எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 17, 2020

திப்பிசமோ, திப்பிசம்! என்னோட திப்பிசம்!

அம்பேரிக்கப் பயணத்தில் இருந்து திரும்பி வந்ததில் இருந்து நாட்கள் ஓடோடிக் கொண்டிருக்கின்றன. நடுவில் நடந்த துக்ககரமான சம்பவம் ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. அந்தக் காரியங்கள் நடக்கும்போதே ஆரம்பித்த ஊரடங்கு, வெளியில் எங்கும் செல்ல முடியாமைனு வாழ்க்கை ஓர் இடத்தில் ஸ்தம்பித்தாற்போல் இருந்தது. புத்தாண்டுப் பிறப்பன்று கூட எதுவும் செய்யவில்லை. ஒரு மாசம் கூட ஆகவில்லையே!  மனம் மாறுதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. 

எப்படியும் சாப்பிட்டாகணும். உயிரோடு இருக்கும்வரை உடலைக்காப்பாற்றிக் கொள்ள உணவு முக்கியம் இல்லையா? அப்படி ஒரு நாள் முருங்கைக்கீரை கிடைச்சப்போ வெறும் அரிசி அடைக்கு அரைத்து அதில்  முருங்கைக்கீரை போட்டுப் பண்ணினேன். வெறும் அரிசி அடைக்குப் புழுங்கலரிசியும் தேங்காயும் மட்டுமே போட்டு அரைத்து உப்புச் சேர்த்து முருங்கைக்கீரையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துப் பண்ணணும். நம்மவருக்குக் காரம் வேண்டும் என்பதால் நான் அதிலேயே பச்சை மிளகாயும், இஞ்சியும் சேர்த்துக் கொண்டு கொஞ்சம் போல் மிளகு ஜீரகமும் பொடித்துப் போட்டுக் கொண்டு முருங்கைக்கீரையைச் சேர்த்து வார்த்தேன். எத்தனை தான் குறைவாக அரைத்தாலும் கொஞ்சமானும் மாவு மிஞ்சத் தான் செய்தது. அதோடு மிச்சம் இருந்த இட்லி மாவையும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டு குழி அப்பம் போல் செய்து ஒரு நாள் சாப்பிட்டும் மாவு மிச்சம். என்ன செய்யலாம்?

நேற்று சாதாரணமாக எப்போதும் பண்ணும் அடைக்கு அரைத்து அடை வார்த்தேன். கொஞ்சம் தான் அரிசி பருப்பு. இரண்டும் சேர்த்தே இரண்டு கிண்ணம் தான். ஆனால் அதிலும் ஒரு கரண்டிக்குக் கொஞ்சம் கூட மாவு மிச்சம். இன்னிக்கு என்ன பண்ணனு யோசிச்சப்போத் திப்பிச வேலை பண்ணி ரொம்ப நாளாச்சேனு நினைவு வந்தது. உடனே உள்ளே இருந்த வெறும் அரிசி அடைமாவையும் இந்த அடைமாவையும் ஒன்று சேர்த்தேன்.



இரண்டு மாவையும் ஒன்றாக்கி வைத்திருக்கிறேன். ஒரு அரைக்கரண்டி பாசிப்பருப்பைத் தனியாக நனைத்து வைத்தேன். இன்னொரு அரைக்கரண்டி பாசிப்பருப்புடன் இரண்டு டீஸ்பூன் க.பருப்பு, இரண்டு டீஸ்பூன் துபருப்பு சேர்த்து ஊற வைத்தேன்.





ஊற வைத்த பருப்புகள்.

இதில் பாசிப்பருப்புக் கலவையை மட்டும் ஒரு பாதி மி.வத்தலை அதிலேயே ஊறவைத்து உப்புப் பெருங்காயம் சேர்த்து மிக்சி ஜாரில் தளர அரைத்து ஏற்கெனவே கலந்த மாவோடு சேர்த்தேன். மாவில் புளிப்பு இருந்தால் போய்விடும். அதோடு கொஞ்சம் நிறம், ருசி கொடுக்கும். தனியே ஊற வைச்சிருந்த பாசிப்பருப்பைக் களைந்து வடிகட்டி இதில் அப்படியே முழுசாகக் கலந்தேன். எண்ணெயில் பொரிக்கையில் பாசிப்பருப்பும் பொரிந்து கொண்டு கரகரவென வரும்.


பாசிப்பருப்பு அரைத்த கலவை (படம் எடுக்கலை, அந்த நேரம் பார்த்துத் தொலைபேசி அழைப்பு) முழுப்பாசிப்பருப்பு ஊற வைத்ததோடு சேர்த்துக் கருகப்பிலை, கொத்துமல்லி நறுக்கிச் சேர்த்திருக்கேன். கீழே இஞ்சி, பச்சை மிளகாய். பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து உள்ளே உள்ள விதைகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கிச் சேர்த்திருக்கேன். இஞ்சி இத்தனையும் போடவில்லை. ஒரு அங்குலம் அளவுக்குத் தோல் சீவி நறுக்கிப் போட்டேன்.


தேங்காய்ப் பல்லுப் பல்லாக நறுக்கிச் சேர்த்தேன். 



இஞ்சி, பச்சை மிளகாய்



எல்லாம் சேர்த்துக் கலந்த மாவு. அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்தேன். எண்ணெய் காய்ந்ததும் சின்னக் கரண்டியால் மாவை எடுத்து ஊற்றினேன்.



எண்ணெய் காய்கிறது.


வடைகள், ஹிஹிஹி, இதுவும் ஒருவகைத் தவலை வடையே தான்!


சூடான வடை தயார் சாப்பிட. மாவும் தீர்ந்து விட்டது. ஆளுக்கு 3 எனக் கணக்காக வந்தது. ஓர் திப்பிசமும் கற்றுக்கொண்டாயிற்று. தோசை மாவு, அடை மாவு மிஞ்சினால் தோசை மாவில் வெள்ளையப்பம் இல்லைனா குழி அப்பம் பண்ணுவேன். அடை மாவு எனில் குணுக்கு! இன்னிக்கு ஒரு மாறுதலாக இரண்டு அரைத்த மாவோடு புதுசாக அரைத்த ஒரு மாவையும் சேர்த்துக் கொண்டு பாசிப்பருப்பை அப்படியே போட்டுத்தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி போட்டுப் பண்ணினேன். பாசிப்பருப்புக் கலவைக்குக் கூடியவரை பருப்புவகைகளைக் கொஞ்சமாகவே போட வேண்டும். நிறையப் போட்டால் ஊறி நிறைய வந்துடும்.  

81 comments:

  1. தவலடை பாணியில் குனுக்கா? பார்க்கவே அழகாக இருக்கு. ஒரு வாய் மோர் சாத்த்துடன் தொட்டுக்கொண்டுவிடலாம்.

    வெறும்ன சாப்பிட்டால் பிறகு நெஞ்சுக்கரிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க மாலைத் தேநீரோடு சாப்பிட்டோம். அளவாகச் சாப்பிட்டதால் ஒண்ணும் பண்ணலை. கரெக்டாப் போய்விட்டது.

      Delete
    2. அட ஆமாம் படத்துல கொஞ்சமாகத்தான் கரெக்ட்ட போட்டுருக்கீங்க ம்ம்ம் அப்ப இங்கூட்டு அனுப்ப முடியாது போல!

      கீதா

      Delete
    3. நிறையப் பண்ணியதெல்லாம் மாமனாரோடு போய்விட்டது தி/கீதா, அவருக்குத் தான் எல்லாமே நிறையவும் பண்ணணும், சாப்பிடவும் சாப்பிடுவார். நாங்கல்லாம் அப்போவே கொறிப்புத் தான்!

      Delete
  2. வெங்காயம் சேர்த்தருந்தால் அது ஒரு சுவையா இருந்திருக்கும். ஆனால் தவலடை மாதிரி இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. அடையாக வார்த்தால் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்ப்பேன். ஆனால் இப்போ வெங்காயம் சாப்பிடும் மனசும் இல்லை. இதிலே போட்டால் நன்றாகவும் இருக்காது.

      Delete
  3. அடடே... எப்படிதான் கற்பனை ஓடுகிறது உங்களுக்கு! திப்பிசம் என்றாலும் கொஞ்சம் வேலை வாங்கி விடும் போல...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், கற்பனைவளம் இதிலாவது இருக்கே! இஃகி,இஃகி,இஃகி! திப்பிசம் தான். ஆனால் வேலை ஏதும் வாங்கலை. இரண்டும் ஏற்கெனவே அரைத்த மாவு. அதில் உள்ள புளிப்பை நீக்கக் கொஞ்சம் போல் எல்லாமே ஸ்பூன் அளவில் பருப்புக்கலவை அரைத்துச் சேர்த்திருக்கேன். இதில் வேலை ஏதும் இல்லை. பொரிவதற்காகப் பாசிப்பருப்பு ஊற வைச்சுச் சேர்த்தேன். சாதாரணமாகக் குணுக்குப் பண்ணினாலே தேங்காய்க் கீறிப் போடமாட்டோமா! அரை மணியில் வேலை முடிந்து விட்டது.

      Delete
  4. அதற்குத் தொட்டுக் கொள்ள ஒன்றும் செய்யவில்லையா? இரண்டு நாட்களுக்கு முன் வெறும் உளுந்தை ஊறவைத்து அரைத்து, குட்டி குட்டியாய் பொரித்துக் கொடுத்தார் பாஸ். தொட்டுக் கொள்ள உடைச்ச கடலை சட்னி!

    ReplyDelete
    Replies
    1. தக்காளிச் சட்னி இருந்தது. நான் அதைத் தொட்டுக்கொண்டேன். அவர் ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டார்.

      Delete
    2. ஸ்ரீராம் - நானும் இதனை (உளுந்து சின்ன போண்டா) செய்யணும்னு ரெண்டு நாளா நினைத்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் மிளகு சேர்க்கலாமான்னும் யோசனை.

      இதுக்கு தேங்காய் சட்னிதான் நல்லாருக்கும் என்பது என் எண்ணம். உளுந்து வாய்வு. பொரிகடலையும் வாய்வு.

      Delete
    3. இட்லி, தோசைக்கு அரைக்கையிலேயே அரைக்கும் உளுந்து மாவில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதில் அரிசி மாவு சேர்த்துக் கலந்து மிளகு முழுசாகப் போட்டுப் பின்னர் தேங்காய்க்கீற்றுக்களையும் சேர்த்து போண்டா போட்டால் மேலே மொறு மொறு உள்ளே பஞ்சு! நமக்கு இம்மாதிரித் திடீர்த்திப்பிசம் தானே சரியா வருது! :)))))

      Delete
    4. அடிக்கடி அதையே செய்து தேங்காய் சட்னி அலுத்து விடுகிறது நெல்லை. இப்பவும் நான் தக்காளி காரச் சட்னி அல்லது தக்காளி வெங்காய சட்னி கேட்டேன். தக்காளி பெரியவனுக்குப் பிடிக்காது. வெங்காயம் பாஸுக்கும் அவர் அம்மாவுக்கும் ஆகாது. நான் தியாகியானேன்!

      Delete
    5. ஸ்ரீராம்... என் வீட்டில் பசங்க ரசனை வேறு. என் ரசனை, 20 வருடங்களுக்கு முன்னால் எனக்கு எது பிடிக்குமோ அதுவேதான். சப்பாத்திக்கு வேகவைத்த உருளை மசித்து வெங்காயம் சேர்த்து அந்த மசாலாதான் (தண்ணீர் சேர்க்காதது) பிடிக்கும். ஆனா பாருங்க, பசங்களுக்கு இது பிடிக்கவே பிடிக்காது (அல்லது சாப்பிடமாட்டாங்க). நான் வற்புறுத்தி சில ஐட்டங்கள் செஞ்சா, அதை நானும் மனைவியும்தான் சாப்பிடணும். அவங்க மிக மிகக் குறைவாக சாப்பிடுவாங்க. அவங்க சாப்பிடறதுதான் முக்கியம் என்பதால் தியாகி ஆன நிலைதான்.

      Delete
    6. //சேர்த்து போண்டா போட்டால்// - உங்களுக்கு கட்டுப்படியாகும். ஆளுக்கு 2 போண்டா போதும், அத்தோட காஃபின்னு சொல்லிடுவீங்க. இன்று இதைச் சொன்னபோது, என் ஹஸ்பண்ட், தனியா ஒரு டம்ளர் உளுந்து நனைத்து அதை அரைத்துத் தர்றேன் (கிரைண்டர் என்றால் அவள்தான் செய்யணும்) நீங்க பண்ணிடுங்க என்று சொல்லியிருக்காள். (உள்ள பஞ்சு வெளில மொறு மொறுன்னு வருமான்னு தெரியாது. எபிக்கு படத்தை அனுப்பி அப்படித்தான் இருந்தது என்று சொல்லிடவேண்டியதுதான் ஹா ஹா)

      Delete
    7. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் எதுக்கெல்லாம் தியாகியாரீங்க !!!!

      கீதா

      Delete
    8. மாலை நேரத்தில் சாப்பிடுவதைச் சாப்பாடு மாதிரியா சாப்பிட முடியும்? என்ன நெல்லை இது? அளவோடு தான் சாப்பிடணும். 2 அல்லது 3 அளவைப் பொறுத்து. போதுமே! நல்ல உளுந்தாக இருந்தால் மிக்சியில் அரைச்சாலும் விழுது நிறையவே வரும். ஆனால் ஊற வைச்சுத் தண்ணீரை வடிகட்டி வைச்சுட்டுப் பின்னர் அரைங்க! அரைக்கையில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் என்பது என் கருத்து. உப்புக் காரத்தை எடுக்கும் முன்னர் சேர்த்தால் போதும். முதலிலேயே போட்டால் மாவு ஜலம் விட்டுக்கும்.

      Delete
    9. கிரைண்டரில் அரைச்சால் ஒரு தம்பளர் போட்டால் நிறையவே வடையோ, போண்டாவோ வரும். அவ்வளவுக்கு இங்கே சாப்பிட ஆள் இல்லை. அதனால் மிக்சியே போதும். கிரைண்டர் மாவிலே சாப்பிடத் தோன்றினால் அன்னிக்குத் தான் இந்த மாதிரி இட்லி, தோசைக்குப் போடும் உளுந்து மாவில் இருந்து எடுத்துப் பண்ணுவேன்.

      Delete
  5. கீரை கிடைக்கவில்லை என்று போனவாரம் சொன்னேன் இல்லையா? இந்த வார ஆரம்பத்தில் முளைக் கீரையும், நேற்று பசலைக் கீரையும்!

    ReplyDelete
    Replies
    1. இங்கே தினம் கிடைக்கிறது. ஆனால் காய்கள் எதுவும் தீராததால் வாங்குவது இல்லை. அதோடு இங்கே வெளியே போக ரொம்பவே தடையும் விதிச்சிருக்காங்க. அட்டை கொடுக்கப் போவதாகக் கேள்வி.

      Delete
    2. வெரைட்டியாகக் கீரை இங்கு கிடைக்காட்டியும் தினமும் கிடைக்கிறது. அரைக்கீரை, பசலைக் கீரை, சிறு கீரை, தண்டுக் கீரை பச்சை சிவப்பு வெந்தயக் கீரை இன்னும் சில கிடைக்கிறது. காலையில் ஃப்ரெஷ்ஷாக

      கீதா

      Delete
    3. நாங்களும் வெளியில் போவதில்லை ஆனால் வீட்டிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் அப்புறம் வாசலில் வேன் அல்லது தள்ளு வண்டியில் காய் வந்துவிடுகிறது.

      கேரட், குடை மிளகாய் எல்லாம் கிலோ 40 தான்.

      கீதா

      Delete
    4. இங்கே விலை மிகக் குறைவு தி/கீதா. அதிகம் போனால் கிலோ 30 ரூபாய்க்குள்.

      Delete
    5. திருஷ்டிப் பட்டுவிட்டது போல, இன்னிக்குக் கீரைக் கட்டு 20 ரூ. ஆனால் எல்லாம் சமைக்கலை. கணிசமா எடுத்து வைச்சிருக்கேன்.

      Delete
  6. இன்று பிரட்டை சிறு துண்டுகளாக்கி இலேசாக வறுத்து அதில் இஞ்சி வெங்காயம் நறுக்கிப் போட்டுக் கொடுத்தார் பாஸ். நன்றாயிருந்தது. நாக்கு நாலு முழம்!

    ReplyDelete
    Replies
    1. இது நாங்க அடிக்கடி பண்ணுவோம் ஸ்ரீராம். இப்போ இங்கே ப்ரெட் கிடைப்பதில்லை, என்பதோடு மாலைக்கு மட்டும்னு வைச்சுக்கொண்டால் ப்ரெட் சீக்கிரம் தீராது எங்களுக்கு. ஆகவே வாங்கவே இல்லை.

      Delete
    2. ஸ்ரீராம்.... நானும் இங்க ப்ரெட் வாங்கணும்னு நினைக்கறேன். கிடைப்பதே இல்லை. பேக்கரியில் இனிப்பு ப்ரட்தான் கிடைக்கும், அதுவும் மேனுவலாகப் பண்ணுவதால் வாங்குவதில்லை. ப்ராண்ட் சாண்ட்விச் ப்ரெட் ஒரு நாளைக்கு 10, வெண்டிங் மிஷின்ல வைப்பான் போலிருக்கு (எங்க வளாகத்தில் இன்னொரு டவரில்) உடனே காலியாகிவிடுகிறது. நாளைக்காவது முயற்சிக்கணும்.

      Delete
    3. நான் பிரட் அடையாறு ஆனந்த் பவனில் வாங்கினேன். சால்ட் ப்ரெட்.

      Delete
    4. பேக்கரியிலும் சால்ட் ப்ரெட், சான்ட்விச் ப்ரெட் எனக் கிடைக்கும். ஆனால் நாங்க வாங்கினால் ப்ரவுன் ப்ரெட்டே வாங்குவதால் மாடர்ன் ப்ரெட் தான் வாங்குவோம். சில பேக்கரிகளில் முக்கியமாய் இங்கே அஸ்வின், ப்ரவுன் ப்ரெட் தயாரிப்பு இருக்கும். அப்போச் சின்னதாக் கிடைச்சா வாங்கிக்கலாம். வடமாநிலங்களில் பாதி ப்ரெட் பாக்கெட் வாங்கிக்கலாம். அங்கே விரைவில் செலவாகிவிடும் என்பதால் கொடுப்பாங்க. இங்கே கிடைக்காது.

      Delete
    5. இன்று நந்தினியில் (ஆவின் போல) ப்ரெட் பாக்கெட் ஒன்றும், பாவ் பாக்கெட் ஒன்றும் வாங்கினேன். இன்னும் மைசூர்பாக் செய்ய ஆரம்பிக்கலையாம். (இல்லைனா நான் செய்யணும். கொஞ்சம் சோம்பல்)

      இங்க அடையாறு ஆனந்தபவன் பக்கத்தில் இல்லை.

      20ம் தேதிக்குப் பிறகு எல்லாமே நார்மலாகிவிடும் என்று தோன்றுகிறது. நாம் மே 15-25 வரை ஜாக்கிரதையாக இருந்தால் போதும்னு நினைக்கிறேன்.

      Delete
    6. நந்தினியின் பால்கோவா, பேடா இரண்டும் மாமா அடிக்கடி வாங்கி வருவார். அநேகமாக மாதம் ஒருமுறை "பெண்"களூரில் சர்.சி.வி.ராமன் நகரில் இருக்கும் டிஆர்டிஓ அலுவலகத்திற்கு வருவார். அப்போல்லாம் வாங்கி வருவார். ரொம்ப போரடிச்சா நானும் கிளம்பி அவருடன் போயிடுவேன்.

      Delete
    7. நந்தினி 'குந்தா' - அதாவது பால்கோவாவின் இன்னொரு வடிவம். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். நான் ஏகப்பட்டது சாப்பிட்டிருக்கேன். இப்போதான் ஒரு வருடமாக சாப்பிடுவதில்லை. அவங்க மைசூர்பாக்கும் ரொம்ப நல்லா இருக்கும். நான் இரயில் பயணத்தின்போது (1 1/2 நாள் பயணமாக இருக்கும், அலஹாபாத் போய்ச்சேர) ஆவின் மைசூர்பாக் எடுத்துச் செல்வேன்.

      நீங்களும் 'பெண்'களூர் 'பெண்'களூர்னு எழுதறீங்க. நானும் ங் போட வரலையாக்கும் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்.

      Delete
    8. நாங்க சென்னைல இருந்தப்ப வீட்டின் பின்புறம் தான் மாடெர்ன் ப்ரெட் இண்டஸ்ட்ரியே. மதியம் ஆனால் மணம் வரும் பாருங்க...ஆஹா

      அங்கு சேல்ஸ் கவுண்டர் உண்டு. அங்கு ஃப்ரெஷ்ஷா சால்ட் ப்ரெட் நா கோதுமை அல்லது மல்டி க்ரெயின் ப்ரெட் தான் கிடைக்கும். நார்மல் ப்ரெட் சால்டட் நல்ல பெரிய சதுரமா கொஞ்சம் சின்ன பாக்கெட்டா கிடைக்கும்... ஆனால் எப்போதும் கிடைக்காது.

      ஸ்ரீராம் நீங்க சொல்லிருப்பது போல ப்ரெட் செய்வதுண்டு.

      நெல்லை இங்கு ஸ்வீட் ப்ரெட் தான் கிடைக்குது. ஆனால் ஒரு சில பெரிய் பேக்கரிகளில் சால்ட் ப்ரெட் கிடைக்கிறது.

      நாங்க கோதுமை ப்ரெட் அல்லது மல்டி க்ரெயின் தான் வாங்குறோம். சான்ட்விச் ப்ரெட் இங்கு கண்ணில் படவே இல்லை.

      சென்னையில் ஹாட் ப்ரெட்ஸில் கிடைக்கும் நல்லா கிடைக்கும். ஆனந்தபவனிலும்

      கீதா

      Delete
    9. கீதா ரங்கன் - நான் அந்த ஊர்ல இருக்கும்போது, சரியான நேரத்தில்தான் பேக்கரிக்குப் போவேன். அப்போதுதான் சூடான பன் போன்றவை கிடைக்கும். அதன் மணம்.... ரொம்ப நல்லா இருக்கும். நான் வேலை பார்த்த கம்பெனியில், சூப்பர்மார்க்கெட்டில் பேக்கரி செக்‌ஷனுக்கு உள்ளே செல்ல எனக்கு அனுமதி உண்டு. சுடச் சுட ப்ரெட் தயார் செய்யும்போது, கட் பண்ணாமலேயே (மெஷினில் ஸ்லைஸ் பண்ணுவாங்க) அதை வாங்கிவருவேன். விலை ரொம்ப ரொம்பக் குறைவு என்பதால், மேலே உள்ள கடினமான பகுதியை விட்டுவிட்டு உள்ளே உள்ள மென்மையான பகுதியைச் சாப்பிடுவேன். அந்த கம்பெனில ஃப்ரெஞ்ச், யூ.கே மெதட். அதனால் இன்க்ரெடியண்ட்ஸ் ரொம்ப ரொம்ப ஹை குவாலிட்டி.

      இங்கல்லாம் 1 பன் 6 ரூபாய்னு நினைக்கிறேன். அங்க 6 பன் 16 ரூபாய் (அதாவது ஒரே விலை கிட்டத்தட்ட 20 வருடங்களாக. 12 ரூ-18 ரூ எக்ஸ்சேஞ் ரேட் பொறுத்து)

      Delete
    10. நெல்லைத் தமிழரே, இந்த "பெண்"களூரை ஆரம்பிச்சு வைச்சது என் அருமை இளைய சிநேகிதர் அம்பி. பதிவுகள் எழுத ஆரம்பிச்ச புதுசிலே வலுவில் வந்து பழக்கம் ஆனவர். நாங்க இருவரும் போட்டுக்கிற சண்டை இணைய உலகில் ரொம்பவே பிரபலம். அம்பியோட வயசும் என் பிள்ளையோட வயசும் ஒண்ணுதான். மாதங்களே வித்தியாசம்.என்றாலும் எனக்குச் சரியாக அவரும் அவருக்குச் சரியாக நானும் போட்டி போடுவோம். அவருக்கு அப்போக் கல்யாணம் ஆகாத காரணத்தால் (வேலை பெண்களூரில்) அலுவலகத்தில் மற்றும் வெளியில் எனப் பெண்களை சைட் அடித்து வேடிக்கையாக எழுதுவார். அநேகமாகப் பொறியியல் பட்டதாரிப் பெண்கள் பெண்களூரிலேயே வேலைக்குச் சேர்ந்ததால் அவர் தான் விளையாட்டாக "பெண்"களூருனு எழுத ஆரம்பிச்சுப் பின்னர் அதை நான் பிரபலம் ஆக்கி இப்போ எல்லோருமே அநேகமாக அப்படிக் குறிப்பிட ஆரம்பிச்சாச்சு. பையர் கதையும் அப்படித் தான். தி.வா.விடம் அவர், பையரை ரொம்ப மரியாதையா நான் கேட்க அவர் என்னைக் கேலி செய்யப் பின்னர் இருவருமே பையர் எனக் குறிப்பிட ஆரம்பிச்சு இன்னிக்கு யுனிவர்சல் ஆகிவிட்டது. அம்பி, தி.வா. மௌலி, திராச ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டு என்னைக் கலாட்டா செய்வதும் அதுக்கு நான், சண்டைக்கோழி அம்மா என்னும் ஷாலினி ஆகியோர் பதில் சொல்வதும் இணைய உலகில் பிரசித்தி பெற்றவை. அதெல்லாம் ஒரு காலம். மற்ற சிநேகிதர்கள் என்னைத் "தலைவி" எனக் கொண்டாடியதையும் என் பிறந்த நாளை அமர்க்களமாக முப்பெரும் விழா எனக் கொண்டாடச் சொன்னதும் ஓர் கனவு காலம்.

      Delete
    11. For us friends in those days Ambi is incomparable.

      Delete
    12. எழுபதுகளின் இறுதியில் ஒரு முறை சாவி பத்திரிகை பெங்களூர் சிறப்பிதழ் வெளியிட்டது. அதில் ஒருவர் பெண்களூர் என்று கவிதை எழுதியிருந்தார். அதி வைத்துதான் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன்.   

      Delete
    13. அது எனக்குத் தெரியாது பானுமதி. அதோடு நான் சாவி, குங்குமம், இதயம் பேசுகிறது போன்ற பத்திரிகைகளை எல்லாம் படித்ததே இல்லை. எப்போவானும் அண்ணா வீட்டில் தங்கும்போது பொழுது போக்குக்குப் பார்த்திருக்கேன், ஒரு சில படிச்சிருக்கேன். இது வலை உலகில் 2006 ஆம் வருடம் ஆரம்பிச்சது. இதில் உள்ளவர்கள் இப்போதும் தொடர்பில் இருந்தாலும் பழைய மாதிரி கலகலப்பு எல்லாம் இல்லை. குறைந்து விட்டது.

      Delete
  7. சரி. ஒரு நாள் சேஞ்ஜ்க்கு பண்ணி பாத்துடலாம்

    ReplyDelete
    Replies
    1. செய்ங்க எல்கே. அதுக்கு ஒரு நாள் வெறும் அரிசி அடைக்கு அரைக்கணும். இன்னொரு நாள் அடைக்கு அரைக்கணும். மாவும் மிஞ்சணும். இஃகி,இஃகி,இஃகி. இது திடீர்த் திப்பிசம் ஆச்சே!

      Delete
  8. வடை அம்மா வடை
    கீதாம்மா செஞ்ச வடை
    அரிசி மாவு அடை மாவு
    பருப்பு வகைகள் கலந்து
    சுட்ட வடை..
    வூட்டு காரருக்கு நாலு
    கீதா அம்மாவுக்கு 3
    வந்து இந்த பதிவை
    பார்த்து ஏங்கியவர்களும் 0
    (தை படிக்கும் போது தோசைஅம்மா தோசை என்ற பாட்டை படிப்பது போல படிக்கவும் )
    சைவ சாப்ப்படு சாப்பிடுபவர்களுக்கு எந்த முறையிலாவது பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்து கொண்டால்தான் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, உண்மைத்தமிழரே, பாடலுக்கு நன்னியோ நன்னி! ஒரு நாள் நீங்களும் முயற்சி செய்து பாருங்க. (அன்னிக்கானும் பூரிக்கட்டைக்கு வேலை இருக்காது பாருங்க! அதான்!) :)))))))))

      Delete
  9. ஹை :) திப்பிசம் எப்பவும் தனி ருசிதான் ..ஆனா எனக்கு க .பருப்பு சேர்த்து செய்ற எதிலும் இஷ்டமில்லை அடை செய்யும்போது து /ப /உ அரிசி மட்டும் சேர்ப்பேன் .திப்பிசம் செயறதை ரசிச்சி செஞ்சிருக்கீங்க :) ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் எடுத்ததை சொல்றேன் 

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், கடலைப்பருப்பு எனக்கும் பிடிக்காது. உப்புமாவில் எல்லாம் தாளிக்கவும் மாட்டேன். நல்லவேளையா இங்கே நம்ம ரங்க்ஸுக்கும் பிடிக்கிறதில்லை. இதுக்குச் சும்மா ஒரு டீஸ்பூன் போட்டேன். ஹிஹி, திப்பிசம்னாலே தானாக ஒரு ஆர்வம் வந்துடுதோ? :))))))

      Delete
  10. புதுசா இருக்கே...! எண்ணெய் இவ்வளவு இருக்கான்னு தெரியல, இருந்தாலும் செய்துவிட வேண்டியது தான்... நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க திரு தனபாலன், எண்ணெய் பார்க்க நிறைய விட்டிருக்காப்போல் தெரியுதுனு நினைக்கிறேன். நான் அதிகம் எண்ணெய் காய வைப்பதில்லை. ஏனெனில் சுட்ட எண்ணெய் பயன்பாட்டில் இல்லை என்பதால். இதில் மிச்சம் இருக்கும் எண்ணெயை இன்று செலவு செய்துடுவேன்.

      Delete
  11. மிக அழகாக இருக்கு பார்ககவே கீதாமா. திப்பிச வேலையே இத்தனை ஜோர். அருமையான படங்கள். நிறைய வேலை வாங்கி இருக்கு போலிருக்கிறது. உங்கள் உழைப்பு உயர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, வேலை எல்லாம் ஒண்ணும் அதிகம் இல்லை. பருப்புக்களை ஊற வைத்துச் சேர்த்தது தான். மற்றபடி அரை மணி நேர வேலை. பாராட்டுகளுக்கு நன்றி.

      Delete
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. திப்பிச வேலைகள் நன்றாக இருந்தது. ஒன்றிலிருந்து ஒன்றாக புது வடிவங்கள் பெற்ற திப்பிசம் வாழ்க. படங்கள் பார்க்கவே அழகாக உள்ளன. அதனுடனான பருப்புக்கள் சேர்க்கும் குறிப்புக்கள் நன்றாகவும், உபயோகமாகவும் இருக்கிறது. கூடவே தயாரித்த எதையும் வீணாக்காமல், மேலும் பொருட்களை கொண்டு அதை விதவிதமாக்கும் உங்களது பொறுமையும் கண்டு பெருமைப்படுகிறேன். உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    நானும் இங்கு அந்த வாழைத்தண்டு குணுக்கை, மறுநாள் அடையாக்கி, இரண்டு நாள் கழித்து மேலும் பருப்புக்கள் சேர்த்து அவியல் குழம்புக்கு தொட்டுக் கொள்ள மீண்டும் குணுக்காக்கி, மீதி இருந்த குணுக்குகளை நேற்று மோர் குழம்பில் கடைசியில் சேர்த்து காலியாக்கினேன். அந்த மோர் குழம்பு இன்றும் உள்ளது. (விடவே மாட்டியா? என வீட்டிலுள்ளவர்கள் கடுப்பாகப் போகிறார்கள்.) என்ன செய்வது.? நன்றாக இருப்பதை வீணாக்க மனம் வரவில்லை. உங்கள் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என் பதிவுக்கு வந்து அழகான கருத்துக்கள் தந்த உங்களுக்கும் சகோதரி கோமதி அரசு அவர்களுக்கும் மிக்க நன்றி. எனக்குத்தான் அதற்கு விரிவாக பதில் உடனே தர நேற்று இயலவில்லை. இன்று தந்து விட முயற்சிக்கிறேன். தாமததிற்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிஞ்சின மோர்க்குழம்பில் வடையை ஊறவைத்து, வடை மோர்க்குழம்பு என்று மறுநாளுக்கு மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள செய்துவிடுவீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது கமலா ஹரிஹரன் மேடம். (By the by நீங்க கல்லிடைக்குறிச்சி பக்கமா? ஹரிஹரன் என்ற பெயர் பாலக்காடு அல்லது கல்லிடைக்குறிச்சி பக்கம்தான் இருக்கும்னு நினைக்கிறேன்)

      Delete
    2. மோர்க்குழம்பு எல்லாம் ரொம்பக் கொஞ்சமாக வைப்பேன். மிஞ்சாது. மிஞ்சினால் வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டுக் கொடுத்துடுவேன். பொதுவாக மிஞ்சியதை மறுநாள் சுடவைச்சோ குளிர்சாதனப் பெட்டியில் வைச்சோ சாப்பிடும் வழக்கம் இல்லை. எப்போவானும் வற்றல் போட்ட குழம்பு மிஞ்சினால் மறுநாள் கஞ்சியில் விட்டுக்கலாம் என வைப்பேன். அதுவும் அபூர்வமாக!

      Delete
    3. ஹரிஹரன் என்ற பெயர் எங்க பக்கமும் உண்டு நெல்லைத்தமிழரே!

      Delete
    4. நெல்லை, சொல்ல மறந்துட்டேனே, நான் மிச்சம் இருந்த 2 வடையை இன்னிக்கு ரசத்தில் போட்டேன். ரசத்தை அதுக்காகவே ரசவடைக்கு வைக்கும் ரசம்போல் (பூண்டெல்லாம் போடவில்லை) வைச்சேன்.

      Delete
    5. கீசா மேடம்... நீங்க சொல்றதைப் பார்த்தால், நீங்க பண்ணுவதை மாமா, ஒன்றும் சொல்லாமல்ல் பேசாமல் சாப்பிட்டுவிடவேண்டும். வேண்டாம்னு கொஞ்சமா சாப்பிட்டால், எப்படியும் அது வேறு ரூபத்தில் அவருக்கு வந்து சேரும்னு சொல்றீங்க. இதை மாமா இத்தனை வருடத்தில் புரிஞ்சுக்காமயா இருந்திருப்பார்?

      Delete
    6. நெல்லை ஹரிஹரன் எங்கூர் பக்கமும் உண்டு. கேரளத்துலயும் தான்.

      கீதாக்கா ஆஹா நான் கீழ சொல்ல வந்தேன் இங்க பார்த்ததும் ...வடையை ரசத்தில் போட்டு ஸ்பாஆ ரொம்பப் பிடிக்கும்

      கீதா

      Delete
    7. ஒரு நாளைக்குச் சாப்பாடு நேரத்தில் எங்க வீட்டுக்கு வந்து மாமாவோடு சாப்பிட்டீர்களானால் நான் எத்தனை பொறுமைசாலி எனப் புரியும் உங்களுக்கு நெல்லை. இப்போக் கொஞ்ச நாட்கள் முன்னால் வந்திருந்த என் மைத்துனரும், ஓர்ப்படியும் கூடக் கேட்டாங்க! அண்ணா மாறவே இல்லையானு! இஃகி,இஃகி, அதோடு மாமாவுக்கு ரசவடை, சாம்பார் வடை எல்லாம் பிடிக்காது. நான் தான் சாப்பிடுவேன். மாமனார் இருக்கையில் எப்போவானும் அவர் போட்டுப்பார். பலரும் உளுந்து வடையைச் செய்து ரசத்தில் போடுகிறார்கள். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பருப்பு வடையைத் தான் ரசத்தில் போடணும். ரசமும் கார,சாரமாகப் பத்திய ரசமா வைக்கணும். மேலே உள்ள அந்த மொறுமொறுப்புப் பாகம் ரசத்தில் ஊறி (வடையை ரசம் சூடாகக் கொதிக்கையிலேயே போட்டுடணும்) எடுக்கையில் உள் கூடோடு வரும், அதைச் சாப்பிட்டால் சொர்க்கம் கிட்டத்தில்.

      Delete
  13. படங்கள் அழகாக வந்து இருக்கிறதே...
    கடையில் கிடைக்காத நேரம் இப்படி காண்பிக்கலாமோ...?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, ஹிஹிஹி, என்னையும் அறியாமல் நல்லா எடுத்துட்டேன் போலிருக்கே! :))))) கடையில் கிடைக்காது என்பதால் தானே வீட்டில் செய்யறதைப் போட்டிருக்கேன்! :)

      Delete
  14. நல்லதொரு சிற்றுண்டி...
    செய்வது சுலபமாகத் தான் தெரிகிறது...

    இத்துடன் இஞ்சி டீ ஒரு குவளை... ஆகா!..

    ReplyDelete
    Replies
    1. இதோடு நேற்று நாங்களும் தேநீர்தான் குடிச்சோம். சுவையோ சுவைதான்.

      Delete
  15. ஹாஹா... எத்தனை எத்தனை கலவைகள் - திப்பிசமோ திப்பிசம்!

    பார்க்க நன்றாக இருக்கிறது. இங்கே சமையல் முயற்சிகள் செய்ய முடிவதில்லை - வீடு, அலுவலகம், சமையல், பதிவுகள் என நெரம் சரியாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், எனக்குத் தான் உங்க பதிவுகளுக்கு இன்னமும் வரமுடியறதில்லை. ஒரு நாள் நேரம் ஒதுக்கிக் கொண்டு வரணும். பாராட்டுக்கு நன்றி. அதென்னமோ திப்பிசம் நன்றாகவே வருது என்பது உண்மைதான். உங்கள் வேலைப்பளு குறையப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  16. அக்கா நீங்க சொல்லி வரும் போதே ஆஹா கீதாக்கா குனுக்கு அல்லது பருப்பு போண்டோ / வடை போல போடப்போறாங்கனு நினைச்சுட்டு வந்தா வடை!!.. அக்கா செமையா இருக்கு. அக்கா படம் எல்லாம் ஜூப்பரா வந்திருக்கே.

    திப்பிசம் செய்யறதுனாலே ஜாலிதான் இல்லையாக்கா. பாருந்த அது எப்படி எல்லாம் நம்ம கற்பனைய வளர்க்குது!!!!! இப்படி நிறைய ரெசிப்பிஸும் கிடைச்சுரும்..

    சரி சரி நான் லேட்டானாலும் இதுவும் மீந்திருக்குமே எப்படியும் பரவால்ல ஃப்ரிட்ஜ்லதானே இருக்கும் அப்படியே இங்கூட்டு அனுப்புங்க!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ தெரியலை, இஞ்சி, பச்சை மிளகாய்ப் படம் இன்னிக்குத் தெரியவே இல்லையே தி/கீதா, நீங்க ஏதோ ஒரு பதிவின் கருத்தில் சொல்லி இருந்தீங்க, இங்கே தெரியலைனு , உடனே வந்து பார்த்தால் தெரியலை. பின்னர் தான் பார்த்துச் சரி செய்யணும். நான் எந்த உணவையும் மிஞ்சினால் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதே இல்லை. முளைக்கட்டிய பருப்பு வகைகள் தவிர்த்து. மிஞ்சினால் கீழே பாதுகாவலருக்கோ அல்லது வேலை செய்யும் பெண்ணுக்கோ கொடுத்துவிடுவேன். சூடாகக் கொடுத்துவிட்டால் அவங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். அதோடு நேத்துப் பண்ணினதே 4+4=8 தான். 3 தான் சாப்பிட முடிந்தது. மிச்சம் இரண்டை ரசத்தில் போட்டு மதியம் சாப்பிடும்போது ஒன்றும் தேநீர் வேளையில் ஒன்றுமாக எடுத்துக் கொண்டேன்.

      Delete
  17. உங்களுக்கு ஏதோ கொஞ்சமாவது லக் இருந்திருக்கிறது கீசாக்கா, இல்லை எனில் இன்னும் ஒரு கிழமை தாமதித்திருந்தால், இந்தியா வருவது தாமதமாகியிருக்கும்... அங்கு லொக்டவுனில... கடகடவென இன்னும் பல ஹிந்திப் படங்கள் பார்த்து ரிவியூ எழுதி, எங்கட லொக்டவுனில எங்களை மயங்கப் பண்ணியிருப்பீங்க:)) மொத்தத்தில நாம் கொடுத்து வச்ச ஆட்கள்:)) ஹா அஹ ஹா...

    ReplyDelete
    Replies
    1. பிஞ்சு, நீங்க சொல்வது சரி. எங்க விசா மார்ச் எட்டாம் தேதி தான் முடிவடைந்தது. பையர் பொண்ணு இருவரும் எதுக்கு முன்னாடியே போறீங்கனு கேட்டாங்க. நாங்க பிடிவாதமாகக் கிளம்பினோம். அது எத்தனை நல்லதுனு இப்போப் புரியுது. இது மட்டும் இல்லை, இம்மாதிரி ஒவ்வொரு இக்கட்டில் இருந்தும் கடவுள்/எங்கள் குலதெய்வம் எங்களைக் காப்பாற்றியே வருகிறாள்.

      Delete
    2. சினிமாவெல்லாம் பார்க்க இம்மாதிரி சமயங்களில் மனம் பதியுமானு சந்தேகம். இங்கேயே பார்க்கலாமே, பார்க்கப் பிடிக்கலை அதிரடி, அதனால் நீங்க எப்படி இருந்தாலும் தப்பிச்சிருப்பீங்க.

      வரேன் கொஞ்ச நேரம் பொறுத்து. இப்போக் கடமை அழைத்துவிட்டது. போகணும், சில,பல வேலைகள்.

      Delete
  18. இதேபோலதான் கீசாக்கா என் கூத்தும், ஏதும் மிஞ்சினால், அதனை கொட்டினால் பிரச்சனை வராது, ஆனா கொட்ட மனமில்லாமல், அதற்குள் இன்னும் இப்படி ஏதும் சேர்த்து, அதை பெருப்பிச்சு, சமைச்சு, பின்னர் ஃபிரிஜ்ஜில வச்சு, அதன் பின்பு கொட்டுவேன் ஹா அஹ ஹா... இப்பவும் அப்படியே, கோதுமை தோசை செய்து, மிகுதிக்குள் ரவ்வை போட்டு கலந்து வச்சிருக்கிறேன்.. பார்ப்போம்....

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி தோசை மாவு மிஞ்சினால் அதைக்குழி அப்பமாகச் செய்து தீர்க்கலாமே! எதுக்கு ரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வையைப் போட்டுக் கலந்து வைக்கறீங்க? இன்னிக்கு எங்க வீட்டிலும் ராத்திரிக்கு ரவாதோசை தான் செய்யணும். சில மாதங்கள் ஆச்சு செய்து!

      Delete
    2. நேத்திக்குப் பண்ணின வெங்காய ரவா தோசை அருமை! படம் எடுத்துப் போட நினைச்சேன். பின்னர் ஏதோ அலுப்பு, வேண்டாம்னு விட்டுட்டேன்.

      Delete
  19. பருப்பு சேர்த்தால், அதுவும் பொரிச்சு எடுத்தால் எந்த உணவும் சுவையாகி விடும்... உங்கள் வீட்டில் முடிஞ்சு போச்சோ பொரிச்சதெல்லாம்?.

    வெளிப்பகுதி டக்கெனக் கறுத்து விட்டது... நான் நினைக்கிறேன், எண்ணெயில் பொரிப்பதாயின் எதுக்கு தேங்காய் சேர்த்தீங்க, இல்லை எனில் அடைபோல செய்திருக்கலாம்.. சரி சரி மொத்தத்த்ல் நன்றாக வந்துவிட்டது.. வாழ்த்துக்கள், நானும் இப்படியே, சைவம் அசைவம் என டெய்லி.. வித்தியாசமான சமையல் நடக்குது வீட்டில்:))

    ReplyDelete
    Replies
    1. இரண்டு மாவுமே கொஞ்சம் தானே. அதனால் முடிந்து விட்டது. கறுப்பெல்லாம் ஆகலை. படத்தில் அப்படித் தெரியுது. நானும் அதான் யோசிச்சேன். ஏற்கெனவே முதல்நாள் தானே அடை! திரும்பவும் அது வேண்டாம்னு! :)))))

      Delete
  20. திப்பிசம் என்றாலும் மாலை நேரம் சுவைக்க அருமையாக செய்து விட்டீர்கள்.
    படங்கள் நன்றாக இருக்கிறது. வடையும் நல்ல கர கர என்று பார்க்க அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, வடை பார்க்க நன்றாகவே இருந்தது.

      Delete
    2. பார்க்கவும், சாப்பிடவும்னு வந்திருக்கணும். :)

      Delete
  21. கற்பனைக்குறிப்பு பிரமாதம். பார்க்கவும் அழகு!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ சாமிநாதன், உங்கள் தனிமை வாழ்க்கை முடிந்து விட்டிருக்கும் என நினைக்கிறேன். நல்லபடியாக உடல்நிலை இருக்கப் பிரார்த்தனைகள்.

      Delete
  22. திப்பிசமும் பலதடவைகளில் சுவைக்கிறதே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, ஆமாம். சுவைதான்.

      Delete
  23. ஹையா நான்தான் லாஸ்ட்டு(வழக்கம்போல). ஏதோ உப்புமா சமாச்சாரமாக இருக்கப் போகிறது என்று அசிரத்தையாக இருந்து விட்டேன். சுவையாக இருக்கிறது. இங்கே வந்தால் கடை காலியாகி விட்டது. நெ.த. கை ராசியான கை போலிருக்கிறது. இனிமேல் என் பதிவுகளை முதலில் அவருக்கு அனுப்பி விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் ரவாஉப்புமாவுக்கு நானும் அரிசி உப்புமாவுக்கு அவரும் எதிரிகள். என்னிக்கோ தான் பண்ணுவேன். அதுக்கே இரண்டு பேரும் முகத்தைச் சுளித்துக் கொண்டு தான் சாப்பிட்டே தீரணுமேனு சாப்பிடுவோம். உப்புமா சமாசாரம் எல்லாம் திப்பிசத்தில் சேர்த்தி ஆகாது என் வரை! :)))))

      Delete