எங்க குடியிருப்பு வளாகத்தில் நேற்று ஏற்றுவதற்கு அகல் விளக்குகள் மண்ணால் ஆனது வாங்கிக் கொடுத்திருக்காங்க என்பதைச் சொன்னேன். நேற்றிரவு சரியாக ஒன்பது மணிக்கு எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் விளக்குகள் ஏற்றினோம். இவர்களில் பொறியியல் படித்தவர்களும், மருத்துவர்களும், தொழிலதிபர்களும் உண்டு. எல்லோருமே இது தேசநலனுக்காகவும் தேச ஒற்றுமையை வெளிக்காட்டவும் செய்யப்படுகின்ற ஓர் ஏற்பாடு என்பதைப் புரிந்து கொண்டதோடு வீட்டிலேயே அடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஓர் புத்துணர்ச்சி ஊட்டவும் செய்திருந்த ஏற்பாடு என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்கள். இதிலே கோள்களும் ஒரு காரணம் என்பதைச் சில ஆன்றோர்கள் சொல்லி இருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் இந்நிலை மாறிநல்லபடியாக அனைவரும் முன்போல் சகஜமாக நடமாடும்படியான நிலையை அந்த மஹாலக்ஷ்மி அருளட்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
இந்தப் படத்தி ஆங்கில எழுத்து டி மாதிரித் தெரிவது தெற்கு கோபுரத்தில் போடப்பட்டிருக்கும் விளக்குகள். ஜூம் செய்திருக்கணும். நினைவில்லை. படம் அகஸ்மாத்தாக வந்திருக்கிறது. அதைப் பார்த்ததும் தான் நினைத்தேன், நிதானமாக ஜூம் செய்து எடுத்திருக்கலாமோ என.
இனி கொரோனா பற்றிய வேறொரு செய்தியைப் பார்ப்போம். இதே செய்தியை ஒரு எட்டு வயதுக்குட்பட்ட சிறுவனும், (ஜோதிடத்தில் தேர்ந்தவராம்) சொல்லி இருக்கிறார். இது இங்கே ஸ்ரீரங்கத்தில் ஓர் பெரியவர் சொன்னதாகச் சொல்கின்றனர். பாற்கடலில் அமுதம் கடைந்த போது வாசுகி விஷம் கக்கிய பொழுதும் அதை ஈசன் விழுங்கியதன்போதும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் என்கின்றனர். அப்போது உலகம் முழுவதும் விஷம் பரவாமல் ஈசன் தடுத்தார். இப்போது அதே திருவாதிரையில் தான் ராகு தற்போது இருப்பதாகவும் அதனால் தான் அதன் கொடிய விஷம் உலகம் முழுவதும் பரவுவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் ஆரம்பமாகச் சொல்லுவது 11-9-2019 ஆம் நாள் ராகு திருவாதிரையில் நுழைகிறான். அன்றைய தினம் ராகுவிற்கு ஆறிலும் எட்டிலும் கிரஹங்கள் இருப்பதால் கொடிய நேரமாகப் போய்விடுகிறது. ராகுவுக்கு ஆறில் அன்று தேவகுரு விருச்சிகத்திலும் எட்டில் ராகுவைக் காட்டிக் கொடுத்த சந்திரன் மகரத்திலும் இருந்திருக்கின்றனர்.ஆறும், எட்டும் மறைவு ஸ்தானமாக இருந்தபோதிலும் எதிரிகளைப் பார்த்தவுடன் ராகுவின் அசுர குணம் ஆர்ப்பரித்து நிற்கிறது. ஆறிலும், எட்டிலும் ராகுவின் எதிரிகள் குருவும் சந்திரனும். ஏற்கெனவே ராகு முன்னர் வாசுகி விஷம் கக்கிய அதே திருவாதிரை நக்ஷத்திரத்தில் இருப்பதால் அதிக பலத்துடன் விளங்குகிறான். குருவும், சந்திரனும் முறையே ஆறிலும், எட்டிலும் இருப்பதைக் கண்டதும் அவன் பலம் அதிகம் ஆகிறது. இங்கே குரு நம் ஜீவசக்தியைப் பராமரிக்கும் கிரஹம் ஆவார். சந்திரனோ எனில் நம் தேகம், புத்தியைப் பராமரிப்பான். இவர்களைத் தான் நாம் மறைமுகமாக தேவர்கள் என்கிறோம். இத்தகைய தேவர்கள் ஆகிய நம் ஜீவசக்தியை அழிக்க ஆயத்தம் ஆகிறான்ராகு. நேரத்திற்குக் காத்திருக்கிறான்.
அதே சமயம் 25-12-2019 ஆம் நாள் அமாவாசை அன்று செவ்வாய் (ரோக காரகன்) ராகுவிற்கு ஆறில் விருச்சிகத்தில் அடி எடுத்துவைக்கிறார்/ எட்டில் நீர் கிரஹமான சுக்கிரன் மகரத்தில் இருக்க ராகுவோ காற்று ராசியான மிதுனத்தில் இருக்கிறான். நவகிரஹங்களின் தலைவன் ஆன சூரியனோ அன்றைய தினம் கேதுவின் பிடியில் முழு கிரஹணத்தில் இருக்கிறான். (இது இந்தியாவுக்கு மட்டும்) இப்போது சூரியன் மட்டுமில்லாமல் மற்ற கிரஹங்களான குரு, சனி, சந்திரன், புதன் அனைத்தும் தனுர் ராசியில் கேதுவின் பிடியிலே/ அன்றைய தினம் மூல நக்ஷத்திரம், தனுர் ராசியில் ஆறு கிரஹங்கள்.
அனைத்தும் ராஜ கிரஹங்கள். கேதுவின் பிடியில். இப்போது ராகு தன் வேலையை ஆரம்பிக்கிறான். அவனை எதிர்க்க யாரும் இல்லை. சுற்றிச் சுற்றி அடிக்கிறான். அவன் ஆயுதம் காற்றும், நீரும். தாக்கும் இடம் தொண்டை.(புதன்) ராகு அமர்ந்திருக்கும் இடம் மிதுனம் என்னும் புதனின் வீடு. அடுத்து அவன் தாக்குவது நுரையீரல், சனியின் இடம். அடுத்து ரத்தத்தின் எதிர்ப்பு அணுக்கள், செவ்வாய். அடுத்து சிறு நீரகம்,சந்திரனுக்கு உரியது. தொடர்ந்து ஜீவசக்தி இருக்கும் இடம் ஆகிய மூளை,குருவின் இடம். இது ராகு நம் மீது தொடுத்திருக்கும் போர். இதற்கு நாம் இன்றைய நிலவரப்படி அறுபதாயிரத்துக்கும் மேல் இழந்து விட்டோம். நம்மால் ராகுவை எதிர்த்துப் போரிட இயலாது. நம் மூளையின் ஜீவசக்தியைக் கொஞ்சமாவது பிரயோகித்துத் தடுக்க முயன்று கொண்டிருக்கிறோம். விளைவுகள் அதிகம் ஆகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் இப்போது அனைவருக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒதுங்கி இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறோம்.இதை நாம் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
ராகுவிற்கு நல்லவர், கெட்டவர் தெரியாது. சென்ற மாதம் 30ஆம் தேதி வரை ராகுவின் உக்கிரம் அதிகரித்திருக்கிறது. மெல்ல மெல்ல வரும் இந்த அரவத்தின் விளைவுகளைத் தவிர்க்க நாம் தனித்திருப்பதே சிறப்பு. இன்னும் 55 நாட்களுக்கு இந்நிலை நீடிக்கும். குரு வக்கிரத்தில் செல்லும்போது 16-5-20 ஆம் தேதி அன்று வைகாசி மாதம் 3 ஆம் தேதி குரு வக்கிரம் ஆரம்பம். நவகிரஹங்களின் தலைவன் ஆன சூரியன் குருவால் வலிமையோடு பார்க்கப்படுவார். ஒளி கிரஹமான சூரியன் வலுப்பட்டால் குருவின் அருளால் இருள் கிரஹம் ஆன ராகு கட்டுப்பட ஆரம்பிப்பான். தொடர்ந்து 20-5-20 அன்று ராகு திருவாதிரை நக்ஷத்திரத்தை விட்டு விட்டு மிருகசீர்ஷத்திற்கு மாறும்பஓது ராகுவின் வீரியம் குறையத் துவங்கும். பொதுவாக இந்திய வானிலைகளின் படியும் இங்குள்ள கிரஹ நிலைகளின் படியும் இந்தியாவுக்கு அதிக பாதிப்புக் கிடையாது என்றாலும் நாம் கவனமாகவே இருக்க வேண்டும்.
அசுரனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் தான் அசுர உணவான அசைவத்தை முற்றிலும் தவிர்க்கச் சொல்கின்றனர். எளியவர்களுக்கு நம்மால் ஆன உதவிகள் செய்து அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி ஒருவருக்கும் தொந்திரவு இல்லாது தனித்திருந்து வாழ்க்கையை இன்னும் சில நாட்களுக்கு வாழ்வோம். இயற்கைக்கு முன்னால் நாமெல்லாம் ஒன்றுமே இல்லாதவர்கள். ஆயுள்காரகனான சனியை பலப்படுத்த தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்வோம். முடியலைனால் சுவாசத்தைக் கவனித்து வந்தாலே போதும். சந்திரன் பலம் பெறவேண்டி திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட திருநீலகண்டப் பதிகத்தைப் படிப்போம். சூரியன் பலம் பெற அருணாசல அக்ஷரமணமாலை படிக்கலாம்.
ஆறாம் இடமும், எட்டாம் இடமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டால் வலிமையான தோஷம் ஏற்படும். இதைத் தகர்க்க திருவாதிரை நக்ஷத்திர வேதையான திருவோணத்தில் அவதரித்த, திருவேங்கடவன் வலக்கரத்து சுதர்சனரைச் சரண் அடையுங்கள். இந்த வீரியம் மிகுந்த விஷத்தை முறியடிக்க சுதர்சன அஷ்டகத்தைப் படிப்போம்.பலம்பெறுவோம். சுதர்சனருக்கே இப்போது இவற்றை எல்லாம் தீர்க்கும் வல்லமை உள்ளது. சக்கரத்தாழ்வானைச் சரண் அடைந்து இல்லல் தீர்ப்போம். நாட்டையும் வீட்டையும் காப்பாற்ற வல்லது சக்கரமே!
சுதர்சன அஷ்டகம்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாதசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி
1.ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண
2. நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
3. ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந
ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
4. நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண
நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ
ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
5.ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
6.புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய
நிரவதிஸ்வாதுசிந்மய, நிகிலஸூக்தே ஜகந்மய
அமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
7.மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர
ஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித
விவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
8.ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத
ஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
9.தநுஜவிஸ்தார கர்த்தந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந
தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந
அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
10.த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்
விஷமேபி மநோரத ப்ரதாவந்
ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம
ஸுத்ரஸநாஷ்டகம் ஸ்தோத்ரத்தைச் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும்.
நன்றி: நீலாஜோதிடம் வலைப்பக்கம்.
15-ஆம் தேதி மாற்றம் வரலாம் என்று சொல்கிறார்கள்.
ReplyDeleteபார்க்கலாம் கில்லர்ஜி!
Deleteநலமே விளையட்டும்.
ReplyDeleteபிரார்த்திப்போம் வெங்கட்!
Deleteவிரைவில் நல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteநிறைய விஷயங்கள் சொல்லியிருக்கீங்க ..எல்லாரும் எல்லாமும் நலமா இருக்கணும் எல்லாரையும் இறைவன் காப்பாற்றணும்னு வேண்டுகிறேன் ..நீங்களும் கவனமா இருங்கக்கா ..எங்க ஊர் நிலை மோசமா இருக்கு ..
ReplyDeleteவாங்க ஏஞ்சல், உங்களைக் காணோம் என்றதும் கொஞ்சம் கவலையாக இருந்தது. நல்லபடியாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்க ஊர் நிலைமை மட்டுமென்ன எங்குமே மோசம் தான்! :(
Deleteநல்லா எழுதியிருக்கீங்க.
ReplyDeleteஆனாலும், 7 1/2 சனி, தனுர் ராசி.... மே இறுதிவரை கஷ்டம்தான். (பிறகு பழகிடுமோ?)
சுதர்சனாஷ்டகம் - எண் தவறா வந்திருக்கு. இனி தினமும் இதைச் சொல்கிறேன்.
வாங்க நெல்லை. உங்களுக்கு தனுர் ராசின்னா எனக்கு லக்னம். ராசிப்படியும் ஏழரை தான். ஏழரையால் இதற்கு முன்னர் பலவிதங்களில் கஷ்டம், அவமானம், வீட்டுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டு என்றெல்லாம் கஷ்டங்கள் அனுபவிச்சாச்சு! இது வேறே மாதிரி! உலகமே அலறுகிறது. அதற்கு முன்னால் இது ஒண்ணுமே இல்லை எனத் தோன்றுகிறது. அனைவரும் நலம் பெற்று நன்றாக வாழப் பிரார்த்திப்போம்.
Deleteசுதர்சன அஷ்டகம் வெட்டி ஒட்டியது தானே. தவறு இருக்கலாம். மீண்டும் போய் சரி பார்க்கிறேன்.
Deleteம்...
ReplyDeleteநல்லதே நடக்கட்டும்... விரைவில் நடக்கட்டும்...
நன்றி திரூ தனபாலன்.
Deleteஆஆஆ கீசாக்கா என்ன அதுக்குள்ளயே அலுத்துக்கலாமோ?:)... எனக்கு இப்பூடி இருப்பது பிடிச்சிருக்கு ஹா ஹா ஹா இன்னும் கொஞ்சநாள் போகட்டும்:)..
ReplyDeleteஎங்களுக்கு நோர்மல் லைவ் க்கு ஓகஸ்ட் செப்டெம்பர் எனத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனா இந்தியாவில் தாக்கம் குறைவென்பதால் ஏப்பிரலோடு நோர்மலாகிடும் என்கின்றனர்.
வாங்க பிஞ்சு, இங்கேயும் செப்டெம்பர் வரை போகலாம் என்கிறார்களே! என்னமோ போங்க! மனக்குழப்பம் அதிகமாகத் தான் ஆகிறது.
Delete///அதைப் பார்த்ததும் தான் நினைத்தேன், நிதானமாக ஜூம் செய்து எடுத்திருக்கலாமோ என. ///
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க எப்பத்தான் நிதானத்தோடு எடுத்திருக்கிறீங்க:)...
ஆஆஆ இப்போ நான் என்ன ஜண்டை போட்டாலும் கீசாக்காவால வீட்டை விட்டு வெளியே வர முடியாதே:)... என்ன பண்ணுவீங்க... இப்போ என்ன பண்ணுவீங்க:) ஹா ஹா ஹா
ஹாஹாஹா, விளக்கைத் தான் எடுக்கிறதில் கவனம் எல்லாம் இருந்தது. அப்போ கோபுரமும் விழுவதைப் பார்க்கவே இல்லை. பின்னர் பார்த்தப்போத் தான் அடடா! என நினைச்சேன்.
Deleteஅகல் விளக்குகள் எனக்கு வானத்தில் பிளேன் போவதைப்போல தெரியுது... 9 நிமிட பவர்கட்டால ஒம்பேஏஏது கோடி மிச்சமாமே :)... ஹா ஹா ஹா
ReplyDeleteஹாஹாஹா! ப்ளேனை வானில் பார்த்தே எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன! பணம் மிச்சமோ இல்லையோ உலகம் இந்தப் பேரிடரிலிருந்து விடுதலை பெற்றால் சரி.
Deleteஅனைத்து சாத்திரக்காரர்களும் இப்போ வீடியோப் போடுகின்றனர் வீட்டுக்குள் இருந்து... சிலது சரிபோலவும் இருக்கு, பலது கெட்ட கோபத்தை வரவைக்குது:)...
ReplyDeleteஆமாம், ஆனால் நான் அதிகம் அதை எல்லாம் பார்ப்பது இல்லை.
Deleteஎன் உள்ளுணர்வு சொல்வது வரும் புதனில் இருந்து நிலை மாறும்
ReplyDeleteஉள்ளுணர்வு சொல்வது பலிக்கட்டும் எல்கே.
Deleteவிரைவில் நலம் பெறட்டும் வையகம்...
ReplyDeleteபிரார்த்தனைகளைத் தொடர்வோம்....
பிரார்த்தனைகள் தொடரட்டும் துரை, நல்லதே நடக்கட்டும்.
Deleteஅன்பெனும் ஒளித்தீபம் எங்கும் பரவட்டும்.
ReplyDeleteபிரச்னை எல்லாம் ஓய்ந்து அனைவரும் நலம் பெற வேண்டும்.
Deleteதமிப் பத்தாண்டு நன்மைகள் கொண்டு வரட்டும. மிக நல்ல விளக்கம் கீதாமா.
ReplyDeleteஆம் வல்லி, தமிழ்ப் புத்தாண்டில் இருந்தாவது நலம் பெற வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.
Deleteஇந்தக் கடினமான நாட்கள் சீக்கிரம் நலமுடன் நகரப் பிரார்த்திப்போம். நீங்களும் மாமாவும் வெளியில் வராமல் பத்திரமாக இருங்கள். நண்பர்களும் அனைவரும் நலமுடன் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅது சரி.... தினசரி காய்கறி, பால், மளிகை சாமான்களுக்குப் பிரச்சனை இல்லையா (ஸ்ரீரங்கத்தில்)? இப்போதும் கீரைகள் வருகின்றனவா?
Deleteநாங்கள் வெளியில் வருவதே இல்லை ஸ்ரீராம். உங்கள் பகுதியிலும் அனைவரும் சௌகரியமாக இருப்பார்கள் என நம்புகிறேன்.
Deleteநெல்லைத் தமிழரே, சனிக்கிழமை தான் அரைக்கீரை வாங்கி சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் சமைத்தேன். நாளை வாங்க எண்ணம். கட்டு 20 ரூ என்றாலும் கீரை இரண்டு நாட்களுக்கு வந்துடும்.
முருங்கைக்கீரை தான் கிடைத்தது. இன்னிக்கு முருங்கைக்கீரை போட்டு வெறும் அரிசி அடை!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபடங்கள் நன்றாக உள்ளன. அத்தனை சோதிட விபரங்களும் மிக அருமை. நிதானமாக படித்துணர்ந்தேன். உலகம் வெகு விரைவில் இந்த தொற்றிலிருந்து விடுதலைப் பெற்று நலமாக பிரார்த்திப்போம். நீங்களும் கவனமாக இருங்கள். சென்னையில்தான் தங்கள் மருமகளும், பேத்தியும் உள்ளாரா? இல்லை அவர்கள் ஊருக்கு திரும்பி சென்று விட்டாரா? அனைவரையும் கவனமாக இருக்கச் சொல்லுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, மருமகளும், பேத்தியும் சென்னையில் தான் இருக்கின்றனர். இந்த மாசக்கடைசியில் போகணும். எங்கே! அதான் விமான சேவையே இல்லையே! என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை. ஒரே கவலையாக இருக்கிறது. எல்லாம் நல்லதாக நடக்கட்டும் என்பதே பிரார்த்தனைகள். பதினைந்தாம் தேதிக்குப் பின்னர் ஒரு சில வழித்தடங்களில் ரயில் இயங்கும் என்கின்றனர்.
Deleteஅருமையான key hole போட்டோ. அதுதான் கோபுர விளக்கு. கொஞ்சம் எடிட் செய்திருந்தால் தனித்துவம் பெறும். Jayakumar
ReplyDeleteநன்றி.
Deleteஆமாம் கீதாக்கா நாங்களும் ஏற்றினோம். ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக நன்மை விளையட்டும்..
ReplyDeleteஇந்த விஷயங்கள் வாட்சப்பிலும் வந்ததே. நான் அதிகம் வாசிப்பதில்லை. வீடியோக்களையும் தான். என் தங்கை ஜோசியத்தில் ரொம்பவே நம்புபவள் அதைப் பற்றி அதிகம் பேசுபவள். எனக்கு சுத்தம். இறைவனைத் தவிர வேறு எதுவும் நோக்கேன் என்று.
ஆமாம் அக்கா இங்கும் செப்டம்பர் வரை செல்லும் என்றெல்லாம். இப்போது இருப்பது வேலைகள் கொஞ்ச கூடுதல் அவ்வளவே மற்றபடி எப்போதுமே நாமே செய்து கொள்வதால் தெரியவில்லை.
இங்கு சாமான் எல்லாம் அருகிலேயே கிடைக்கிறது. 12 மணிவ் அரைதான் கடைகள். ஆனால் வெளியில் செல்வதில்லை. வீட்டை விட்டுத் திரும்பினால் கடைகள். காய் மட்டுமே அதுவும் வாசலில் வண்டியில் வந்துவிடுவதால் கடைக்குச் செல்லாமல் வாங்கிவிடுகிறேன். ரொம்ப ரேர் கடைக்குச் செல்வது.
நீங்களும் மாமாவும் பத்திரமாக இருக்குங்கள் அக்கா. எல்லோருமே பத்திரமாக இருங்கள். நல்லது சீக்கிரம் நடந்து உலகம் இயல்பு வாழ்விற்கு விரைவில் திரும்பிட வேண்டும்...
கீதா
வாங்க தி/கீதா, எனக்கும் ஜோசியம் எல்லாம் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு. ஆனால் புத்தகங்களைப் படித்தால் மனம் அதில் பதியாது. இம்மாதிரி யாரேனும் சொன்னால் கேட்டுக்கொள்வேன். அதில் உண்மை இருக்கும் எனத் தெரிந்தால் தான் பகிர்வேன். இதில் உண்மை இருப்பதாகவும் இதையே இன்னும் 2,3 நபர்கள் சொல்லி இருப்பதாலும் பகிர்ந்தேன். நான் வீட்டை விட்டு வெளியேறுவதே இல்லை. வாசல் வராந்தாவுக்கே கதவைப் பூட்டத் தான்/அல்லது திறக்கச் செல்வேன் அதோடு சரி.
Deleteராசிகள் விளைவுகள் என்றெல்லாம் எழுதும்போது சோதிடதிலும்கலக்குகிறீர்கள் என்று தெரிகிறது
ReplyDeleteஎனக்கு ஜோசியத்தில் எதுவும் தெரியாது ஐயா. இது ஓர் பகிர்வு மட்டுமே!
Delete