எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 01, 2020

சிகரம்! விமரிசனம்! (நெ.தவுக்காக) தமிழ் படும் பாடு!

சிகரம் படம் இப்போத் தான் பார்த்து முடித்தேன். கில்லர்ஜி அனுப்பி நாலு நாட்கள் கழித்துத் தான் பார்க்க ஆரம்பிச்சேன். ஆனால் தொடர்ந்து பார்க்க முடியலை. மத்தியானங்களில் தான் உட்கார முடியும். சில நாட்களாகக் காலை எழுந்துக்கும்போதே ஐந்தரை மணி ஆகிவிடுவதால் காலை வேளை கணினியில் உட்காருவதை நிறுத்தும்படி ஆகிறது. பின்னர் மத்தியானம் உட்காரும்போது பதிவுகள் பார்க்க, கருத்துச் சொல்லனு நேரம் போயிடும். மாலைவேளைகளில் சில நாட்கள் கணினியில் உட்கார்ந்தாலும் படம் பார்க்க முடிவதில்லை. நடு நடுவில் எழுந்திருக்கும்படி இருக்கும். எப்படியோ இந்தப் படத்தைப் பார்த்து முடிச்சேன். "சிகரம்" படம் பற்றி ஸ்ரீராமின் ஒரு வெள்ளிக்கிழமைப் பதிவில் பேச்சு வந்ததோ?  நினைவில் இல்லை. எதுவானால் என்ன? சுட்டி அனுப்பிக் கொடுத்தார். ஒருவழியாகப் படத்தைப் பார்த்து முடித்துவிட்டேன். பாலசந்தரின் கொனஷ்டையான வக்கிரமான கதை இல்லை என்பதே சந்தோஷத்தைக் கொடுத்தது. எனக்குத் தெரிந்து எதிர் நீச்சல், நவகிரஹத்துக்கு அப்புறமா பாலசந்தர் எடுத்த எல்லாப் படங்களுமே விபரீதக் கோட்பாடுகளைக் கொண்டே இருந்தன என்று நினைக்கிறேன். இதில் புன்னகையும், கண்ணா நலமாவும் பார்த்ததுக்கு அப்புறமா பாலசந்தர் படமே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம்.

ராஜஸ்தானில் இருந்தப்போத் தமிழ்ப்படமே எப்போவானும் அதிசயமாப் போடுவாங்க! அநேகமா தினம் தினம் ஹிந்திப்படம் பார்ப்போம். சாவகாசமாப் போய்ப் பார்க்க முடியும். எல்லாவேலைகளையும் முடிச்சுட்டு! இப்போ மாதிரி அப்போவெல்லாம் இரவு எட்டரை-ஒன்பதுக்குள் படுக்க மாட்டேன். பத்தரை, பதினொன்று ஆகும். காலையும் நாலு மணிக்கே எழுந்திருப்பேன். சரி, சரி, சரி, உன் கதை எதுக்குனு கேட்பது காதில் விழுது! ஜாம்நகரில் இருக்கும்போது ஒரு பாலச்சந்தர் படம் பார்க்கப் போயிட்டுக் கடைசியிலிருந்து முதல் வரை காட்டினாங்க. ஜிவாஜியும், ரஜினியும் சேர்ந்து நடிச்ச படம் அது.  நல்லவேளையாப் பார்க்கலை முழுசா! தப்பிச்சோம்னு நினைச்சேன். அதுக்கப்புறமாக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாலசந்தர் படங்களே பார்க்கலை. அவ்வப்போது தொலைக்காட்சியில் பார்த்தவைகளே! இந்தப் படம் கவிதாலயா தயாரிப்பில் அனந்துவின் இயக்கத்தில் வந்திருக்கு. கதை, வசனம், இயக்கம் எல்லாமும் அனந்துவே!

எஸ்பிபி நல்ல தேர்வு. யாரோ ஓர் இயக்குநரின் உண்மை வாழ்க்கையோ? எஸ்பிபி உணர்ந்து நடிச்சிருக்கார். ஏற்கெனவே அவர் நடிச்ச "கேளடி கண்மணி" படம் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். அதோடு பாலசந்தர் இயக்கத்தில் வந்த "ஜன்னல்" தொடரில் லக்ஷ்மியோடு அட்டகாசமா நடிச்சிருப்பார். பிடித்த தொடர் அது! ஆகவே எஸ்பிபி நடிப்பும் பிடிக்கும். படமும் பிடித்தது. கதைனு ஒண்ணும் பெரிசா இல்லைனாலும் அதிலே நிழல்கள் ரவியை வில்லனாக் கொண்டு வந்து எஸ்பிபியின் மெட்டுக்களைத் திருட வைத்துக் கடைசியில் ஒப்புக்கொள்ள வைச்சு! எதுக்குத் திருடினார்? ஏன் ஒப்புக்கொண்டார்? திருடும்போதே மனசாட்சி உறுத்தலியா? மனித மனத்தின் பலவீனத்தைச் சுட்டிக் காட்டுவதற்கா? ரம்யா கிருஷ்ணன் பாத்திரப் படைப்பைப் புரட்சியாக எடுத்துக்கணும்னு வைச்சிருந்தாங்களோ? ஆனால் டெல்லி கணேஷ் தரக்குறைவாக நடித்திருப்பது ஆன்மிகவாதிகளையே கெட்டவர்களாகச் சித்திரிக்க ஆரம்பித்ததுக்கு  "சுக்லாம்பரதரம்" கொட்டியதும் பாலசந்தர் தானோனு நினைக்க வைத்தது.

காமிரா, ஒளிப்பதிவு, அந்த மாடர்ன் ஆர்ட் எனப்படும் சித்திரங்கள் எல்லாம் இது பாலசந்தர் படம், பாலசந்தர் படம்னு அழுத்தமாகக் கூவிக் கொண்டே இருந்தன. மொத்தத்தில் முடிவு சுபம். எஸ்பிபி பக்கவாதம் வந்து கஷ்டப்பட்டப்போ இயல்பாக நடிச்சிருந்தார். ஒரே பாட்டில் அவர் உடலைக் குணமாக்காமல் மெல்ல மெல்லத் தேறி வருவதாய்க் காட்டி இருந்ததும் யதார்த்தம். அதே போல் ஆனந்த்பாபுவையும் ஒரே முறை பேசி மனசை மாற்றவில்லை. மெதுவாகவே மாற்றுகிறார். கடைசியில் ஆனந்த்பாபுவே அப்பா எஸ்பிபியுடன் அவருடைய முன்னாள் காதலி மருத்துவர் ப்ரியாவைச் சேர்த்து வைக்கிறார். எஸ்பிபியின் காதலும், அவர் வேறொருபெண்ணுடன் கல்யாணம் செய்து கொண்ட விதமும் படக்கதையில் ஓர் எதிர்பாராத்திருப்பமாக இருந்தாலும் நல்ல வேளையாக் காதல் காட்சிகளில் டூயட் எல்லாம் வைக்கலையோ பிழைச்சோம். ராதாவின் இளமைக்குப் பொருந்தாத நடுத்தர வயது மேக்கப். ஆனாலும் அவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிச்சிருக்கார். ராதா தான் இதுக்குப் பொருத்தம் என இயக்குநர் நினைச்சிருக்கலாம். நல்லதொரு படம். இயக்கம். சுபமான முடிவு. இதை சிபாரிசு செய்த கில்லர்ஜிக்கு என் நன்றி.
*********************************************************************************

நாளை ஆடிப்பெருக்குக் கொண்டாடும் அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துகள். அனைவருக்கும் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் பெருகி வரட்டும். முடிஞ்சால் நாளைக்குக் காலம்பரக் காவிரியைப் படம் எடுக்கணும். பார்ப்போம்.
*********************************************************************************
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் இன்னமும் முகக்கவசம் இல்லாமல், ஒருவருக்கொருவர் அதிக தூரம் இல்லாமல் நெருக்கமாகவே இருக்கின்றனர். நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். இரு இளைஞர்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றும்போது காவலர்கள் பார்த்துப் பிடித்து அவர்களைத் தமிழில் சில கேள்விகள்/எளிமையான கேள்விகள் தான். கேட்கின்றனர். இருவருக்கும் பதிலே தெரியவில்லை. அவங்க கேட்டது "ஆயுத எழுத்து" என்றால் என்ன? என்பது தான். நல்லவேளையா அது ஒரு படம்னு சொல்லாமல் இருந்தாங்க. அல்லது அந்தப் படம் வந்ததே அவங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆயுத எழுத்து எத்தனை எனக் கேட்டதற்கு ஓர் சிறுவன்/இளைஞன் 468 என்கிறார். இன்னொருத்தரோ தமிழ் எழுத்துக்கள் 468 என்றார். கடைசியில் ஒருத்தரை அ,ஆ, கடைசி வரை சொல்லுனு கேட்டதுக்கு நல்லவேளையா (எனக்கு என்னமோ திக் திக் தான்) ஒரு பையர் சரியாகச் சொல்லிவிட்டார். கடைசியா "அக்கன்னா" என்று சொல்லவும் அந்தக் காவலர் "இப்போச் சொன்னியே கடைசியா! அதான் ஆயுத எழுத்து! " என்றார். நல்லவேளையா அதை எங்கெல்லாம் பயன்படுத்தலாம்னு கேட்கலை. பிழைச்சாங்க அந்த இளைஞர்கள். இந்த அழகில் தமிழ்நாட்டில் தமிழ் பேசி, எழுதி, தேர்வு எழுதி "எல்லோரும் பாஸ்" வாங்கறாங்க. இத்தனைக்கும் அந்தச் சிறுவர்கள் இருவரும் +2 ஆர்ட்ஸ் க்ரூப்பில் படிக்கிறாங்களாம். பார்த்தால் பெரிய வசதியான குடும்பம்னு ஒண்ணும் தெரியலை. வெகு சாதாரணமான கீழ் மத்தியதரக்குடும்பமாய்த் தான் தெரிகிறது. பணக்காரச் சிறுவர்கள் எனில் ஆங்கில மீடியத்தில் படிச்சிருப்பாங்க. தமிழ் தெரிந்திருக்காதுனு சொல்லலாம். அப்படி எல்லாம் இல்லை.  இதுக்கே தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நல்லா இருக்குனு சொல்லிக்கிறாங்க. நல்லா இருக்கும்போதே இப்படின்னா! கேட்கவே வேண்டாம். இதிலே தேர்வே வைக்காமல் எல்லோரையும் பாஸ் போடச் சொல்வது தான் இன்னமும் வேடிக்கை.

61 comments:

 1. பண்டிகைல பிஸியா இருக்கீங்க, அல்லது பாவம்..கண்ணுக்கு ரெஸ்ட் கொடுக்கறாங்க போலிருக்குன்னு நினைத்தால் சிகரம் படம் பார்த்திருக்கீங்க. விரைவில் குலேபகாவலி, பாக்தாத் திருடன், ஹரிதாஸ், இன்னும் அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்து விமர்சனம் எழுதிடுங்க. (இந்த நேரத்துல அந்த நம்பெருமாள் தொடரை முடிக்கலாம் என்பது என் ஆலோசனை. எங்க நீங்க கேட்கறீங்க? நீங்க எழுதலைனா வேற யார் அந்தச் சரித்திரத்தை ஆரம்பத்திலிருந்து எழுதப் போறாங்க? அதெல்லாம் மின்னூலா வந்ததுனா நாலு பேருக்கு உபயோகம். நானும் முயற்சி எடுத்து படங்களையெல்லாம் கலெக்ட் பண்ணித் தருவேன். நல்ல மின்னூலா உங்க பேர் சொல்லும்படி அமையும். செ கா ஊ ச ஆகிறதே என்பது என் வருத்தம். Capable person to do that job)

  ReplyDelete
  Replies
  1. நெல்லை! உங்க வருத்தம் புரிகிறது. சில தகவல்களை எழுதினால் நான் காப்பி அடிச்சாப்போல் ஆயிடும். அதான் தொல்லை! அதான் எப்படிக் கொண்டு போவோம்னு யோசிக்கிறேன். வேறே புத்தகங்களும் கிடைக்கலை. நாலைந்து வருஷம் முன்னால் "கோயிலொழுகு" ஆடியோவில் கிடைச்சது. இணையம் மூலமே அதைக் கேட்டுக் கொண்டு எழுதி இருக்கேன். இப்போ அதெல்லாம் இல்லை. எனக்கு அது நினைவில் இல்லைனு எல்லாம் இல்லை. அதைக் கொஞ்சம் ஒழுங்காகச் செய்யணும்னு ஆசை!

   Delete
  2. பண்டிகை தான் இந்த வருஷம் இல்லையே! :( அதை விடுங்க! அதைச் சொல்லிட்டே இருக்க வேண்டாம்னு தான் சொல்லலை. பிசைந்த சாதம்லாம் யாரானும் கொடுத்தால் தான்! இதே அம்பத்தூர் எனில் அண்ணாவீடு, நாத்தனார் வீடு, எதிர் வீடு, பக்கத்து வீடுனு வந்துடும். குழந்தைங்க இருக்கிறச்சே அவங்களுக்குக் கையிலே கொடுக்கும்போது கூடச் சாப்பிடும்குழந்தைகள், அவங்களோடு ரயிலில் கூட வரும் ஆசிரியர்கள்னு கொடுத்தனுப்புவேன். இப்போ இரண்டே பேர் தானே! சாஸ்திரத்துக்கு எலுமிச்சை சாதம் பண்ணிடுவேன். வெறும் சாதத்திலேயே பாலைவிட்டுச் சர்க்கரை போட்டு மசித்துப் பாயசம்னு பண்ணிடுவேன். எலுமிச்சைச் சாதம் அடிக்கடி குழம்பு வைக்காமல் மாற்றாகப் பண்ணிண்டே இருப்பது தானே! அதனால் நாளைக்கும் அது போதும்! :)))))

   Delete
  3. மாறுதலுக்கு தேங்காய் சாதம் பண்ணக்கூடாதா? எப்போதும் எளிய எலுமி சாதம்தானா?

   Delete
  4. //சில தகவல்கள் எழுதினால் நான் காப்பி அடிச்சாப்போல் ஆயிடும் // - நல்லவேளை உங்களை சரித்திரப் புத்தகங்களை design செய்யும் இடத்தில் தலைவராகப் போடலை. போட்டால், ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினான் என்று எழுதினால், காப்பி அடிச்ச மாதிரி ஆயிடும், அதனால் ஷாஜஹானுடைய பையன் அவுரங்கசீப் கட்டினான் என்று எழுதுவீங்க போலிருக்கு. சரித்திரத்தை நீங்க மாற்ற முடியாது. உங்க பாணில எழுதுங்க. அதுவும்தவிர, சரித்திர நிகழ்வுக்கு யார் சொந்தம் கொண்டாட முடியும்?

   நொ ச சா என்று மனசுல தோணுவதை அடக்கி வைக்கிறேன். உங்க தயக்கத்தைப் போக்கி எழுதும் உத்வேகத்தை மனது தரணும் என்று ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.

   Delete
  5. நொ ச சா - வை வாபஸ் வாங்கிக்கறேன். Not relevant

   Delete
  6. நல்லவேளையா நொ.ச.சா.வைத் திரும்பப் பெற்றீர்கள். அதில் பிழை இருக்கு. நொ.கு.ச.சா. என்றல்லவோ வரணும்! ராத்திரியே பதில் சொல்ல நினைச்சு அதுக்குள்ளே பெண்ணும், குஞ்சுலுவும் அடுத்தடுத்து வந்துட்டாங்க! :))))))

   Delete
  7. தேங்காய்ச் சாதம் பண்ணலாம். மாமாவுக்கு அவ்வளவாப் பிடிக்காது. அதோடு 2,3 சாதம் பண்ணினால் பண்டிகை கொண்டாடினாப்போல் ஆயிடாதோ? இதுன்னா பண்டிகையைக் கொண்டாடாமல் சாஸ்திரத்துக்கு ஏதோ பண்ணினாப் போல் இருக்கும். அதான்! :))))) என் அப்பா, என் ஓர்ப்படியின் அம்மா இன்னும் சில பெரியவங்க எல்லாம் ஒரு வருஷம் ஒண்ணும் பண்ணலைனா அடுத்தடுத்து 3 வருஷங்கள் தட்டிப் போயிடும் என்று சொல்லிச் சிறிய அளவிலாவது சுவாமிக்குப் பண்ணிடணும் என்பார்கள். இதிலே என் அப்பா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். :)))))))

   Delete
  8. தாஜ்மஹால் பத்தி எழுதப் போனாப் பக்கம் பக்கமா எழுதும்படி ஆயிடும். அத்தனை விஷயங்கள் சேகரிச்சு வைச்சிருக்கேன். எதுக்கு வம்பு? நீங்க சொன்னதை நினைத்துக் கொண்டு தான் இருக்கேன். விரைவில் தொடரப் பார்க்கிறேன்.

   Delete
  9. தாஜ்மஹல் -தேஜோமஹாலயா - மேல தாமரை, கீழ இரண்டாம் தளம் மூடப்பட்டு யாருக்கும் அனுமதி இல்லாமல் காக்கப்படுகிறது (ஆலயத்துக்கான மிச்சங்கள் இருப்பதால்), அந்த இடத்தை ஆக்ரா கோட்டையிலிருந்து பார்க்க முடியும் என்பதால் இடத்துக்குச் சொந்தக்கார்ரிடமிருந்து வாங்க (கட்டளை பிறப்பித்து) மாற்று இடம் கொடுக்கப்பட்டது..இன்னும் விரிவாக நாங்களும் படிச்சிருக்கோமுல்ல

   Delete
 2. //இரவு தூங்க பத்தரை-பதினொண்ணு ஆகும் // - பஹ்ரைன்ல இருந்த போதும் நண்பர்கள் எல்லோருக்கும் ஆச்சர்யமா இருக்கும், 7 மணிக்கு சாப்பிட்டுட்டு 9 மணிக்கு தூங்கிடுவேன் என்று சொல்வது. அவங்களுக்கெல்லாம் சாப்பாடே 9 1/2 க்குத்தான். ஆனா குறைவா தூங்குவதும் நல்லதல்ல.

  இந்த ஊர் வந்தப்பறம் அந்த டிஸிப்பிளின் போயிடுச்சு. காலைல கடந்த ஒரு மாதமா, 6 மணிக்கு முன்னால எழுந்துகொள்ள சோம்பேறித்தனமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நெல்லை, அப்போ பிஜி டிப்ளமா கோர்ஸ் ஹிந்தியிலே வேறே பண்ணிண்டுஇருந்தேன். தபால் மூலம் தான். நாமே படிச்சுக்கணுமே! புத்தகங்கள் எல்லாம் கிடைப்பது கஷ்டம். என் நாத்தனாரிடம் சொல்லி தெரிந்தவர்களிடம் இருந்தால் வாங்கிப்பேன். வேலை எல்லாம் முடிச்சு நானும் எடுக்கும் ட்யூஷன் முடிச்சு ராத்திரி ஒன்பது மணிக்குத் தான் நான் படிக்கும் நேரமே. குழந்தைகள், மாமனார், மாமியார், மாமா எல்லோரும் தூங்குவாங்க. சின்ன டேபிள் லாம்பை வைத்துக் கொண்டு அவங்களுக்கு வெளிச்சம் வராமல் படிப்பேன். இல்லைனா சமையலறையிலேயே உட்கார்ந்து படிச்சு முடிச்சுட்டுப் படுத்துக்க வருவேன். இப்போல்லாம் நினைச்சால் ஆச்சரியமா இருக்கு. இதோடு சேர்த்து மத்திய அரசின் சார்பில் சிறு சேமிப்பு முகவராகவும் இருந்தேன். காலை வீட்டு வேலையை முடிச்சுட்டுப் பத்துமணிக்குக் கிளம்பினா திரும்பி வர சில நாட்கள் 2 மணி கூட ஆகும். வந்து அரை மணி நேரம் உட்கார்ந்து ஏதேனும் புத்தகம் படிச்சுட்டு மத்தியான டிஃபன், காஃபி, குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்வதுனு நாலு, நாலரை வரை சரியா இருக்கும். குழந்தைகள் வந்ததும் அவங்களுக்குச் சாப்பிடக் கொடுத்து அவங்க பள்ளிப் பாடங்களைக் கவனித்துப் படிக்க வைத்தால் ஐந்தரைக்கு எனக்கு ட்யூஷனுக்கு வருவாங்க. ஆறரை மணிக்கு மாமா வரும் வரை அது நடக்கும். பின்னர் இரவு உணவு தயாரித்தல், சாப்பாடு, வீடு சுத்தம் செய்தல்னு சரியா இருக்கும். இப்போல்லாம் நினைச்சால் முடியுமானு சந்தேகமே!

   Delete
 3. தமிழ்நாட்டு கல்வித்தரம் - நிஜமாவே பணம் இருக்கறவங்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. பணமில்லாமல், படிப்பில் கவனமில்லாமல் இருக்கறவங்களுக்கு மிக எளிமையாகவே ஒண்ணும் தெரியாமலேயே பி.ஜி வரை பட்டம் கிடைச்சுடுது. இதுதான் உண்மையான நிலை. நான் முன்னமே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாகர்கோவில் பக்கத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினீயரிங் படித்த பையன், ஒரு மளிகைக் கடையில் பஹ்ரைனில், சாமான் எடுத்து வைக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். நான் பாவப்பட்டு எங்க கம்பெனியில் வேலை கொடுக்கலாம் என்று நினைத்து (நான் எளியவர்களுக்கு மட்டும்தான் உதவ எண்ணுவேன். அதில் எந்த காரணியும் குறுக்க வராது, சாதி, மதம் என்ற எதுவும். அதில் நான் ரொம்ப ஸ்டிரிக்ட். நான் தமிழ் என்பதால் தமிழில் பேசி கவரலாம் என்று நினைப்பவர்களிடம் நான் தமிழிலேயே பேசமாட்டேன் - vendorகளிடம்) அவனைக் கூப்பிட்டு பேசினால், பயலுக்கு ஒண்ணுமே தெரியலை. என்ன செய்ய?

  இதுதான் தமிழக எஜுகேஷன் நிலைமை.

  ReplyDelete
  Replies
  1. அதைப் பற்றி ஒண்ணுமே கேட்காதீங்க! நான் சில காலங்கள் ட்யூஷன் எடுத்திருப்பதால் தரம் நன்றாகத் தெரியும். முக்கியமாய்த் தமிழ் மொழிப்பாடத்தின் தரம்! :(

   Delete
 4. //ஆயுத எழுத்து// - படம்னு கரெக்டா சொல்றீங்களே.... பாராட்டுகள். முதல் முறையாக எங்க ஜெனெரேஷன்ல உள்ள ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லியிருக்கீங்க. உங்க செனெரல் நாளட்ஜுக்கு பிடிங்க ஒரு பூங்கொத்து. ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, இப்போப் பிரபலமாகப் பேசும் "ட்ரான்ஸ்" படம் பத்தியும் தெரியுமே! ஆனால் இன்னும் பார்க்கலை. அமேசானில் பணம் கட்டிப் பார்க்கணுமாம். வேறே வேலை இல்லையானு விட்டுட்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓசின்னாப் போனால் போகுதுனு பார்த்து வைக்கலாம்!

   Delete
 5. நாளைக்கு என்ன மெனு? நான் கலவை சாதம் பண்ணச் சொன்னால், என் மனைவி, எனக்குப் பிடித்த எள் சாதம்லாம் பண்ணக்கூடாது என்கிறாள். அனேகமா 4 கலவை சாதம் (உங்க தயிர் சாதம் உட்பட), அவியல் செய்ய வாய்ப்பு இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், மெனு தான் மேலே சொல்லிட்டேனே! எள் சாதம் தித்திப்புப் போட்டது நானும் சாப்பிட்டு வெகு காலம் ஆச்சு. சிமிலி உருண்டைக்குனு எள் வறுத்து அரைக்கணும்னாலே யாருக்கும் புரியறதில்லை. நவராத்திரியில் சனிக்கிழமை எள்+வெல்லம்+தேங்காய் சேர்த்து அரைத்து ஏலக்காய் போட்டு உருண்டையாகக் கொடுக்கலாம். அல்லது எள் சாதம் பண்ணி நிவேதனம் பண்ணலாம்.

   Delete
 6. இன்றைய பதிவு பாலசந்தரின் வக்கிரங்களையும் தமிழ் மக்கள் தமிழைப் படுத்தும் பாட்டையும் பட்டியலிட்டதாக அருமை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை. தமிழ்த்திரைப்படங்களின் வக்கிரமான போக்குக்கும், ஆன்மிகவாதிகளைக் கேலி செய்து படம் எடுத்ததுக்கும் பாலசந்தர் தான் மூலகர்த்தா! புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு சமூகத்துக்குக் கேட்டைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.

   Delete
  2. அவர் பெண் புஷ்பா கந்தசாமி பேட்டியைப் பார்த்தேன். அவங்க சொல்றாங்க. பாலசந்தர், தான் கண்ட, நெருக்கமாகக் கேட்ட கதைகளைத்தான் எடுத்தாராம். நல்லவேளை வீட்டில் நடந்தது என்று முதலிரவை வைத்து முழுப்படம் கொடுக்கலை.

   சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பவைகளை சினிமாவாக்குவதே வக்கிர எண்ணம்தான். சமீபத்தில் ஒரு டாகுமெண்டரி படம் (அதற்கு ரேட்டிங் பத்துக்கு 8) பார்க்க ஆரம்பித்தேன். நம் உடல் மீது இருப்பவைகளை மைக்ரோஸ்கோப் கொண்டு பெரிதாக்கி என்ன என்ன பாக்டீரியாக்கள், பூச்சிகள் இருக்கு என்றெல்லாம் விளக்கமாக. 5 நிமிடங்களில் படத்தை க்ளோஸ் செய்து டிலீட் செய்துவிட்டேன். அது எனக்கான படம் அல்ல என்று புரிந்து.

   சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், to some extend சிந்து பைரவி போன்ற நல்ல படங்களும் அவர் எடுத்திருக்கிறார்.

   Delete
  3. சிந்து பைரவி ஒரு படமா? பாடல்களை மட்டும் வேணாச் சேர்த்துக்கலாம். பெண்களையே அவமரியாதை செய்த அவமதிப்புச் செய்த ஒரு படம். கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்வதை அங்கீகரித்த படம். இரண்டு மனைவிகளை அல்லது ஒரு மனைவியோடு ஒரு காதலியை ஒருத்தன் வைத்துக்கொள்ளலாம், அதுக்கு அவன் பிரபலமான பாடகன் ஆக இருந்தாலும் நல்லது என்றெல்லாம் மக்கள் மனதில் விதைத்த படம்! தொலைக்காட்சியில் இந்தப் படம் போட்டப்போ நான் அறைக்குள் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். கேபியின் படம் எடுக்கும் திறன் நவகிரஹம் படத்துக்கு அப்புறம் வீணாகப் போனது தான் மிச்சம். வக்கிரமான எண்ணங்களை நிஜத்தைச் சொல்கிறேன் என்னும் பெயரில் மக்கள் மனதில் தாராளமாக விதைத்தார். அதற்கான அறுவடை தான் இப்போ ஆகிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் முறையில்லாக் காதல், பெண்களுக்குத் துன்பம் என்பது அன்றாடம் நடக்கும் நிகழ்வாக, தினசரி நரகமாகி விட்டது.

   Delete
 7. அட... நல்லதொரு விமர்சனம்...

  அகரம் இப்போ சிகரம் ஆச்சு...!
  தகரம் இப்போ தங்கம் ஆச்சு...!
  காட்டு மூங்கில் பாட்டு பாடும்
  புல்லாங்குழல் ஆச்சு...!

  சங்கீதமே சன்னிதி…
  சந்தோசம் சொல்லும் சங்கதி...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு தனபாலன்.

   Delete
 8. சிகரம் படத்தின் விமர்சனம் அருமை இதன் மூலம் மீண்டும் தியேட்டரில் 100 நாட்கள் ஓடட்டும். வாழ்த்துகள்.

  நானொரு பதிவு எழுதிக் கொண்டு இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மாதங்கள் 12-ன் பெயரை சொல்லத் தெரியவில்லை.

  கேட்டால் தமிழ் வாழ்க! என்பார்கள்.

  எனது பதிவால் மற்றொரு பதிவு விளைந்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, படம் வெளிவந்தப்போ நீண்ட நாட்கள் ஓடியதா? அப்போ நாங்க குஜராத்தில் இருந்தோம். ஆகையால் தெரியாது. விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன். இல்லைனா வெளியிட்டு விட்டீர்களோ என்றும் பார்க்கணும். வரேன் உங்க பதிவுக்கு.

   Delete
 9. அவ்வப்போது சிந்து பைரவியின் பாடல் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பேன்... முழுப்படமும் வெளியான சமயம் பார்த்தது...

  மறுபடியும் ஒருதரம் பார்க்கலாம் என்று நேற்று உட்கார்ந்தால் JKB யின் எண்ணம் புரிந்து சுதாரித்துக் கொள்ளும் சிந்து ஏதோ குவாக்.. குவாக்.. என்று வஜனம் (வசனம்) பேசிக் கொண்டு இதுவாக அல்லவா சகதியில் விழுகிறது!..

  என்ன நியாயம் இது?...

  பெண்டாட்டிக்குத் துரோகம் செய்த ஒருவன் கலைவாணியை அழைக்கும் கொடுமை வேறு..

  அந்த ஜடம் பைரவி கேணியில் விழுகிறதோடு அடப் போங்கடா!.. - என்றிருந்தது...

  அதற்கப்புறம் பார்க்கவில்லை..
  கிராமங்களில் சொல்லும் பழமொழி ஒன்று நினைவுக்கு வந்தது...

  அந்த காலகட்டத்தில் இதே மாதிரி வேறு இரண்டு படங்கள் வெளியாகி மக்கள் மனதில் விஷத்தை விதைத்தன...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, இந்தப்படம் வெளிவந்தப்போவே விமரிசனங்கள் படித்துவிட்டுப் பிடிக்கலை. ஒரே கோபம், ஆத்திரம், ஆற்றாமை. ஆனாலும் பலரும் பாராட்டினாங்க! இப்படி ஒருத்தன் நடந்துக்கறதையும் ஆதரிக்கும் மனம் வரும் அளவுக்கு மக்கள் ஒழுங்கு, கட்டுப்பாட்டிலிருந்து விலகி விட்டார்கள் என்பது புரிந்தது. நாளாக ஆக இன்னும் அதிகமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.

   Delete
 10. ஹிந்திப் படம்தான் பார்ப்பேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்.  அங்கும் குறிப்பான சில படங்கள் சிறப்பாக இருக்கும்.  மற்ற மசாலா படங்கள் கதைகள் வெகு குழப்பமாக இருக்கும்.  எங்கு திரும்புகிறது, யாருக்கு யார் உறவு என்றெல்லாம் திடுக்கென திரும்பும்!

  ReplyDelete
  Replies
  1. தமிழ்ப்படங்களும் பார்த்ததை விமரிசித்திருக்கிறேனே ஸ்ரீராம். அது எந்த மொழியானாலும் தேர்ந்தெடுத்த சில படங்கள் தான் பார்க்கும்படி இருக்கும். மற்றபடி ஹிந்தியில் வரும் எல்லாப் படங்களையும் பார்த்தது என்பது ராஜஸ்தானில் இருந்தப்போத் தான். அங்கே ராணுவ வீரர்களுக்காக தினம் ஒரு படம் போடுவாங்க. சில நாட்கள் நல்ல படம் இல்லை என்றால் அப்போதும் போக மாட்டோம். ஆனால் பெரும்பாலும் படம் இலவசம் தானே என்பதால் போய் உட்கார்ந்துட்டும் வந்திருக்கோம். அவை எல்லாம் நினைவில் இல்லை.

   Delete
 11. சிகரம் படத்தை விடுங்கள்.  பாடல்கள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.  உன்னைக்கண்ட பின்புதான் எனும் பாடல் இருமுறை வெவ்வேறு டியூனில் வரும்.  இதோ இதோ உன் பல்லவி பாடலும், அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடலும் படத்தின் சிறப்புப் பாடல்கள்.  இசை எஸ் பி பாலசுப்ரமணியம்.

  ReplyDelete
  Replies
  1. பாடல்கள் பற்றித்தானே உங்கள் பதிவு ஸ்ரீராம்? அதைப் பார்த்துத் தான் நான் கேட்டதாக நினைவு. ஆகவே ஒன்றும் சொல்லவில்லை. ஆனாலும் மற்றப் படங்கள் பாடல்களுக்கு என்றே வந்தவற்றை விட இவற்றில் கொஞ்சம் குறைவே! பொதுவாகப் பாடல்கள் நன்றாக இருந்தன. எஸ்பிபியின் திறமைக்குக் கேட்கணுமா? இசை எஸ்பிபி என்பதை டைட்டிலே சொல்லுமே!

   Delete
 12. ஆடிப்பெருக்கு வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்களும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம், உங்கள் வீட்டில் இப்போ சுறுசுறுப்பாகச் சமையல் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆடிப்பெருக்குக் கலந்த சாத வாழ்த்துகள். சிறப்பாகப் புளியோதரைக்கான வாழ்த்துகள். உங்க பாஸ் செய்யும் புளியோதரையை ருசித்து இன்புறுங்கள்.

   Delete
 13. லாக் டவுன் தொடர்வதில் இந்த ஞாயிறு மகா சள்ளை.  கம்ப்ளீட் லாக் டவுன் என்கிற பெயரில் பணிக்குச் செல்லும் என் போன்றோரின் உயிரை வாங்குகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வேலைக்குப் போகிறவர்களின் சிரமங்கள் அதிகம் என்றால் வீட்டில் இருப்பவர்களுக்கு வேறு மாதிரிக் கஷ்டங்கள்.

   Delete
 14. சிகரம் படம்.. பாலசந்தரா! நல்ல படமா. சரி.

  பாலசந்தர் திறமையான இயக்குனர் என்பதை அவரது ஆரம்பப்படங்கள் சொல்லும். ஆனால் வித்தியாசமாக, புரட்சிகரமாக எடுப்பதாக நினைத்து, தன்னுடைய ரெப்யுடேஷனை இன்னும் பில்டப் செய்வதாக எண்ணி, பிற்காலத்தில் சொதப்பிவிட்டார். சிந்துபைரவியை டிவி-யில் பார்த்திருக்கிறேன். சிவகுமாரின் ’நடிப்பு’ ஒரு கோமாளித்தனம். சுஹாசினியை வேஸ்ட் பண்ணிவிட்டார்கள். பாலசந்தரின் ’படைப்பு’ என்றால் இது அபத்தம். அவர் என்ன சொல்ல நினைத்தார், என்ன சொன்னார்? சங்கராபரணத்தைத் தோற்கடிக்கப் பார்த்தாரா - சிவகுமாரை பிரதான ரோலில் வைத்துக்கொண்டு! சகிக்கல..

  ஒழுக்கக்கேடையும், மன வக்கரிப்புகளையும் பெரும் சித்திரம் போன்று காண்பிக்க முயல்வது இப்போதும் சில இயக்குனர்களின் வேலை. அவர்களுடைய அரைவேக்காட்டு அரிவுசீவித்தனத்தை வேறு எப்படிக் காட்டுவது? இந்த மாதிரி ஆசாமிகள்தான் தமிழ்ச்சமூக ஒழுக்க மதிப்பீடுகளைக் காவு வாங்கியவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஏகாந்தன். வக்கிரமான நடன அசைவுகள் இருக்கின்றன தான்! அதிலும் தலைப்புப் பாடலிலேயே மிக மோசமான நடன அசைவுகள். என்றாலும் படத்தில் வக்கிரமான உணர்வுகளைக் காட்டவில்லை. நிழல்கள் ரவி கூட வில்லன் என்றாலும் மனசாட்சி உள்ள வில்லன். சிவகுமார் "சிந்து பைரவி" படத்தில் நடிச்சதன் மூலம் தன் மதிப்பைக் கெடுத்துக் கொண்டார் என்பது என் எண்ணம். சங்கராபரணத்தோடு ஒப்பிட முடியுமா இதை? அது காவியம்! க்ளாசிக்!

   Delete
 15. என்னதான் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் மட்டுமே இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும் என்பது என் எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரியே முனைவரே! மக்கள் எல்லாவற்றிலும் மனம் மாறணும். இல்லைனா கஷ்டம் தான்.

   Delete
 16. ஆடிப் பெருக்கு வாழ்த்துகள் கீதாக்கா. காவிரில தண்ணி ஒடுகிறதுதானே. படம் வரலையே என்று பார்த்தேன்.

  ஆடிப் பெருக்கு என்றாலே ஆற்றில் நீர்! எனக்கு என் கிராமத்து நினைவுகள் வந்துவிடும். ஊரில் இருந்தவரை மாலையில் தான் கலந்த சாதம் கட்டிக் கொண்டு (மதியத்திலிருந்து தயாரிப்பு தொடங்கிவிடும்) அதிய எல்லாம் பெரிய கேரியரில் வைத்துக்க் ஒண்டு தட்டம் கரண்டி என்று கிராமம் முழுவதும் எல்லாரும் சொல்லி வைத்துக் கிளம்புவோம். கல கலன்னு இருக்கும் ஆற்றங்கரை சென்று அங்கு எல்லொரும் பகிர்ந்து கொண்டு - ஒரே வகை சாதமாக இருக்கலாம் அனாலும் ஒவ்வொருவரின் தயாரிப்பும் அவர்களின் அன்பும், கதைகளும் சில சமயம் கண்ணில் நீரே வந்துவிடும் எனக்கு. அந்த அளவு ஜாலியாக இருக்கும். திருவனதபுரம் கூட கிட்டத்தட்ட கிராமத்து வாழ்க்கை போலதான். அதுவும் கோட்டைக்குள் என்பதால்.

  அதன் பின் நகர வாழ்க்கை. என்பதால் இதற்கெல்லாம் சான்ஸே இல்லாமல் போய்விட்டது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அட! காலம்பரப் போய்ப் படம் எடுக்கணும்னு நினைச்சேன். ஆனால் மறந்துட்டேன். அதோடு குஞ்சுலு வேறே தூங்கும் முன்னர் பார்க்கணும்னு வந்தது. பின்னர் வீட்டு வேலைகள், சரியாப் போச்சு. முடிஞ்சால் சாயந்திரமாப் போய்ப் படம் எடுக்கப் பார்க்கிறேன். நாங்க கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு ஊர்களுக்குப் போனதெல்லாம் எனக்குக் கல்யாணம் ஆனப்புறமாத் தான். பிறந்த வீட்டில் இருந்தவரை எங்கேயும் போக முடியாது. அம்மா வந்தால் கூட எங்கானும் போகலாம். அதுவும் அப்பா அனுமதித்த இடங்களுக்கு மட்டும்.

   Delete
  2. படங்கள் எடுத்துட்டு வந்திருக்கேன். நிலாவைப் படம்பிடிக்கணும்னு சாயங்காலமாப் போனால் ஒரே மேக மூட்டம். நிலா ஒளிந்து கொண்டு வெளியேவே வரலை. :(

   Delete
 17. லாக் டவுன் என்றதும் சிரிப்புதான் வருது கீதாக்கா. எல்லோரும் தெருவில் அதுவும் இடைவெளி பாராமல் இருப்பதாகத்தான் நான் பார்க்கும் வரையில் தெரிகிறது. நான் கடைக்குச் சென்றால் யாரேனும் உள்ளே இருந்தால் நான் உள்ளே போவதில்லை. நான் வெளியில் காத்திருப்பேன். காய் கடைகள் எல்லாம் சிறிது. ஆனால் நம் பின்னே வருபவர்கள் உள்ளே நுழைந்து கொண்டே இருப்பார்கள். கடைக்காரர்களும் எதுவும் சொல்வதில்லை எனவே நான் வாங்காமல் வந்துவிடுவேன் ஹா ஹா ஹா.

  எந்த விதக் கட்டுபாடுகளும் பின்பற்றப்படுவதிலலி பல இடங்களில்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எங்க வீட்டில் வேலைகளில் உதவும் பெண்மணியிடம் மாஸ்க் கட்டாயம் என வற்புறுத்தி இருக்கேன். ஆனாலும் அவர் பேசும்போது மாஸ்கைக் கீழே தள்ளிட்டுப் பேசுகிறார். என்னத்தைச் சொல்வது! நான் குறைந்தது ஐந்தடி தள்ளி நின்று கேட்டுக் கொள்வேன்.

   Delete
 18. சிகரம் படம் பார்த்திருக்கிறேன். உங்கள் விமர்சனம் கண்டும் கதை அத்தனை நினைவில்லை. கொஞ்சம் பசபசபபகத்தான் நினைவிருக்கு

  பாடல்கள் எஸ்பிபி இசையமைப்பில் நன்றாக இருக்கும் எல்லாப் பாடல்களுமே சிறப்பாக இருக்கும். வண்ணம் கொண்ட வெண்நிலவே மெட்டில்தான் நம்ம கில்லர்ஜி தொற்றை பற்றி பாடல் எழுதியிருந்தார்!!!!! அப்படித்தான் உங்களுக்கு இந்தப் படம் லிங்க் வந்ததா!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வண்ணம் கொண்ட வெண்ணிலவே! மெட்டா அது? கில்லர்ஜி சொன்னார்னு நினைவு. ஆனால் எதில், எங்கே, எப்போனு நினைவில் வரலை. நினைவூட்டியதுக்கு நன்றி. கில்லர்ஜி தான் லிங்க் கொடுத்தார். நானாகத் தேடிப் பிடித்துப் பார்க்கச் சோம்பல்! ஏஞ்சல் அனுப்புவாங்க. வல்லி அனுப்புவாங்க. இப்போக் கில்லர்ஜி!

   Delete
 19. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் சகோதரி. நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து மக்களுக்கு ஆனந்தம் கொடுப்பதைப் போல இந்த கோவிட் டும் அடித்துச் செல்லப்பட்டு மக்களுக்கு ஆனந்தம் கொடுக்க வேண்டும்

  சிகரம் படம் பார்ததில்லை. உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன். உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும். சிகரம் படம் நன்றாகவே இருந்தது. ஆனாலும் பார்த்துத் தான் ஆகணும்னு எல்லாம் இல்லை. பாராட்டுக்கு நன்றி.

   Delete
 20. சிகரம் படம் பார்த்து இருக்கிறேன்.
  பாட்டுக்கள் நினைவு இருக்கிறது படம் அவ்வளவாக நினைவு இல்லை.
  இரண்டு இசை அம்மைப்பாளர்களிடையே மோதல் என்று நினைவு இருக்கிறது.
  சார்லிதானே அகரம் இப்போ சிகரம் ஆச்சு! பாடல் பாடுவார்?

  பாலசந்திரன் படத்தில் எதிர்நீச்சல், நவக்கிரகம், தில்லு முல்லு படங்கள் பிடிக்கும்.

  ஆடிப்பெருக்கு வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி. "சிகரம்"னு படம் வந்ததே கில்லர்ஜி சொல்லித் தான் தெரியும். பொதுவாகப் படங்கள் பிரபலமானவை அல்லது பிரபலமான நடிகர்கள் நடித்தது குறித்துத் தெரிந்த அளவுக்கு எல்லாப் படங்களைப் பற்றியும் அறிந்ததில்லை. பாலசந்தர் படங்களில் தில்லு முல்லு, நீர்க்குமிழி எல்லாம் அப்பட்டமான ஹிந்திப்படங்களின் காப்பி. ரிஷிகேஷ் முகர்ஜியின் படங்களை அப்படியே காப்பி அடித்திருப்பார். இல்லைனா அதுவும் சொதப்பி இருக்கும்.

   Delete
 21. சிகரம் படப் பாடல்கள் கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நன்றி.

   Delete
 22. வணக்கம் சகோதரி

  ஆடிப் பெருக்கு வாழ்த்துகள். தங்களுக்கு இந்த வருடம் பண்டிகை கிடையாது என்றாலும் மொட்டை மாடிக்குச் சென்று. அன்னை காவிரியை தரிசித்து மனதாற உலகம் நலம் பெற பிரார்த்தித்துக் கொண்டிருப்பீர்கள்.தவிரவும் உங்களுக்கு வீட்டின் அன்றாட வேலைகளே சரியாகத்தான் இருந்திருக்கும். எங்களுக்கு இந்த வருடம் பண்டிகை உள்ளது (போன வருடம் கிடையாது.)அதனால் நிறைய தொடர்ந்து வேலைகள்.. அதுவும் நான்கு நாட்களாக தொடரும் விஷேடங்கள். அதனால் எல்லோர் பதிவுக்கும் உடனே வர இயலவில்லை. மன்னிக்கவும்.

  சிகரம் படம் நன்றாக விமர்சனம் செய்து உள்ளீர்கள். இந்தப்படம் பார்த்த நினைவில்லை. நீங்கள் சொல்வது போல் எஸ் பியின் நடிப்பு நன்றாக இருக்கும். நானும் ஜன்னல் தொடரில் ரசித்துள்ளேன்.

  இந்த கொரானா பாதிப்பு எப்போது குறையப் போகிறதென தெரியவில்லை. இதுவும் கடவுளின் லீலைகளே என்றாலும் அவனைத்தான் அனைவரும் சரணடைந்து வருகிறோம். நல்லபடியாக அனைத்தும் நடக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, நேற்று மாலை நிலாவையும் சேர்த்துப் பிடிக்கணும்னு மாடிக்குப் போனேன். ஒரே மேக மூட்டம் நிலவே தெரியலை. காவிரியைப் படம் எடுத்திருக்கேன். மத்தியானமாப் படங்களைப் போடணும். எங்க ஆவணி அவிட்டம் பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு வரும். ஆகவே இன்னிக்கு ஒண்ணும் வேலை இல்லை. கொரோனா பாதிப்பிலிருந்து கடவுள் தான் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

   Delete
  2. வணக்கம் சகோதரி

   என் கைத்தவறுதலால் என் கமெண்ட் இரண்டு தடவை வந்து விட்டது மன்னிக்கவும். ஒன்றை போக்கி விடலாமே.. நன்றி.

   Delete
  3. வாங்க கமலா, காலையிலேயே அதை நீக்க நினைச்சு முடியலை. கணினியை மூட வேண்டி இருந்தது. இப்போ எடுத்துடுவேன்.

   Delete
 23. சிகரம் இப்போதுதான் பார்த்தீர்களா? இது கே.பாலசந்தரின் சொந்த தயாரிப்பு, இயக்கம் அவருடைய உதவியாளரான அனந்து. இந்தப் படத்தை எப்போது தொலைகாட்சியில் போட்டாலும் பார்ப்பேன். பாடல்கள் நன்றாக இருக்கும். ராதா அழகாக இருப்பார். ராதாவும் எஸ்.பி.பியும் பிரிவதுதான் கொஞ்சம் செயற்கையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பாலசந்தர் படங்களே செயற்கைத்தனம் தான் மிகுதி!

   Delete
 24. அக்கன்னாவுக்குப் பெயர் ஆயுத எழுத்தா? நாசமாப் போச்சு!!

  ReplyDelete
  Replies
  1. அந்த வீடியோவில் அதான் சொல்றாங்க. அதைத் தேடிக் கண்டு பிடிச்சு உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

   Delete