எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 02, 2021

ஜீவி சாருக்கு என்னோட பதில்!

பாசவலை

அந்தப் பெண் வித்யா தன் இரட்டை வடம் செயின் நகையுடன் தன் பிறந்த வீட்டிற்குள் நுழைகையிலேயே, "வாம்மா,வித்யா. நேற்று தான் மாப்பிள்ளை இங்கே வந்துட்டுப் போனார். எல்லா விஷயத்தையும் சொன்னார்.. நீ வருவேன்னும் நீங்க தான் வித்யாவுக்கு அவளுக்குப் புரியற மாதிரி எல்லாத்தையும் சொல்லணும்ன்னும் சொன்னார். இதோ நீயே வந்துட்டே.. " என்று அவள் அப்பா முகமலர்ச்சியுடன் அவளை எதிர்கொண்டார்.


மேலே ஜீவி சார் எழுதிய கருத்துரை. இதில் அவர் சொல்லி இருப்பது மறைமுகமாக வித்யாவின் கணவன் அவன் அப்பா ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டது போலவும், வித்யாவை அவ அப்பா எடுத்துச் சொல்லி ஒத்துக்க வைக்கணும்னும் பொருள் வராப்போல் எழுதி இருக்கார். முதல்லே இதிலே இரண்டு தவறுகள். நேர வித்தியாசங்கள் சரியா வரலை. ஏனெனில் நான் எழுதின கதையில் வித்யா தன் மாமனாரிடம் தான் நகையை விற்க மறுநாள் ஊருக்குப் போவதாகச் சொல்லுவாள். அதற்கு முன்னால் அவள் ஊருக்குச் செல்லப் பயணச் சீட்டு முன்பதிவு செய்யவே அவள் கணவன் வெளியே சென்றிருப்பதாயும் வரும். அப்படி இருக்கையில் அவன் எப்படி வித்யாவிடம் கூடச் சொல்லாமல் தன் மாமனார் ஊருக்கு வித்யா போவதற்கு முன்னாலேயே போய்த் தன்னோட வீட்டில் சரிபாதிப் பங்கை/அதுவும் தான் அரசுக் கடன் பெற்றுக் கட்டும் வீட்டில் (பின்னால் எல்லாம் முடிந்தவுடன் அந்த வீடு குடியரசுத் தலைவர் பெயரில் பதிவு செய்யப்படும். கடன் முடியும்வரை அவர் தான் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்.) தன் தம்பிகளுக்கு சந்தோஷமாய்க் கொடுப்பதாயும் அதற்கு வித்யா உடன்பட வேண்டும் என்றும் கேட்டிருக்க முடியும்? 

அவன் வெளியூருக்குச் சென்றதாகவே வரவில்லை. சொல்லப் போனால் அந்தப் பாத்திரம் கதையில் நுழையவே இல்லை. வித்யாவின் மாமனார் தன் பிள்ளை ஒத்துக்கொண்டுவிட்டான் என்று வித்யாவிடம் சொன்னால் அதைக் கேட்டுவிட்டுக் கொஞ்சமானும் பயத்துடன் அவளும் ஒத்துக்கொள்ளலாம் என்னும் நம்பிக்கையில் பொய் சொல்கிறார் என்பது உடனேயே வித்யாவின் சந்தேகம் மூலம் தெரிந்து விடுகிறது. அதோடு வித்யா அடுத்த நாள் பிறந்த ஊருக்குப் போகப் போகிறாள். அப்படி இருக்கையில் அவளை வழி அனுப்பவோ, அவள் தனியாய்ப் போவதால் குழந்தைகளின் பொறுப்பை ஏற்கவோ இல்லாமல் அவளுக்கும் தெரியாமல் அவள் கணவன் தான் மட்டும் முன்னால் போய்த் தன் மாமனாரிடம் வீட்டை நான் எழுதிக் கொடுக்கத் தயார். அதற்கு வித்யாவைச் சம்மதிக்கச் செய்யுங்கள் என்று கேட்க முடியும்? அப்போ வித்யா ஊருக்குக் கிளம்பும்போது கணவன் அங்கே இல்லை என்றல்லவோ ஆகிறது? தனக்குக் கூடச் சொல்லாமல் தன் கணவன் தன் அப்பாவைப் போய்ப் பார்த்து இப்படிச் சொன்னால் அது வித்யாவுக்கும் அவள் கணவனுக்கும் இடையே பிரச்னைகளை உண்டு பண்ணாதா? தான் மறுத்த ஒரு விஷயத்திற்குத் தன் கணவன் தனக்குக் கூடத் தெரியாமல் ஒத்துக் கொண்டு தன் அப்பாவிடமும் சொல்லி இருப்பது வித்யாவுக்கு அவன் செய்யும் துரோகம் ஆகாதா?

அதோடு கடன் வாங்கிக் கட்டும் வீட்டில் எப்படி இம்மாதிரிப் பங்கு தர முடியும்? பின்னால் தன் குழந்தைகள் படிப்பு அல்லது திருமணத்திற்குச் செலவுக்குப் பணம் வேண்டுமெனில் அந்த வீட்டை விற்க முடியுமா வித்யாவின் கணவனால்? அல்லது இருவரில் யாரேனும் ஒருவர் இல்லை எனில் அந்த வீட்டின் கதி? வித்யாவின் அப்பா தான் தன் மகளுக்கு துரோகம் நினைப்பாரா? மனதார அவரால் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டு வித்யாவையும் அதற்கு ஒத்துக்கொள்ள வைக்க முடியுமா? அப்படி எனில் வித்யா அவருடைய சொந்தப் பெண்ணே இல்லை என்றே ஆகும். ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய் என இருக்கும்  பெற்றோர்களை ஜீவி சார் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம். இம்மாதிரி உள்ளதை உள்ளபடியே சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டு போவதால் தான் பலருடைய துரோகங்களும் ஏற்கும்போது அதிர்ச்சி தாங்காமல் தற்கொலை வரை போகிறது. யாருக்கும் எந்தவிதமான அதிர்ச்சிகளையோ, துன்பங்களையோ தாங்க முடியாமல் போகிறது. எல்லோரும் நல்லவராக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.  இதை விடக் கொடுமையான சம்பவங்களை எல்லாம் பார்த்திருக்கேன். பேரக்குழந்தையோடு மருமகளை வீட்டுக்குள் விடாமல் வெளியேயே வெயிலில் நிறுத்தி வைத்த மாமனார்.மாமியாரை அறிவேன். இதெல்லாம் கதை அல்ல நிஜம்! 

எல்லோரும் தப்பு/தவறு செய்யும் சாதாரண மனிதர்கள் தான். சிலருக்கு அதை ஒத்துக்கொள்ள முடிகிறது. பலரால் முடியவில்லை. மத்யமர் குழுவிலே போய்ப் பார்த்தால் அறுபதைக் கடந்த பல பெண்களும் மாமியார்களால் தாங்கள் மூத்த மருமகளாகப் பட்ட கஷ்டங்களை விவரித்திருப்பார்கள். அனைத்தும் உண்மை! கணவனால் கொடுமை/மாமியார்/மாமனாரால் கொடுமை என நாற்பதாண்டுகள் முன் வரை பெண்களுக்கு நடந்ததும் உண்மை. காலம் மாறி வருகிறது. இப்போதைய மாமியார்களோ/மாமனார்களோ/மருமகள்களோ அப்படி இல்லை. ஒருவரின் தேவை மற்றவருக்கு வேண்டும் என்பதைப் புரிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். அதே சமயம் தங்களுக்குள்ளாக ஒரு கோடு போட்டுக் கொண்டு அந்தக் கோட்டை விட்டு வெளிவராமல்/உள்ளேயும் போகாமல் எல்லையிலே இருந்து கொண்டு கவனமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கதைக்கு வேண்டுமானால் ஜீவி சார் சொல்லி இருக்காப்போல் கற்பனையைக் கலந்து சொல்ல முடியும்! ஆனால் உண்மை சுடும்!

40 comments:

  1. தங்களது விளக்கம் நன்று.

    தரங்கெட்ட மாமனார்-மாமியார் இப்பொழுதும் உண்டு சதவீதம் வேண்டுமானால் குறைந்து இருக்கலாம்.

    அதேபோல் கேடுகெட்ட மருமக்கள்களும் உண்டு. இதை பலரும் மறுக்கலாம் காரணம் உண்மைகள் சுடும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! நீங்க சொல்வது உண்மை. இரண்டு தரப்பும் அப்போதும், இப்போதும், எப்போதும் இருக்கும்.

      Delete
  2. ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு உதாரணம் எனக்குத்தெரிந்த  குடும்பங்களிலேயே உண்டு.  நீங்கள் சொல்லி இருப்பது போல  வித்யாவின் கணவன் விதாவின் அப்பவிடம் அபப்டிப்போய்ச் சொன்னால் கணவன் மதிப்பு போய்விடும் - மாமனாரிடமும் சரி, மனைவியிடமும் சரி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், தன் மனைவிக்கும், தன் வாழ்க்கைக்கும், குழந்தைகளுக்கும் துரோக சிந்தனையுடன் எந்த ஒரு கணவனுக்கும் இருக்கத் தோன்றாது. இது முழுக்க முழுக்க வித்யாவின் மாமனார் வித்யாவின் உயர்வு பொறுக்க முடியாமல் அவளைத் தங்களிடம் அடங்கி இருக்கச் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தில் செய்ய நினைத்தது. கடைசியில் அது நடக்கவில்லை. எந்தத் தகப்பனும் தன் பெண்ணுக்கும்/மாப்பிள்ளைக்கும் இப்படி ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணும்னு சொல்லவும் மாட்டாங்க. ஆதரிக்கவும் மாட்டாங்க!

      Delete
  3. கொடுமைப்படுத்துபவர்கள் எல்லோரும் அவரவர் வினையை அனுபவிக்க நேரிடும்.

    தான் சம்பாதிக்கும் சொத்தில் அல்லது வீட்டில் இன்னொருவரையும் கூட்டுச் சேர்த்துக்கொள்வது எப்போதுமே சரிப்படாது. என் வாழ்க்கையிலும் அந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன். (மூன்று பேரும் ஒரே பில்டிங்ல ஃப்ளாட் வாங்கிக்கோங்க, ஒரே வளாகத்துல என்று ஏற்பாடு செய்தபோது அதை நான் ரொம்பவே விரும்பலை. எப்போனாலும் மத்தவங்க வேற இடத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இவங்களை நம்பி ஒரு இடத்திற்கு வந்தால் கஷ்டம்). இன்னொன்று, ஒரு இடம் வாங்கி, மூன்று பேரும் வீடு கட்டிக்கொள்வோம்-3 தளம், என்பதிலும் எனக்கு இஷ்டம் கிடையாது. யாரேனும் விற்க நினைக்கலாம், இல்லை இடத்தைவிட்டுச் செல்ல நினைக்கலாம், அப்புறம் கீழ்த்தளத்தில் தோட்டத்தில் தனக்கும் இடம் வேண்டும் என்றெல்லாம் பிரச்சனைகள் வரலாம்.... சிறந்த கதாசிரியர் விசு, சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சொன்ன தீர்வுதான் பெரும்பாலும் உறவில் சரிப்பட்டுவரும்)

    ReplyDelete
    Replies
    1. உண்மை நெல்லை. எங்க உறவினர்களிலும் ஓர் அண்ணன், தம்பிக்கு இப்படித் தான் அப்பா இருக்கையில் பொதுவில் வாங்கி வீடு கட்டிக் கொடுத்துவிட்டார். கடைசியில் அண்ணன் தம்பிக்கு ஒரு கதவைக் கூட ஒப்புக்கலை. வீடு தன் பெயரில் இருப்பதால் தன் வீடு என்று சொல்லிவிட்டான். இத்தனைக்கும் அந்த வீட்டைக் கட்டத் தம்பியும் பண உதவி செய்தான் பின்னால் தனக்கும் பங்கு உண்டு என நம்பிக் கொண்டு! கடைசியில் ஏமாற்றம் தம்பிக்கும் தம்பி குடும்பத்திற்கும்.

      Delete
  4. இந்தக் கதை இப்படி இருந்திருக்கலாம், அந்த மாதிரி முடிவு வந்திருக்கலாம் என்று சொல்வதே, சாப்பாட்டினை விமர்சனம் பண்ணுவது போல அல்ல... கதை என்பது கதாசிரியரால் எழுப்பப்படும் வடிவம். அதில் மாற்றங்களை பிறர் சொல்ல முடியாது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. திரு ஜீவி அவர்களுக்கு மாமனார்/மாமியார் என்பவர்களை மருமகளாக இருப்பவர்கள் எப்போதும் போற்றிக் கொண்டே அவங்க ரொம்ப நல்லவங்க என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மருமகளைத் தன் பிள்ளைக்கு எதிரே வர விடாது தானே தன் பிள்ளைக்கு எல்லாம் செய்யும் மாமியாரையும் அவர் பாராட்டாகவே சொல்லுவார். இது தான் உண்மையான தாயன்பு என்று. அதே தாய் தன் மகள்/மாப்பிள்ளை எனில் வேறு விதமாகச் சொல்லுவாள்.

      Delete
  5. அன்புள்ள கீதாம்மா, நானும் இதையே யோசித்தேன். அப்படியே வித்யாவின் கணவர் போய் சொல்லியிருக்கும் பட்சத்தில், ஒரு பாசமிகு தந்தையால், இன்முகத்துடன் இப்படி வரவேற்க இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. உண்மை வானம்பாடி! எந்தத் தந்தையும் இதை ஒத்துக்கொள்ள மாட்டார். தன் பெண்ணின் சுதந்திரம், வீடு அவளுக்கு இல்லாமல் போவது எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ள மனம் சம்மதிக்குமா என்ன?

      Delete
  6. இரு வேறு இயல்புகள்..
    நேற்று கூட நானும் எனது நண்பர் கணேச மூர்த்தியும் பேசிக் கொண்டிருந்தோம்...

    கதை என்றாலும் நிஜம் என்றாலும் கர்ம வினை என்ற ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்..

    கருத்துரைகள் புதிய கற்பனைகளைத் தருகின்றன..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, இதை நான் நிஜம் என்று சொல்லி விட்டதால் அது ஏதோ இமாலயத்தவறு என்பதாகத் திரு ஜீவி அவர்கள் கருத்து. இதற்கு முன்னர் படம் பார்த்து எழுதும் ஓர் கதைக்கும் உண்மைக்கதை என்று சொல்லியெ எழுதி இருந்தேன். பலரும் அந்தக் கதை தங்களுக்குள் பாதிப்பை உண்டு பண்ணியது என்றும் சொன்னார்கள். அப்போது அவர் அந்தக் கதையைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

      Delete
  7. நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக இருக்கிறது. பின்னால் வருவதையும் யோசிக்க வேண்டும் இல்லையா?
    கோவையில் எங்கள் வீடும் அப்படியே கிடக்கிறது. மாமியாரின் விருப்பம் எல்லோரும் அதில் வீடு கட்டி கொள்ள வேண்டும் என்று. எல்லோரும் வீடு வைத்து இருக்கிறார்கள் வயதும் ஆகி விட்டது எல்லோருக்கும் எடுத்து செய்ய ஆளும் இல்லை. இப்போது ஒருவர் இறந்து விட்டதால் மேலும் சில சட்ட சிக்கல்கள் இருக்கிறது.
    கடைசியில் நீங்கள் சொன்னது உண்மை அப்படி வாழ பழகி கொண்டால்தான் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, உங்கள் அனுபவத்தில் இருந்து அது சரி எனச் சொல்லுகிறீர்கள். ஜீவி சார் முழுக்க முழுக்கத் தப்பு என்கிறார். பார்ப்போம்.

      Delete
  8. ஏற்கனவே அன்று பின்னூட்டத்தில் சொன்னதுதான் .யாரும் 100 % பெர்பெக்ட் கிடையாது .அவ்ளோ கஷ்டப்பட்டேனும் எதற்கு அந்த மாமனார் மாமியாரை நல்லவங்களாக்கணும் ??? அடுத்தது எதுக்கு இதுவரைக்கும் நல்ல கணவனாக இருந்தவரை கெட்டவராக்கப்பார்க்கணும் ?நிறையபேருக்கு உண்மைகள் பிடிப்பதில்லை என்பதே மாபெரும் உண்மை .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், என்னதான் எழுதப் போகிறார் என்று பார்ப்போமே! பொறுத்திருப்போம். ஆனால் அவர் எழுதப் போவது கற்பனை தான்! உண்மை அல்ல.

      Delete
  9. என்னாலும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. தம்பதிகள் ஒற்றுமை
    புரிதலில் இருக்கிறது.
    அது தாய் தந்தையரைத் தாண்டியது,
    எந்த நாளிலும் கணவனை மனைவியோ,
    மனைவியைக் கணவனோ விட்டுக்
    கொடுக்க முடியாது.
    அதுவ்ம் சிபாரிசிக்கு மாமனாரிடம் செல்லும் கணவனை
    ஒரு நாளும் ஒத்துக்கொள்ள முடியாது.
    நடந்த கதை நன்றாகவே இருந்தது கீதாமா.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, உண்மையை ஒருவருக்கும் ஒத்துக்கொள்ள முடிவதில்லை. என்ன செய்யலாம்! உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

      Delete
  10. வணக்கம் சகோதரி

    தாங்கள் எழுதிய கதைக்கு விரிவாக, அழகாக விளக்கம் தந்துள்ளீர்கள். "தாயும், பிள்ளையும் என்றாலும் வாயும்,வயிறும் வேறு" என்ற பழமொழிப்படி அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில். இது போன்றவர்கள்(மாமனார் சுவாமிநாதன்) அன்றும் சரி, இன்றும் சரி ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திருத்த முடியாத சுயநலவாதிகள். தாங்கள் எழுதிய கதையின் முடிவு சரிதான். விளக்கங்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. அவர் தரப்பு நியாயம் வேறே! என் தரப்பு நியாயம் வேறே! ஆனால் இம்மாதிரி மனிதர்கள் இருந்ததைக் கூட அவரால் ஏற்க முடியலை.

      Delete
  11. அது சரி, அந்த ஸ்வாமிநாதன் உங்களுக்கு சொந்தமா? வித்யா தான் சொந்தம்ன்னு சொல்லாதீங்க. வித்யா சொந்தம்ன்னா வித்யாவைத் தொட்டு ஸ்வாமினாதனும் சொந்தம் தானே?

    ReplyDelete
    Replies
    1. சொந்தமா இல்லையா என்பதே கதையின் கரு அல்ல.

      Delete
  12. உங்கள் 'உண்மைக்கதை'யை வாசித்ததும் பொது இடத்தில் என் உறவினர் ஒருவர் மொத்மொத்தென்று ரோடில் போகிறவர் வருகிறவர்களிடமெல்லாம் தர்ம அடி வாங்கிய உணர்வு எனக்கு ஏற்பட்டது.

    பெரியவர் ஸ்வாமிநாதன் உங்களுக்கு உறவா என்று கேட்டிருந்தேன். அப்படிக் கேட்டிருந்தது உங்களுக்கு வந்து சேர்ந்ததா, தெரியவில்லை.


    ReplyDelete
    Replies
    1. எனக்கு வந்த கருத்துரைகளைப் போட்டாச்சு. உங்கள் உணர்வுகளுக்கெல்லாம் நான் பொறுப்பு அல்ல.

      Delete
  13. வல்லிசிம்ஹன்
    கோமதி அரசு
    கமலா ஹரிஹரன்

    -- இவர்களுக்கான கேள்வி. பெண்கள் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

    1. வீட்டை இப்படி மாற்றி அமைக்கலாம், பணப்பிரச்னைகளை இப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்று ஒரு தந்தை தன் மகனிடம் ஆலோசிப்பாரா அல்லது மருமகளிடமா?.. (அதுவும் மகன் வீட்டில் இல்லாத தருணத்தில்) மகனிடம் தானே பேசுவார்? வழக்கமாக எல்லோர் வீட்டிலும் நடப்பது இது தானே? ஏன் இந்த வீட்டில் மட்டும் இப்படி ஒரு நிலை?

    2. அப்படியே மாமனார் கேட்டாலும் 'இதெல்லாம் உங்கள் பிள்ளையிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று மருமகள் அந்த நேரத்தில் நழுவி பின் தன் கணவனிடம் என்ன சமாச்சாரம் என்று விசாரித்து அவர்கள் கலந்து பேசி முடிவெடுப்பார்களா, இல்லை கிடைத்ததடா வாய்ப்பு என்று பெரியவர்களை கார்னர் பண்ணுவாளா?

    3. அந்த வீட்டில் தந்தை - மகன் உறவின் தாத்பரியம் என்ன ஆச்சு?



    --- இதெல்லாம் முக்கியமான கேள்விகள்.


    ReplyDelete
    Replies
    1. தந்தை மகனிடம் பேசி அவன் மறுக்கவே தான் மனைவி மூலம் நுழைந்திருக்கிறார் என வைச்சுக்கலாமே! மகன் வீட்டில் இல்லாத தருணத்தில் தான் முக்கால்வாசி மாமனார்/மாமியார்கள் மருமகள்களைக் கொடுமைப்படுத்தும்/கண்டபடி பேசும் வழக்கம் உண்டு! உங்களுக்கு அது தெரியாதது அதிசயமே. இவ்வளவெல்லாம் ஏன் ஆழமாக யோசிக்கணும். அந்த மாமனார் மாமியாருக்குப் பிடிக்காத மருமகள்/ அவள் எப்படித் தான் சமாளித்துக் கொண்டாலும் மாமியாருக்கு/மாமனாருக்குப் பொறுக்கலை. நல்ல வீடு கட்டிக் கொண்டு நன்றாக அவள் இருப்பதை அவங்க பொறுப்பாங்களா?
      இங்கே தந்தை மகன் உறவின் தாத்பரியம் பற்றி எல்லாம் பேச்சே இல்லை. அவருக்கு எப்படியானும் புத்திசாலியும் உஷாராகவும் இருக்கும் மருமகளைப் பணத்தைக் காட்டி இதுக்குச் சம்மதிக்க வைக்கணும் என்னும் நினைப்பு. மருமகளைச் சரிக்கட்டிவிட்டால் பின்னால் பிள்ளையிடம் பிரச்னை இருக்காது. பெரியவங்களை இங்கே கார்னர் பண்ணுகிறார்களா? அல்லது பெரியவங்க மகன் இல்லாத நேரமாய்ப் பார்த்து மருமகளைக் கார்னர் பண்ணுகிறார்களா? இது அவரவர் பார்வையில் பார்க்கணும்.

      Delete
  14. நெல்லைத் தமிழன்:

    கதையை எழுதுவோர் கதையைப் பின்னியதில், அல்லது அதை விவரிப்பதில் கோட்டை விட்டால் இப்படிச் செஞ்சிருக்கலாமில்லையா என்று சுட்டிக் காட்டுவது கதையின் நேர்த்தி குறித்த கலந்துரையாடல்.

    இதற்கெல்லாம் பின்னூட்டம் இல்லை என்றால் பேசாமல் அருமை என்று மூன்றே எழுத்துக்களில் பதிந்து விட்டுப் போய்க் கொண்டிருக்கலாம். யாருக்கும் வம்பில்லை. எல்லோருக்கும் 'பின்னூட்ட நல்ல பிள்ளை'யாக இருக்கலாம்.

    அதெல்லாம் சொல்லக் கூடாது என்றில்லை.. சொல்லுங்கள்.. ஆனால் சொல்லி விட்டுப் பின்னால், ஹஹாஹஹா என்று போட்டுங்கள் என்பது உங்கள் கட்சி என்றால் நான் என்ன சொல்றதுன்னு தெரிலே.
    நான் எது சொன்னாலும் கீதாம்மா மனம் வருந்தும் என்பதே உண்மை. அது கூடாது என்றே பேசாமல் இருந்தேன். இப்படி தனிப்பதிவு போட்டு, 'எங்க பேட்டைக்கு வாங்க; பாத்துக்கறேன்' என்ற நேரத்திலும் பேசாமல் தான் இருந்தேன். இப்பக்கூட அதே நிலை தான்..

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கு, நல்லா இல்லை, இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா/இருப்பாங்களா/ இருந்திருக்காங்களா என்பது வேறே. குறிப்பாக உள்ளே நுழைந்து அந்த மாமனார் இப்படித் தான் இருந்திருப்பார், இப்படித்தான் இருந்திருக்கணும். அவர் அந்தப் பெண்ணின் அப்பாவுக்குச் சொந்தமாகத் தான் இருந்திருக்கணும். நெருங்கிய நட்பு என்றெல்லாம் அநாவசியமாக வளர்த்துவது வேறே! எனக்கு மனசு வருந்தப் புதுசாக இனிமேல் எதுவும் வர வேண்டாம். நான் பார்த்தது/கேட்டது/அனுபவங்கள் என்பதில் இருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றைக் கதை உருவில் கொடுக்கிறேன். நம்புபவர்கள் நம்பலாம். இல்லை எனில் போய்க்கொண்டே இருக்கலாம்.

      Delete
  15. 'வித்யாவின் கணவன், வித்யாவின் அப்பாவிடம் போய் அப்படிச் சொன்னால், கணவன் மதிப்பு போய்விடும்-- மாமனாரிடமும் சரி, மனைவியிடமும் சரி'.. என்று ஸ்ரீராம் ஏன் இப்படி நினைத்தார் என்று தெரியவில்லை.

    இந்தக் கதையில் வித்யாவின் கணவன், வித்யாவின் அப்பா இவர்கள் போர்ஷன் என்னவென்று தெரிய வேண்டாமா? அதையேன் விட்டு வைப்பானேன்? அதுக்காகத் தான்.

    மருமகன்களை மகாவிஷ்ணு போல என்று வேதம் சொல்கிறது. வித்யாவின் அப்பா உத்தமமான மனிதர்.
    வித்யாவின் மாமனாரும், வித்யாவின் அப்பாவும் அத்யந்த நண்பர்கள்.. பால்ய வயசிலேந்தே அப்படி ஒரு நெருக்கம். வித்யாவின் மாமனாருக்கு, அவர் முன்னோர்களுக்கு தஞ்சாவூர் பக்கம். கூட்டுக் குழும்பங்களை அந்தக் காலத்தில் வளர்த்தெடுத்த மண் தஞ்சைத் தரணி. இப்போக் கூட தம்பி துரை செல்வராஜூவாலே அந்தக் கூட்டுக்குடும்ப் வாழ்க்கையின் மேன்மையை நமக்கெல்லாம் ரசனையோட சொல்ல முடியறதுனா, அதுக்குக் காரணம் அந்தத் தஞ்சை மண் தான்.

    கீதாம்மாவின் மனம் வருந்தாமல் இந்தக் கதையை தொடர்ந்து எழுதி கே.வா.போ.கதைப் பகுதியில் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இதில் என்ன கீதாம்மா வருந்துவதற்கு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? உண்மைக் கதை என்ற பெயரில் அவர் தனது நெருங்கிய உறவினர்களின் கதையை எழுதப் போய் நாம் ஏதாவது ஏடாகூடா எழுதப் போய் நிஜமாலுமே அவர் மனம் வருத்தப்படும் இல்லையா? இது தான் நான் சொல்ல வருவது. சொந்தம்லாம் இல்லை நான் கேள்விப்பட்டது, அறிய வந்தது இதெல்லாம் தான் இந்த உண்மைக் கதைன்னு சொல்லிட்டார்ன்னு வைச்சிக்கங்க நாமளும் அவர் எழுதறதை சுதந்திரமா அனலைஸ் பண்ண வழி ஏற்படும். இதான் இந்தக் கதையைப் பத்தி எதுவும் சொல்ல முடியாமல் இருப்பதற்கு இருக்கற இடைஞ்சல். வாசிக்கறவங்களுல்குப் புரியும்ன்னு நெனைக்கறேன்.

      Delete
    2. கதை மாந்தர்களின் தற்போதைய நிலையைக் கதை வெளிவந்த அன்றே கோமதி அரசுக்கோ/அல்லது பொதுவாகவோ கருத்துரையில் சொல்லி இருக்கேன். கடைசியில் வித்யாவிடம் தான் அந்த மாமனார்/மாமியார் கடைசிக்காலத்தில் இருந்தனர் என்பதையும் சொல்லி இருக்கேன்.

      Delete
    3. கூட்டுக்குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்து கொஞ்சநாட்கள் வாழ்க்கையையும் கழித்திருக்கிறேன். தஞ்சை ஜில்லாவில் மட்டும் கூட்டுக்குடும்பம் இல்லை என்பதையும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுக்க ஒரூ கால கட்டத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை தான். அதில் பலன் அடைந்தவர்களும் உண்டு. மனதில் வருத்தப்பட்டவர்களும், ஏமாந்தவர்களும் உண்டு. வித்யாவின் மாமனாருக்கு வித்யாவின் அப்பா சொந்தம் என்றோ அதே ஊர்க்காரர் என்றோ பால்யசிநேகிதர்கள் என்றோ நான் சொல்லவில்லை. ஏனெனில் உண்மை அதுவல்ல. முழுக்க முழுக்க வேறே வேர். அப்படி இருக்கையில் வித்யாவின் கணவன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் எனக் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் அதுவும் கடன் வாங்கிக் கட்டும் வீட்டில் தன் தம்பிகளுக்கும் பங்கு தரவேண்டும் என வித்யாவின் மாமனார் எதிர்பார்ப்பதே அந்த நட்புக்குச் செய்யும் துரோகம் என்றாகி விடாதா? எல்லோரையும் நல்லவங்களாகவே காட்டினால்? இப்படியும் இருந்திருக்காங்க என்பதைத் தெரிந்து கொள்வது எப்போது?

      Delete
  16. 'இது இவரால் இப்படி நடக்க வேண்டும்' என்பது தீர்மானமான ஒன்று. அதற்கு நமக்குத் தெரியாத காரணமும் உண்டு. (இதைத்தான் தம்பி துரை கர்மவினை என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.) அதனால் அப்பப்போ நடக்கற காரியங்களுக்காக யாரையும் நொந்து காலாதி காலத்துக்கும் நினைத்து நினைத்து மனதில் வன்மம் பாராட்டிக் கொண்டிருப்பது நல்லது அல்ல. அதனால் வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை வெளிச்சம் பாய்ச்சி நினைவுக்குக் கொண்டு வராமல் அனாவசிய குதறல்கள் இல்லாமல் நல்ல சிந்தனைகளுடன், நல்ல எண்ணங்களுடன் எழுதுகோல் பிடிப்போம். சமூகத்தை ஆரோக்கியமாக் வைத்துக் கொள்ள கிஞ்சித்தேனும் நாம் எழுதுவது பயன்பட்டால், அதுவே மிகப் பெரிய விஷயம்.

    இந்தக் கதையை தொடர்ந்து எழுதி அதை இராஜபாட்டையில் உலா விட முயற்சிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இதில் வன்மம் எங்கிருந்து வந்தது? சுட்டிக்காட்டுங்கள். வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை எவராலும் மறக்க முடியாது. இங்கே யாரும் யாரையும் குதறவும் இல்லை. கொத்தவும் இல்லை. இப்படியும் மனிதர்கள் இருந்திருக்காங்க என்று சொல்வதற்கே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்காலங்களில் மாணவ மணிகள் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதன் காரணமும் நெஞ்சுரம் இல்லாதது தான். இப்படியான பெற்றோர்களின் வளர்ப்புத் தான் காரணம் என்பதும் புரியவருகிறது. எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டாமோ?

      Delete
  17. இன்று தான் இரண்டாவது டோஸ் கோவிஷீல்ட் உள்ளே போனது. லேசான ஓயுவுக்கு முன்னால் மனசில் படிவதை எழுதிவிட தோணிற்று. இனிமே தான் உட்கார்ந்து எழுதத் தொடங்கணும். பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உடல் நலனில் கவனம் வைங்க!

      Delete
  18. இந்தக் கதை தொடர்பான என் கதைக்கு முன்னோட்டமே மேற்கண்ட என் கருத்துக்கள். கொரானா வாட்டும் இக்காலத்தில் இதற்கெல்லாம் பதிலளித்து யாரும் சிரமப்பட வேண்டாம். கீதாம்மாவும் அடுத்த பதிவுக்கு இன்னேரம் ரெடியாகியிருப்பார். ஆக அடுத்து எ.பி.யில் இந்தக் கதை தொடர்ச்சி பொழுது சந்திக்கலாம். அன்பு வணக்கங்கள்.
    மிக்க அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
    Replies
    1. உங்க பாணியில் நீங்க எழுதுங்க. அதுக்காக உண்மையை உரக்கச் சொன்னால் நல்ல சிந்தனைகள் இல்லைனு எல்லாம் சொல்லாதீங்க. தி.ஜானகிராமன் எழுதாததா? எம்.வி.வெங்கட்ராம் சொல்லாததா? கரிச்சான் குஞ்சு எழுதாதா? வாழ்க்கையின் இருபக்கங்களையும் சொல்ல வேண்டும். இல்லைனால் வாழ்க்கை எப்போதும் ரோஜாக்கள் பரப்பி இருக்கும் ராஜபாட்டை தான் என்றே இளைஞர்கள், இளம்பெண்கள் நினைப்பார்கள். கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை எனப் பழகணும்.

      Delete
  19. என்னுடைய புரிதல், ஜீவி ஸார் இதை எழுதிய உடனேயே இது உண்மை சம்பவம் என்று சொல்லி இருக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறார்.  அதனால் இதை விமர்சிக்க வருபவர்களுக்கு ஒரு தயக்கம் வந்து விடும் என்று நினைக்கிறார்.  மற்றபடி இது மாதிரி மனிதர்கள் இருப்பார்கள் என்பதில் அவருக்கும் ஐயமில்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete