எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 08, 2020

எப்படியோ நாட்களை ஓட்டுகிறோம்!இந்தப் படங்கள் எங்க வீட்டுக்கு வந்திருந்த ஓரகத்தி எடுத்தது. இதை எனக்கு வாட்சப்பில் அனுப்பி இருந்தார். அதை இங்கே போட முயற்சித்து தரவிறக்கிப் போட முற்பட்டால் படங்கள் வரவே இல்லை. இவை இரண்டையும் மட்டும் காப்பி செய்து போட்டிருக்கேன். மற்றவை இரண்டு வீடியோக்கள் உட்படத் தரவிறக்கவே முடியவில்லை. அம்பேரிக்காவில் இருக்கும்போது ஏற்கெனவே எடுத்த 2 வீடியோக்கள் இன்னும் போட முடியவில்லை. மேலே இருப்பது காவிரி ஆற்றின் தற்போதைய நிலையைச் சுட்டும் படம். கீழே இருப்பது காவிரிப் பாலத்தில் ஸ்ரீரங்கத்தில் ஆரம்பித்துத் திருச்சிக்கு இறங்கும்வரை இப்படித் தடுப்புகள் போட்டுக் காய்கள் விற்பனைக்கு ஏற்பாடு பண்ணினார்கள்.சென்றவாரம் செவ்வாயன்று ஆரம்பித்ததாகச் சொன்னார்கள். அன்று போகவில்லை. மறுநாள் நம்ம ரங்க்ஸ் போனார்.  இரு சக்கர வண்டிகள் அனுமதி கொடுத்தாலும் பாலத்தில் போகக் கூடாதாம். சுமார் 100,200 கடைகள் பாலம் முழுவதும் இருந்தன என்றார். அவரால் பாலத்தில் பாதி தூரம் கூடப் போக முடியவில்லை என்றார். நடக்கணுமே. முடிந்தவரை பார்த்துவிட்டுக் கொஞ்சம் போல் காய்களை வாங்கி வந்தார். மீண்டும் போக வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அங்கே கூட்டம் அதிகம் ஆகிவிட்டதால் முட்டு, மோதல், தள்ளு, முள்ளு வரும் என்பதால் அதை எடுத்துவிட்டுப் பாலம் இறங்கியதும் வரும் ஒரு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் போட்டு விட்டார்களாம். அது எங்களுக்கு அதிக தூரம் என்பதால் போவதில்லை. ஆனால் காய்கள் எல்லாம் மலிவு தான். கத்திரியும் வெண்டையும் மட்டும் கிலோ 50, 60 ரூபாய். மற்றவை எல்லாம் 30 அல்லது 20 ரூபாய்க்குள் தான்.

இங்கே உள்ள காந்தி மார்க்கெட்டை மூடி விட்டார்கள். அங்குள்ள வியாபாரிகளுக்குத் தான் இங்கே சந்தை போட அனுமதி! ஆகவே காந்தி மார்க்கெட் விலைக்கே விற்றதாகச் சொன்னார்கள். தக்காளி எல்லாம் தரத்துக்கு ஏற்ப 10 ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்குள். காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் எல்லாம் மலிவு. ஆனால் நாங்க சாப்பிட முடியாது! :( மற்றக் காய்கள் சில வாங்கினோம். வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தெரிந்தவர்களிடம் இருந்து  5 வாழைக்காய் 20 ரூ என்று கொண்டு வந்து கொடுத்தார். அதைத் தவிரவும் ஒரு அண்ணாச்சி கடை இருப்பதாலும் தெருவில் கடை போட்டிருந்த ஒரு சிலர் போடுவதாலும் அதிகம் அலைச்சல் இல்லாமல் காலையிலேயே கீழே போய் வாங்கி விடுகிறோம். கீரை வகைகளும் கிடைக்கின்றன. ஆவின் பால் பூத் எதிரேயே இருப்பதால் பாலுக்கும் பிரச்னை இல்லை. பால்காரர்களையும் எங்க குடியிருப்பில் அனுமதித்திருக்கின்றனர். எப்படியோ நாட்கள் ஓடுகின்றன.  கூடியவரை மிச்சம் வைக்காமல் சமைத்து விடுவேன். மிஞ்சினால் இரவுக்கு வைத்துக் கொண்டு விடுகிறோம். வேலை செய்யும் பெண்மணியைக் கூட வரும் நாட்களில் வேண்டாம்னு சொல்லலாம்னு முடிவு. அவங்க எனக்குனு வருவதில்லை. என்றாலும் அவங்களும் பாவம் தானே!

57 comments:

 1. ஆஆஆஆஅவ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ பூஸோ கொக்கோ:))

  ReplyDelete
  Replies
  1. ஆ இதாரு நான் தான் ஃபர்ஸ்டாக வந்திருக்கோணும். ஹா ஹா ஹா ஹா ஹா...இவ்வலவு நேரம் பேட் கேட் வே எரர்...கமென்ட் எரர் எனு வந்துட்டே இருந்துச்சு கீதாக்கா தளம்...

   கீதா

   Delete
  2. நேற்றே பார்த்தேன் அதிரடி, ஆனால் அப்போ என் அண்ணன், அண்ணி இருவரும் தொலைபேசியில் அழைத்ததால் உடனே பதில் அளிக்கலை. அவங்களும் ரொம்ப நேரம் பேசினாங்க! அதுக்கப்புறமா எனக்கு நேரம் இல்லை.

   Delete
  3. ஹாஹா தி/கீதா, இரண்டு பேருமே ஃபர்ஷ்டோ ப்ஃர்ஷ்டு! ஓகேயா/

   Delete
 2. தடுப்பு சிஸ்டம் நல்லது ஆனா நடந்து போய் வாங்கறது நிறையபேருக்கு கஷ்டமில்லையா .உங்களுக்கு கடை கிட்ட அமைந்தது நல்லது .அதுக்கு கோமதி அக்கா வீட்டுக்கு டெலிவரி தரமாதிரி உங்களுக்கும் இருந்தா வசதியா இருக்கும் .இங்கே எனக்கு கடைக்கு போகவே விருப்பமில்லை .நிறையபேர் சிம்ப்டம்ஸ் இருந்தும் உலவாறாங்க கொஞ்சமும் பொறுப்பில்லாமா .

  வேலைக்கு வருபவர் நிலை பாவம்தான்கா .ஆனா ப்போதையசூழலில்  mindfulness மிக அவசியம் .பத்திரமா இருங்க vinyl க்ளவுஸ் கிடைச்சா வாங்கி வைங்க கடைக்குப்போகும்போது போட்டுட்டு வீட்டுக்கு வர வழியில் குப்பைத்தொட்டியில் கழட்டி வீசுங்க 

  ReplyDelete
  Replies
  1. இங்கே எல்லாம் நடந்தோ வண்டியிலோ போய் நாங்க வாங்கலை. கிடைப்பதை வாங்கிக்கொள்கிறோம். அக்கம்பக்கம் தோப்புகள் இருப்பதால் வாழை வைத்திருப்பவர்கள் தார் போட்டால் காய்களை விற்பனைக்குக் கொடுக்கின்றனர். அப்படி வாழைக்காய், முருங்கைக்காய், முருங்கைக்கீரைனு கிடைக்கும். முருங்கைக்கீரைக்கு அநேகமாக் காசு வாங்க மாட்டாங்க! வாழைகாயெல்லாம் பெரிதாகவே இருக்கும். திருச்சியே வாழைக்குப் பெயர் போன ஊராச்சே! வேலை செய்த பெண்மணி எனக்குனு வரலை. இங்கே இன்னும் சில வயசானவங்க, ரொம்ப முடியாதவங்க இருக்காங்க. அவங்களுக்காக வந்தப்போ எனக்கும் வந்து கொண்டிருந்தார். இன்னிலேருந்து வேண்டாம்னு சொல்லி ஆச்சு.

   Delete
  2. துணியால் தைத்த மாஸ்க்குகள் தான். அவற்றை அணியாமல் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. கீழே உள்ள வணிக வளாகம் சென்றால் கூட அதைப் போட்டுக் கொண்டு தான் மாமா போவார். வந்த உடனே கைகளைக் கழுவிக்கொண்டு அந்த மாஸ்கை அவிழ்த்து உடனே தோய்த்துக் காய வைப்போம். அடுத்த முறைக்கு வேறே மாஸ்க். 4,5 வைத்திருக்கோம்.

   Delete
 3. கேட்க நினைச்சேன் ..உங்க மருமகளும் குஞ்சுலுவும் அமெரிக்கா போய் பத்திரமா சேர்ந்துட்டாங்களா 

  ReplyDelete
  Replies
  1. இல்லையே, மருமகள் 2 மாசம் இருக்கணுனு சொன்னதால் இந்த மாதம் 26 ஆம் தேதிக்குத் தான் பயணச்சீட்டு வாங்கி இருந்தது. இப்போதைக்கு விமான சேவையே இல்லை! ஆனால் ஒரு சில ஊர்களுக்கும், நாடுகளுக்கும் அமெரிக்கன் எம்பசி மூலமாகத் தனி விமானம் மூலம் அமெரிக்கக் குடிமக்களைக் கூட்டிச் செல்லும் திட்டம் ஒன்று செயல்பட்டு வருது. நேற்றுக் கூடக் குழந்தையைப் பார்த்தோம். எனக்கென்னமோ அவள் கொஞ்சம் வாட்டத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. அதிகம் சிரிப்பு இல்லை. :(

   Delete
  2. அப்பாவை தேடுகிறாள் போல குழந்தை.
   நீங்களும் போக முடியவில்லை. பேத்தியும் இங்கு வர முடியவில்லை.
   ஸ்கைப்பில் பார்த்து கொண்டு இருப்பது கொஞ்சம் ஆறுதல்.

   Delete
  3. ஆமாம், உள்ளூர ஏங்குகிறாள். ஆனால் எங்க பையருக்கு அது புரியலை. அவள் பாட்டுக்குச் சாதாரணமாக இருப்பதாகச் சொல்கிறார். கண்களில் அந்த ஒளி! இல்லை! :( நம்மவருக்கும் அது புரிந்தது. வாட்சப்பில் நேற்றுக் கூடப் பார்த்தோம் குழந்தையை!

   Delete
 4. இதுவும் கடந்து போகும். திடத்துடன் இருப்போம் கீதாம்மா...

  ReplyDelete
  Replies
  1. தைரியம் தான் கைகொடுத்து வருகிறது வெங்கட்!

   Delete
 5. வேலைக்கு வருபவரை நிறுத்துவதே நல்லது கீசாக்கா, ஆனா அவர்களின் சம்பளத்தைக் குடுத்து விடுங்கோ.. நீங்கள் இன்னும் வரவிட்டிருப்பது எனக்கு ஆச்சரியம், ஏனெனில் இப்போ ஆரையும் ஆரும் சந்திப்பதே இல்லை.. அப்படி இருக்கும்போது இப்படி வேலை செய்யக் கூப்பிடுவது ஆபத்து..

  ReplyDelete
  Replies
  1. நிறுத்தியாச்சு பிஞ்சு. எல்லாப் பக்கங்களில் இருந்தும் அதிக அழுத்தம் கொடுத்தார்கள். நேற்றிலிருந்து வரவில்லை. இன்றைக்குத் தொலைபேசியில் அழைத்து நான் சொல்லும் வரை வரவேண்டாம்னு சொல்லிட்டேன். சம்பளம் தேவைப்படும்போது வந்து வாங்கிக்கறேன் எனச் சொல்லி இருக்கா. இங்கே கீழே பக்கத்தில் தான் அவங்க வீடு. மொட்டைமாடியில் போய்ப் பார்த்தால் அவங்க வீடு தெரியும். ஆனால் மற்ற ஓரிரு வீடுகளுக்கு வருகிறார் எனத் தெரியும். அவங்களால் எல்லாம் தனியே செய்ய முடியாது.

   Delete
 6. உலகமே அமைதியில்தான் மூழ்கிக் கிடக்கிறது. வீட்டில் இருக்கும் அதுவும் தனிமையில் இருக்கும் ரிரயேட் ஆனோருக்குத்தான் பொழுது போகாது. மற்றும்படி எங்களுக்கெல்லாம் உண்மையில் மிகவும் ஹப்பியாக இருக்குது, ரென்ஷன் இல்லை, பிள்ளைகளும் வீஇட்டுக்குள்ளேயே இருப்பதால், மனம் நிமதியாக இருக்குது, இல்லை எனில் வெளியே போய் விடுவார்கள், எங்கே காணோமே என தேடிக்கொண்டிருப்போம்..

  இது விதம் விதமாக சமையல்/பலகாரம் செய்கிறேன் ஹா ஹா ஹா.. இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு அமைதி, வீசூழல் இனி வராதெல்லோ.. ஆனாலும் நாட்டில் நடக்கும் மரணங்கள் பார்க்கையில் மனம் துடிப்பதையும் நிறுத்த முடிவதில்லை.. எங்கோ ஒரு மூலையிலாவது சோகம் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை..

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் எனக்கு நேரம் பத்தலை. எப்படியோ ஓடி விடுகிறது. இதில் இன்னிக்குக் காலை ஐந்து மணியிலிருந்து ஏழரை வரை மின்சாரம் இல்லை. ஆகக் கணினியை இப்போத் தான் ஒன்றே முக்கால் மணிக்குத் திறந்தேன். அது வரை வேலை சரியாக இருந்தது.

   Delete
 7. சிரமமான நாட்கள் தான் கீதாமா.
  நம் நன்மைக்காகக் கடக்கத்தான் வேண்டும்..
  இங்கே வீட்டுக்கே கொண்டு வரும் வசதியும் குறைந்து கொண்டு வருகிறது. எல்லா இடத்திலும் நோய்த் தொற்று பரவுவதால், வேலை செய்யும் ஆட்கள் குறைந்து வருகிறார்கள்.
  பாவம் மாமா பாடு சிரமம்தான்.
  வளாகத்துக்கே வண்டியில் கொண்டுவந்து கொடுப்பது
  போல ஏற்பாடு செய்யலாம். அவர்களுக்கு என்ன தொந்தரவோ.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். காலங்கார்த்தாலேயே அருகிலிருக்கும் அண்ணாச்சி கடையில் புதிய காய்கள் வந்துவிடுகின்றன. ஆகவே அங்கே போய் வாங்கி வருவது கொஞ்சம் நடைப்பயிற்சி போலத் தானே! மற்றபடி சந்தைக்கெல்லாம் அவர் போவதில்லை. இங்கே ஸ்ரீரங்கம் வடக்குப் பக்கம் ஒரு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் தெற்குப் பக்கம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் போட்டிருக்காங்க. ஆனால் போவதில்லை. மேலே உள்ள படம் என் ஓர்ப்படி எனக்கு அனுப்பியது.

   Delete
 8. காவேரி பாலத்தில் காய்கறிகள் விற்பனை செய்ததால் ஏற்பட்ட அசௌகரியங்களை பற்றி ஒருவர் வாட்ஸாப்பில் எழுதியிருந்தார். இப்போது சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு மாற்றி விட்டார்கள் போலிருக்கிறதே? ஊரடங்கு நீட்டிக்கப் படலாம் என்றும் செய்தல் வருகின்றன. மிகவும் கடினமான ஒரு கால கட்டம். அரசாங்கத்தோடு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

  ReplyDelete
  Replies
  1. ஒரு நாள் போனது தான் பானுமதி! அதுவும் எங்க பக்கம் பாலத்தின் அருகேயே கிடைத்தவற்றை வாங்கி வந்தார். எப்படி இருக்குனு பார்க்கப் போனார். எனக்கே தெரியாது. பின்னால் வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால் ஒருத்தருக்கும் இன்னொருத்தருக்கும் இடைவெளி அதிகம் இருந்ததாகவும் இமிகிரேஷனில் இருக்காப்போல் ஒருத்தர் வாங்கி முடித்துத் தான் இன்னொருத்தர் போக முடிந்தது என்றும் சொன்னார். அதன் பின்னர் வந்த நாட்களில் கூட்டம் வந்திருக்கும் போல. எடுத்து விட்டார்கள். சத்திரம் பேருந்து நிலையம் இல்லை. அதற்கும் முன்னாலேயே ஓர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி.

   Delete
 9. பரவாயில்லையே ஆற்றில் கொஞ்சம் தண்ணீர் இருக்கு.

  ஓ இந்தப் பாலம் அருகே காய்கள் விற்பனையா..விலை பரவாயில்லையே.

  இங்கும் பரவாயில்லை. கோஸ் மீடியம் சைஸ் 10 ரூ. கீரை பெரிய கட்டு 15, 20 ரூ.

  வாழைக்காய் மலிவாக இருக்கே அக்கா, இங்கு அது கொஞ்சம் விலை அதிகம் ஒரு காய் 10 ரூ. ஆனால் பெரிசா இருக்கு. தக்காளி கிலோ ரூ30 இந்த ஊர் தக்காளி. வெங்காயம் அதே விலை அல்லது 40. வாழைப்பூ 10 ரூ. இப்படி ஓடுகிறது. சந்தை இல்லை இப்போது.

  கடைகளில் தான் இந்தக் காய்கள் அல்லது வீட்டு வாசலில் வரும் தள்ளு வண்டி அல்லது வேன். தள்ளு வண்டியில் வாங்கிவிடுவேன் அவர்கள் பாவம் இல்லையா.

  இப்படியாக ஓடுகிறது. எல்லாம் எப்போது சீராகுமோ. விரைவில் சீராக வேண்டும்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பொதுவாகவே இங்கே வாழைக்காய் மலிவு தான் தி/கீதா. பறங்கி, பூஷணியும் மலிவு தான். பறங்கி வாங்கினால் 2,3 முறைக்கு வரும். பூஷணி குறைந்தது 2 நாட்கள் வந்து விடும். ஒரு சில மளிகைப் பொருட்கள் சில கடைகளில் அதிகம் விலைக்கு விற்பதாகச் சொல்கின்றனர். எங்களுக்கு ஏற்கெனவே வாங்கியது இருப்பதால் தெரியவில்லை.

   Delete
 10. அங்கு விலை பரவாயில்லை... இங்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. ஓ, அப்படியா, திரு தனபாலன்! நேற்று என் அண்ணி சென்னையில் நெசப்பாக்கத்தில் காய்கள், மளிகைப் பொருட்கள் விலை அதிகம் என்றார். கீரை 25 ரூ கொடுத்தால் கிடைக்கிறது எனவும் ஒரு நாளுக்குத் தான் வரும் எனவும், துணைக்கு இன்னொரு காய் பண்ண வேண்டும் என்றும் சொன்னார்.

   Delete
 11. WhatsApp-ஐ கணினியில் கொண்டு வந்து விட்டால், (அதற்கான இணைப்பு : http://www.tamilvaasi.com/2015/02/whatsapp-chrome.html) தரவிறக்கம் செய்வது எளிது...

  ReplyDelete
  Replies
  1. முயற்சி செய்கிறேன் திரு தனபாலன்.

   Delete
 12. வணக்கம் சகோதரி

  படங்கள் நன்றாகயிருக்கிறது. ஆனால் பெரிது பண்ணி பார்க்க முடியவில்லை இங்கும் சாமான்கள் கிடைக்கிறதென்றாலும் ஒரு திருப்தி இல்லை. மனம் முழுக்க கவலையும், ஏதோ பயங்களுமாக சமைப்பது கூட ஒரு பிடித்தம் இல்லமல் நாட்கள் ஓடுகின்றன. இங்கும் பெருக்கி துடைக்க மட்டும் ஒரு வேலையாள் வைத்திருந்தோம். நாங்களே வர வேண்டாம் என்று சொல்லிய பின் இங்கு அப்பார்ட்மெண்ட் ரூல்ஸ் அவர்களை நிறுத்தியாகி விட்டது. எனவே காலை பெருக்கும் வேலையும் சேர்ந்து கொண்டது. நானே இப்போது குழந்தைகள் பிறந்த நான்கைந்து வருடங்களாகத்தான் வேலைக்கு அவர்களை வைத்துக் கொண்டேன். அதற்கு முன் எங்கள் வீட்டில் வேலைக்கு என்று யாருமே கிடையாது. நானே தனியாக எல்லாவற்றையும் செய்து கொள்வேன்.என்னவோ.. எல்லாம் நலமாக முடிய வேண்டிக் கொண்டேயுள்ளோம் . நல்லவைகள் நடக்கட்டும். நீங்களும் கவனமாக இருங்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கமலா, நாமே எடுக்கும் படங்களைப் போட்டால் பெரிதாக்க முடிந்தாற்போல் இதில் எனக்கும் முடியலை. திரு தனபாலன் வாட்சப்பையும் கணினிக்குக் கொண்டுவரச் சொல்கிறார். அப்படிச் செய்தால் பெரிது பண்ணிப் பார்க்கலாமோ என்னமோ! நான் 2018 வரை அவசரம், விசேஷம் என்றால் தவிர வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொண்டது இல்லை. 2018 ஆம் ஆண்டில் அக்கியினால் கஷ்டப்பட்டதால் வைத்துக் கொண்டேன். மருத்துவர் தொடர்ந்து ஓய்வில் இருக்கச் சொன்னதால் அப்போத் தான் சாப்பாடும் காடரிங் மூலம் வாங்கினோம். இப்போ இரண்டும் இல்லை. எல்லாம் நான் தான்! இதிலே எங்க பையர் 3 நாட்களுக்கு ஒரு முறை பெருக்கித் துடைத்தால் போதும் என்கிறார். தினம் வீடு சுத்தம் செய்யாமல் சாப்பிட எனக்குப் பிடிக்காது. இன்று இருவருக்கும் அதில் வாக்குவாதம்! :(

   Delete
 13. எல்லா இடங்களிலும் மக்கள் இதே நிலைப்பாட்டில்தான் வாழ்கிறார்கள்.

  இதற்கு பலரும் அரசை குறை சொல்வது முட்டாள்தனம் இது இறைவன் செயல் உலகமே கேள்விக்குறிதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கில்லர்ஜி, எல்லோருமே கஷ்டப்படும்போது அரசைக்குற்றம் சொல்வதில் என்ன லாபம்? அவர்களும் நம்மைப் போன்ற மானுடர்களே! அவர்கள் அதிகாரத்தில் என்ன எல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்து வருகின்றனர். ஆதரவற்றவர்களுக்கு ஒன்றுமே செய்யலை என்கிறார்களே! சென்னையிலேயே 2,3 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு சேவாபாரதி போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உணவு, குடிநீர் அளித்து வருகின்றன. இவங்க சேவாபாரதியின் முகாமைக் கேரளத்தில் நொறுக்கித் தள்ளி உதவி செய்ததோடு சரி! :(

   Delete
 14. பழைய வீட்டுக்கு மளிகை போடும் கடைப் பையன் உதவியால் அதிகம் சிரமம் இல்லாமல் ஓடுகிறது எங்களுக்கு. அலுவலகம் சென்று வரும்போது வாங்கி வந்து விடுகினேன்.

  ReplyDelete
  Replies
  1. அலுவலகத்துக்கு எப்படி வந்து போகிறீர்கள்? நல்ல சமயம் பார்த்து உங்கள் வீடும் மாறி விட்டது. முன் போல் இருந்தால் அதிகம் பிரச்னை இருக்காது. ஆண்டவன் எல்லோரையும் கவலையிலும், கஷ்டத்திலும் தள்ளி வேடிக்கை பார்க்கிறான்.

   Delete
 15. கீரை கிடைப்பதில்லை. பருப்பு வகைகள், கடலெண்ணெய், நல்லெண்ணெய், அரிசி விலை ஏற்றி இருக்க.கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே அப்படி ஏதும் ஏறியதாகத் தெரியவில்லை. ஆனால் மளிகைப் பொருட்களும் அதிகம் வாங்கவில்லை. கோதுமை மாவு மட்டும் 50 ரூ ஆகிவிட்டது. கோதுமையைக் கண்ணெதிரே அரைத்துத் தருவார்கள்.

   Delete
  2. சரக்கு வரணுமே! அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருபவர்களுக்குத் தடை ஏதும் இல்லை. ஆங்காங்கே காய்கள், பூக்கள், பழங்கள் தோட்டங்கள் போட்டிருப்போருக்கும் அவற்றை அறுவடை செய்யத் தடை இல்லை. ஆனால் தொலைக்காட்சிகளில் நேர்மாறாகவே சொல்கின்றனர். ஒரு வாழைத் தோட்டக்காரர் முகநூல் மூலம் தொடர்பு கொண்டு திருச்சி உழவர் சந்தைக்குக் காய்கள் கொண்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். அவரிடம் பலரும் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டு தங்களுக்கு வேண்டியவற்றைச் சொன்னார்கள்.

   Delete
 16. கீரை எங்கள் ஏரியாவில்தான் கிடைப்பதில்லை. மற்றவர்கள் கிடைப்பதாய் சொல்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கீரை கிடைப்பதாகவேப் பலரும் சொல்கின்றனர்.

   Delete
  2. தினம் எங்கள் வளாகத்திற்கு கீரை வருது.(இப்போதும்)
   நான் கீழே இறங்கி போவதற்குள் அவர் வேறு இடத்திற்கு போய் விடுவார்.அதனால் வாங்க போக மாட்டேன் வெள்ளிக்கிழமை சந்தையில் கீரை வாங்குவேன். இப்போது கிடையாது.

   Delete
  3. எங்க வளாகத்தில் கீழே கீரை,மஞ்சள், மாவடு கொண்டு வந்தால் பாதுகாவலர் தொலைபேசியில் அழைப்பார். நாங்க போய் வாங்கிப்போம்.

   Delete
 17. இங்க ஒன்றரை வாரத்துக்கு வாங்கி ஓட்டியாச்சு. மிச்சம் ஒரு வாரம் பாத்துப்போம்

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நீட்டிக்கப் போவதாய்ச் செய்திகள் வருகின்றன எல்கே! எதுக்கும் வாங்கி வைச்சுக்கோங்க!

   Delete
 18. சிரமமான நாட்கள்தான். இயல்பு நிலைக்குத் திரும்பும் நாள் விரைவில் வரும் எனக் காத்திருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. பிரார்த்திப்போம் முனைவரே!

   Delete
 19. இங்கும் எல்லாம் கிடைக்கின்றது. வேலைக்கு வருபவரை நிறுத்த வேண்டாம். ஆனால், முறையான இடைவெளியை எங்கும் கடைப்பிடிக்க சொல்லுங்க. முகக்கவசம் அணிந்து அடிக்கடி கை கழுவ சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. நிறுத்த வேண்டாம்னு சொன்னது நீங்க மட்டுமே ராஜி! ஆனால் எல்லோரும் கொடுத்த அழுத்தத்தில் நிறுத்தி விட்டோம். அவங்க முகக்கவசம் அணிந்து குளித்துச் சுத்தமாகவே வருவார்கள். முதலில் நம்ம வீட்டுக்கு வந்துவிடுவாங்க என்பதால் எங்களுக்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் வந்ததில்லை.

   Delete
 20. ப்ரச்சனை இல்லை என்று நீங்கள் சொன்னாலும் கொஞ்சம் அதீத உணர்வு இருக்கத்தான் செய்கிறது (வீட்டிலேயே இருப்பதால்).

  ஐந்து வாழைக்காய் 20 ரூபாயா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இங்கு ஒரு வாழைக்காய் 20 ரூபாய் கொடுத்து வாங்குகிறேன். இந்தத் தண்டு, 3/4 முழம் 20 ரூபாய்.

  காய்கறி வாங்குவதற்கு மாமாவை அனுப்பியது நல்லதல்ல. கூட்டம், நெரிசல், பிறர் மாஸ்க் போடாமல் இருப்பது. எதுக்கு வம்பு?

  ReplyDelete
  Replies
  1. அடிமனதில் கலக்கம், இனம் தெரியாத சோர்வு, மனம் பீதி அடைதல் ஆகியவை இருக்கத் தான் செய்கிறது நெல்லைத் தமிழரே, மற்றபடி ஒவ்வொருத்தர் புலம்புகிறாப்போல் பெரிய அளவில் வந்த பிரச்னைகளும் கடவுள் அருளால் மாயமாய் மறைந்து விட்டன. இப்படியே காப்பாற்றுவார் என நம்புகிறோம்.மாமாவை நான் காயெல்லாம் வாங்கச் சொல்லுவதில்லை. பல வருடங்களாகக் கீழே இருக்கும் கடையிலேயே நானே போய் வாங்கிக்கறேன்னுதான் சொல்லுகிறேன். ஆனால் அவர் ஆங்கிலேயே உயர்குடிப் பிரபு மாதிரி. எங்க புக்ககத்திலேயே யாருக்கும் எதுவும் ஆலோசனை, புத்திமதி சொல்லக் கூடாது. அவங்க தான் நமக்குச் சொல்வாங்க. மாமா நினைத்தால் அன்னிக்குப் போயிட்டு வந்துடணும். என்ன சொன்னாலும் நடக்காது. அதோடு அங்கே காவல்துறை பாதுகாப்பும் அதிகம் இருந்தது. ஒருவருக்கொருவர் இடைவெளியையும் கடைப்பிடித்திருக்கின்றனர்.

   Delete
 21. இங்கயும் பீட்ரூட், வெண்டை, கோஸ், தக்காளி, வெள்ளரி எல்லாமே கிலோ 20 ரூபாயில் இருந்தது. இந்த ஊரடங்கு வந்தாலும் வந்தது, தக்காளி தவிர மற்றவை 40 ரூபாயக ஜம்ப் ஆகிவிட்டன.

  ஊரடங்கு உத்தரவுக்கு மறுநாள், கிலோ 55 விற்ற அரிசியை 70 ரூபாய் கொடுத்து 3 கிலோ வாங்கினேன்.

  காவிரி ஆறு... அழகாவே இருக்கிறாள். வெயில் காலத்திலும் இதுபோல் தண்ணீர் ஓடினால் நல்லதுதான்.

  ReplyDelete
  Replies
  1. அரிசி எல்லாம் இங்கே விலை ஏறியதாய்த் தெரியவில்லை. வெண்டைக்காய், கத்திரிக்காய் இங்கே கொஞ்சம் விலை அதிகம். மற்றவை மலிவு தான். கொத்துமல்லிக் கட்டு பெரிது 10 ரூ சின்னது 5 ரூ. பச்சைமிளகாய் 10 ரூபாய்க்கு 200 கொடுக்கிறாங்க. அரைச்சுத் தேய்ச்சுக்க வேண்டியது தான்.

   Delete
 22. ஓர்ப்படி எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது. காவிரி அழகாய் இருக்கிறது.

  பருப்பு வகைகள், அரிசி , எல்லாம் விலை ஏறி விட்டது.
  வரத்து இல்லை என்றும் வர ஒரு வாரம் ஆகும் என்றும் சொல்கிறார்கள் கடைகளில்.
  இன்று டோர் டெலிவரி செய்யும் கடையில் சொன்ன பொருட்கள் நிறைய இல்லை.
  வெண்ணை இல்லை. கோதுமை மாவு இல்லை .

  விரைவில் நிலைமை சரியாக வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. இங்க பசங்க ஊரடங்கு பற்றி பிரதமர் சொல்லிக்கொண்டிருந்தபோதே உடனே வெளியில் சென்று 5 கிலோ ஆட்டா (ஆசீர்வாத் பிராண்ட் மாதிரி) வாங்கிவந்தாங்க. நாங்க சொல்லாமலேயே இரண்டு 500 கிராம் வெண்ணெய் பாக்கெட் வாங்கிவந்தாங்க. ரொம்ப உபயோகமா இருக்கு. அப்போதான் 55 ரூபாய் அரிசியை 70 ரூபாய்க்கு கடைக்காரர் விற்றதைச் சொன்னாங்க.

   Delete
  2. வாங்க கோமதி. ஓர்ப்படியின் அப்பா கை தேர்ந்த புகைப்பட நிபுணர். ரயில்வேயில் தலைமைப் புகைப்பட நிபுணராக வேலை பார்த்து வந்தார். ஆகவே நம்ம ராமலக்ஷ்மி மாதிரி ஓர்ப்படிக்கும் சின்ன வயசில் இருந்தே புகைப்படம் எடுக்கும் திறமை உண்டு. ஆகவே படங்கள் நன்றாக வந்துள்ளன. வெண்ணை நான் கூடியவரை வீட்டிலேயே எடுத்து விடுகிறேன். கோதுமை மாவு 2 கிலோ கோதுமையைக் கொடுத்து அரைத்து வாங்கி வந்தாச்சு. விலை தான் அதிகம். கிலோ 50 ரூ பண்ணிவிட்டார்கள். (அரைகூலியும் சேர்த்து)

   Delete
  3. ஆஷீர்வாத் ஆட்டா எங்களுக்குப் பிடிப்பதில்லை நெல்லைத் தமிழரே! அன்னபூர்ணா அல்லது பிலிஸ்பரி பரவாயில்லைனு தோணும். பொதுவாக கோதுமையை வாங்கித் தான் அரைப்போம். இப்போ ஒரு மில்லில் அவங்களே கோதுமையை வாங்கி வைத்துக் கொண்டு நாம் கேட்பதை அரைத்துத் தருகிறார்கள். மொத்தமாக அரைத்த மாவும் கிடைக்கிறது.

   Delete
 23. ஆவின் பூத் எதிரிலேயே. பால் சப்ளையும் இருக்கிறது. சில காய்கறிகளைத் தவிர 30-க்குக் கீழே கிடைக்கும் காய்கறிகள். கீரைக்கட்டுகளும் கிடைக்கின்றன. வேலைக்காரி எங்கிருந்தோ வாழைக்காயும் மலிவாக வாங்கித் தருகிறாள்! பக்கத்தில் கடைகளிலும் போய் வாங்க முடிகிறது. வேலைக்காரி இன்னமும் வருகிறாள். இக்கட்டான நிலையிலும் இவ்வளவு நடக்கிறது, உங்கள் ஊரில். இருந்தும்..

  ‘எப்படியோ நாட்களை ஓட்டுகிறோம்’ என்கிறீர்களே.. புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, ஏகாந்தன்! ரொம்பவே புகை விடாதீங்க! :))))) வெறும் சாப்பாடு மட்டுமா வாழ்க்கை? வேலை செய்யும் பெண்ணை நிறுத்தியாச்சே, முந்தைய கருத்துகளில் பார்க்கவில்லை போலும்! :) என்றாலும் மனம் அமைதி பெறவில்லை. எத்தனையோ வேலைகள் தொங்கலில் நிற்கின்றனவே! :(

   Delete
  2. எங்கும் இதே நிலைதான் மனித மனம்சோர்வடையாமல் இருப்பது முக்கியம்.

   நாங்கள் இப்பொழுது தலைநகரில் இருக்கின்றோம்.எங்களுக்கு இருவீடு தள்ளி காய்கறி விற்கிறார்கள் வாங்கி வைத்துக் கொள்வோம்.காலையில் ப்ரட்,பண்ஸ் சுடச்சுட அருகே கிடைக்கும். பால்கனி தொட்டிகளில் நாட்டியுள்ள மணத்தக்காளி பசளிக்கீரைகள் உதவுகின்றன வீட்டுக் கீரைகள் என மகிழ்ந்திருக்கிறோம்.

   இதுவும் நலமாக கடக்கட்டும்.

   Delete