எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 12, 2020

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே!

இன்று சர்வதேச செவிலியர் தினமாம். கடந்த ஆறுமாதமாக ஒப்பற்ற சேவை செய்து வரும் அனைத்து செவிலியருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள். நடமாடும் தெய்வங்களான அவர்கள் சேவை தொடர்ந்து செய்ய ஏற்றவகையில் அவர்கள் உடல்நலனும், மனநலனும் இருக்கும்படிக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். இன்று இரவு பிரதமரின் உரை இருக்கிறது எனச் செய்திகள் சொல்லுகின்றன. வரும் பதினேழாம் தேதியுடன் ஊரடங்கு முடியப் போகும் நிலையில் இன்று பிரதமர் உரை. ஊரடங்கை நீட்டிக்கச் சொல்லித் தமிழ்நாட்டு முதலமைச்சர் பிரதமரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே பெயரளவுக்குத் தான் ஊரடங்கு இருக்கும் நிலையில் இன்னும் நீட்டித்தால் அதனால் என்ன பலன் ஏற்படப் போகிறது என்பது புரியவில்லை. மக்களில் ஒரு சாரார்/மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஊரடங்கையும் அதை ஒட்டிய கட்டுப்பாடுகளையும் ஆதரிக்கின்றனர்/ கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றனர். இனி பேருந்துகள் ஓட ஆரம்பித்தால், ரயில்கள் ஓட ஆரம்பித்தால் இது தொடர முடியுமா? பேருந்து, ரயில்களில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுவதாகச் சொல்கின்றனர். இதற்கெல்லாம் செலவுகள், ஆட்கள் பலம்னு எல்லாம் தேவைப்படும். பயணச் சீட்டின் விலையும் மக்கள் வாங்கும்படி இருக்கவேண்டும்.

இது இத்தனையும் இருக்க வெளிமாநிலத் தொழிலாளருக்கு அரசு எதுவுமே செய்யவில்லை என்றவர்கள் இப்போது அனைத்துத் தொழிலாளர்களும் சென்றுவிட்டதால் இங்கே தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மஹாராஷ்ட்ரா போனவர்கள் பலரும் அங்கே கரும்பு வெட்டப் போனதாகச் சொன்னார்கள். அதே கரும்பை, வயல் வேலைகளை இங்கே இருந்து செய்திருக்கலாமே என்னும் எண்ணம் வரத்தான் செய்தது. தமிழ்நாட்டில் கட்டுமான வேலைகள், வயல்வேலைகள் போன்ற கடினமான உடல் உழைப்பு நிறைந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது எனவும், தமிழர்கள் எனில் கூடுதல் சம்பளம் தர வேண்டி உள்ளது எனவும் இவர்களை வேலை வாங்குபவர்கள் கூறுவது. இப்போதோ ஆட்கள் பற்றாக்குறை எனச் சொல்கின்றனர்.

இந்த ஊரடங்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது எனவும்,அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சாப்பாடே இல்லாமல் தெருத்தெருவாக அலைவதாகவும் சொன்னார்கள். சிலர் உணவு, நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவியதாகவும் சொன்னார்கள். அரசோ ஆயிரம் ரூபாய் பணத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து மளிகைப் பொருட்களும் உணவுப் பங்கீடு நிறுவனம் மூலமாகக் கொடுத்து இருக்கிறது. இனி வரப்போகும் மாதமும் கொடுக்கப் போவதாகச் சொல்லி உள்ளது. இதைத் தவிரவும் முதல் ஊரடங்கின் போதே அனைத்து அடித்தட்டு மக்கள், விவசாயிகள் ஆகியோரின் ஜன் தன் வங்கிக் கணக்கில் பணமும் மத்திய அரசால் போடப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்க்கட்சிகளுக்கு இதில் திருப்தி இல்லை. ஒரு தலைவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி நிதி உதவி செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார். பணக்கார நாடு எனச் சொல்லப்படும் அம்பேரிக்காவிலேயே அப்படி எல்லாம் கொடுக்கவில்லை. கனடாவில் ஏதோ நிதி உதவி கொடுத்திருப்பதாகச் சொல்கின்றனர். முழு விபரம் தெரியவில்லை.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவங்க ஊர்களில், மாநிலங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் தான் தென்னாடுகளுக்கு வந்தனர். இப்போது திரும்பிப் போனால் அங்கே அவங்களுக்கு வேலை காத்துக்கொண்டு இருக்கிறதா? இல்லை. ஆனால் அனைவருக்கும் உயிர் மேல் பற்றும், பாசமும், பயமும். தனியாக இங்கே இருக்கும்போது ஏதேனும் நடந்துவிட்டால்? அந்த எண்ணமே சொந்தங்களின் அருகே போகும்படிச் சொல்லி அவர்களும் சென்றுவிட்டனர். இத்தனைக்கும் இங்கே தமிழ்நாட்டில் அவர்களுக்கென தனி முகாம் ஏற்படுத்திச் சாப்பாடு, மற்ற வசதிகளைத் தமிழக அரசு செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது அவர்கள் ஊர் திரும்பவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளது. மத்திய அரசால் அவர்களின் ரயில் பயணச் செலவில் 85 சதம் இந்திய ரயில்வேயும் மீதி உள்ள 15 சதம் அந்த அந்த மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கேரளா தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டது. என்றாலும் பலரும் இதைப் புரிந்து கொள்ளாமல் அனைத்துச் செலவுகளையுமே மத்திய அரசு மாநிலங்களை ஏற்கச் சொன்னதாகவும், அதனால் மாநில அரசுகள் மறுத்ததாகவும் கூறிக்கொண்டிருக்கின்றனர். விளக்கங்கள் அளித்தும் அவர்கள் தங்கள் கூற்று தவறு என மாற்றிக்கொள்ளவில்லை.  இங்கே தமிழக அரசு தன்னால் முடியும் என (கஜானா காலியாக இருந்தும்) ஒத்துக் கொண்டு விட்டது. கேரளா மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சொல்கிறது. இதே போல் மேற்கு வங்காளத்திலும் அந்த மாநில அரசு அங்கே திரும்பி வந்த மேற்கு வங்கத் தொழிலாளர்களை ஏற்க மறுத்துவிட்டது.

இப்போது இன்றிரவு பிரதமர் என்ன சொல்வாரோ, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது பதினேழாம் தேதியோடு முடிவடையுமா என்பதே பெரிய கேள்வி. ஏற்கெனவே ஜனவரி மாதமே ஊரடங்கை ஆரம்பிக்கவில்லை என்று சிலரும் பெப்ரவரியிலேயே செய்திருக்க வேண்டும் எனச் சிலரும் சொல்கின்றனர். இப்போது கடந்த 48 நாட்களாக ஊரடங்கில் இருக்கையிலேயே மக்கள் அதை மதிக்கவில்லை. அதை யாருமே கண்டிக்கவில்லை. இன்னொரு பக்கம் ஊரடங்கினால் வாழ்வாதாரம் போய்விட்டது என்றும் புலம்பல். அடித்தட்டு மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் புலம்பல். அரசு ஒரு பக்கம் ஊரடங்கு, கொரோனா தொற்றுப் பாதிப்பு, சுகாதார ஏற்பாடுகள், நோயாளிகளைக் கவனித்தல் எனச் செய்யும் போது இதையும் சேர்த்து எப்படிச் செய்யும்? எல்லோரும் மனிதர்கள் தானே! ஏதோ பிரதமரும், தமிழ்நாட்டில் முதலமைச்சரும் சேர்ந்து கொண்டு பேசி வைத்துக் கொண்டு கொரோனாவை உள்ளே விட்டு விட்டார்கள் என்று சொல்லாத குறை!

ஊரடங்கை முதலில் அறிவித்தபோது மத்திய அரசு சொல்லாமல் தமிழகத்தில் அறிவித்துவிட்டதாகச் சொன்னார்கள். அடுத்த ஊரடங்கை நீட்டிக்கும் சமயம் மத்திய அரசின் முடிவுக்குக் காத்திருக்கையில் மத்திய அரசின் அடிமை அரசு, மற்ற மாநிலங்கள் நீட்டிக்கையில் இங்கேயும் ஏன் செய்யவில்லை எனக் கேள்வி. நீட்டித்த பின்னர் எத்தனை நாட்கள் ஊரடங்கில் இருப்பது? மக்களால் பொறுக்க முடியவில்லை. இதற்கு என்ன செய்யப் போகிறோம்? அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றெல்லாம் கேள்விகள். ஏன் இவர்களே இதற்கு ஒரு மாற்றுக் கண்டறிந்து அதை முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தலாம். இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன், ஆங்காங்கே கொரோனா பரவிக்கொண்டிருக்கும் வேளையில் "அரசு கொரோனாவோடு நீங்கள் வாழப் பழகிக்கொள்ளுங்கள்!" என்று சொல்லிக் கை கழுவி விட்டது எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆக ஊரடங்கு இருந்தாலும் குற்றம் சொல்வோம்; எடுத்துவிட்டாலும் குற்றம் சொல்வோம். ஊரடங்கு நியமங்களுக்கும் கட்டுப்பட மாட்டோம். ஆனால் எங்களுக்குக் கொரோனா மட்டும் வரக்கூடாது! இது தான் இப்போதைய போக்கு! நம்மால் அரசுக்கோ, மற்ற மக்களுக்கோ உதவி ஏதும் செய்ய முடியலைனாலும் தொல்லை கொடுக்காமலாவது இருக்கலாம்.

டிஸ்கி: நான் எந்த அரசின் ஆதரவாளரோ அல்லது எதிர்ப்பாளரோ இல்லை. பொதுவாக அரசின் சட்ட திட்டங்களை மதிக்கும் ஒரு சாதாரணப் பிரஜை. அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்!

36 comments:

 1. செவிலியர் தினம் - அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்துகள் - எத்தனை கடினமான பணியில் இப்போது இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களை என்ன சொல்ல.

  நலமே விளையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், செவிலியர் பணி மிகக் கடினம். அதுவும் இப்போது! மிக மிகக் கடினம். சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்களையே கொரோனா நோயாளிகளைக் கையாளும்படி சொல்லுவதாகவும் கேள்விப் பட்டேன்.

   Delete
  2. இங்கே ஒரு பெண்  மருத்துவர்  தன மருத்துவமனையில் கொரோனான்னு பயந்து லீவ் போட்டு வீட்டில் இருக்கார் .இவங்கல்லாம் எதுக்கு மருத்துவத்தொழிலுக்கு வறாங்கன்னே தெரில :( இங்கே பல சொஷுயல் கிறார்கள் இறந்திருக்காங்க கொரோனாவால் பெரும்பாலோனோர் ஆபிரிக்க ஆசிய வேற்று நாட்டவர் :( BME BLACK MINORITY ETHINIC

   Delete
  3. அவங்களுக்கும் உயிர் பயம், குடும்பக் கவலை இருக்கும் ஏஞ்சல்! இதை நாம் குற்றம் சொல்ல முடியாது.

   Delete
 2. செவிலியர் தின வாழத்துகள்.

  //ஊரடங்கு இருந்தாலும் குற்றம் சொல்வோம்; எடுத்து விட்டாலும் குற்றம் சொல்வோம். ஊரடங்கு நியமங்களுக்கும் கட்டுப்பட மாட்டோம். ஆனால் எங்களுக்குக் கொரோனா மட்டும் வரக்கூடாது//

  ஆம் இதுதான் இன்றைய தமிழக மக்களின் பெரும்பாலானவர்களின் கருத்து.

  இது உலக மக்கள் அனைவரும் புதிதாக சந்தித்த விசயம் யாரும் ஜவாப்தாரி அல்ல.

  பாவம் மோடி என்ன செய்வார். அவரே இந்தியாவை விட்டு வெளிநாடு போகமுடியாமல் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி! மோதி வெளிநாடு செல்வது என்பது தான் சுற்றிப் பார்க்கவோ அல்லது தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு உல்லாசப் பயணம் போகவோ அல்ல! அவருடன் வெளி உறவுத்துறை ஆட்கள் மட்டுமே அரசு ரீதியாகக் கூடச் செல்வார்கள். பத்திரிகையாளர்களை முந்தைய அரசுகள் கூட்டிச் சென்றாற்போல் இவர் கூட்டிச் செல்வதில்லை. அதனாலேயே பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தை ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள். வெளிநாடு செல்லாத பிரதமரோ, குடியரசுத் தலைவரோ, வெளி உறவு மந்திரியோ இதற்கு முன்னும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்க மாட்டார்கள். மன்மோகன் சிங் எத்தனை முறை சென்றார் என்பதைப் பற்றி கூகிளிலோ அல்லது வேறு முறைகளிலோ தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமும் கேட்கலாம்.

   Delete
 3. உண்மைதான் கீசாக்கா, இருட்டினில் பல விசயங்களைப் பல நாடுகளும் மறைக்கின்றன....

  நீங்கள் எழுதியிருக்கும் விசயங்கள் பலவும் நானும் படிச்சேன் நியூஸில்.. ஆனா அரசாங்கம்தான் என்ன பண்ணுவது, என்ன முடிவை எடுப்பது, மருந்து இப்போதைக்குக் கண்டு பிடிக்க முடியாதாம், கண்டு பிடிச்சாலும் பூரணமாக கொரோனாவை ஒழிக்கும் மருந்து கிடைக்க்காதாம்.. ஏதோ நோயுடன் போராடி வெல்வதைப்போல மருந்துகள்தான் கிடைக்குமாம்.

  அதாவது காச்சல் என ஒன்று எப்பவும் எல்லோருக்கும் வந்து போகிறதுதானே, சிலரை அதிகம் பாடாய்ப் படுத்தும்.. அப்படித்தான் இனிமேல் காலத்தில் கொரோனா நிலையும் என்கின்றனர், எதுவும் சரியாக சொல்ல தெரியவில்லை.

  வசதி மற்றும் தொழில் கையில் இருப்போர் ஓகே மற்றும்படி மக்களின் நிலைமை கஸ்டம் தானே, இப்படியே பூட்டி வச்சால் பல மக்கள் பட்டினியாலயே இறக்க நேரிடுமே...

  இப்போ தீப்பெட்டிக் கணேசன் என ஒருவர், சினிமாவில் நடிச்சு கொஞ்சப் பணம் கிடைக்குமாம் அதில் குடும்பம் நடத்தி வந்தேன், இன்று பிள்ளைகளுக்குப் பால் வாங்கக்கூட காசில்லை என அழுகிறார்.. சினிமாக் காரரும் பொது ஜனமும் உதவி செய்தார்களாம்.. இப்படி வெளியே சொல்ல முடியாமல் எவ்வளவு மக்கள்.. அப்போ அரசு எப்படி இந்த ஊரடங்கை நீடிக்க முடியும்.. அதனாலதான் அனைத்து நாடுகளும் யூன் மாதம் தொடங்கி மெதுமெதுவாக ஒவ்வொன்றாகத் திறக்க இருக்கின்றனர், ஆனா நம்மைப் பார்துகாப்பது நம் கையிலதான் இருக்குது.. அதையும் மீறினால்.. அது நம் விதி என எடுக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பிஞ்சு! முந்தைய பதிவுக்கெல்லாம் வரலை. அதெல்லாம் ஆறிப் போயிருக்கும் என்பதாலா? போனால் போகட்டும், உங்களுக்குத் தான் ஒரு செய்முறை தெரியப் போவதில்லை. :))))))

   நீங்க சொல்றாப்போல் இந்தக் கொரோனா விஷயம் ரொம்பவே பயமாகத் தான் இருக்கிறது. அடித்தட்டு மக்கள் நிலைமை சம்பாதித்தாலும் கஷ்டம். இல்லைனாலும் கஷ்டம். ஆனால் அரசாங்கமும் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொண்டு தான் இருக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டக் காரர்களுக்குச் சம்பளத்தைக் கொடுக்கும்படி அரசு சொல்லி இருப்பதால் கொடுத்தபோது அவர்கள் வேலை கொடுங்கள் எங்களுக்கு! வேலை செய்யாமல் சம்பளம் வாங்க மாட்டோம் என்றார்களாம்.இப்படியும் இருக்கிறார்கள். வேலை செய்யாமல் சம்பளம் பெற்றுக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இனி என்ன ஆகுமோ தெரியலை. எதிர்காலம் இருட்டாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் இப்போது உண்மையாகவே எதிர்காலம் என்ன என்பதே புரியவில்லை. கொரோனா என்னதான் செய்யப் போகிறதோ தெரியவில்லை. மனிதர்கள் அதோடு வாழப்பழகிக்க வேண்டும். வேறு வழியில்லை. முன்னெல்லாம் தைரியமாக வெளியே போய்க் கொண்டிருந்தோம். இப்போப் போகவே யோசனையாக இருக்கிறது.

   Delete
 4. செவிலியர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது காலத்துக்கேற்ற மாற்றம். என் வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. நான் கூடியவரை ஜூன்/ஜூலையில் வரும் மருத்துவர் தினம், செவிலியர் தினத்துக்கான வாழ்த்துகளைக் கட்டாயமாய்ச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அநேகமாய் முகநூலில் சொல்லிவிடுவதால் உங்களுக்கு அது வந்திருக்காது. இம்முறை முதலில்/காலையில் மறந்துவிட்டதால் நினைவு வந்த உடனே பதிவில் போட்டுவிட்டேன். :))))))

   Delete
 5. தமிழ்நாட்டில் ஊரடங்கு என்பது இன்றைய நிலையில் பேருந்துகள் ஓடாததும், பள்ளிகள், சில அலுவலகங்கள் இயங்காததும்தான். மற்ற எல்லாம் தளர்த்தப்பட்டு விட்டன. ஆனாலும் பேருந்து, ரயில் போக்குவரத்து திறக்கப்பட்டால் அந்த ஆபத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. உண்மையோ, பொய்யோ, திருப்பூர் ரயில் நிலையம் என்று வரும் வாட்ஸாப் வீடியோ பயமுறுத்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு அந்த மாதிரி வாட்சப்பெல்லாம் எதுவும் வருவதில்லை. ஆனாலும் நாம் கற்பனை செய்து பார்த்தாலே போதுமே! நம் மக்கள் முண்டி அடித்துக்கொண்டு மோதிக்கொண்டு சென்றே பழகியவர்கள். அவர்கள் எப்படி இதை எல்லாம் கடைப்பிடிப்பார்கள்! தெரியவில்லை.

   Delete
 6. எதிர்க்கட்சிகளின் வேலை குறை கூறுவதுதான். பின் அவர்கள் எப்படி அரசியல் நடத்த?!!

  ReplyDelete
  Replies
  1. அவங்களுக்கு ஆட்சியில் தாங்கள் இல்லையேனு குறை. அதோடு இந்த ஊரடங்குக் காலத்தில் அவங்களால் எவ்விதப் போராட்டங்களும் நடத்த முடியலைனு வேறே குறை! எப்படியேனும் (limelight) வெளிச்சத்தில் அவர்கள் இருந்து கொண்டே இருக்கணுமே!

   Delete
 7. செவிலியர் தின வாழ்த்துக்கள். அவர்கள் மனநலமும், உடல்நலமும் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்வோம்.
  கொரோனா புயல் ஓய்ந்து எங்கும் அமைதி நிலவ வேண்டும்.
  இயல்பு நிலை திரும்ப வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி அரசு. பிரார்த்திப்போம்.

   Delete
 8. எதிர் பார்க்கும் விதத்தில்தான் கருத்துக்கள் யாரையாவது குறை சொல்ல வேண்டும் அப்போதும் அரசின் பால் கரிசனம் காட்ட வேண்டும் குறிப்பிட்ட வருவவாய் இல்லாமல் அடுத்ட்க்ஹவேளை என்னசெய்வது என்று அறியாதவரெதனை தூரம் வேண்டுமானாலு நடக்க பயணிக்க தொடங்குபவரின் மனநிலை புரிய வேண்டும் ஆண்டவ்ன் அருளட்டும் ஆள்பவனும் அருளட்டும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மேலான கருத்துக்கு நன்றி.

   Delete
 9. இங்கே மானிலங்களுக்கும் தலமைக்கும் எப்பவும் லடாய். அவரது
  கட்சியாக இருந்தால் மட்டும்
  பிழைத்தார்கள்.
  ஊரடங்குக்கு இங்கே சில பேர் லட்சியமே செய்வதில்லை.

  சமீபத்தில் ஈஸ்டர் டின்னர் சேர்த்துக் கூட்டம்
  போட்டவர்கள் அனைவருக்கும் தொற்று
  பரவி இருக்கிறது.
  நாமே நம்மைம் கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால்
  யார் என்ன சொன்னாளும் தலையில் ஏறப்போவதில்லை.

  பயப்பட வேண்டாம் என்று ஒதுங்கினால் கூட மனம்வலுவிழக்கிறது.
  இறைவனே காக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது வல்லி? அரசு என்னதான் கடுமையாக நடந்து கொண்டாலும் அதையும் மீறி அனைவரும் கூட்டமாக வருகிறார்கள். டாஸ்மாக்கிற்குக் கோடியில் பணத்தைக் கொட்டிய அடித்தட்டு மக்கள் உணவுக்குக் கஷ்டப்பட்டார்கள் என்று சொல்வது முரணாக இருக்கிறது. கூட்டத்தைப் பார்த்தால் அதிகமாக அடித்தட்டு மக்கள் தான் நின்றார்கள். அப்படியும் அரசு மறுபடியும் உணவுப் பொருட்களோடு ஆயிரம் ரூபாய் பணமும் அறிவித்திருக்கிறது. வட மாநிலத் தொழிலாளர்களுக்கு ஆங்காங்கே முகாம் ஏற்பாடு செய்து தங்க வைத்து உணவும் அளித்து வந்தார்கள். அவர்களுக்குத் தான் அங்கே தங்கி இருக்க முடியாமல் சொந்த ஊருக்குப் போகும் ஆசையில் கிளம்பி விட்டார்கள். கஷ்ட காலத்தில் உறவு பக்கத்தில் இருக்கணும் என விரும்புவது தானே மனித மனம்!

   Delete
 10. செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள் .இங்கேயும் பல பிரச்சினைகள் ஓடுதுக்கா .ஆப்பிரிக்க  இந்திய செவிலியர் மற்றும் ஹெல்த் கேரரசை நைசா COVID பாதிக்கப்பட்ட அறைகளுக்கு இவர்களை அனுப்புறாங்கன்னு சொல்றாங்க .என் கணவர் வேலையை விட்டாலே ஆச்சு என்கிறார் அவ்ளோ பயம் .அவ்வளவு கேள்விப்பட்டுட்டோம் சிலவற்றை பார்த்தும் இருக்கோம் ஆனாலும் நான் செய்வது பார்ட் டைம்  ஒருமாதிரி கன்வின்ஸ் செய்து போயிட்டு வரேன் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல்! எங்கேயுமே இப்போது பிரச்னைகள் தான்! நம் நாட்டில் மட்டும் இல்லை. அதுவும் இந்தக் கொடிய நோய்க்கு மாற்றுக் கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கையில் அரசு தான் என்ன செய்ய முடியும்? தனிமைப்படுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். அதைக் கடைப்பிடித்துக் கொள்லலாமே! டாஸ்மாக் திறந்ததும் கூட்டம் அலை மோதியது! நீதிமன்றம் மூடச் சொல்லியதால் மூடப்பட்டது. ஏற்கெனவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கையிலே மக்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா?

   Delete
 11. தமிழகத்தில் நடப்பதையெல்லாம் சீரியசா யோசிச்சா நமக்கு தலைவலிதான் மிச்சம்.

  முன்னால் போனால் முட்டுவார்கள். பின்னால் போனால் உதைப்பார்கள். சைடில் போனால் கடிப்பார்கள்.

  டாஸ்மாக்குக்குக் கொடுக்க காசு இருக்கும். தொலைக்காட்சி, ஃப்ரிட்ஜ் இவைகளை வைத்துக்கொள்ள காசு இருக்கும். ஆனா ரேஷன் அரிசி, இலவச பணம் இவைகள் வேண்டும். வாக்களிக்க காசு வேண்டும். உருப்பட்ட மாதிரிதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழரே, தமிழ்நாட்டில் தானே நாங்கள் வாழ்கிறோம். அப்போ இதை எல்லாம் யோசிக்கத்தானே செய்யணும்!

   Delete
 12. வேலை விஷயத்தில் நம்மூரில் நடப்பதே இங்கும் .இப்போ பழ சீசன் இங்கே ஆப்பிள் ஸ்டராபெரி மற்றும் ஏராளமான சம்மர் பழங்கள் பழுது இருக்கு அவற்றை பறிக்க ப்ரிட்டன்ஸ் போக தயாரில்லை ஆகவே எங்க நாட்டில் இருந்து ஏழை ஐரோப்பிய நாடுகளுக்கு பிளேன் அனுப்பி வேலைக்கு அவங்களை அழைத்து வந்திருக்காங்க .ஊரடங்கு என்பதை விட ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை அடக்கி நாட்டுநிலை புரிந்து நடக்கணும் :( இங்கும் இப்போ கொஞ்சம் லாக் டவுன் ரிலாக்ஸ் செய்து அதனால் என்னென்ன பிரச்சினை வரபோதோ .உயிருடன் விளையாடுகிறார்கள் குறிப்பா அப்பாவிகளின் உயிருடன் 

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஏஞ்சல்! அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் தமிழ்நாட்டு விவசாயிகள் தவித்தனர். ஆனால் பார்த்தால் சுமார் 700 பேர் ஆண்களும், பெண்களுமாக மஹாராஷ்ட்ராவில் கரும்பு அறுவடைக்குப் போயிருக்காங்க! இப்போச் சிறப்பு ரயில் மூலம் அவங்களைத் திருச்சிக்குக் கூட்டி வந்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைச்சாங்க. அநேகமான நபர்கள் தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்தவர்களே! கும்பகோணம், நாகை, மயிலாடுதுறை என அவர்கள் ஊர்.

   Delete
 13. செவிலியர் தினத்துக்கான வாழ்த்துக் கூறுவதில் நானும் உங்களுடன் சேர்ந்துகொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நெல்லைத் தமிழரே!

   Delete
 14. நாட்டை ஆள்பவர்களை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அது இயல்பே ஆனால் ஆள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் நல்ல மனிதர்கள் அதிலும் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்து அவர்களையும் வாழ வைத்தாலே போதும் எந்த தலைவர்கள் வந்தாலும் அவர்களை சுற்றியுள்ளவர்கள்தான் அதிகம் கவனிக்கப்படுவார்கள் பலன் அடைவார்கள் . ஆனால் மக்களாகிய நாம் நமக்கு அருகில் உள்ளவர்களை நாம்தான் கவனித்து கொள்ள வேண்டும் இதில் நிறம் மதம் சாதி மொழி உள்ளேவரக் கூடாது என்பது என் கருத்து.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரியே உண்மைத் தமிழர். இங்கே நாங்க ரொம்ப முடியாதவங்களுக்கு எங்களால் ஆன உதவிகளைப் பணமாகவோ, பொருளாகவோ கொடுத்துக் கொண்டு தான் இருக்கோம். எங்க குடியிருப்பின் பாதுகாவலர்களுகு ஒரு நாளைக்கு ஒருத்தர் என்னும் விகிதத்தில் உணவு சமைத்துக் கொடுக்கிறோம். ஆங்காங்கே இப்படிச் சிலர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். வேலைக்கு வராத நாட்களிலும் வீட்டு வேலை செய்யும் பெண்மணிக்கு முழுச் சம்பளமும் கொடுத்தோம். இனியும் அவ்வாறே கொடுப்போம்.

   Delete
 15. வணக்கம் சகோதரி

  மக்களுக்காக மனிதாபிமானத்துடன் சேவைகள் செய்யும் செவிலியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  நேற்று உங்கள் பதிவுக்கு வரமுடியாமைக்கு வருந்துகிறேன். கால தாமதத்துடன் வந்தமைக்கு மன்னிக்கவும். என்னவோ வேலைகள், வேலைகளை முடித்து விட்டு பதிவுகளை படித்து கருத்துரை இடலாம் என நினைக்கும் போது குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் வேலைகள். இல்லை நெட் படுத்தல் என ஏதேதோ வந்து விடுகின்றன. குழந்தைகள் மூவருக்குமே நான்கு வயது. விளையாடும் போதே அடித்துக் கொள்கிறார்கள்.கவனமாக பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டியதுள்ளது. வெளியில் எங்கும் அழைத்துக் கொண்டு செல்ல முடியவில்லையாததால், வீட்டுக்குள்ளேயே விளையாட்டு, சேட்டை என அவர்களுடன் பொழுது போகிறது.

  தாங்கள் இப்போதுள்ள நிலையை அலசி பகிர்ந்துள்ளது சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலாகத்தான் உள்ளது. ஊரடங்கு முடியும் நேரமும் தொடங்குகிறது. பேருந்தும். ரயில் சேவையும் கணிசமான முறையில் தொடங்க ஆரம்பித்து விட்டால், மக்கள் தங்களை எப்படி பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளப் போகிறார்கள் என பயமாக உள்ளது. மக்களுக்கும் சுதந்திரமாக நடமாடத்தான் பிடிக்கிறது. அந்த வைரஸுக்கும் சுதந்திரந்தான் பிடித்தமானது. விளைவை நினைத்தால்,கவலையாகத்தான் உள்ளது. இன்னமும் அடுத்த மாதம் பள்ளி, கல்லூரிகள் எப்படி செயல்பட போகிறதோ? கடவுளை பிரார்த்தனை செய்வதை தவிர வேறு எதுவும் தோணவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, வீட்டுப் பொறுப்புகள் முக்கியம் அல்லவா? ஆகவே உங்களுக்கு நேரம் கிடைக்கையில் வந்தால் போதும். இப்போதைய நிலைமை மிகவும் கவலை அளிப்பதாகவே இருக்கிறது. விடிவு காலம் எப்போது என மனம் இன்னமும் கவலையில் ஆழ்ந்துவிடுகிறது. மக்கள் கட்டுப்பாடுகள் இருக்கையிலேயே பொறுப்பற்று நடந்து கொண்டார்கள். இனி எப்படியோ? அப்புறம் அரசைத் தான் குற்றம் சொல்வார்கள். மேலும் பணம், இன்னும் பணம் என்று கேட்பார்கள். பணத்தால் இந்த வியாதியைப் போக்க முடிந்தால் நன்றாக இருக்குமே! அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

   Delete
 16. இங்கும் இதே நிலை பல பகுதிகள் திறந்துவிட்டது .மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளப்போகிறார்கள் என்பதில்தான் அடங்கியுள்ளது .

  ReplyDelete
 17. செவிலியர்களுக்கு தினமும் வாழ்த்து கூற வேண்டும். அவர்கள்தான் இப்போது இந்தத் தொற்றின் நோயாளிகளின் அருகே சென்று சேவை செய்பவர்கள். கண்டிப்பாக தினமுமே அவர்களுக்க்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

  இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும் என்றே தோன்றுகிறது போகிற நிலமையைப் பார்த்தால். இதோடு வாழத்தான் வேண்டும் என்றுதான் சொல்லப்படுகிறது. உங்கள் தலைப்பே அதுக்குப் பொருந்திப் போகிறது. விரைவில் எல்லாம் நல்லதாக நடக்கவேண்டும் என்றப் பிரார்த்தனையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் என்று தெரியவில்லை. அப்படி இருக்கிறது நிலைமை.

  துளசிதரன்

  ReplyDelete
 18. முதலில் செவிலியர்களுக்கு நம் வாழ்த்துகள் பிரார்த்தனைகள். தினமுமே நாம் செய்யத்தான் வேண்டும். அவர்களின் சேவை சொல்லி முடியாதுதான்.

  கீதாக்கா நீங்கள் சொல்லியிருக்கும் நிலை அதே. ஊரடங்கு என்றாலும் பெரிய ஊரடங்கை ஒன்றும் மக்கள் பின்பற்றவில்லை. ஊரடங்குனு சொன்ன போதே பெருகியிருக்கு அப்படி இருக்க இப்ப தளர்த்தியாச்சு அப்ப இன்னும் பெருகும். அதுவும் ரயில் பேருந்து என்றால் நீங்க சொல்லிருக்காப்லதான். இரு தினம் முன்பு இங்கு தில்லியிலிருந்து பங்களூர் வந்த சிறப்பு ரயிலில் வந்த பய்ணிகள் ரயில்நிலையப் ஃபோட்டோ பார்த்தாலே பயமாத்தான் இருக்கு. இப்ப கர்நாடகா வெளி மானில வருகையை ஏற்க மாட்டேன் என்று சொல்லிவிட்டஹ்டு. இங்கு உள்ளுக்குள் ட்ரான்ஸ்போர்ட் அனுமதி உண்டு. அப்ப ரெட் ஜோன் ஏரியாவிலிருந்து க்ரீன் உள் வரும் போது பரவத்தான் செய்யும். எங்கள் ஏரியா இதுவரை க்ரீன். எப்போது இங்கும் உள் நுழையுமோ? கல்லூரி ஆச்ரீயர்கள் போகிறார்கள். மாணவர்கள் இன்னும் வரவில்லை. வரும் போது ஒருவருக்கு வந்திருந்தாலே அவ்வளவுதான் இழுத்து மூடுவார்களா? என்ன செய்வார்கள் தெரியவில்லை.

  இந்த வருட அட்மிஷன் என்னாகுமோ? வெளிமாநில மக்கள் வரக் கூடாது என்றால்? மாணவர்கள் அவரவர் ஊரில் இருக்கும் ஏதேனும் ஒரு காலேஜில் சேர்ந்து கொள்ள வேண்டுமா? என்ன எப்படி என்று ஒன்றும் புரியவில்லை. பல கல்லூரிகளில் சமபளம் பாதி கட். மாணவர்களின் சேர்க்கை சரியாக இல்லை என்றால் சம்பளம் எங்கிருந்து கொடுப்பார்களோ? பல ஆசிரியர்களுக்கு வேலையும் போகும் என்றும் சொல்லப்படுகிறது.

  பெருகினால் சமாளிக்க போதுமான ஆஸ்பத்திரி வசதிகள், இடம், மருத்துவர்கள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

  தளர்த்தாமலும் இருக்க முடியவில்லை. பலரது வாழ்வாதாரம். இந்தத் தொற்றோடு வாழ்வது என்றால் நம்மை நாம் ரொம்பவே தற்காத்துக் கொள்ள வேண்டியதுதான்...ஆனால் கூடவே மனதினடியில் ஒரு சிறிய பயமும் ஏற்படத்தான் செய்கிறது வண்டிகள் விட்டாலும் பயணம் எல்லாம் மிகவும் யோசிக்க வைக்கிறது.

  கீதா

  ReplyDelete
 19. எல்லா நாடுகளிலுமே இதே பிரச்சனைகள் தான் என்று தோன்றுகிறது கீதாக்கா

  கீதா

  ReplyDelete