எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 10, 2021

சௌந்தர்ய லஹரி 4! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

 பல நாட்களாய் எழுதணும்னு நினைத்த ஒரு விஷயம் தான் செளந்தர்ய லஹரி. ஆனால் நான் அதை ஆழ்ந்து படிச்சதில்லை. ஆகவே தயக்கம் இருந்தது. இப்போ ஒரு குழும விவாதத்தில் திவாகர் திராவிட சிசு பற்றிக் கேட்க, நான் செளந்தர்ய லஹரியை எடுத்துக்காட்ட, திவாகர் அதை விபரமாக எழுதச் சொன்னார். அந்த ஒரு பதிவு தான், அத்தோடு முடிந்தது என நினைத்திருந்த சமயம் அதைப் படித்த பின்னர் ஜெயஸ்ரீ இந்த நவராத்திரிக்கா என்று கேட்க, அட, இது தோன்றவே இல்லையே என நினைத்தேன். முடிந்த வரை பார்க்கலாம் என்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். தீராத மன வேதனையும், அதனால் ஏற்படும் உடல் கோளாறுகளிலும் கவனம் செல்லாமல், மனம் திசை திருப்பப்பட்டு ஆறுதல் ஏற்படும் என்பதும் இன்னொரு காரணம். ஆக என் சொந்த லாபத்திற்காக நான் செய்யும் இந்த வேலையைப் புகழ்ந்து பின்னூட்டம் போடுவது சரியாய் இருக்காது. அம்பாளையே போற்றி வழிபடுவோம். அம்பாளே கதி என அவள் பாதத்தை இறுகப் பிடித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. ************************************************************************************* நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. பெண்ணைத் தெய்வமாய்ப் போற்றும் நாடு நம் நாடு. பெண்ணுரிமை பேசுவோர் இதை அடிமைத் தனம் எனக் கூறினாலும் இன்றளவும் அது மாறவில்லை என்றே சொல்லலாம். சக்தி உபாசகன் ஆன பாரதியும் சக்தி வழிபாட்டிலும், காளியை வணங்குவதிலும் காட்டிய ஈடுபாடு நாம் அறிவோம். காளியே அனைத்திலும் நிலைத்து நின்று இருக்கிறாள் என்பதை அவன்

 யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய்; 

தீது நன்மையெல்லாம்-காளி தெய்வ லீலையன்றோ" 

என்ற பாடலின் மூலம் காட்டுகிறான். மேலும் பாடலின் கடைசியில் காளியைச் சரணடைந்து அன்பு செலுத்தினால் அவளும் அனைத்தையும் தருகிறாள் என்றும் உறுதிபடச் சொல்கின்றான்.

 அன்பு தந்துவிட்டாய்-காளி-காளி

 ஆண்மை தந்துவிட்டாய் 

துன்பம் நீக்கிவிட்டாய்- 

காளி துயரமழித்து விட்டாய்! 

என்று காளியைச் சரணடைந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் எனக் கூறுகிறான். இது உண்மை என்பதையும் அறிவோமல்லவா! அன்னையின் பாதங்களைச் சரணடைந்தால் அவளே கதி என இறுகப் பற்றிக்கொண்டு விட்டால் அந்தக் குழந்தையை அவள் எட்டியா உதைப்பாள். இந்த எண்ணங்களோடு தெய்வத்தின் குரல் புத்தகத்தில் செளந்தர்ய லஹரி விளக்கங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

எல்லாவற்றுக்கும் மேலே ஆச்சரியவசமாக நான் பிரித்த பக்கத்திலும் அம்பாளின் காலடிகளைப் பிடித்துக்கொண்டு கதறுவதையே பரமாசாரியாரும் கூறி உள்ளார். இந்த மனம் பல விதங்களிலும் வெட்கம் அடைந்து, பலராலும் துக்கம் அடைந்து, அதனால் அவமானம் அடைந்து அழுகிறது. துடிக்கிறது. ஆனால் நாம் அப்போதாவது அம்பாளைச் சரணடைய வேண்டாமா! மாட்டோம். உலகாயுத விஷயங்களில் மூழ்கி, அதிலேயே கவனமாக நமக்கு ஏன் இப்படி ஒரு கதி ஏற்பட்டது என்றெல்லாம் யோசிப்போம். அதன் பின்னராவது புத்தி வருமா என்றால் வராது. இவ்வுலகத்தை நாமா உண்டாக்கினோம்? எல்லாமே நம்மால் தான் என்பது போல் ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு மேலும் மேலும் மனம் புழுங்குவோம். கோபம், ஆத்திரம், அசூயை, எரிச்சல் எல்லாம் ஏற்படும். கொஞ்சம் யோசித்தால், சூரிய, சந்திரரை, மலையை, மரம், செடிகொடிகளை, புழுக்களை, பூச்சிகளை, விலங்குகளை, பறவைகளை எது நம்மால் ஏற்பட்டது! எதுவும் இல்லை. நாமே அவள் சிருஷ்டி. நம் மனத்தை நம்மால் அடக்க முடியாமல் தவிக்கையில் இது நம்மால் இயலக்கூடிய ஒன்றல்ல, இதுவும் அம்பிகையின் மாயை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை அடக்க வல்லது தேவியின் திருநாமமே என்பதைப் புரிந்து கொண்டால் அவளே கதி எனச் சரணடைந்தால் அப்படி நாம் சரணடைவதும் அவள் அனுகிரஹத்தாலேயே என்பதைப் புரிந்து கொண்டால் மனம் என்பது ஒன்று இருப்பதே தெரியாமல் உடல் இருப்பதும் தெரியாமல் பக்திப் பரவசத்தில் மூழ்கி விடுவோம். ஆனால் எங்கே! அப்போதும் நாம் நம்மைக் குறித்தே தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். 

ஆனால் அம்பாள் அனைத்தையும் மன்னிப்பாள். தாய் எங்காவது தன் குழந்தையிடம் கோபமாய் நடந்து கொள்வாளா?? அப்படிக் கோபமாய் இருந்தால் அது நம் நன்மைக்கே தான் இருக்குமே அன்றி, சும்மாவானும் அம்மா கோபிக்க மாட்டாள் இல்லையா?? அதே போல் தான் அம்பாள் நமக்குத் தரும் கஷ்ட, நஷ்டங்கள் அனைத்துமே நம் நன்மைக்காகவே. நம்மைப் புடம் போட்டு நம் மனதைத் திடம் ஆக்கித் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தானும் ஆனந்தித்து, நம்மையும் ஆனந்தமாக இருக்கப் பண்ணுவதற்காகவே அனைத்தும் நடக்கின்றன. அன்னையைத் தொடர்ந்து வழிபடுவோர் நாளடைவில் தாம் அவளது குழந்தை என்ற மனோபாவம் தோன்ற ஆரம்பித்து ஒரு குழந்தையைப் போலவே நிர்மலமான மனத்தைப்பெறுவார்கள். குழந்தையாகவே மாறி, தேவி ஒருத்தியே அனைவருக்கும் தாய் என்ற எண்ணம் மேலிட்டு இருக்கும். பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அன்னை வடிவிலேயே பார்க்க ஆரம்பிப்பார்கள். 

நம் நாட்டில் தெய்வ வழிபாடு, அதிலும் பெண் தெய்வ வழிபாடு தொன்று தொட்டு, எப்போது எனத் தெரியாத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பழையோள் எனவும், ஐயை எனவும் போற்றித் துதித்து வந்திருக்கின்றனர். நம் தமிழ் மூதாட்டியான ஒளவையோ “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்கிறாள். மாணிக்கவாசகரோ தம் சிவ புராணத்தில், “தாயிற்சிறந்த தயாவான தத்துவனே!” எனவும், பிடித்த பத்துக்களில் “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே” எனவும் ஈசனுக்கும் மாத்ருபாவத்தை ஏற்றிப் பாடி இருக்கிறார் என்பதையும் காண்கிறோம். 

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ

 அன்புடைய மாமனும் மாமி யும்நீ

 ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ 

ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ 

என்கிறார் திருத்தாண்டகத்தில் அப்பரடிகள். அவ்வளவு ஏன்! திருச்சியில் மலைக்கோட்டைக் கோயிலில் “தாயுமானவர்” என்ற பெயரிலேயே அருளாட்சி புரிந்து வருகிறார். செட்டிப் பெண்ணின் பிரசவத்திற்காக அவள் தாயைப் போல் வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்த நிகழ்ச்சி அந்தக் கோயிலின் தலவரலாறாகவே சொல்லப் படுகிறது. இதிலிருந்து தாயின் முக்கியத்துவம் புரிகிறது அல்லவா. 

ஆனால் நம் சரீரத்தை, உடலை நமக்குக் கொடுத்த தாய் என்றேனும் ஓர் நாள் மறையலாம்; ஆனால் சர்வலோகத்துக்கும் மாதாவான ஜகத் ஜநநீயான அம்பாளோ நம்மை என்றும் தொடர்ந்து வருகிறாள். அதுவும் ஈசனையும் தன்னுள் அடக்கிய வண்ணம் சிவசக்தியாகத் தொடர்ந்து வந்து என்றென்றும் சாச்வதமாகத் தன் கருணையைக்காட்டிய வண்ணமே இருக்கிறாள். அத்தகையதொரு மாத்ருகாபாவத்தை நாம் அன்னையிடமே காணமுடியும். இந்த அன்னைக்கு எடுக்கும் விழாவே நவராத்திரி ஆகும். பொதுவாக விழாக்களும் பண்டிகைகளும் ஓரிரு நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த நவராத்திரிக்கு மட்டும் ஒன்பது நாட்கள்! ஒன்பது நாட்களும் அன்னைக்கு விழா எடுப்பார்கள். முக்கியமாய்ப் பெண்களுக்கெனவே ஏற்பட்ட மாபெரும் பண்டிகை நவராத்திரிப் பண்டிகை ஆகும். ஏன்? 

சிருஷ்டிக்குப் பெண்ணே முக்கியம். அனைத்துக்கும் ஆதாரம் அவளே. பெண்ணில்லையேல் சிருஷ்டி இல்லை. அழிந்து போகும் இவ்வுயிருக்கு எப்படி ஒரு தாய் இருக்கிறாளோ அவ்வாறே இகம், பரம் இரண்டிலும் ரக்ஷிக்கிற ஒரு தாயையே அம்பாள் வடிவில் நாம் வழிபடுகிறோம். இந்த மண்ணில் தோன்றிய புல்லில் இருந்து, புழு, பூச்சி, வண்டுகள், பறவைகள், அசையும் அசையாப் பொருட்கள், விலங்குகள், மலைகள், காடுகள் என அனைத்துக்கும் உருக்கொடுத்து சிருஷ்டியை ஏற்படுத்திய தாயை நாம் வணங்கி அவளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதே நவராத்திரியின் தாத்பரியம். மஹாபிரளயம் முடிந்து சிருஷ்டி ஆரம்பிக்கையில் முதலில் பரம்பொருள் உண்டாக்குவது இச்சா சக்தி என்னும் சக்தி. அதன் பின்னரே கிரியை உண்டாகிறது. முடிவில் ஞானம் கிட்டுகிறது. இவையே முறையாக முதல் மூன்று நாட்கள் துர்கை, நடுவில் மூன்று நாட்கள் லக்ஷ்மி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என வழிபடப் படுகிறது. இம்மூன்று சக்திகளும் சேர்ந்த திரிபுரசுந்தரியையே விஜயதசமி அன்று வெற்றித் தேவதையாக வழிபடுகிறோம். 


படங்களுக்கு நன்றி: கூகிளார்!

துர்கையானவள் வீரத்தின் விளைநிலமாக, சிவனுக்குப் ப்ரியமானவளாக, நெருப்பைப் பார்க்கையில் அழகாக இருக்கும், தொட்டால் சுடும் என்பது போல் சீற்றம் நிறைந்தவளாக, கேடுகளை அடியோடு அழிக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறாள். இந்த துர்கைகள் ஒன்பது பேர். அவர்கள் முறையே வன துர்கை, சூலினி துர்கை, ஜாத்வே துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை, லவண துர்கை 

லக்ஷ்மி: செல்வத்தின் பிறப்பிடம், விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்பவள், தாமரை மலர் போன்ற அழகுடையவள், அமுதமயமான இவள் வறுமையைப் போக்குவாள். கிரியா சக்தியான இவள் அஷ்ட லக்ஷ்மிகளாகவும் விளங்குகிறாள். அவர்கள் முறையே ஆதி லக்ஷ்மி, தன லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி

 சரஸ்வதி: ஆரவாரமில்லாமல் ஜொலிக்கும் வைரம் போன்ற இவள், கல்வியின் தெய்வம், ஞானச் சுடர், பிரம்மனுக்குப் பிரியமானவள். அஷ்ட சரஸ்வதியர் வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி. 

அதே போல் மூன்று தேவியரின் முப்பெரும் சக்திகளாக முதலில் துர்கைக்கு மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி ஆகியோரும் லக்ஷ்மிக்கு இந்திராணி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரும், சரஸ்வதிக்கு மஹாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகியோரும் சக்திகள். இவர்கள் அனைவரும் சேர்ந்தே மஹிஷனை அழித்தார்கள் எனப்படும். 


துணைப் புத்தகங்கள்: தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம், செளந்தர்ய லஹரி விளக்கங்கள் ஸ்ரீதேவி மஹாத்மியம், ராமகிருஷ்ணா பதிப்பகம், விளக்க உரை அண்ணா.

16 comments:

 1. ஓம் சக்தி.. ஓம் சக்தி..
  ஓம் சக்தி ஓம்!..

  ஆனந்த மயமான பதிவு.. அகிலமெல்லாம் அவளருள் தழைக்கட்டும்..

  பெண்மை வாழ்க..
  வாழ்க.. வாழ்கவே!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க தம்பி. உங்களைக்காணோமேனு நினைச்சேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 2. இன்றைய பதிவில் ஒரு பகுதி என் மனக்கஷ்டத்துக்கு மருந்தாக இருந்தது.  நிறைய இடங்களிலிருந்து எடுத்து அழகாகத்  தொகுத்திருக்கிறீர்கள்.  நேற்று என்னிடம் ஆட்டோக்காரர் நாம் ஏன் நவராத்திரி கொண்டாடுகிறோம் என்று கேட்டார்.  இந்தப் பகுதியை முன்னரே படித்திருந்தால் அவருக்கு இன்னும் கொஞ்சம் அழகாக விளக்கி இருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், இறை நம்பிக்கையே மனக்கஷ்டத்துக்கு மருந்து தானே! அதனால் தான் நம் தன்னம்பிக்கையும் கூடுகிறது. மிக்க நன்றி.

   Delete
 3. இந்தப் பதிவைப் படித்து விட்டு ஜகத்ஜனனி பாடல் ஒரு முறை கேட்டுவிட்டு வந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இன்னிக்குப் பூராவும் அந்தப் பாடலே மனதில் வந்து மோதிக்கொண்டிருக்கிறது.

   Delete
 4. அக்கா வரிகள் மனதிற்கு இதம். நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  இந்தப் பதிவின் வரிகள் அன்னையின் காலைப் பற்றிக் கொள்ள வேண்டும் புகழ வேண்டும் குறைகள் கூறாமல் என்ற வரி எனக்குக் கவிநயா அம்மாவின் அருமையான வரிகள் இப்பதிவுக்குப் பொருத்தமான பாடல் நினைவுக்கு வந்திட பாட வேண்டும் என்று தோன்றியது.. அவர்கள் அம்மனைப் பற்றி மட்டும்தானே கவி வரிகள் எழுதுவார்கள்....ஆனால் தொண்டை இரு வருடங்களாக ஒத்துழைக்காததால் அவங்களுக்கும் கூட பாடிப் பதிந்து அனுப்பாமல் இருந்தேன். பாடும் போது தொண்டை வறண்டு கமறும். சுருதி விலகும். அதனாலேயே பாடாமல் இருந்தேன்.

  இது அவர்களின் 2018 டிசம்பர் மாதம் பதிவு. அப்போவே மெட்டமைத்துப் பாடிப் பதிய முயற்சி செய்த போது இடையில் இருமல்...சரியாக வராததால் அனுப்பவில்ல. கொரோனாவிற்குப் பிறகு இன்னும் தொண்டை வறண்டு போகுது. எவ்வளவு வெந்நீர் குடித்தாலும்ஆனால் இன்று எப்படியாவது எப்படி வந்தாலும் சரி பாடிட வேண்டும் என்று அந்தப் பாடலைப் பாடிப் பதிந்தேன் இப்போதுதான்..பதிவைப் பார்த்ததும் ஓர் உந்து சக்தி!!!

  மிக்க நன்றி கீதாக்கா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மனதிற்கு இதமாகத் தான் இருக்கின்றன. உங்கள் ஆடியோ பதிவு வாட்சப்பில் கிடைத்துப் பாடலையும் கேட்டேன். இதில் இணைக்கலாமா என நினைத்து என்னால் முடியவில்லை/தெரியவில்லை. :(

   Delete
  2. அக்கா ஆடியோ மட்டும் இணைப்பது என்றால் அதற்கு ஒரு டெக்னிக் இருக்கிறது. அதை நானும் இனிதான் தெரிந்து கொள்ள வேண்டும். கவிநயாவிற்கு நான் க்ளவுட் ம்யூஸிக்கில் பாடி அனுப்பிக் கொண்டிருந்தேன். இப்போது அதன் பாஸ்வேர்ட் ஐடி மறந்துவிட்டது. வேறு ஐடி பாஸ்வேர்ட் போட்டு பதிந்தால் மீண்டும் பாடல்கள் பதியலாம். இது அப்படிப் பதியவில்லை எனவே இங்கு இணைக்க முடியாதுதான்...பரவாயில்லை அக்கா. இனி பாடினால் க்ளவுடில் பாடித் தருகிறேன்.

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   Delete
 5. அக்கா வரிகள் மனதிற்கு இதம். நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  இந்தப் பதிவின் வரிகள் அன்னையின் காலைப் பற்றிக் கொள்ள வேண்டும் புகழ வேண்டும் குறைகள் கூறாமல் என்ற வரி எனக்குக் கவிநயா அம்மாவின் அருமையான வரிகள் இப்பதிவுக்குப் பொருத்தமான பாடல் நினைவுக்கு வந்திட பாட வேண்டும் என்று தோன்றியது.. அவர்கள் அம்மனைப் பற்றி மட்டும்தானே கவி வரிகள் எழுதுவார்கள்....ஆனால் தொண்டை இரு வருடங்களாக ஒத்துழைக்காததால் அவங்களுக்கும் கூட பாடிப் பதிந்து அனுப்பாமல் இருந்தேன். பாடும் போது தொண்டை வறண்டு கமறும். சுருதி விலகும். அதனாலேயே பாடாமல் இருந்தேன்.

  இது அவர்களின் 2018 டிசம்பர் மாதம் பதிவு. அப்போவே மெட்டமைத்துப் பாடிப் பதிய முயற்சி செய்த போது இடையில் இருமல்...சரியாக வராததால் அனுப்பவில்ல. கொரோனாவிற்குப் பிறகு இன்னும் தொண்டை வறண்டு போகுது. எவ்வளவு வெந்நீர் குடித்தாலும்ஆனால் இன்று எப்படியாவது எப்படி வந்தாலும் சரி பாடிட வேண்டும் என்று அந்தப் பாடலைப் பாடிப் பதிந்தேன் இப்போதுதான்..பதிவைப் பார்த்ததும் ஓர் உந்து சக்தி!!!

  மிக்க நன்றி கீதாக்கா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கவிநயாவெல்லாம் இப்போது என்னை எல்லாம் நினைவில் வைத்திருக்க மாட்டார். என்றாலும் சுப்புத்தாத்தா அடிக்கடி கவிநயாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருப்பார்.

   Delete
  2. ஆமாம் கீதாக்கா சுப்புத்தாத்தா எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார். அவர்தான் எனக்குக் கவிநயாவின் பாடல்களைப் பாடி அனுப்புங்க அம்பிகையை மனமுருகப் பாடினால் அம்பிகையின் அருள் கிடைப்பது நிச்சயம் என்று சொல்லி என்னைப் பாட வைத்தவர் சுப்புத்தாத்தா.

   கண்டிப்பாக கவிநயா உங்களை நினைவு வைத்திருப்பார்.

   கீதா

   Delete
 6. நல்ல ஆரம்பம், சிறப்பாக தொடர அமபிகை அருளுவாள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பானுமதி. ஆரம்பித்து 3 நாட்கள் ஆகிவிட்டன.

   Delete
 7. கருத்து வந்திருக்கிறதே..அதுவும் டபுளாக!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இரண்டுக்கும் பதில் சொல்லிட்டேன். :)

   Delete