எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 15, 2021

கனுப்பிடியும், பொங்கல் பரிசும்.


இன்னிக்குக் காலம்பர வைச்ச கனுப்பிடி . இந்த வருஷம் மொட்டை மாடிக்குப் போகலை. போயே மாசக்கணக்கா ஆச்சு. தொடர்ந்து மழை, மழை, மழை, மழை என்பதால் மாடி வழுக்குகிறது. எங்கேயாவது விழுந்து வைச்சுட்டால் என்ன செய்ய முடியும்! நேற்றும் காலை மழை பிடித்துக் கொண்டு இரவு கொஞ்சம் ஓய்வு. இன்னிக்கும் காலையில் மழை பிடித்துக்கொண்டு பதினோரு மணிக்குப் பின்னர் கொஞ்சம் ஓய்வு. சூரியனார் பல நாட்கள் கழிச்சு வந்ததால் சோம்பல் முறித்துக் கொண்டு அரைக்கண் திறந்து பார்த்துக் கொண்டு இருக்கார்.  மழை தொடருமா என்ன என்பது பற்றி எதுவும் தெரியலை.  வெயிலின் அருமை நிழலில் தெரிகிறாப்போல் மழை பெய்யும்போதும் தெரிகிறது வெயிலின் அருமை. துணிகள் நன்றாகக் காய்ந்தே பல நாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வெயில் அடிக்குதேனு காயப் போட்டோம் எனில் நன்கு காய ஆரம்பித்ததும் மழை தொடங்கி விடுகிறது. சுமார் எட்டு ஆண்டுகள் கழிச்சு இம்மாதிரி மழை! சென்னையில் இப்படித்தான் இருக்கும். தெருவெல்லாம் வெள்ளக்காடாய் இருக்கும். இங்கே அப்படி இல்லைனாலும் வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுத்திருக்காங்க.

 இணையத்தில் பழக்கம் ஆன அனைத்து சகோதரர்களுக்காகவும் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு கனுப்பிடி வைச்சிருக்கேன். சீரு(று)கிறவங்க சீரு(று)ங்கப்பா. செக், ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் எப்படி வேணாலும் பணம் அனுப்பலாம். புடைவை அனுப்பறவங்க நல்ல கோ ஆப்டெக்ஸ் பட்டாக எடுத்துடுங்க! செரியா? இந்தப் பருத்திச் சேலைகள் பரவாயில்லை, ஆனால்  சிந்தெடிக் கட்டிக்கிறதே இல்லை. இவை வேண்டாம். முத்து, பவளம், ரத்தினம், வைரம், வைடூரியம், மரகதம், சிவப்புக் கெம்பு எது ஆனாலும் சரிப்பா! என்னோட எடைக்குக் கொடுத்தால் போதும். ஆனால் ஒரு பிரச்னை இப்போ என்னோட வெயிட் குறைஞ்சிருக்கு! :( (இஃகி,இஃகி,இஃகி)

கீழே ஏடிஎம் அவங்களோட சஹானா.காமில் அதிகப் பதிவுகள் வெளியிட்டதுக்காகக் கொடுத்த பரிசு! ராதா கிருஷ்ணர், கீழேயே விளக்குடன். கவரோடு போட்டதால் ஒழுங்காத் தெரியலைனு சொல்லப் போறீங்க. மேல் கவரை நீக்கிட்டும் படம் எடுத்திருக்கேன். அதையும் போடுகிறேன்.

இதோ வரேன், அந்தப் படத்தையும் எடுத்துக் கொண்டு! :) இதோ அந்தப் படம் கீழே!


இதான் அந்தப் பரிசு. ராதையும் கிருஷ்ணனும். கீழே சின்ன விளக்கு. சுவற்றில் மாட்டலாம்னு நினைக்கிறேன்.  இதுக்கு முன்னேயும் ஒரு பரிசு அனுப்பி இருந்தாங்க. அது கிட்டத்தட்ட (அநேகமா) கோமதி அரசு தீபாவளிப் பதிவில் பகிர்ந்தது தான். அதையும் ஒரு நாள் எடுத்துப் போடுகிறேன். திடீர்னு எனக்குச் சுக்கிர தசை அடிக்குதோனு ஜந்தேகமாவும் வருது! இஃகி,இஃகி,இஃகி!

sahanamag.com இதோ இங்கே இருக்கு அந்த அறிவிப்பு. அதுக்கான பரிசு தான் இன்னிக்கு வந்திருக்கு. மேலே அந்தப் படம் தான் போட்டிருக்கேன்.

மழை கொஞ்சம் விட்டிருக்கு. ஆனாலும் சூரியன் வரலை. மேகங்கள் சூழ முழு ஓய்வு. 19 தேதிக்குப் பின்னர் மழை நிற்கும் என்று சொல்கின்றார்கள். பார்ப்போம்.


30 comments:

 1. நீங்க எந்த நேரத்துல வடகம் பற்றி எழுதுனீங்களோ மழை சக்கைப்போடு போடுது போலிருக்கு. மழைனால கரண்ட் கட் ஆகுதா? மற்றபடி மழை நல்லாத்தானே இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை. மழைக்கும் மின் தடைக்கும் என்ன சம்பந்தம். இங்கே அவ்வளவாய்ப் போவதில்லை. மாதாந்திர மின் தடையைத் தான் ஒரு முழுநாள் வைச்சுடறாங்களே! மழை நல்லாத் தான் இருக்கு எங்களுக்கு. துணிகள் காய்வதே இல்லை. சமையலறையில் கொஞ்சம் தண்ணீர் சிந்தினாலும் வெள்ளமாய்த் தெரியுது.

   Delete
 2. கவரோட போட்டிருந்த ராதாகிருஷ்ணர் படம் இன்னும் தெளிவா இருக்கு ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இருக்கட்டும், இருக்கட்டும்!

   Delete
 3. நீங்க எழுதியிருக்கிறது, 'கீதாக்கா' என்று எழுதும் சகோதரர்களுக்கான மெசேஜ்தானே..... அவருக்குப் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் இல்லை, நெல்லை, "மேடம்"னு கூப்பிடுபவர்களையும் சேர்த்துத் தான் சொல்லி இருக்கேன். அதனால் உங்களுக்கும் புரிஞ்சிருக்கணுமே! இஃகி,இஃகி,இஃகி! விடுவேனா?

   Delete
 4. இந்தத் தடவை மஞ்சள் கொத்து வாங்க விட்டுப்போயிடுச்சு. இரண்டு நாள் முன்னால கரும்பு மஞ்சள்லாம் இங்க வளாகத்துக்குப் பக்கத்துல வித்துக்கிட்டிருந்தாங்க. கனுப்பிடி என்ன வீட்டுக்குள்ளயே வச்சுட்டீங்க போலிருக்கே. பால்கனிலயாவது வைக்கலையா?

  ReplyDelete
  Replies
  1. மஞ்சள் கனுவன்று கீறிக்கவும் இலைகள் கனுப்பிடி வைக்கவும் தேவைப்படும். அதனால் பண்டிகை இல்லாட்டியும் நாங்க வாங்கிட்டோம். கண்ணாடியை நல்லாத் துடைத்துப் போட்டுப் பாருங்க. பால்கனியிலே தான் கனுப்பிடி வைச்சேன். மழை கொட்டிக் கொண்டிருந்ததால் மொட்டை மாடிக்குப் போகலை.

   Delete
  2. எப்படியானாலும் பச்சை மஞ்சள் கிடைக்கையில் வாங்கி வைத்துக் கொண்டால் ஊறுகாய் போடலாம். அல்லது தினம் பச்சை மஞ்சளை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். நான் நெல்லிக்காய்ச் சாறு எடுக்கையில் பச்சை மஞ்சளையும் சேர்த்துடுவேன். அடுத்த மாதம் மாவடுப் பருவம் வருகையில் அதற்குக் கடுகு+மி.வத்தல்+பச்சை மஞ்சள் அரைச்சு விட்டு உப்புப் போட்டு ஊற வைக்கலாம். மஞ்சளை நறுக்கிக் காய வைச்சு வீட்டிலேயே மஞ்சள் பொடி தயார் செய்துக்கலாம்.

   Delete
 5. அஆவ் !!! கணுப்பிடி வைச்சா சீர் கிடைக்குமா ??? இதெல்லாம் எனக்கு இந்த தைமகள் சொல்லவேயில்லை பாருங்களேன் கர்ர்ர் ..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கீதாக்கா .
  அதிக பதிவுகள் எழுதி பரிசு பெற்றதுக்கும் இனி இன்னும்  நிறைய பரிசுகளை அள்ளி குவிக்கவும் வாழ்த்துக்கள் .அந்த கோ ஆப்டெக்ஸ் என்ற வரியை பார்த்ததும் ஊர் நினைவு வருது .எங்கம்மா கிறிஸ்மஸுக்கு தீபாவளி டைம் தில்லையாடி வள்ளியம்மையில் பட்டு வாங்கி  வைப்பாங்க .குவாலிட்டி கோஆப்டெக்ஸ்தான் எப்பவும் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். தைமகளுக்கு இந்த சம்பிரதாயம் எல்லாம் தெரியாதே! அதான் சொல்லலை போலிருக்கு! கனுப்பிடிக்கு மட்டுமா? கார்த்திகை விளக்கு ஏத்துவதுக்கு, தீபாவளிக்கு, நவராத்திரிக்கு, ராக்கிக்கு என சகோதரர்கள் சகோதரிகளுக்குப் பரிசு மழையே பெய்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நாங்களும் எங்க பெண்ணுக்கு முதல் பட்டுப் புடைவை தில்லையாடி வள்ளியம்மையில் தான் வாங்கினோம். பட்டு என்றால் கோ ஆப்டெக்ஸ் மட்டுமே என்னைப் பொறுத்தவரை.

   Delete
 6. அன்பு வாழ்த்துகள் கீதாமா. இங்கே இனிமே தான். ராதா க்ரிஷ்ணா
  ரொம்ப அழகா இருக்கு.
  சஹானா மாகசீனுக்கு அன்பு வாழ்த்துகள்.

  அப்படி ஒரு வெள்ளமாமே. தாமிரபரணிப் படம் ஒன்றை தங்கை அனுப்பித்தாள்.
  நிறையத்தான் தண்ணீர் போகிறது.
  நம்ம மதுரையிலும் வைகையில் தண்ணீர் வந்தால் நன்றாக இருக்கும்.

  அனைவருக்கும் எல்லா நலனும் கிடைக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. அங்கே இருக்கும் குளிருக்கு இதெல்லாம் செய்வதே பெரிய விஷயம். ஆமாம் தாமிரபரணியில் வெள்ளம்.இங்கே காவிரியில் கூட வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்திருக்காங்க. இத்தனைக்கும் மழை நீர் தான்! மேட்டூர் அணை திறக்கவே இல்லை.

   Delete
 7. எல்லாரும் நல்லா இருக்கணும்...ன்னு வேண்டிக்கறேன்...

  தங்கள் அன்புக்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி.. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

   Delete
 8. சென்னையின் மழை கொஞ்ச நாட்களாய் நெல்லை, தூத்துக்குடி என்று அலைந்து அங்கும் சுற்றுகிறது போல...    அளவுக்கு மிஞ்சினால் மழையும் கடுப்பு!  நம் கையில் என்ன இருக்கிறது?  மொட்டை மாடிக்கெல்லாம் செல்ல வேண்டாம் கீதா மேடம்!!

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! @ஶ்ரீராம், அதெல்லாம் "மேடம்" என்றாலும் விட மாட்டோமுல்ல! மழை நேற்று மாலையிலிருந்து குறைஞ்சிருக்கு. ஆனால் கோபுரமே தெரியாத அளவுக்குப் பனி/மேகம்? மூட்டம்!

   Delete
 9. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.  என்னைப்பொறுத்தவரை இதுபோன்ற பரிசுப்பொருட்கள் என்னை சங்கடத்தில் ஆழ்த்தும்.  எவ்வளவுதான் வைத்துக்கொண்டே போவது!  காலண்டரும் அப்படிதான்.  ஒன்று போதும் என்பேன் எப்போதுமே..

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், இந்த வருஷம் இங்கே காலண்டர் வரத்துக் கம்மி தான். இந்தப் பரிசுப் பொருள் மனதில் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது அல்லவா? அதான் முக்கியம்! வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 10. நேற்று சகோதரிகள் குடும்பத்துடன் வந்து சென்றார்கள்.  எங்களால் முடிந்ததை அன்புடன் சேர்த்துக் கொடுத்தோம்!  நேற்றைய உணவும் சுவையாக அமைந்திருந்தது.  பாஸ் கலக்கி விட்டார்.  க்ரூப்பில் ஏக பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. நல்லபடியாக கனுப்பொங்கல் முடிந்ததற்கு வாழ்த்துகள். நாம் எவ்வளவு கொடுப்போம் என்பதை விடக் கொடுப்பது தானே முக்கியம்! அந்த வகையில் நீங்கள் அன்போடு எதைக் கொடுத்தாலும் உங்க சகோதரிகளுக்குப் பிடித்தமானதாகவே இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

   Delete
 11. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. கணுப்பிடி வைத்ததற்கும், எல்லோருக்கும் அன்புடன் வாழ்த்துகள் தெரிவித்தமைக்கும் ரொம்ப மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். உங்களுக்கு இந்த தடவை பண்டிகை இல்லையென்றாலும், ஆர்வத்துடன் எந்த சம்பிரதாயங்களை விடாமல் கவனிக்கிறீர்களே..(அதுவும் இந்த விடா மழையில்) முதலில் அதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  சஹானா தளத்தில் நீங்கள் அதிக பதிவுகள் எழுதி பரிசு வாங்கியிருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள்.. ராதா கிருஷ்ணன் பரிசு போம்மை நன்றாக உள்ளது. மேலும் தொடர் பரிசுகள் பெறவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  எனக்கு இங்கே நெட் பிரச்சனை. உடனே வர இயலவில்லை. மேலும் சில நாட்கள் எந்த பதிவுக்குமே வர இயலாமல் போகுமளவிற்கு பிரச்சனை வரலாம். ஆனால் அதற்குள் சரியாகி விட்டால் நல்லது. பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, தாமதம் ஆனால் என்ன? என்னாலும் இப்போதெல்லாம் முன் போல் வர முடிவதில்லை. அதிகம் பதிவுகள் எழுதுவதும் இல்லை. நேரம் என்னவோ நெருக்குப்பிடியாக ஆகிவிட்டது. மெதுவாக நேரம் கிடைக்கையில் வாங்க. பரவாயில்லை. சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும். கவலை வேண்டாம். வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 12. நீங்கள் பரிசு பெற்றதில் உங்களை விட எனக்கு சந்தோசம் ❤️. பொங்கல் சீர் வந்ததும் படம் போடுங்க மாமி 🙂

  ReplyDelete
  Replies
  1. எங்கே! ஏடிஎம்! எல்லோரும் கழுவற மீனில் நழுவற மீனாக இருக்கும் தம்பிகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சீர் னு எழுதிப் பார்த்துக்கணும் போலிருக்கே! :)))))))) உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும் ஏடிஎம். பரிசுகளுக்கும் நன்றி. புடைவையைப் பார்த்தவங்க எல்லோருமே மனமாரப் பாராட்டினார்கள்.

   Delete
 13. சீர்கள் கேட்டது குறைவு தான்... (!)

  பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு தனபாலன். நான் குறைவாத் தான் சீர் கேட்டிருக்கேன் என்பது இங்கே யாருக்குப் புரியுது! ஹூம்! :)))))

   Delete
 14. மழையோடு தொடர்ந்து சுக்ரதிசையும் அடிக்கட்டும்.

  பரிசு அழகாக இருக்கிறது.

  மழை வேண்டும்தான் என்பதை மக்கள் அனைவரும் உணரவேண்டும்

  அந்த சீர் என்பது எனக்கு விளங்கவில்லை காரணம் தமிழில் புரிதல் எனக்கு குறைவு

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி. என் வேண்டுகோளுக்கு இணங்கி வந்ததுக்கு நன்றி. ஹிஹிஹி, "சீர்" என்றால் புரியலையா? சரிதான்! :)))) மற்றக் கருத்துகளுக்குப் பின்னர் பதில் கூறுவேன்.

   Delete
 15. திருவரங்கத்தில் தொடரும் மழை - ஆமாம் எனக்கும் செய்தி வந்தது! :)

  பரிசு - வாழ்த்துகள்.

  ReplyDelete