எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 05, 2020

மஹாலக்ஷ்மியை வழிபடுவோம்! உடல் நலம் பெறுவோம்!

இந்தக் கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது நாடெங்கும் ஒரே தடுமாற்றம், கலவரம். ஊரடங்கு. ஏப்ரல் பதினான்கு தேதி வரை அமலில் இருக்கும் நாடு அடங்குத் திட்டம் அதன் பிறகும் தொடருமா என்பதே எல்லோர் கேள்வியும். இதற்கு நடுவில் பிரதமர் இன்றிரவு அனைவரையும் விளக்கு ஏற்றச் சொல்லி இருக்கிறார். வழக்கம் போல் ஆதரவுகளும், எதிர்ப்புகளும், கேள்விக்கணைகளுமாகத் துளைக்கின்றது.  இது பௌதிகம் சம்பந்தப்பட்ட விஷயம் எனப் போன பதிவில் பார்த்தோம். இது கோள்கள் சம்பந்தப்பட்டது என்றும் சிலர் சொல்கின்றனர். இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடம் என்று சொல்லி இருப்பதால் நவகிரஹ சாந்திக்காக எனச் சொல்லுவோரும் உண்டு.  இதற்குச் சிலர் தங்கள் யூகங்களையும் சொல்லி இருக்கின்றனர். அதில் ஒருத்தர் சொல்வது:  இவர் கேபி வழிமுறை என்னும் கிருஷ்ணமூர்த்தி பத்ததியைக் கடைப்பிடிக்கிறார் போலும்.

நவகிரக கோவில்களும் அதன் ...

5-4-20 இரவு 21 மணி ஒன்பது நிமிடங்கள் 9-09 புது தில்லி latitude and longitude படி லக்னம் துலா, சிலர் விருச்சிகம் என்பது தவறு. நக்ஷத்திரமும் பூரம், மகம் இல்லை. சந்திரன் மாறும் காலம். தசை சுக்கிரன் புக்தி செவ்வாய்.

இதை வைத்து அவர் கணிப்பு லக்னாதிபதி சுக்கிரன் எட்டாம் வீட்டில் (நெகடிவ்) இருப்பதோடு அல்லாமல் சூரியனின் நக்ஷத்திரமான கார்த்திகையில் உள்ளது. துலா லக்னத்துக்கு சூரியன் பாதகமான கோள் 11 ஆம் வீட்டில் நகரும் நிலையில் உள்ளதால் சுக்கிரனுக்கு அதன் சக்தி போய் விடும். அடுத்ததாகச் சந்திரனும் 11 ஆம் வீட்டில் மீண்டும் இருப்பதாலும் அது சூரியனின் பாதகமான இடத்தில் சுக்கிரனின் நக்ஷத்திரத்தில் இருப்பதாலும் அதுவும் எதிர்மறையான சக்தியுடனே இருக்கிறது.

சூரியனின் நக்ஷத்திரமான உத்திராடத்தின் சனியும் , வியாழனும் இருப்பதால் இருவரும் தங்கள் சக்தியை இழக்கின்றனர். செவ்வாய் சந்திரனின் நக்ஷத்திரமான திருவோணத்தில் உள்ளது. செவ்வாய், சனி, வியாழன் இவை மூன்றும் 6ஆவது மற்றும் 8ஆவது இடத்தில் இருப்பதால் இதை சஷ்டாஷ்டகம் என்போம். ராகுவும் கேதுவும் முறையே அவர்கள் சொந்த நாத்திரமான ஆருத்ராவிலும், மூலத்திலும் உள்ளனர். இவர் கடைப்பிடிக்கும் கேபி வழிமுறைப்படி ஆறாம் இடம் நோய்க்கும் எட்டாம் இடம் அதை அதிகப்படுத்தும் என்றும் சொல்கின்றனர்.  கேது 6க்கும் ராகு 8க்கும் உள்ளனர்.

இன்றிரவு ஒன்பது மணிக்கு இவற்றின் தாக்கம் மிக மிக அதிகமாக கோரத்தாண்டவம் ஆடும் நேரம். கிட்டத்தட்ட இதுவும் ஓர் கிரஹணம் போலத் தான்  அந்த நேரத்தின் லக்னாதிபதியான சுக்கிரனை, விடிவெள்ளி என்போம் அல்லவா? அந்த வெள்ளி கிரஹத்தை ராகுவில் இருந்து 12 ஆம் இடத்தில் இருப்பவர் அந்த நேரம் வெள்ளியை மறைக்காமல்தன் சொந்த ராசிக்கு ரிஷப ராசிக்குச் செல்ல வேண்டும். சந்திரனில் இருந்தநது 10 ஆம் இடம் யோகம் மாலவிய யோகம் எனப்பட்ய்ம். சுக்கிரனின் அதி தேவதையான மஹாலக்ஷ்மியை அந்த நேரம் வணங்கிப் போற்ற வேண்டும். தீபங்களின் மூலமாக மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திப்போம். ராகு, கேதுவால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்போம்.

தேவேந்திரன் போற்றிய மஹாலக்ஷ்மி ...

குறிப்பு: எனக்கு ஜோசியம் அறவே தெரியாது. நண்பர்கள் மூலம் வந்த செய்தியைப் பகிர்ந்திருக்கிறேன். இதில் தவறு ஏதும் இருந்தால் ஜோதிடம் அறிந்த பானுமதி, அதிரடி போன்றவர்கள் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

படங்களுக்கு நன்றி கூகிளார்.

31 comments:

 1. நலமே விளையட்டும். பாதிப்பிலிருந்து அனைவரும் அகல வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையும் விருப்பமும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட். பாதிப்பில் இருந்து விலகவேண்டும் என்பதே பிரார்த்தனைகள்.

   Delete
 2. நல்ல அறிவுரை... தீபம் ஏற்றுவதும் நல்லதுதான்.

  ஜோதிடப் பங்கு இல்லாமயா முன்பே வைரஸ் பிரச்சனை வரும் எனக் கணித்திருந்தார்கள்?

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழரே, ஆற்காடு பஞ்சாங்கத்தில் சீதாராமையர் இதைப் பற்றி ஏற்கெனவே கணித்துச் சொல்லி இருப்பதையும் முக்கியமாக மேலை நாடுகள் அதிகம் பாதிப்படையும் என்று சொல்லி இருப்பதையும் கட்டம் போட்டுக் காட்டி இருந்தார்கள்.

   Delete
 3. விளக்கேற்றுவது எப்பொழுதுமே நல்லது.
  இத்தனை ஜோதிட விளக்கங்களிருப்பது
  தெரிய வரும்போது, செய்யாமல் விட முடியாது. நன்றி கீதா மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, புராண ரீதியாகவும் சொல்லி இருக்கின்றனர். ஜோதிட ரீதியாகவும் சொல்லி இருக்கின்றனர். அதையும் பின்னர் எழுதுகிறேன்.

   Delete
 4. //எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே//
  வம்புக்கு வந்தாச்சு.
  ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நம்புவர்கள், நம்பாதவர்கள் எல்லோரும் வந்து அவரவர் கருத்துக்களை கூறலாம். 

  கடவுளை ப்ரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால் ஏன் கடவுள் இந்த க்ரோனா  வைரஸ் முதலில் படைக்கவேண்டும். ஒரு வேளை பகவத் கீதையில் dharma-samsthapanarthayasambhavami yuge yuge என்று க்ரோனா வடிவில் வந்திருக்கிறாரோ? 
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. கொரோனா வைரஸைக் கடவுள் படைத்ததாக யார் சொன்னார்கள்? சீனாவின் ஊஹான் மாஹாணத்தின் பரிசோதனைச் சாலையில் சோதனையின்போது வெளிப்பட்டதாக அல்லவோ சொன்னார்கள்? நானும் இன்று வரை பல கஷ்டங்களைப் பார்த்துட்டேன். அதில் போன வாரம் மைத்துனனின் அந்திமக் காரியங்கள் நடக்கணுமே, பிரச்னைகளோ, நடுவில் தடங்கல்களோ வராமல் இருக்கணுமே என்னும் பெரிய கவலை. இரவெல்லாம் தூங்கவில்லை. மனம் அலைக்கழிந்து கொண்டிருந்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக நல்லபடியாக முடிந்தது. இறை நம்பிக்கை தான் கை கொடுத்தது. அதே போல் இப்போதும் இறை நம்பிக்கை கை கொடுக்கும். மற்றபடி உங்களுக்குக் கடவுளைக் கேலி செய்வது பிடிக்குமெனில் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். இரண்டு நாட்கள் முன்னர் தான் நெருங்கிய நண்பர் ஐந்து வருடங்கள் முன் வரை நாத்திகம் பேசியவர் தான் ஆன்மிகத்துக்குத் திரும்பியதையும் அவனன்றி ஓரணுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதாகவும் என்னிடம் ஒத்துக் கொண்டார். அவரிடமே நான் சொல்லி இருக்கேன். நீங்க விரைவில் மாறுவீங்க என்று. அவர் அப்போதெல்லாம் ஒத்துக் கொண்டதில்லை. இப்போது அவராகவே ஒத்துக் கொண்டார். வாழ்க்கை அவரை அப்படிப் புரட்டிப் போட்டிருக்கிறது. அது மாதிரியான ஒரு சந்தர்ப்பம் இது. அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை அனைவருமே புரிந்து கொள்வோம்.

   Delete
  2. நான் கடவுள் இல்லை என்று எங்கும் சொல்லவில்லை. நான் கடவுள் மறுப்பாளனும் இல்லை. என்னுடைய பின்னூட்டத்தின் கடைசி வரியை நீங்கள் படிக்கவில்லை. கோவிந்தும் கோவிடும் (govind, covid) ஒரே போல் பெயர். தர்மஸ்தாபனாய சம்பவாமி யுகே யுகே என்று பகவன் சொன்னது போல் இந்த வைரஸ் ஆக அந்த பரம்பொருளே அவதரித்திருப்பாரோ என்று ஐயம் எழுப்பினேன். 
   Jayakumar

   Delete
 5. கீதாக்கா ஹைஃபைவ்! எனக்கும் ஜோசியம் பற்றி சுத்தமாகத் தெரியாது. நீங்கள் இங்கு பகிர்ந்திருப்பது புரியவும் இல்லை.

  ஆனால் பெரும் சக்தியின் மீதும் பிரார்த்தனையிலும் அதாவது எல்லாம் அந்த சக்தி பார்த்துக் கொள்ளும் என்று முழுவதையும் ஒப்படைத்துச் செய்யும் பிரார்த்தனையிலும் அபரிதமான நம்பிக்கை.

  நல்லது விரைவில் நடக்கட்டும் நடக்க வேண்டும்.நம் நாடு மட்டுமல்ல எல்லா நாடுகளுக்கும் நன்மை விளையவேண்டும். எல்லோரும் நிம்மதியாக இருந்திட வேண்டும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா, அளவிட முடியாத அந்தச் சக்தியைத் தான் நாங்களும் நம்புகிறோம்.

   Delete
 6. எதுவானாலும் நடக்கும் ஊழ் மாற வேண்டும், தீர வேண்டும் என்று வேண்டுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்! ஆனால் அதற்கும் ஓர் முடிவு இருக்கும். பிரார்த்திப்போம் திரு தனபாலன்.

   Delete
 7. நல்லது நடக்கட்டும். நன்மை விளையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம்!

   Delete
 8. நலமே விளையட்டும் உலக மக்கள் காக்கப்படல் வேண்டும்.

  ஆனால் மக்கள் இதன் உக்கிரம்பற்றி துளியும் கவலையின்றி அலைகிறார்கள்.

  மேலும் இதிலும் மதம் பார்ப்பதுதான் மக்கள் இன்னும் திருந்தவில்லை என்பதை காட்டுகிறது.

  வாழ்க வையகம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! மக்கள் அலைவதோடு அல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரையும் மதிப்பதும் இல்லை. என்ன செய்யலாம்! பட்டாவது திருந்த வேண்டும். பிரார்த்திப்பது ஒன்றே நமக்கு வழி.

   Delete
 9. இந்த பெரியவர் சொன்னதை பற்றி என்ன நினைக்கிறீங்க

  பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். லைட் ஆஃப் செய்துவிட்டு விளக்கேற்றுவது குறித்து பேச்சு வந்தது.

  லைட் ஆஃப் செய்துவிட்டு விளக்கு ஏற்றுவது என்பது அபசகுணமாம். பொதுவா வீட்ல கூட இருட்டறதுக்கு முன்னரே சாயங்காலம் 6 மணிக்குள்ள விளக்கேத்திடனுமாம். இருட்டனதுக்கு அப்புறம் ஏற்றினால் தரித்திரமாம். ராத்திரி 9 மணிக்கு வீட்ல இருக்க லைட் எல்லாம் ஆஃப் பண்ணிட்டு விளக்கு ஏத்தினா அந்த குடும்பத்துக்கோ அவர்கள் செய்யும் தொழிலுக்கோ ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வந்தே தீருமாம். விளக்கு ஏத்தறதா இருந்தா லைட்ட அணைக்காம ஏத்துப்பா என்றார்.

  எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லைங்க ஐயா என்று வார்த்தை வாய் வரைக்கும் வந்துவிட்டது. இருந்தாலும் அவரது நம்பிக்கை குறித்து பேசி அவரை எதற்கு சங்கடத்திற்குள்ளாக்கவேண்டும் என அமைதியாக திரும்பிவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டில் நாங்க சாயங்காலம் விளக்கு ஏற்றும்போதும், காலை எழுந்ததும் ஸ்வாமி விளக்கு ஏற்றும்போதும் தீபங்களை ஏற்றி எரிய விட்ட பின்னரே மின்சார விளக்குகளைப் போடுவோம். இது எத்தனையோ வருடங்களாக மாறாமல் செய்து கொண்டிருக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை மின்சார விளக்குக்கு இரண்டாம் பட்சம் தான். கோயில்களில் கூட முக்கியமான கோயில்களில் தீப ஆராதனை எடுக்கையில் மின் விளக்குகளை அணைத்துவிடுவார்கள். அதிலும் கேரளக் கோயில்களில் இது கட்டாயம். மின் விளக்குகள் இரண்டாம் பட்சம் தான். ஆகவே அவற்றை அணைத்துவிட்டு தீபங்களை ஏற்றுவது எங்களைப் பொறுத்தவரை ஏற்புடையதே! அதோடு திடீர்னு மின் தடை வரும்போதெல்லாம் எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் எரியவில்லை எனில் அகலோ, அல்லது சிம்னி விளக்கோ, ஹரிக்கேன் விளக்கோ ஏற்றுவதும் எங்களுக்குப் பழக்கமே! சின்ன வயசில் இந்த ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலேயே ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கேன். கல்யாணங்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் கூட சம்பிரதாயம் மாறாமல் கல்யாணங்களில் எரிவாயு விளக்குகளும் திருவிழாக்களில் தீவட்டியும் சம்பிரதாயத்துக்காக ஏற்றுவார்கள்.அரங்கன் வீதி உலாவரும்போது இரவு நேரத்தில் தீவட்டிக்குக் கட்டாயமாய் இடம் உண்டு.

   Delete
  2. எரிவாயு விளக்குகள் (காஸ் விளக்குகள்) முன்னெல்லாம் இதைத் தூக்கவென்றே தனி ஆட்கள் இருப்பார்கள். பம்ப் செய்வதுண்டு. அதற்கேற்ப எரியும்.

   Delete
 10. மனதில் பயம் அதிகமாகும்போது, மக்களுக்குப் பக்தியும் நம்பிக்கைகளும் அதிகமாகும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது தான்! அது சரி, இந்த ஜோதிடப் பதிவில் எல்லாம் சரியாகச் சொல்லி இருக்கேனா என்று சொல்லவே இல்லையே! !!!!!!!!!!!!!

   Delete
 11. வணக்கம் சகோதரி

  தாங்கள் சோதிடத்தை பற்றி அலசி எழுதியிருந்ததை மிகவும் ஆர்வமாக படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இந்த மாதிரி சிக்கல்கள் வரும் போது சோதிட பரிகாரத்திற்காக அவரவர்களுக்கு செய்யச்சொல்லும் பரிகாரங்களை நம் மக்கள் எல்லோரும் செய்வது,செய்து வருவது உண்மைதான். இப்போது ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழிப்படி அனைவரும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யும் நேரமிது. அனைவரும் அவரவர் இஸ்ட தெய்வங்களையும், மற்றும் அனைத்து கடவுள்களையும் பிராத்தனை செய்வோம். மக்கள் அனைவரும் ஒன்று கூடி மனதாற செய்யும் பிரார்த்தனைகளுக்கு சக்தி நிச்சயம் உண்டு. விரைவில் பிரச்சனைகள் தீரட்டும். நேற்று இங்கு அதே நேரத்தில் விளக்கேற்றி தியானம் செய்தோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு வந்த செய்தியை மொழிபெயர்த்ததோடு என் வேலை முடிந்தது கமலா. இந்த விளக்கேற்றுவதையும் ஓர் பரிகாரமாக நினைத்துச் செய்தால்/செய்வதால்/ செய்திருந்தால் தப்பே இல்லை. நாங்களும் உலகக்ஷேமத்துக்கு வேண்டிக் கொண்டு ம்ருத்யுஞ்சய ஸ்லோகம் சொன்னோம்.

   Delete
 12. எத்தைத் தின்னால் பித்தம் தீரும் - என்று என் அம்மா பழமொழி சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது நடப்பதெல்லாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சிவகுமார். அதே தான்! எப்படியோ சரியாகட்டுமே!

   Delete
 13. மனம் அமைதியாக பிரார்த்தனை மிக அவசியம்.
  எல்லோரும் நலமாக இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. எல்லோர் நலத்துக்கும் பிரார்த்தனை செய்வோம் கோமதி! நலமே நாடுவோம்.

   Delete
 14. அவரவர் நம்பிக்கை. ஒன்றரை வார லாக் டவுனில் மக்களுக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்கும். அதை குறைக்க இது ஒரு வழி. நாம் தனியாக இல்லை. பல லடச்சக்கணக்கானோர் நம்முடன் இருக்கின்றனர் என நம்பிக்கை ஊட்டுவது. எல்லாமே அவன் செலுத்தும் பாதையில் அல்லவா செல்ல முடியும் . அவனிருக்கிறான். நானுமே ம்மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். ஒரு பக்கம் ஸ்ட்ரோக் வந்து அப்பா 7 மாதமாய் படுக்கை. மறுபுறம் வெளியே செல்ல முடியாமல் வியாபாரம் பாதிப்பு. பார்ப்போம்

  ReplyDelete
  Replies
  1. எது எப்படியோ வீளக்கு ஏற்றுகிறோம் ஏற்றாமல இருக்கிறோம்.... ஆனால் என் அனுபவத்தில் சொல்லுகிறேன் சார் எந்த நேரத்திலும் இறைவன் மீதுள்ள் நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். மன அழுத்தத்தில் உள்ளதாக சொல்லி இருக்கிறீர்கள் தயவு செய்து டிவி சேனல்களை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள் கூட்டு பிரார்த்த்னை போன் மூலம் செய்யுங்கள் . இறுதியாக எது நடக்க வேண்டுமோ அது அது இறைவணின் விதிப்ப்படி நடக்கும் அதனால் எல்லாம் நல்லதற்கே என்று நினையுங்கள் சார்

   Delete
  2. வாங்க எல்கே. இந்தக் கருத்தை இப்போத் தான் பார்த்தேன். அப்பா உடல்நிலை விரைவில் தேறிப் பழையபடி வரப் பிரார்த்திக்கிறோம். உங்கள் வியாபாரம் பாதிப்பைப் பற்றி நாங்களும் பேசிக் கொள்வோம். எல்லோருக்குமே இது சோதனையான கால கட்டம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான சோதனை. விரைவில் அனைவரும் மீண்டு வரப் பிரார்த்திப்போம். தைரியம் மிகுந்த நீங்களே மன அழுத்தம் என்றால் என்ன சொல்வது? இருவேளை தியானம் செய்ய முடிந்தால் செய்யுங்கள். இல்லை எனில் மூச்சுப் பயிற்சியோ மூச்சைக் கவனித்தலோ மனதை ஒருமைப் படுத்தப் பாருங்கள்.

   Delete