக்கும் சொம்பால் அவர் குடிக்க மாட்டார். இத்தனைக்கும் தூக்கித் தான் குடிப்போம். அதே போல் தேநீர்க் கப்புகளும் தனித்தனி! பொதுவாக நான் கொஞ்சமாகத் தேநீர் குடிப்பதால் அதற்கென இருக்கும் சின்னத் தம்பளரில் விட்டுக் குடித்துவிடுவேன். அவருக்குத் தனிக் கப். தொலைக்காட்சித்தொடர்கள், திரைப்படங்களில் இந்த எச்சில் பரிமாற்றம் பார்த்தால் எனக்குக் குமட்டிக் கொண்டு தான் வரும். இந்தக் கொரோனா வந்து மக்களுக்கு மறந்திருக்கும் விஷயங்களை எல்லாம் நினைவூட்டி இருப்பது ஒரு வகையில் நல்லதே!

      Delete
  23. 😎😎😎😎😎😎 what happened to my comment??????

    ReplyDelete
    Replies
    1. இது ஒண்ணுதானே வந்திருக்கு ஏஞ்சல்? ஸ்பாமில் கூடக் காணோமே! மறுபடி பார்க்கிறேன்.

      Delete
  24. பிராமணர் வீடுகள் போல கடுமையான நடைமுறைகள் இல்லாவிட்டாலும்
    சுத்தம் சுகாதாரம் பயிற்றுவிக்கப்பட்டே வளர்க்கப்பட்டோம்...

    விவரம் தெரிந்த நாள் முதலாக விடியலில் எழுந்ததும் குளித்து விட்டு
    திருநீறணிந்தபிறகு தான் காஃபி அல்லது தேநீர்...

    இங்கும் இத்தனைக் குளிரிலும் விடியற்காலைக் குளியலை விட்டதேயில்லை...

    நள்ளிரவில் தண்ணீர்த் தொட்டி காலியாக இருந்து -
    அதனால் காலையில் குளிக்கத் தவறினால் அன்றைக்கு மனம் நிம்மதியாகவே இருக்காது...

    நள்ளிரவில் எழுந்து கொண்டால் கை கால்களைக் கழுவாமல் மீண்டும் உறங்கியதே இல்லை..

    இன்றைக்கும் பங்களாதேஷிகள் - அவர்களும் மனிதர்கள் தான் - என்றாலும்
    அவர்கள் கையால் கொடுக்கும் எதையும் வாங்கி உண்ண மாட்டேன்...

    இங்குள்ள நமது உணவகங்களில் அவர்கள் பரிமாறும் விதத்தில் மனது சற்று அசூயை அடைந்தாலும் பிறகு அந்த உணவகங்களுக்குச் சென்று அங்கே அமர்ந்து உண்பதில்லை...

    Pack செய்து வாங்கிக் கொண்டு வந்து விடுவேன்...

    ஒருசமயம் இங்கே சமையல் கூடத்தில் ஒருவர் சமைக்கும் போது செய்ததைக் கண்டு திடுக்கிட்டு
    நாலு வருட காலம் அந்த ஆள் சமைத்ததைச் சாப்பிடாமல் இருந்தேன்...

    அவன் ஊருக்குத் திரும்பிப் போனதும் தான் மனம் ஆறிற்று....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, என் பிறந்த வீட்டில் அப்பா இருந்தவரையிலும் குளித்துவிட்டுத் தான் காபிக்கு டிகாக்ஷனே போட வேண்டும். அதே போல் நாங்களும் எல்லோரும் குளித்துவிட்டு வந்தே காபி குடிக்க வேண்டும். இப்போதெல்லாம் யாரும் பார்ப்பது இல்லை. எல்லோரும் இந்த சுத்தம், ஆசாரம் என்பனவற்றைக் கூடியவரை அனுசரித்தே வந்திருக்கின்றனர்.

      Delete
    2. இப்பொழுது பெட் காஃபி என்ற பெயரில் வாய் கொப்பளிக்காமல் குடிக்கிறார்கள்.

      Delete
    3. கில்லர்ஜி, எனக்குத் தெரிந்து நான் சின்ன வயசில் இருந்தே பெட் காஃபிப் பழக்கத்தைப் பார்த்திருக்கேன். :(

      Delete