எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 25, 2020

கொரோனா போகணும்! அது வரை விடப் போறதில்லையே! ஹாஹாஹா!

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் போன்ற நகரங்களில் கடுமையான முழு ஊரடங்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு அரசு அறிவிப்புச் செய்திருக்கிறது. நாளைய ஊரடங்கிற்கு நேற்றே அறிவிப்புச் செய்தாகி விட்டது. பால், காய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தடை இல்லை என்றும் அறிவித்தாகி விட்டது. ஆனாலும் மக்கள் கூட்டமாய்க் கூடிக் காய்களும், மளிகைப் பொருட்களும் வாங்கினால் அரசு என்ன செய்ய முடியும்? கண்டிப்புக் காட்டவும் விதியை மீறுகிறவர்களைத் தண்டிக்கவும் செய்கிறது தான்! அதையும் மீறிக்கொண்டு வருபவர்களை என்ன செய்வது? பலரும் அரசுக்கு முன்னெச்சரிக்கை போதவில்லை என்கிறார்கள். அவர்கள் அரசுப் பொறுப்பில் இருந்தால் எப்படிச் செய்திருப்பார்கள் அல்லது செய்வார்கள் என்பதையாவது சொல்லலாம்.  எல்லாவற்றுக்கும் மத்திய, மாநில அரசைக் கண்டிப்பதே இவர்கள் வேலை.  இனி நாம் மறுபடி எச்சில் என்றால் என்ன, பத்து என்பது என்ன என்பதைக் கவனிப்போம்! :)
*******************************
1. "எச்சில்" என்றால் என்ன?

கையை வாய்க்குள்ளே செலுத்திச் சாப்பிடுவதைத் தான் எச்சில் என்று சொல்வார்கள்.  என்னுடைய சில சிநேகிதிகள் சாப்பிடுகையில் உணவை உருட்டி வாய்க்குள்ளே போடுவார்கள். எனக்கு அப்படிச் சாப்பிட வராது.  கீழே விழும்.  அதோடு சாப்பிட்டு முடித்த பின்னர் உள்ளங்கை, விரல்களைச் சிலருக்கு/பலருக்கும்:))) நக்கிக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.  அப்போது அது எச்சில் கையாகிவிடுகிறது.  அதை நன்குஅலம்பி விட்டே மற்றப் பண்டங்களைத் தொடவேண்டும்.  இது சுகாதார அடிப்படையில் ஆனதே.  ஆனால் சின்னக் குழந்தைகளுக்கு இதை ஒரு ஆசாரம் எனத் தோன்றும்படி அந்தக் காலப் பெரியவர்கள் செய்துவிட்டனர்.

2. "பத்து" என்றால் என்ன?

சமைக்கும் பொருட்களான சாதம், குழம்பு, ரசம், காய்கள் போன்ற அனைத்தையும் தான் பத்து என்பார்கள்.  சப்பாத்தி பத்தில்லை என்பார்கள்.  என் அப்பாவின் சித்தி ரவா உப்புமா செய்கையில் உப்பை முதலிலேயே சேர்க்க மாட்டார்கள்.  உப்புமாவைக் கிளறிக் கீழே இறக்கி வைத்த பின்னர் உப்புச் சேர்ப்பார்கள்.  முன் கூட்டி உப்புச் சேர்த்தால் அவங்க அதை உண்ண மாட்டார்கள்.  உப்புச் சேர்த்த எல்லாப் பொருட்களையும் பத்து என்று சொல்ல முடியாது.  உப்புச் சேர்த்த ஊறுகாய் வகைகள் பத்தில்லை.  அடுப்பில் வைத்துச் சமைப்பவையே பத்து.  அதிலும் பொரித்து எடுப்பவை பத்தில்லை.  என் மாமியார் மாவு கரைத்து ஊற்றும் பொருட்களும் பத்து என்பார்.  உதாரணமாகச் சப்பாத்திக்குச் செய்யப்படும் சைட் டிஷ்கள்.  சில வீடுகளில் உருளைக்கிழங்கில் செய்யப்படும் உணவுகளுக்குப் பத்துப் பார்ப்பதில்லை. :)))) இது ஓரளவுக்கு நம் மனதைப் பொறுத்தது என்று சொல்லலாம்.

3. யார் யார் எங்கே எங்கே இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கிறார்கள்?

சரியாப் புரியறதானு சொல்ல முடியலை.  ஆனால் மேற்சொன்ன முறையில் கடைப்பிடிக்கிறேன். ஏனெனில் இவை கலக்கும்போது உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.  கூடியவரையில் சமைத்த அன்றாட உணவுப் பொருட்களோடு, (சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள்) தயிர், பால், மோர், ஊறுகாய்கள், மற்றத் தின்பண்டங்கள் சேர்த்து வைப்பதில்லை.  அதோடு சாப்பிடும் தட்டில் உணவு ஏதானும் அதிகம் போட்டுவிட்டால் அதைத் திரும்ப எடுத்துச் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் போடுவதில்லை. அதைத் தனியாக வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிடுவோம்.  பின்னர் சாப்பிடும்போது பயன்படுத்திக் கொள்வோம்.

ஒரு சிலர் தின்பண்டங்களையும் நேரடியாக மொத்தமாக இருப்பதில் இருந்து அப்படியே எடுத்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அதில் போடுகின்றனர். எனக்கு அதுவும் சரியாக வரவில்லை.  காரமானால் அதன் கரகரப்புத் தன்மை குறைகிறது.  இனிப்பானால் சுவை மாறுபடுகிறது.  ஆகவே வேண்டிய அளவுக்குத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதிகமாய்ப் போனால் அதைத் தனியாகவே வைக்கிறேன்.  அப்படி இருந்தும் தனியாக வைப்பது கொஞ்சம் சுவை மாறுபட்டுத் தான் தெரியும்.


4. நீங்கள் இந்த எச்சில்/பத்து சமாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?

எச்சில்/பத்துக் கடைப்பிடிப்பது உண்டு.  எச்சில் நிச்சயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.  மற்றவரின் எச்சில் கைகளோடு கொடுத்த உணவு அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.  

எச்சத்தின் பொருள் வேறு; எச்சிலின் பொருள் வேறு, இல்லையா?


கீதா,
எனக்கொரு சத்யம் தெரியணும். கீதா, தமிழில் . கீதா,--- பத்து என்றால் மரணசேஷம் வரும் பத்தாம் நாள் தானே பத்து என்பது. அப்படித்தான் இதுநாள்வரை ஞான் நம்பியிருந்தேன்.ஆனால் இது என்ன புதிதாய், பத்து,என்பதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறீர்கள், எனக்குப்புரியவில்லை.இது பத்து என்ரால் அந்த பத்து, பற்றி தமிழ்நாட்டில்
ஞான் அறிந்தது என்ன பொருள் ?   எனக்கு உடனே யாராவது விளக்க வேண்டுகிறேன்
அன்பு கமலம்

இது மலேசியாவில் இருந்து/சிங்கப்பூர்? நினைவில் இல்லை. ஒரு சிநேகிதியின் கேள்வி. இதற்கான பதிலை அடுத்துப்பார்க்கலாம். இந்தக் கொரோனா வந்தாலும் வந்தது. எல்லாருமே தேடிப் பிடித்துப் பழைய ஆசாரங்களையும், பழக்கங்களையும் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னெல்லாம் நாங்கள் பள்ளிக்குச் சென்று வந்ததும் வீட்டில் நுழையும்போதே நேரடியாகக் குளியலறைக்குச் சென்று அணிந்திருந்த உடையைத் தண்ணீரில் நனைத்துப் போட்டுவிட்டுப் பின்னர் அங்கே கை, கால் கழுவி அல்லது குளித்து மாற்றுடை ஏற்கெனவே குளியலறையில் போட்டு வைத்திருப்பார்கள், அதை உடுத்திக் கொண்டு வெளியே வந்து நெற்றிக்கு இட்டுக்கொண்ட பின்னரே காஃபியோ அல்லது டிஃபனோ சாப்பிடலாம்/சாப்பிட முடியும்.  பள்ளிக்கூடத் தீட்டு என அப்பாவின் சித்தி சொல்லுவார். பள்ளியில் பலதரப்பட்டவர்களும் நோய் உள்ளவர்கள். நோய் இல்லாதவர்கள் அல்லது குளிக்காமல் என வந்திருக்கலாம். நாம் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதால் அவர்களிடம் இருக்கும் கிருமிகள் நம்மிடமும் வந்துவிடும் என்பதற்காக இந்தச் சுத்தத்தைக் கடைப்பிடித்தனர். ஆனால் நாளாவட்டத்தில் மறந்துவிட்டது. வெளியே போய்விட்டு வந்தால் கால் கழுவும் பழக்கம் கூட இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. 

72 comments:

  1. பண்டைகால பழக்கங்களின் முன்னேற்பாடு எதற்காக என்பது இப்பொழுது புரிய ஆரம்பித்து உள்ளது.

    நான் சாப்பிட்டால் உள்ளங்கையில் சோறு ஒட்டாது.

    சிலர் மொத்தமாக சாணியைப்போல் பிணைவார்கள் அது அருவெறுப்பாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி. உள்ளங்கையில் சோறு ஒட்டாமல் தான் சாப்பிடணும் என்பார்கள். நான் அப்படித்தான் சாப்பிட்டு வருகிறேன். கருத்துக்கு நன்றி,

      Delete
    2. சாப்பிடும் முறையும் நாகரீகத்தில் சேர்ந்தது. சாப்பிடும்போது சும்மா சர்ர்ர்ர்ர் சர்ர்ர் என்று உறிஞ்சுவதும் சத்தமாகச் சாப்பிடுவதும் நாகரீகத்தில் சேராது. அந்த ஊரில் ஹோட்டலில் நான் சாப்பிட்டபோது (மதிய உணவு), ஒருவர், சாதத்தை ஏரிக்கரை போலச் செய்து, அதில் குழம்பு, காய், கூட்டு எல்லாம் போட்டு மொத்தமாகக் கலக்கிச் சாப்பிட்டார். எனக்குத்தான் ஒருமாதிரி இருந்தது. இன்னொருவர், ஒவ்வொரு வாய் சாப்பிட்டு, வாயில் அகப்படும் நார்களை தலையைக் குனிந்து காலின் கீழே துப்பிக்கொண்டே சாப்பிட்டார்.

      உள்ளங்கையில் நான் சாப்பிடும்போதும் சாதம் ஒட்டாது, (அதாவது தோசை சாப்பிடும்போது, சப்பாத்தி சாப்பிடும்போது). அது எப்படி குழம்பு சாதம், சாத்துமது சாதம் இவையெல்லாம் சாப்பிடும்போது சாதப் பருக்கை ஒட்டாமல் இருக்க முடியும்? ஒருவேளை விரல்களால் மட்டும் எடுத்துச் சாப்பிடுவீர்களோ?

      Delete
    3. நானும் உள்ளங்கையில் படுவது போல சாப்பிட மாட்டேன். கைகளில் எடுக்கும் உணவு முடிந்மவரை கை வாயில் இடிக்காமலேயே சாப்பிட்டு வழக்கம். ஸ்பூனால் சாப்பிடும்போதும் ஸ்பூனை வாய் க்குள் வைத்து தக்கி இழுக்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. வாய்படாமல் ஸ்பூனால் வாய்க்குள் உதிர்த்து விட்டுக் கொள்வேன், முடிந்தவரை் இதில் நேர் எதிர் என் நண்பர் (அதிகாரி) ஒருவர். அவர் செய்வதெப் பகிரவே தோன்றவில்லை.

      Delete
    4. வணக்கம் சகோதரி

      குழந்தைகளுக்கு சாதம் பிசையும் போதுதான் (ஒன்று சேர்ந்து இருந்தால்தான் அவர்களுக்கு முழுங்கத் தெரியுமென்று) சற்று அழுத்தி பிசைந்து ஒவ்வொரு வாயாக ஊட்டுவோம். நாம் சாப்பிடும் போது கை விரல்களால் சாதத்தை பிசைந்து சேர்த்து உள்ளங்கையில் சாதம் படாமல்தான் சாப்பிடுவோம். எங்கள் வீட்டிலேயே சிலர் சாம்பார், ரசம் சாதத்தோடு சேர்ந்து இருந்தால்தான் சுவைக்கும் என வாதம் செய்வார்கள். நானும் முடிந்தவரை உள்ளங்கை ஆகாமல்தான் சாப்பிட்டு வருகிறேன். கடைசி வரைக்கும் கைகளை நக்கி சாப்பிட்டால் தரித்திரம் என எங்கள் அம்மா சொல்லி வளர்த்திருக்கிறார். ஆனால் இது சாப்பிடும் சுதந்திரம். இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏதோ ஒரு படத்தில் நகைச்சுவையாக சார்லி "என விரல் நான் நன்றாக நக்கி சாப்பிட்ட பின்தான் கை அலம்புவேன்." என்பார்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வாங்க கமலா. குழந்தைகளுக்குப் பிசையும் சாதத்தை வெண்கலப்பானை அல்லது சாதப் பாத்திரத்தில் இருந்து நடுவாக எடுத்துப் போட்டுக்கொண்டுப் பருப்பு,நெய்யுடன் கரண்டியால் மசிக்க வேண்டும் என்றே எங்க வீட்டில் வற்புறுத்துவார்கள். அதுவும் மாமியார் வீட்டில் கைகளால் பிசையவே கூடாது. ஊட்டும்போது மட்டும் கொஞ்சமாக எடுத்து ஊட்டி விடுவோம். சாம்பாரோ, ரசமோ என்னைப் பொறுத்தவரை ஒரு கரண்டி சாம்பார், இரண்டு கரண்டி ரசம் என்பதால் அழுத்திப் பிசைந்தெல்லாம் சாப்பிட்டதில்லை. ஆனால் கைகளை நக்கிச் சாப்பிடுவது சிலருக்குப் பிடித்தம். அதை நாம் எதுவும் சொல்ல முடியாது.

      Delete
    6. உங்கள் நால்வருக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அக்காரவடிசல், முழங்கை வழிவாரும்படி சர்க்கரைப் பொங்கல் கொடுத்து உள்ளங்கையில் படாமல் எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்று பார்க்கணும்.

      சும்மா எழுதியிருக்கேனே தவிர, மனைவி என் கையில் தயிர் சாதம் தொட்டுக்க போடும்போது மற்றும் நான் தயிர் சீதம் கையில் எடுத்துக் குழித்து அதில் மனைவி குழம்பு விட்டு சாப்பிடும்போதும் தவிர உள்ளங்கையில் சாதம் படும் வாய்ப்பு இல்லை.

      Delete
    7. ஸ்பூனால் சாப்பிடுவது எனக்கு என்னமோ அந்நியமாகத் தெரிகிறது. கைகளில் சாப்பிடும் வசதி ஸ்பூனில் சாப்பிடுவதில் இல்லை. அதுவும் இங்கே தமிழ்நாட்டில் பஃபே சாப்பாடு எனில் அந்தத் தட்டையும் ஸ்பூனையுமே திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பப் பயன்படுத்தியாகணும்! பஃபே என்பதன் அர்த்தமே தெரியாது; செல்லவும் செல்லாது இங்கே! :(

      Delete
  2. //எப்படிச் செய்திருப்பார்கள் அல்லது செய்வார்கள் // இங்கு  கேரளா அரசு எப்படி செய்கிறதோ அப்படி செய்வார்கள். ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தேதி மணி குறிப்பிட்டு அந்த நேரத்தில் வந்து வாங்க செய்வார்கள். அதே போல் காய்கறி 50ரூ 100ரூ பாக்கெட்கள் ஆக்கி ஒவ்வொரு சின்ன நாற்சந்தியிலும் குறிப்பிட்ட மணியில் கொண்டு வந்து கொடுப்பார்கள். வழக்கம் போல மளிகை கடைகள் காலையில் இருந்து திறந்திருக்கும். கற்பூரம் முதல் காபிப்பொடி வரை இந்த கடைகளில் கிடைக்கும். தமிழ்நாட்டில் போல கடைகள் மூடப்படுவதில்லை. இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவு. இன்னும் என்ன என்னவோ சொல்லலாம்.  சாதாரண நாட்களில் சிரம பட்டதை விட குறைவு தான். அசைவம் போன் செய்தால் போதும் கோழி மீன்  முதலியவை டோர் டெலிவரி உண்டு.  எல்லாம் எனக்கு தெரியும் என்று இறுமாப்பு உள்ளவர்களுக்கு எது சொன்னாலும் ஏறாது. 

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. கேரளா அரசைப் பின்பற்றித் தமிழ்நாடும் மருத்துவக் கழிவுகளை வேறு மாநில எல்லையில் கொட்டணும் என்கிறீர்களா? முதலில் கேரளத்தை அதில் முன்மாதிரியாக இருக்கச் சொல்லுங்கள். இப்போப் போனவாரம் கூடத் தேனி நகர்ப்பக்கம் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி விட்டுப் போயிருக்கிறார்கள். நாம் நன்றாக இருந்தால் போதும் மற்ற மாநில மக்கள் எப்படிப் போனால் என்ன என்னும் அகந்தை இருப்பவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்காது.

      Delete
    2. நான் பதில் சொன்னது கொரோநா பற்றிய கேள்விக்கு. நீங்கள் ஏன் மருத்துவ கழிவுக்கு செல்கிறீர்கள். மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது கேரளா அரசினால் என்பதற்கு என்ன சாட்சி.  பாயிண்டுக்கு பதில் சொல்லாமல் திசை மாற்றுவதே உங்கள் வேலை. 
      Jayakumar

      Delete
    3. ஜேகே சார்... அரசு (அதாவது அதிகாரிகள், அதிலும் தனியார் மருத்துவமனைகள்) இவற்றைச் செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம், தமிழகப் பகுதியில் இருப்பவர்களின் பேராசை மற்றும் இதனை லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிக்கிற கஸ்டம்ஸ், இருபுற அதிகாரிகள் ஆகியவர்களுக்கும் பங்கு உண்டு. லஞ்சம் கொடுப்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் குற்றத்தில் பங்கு இருப்பதைப் போல.

      Delete
    4. ஜேகே ஸார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மட்டும் சொல்லி இருக்கிறார். அந்த அளவில் சரிதான். இந்த விஷயத்தில் கேரள அரசின் மீது பொறாமையே உண்டு எனக்கு.

      Delete
    5. ஸ்ரீராம், இங்கே தமிழ்நாட்டிலும் தெருவுக்கு 2 ஆவின் பால் பூத்துகள் அதைத் தவிர்த்தும் ஜொமோட்டோ, ஸ்விகி இன்னும் ஒருத்தர் மூலம் பால், காய்கள், பழங்கள் வீட்டுக்கு வீடு விநியோகம் என எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்தும் தான் மக்கள் இப்படி ஆலாய்ப் பறந்து அரசின் முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் உருக்குலைத்துவிட்டார்கள். என்ன செய்ய/சொல்ல முடியும்? படித்த முட்டாள்கள். கிராமப்புறங்களில் பரவாயில்லை என்கிறார்கள். கேரளத்திலும் இந்த ராப்பிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் மற்றும் சில தனியார் அமைப்புகளின் சேவைகளைக் குலைத்ததில் நீதிமன்ற வழக்குகள் இருக்கின்றன. இம்மாதிரிச் சமயங்களில் எல்லோராலும் ஓரளவுக்குத் தான் சிறப்பாகச் செயல்பட முடியும், அதுவும் தகுந்த ஒத்துழைப்புக் கிடைக்கவேண்டும். நம்மக்கள் தான் பணம், காசு என்றால் போதும், கொரோனாவாவது, ஒன்றாவது என ஓடிப் போய் முதலில் நிற்பார்கள். நேற்றுக் காலைக் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 300 கார்கள் வந்திருக்கின்றன. எல்லாவற்றையும் காவல்துறை பிடித்துள்ளது. அபராதம் கட்டச் சொல்லி அது கட்ட வரிசையில் நின்றவர்கள் கூட சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கன்னாபின்னாவென நின்றனர்.

      Delete
    6. ஸ்ரீராம் சார், கேரளாவில் தமிழகத்தை விட சோதனை மிக குறைவாகவே பண்ண பட்டுள்ளது. அவர்கள் திறமையாக கையாள்கிறார்கள் என்பதெல்லாம் பத்திரிக்கைகள் செய்யும் மாயம். 

      Delete
    7. எல்கே, கேரளத்துக் குப்பை தமிழ்நாட்டில் கொட்டப்படுவது வீடியோவாகவே வந்து பலரும் பகிர்ந்துள்ளனர். சோதனை குறைவு என்பது மட்டும் காரணம் அல்ல, அங்கே நடப்பது கம்யூனிச ஆட்சி. ஆகவே பெரும்பாலான ஊடகங்களும், பத்திரிகைகளும் மக்களும் நடுநிலைமை என்னும் பெயரில் அவர்களை ஆதரித்தே சொல்வார்கள்/எழுதுவார்கள்/பேசுவார்கள். இந்த மட்டும் கொரோனாவே மோதியால் தான் வந்ததுனு சொல்லலையேனு சந்தோஷப் பட்டுக்கணும். :)))))

      Delete
    8. மோதிக்கு தொற்று வரவில்லையே என வருத்தப்பட்ட ஜீவன்கள் சிலரை இன்னிக்கு பேஸ்புக்கில் பார்த்தேன்

      Delete
    9. எல்கே, தாமதமாகப் பார்க்கிறீர்களோ? மார்ச் மாத ஆரம்பத்திலேயே ஏற்கெனவே சொல்லி வருத்தப்பட்டுவிட்டார்கள்! இவங்க எல்லாம் பெரிய அறிவுஜீவிகள், தலைவர்கள்.

      Delete
  3. மீ ஃபஸ்டூ? செகண்டூ? தேர்டூ????

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, மூன்றாவது!

      Delete
  4. மதுரையில் செம கூட்டம் முட்டி மோதி என்ற படம் வந்ததே...

    என்னவோ போங்க மக்கள் அரசின் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தாலே தொற்றினை ஓரளவேனும் கட்டுப் படுத்த முடியும்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு மத்தியானத்துக்குப் பின்னர் செய்திகளைப் பார்க்கவில்லை. ஆனால் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக ஃபேஸ்புக், வாட்சப்பில் சிலர் மூலம் அறிந்தேன். அவங்களும் ட்ரோன் மூலம் எல்லாம் கண்காணிக்கத்தான் செய்கின்றனர். மக்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. இன்னிக்குக் கோயம்பேட்டில் 300 பேரைப் பிடித்திருக்கிறார்கள். அபராதம் கட்ட வரிசையில் நிற்கும்போது கூட இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. காவல்துறையும் சொல்லிக் கொண்டே இருந்தது.

      Delete
    2. இங்க பெங்களூர்ல கொஞ்சம் அதிகமாகவே கடைகள் திறக்க ஆரம்பித்திருப்பதைக் காண்கிறேன். காய்கறிக் கடைகளை காலை 10 1/2 - 11 மணிக்கு மூடுங்க என்று சொல்லிக்கொண்டே வரும் போலீசாரில் சிலர், ஓசிக் காய்கறிகளை வாங்கிக்கொள்வதையும் பார்க்கிறேன்.

      Delete
    3. இந்த வெயிலில் இளைஞர்கள் கிரிக்கெட், கால் பந்து, பூப்பந்து போன்ற ஆட்டங்களைக் கூட்டமாகக் கூடி ஆடுகின்றனர். அவர்களையும் விடாமல் ட்ரோன் மூலம் துரத்தினாலும் ட்ரோன் மேலும் கல்லை விட்டு எறிகின்றனர். இவர்களை எல்லாம் என்ன செய்வது? :(

      Delete
    4. இன்னிக்கும் இளைஞர்கள் கிரிக்கெட், கால் பந்து போன்ற ஆட்டங்கள் ஆடிக் கொண்டு தான் இருக்கின்றனர். யாரும் தடை உத்தரவை மதிப்பதாகத் தெரியவில்லை.

      Delete
  5. கூடியவரை இங்கும் கடைப்பிடிப்பதுண்டு...

    சாப்பிட்ட பொருள் சாப்பிடும் பொருள் தட்டில் அதிகமானால் பிஸ்கட்டாகவே இருக்கட்டும், அல்லது பட்சணங்கள் ஸ்வீட்டாகட்டும் மீண்டும் அதை அதே டப்பாவில் வைப்பதில்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, வட மாநிலத்தில் ராஜஸ்தான், குஜராத்தில் அதிகமாயும் மஹாராஷ்ட்ராவில் கொஞ்சமும் இது பார்ப்பார்கள். ராஜஸ்தானில் பானையிலிருந்து தண்ணீர் மொள்ளக் கூடத் தனியான ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். நாம் குடித்த தம்பளரைப்பானையில் போட முடியாது. போட்டுவிட்டால் தண்ணீரைக் கொட்டி விடுவார்கள். இங்கே வந்திருந்த நாத்தனாரிடம் பானையில் உள்ள தம்பளரை எடுக்க வேண்டாம், தனியாகத் தண்ணீர் எடுத்து வைச்சுக்கோங்க என்று சொன்னால் அவங்களுக்குக் கொஞ்சம் கோபம் அல்லது வருத்தம்! :(

      Delete
    2. அக்கா நம் வீட்டிலும் அதேதான். பானையிலிருந்து தண்ணீர் மொள்ளக் கூடாது. அதாற்குத் தனி டம்ப்ளர் அல்லது செம்பு ஏதோ ஒன்று. நாம் குடிப்பது வேறு டம்ப்ளர். இப்போது பபிள் டாப் தண்ணீர் கேன் பைப்புடன் இருந்தாலும் கூட அதே வழக்கம் தான்.

      கீதா

      Delete
  6. நம் வீட்டில் ஊருக்குப் போய் விட்டு ராத்திரி வந்தாலும் கூட குளித்துவிட்டுத்தான் கிச்சன், படுக்கை எல்லாம். இது சுத்தம் என்பதற்காக...பகலில் மதியம் என்று வந்தாலும் கூட கிளம்பும் இடத்தில் குளித்துவிட்டு வந்தாலும் கூட வீட்டிற்குள் வந்ததும் குளித்துவிடுவது வழக்கம். குறிப்பாக நான். அதுவும் மலையாளத்து வழக்கப்படி தினமுமே இரு நேரம், இரவும் குளிப்பதுண்டு குளித்துவிட்டுத்தான் படுக்கும் பழக்கம். இது சிறுவயதிலிருந்தே பழகிவிட்டது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் குளித்துவிடுவோம். குளிர்நாட்களாக இருந்தால் கூட வெந்நீரில் கை, கால், முகம் கழுவி விட்டுத் தான் மற்ற வேலைகள்.

      Delete
    2. இரவு குளிக்கும் வழக்கம் எங்கள் வழக்கமல்ல. ஆனால் இரு வருடங்களுக்கு முன்பு, (அங்கு) ஆபீஸிலிருந்து வந்த பிறகு 1 மணி நேரம் நடப்பதற்காக பூங்காவிற்குச் செல்வேன். திரும்ப வீட்டுக்கு வந்த பிறகு குளித்துவிட்டுப் படுத்துக்கொள்வேன். நல்ல தூக்கம் வரும். மனதும் ஃப்ரெஷ் ஆக உணரும்.

      Delete
    3. ரொம்பவே நடு இரவெனில் நாங்களும் குளிப்பதில்லை. ஆனால் கை,கால், முகம் கழுவி விடுவோம். பத்து மணிக்குள் என்றால் குளித்துச் சாப்பிட்டால் தான்! இல்லை எனில் சாப்பாடு இறங்காது!

      Delete
  7. எனக்குத் தெரிந்த பத்தே பத்து :-

    01) சிறந்த பத்து
    02) அறிவுப் பத்து
    03) பழியாப் பத்து
    04) துவ்வாப் பத்து
    05) அல்ல பத்து
    06) இல்லைப் பத்து
    07) பொய்ப் பத்து
    08) எளிய பத்து
    09) நல்கூர்ந்த பத்து
    10) தண்டாப் பத்து

    பிடித்த பத்து 01) சிறந்த பத்து... பகிர்வும் உண்டு...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி திரு தனபாலன்.

      Delete
  8. பொரித்த பண்டங்களுக்கு பத்து கிடையாது உண்மை. எண்ணெய் சேர்த்துச் செய்யும் பொரிக்காத சப்பாத்தி, ரொம்ப அப்பளாம் மாதிரி இருக்கிற வட நாட்டு சப்பாத்தி (அதன் பேர் தெரியலை. குஜராத்தி உணவு) இதெல்லாம் பத்து கிடையாது என்று சொல்கிறார்கள் (ஆனால் எங்கள் பூர்வ வீட்டில் இவை செய்யப்படாது ஆகையால் தெரியாது).

    எங்க வீட்டில் (வளர்ந்த வீடு) கிச்சனுக்குள் நாங்கள் யாரும் செல்லமுடியாது, உணவு நேரத்தில் சாப்பிட உட்காருவதற்கு தவிர (அது ரொம்ப நீளமான கிச்சன்). மற்றபடி செய்த உணவை நாங்கள் தொடுவது என்பதெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

    உருளைக்கிழங்கு 'பத்து' இல்லையா? சட்டத்தை நன்றாகவே வளைத்திருக்கிறீர்கள். ஹா ஹா (எங்க வீட்டுல-வளர்ந்த... உருளை, தக்காளி போன்ற ஆங்கிலக் காய்கறிகள் கிடையாது)

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவு எங்கள் இல்லத்தில் கிடையாது!

      Delete
    2. நெல்லைத்தமிழன், சில வீடுகளில் பார்ப்பதில்லை என்றே சொல்லி இருக்கேன். உருளைக்கிழங்கு போண்டா, உருளைக்கிழங்கு பஜ்ஜி, உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்யும் உணவு வகைகள் பத்தில்லை எனச் சிலர் சொல்கின்றனர். என்னைப் பொறுத்தவரை எது சாப்பிட்டாலும் சாப்பிட்ட தட்டு, கைகளைக் கழுவி விடுவேன். தனியானதொரு தட்டில் வைத்துத் தான் சாப்பிடுவதும். அந்த எண்ணெய் மிச்சம் இருந்தால் மறுநாள் தனியாக எடுத்து வைத்துப் பயன்படுத்துவது உண்டு. நான் இப்போதெல்லாம் வேலை செய்யும் பெண் வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்வதால் அவங்களிடம் கொடுத்துடுவேன். நீங்கள் குஜராத்தின் "காக்ரா"வைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அப்பளம் போல் மொறுமொறுவென இருக்கும். சமையலறையில் எங்க வீடுகளிலும் சிறுவர்களோ, சின்னப் பெண்களோ தொட்டு எடுத்துப் பரிமாற முடியாது. நான் பனிரண்டு வயதில் சமைக்க ஆரம்பித்திருந்தாலும் பரிமாறுவது என்பது அனுமதிச்சால் தான்!

      Delete
    3. ஸ்ரீராம் - இவை நான் வளர்ந்த வீட்டில். அதனால் இந்தப் பழக்கவழக்கங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் நாங்க இப்போ அவ்வளவு ஸ்டிரிக்டா கடைபிடிப்பதில்லை (வெங்காயம் அபூர்வமா உபயோகிப்போம். ஆங்கிலக் காய்கறிகளில் சில தவிர மற்றவை உபயோகிக்கிறோம். அதனால் எங்கள் வீட்டில் எப்போவாவது சப்பாத்திக்கு குருமா உண்டு, 'தளிகை' போல குருமா பெயரில் அவியல் கிடையாது. ஹா ஹா

      Delete
  9. ஏற்கெனவே சொன்ன மாதிரி பெரும்பாலும் எங்கள் வீட்டில் இந்த ஆரோக்ய வழக்கங்கள் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அநேகமான வீடுகளில் இருக்கும்.

      Delete
  10. எனக்கு இங்கு சொல்லப்பட்டிருப்பவை என்ன என்று தெரியாது. அறிந்ததில்லை. இப்போதுதான் தெரியவருகிறது. எங்கள் வீடுகளில் நீங்கள் சொல்லியிருக்கும் சில பழக்கங்கள் அதாவது உணவுகளைப் பற்றி சொல்லியிருப்பது கிடையாது என்றாலும் சுத்தம், சுகாதாரப் பழக்கவழக்கங்கள் அதேதான். கை கழுவாமல் கால் கழுவாமல் அடுக்களைக்குள் செல்வது கிடையாது. எப்போதுமே. தண்ணீர் தனியாக டேபிளில் வைக்கப்படும்.

    கொரோனா சீக்கிரம் விரட்டப்பட்டு எல்லோரும் நலமாக மகிழ்வாக இருக்க வேண்டும். இறையின் மீது நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். இதுவும் கடந்து போகும்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துளசிதரன். நீண்ட நாட்கள் கழித்து வருகிறீர்கள். சுகாதாரப் பழக்கங்கள் தான். இவற்றை ஆசாரம் என்னும் பெயரில் ஓரம் கட்டிவிட்டார்கள். இப்போ இந்தக் கொரோனா வரவும் அவை திரும்பி வருகின்றன.

      Delete
  11. அன்னத்தை உருட்டுவதோ
    உருட்டி விழுங்குவதோ கூடாது..

    அதேபோல கொழுக்கட்டை மாதிரி பிடித்து முழுங்கவும் கூடாது...

    பரக்க பரக்க அள்ளிப் போட்டுக் கொள்வதும் கூடாது...

    இந்த எச்சில் பத்து பதினொன்று எல்லாம் அவரவர் சாப்பிடும் உணவு சூழலைப் பொறுத்தது...

    பஞ்சாமிர்தத்தை உள்ளங்கையில் வாங்கி
    நக்கித் தான் உண்ணமுடியும்...

    குழைவான பொங்கலும் அப்படித்தான்...

    கடித்தல், மெல்லுதல், உறிஞ்சுதல் என்னும் முறைகளில் நாவினால் நக்குதலும் தவறில்லை..

    கோயிலில் கொடுக்கப்படும் கூழை அண்ணாந்து கொண்டு வாயில் ஊற்றிக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை...

    இப்படி உண்ணும் பொருட்களை விளைவிக்கும் விவசாயி களத்து மேட்டில் உட்கார்ந்து கொண்டு பழைய சோற்றில் தயிரை ஊற்றிக் கொண்டு நுனி விரல்களால் சாப்பிட்டு பசி தீர முடியுமா!?..

    ஆன்றோர்கள் அன்று எச்சிலால் நோய் பரவக்கூடிய வாய்ப்பை உணர்ந்து சுத்தத்த்தைப் பற்றிச் சொல்லி வைத்தார்கள்..

    மனிதர்கள் அர்த்தத்தை விட்டு விட்டு
    அனர்த்தத்தைப் பிடித்துக் கொண்டார்கள்..

    சுத்தம் சோறு போடும் என்றபோது
    அப்படியானால் குழம்பை எது ஊற்றும்
    என்று கேட்டவர்களாயிற்றே - நாம்!...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, ஒரு சில ஆயுர்வேத மருந்துகளையும் உள்ளங்கையில் வாங்கி நக்கித் தான் சாப்பிடச் சொல்லுவார்கள். தண்ணீரையும் மெதுவாகத் தான் குடிக்க வேண்டும் என்பதோடு இடக்கையால் குடிக்கக் கூடாது என்பார்கள். அதோடு இதெல்லாம் ஆன்றோர்கள் கடைப்பிடிக்கச் சொன்னவை. களத்து மேட்டு விவசாயிக்கு எப்படிப் பொருந்தும்? எச்சில் கலந்தால் நோய் பரவும் என்பதோடு லக்ஷ்மி தேவி இருக்காமல் வீட்டை விட்டுப் போய்விடுவாள் என்றும் சொல்லுவார்கள்.

      Delete
  12. நம் நட்டில் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்காமல் அதை பத்து பதினொன்று என்று சொல்லி விரட்ட முடியாது

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி ஐயா. இவற்றால் கொரோனாவை விரட்ட முடியாவிட்டாலும் இந்த சுகாதார வழிமுறைகள் தடுக்கவானும் செய்யும் அல்லவா? அதற்குத் தான் இந்தப் பதிவு.

      Delete
  13. கொரோனாவால மக்கள் மத்தியில் உடலாலும் உள்ளத்தாலும் எத்தனையோ மாறுதல்கள்... ஆனா இது எப்போ முடியுமோ, எப்போ நம் உறவுகளைப் பார்ப்போமோ என இருக்குது.. இந்நேரம் எல்லோரும் நலமாகவும் இருக்க வேண்டும், அந்தர ஆபத்தெனினும், யாரும் எங்கும் போய்ப் பார்க்கவோ, ஆறுதலாக இருக்கவோ முடியாதே...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஞானப் பிஞ்சு! எங்களுக்கும் சென்னை போய்க் குட்டிக் குஞ்சுலுவைப் பார்க்க ஆசை! இங்கே அழைத்துவரவும் ஆசை! ஆனால் முடியாது! என்ன செய்வது! :(

      Delete
  14. பத்தும் எச்சிலும் வேறு வடிவம் எடுத்து இங்கும் இருக்கின்றன. பெண்ணும் மாப்பிள்ளையும் மிகக் கண்டிப்பு இந்த விஷயத்தில்.
    குழந்தைகளும் அப்படியே பழகி விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, அம்பேரிக்காவிலும் இதெல்லாம் பின்பற்றுவது அதிசயம் தான். குழந்தைகளும் எதிர்ப்புக் காட்டாமல் பழகி இருக்கார்களே!

      Delete
  15. நீங்கள் சொன்ன பல விஷயங்கள் எங்கள் வீட்டிலும் கடை பிடிக்கப் படுவதுண்டு. எங்கள் அம்மாவும் ஸ்கூல் தீட்டு என்பார். uniformஐ மாற்றி, முகம் கழுவிய பின்னரே காபி கூட தரப்படும். 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, எங்களுக்கும் அப்படித்தான்.

      Delete
  16. பற்று என்பதுதான் பத்து என்று ஆகி விட்டது. சமைத்த உணவுப் பொருள்களை தொடும் பொழுது அது நம் கைகளை பற்றிக்  கொள்கிறது அல்லவா ? அதனால்தான் இந்தப் பெயர். 

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? தெரியலை எனக்கு!

      Delete
  17. பற்று என்பதுதான் பத்து என்று ஆகி விட்டது. சமைத்த உணவுப் பொருள்களை தொடும் பொழுது அது நம் கைகளை பற்றிக்  கொள்கிறது அல்லவா ? அதனால்தான் இந்தப் பெயர். 

    ReplyDelete
  18. பகவத் கீதை நான்கு வகையான உணவு வகைகளை சொல்கிறது. அவை மெல்லுதல், உறிஞ்சுதல், நக்குதல்,விழுங்குதல். இவை அனைத்தையுமே எச்சில் பண்ணாமல் சாப்பிட முடியாது. சாப்பிட்ட பிறகு கை கழுவுதல் அவசியம். 

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால் அன்னத்தைக் கை நடுவில் படாமல் சாப்பிடணும் என்பார்கள். எல்லோராலும் முடியவும் முடியாது!

      Delete
  19. பிஸ்கெட், வாழைப்பழம் போன்றவற்றை கடித்து சாப்பிடுவதை  எச்சில் பண்ணி சாப்பிடுவது என்றுதான் கூறுவேன். என் கணவருக்கு பொங்கல், உப்புமா போன்றவை சாப்பிட ஸ்பூன் வேண்டும். ஸ்பூனால் சாப்பிடுவதால் அதே கையோடு மீண்டும் பரிமாறிக் கொள்வதை எச்சில் கை என்று அனுமதிக்க மாட்டேன். அவர் "நான் எங்கே எச்சில் பண்ணினேன்? ஸ்பூனால்தானே சாப்பிட்டேன்" என்பார்.  ஸ்பூனை எச்சில் பண்ணிய கை என்ற என் விளக்கத்தை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. 

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பானுமதி! பலரும் எச்சில் ஸ்பூனால் தானே சாப்பிட்டேன் எனச் சொல்லிக் கொண்டு மீண்டும் பரிமாறிக்கொள்வார்கள். நம்ம வீடுனால் தடுத்துடலாம். இன்னொருவர் வீடுனா எதுவும் சொல்ல முடியாது. சில அம்மாக்களுக்குத் தங்கள் பிள்ளைகள் எச்சில் என்றால் ரொம்பவே உசத்தி! 20 வயதுக்கு மேல் ஆனாலும், "அவனுக்கென்ன வந்தது! குழந்தை!" எனச்சொல்லிக் கொண்டு எச்சிலை அனுமதிப்பார்கள். கிட்டத்தட்டப் பிரசாதம் போல நினைப்பார்கள்.

      Delete
    2. @ பா.வெ, கீசா மேடம்(ஸ்) - எச்சில் தட்டைத் தொட்டுவிட்டாலே, கிச்சனுள் உபயோகிக்கும் பாத்திரத்தைத் தொடும் அருகதை(சாஃப்ட் வார்த்தை தெரியலை) கிடையாது. நம் தட்டு, நாம் சாப்பிட உபயோகிக்கும் ஸ்பூன் என்று இவை எல்லாமே கிச்சனுக்குள் போக முடியாது. அதனால் ஸ்பூனைத் தொட்டாலும் தட்டைத் தொட்டாலும் நம் கை எச்சில் பட்ட கைதான். அதை வைத்து டேபிளில் உள்ள கரண்டியினால் (கிச்சன் சம்பந்தப்பட்டது) குழம்பை எடுத்து விட்டுக்கொள்ள முடியாது. இதைத்தான் நாங்கள் இப்போ ஃபாலோ பண்ணுகிறோம். அப்படிச் செய்ய முடியாத பட்சத்தில், உணவு மேசைமேல் சமையல் பாத்திரங்கள் இருந்தால் ஒரு எக்செப்ஷனாக இடது கையால் கரண்டியை உபயோகித்து போட்டுக்கொள்வோம்.

      எங்கள் வீட்டில், நாங்கள் உண்ண உபயோகிப்பது எல்லாமே கிச்சனுக்கு வெளியில்தான் இருக்கும். தளிகை பண்ணும் பாத்திரங்கள் எல்லாமே கிச்சனுக்குள்தான் இருக்கும்.

      Delete
    3. நெல்லைத்தமிழரே, கிட்டத்தட்ட/ கிட்டத்தட்ட என்ன! முழுக்க முழுக்க இதே தான் நான் கடைப்பிடிப்பதும். அப்படியும் சிலர் சாப்பிட்ட தட்டை இங்கே ஹாலிலேயே வாஷ் பேசினில் கழுவித் தேய்த்துவிட்டுப் பின்னர் மறுபடி சமையலறையில் பாத்திரம் போடும் இடத்தில் கொண்டு வந்து மறுபடியும் தேய்க்கின்றனர். இந்த விஷயத்தில் நான் கிட்டத்தட்டக் கோபமாகவே சொல்லுவேன். அப்படியும் புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்ட ஒரு வைதிகரின் பெண் தன் கணவனோடு வந்தபோது சாப்பிடப் போட்ட தட்டுக்களைச் சமையலறையில் தான் கழுவுவேன் எனப் பிடிவாதம். நாங்க இருவரும் மல்லுக்கட்டிச் சமையலறைக்குள் போகாமல் தடுத்தோம். :(

      Delete
  20. மஸ்கட்டில் கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி சமயத்தில் வெண்ணெய் தருவார்கள். சிலர் அதை நக்கி நக்கி சாப்பிட்டு விட்டு கையை கழுவாமல் அப்படியே விநாயகரையும், அம்மனையும் தரிசிக்கச் செல்வார்கள். அங்கு விநாயகர் சந்நிதியில் தேங்காய், கல்கண்டு பிரசாதம் வைத்திருப்பார்கள். விநாயகர் சந்நிதியிலிருந்து பத்து தப்படியில் அம்மன் சன்னிதி. அங்கு போவதற்குள், இங்கு எடுத்த சிறு தேங்காய் துண்டைக்கடித்து கடித்து சாப்பிட்டுக் கொண்டே(அதை அப்படியே வாயில் போட்டுக் கொள்ளலாம்) அம்மன் சந்நிதிக்கு வருவார்கள். பார்க்கும் பொழுது மனசுக்கு கஷ்டமாக இருக்கும்.  

    ReplyDelete
    Replies
    1. இதை எல்லாம் சந்நிதியில் கொடுக்கக்கூடாது. வெளியே வரும் வழியில் கொடுக்கணும். திருமலையில் அப்படித்தான் தருவார்கள். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் அப்படித் தான் வெளியே வரும் வழியில் பிரசாதம் கொடுப்பார்கள். துவாரகையில் காலையில் போனால் இப்படித் தான் சர்க்கரை, வெண்ணெய் குழைத்தது பிரசாதம் தருவார்கள். அதை வாங்கிக்கொண்டு கைகளை அலம்பிக்கொண்டு தான் மேலே போகணும். தொன்னையிலோ தெர்மாகூல் கிண்ணங்களிலோ கொடுத்துட்டால் பரவாயில்லை. அப்புறமாச் சாப்பிட்டுக்கலாம்.

      Delete
    2. சந்நிதியில் பிரசாதம் கொடுப்பது வழக்கம்தான். அங்கு எச்சில் படாமல் சாப்பிட்டாலும், நேராக வெளியில் வந்து குழாய் இருக்குமிடத்தில் கையை அலம்பிக்கொள்வதுதான் வழக்கம். இதற்கான வசதி திருமலை போன்ற எல்லா கோவில்களிலும் இருக்கும். நாம்தான் சோம்பல் படாமல், கையை அலம்பிவிட்டு பிறகு மற்ற சன்னிதிகளுக்குச் செல்லணும்னா போகணும். அப்படி இல்லாமல் சோம்பல் பட்டுக்கொண்டு, தூணில் கையைத் துடைத்துக்கொள்வது நிறைய இடங்களில் நடக்கிறது.

      Delete
    3. திருமலையில் தான் தரிசனம் முடிந்து வந்ததும் பிரசாதம் உண்டியலுக்கு அருகே கொடுக்கின்றனர். மற்றக் கோயில்களில் வெளியே தான் தருகிறார்கள். திருமலையிலும் பெரும்பாலும் லட்டு, அப்பம், வடை போன்றவை தான் கொடுக்கப்படுகிறது. காலை வேளை எனில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை போன்றவை தருகிறார்கள்.

      Delete
    4. திருமலையில் காலையில் சாம்பார் சாதம், அதிசயமா சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், சிறிய லட்டு போன்றவைகளைத் தருகிறார்கள். பிரசாதம் வாங்கும் இடத்திலிருந்து வெளியேறியபிறகு, தண்ணீர் குழாய்கள் வைத்திருக்கும் இடம் வரை தரை வழுக்கத்தான் செய்யும். (பிரசாதம் சிந்துவதால், பக்தர்கள் வைத்திருக்கும் தொன்னையிலிருந்து). தொன்னைகளைப் போட நிறைய பிளாஸ்டிக் பக்கெட்கள் வைத்திருக்கின்றனர். அனேகமா எல்லா பெருமாள் கோவிலிலும், பிரசாதம் சன்னிதியில் (அதாவது கர்ப்பக்ரஹத்துக்கு அடுத்ததுக்கு அடுத்த கட்டு/மண்டபம்). திருவல்லிக்கேணியில் கர்பக்ரஹம் இருக்கும் கட்டிடத்திற்கு வெளியே கொடுக்கின்றனர்.

      எங்க இருந்தாலும் பிரசாதம் கோவில் மதிலுக்குள்தான் கொடுக்கின்றனர். நிறைய கோவில்களில் (அதாவது ஃபேமஸான கோவில்கள்) மூலவரைச் சேவிக்க கூட்டம் எப்போதும் இருக்கும். அதனால் ப்ரபந்தம் சேவிப்பது போன்றவை உற்சவருக்கு நடக்கும். உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்போது, ப்ரபந்தம் சேவிப்பவர்களுக்கு அங்கேயே பிரசாதம் வழங்கப்படும்.

      Delete
  21. முதலில் பத்து / எச்சில் 
    எங்கள் வீட்டிலும் இதுதான் வழக்கம். அடுப்பில் ஏற்றி இறக்கினால் பத்து . அதனால் சாப்பிட  பரிமாறும் பொழுதே இரண்டையும் தனியாகத்தான் வைப்போம். பத்து எதையும் பிரிட்ஜில் வைக்க அனுமதியில்லை. மகளுக்கு பத்து / எச்சில் சொல்லி கொடுத்தே வளர்க்கிறோம். 
    காஃபி டீ எச்சில் பண்ணி குடித்து பழகி விட்டது. அதையே மாற்றிக் கொள்ள முடியவில்லை. :(
    அடுத்து சனிக்கிழமை பிரச்சனை : பால் எங்கே கிடைக்கிறது ?? கார்டு போட்டிருந்தால் வீட்டுக்கு வரும். என்னை போன்று நேரில் சென்று வாங்குபவர்களுக்கு பிரச்சனை. பக்கத்தில் இருக்கும் கடைக்காரர் வீட்டில் சென்று வாங்குகிறேன் தினமும். 
    சென்னையிலும் மாநகராட்சி காய் வண்டி வருது. ஆனால் அணைத்து பகுதிகளுக்கும் வருவதில்லை. அதுதான் பிரச்சனை. 

    ReplyDelete
    Replies
    1. நானும் எங்க குளிர்சாதனப் பெட்டியில் சமைத்த பண்டங்களை வைத்தது இல்லை. அநேகமாக மிஞ்சாது. மிஞ்சினால் வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டுக் கொடுத்துவிடுவேன்.பால் எங்களுக்கும் கார்டு இல்லை என்பதால் எதிரில் இருக்கும் பூத்துக்குப் போய்த் தான் வாங்கி வருகிறார். அப்படியே பக்கத்து நாடார் கடையில் ஏதேனும் காய்கள் புதுசாக வந்தால் வாங்கி வருவார். மருத்துவரிடம் கூடப் போக முடியலை. இந்த வாரம் தான் மருத்துவர் பார்ப்பார் எனச் சொல்லி இருக்காங்க. அதுக்கும் வெளியே போக அனுமதி வேணும்.

      Delete
  22. அக்கம் பக்கம் எப்போதாவது சென்று வந்த உறவும் இப்பொழுது இல்லை. காய்கறி வாங்கமட்டும் செல்லுதல் என்றாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், மாதேவி. எங்குமே போவதில்லை. தொலைபேசிவழிப் பேச்சுகள் மட்டுமே!

      Delete
  23. உங்களுக்கு பேத்தியை பார்க்க போக முடியவில்லை அவர்களும் இங்கு வர முடியவில்லை.
    அமெரிக்காவிற்கும் போகும் காலம் தெரியவில்லை. வருத்தமாய் இருக்கிறது.

    இந்த விடுமுறைக்கு என் மகன் வருவதாக இருந்தது வரமுடியவில்லை.

    உங்களுக்கு பேத்தியின் நினைவாக இருக்கும் இல்லையா?
    உங்கள் மருமகளும் உறவிரை பார்க்க போக முடியாது, வீட்டில் பெற்றோர்களுடன் உரையாடிக் கொண்டு தான் இருக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, இப்போத் தான் பார்க்கிறேன். பேத்தியை வாட்சப் வீடியோ அழைப்பில் பார்க்கிறேன். ஆனாலும் நேரில் பார்த்துத் தொட்டுக்கொஞ்சுவது போல் வருமா? மருமகளுக்கு வீட்டில் தான்! எங்கேயும்போக முடியவில்லை.

      Delete