ஸெளந்தர்ய லஹரி எனப் பெயர் வைத்துவிட்டு ஆசாரியாரின் அவதாரத் தேதிகளிலேயே ஆழ்ந்து போகாமல் கொஞ்சம் லஹரியில் மூழ்குவோமா?? இது சாக்ஷாத் பரமேச்வரனாலேயே அம்பிகையைப் போற்றிப் பாடப்பட்டது என்பார்கள். அந்தக் கைலை சங்கரன் சொன்னதை நம் அவதார சங்கரர் கைலை சென்ற போது நேரிலேயே ஈசனிடமிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் இந்த ஓலைச்சுவடிகளையும் பெற்றுக்கொண்டதாய்ச் சொல்லுவார்கள். லிங்கங்கள் ஈசன் ஸ்வரூபம் எனில் இந்தச் சுவடிகளில் அம்பாளின் மந்த்ரமயமான ரூபஸ்வரூபம். ஆகவே இது உலக மக்களுக்குப் பயன்படவேண்டியே கொடுத்திருக்கின்றனர். இது வசின்யாதி வாக்தேவதைகளே அம்பாள் மேல் பாடியதாகவும் சொல்கின்றனர். ஆனால் லிங்க புராணத்திலோ இது மஹாமேருவில் விநாயகரால் எழுதப்பட்டது என்று இருப்பதாய்த் தெரிய வருகிறது. புஷ்பதந்தர் என்பார் மேருமலையில் இதை எழுதி வைத்ததாயும் ஒரு கூற்று. இன்னொரு கூற்று அவருக்கும் முன்னரே மேரு மலைச்சுவர்களில் இது காணப்பட்டது என்றும், ஸ்ரீ கெளடபாதர் இதைக் கிரஹித்துப்பின் ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாயும் சொல்லப்படுகிறது. காலத்தால் முந்திய சில ஆக்கங்கள் எப்போது எழுதப்பட்டது என்பதை விட்டுவிட்டு அதன் சாரத்திற்குப் போவோம்.
எப்படியானாலும் நமக்குக் கிடைத்தது ஆதிசங்கரர் மூலமே என்பது என்னவோ உறுதி. அவர் ஈசனிடமிருந்து இதைப் பெற்று வந்தபோது அங்கே காவல் இருந்த நந்திதேவர் இவர் கைகளில் இருந்த சுவடிகளைக் கண்டதும் அவற்றை வேகமாய்ப் பிடுங்கிவிட்டாராம். ஆசாரியாரிடம் 41 ஸ்லோகங்கள் கொண்ட சுவடிகள் மட்டுமே தங்க, திகைத்த ஆசாரியாரை அம்பிகை மீதம் உள்ள ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை சங்கரரையே பாடிப் பூர்த்தி பண்ண ஆக்ஞாபித்தாள் என்பதும் கேள்விப் படுகிறோம். இதில் முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஸ்ரீசக்ர வழிபாட்டு முறைகளையும், தாந்த்ரீக பூஜை முறைகளையும் விளக்குகிறது எனில் அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் அம்பிகையைக் கேசாதிபாதம் வர்ணனை செய்கிறது. முடிந்த வரையிலும் பார்க்கலாம். செளந்தர்ய லஹரி என்ற பெயர் அம்பாளின் கேசாதி பாத வர்ணனையைக் குறிப்பதால் மட்டும் வரவில்லை. அழகு அலைகள் அல்லது அழகு வெள்ளம் என்றெல்லாம் நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தால் அதன் உண்மையான அழகு என்னமோ குறைந்து தான் காணப்படுகிறது. அலைகள் கரை ஏறாது. கரை வரைக்கும் வந்துவிட்டுத் திரும்பக் கடலுக்குச் சென்று விடுகின்றன அல்லவா? அப்படித் தான் இங்கேயும்.
அம்பாளின் அருள் வெள்ளமானது நம்மைத் திரும்பத் திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்துச் சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றென்றும் மூழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது. அதோடு இந்த ஸ்லோகங்களை ஆசாரியாள் தன் பக்திப் பிரவாஹத்தின் மூலம் வெள்ளமாய்க் கொட்டும்படி பண்ணி இருக்கிறார். இந்த ஸ்லோகங்களின் மூலம் அம்பாளின் கருணை வெள்ளத்தை அவள் அன்பை அவள் நம்மை ரக்ஷிப்பதை, சிவ சக்தி ஸ்வரூபமாய்க் காட்சி அளிக்கும் அற்புதத்தை என்றென்றும் நினைவில் இருத்தி பக்தி செலுத்தலாம்.
பொதுவாக பக்திப் பதிவுகள் கூடக் கொஞ்சம் ருசிகரமாக இருந்தால் தான் போணி ஆகும். இதுவோ முழுக்க முழுக்க யோகம் சார்ந்த தத்துவார்த்தப் பதிவுகள். கூடியவரை தத்துவங்களைக் குறைத்துவிட்டு லௌகிகமாகவே எழுதினாலும் வரவேற்புக் கிடைப்பது கொஞ்சம் தான். எனினும் பிடிச்சவங்க படிச்சுக்கலாமே! அதான் மீள் பதிவாய்ப் போட்டு வருகிறேன்.
அம்பாளின் அருள் வெள்ளமானது நம்மைத் திரும்ப திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்து சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றேன்றும் மூழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது//
ReplyDeleteஉண்மை உண்மை.இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.
யோகம் சார்ந்த தத்துவார்த்தப் பதிவுகளை கொடுங்க. படிப்பார்கள்.
வாங்க கோமதி. என்னதான் இதற்கும் ரசிகர்கள் இருந்தாலும் குறைந்த அள்விலேயே இருப்பாங்க இல்லையா? வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Deleteஅம்பாளின் அழகு லஹரி, பக்தி லஹரி,
ReplyDeleteஈஸ்வர பக்தி, அர்த்த நாரீஸ்வர தத்துவம்
எல்லாமே நிறைந்திருக்கும் ஸ்லோகங்கள்.
நவக்ரஹங்களும் ப்ரீதி அடைந்து
நம்மை ரட்சிக்கும் என்ற அளவில்
படித்த நியைவு.
உங்கள் வழியே அம்பாள் உலா வரப் போகிறாள்.
மிக நன்றிமா கீதா.
வாங்க வல்லி, மிக்க நன்றி. அம்பிகை அனைவரையும் ரக்ஷிக்கட்டும்.
Deleteபதிவைப் படித்தேன். அருமை
ReplyDeleteலஹரி என்ற வார்த்தையே ஈர்க்கிறது
நெல்லை லஹரி என்பதன் அர்த்தமே அதுதானே...நம்மை மயக்கிவிடும்.
Deleteமலையாளத்தில் லஹரி எனும் வார்த்தை உண்டு இதே அர்த்தம்தான் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றாற் போல்..
கீதா
நன்றி நெல்லை. நன்றி கீதா ரெங்கன்.
Deleteகைலை என்று சொல்வதை விட கயிலை என்று சொல்லலாமே...! (பின்னே நான் படிச்சேன் என்பதை எப்படிதான் ப்ரூவ் செய்வது!)
ReplyDeleteநந்திதேவருக்கு என்ன பொறாமை.. அவர் ஏன் அப்படிச் செய்தார்?!
கயிலைனு தான் எழுதுவேன். சில சமயங்களில் கைலை என்றும் வருகிறது. நந்தி தேவர் சங்கரர் சுவடிகளைத் திருடிக் கொண்டு போகிறார்னு நினைச்சிருக்கலாமோ? ஏனெனில் இதைப் பற்றி விரிவாகச் சொல்லவில்லை. எதுக்கும் மறுபடி ஒரு தரம் என்னனு நந்தியையே கேட்டுடறேன்.
Deleteகீதாக்கா நானும் நினைத்ததை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். முன் கதை, எப்படி வந்தது என்பதை விட அவை என்ன சொல்கிறது என்ற சாராம்சம் தான் முக்கியம். ஏன் நந்திதேவர் அப்படிச்செய்தார்? சங்கரரே அம்பிகையைப் பாடவேண்டும் என்று அம்பிகை விரும்பியதால் இருக்கலாம். காரண காரியம் இல்லாமல் எதுவும் இல்லையே.
ReplyDeleteகீதா
நன்றாக இருக்கிறது
ஹாஹாஹா! தி/கீதா! காரண, காரியம் இல்லாமல் எதுவும் இல்லை தான்!
Deleteபதிவு நிறைய விஷயங்களைச் சொல்கிறது.
ReplyDeleteதொடர்கிறோம்
துளசிதரன்
நன்றி துளசிதரன்.
Delete