எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 16, 2021

தண்ணீர்! தண்ணீர்!

 உடனே விழித்துக் கொண்டு விட்டேன். அவரும் எழுந்து விட்டார். இடி எனில் பயங்கரமான இடி. ஜன்னல்கள் சார்த்திக் கண்ணாடிக் கதவு போட்டிருந்தது. அதையும் மீறிக்கொண்டு மின்னல் கிழித்துக் கொண்டு உள்ளே பாய்ந்த உடனேயே மீண்டும் ஓர் இடி.முன்னை விட அதிக சப்தத்துடன். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் போருக்கு ஆயத்தம் ஆகிவிட்டான். ஆனால் வருணனும் வாயுவுமோ ஒருவரோடொருவர் போட்டி வேண்டாம் என நினைத்தோ என்னமோ அதிவேகக் காற்றுடனும், மழைப்பொழிவும் ஆரம்பித்துவிட்டது.  மழையின் சப்தம் காதுகளை அறைந்தது. கதவுகள் சார்த்தி இருந்ததையும் மீறிச் சப்தம் கேட்டது.  கொட்டித் தீர்த்தது என்பார்கள் அப்படி ஒரு மழை. இதுக்கு முன்னாடி மழை பெய்த அளவெல்லாம் தெரியாது என்பதால் பெய்தால் பெய்யட்டும்னு விட்டுட்டோம். கவலைப்பட்டுக்கலை. காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்தாலும் எழுந்திருக்கலை. வாசல் தெளிக்கணுமா? கோலம் போடணுமா? ஸ்வாமி விளக்கேற்றணுமா? ஆகவே படுத்துக் கொண்டே இருந்தேன். மழையோ நின்றபாடில்லை. மெதுவாக ஆறரை மணி போல் மழை கொஞ்சம் குறைந்து தூற்றலாக இருந்தது. எழுந்து இயற்கைக்கடன்களை முடித்துக்கொண்டு பல் தேய்த்துக் காஃபி டிகாக்‌ஷன் போட்டேன்.


அதுக்குள்ளே அவரும் எழுந்து முதல் நாளே பார்த்து வைத்திருந்த பால் கடையில் போய்ப்பால் வாங்கி வருவதாகச் சொன்னார். வாசல் கதவைத் திறந்தால் எதிரே நடைபாதையெல்லாம் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அங்கே உள்ளே ஏற இருந்த மூன்று படிகளில் முதல் படி வரை நீர் வந்திருந்தது. ஒரு ராத்திரியில் இவ்வளவு தண்ணீரா என ஆச்சரியமாக இருந்தது. என்றாலும் அவர் உயரம் என்பதால் கவலைப்படாமல் இறங்கிச் சென்றார்.  அந்தப் பாதையெல்லாம் தண்ணீர் தேங்கி அங்கிருந்து வாசல் போர்ட்டிகோவுக்கு ஏறும் வழியெல்லாம் நீர். அங்கிருந்து தெருவில் இறங்கினால் அவருக்கே முழங்கால் தண்ணீர். மெல்ல மெல்லப் போனார். போகும்போதே பலரும் சப்தம் போட்டிருக்காங்க. ஆனால் பால் கடை நாலு வீடு தள்ளித் தான் என்பதால் போய் வாங்கி வந்துட்டார். பாலைக் காய்ச்சிக் காஃபி ஆளுக்கு ஒரு தம்பளர் எடுத்துக் கொண்டு மிச்சம் பாலைக் காஃபி குடிச்சுட்டு வந்துக் காய்ச்சலாம்னு இருவருமே காஃபியை எடுத்துக்கொண்டு நாற்காலிகளில் உட்கார்ந்தோம். மணி ஏழு இருக்கலாம்.  "பட்" என ஒரு சப்தம். சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறி நின்று விட்டது. அதிசயத்திலும் அதிசயமாக ஒரு காற்று அடித்தாலே கம்பளியைத் தேடும் நம்மவருக்கு வியர்த்து ஊற்றுகிறது. அத்தனை நேரம் மின்விசிறிக்காற்றுக் குளிரில் இருந்த எனக்கு அப்பாடா என்றிருந்தது. இப்படித் தான் நாங்க இரண்டு பேரும் எல்லாவற்றிலும் கிழக்கும்/மேற்குமாக இருப்போம்.


மின்சாரம் நின்று போனதுக்கு ட்ரான்ஸ்ஃபார்மரில் பழுது இருந்திருக்கலாம்/சிறிது நேரத்தில் வந்துடும்னு நாங்க அதைப் பெரிசா எடுத்துக்கலை.  தம்பி வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துக் காஃபி குடிக்கப் பால்கிடைத்ததா/மின்சாரம் இருக்கா என்றெல்லாம் விசாரித்தார் தம்பி.  நாங்க காஃபி குடிச்சதையும் இன்னும் சிறிது நேரத்தில் போய்க் காலை ஆகாரம் வாங்கி வரப் போகிறார் என்பதையும் சொன்னேன். அங்கேயும் மின்சாரம் இல்லை எனவும்/பாலும் வரலை எனவும் தம்பி சொன்னார். மோட்டார் போட்டு நீரை மேலேற்ற முடியவில்லை. நாலைந்து குடித்தனங்கள் இருப்பதால் மேலே இருந்த டாங்கில் தண்ணீர் செலவாகி இருக்கிறது. இவங்களுக்குத் தண்ணீரும் கிடைக்கலை. மின்சாரம் வருமானு பார்க்கணும்னு சொன்னார். அந்த வகையில் நமக்குப் பரவாயில்லை. தண்ணீர் நிறையவே வருதுனு நாங்க நினைச்சோம். சிறிது நேரத்தில் இவர் காலை ஆகாரம்வாங்கி வரக் கிளம்பினார்.எனக்கு 3 இட்லி தவிர வேறே ஏதும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அவர் மறுபடி அதே போல் தூற்றலில் மழை நீரில் இறங்கிச் சென்றிருக்கிறார். நாங்க இருந்த தெருவில் இருந்து மாம்பலம் ஸ்டேஷன் ரோடு பக்கம் என்பதால் அங்கிருந்து ஏதேனும் ஒரு ஓட்டலில் காலை ஆகாரம் வாங்கலாம்னு நினைப்பு.

போகும்போது வழியில் பார்த்தவர்கள் எல்லாம் போகாதே/போகாதே என எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர். அங்கேயும் தண்ணீர் முழங்காலுக்கு மேல் இருந்திருக்கிறது. ஓட்டல்களில் எதுவும் திறக்கவில்லையாம். இவர் சாப்பிடணும்னு ஆசைப்பட்ட காமேஸ்வரி மெஸ் திறக்கவே இல்லையாம். ஏதோ ஒரே ஒரு ஓட்டல் மட்டும் திறந்திருக்க நல்லவேளையாக அது சைவ ஓட்டல் தான் என்பதால் அங்கிருந்து காலை ஆகாரம் வாங்கிக் கொண்டு வந்தார். மத்தியானத்துக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், புளியஞ்சாதம் எனக் கிடைக்கும் என்றும் சொல்லி இருக்காங்க. மத்தியானம் ஒரு மணிக்கு வரச் சொல்லி இருக்காங்க. சிறிது நேரத்தில் வந்துடும்னு நினைச்ச மின்சாரம் வரவே இல்லை. மின்சாரம் இல்லாமல் எப்படிச் சமைப்பது? ஆகவே திறந்திருந்த அந்த ஓட்டலையும் காலை ஒன்பது மணிக்கே மூடி இருக்காங்க. மழையோ விட்டு விட்டுப் பெய்கிறது. நீர் மறுபடியும் வெள்ளமாகப் பாய்கிறது. இதுக்கு நடுவே எங்க செர்வீஸ் அபார்ட்மென்ட் அருகே இருக்கும் ஒரு வீட்டில் அந்த நபர்கள் பேசிக் கொண்டதில் தெரிந்தது செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கப் போகிறார்கள் என்பது.

அதுக்குள்ளே அங்கே தம்பிக்கும் இந்த விஷயம் தெரிந்து நாங்க என்னசெய்யறோம்னு தொலைபேசினார். விஷயத்தைச் சொன்னோம். வெந்நீர் போட முடியாமல் குளிக்காமல் உட்கார்ந்திருந்தோம். சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதைச் சொன்னோம். அங்கே தம்பி மனைவி சாதமும், குழம்பும் ஏதோ ஒரு காயும் பண்ணி இருப்பதாகத் தம்பி சொன்னார். அதை வேணாக் கொடுத்தனுப்பவானு கேட்டதுக்கு இவர் வேண்டாம், இங்கே கடை ஏதேனும் திறந்திருந்தால் ப்ரெட் வாங்கிக் கொண்டு பால் கடை மாமா காஃபி, தேநீர் தருவதாய்ச் சொல்லி இருக்கார்னு சொல்லிட்டு அதை வாங்கிக்கறேன் என்றார். ஆனால் போனால் தெருவில் எந்தக் கடையும் திறக்கவே இல்லை.பால்கடையில் பாலும் இல்லை தீர்ந்துவிட்டது. ப்ரெடா? ஏது? கடை இருந்தால் தானே ப்ரெட்! ஒரே குழப்பம். மறுபடி விடுதிக்கு வந்தார். இரண்டு பேருமே தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லைனு குளிச்சோம். தேவையான துணிகளைத் துவைச்சோம். அதுக்குள்ளே தம்பியோட பெரிய பிள்ளை தொலைபேசியில் எங்களை அழைத்து மணி பனிரண்டு ஆச்சே, சாப்பாட்டுக்கு என்ன பண்ணினீங்கனு கேட்டார். கடை ஏதும் திறக்கலை/ப்ரெட் கிடைக்கலைனு சொன்னோம். உடனே தம்பியும் தொலைபேசியில் அழைத்துக் கேட்டுவிட்டு அங்கே அந்தத் தெருவிலேயே அருகே பத்து வீடுகள் தள்ளிக் குடியிருக்கும் நண்பர் ஒருவரை அழைத்து எங்களுக்குச் சாப்பாடு தர முடியுமா எனக் கேட்க. அவரோ சமைத்துத் தான் தரணும், இப்போச் சமைக்க ஆரம்பிச்சாலும் ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆகவே ஒன்றரை மணி இரண்டு மணிக்குத் தான் சாப்பாடு கிடைக்கும்னு சொல்லி இருக்கார். தம்பியும் அதுக்கு ஒத்துக்கொண்டு எங்களை அழைத்துச் சாப்பாடு இரண்டு மணிக்கு வரும் என்றார்.

இதற்கு நடுவில் தம்பி வீட்டில் ஏற்கெனவே படிகள் வரை வந்திருந்த தண்ணீர் முதல் தளத்துக்கு வரலாமானு யோசிப்பதைப் பார்த்துட்டு அவங்க நான்கு பேரும் கூடிப் பேசி இப்போதைக்கு வீட்டைக் காலி செய்து கொண்டு கல்யாணத்துக்கு வேண்டிய முக்கிய சாமான்களோடு கல்யாண மஹாலுக்கு எதிரே இருக்கும் ஓட்டலில் போய்த் தங்கிடலாம்னு முடிவு செய்துட்டுத் தேவையான பொருட்களைச் சேகரம் செய்து கட்டி எடுத்துப் போக வசதியாகத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தனர். இவற்றுக்கு நடுவே தான் தொலைபேசி அழைப்புக்களும். அதோடு தம்பி நாங்க என்னதான் விடுதியில் உள்ளே நீர் வரலைனு இருந்தாலும் மின்சாரம் இல்லாததாலும் ஓட்டல்கள் எதுவும் இல்லை என்பதாலும் செம்பரம்பாக்கம் திறந்தாச்சு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டிருந்தது என்பதாலும் எங்களையும் ஓட்டலுக்கே அழைத்துச் செல்லப் போவதாகச் சொல்லி இருந்தார். ஆகவே எங்களை எப்போ வேண்டுமானாலும் கிளம்பத் தயாராக இருக்கச் சொன்னார்.

25 comments:

  1. சமைப்பவர் வீட்டிலிருந்து மதியம் உணவு கொண்டு வந்தார்களா ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, அதை எல்லாம் இப்போவே சொல்லிட்டா எப்பூடி?

      Delete
  2. வணக்கம் சகோதரி

    நடந்த நிகழ்வுகளை விபரமாக எழுதி உள்ளீர்கள். ஒரே இரவில் இத்தனை மழையா? ஆனால் நாங்கள் சென்னையிலிருந்த (லஸ்ஸில் 1984,85 என நினைக்கிறேன். ) போது ஒரு தடவை தீபாவளி முடிந்தவுடனும் விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த சூழல் மீறி, இப்படித்தான் ஒரே இரவு மழையில் வீடு சுற்றிலும் ரோடு முழுக்க வெள்ள நீர் சூழ்ந்ததை பார்த்திருக்கிறேன். நாங்கள் இருந்தது மாடி வீடு. ஆனாலும்,வீட்டின் படிகளில் எல்லாம் தண்ணீர் ஏறி விட்டது. சாலையில்
    இடுப்பளவு தண்ணீர். வெளியில் இறங்கவே இயலவில்லை. நீங்கள் எப்படியோ வெளியில் சென்று காலை ஆகாரம் வரை வாங்கி வந்து விட்டீர்கள். ஆனாலும் கஸ்டந்தான். மதிய உணவு அந்த நண்பர் வீட்டிலிருந்து வந்ததா? இல்லை, அதற்குள் தங்கள் தம்பி வந்து திருமண மண்டபத்தின் எதிரிலிருக்கும் ஓட்டலுக்கு அழைத்து சென்று விட்டாரா? கல்யாணத்தை வைத்துக் கொண்டு இப்படி மழை, வெள்ளம் என்று வந்தால் மிகுந்த சிரமந்தான். பாவம்...! அன்று நீங்கள் அனைவருமே கஸ்டபட்டு இருப்பீர்கள். தெய்வாதீனமாக இத்தனை இடரிலும் திருமணம் நன்றாக நடைபெற்றதற்கு நாம் இறைவனுக்கு கண்டிப்பாக நன்றி கூற வேண்டும். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நானாக இருந்தால்மூழ்கிப் போயிருப்பேன் என்பதோடு நடக்கவும் முடியாது. நம்ம ரங்க்ஸுக்குத் தண்ணீரோடு நல்ல பரிச்சயம். காவிரிக்கரையிலே இருந்தவர் இல்லையா? ஆகவே நல்ல மழை நாட்களில் வயல்வெளியில் வரப்புக்களின் மேல் நடந்து நீரில் இறங்கிப் பாலங்கள் இல்லா ஆற்றைக் கடந்துனு எல்லாம் போயிருக்கார். இருந்தாலும் எனக்கு என்ன கவலைன்னா எங்கானும் எலக்ட்ரிக் வயர் அதிலும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் வயர் அறுந்து விழுந்திருக்குமோ/அதில் காலை வைச்சுடுவாரோ, அல்லது மான்ஹோல்(manhole) திறந்திருக்குமோனு எல்லாம் கவலை. ராமநாமம் ஜபித்துக் கொண்டே வாசலில் இருந்த சின்ன வராந்தாவில் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

      Delete
  3. இப்போது இருக்கும் எங்கள் வீட்டில் ஒரு சௌகர்யம்.  வெளியே புயலே அடித்தாலும் ஒன்றும் தெரியவில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. @ஶ்ரீராம், ஒரு விதத்தில் நல்லது தான் என்றாலும் அக்கம்பக்கம் நடப்பது நமக்கும் தெரியணுமே!

      Delete
  4. இது மாதிரி சமயங்களில் காலை நிலவரமே கலவரம்  பார்த்ததுமே மதியத்துக்கு ஏதாவது வாங்கி வைத்திருக்கலாம்.   ஆனால் தம்பி இருக்க பயமேன்!  பாவம் பயமில்லா ஊரிலிருந்து பயமுறுத்தும் ஊருக்கு வந்து கஷ்டப்பட வேண்டிய நிலை!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஶ்ரீராம், காலையில் இட்லி கிடைச்சதே பெரிய விஷயம். மதியத்துக்கு அப்போவே அதிலும் காலை ஏழரை மணிக்கே சமைச்சுடுவாங்களா ஓட்டல்களில் எல்லாம்! மின்சாரம் போயிடும் என்பதை எதிர்பார்க்கலை.

      Delete
  5. மாம்பலம் மாதிரி இடங்களில் கடைகளே திறக்கவில்லை என்பது ஆச்சர்யம்.  நாங்கள் காபிப்பொடி வாங்கும் இடம் அங்குதான்.  நண்பரிடம் காபிப்பொடி வங்கச் சொன்னபோது தி நகர் செல்லும் வழியை மூடி இருப்பதாகச் சொன்னார்.  எப்படி காபி இல்லாமல் இருக்கப் போகிறோம் என்ற கவலை ஏற்பட்டது!!!   ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், இத்தனைக்கும் நாங்க இருந்தது லேக்வியூ சாலையில் இருந்து உள்ளே பிரிந்த தெருக்களில் ஒன்று. லேக்வியூ சாலையிலோ, ஸ்டேஷன் சாலையிலோ கூடக் கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. எங்களிடம் காஃபி சாப்பிடக் காஃபி பவுடர், ஃபில்டர், அதில் காலையில் போட்ட டிகாக்‌ஷன் மிச்சம், பால் எல்லாம் இருந்தும் அடுப்பு இல்லை. ஆகவே ஒரு காஃபி கூடப் போட்டுக் குடிக்க முடியலை.

      Delete
  6. ரொம்ப கலக்கமான பதிவு. முதலில் ஜாலியான பின்னூட்டம் இடலாமா என்று யோசித்தேன் (இங்க பெங்களூர்ல நச நசன்னு தூரல், சிறிதாக மழை என்று இருக்கிறது. பெரிய மழை தொடர்ந்து பெய்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்தேன் (நினைக்கிறேன்). பையன் ஆபீஸ் போகணுமே என்ற ஒரு கவலைதான்.

    ஆனால் இப்படி ஏதோ வெள்ளம் வந்ததுபோல பதிவைப் படிக்கும்போது உணர்ந்தேன்.

    ரொம்பவே கஷ்டமான நிலைமைதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை! இதுக்கே கலங்கினால் எப்பூடி? என்னோட மற்றப் பழைய அனுபவங்கள் எல்லாம் கேட்டால்/எழுதினால் என்ன சொல்லுவீங்களோ? இதே மழையினால் ஏற்பட்டவை மட்டுமல்ல/மற்ற விஷயங்களிலும் குடும்பச் சூழ்நிலையில் அனுபவித்த கஷ்டங்கள்/பிரச்னைகள்னு எத்தனையோ! :))))) இதெல்லாம் ஜூஜுபினு சொல்லலாம். ஏற்கெனவே மும்பை மழையில் முதல் முதல் மும்பை போனப்போ ரயில் பாதி வழியிலே நின்று ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாமும் எழுதி இருக்கேன்.

      Delete
  7. படிக்கவே கஷ்டமாக இருக்கே! எத்தனை இடர்பாடுகள்!

    சார் நல்ல உயரமானவர் அவருக்கே முழக்காலுக்கு மேல் என்றால் நீரின் வரத்து அதிகம்தான்.
    மதிய உணவு கிடைத்ததா? தம்பி அழைத்து போனாரா என்பதை படிக்க தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி! அவருக்கே முழங்காலுக்கு மேல் இருந்திருக்கிறது. கஷ்டப்பட்டுத் தான் போனார். போயிட்டு வரலைனால் எனக்கு ஒரு நிமிஷம் ஒரு யுகமாகப் போய்க் கொண்டிருக்கும். கவலை பிச்சுக்கும். அடிக்கடி மழைத்தண்ணீரில் நடக்கிறாரேனு அது வேறே தனிக்கவலை! :(

      Delete
    2. மழைத்தண்ணீரில் நடப்பது நல்லதில்லை. சிறிய காயங்கள் இருந்தாலும் பெரும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும், நம்மூர் மழைத்தண்ணீரில்.

      Delete
    3. உண்மைதான். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் வேறே ஏதும் தோணலையே!

      Delete
  8. பயங்கர திரில்லிங் அனுபவமாக இருக்கிறதே..?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.

      Delete
  9. Replies
    1. நன்றி திரு தனபாலன்.

      Delete
  10. ஏற்கனவே உடல் சார்ந்த கஷ்டங்கள்! அதோடு கஷ்டங்களே அனுபவங்களாக வரும்போது, அதனால் உடலும் பாதிக்கப்படும்போது சமாளிக்க மிகுந்த மனத்திண்மை தேவைப்படும். உங்களுக்கு அது அதிகமாகவே இருக்கிறது என்றாலும் வேறு ஊரில் பசிக்கான சாப்பாட்டிற்கே பிரச்சினைகள் வரும்போது மிகவும் கஷ்டப்பட்டிருந்திருப்பீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ! நான் கடவுளை வேண்டிப்பதே தாங்கும் சக்தியைக் கொடு என்பது மட்டுமே! ஆனால் வரும் துன்பங்கள் எல்லாம் அவனருளால் சூரியனைக் கண்ட பனித்துளி போல் விலகிவிடும் என்பதையும் அனுபவங்களில் உணர்ந்திருக்கிறேன். அவனன்றி ஓரணுவும் அசையாது!

      Delete
  11. ஓ கீதாக்கா நீங்க சென்னைக்கு கல்யாணத்துக்குப் போன போது மழை வெள்ளத்தில் மாட்டிக் கொண்டீர்கள் இல்லையா....முதலில் வாசித்த போது என்னடா இது ஸ்ரீரங்கத்திலும் அதுவும் வீட்டுப் படி, தண்ணீர் என்றதும் குழம்பிப் போனேன் அப்புறம் புரிந்தது. எதுவுமே கிடைக்காமல் அப்புறம் என்ன செய்தீர்கள்? கல்யாண ஹாலுக்கு எப்படிப் போக முடிந்தது கார் கூட போக முடியாதே முட்டளவு தண்ணீர் என்றால்? சாதாரண நாள் என்றால் கூட ஏதோ ஒப்பேற்றி விடலாம் இது கல்யாணம் எனும் போது எப்படிச் சமாளித்தீர்கள்/தார்கள்?

    எங்கள் ஊரிலும் தண்ணீர் ஆற்று வெள்ளம் மரிந்து பாய்ந்தது. ஆனால் பிரச்சனைகள் இல்லை. எல்லாமே கிடைத்தது ஊருக்குள்ளேயே. தண்ணீரும் 3, 4 மணி நேரத்தில் வடியத் தொடங்கி காலையில் ஒன்றுமே இல்லை. தேங்கியது எல்லாம் வயல் வெளிகளில் வெட்ட வெளிகளில் தோப்புகளில் தான்.

    ஆனால் எங்கள் ஊர்களும் கூடிய சீக்கிரம் சென்னையாகிவிடும் அபாயம் வந்துவிட்டது அதுவும் நீர்நிலைகள் அதிகம் உள்ள ஊர்கள் எங்கள் ஊர்

    பதிவு எழுதத் தொடங்கியிருக்கிறேன்.

    நீங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று தெரிகிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, நாங்கல்லாம் உங்களுக்காகப் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தோம். உங்கள் நிலைமை இப்போப் பரவாயில்லையா? இன்னமும் திருப்பதிசாரம் தானா? உங்கள் அப்பா இப்போது எப்படி இருக்கார்? தனியாக எப்படிச் சமாளித்தார்? இன்னமும் குமரி மாவட்டத்தில் மழை பொழிகிறதா? எல்லாவற்றையும் நகரமயமாக்குதல் என்னும் பெயரில் "நரகமாக" ஆக்கி விடுகிறோம். இயற்கையை ஆனாலும் அளவுக்கு மீறி எதிர்க்கிறோம்.

      Delete
  12. பருவ நிலை பிறழ்வு தான் காரணம்.

    ReplyDelete