எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 05, 2021

ஜெய் பீம் அண்ணாத்தே! :)

 ஹாஹாஹா, நான் தான் திரை அரங்கிற்குப் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேனாக்கும்னு நினைச்சீங்கன்னா இஃகி,இஃகி,இஃகி/ அதெல்லாம் இல்லை.  சிலர்/பலரின் விமரிசனங்களைப் பார்த்ததின் விளைவு இந்தப் பதிவு. தினமலர் தினசரியில் "ஜெய்பீம்" நன்றாக இருப்பதாக விமரிசனம் எழுதி இருந்தாங்க. ஆனால் பெரும்பாலோர் அதில் உள்ள குற்றம்/குறைகளைச் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.முக்கியமாய் எந்த இருளர் சமூகத்தை வைத்துப் படம் எடுக்கப்பட்டிருக்கோ அந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவரே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.  அது ஒரு பக்கம் இருக்கப் படத்திலும் ஏகப்பட்ட குறைகள் என்று சொல்கின்றனர். ஹிந்தி எதிர்ப்பும், இந்துக்கள் மேல் குற்றம் சாட்டுதலுமே திரைப்படத்தின் முக்கியக் கரு என்றும் சொல்கின்றனர்.  ஆனால் இதே படத்தை ஹிந்தியிலும் வெளியிட்டிருப்பது தான் மிக முக்கியமான ஒன்று. ஒரு இடத்தில் வடநாட்டுக்காரர் ஒருவர் தமிழகப் போலீஸ் அதிகாரியிடம் ஹிந்தியில் பேச, "தமிழில் பேசுய்யா!" என அந்தப் போலீஸ்காரர் சொல்கிறாராம். தெலுங்குப் பதிப்பிலும் "தெலுங்கில் பேசுய்யா" என்றே வருகிறதாம். ஆனால் ஹிந்திப் பதிப்பில் "உண்மையைப் பேசுய்யா" என அதே போலீஸ் அதிகாரி சொல்வதாய்க் காட்டி இருக்காங்களாம். அங்கே வடக்கே போய் ஹிந்தியை வேண்டாம்னு எப்பூடிச் சொல்லுவாங்க!

அதிலே வரும் ஒரு போலீஸ் அதிகாரி முக்கியமான வில்லன். நிஜத்தில் அவர் சார்ந்திருக்கும் மதம் வேறே. ஆனால் திரைப்படத்தில் அவர் பெயரை "குருமூர்த்தி" என்று மாற்றி அவரை வன்னியராகவும் காட்டுகிறார்களாம். சிவ பக்தராக இருக்கும் ஒருவரைக் (இருளர்கள் சிவபக்தர்கள். சிவனின் நேரடி வாரிசுகளாகச் சொல்லிக்கொள்வார்கள்.) கோமாளியாகவும் சித்திரித்து, "ஓம் நம சிவாய" என்னும்  பஞ்சாக்ஷரத்தையும் கேலி செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப் போல் பல்வேறு விதமான அடிப்படைத் தவறுகள். ஒரு கோடி நன்கொடை கொடுத்திருப்பதின் பின்னணியும் வருமான வரி விலக்கிற்காக என்று சொல்கின்றனர். எது நிஜம் என்பது தெரியவில்லை. ஆனால் வக்கீலாக நடித்திருக்கும் சூர்யா "கௌரவம்" ஜிவாஜி போலும் இல்லாமல் (ஜிவாஜி ரசிகர்கள் கவனிக்க) விதி "சுஜாதா" போலவும் இல்லாமல் அவர்களை விட நன்றாக நடித்திருக்கிறாராம். மிகவும் இயல்பாக இருக்கிறதாம். இஃகி,இஃகி,இஃகி! 

அடுத்து அண்ணாத்தே! "பாசமலர்" படத்தின் உல்டா என்கின்றனர். அதையே இன்னமும் பார்த்த பாடில்லை. அண்ணாத்தேயை எல்லாம் எப்போப் பார்ப்பது! ஆனால் இதில் கொஞ்சம் கலாசாரத்திற்கு எதிராக வசனங்கள் வருகின்றன என்கிறார்கள். கணவனோடு வாழ்வதைப் பிடிக்கலைனா இன்னொருத்தரைத்தொடர்பு கொள்ளலாம் என்பதை நியாயப்படுத்தும்படியான வசனங்கள் வருவதாய்ச் சொல்கின்றனர். கலாசாரக் காவலர் என்று அறியப்படும் ரஜினியின் படத்திலா இப்படி? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ. கவனித்த வரையில் அண்ணாத்தே படத்தைப் பற்றி யாரும் நன்றாக இருப்பதாகச் சொல்லவில்லை. :(


இதுக்குக் கருத்துச் சொல்றவங்கல்லாம் அவங்க அவங்க கருத்தைச் சொல்லி வைங்க! நான் மெதுவா வந்து பார்த்துட்டு பதில் கொடுக்கிறேன். நன்றி. வணக்கம். :))))))

18 comments:

  1. நேரில் இரு திரைப்படங்களையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு மிக அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். மிக நேர்மையான விமர்சனம்.

    ஆமாம்.. நீங்க சூர்யாவின் அதி தீவிர ரசிகையா இல்லை ரஜினியின் அதி தீவிர ரசிகையா?

    போஸ்டர் ஒட்டும் இடங்களிலோ இல்லை கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் பண்ணும் வீடியோக்களிலோ உங்களை நான் பார்த்ததில்லையே

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை, நான் இரண்டு பேருக்குமே ரசிகை அல்ல. அதோடு படங்களைப் பார்ப்பதே மிகக் குறைவு. அம்பேரிக்கா போனால் பொழுதை நகர்த்தப் பார்ப்பது உண்டு. அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் மட்டும். ரஜினி படமெல்லாம் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. சூரியா படங்களும் ஏதோ ஒன்றிரண்டு பார்த்திருக்கேன். தொலைக்காட்சி தயவால். எனக்கு சூரியாவைப் பிடிக்கவே பிடிக்காது.

      Delete
  2. சூர்யா ஒரு வியாபாரி. சிறுபான்மையினருக்காக மட்டுமே பேசும்படி திருமணத்தினாலும் தன் வியாபாரத்தினாலும் மாட்டிக்கொண்டவர். அவரைப் பற்றிப் பேசுவது வேஸ்ட்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. நேற்றைய தினமலரில் அன்புமணி ராமதாஸின் கடிதம், சூரியாவுக்கு எழுதப்பட்டது வந்திருக்கு. இன்று வரை சூரியா அதற்கு பதிலே சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்.இப்படித் தான் "சூரரைப் போற்று" படத்திலும் பிராமணர்களையும், ராணுவத்தையும் இழிவு செய்து எடுத்திருந்தார். பல விமானப்படை அதிகாரிகள் அதற்கும் மறுப்புச் சொல்லி இருந்தனர்.

      Delete
  3. தமன்னாவைக் காட்டி எப்படி கல்லா கட்ட முடியாதோ அதுபோல, நல்ல கதையில்லாமல் ரஜினியை மட்டும் காட்டி கல்லா கட்ட முடியாது.

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒண்ணும் "அண்ணாத்த" நல்ல கதையம்சம் உள்ளதாகத் தெரியவில்லை.

      Delete
  4. அண்ணாத்தே படம் திருப்பாச்சி, வேதாளம் போன்ற படங்களின் கலவை என்று சொன்னார்கள்.  படம் பார்க்கவில்லை, பார்க்கப் போவதுமில்லை!

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே மிகைப்படுத்துதல் ஶ்ரீராம். பார்க்கமால் இருப்பதே நல்லது.

      Delete
  5. எப்படியோ ஜெய்பீம் வெற்றிப்படமாகி விட்டது.  அதில் இதை எல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள்?  மேலும் யாரோ சொல்கிறார்கள், சரி..  எந்த உண்மைச் செய்தியின் அடிப்படையில் இதைப் படம் எடுக்கபப்ட்டிருக்கிறது என்கிற விவரம் தெரிந்தால்தான் இவர்கள் சொல்லி இருக்கு விவரங்கள் சரியா என்று பார்க்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. நீதிபதி சந்துருவின் தீர்ப்பை ஒட்டி எடுக்கப்பட்ட படம்னு நினைக்கிறேன். நீதிபதி சந்துருவின் இந்தத் தீர்ப்புக்குக் காரணமான நீதிபதி மிச்ராவைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவே இல்லை. மிஸ்ராவைத் தன் வழிகாட்டியாக நீதிபதி சந்துரு பின்பற்றினாரோ?

      Delete
  6. எந்தப் படம் பார்க்கவும் விருப்பம் இல்லை:)
    நல்ல நல்ல குறும்படங்கள் ,பழைய படங்கள்
    நெட்ஃப்ளிக்ஸ் இல
    வருகிறது.
    அது போதும் என்று தோன்றுகிறது.

    நானும் இந்த விமரிசனங்களைப் பார்த்தேன்:)

    நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்கள் படங்களை விட
    அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி, இன்னும் ஜெய் பீம் படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. "ஜெய் பீம்" என அம்பேத்கர் பெயரைச் சொல்லி விளம்பரத்துக்காகவே எடுக்கப்பட்ட படம்னு நினைக்கிறேன். இருளர் சமூக மக்களே மறுப்புத் தெரிவிக்கின்றனர்.

      Delete
  7. நான் ஜெய் பீம் படம் பார்த்தேன். எனக்கு படம் பிடித்திருந்தது. விசாரணை படம் போலவே இதிலும் போலீஸ் அராஜகத்தை நிஜமாக காட்டியிருந்தார்கள். ஆனால் அதற்குப் பின்னால் இத்தனை உள்ளடி வேலைகள் என்பது சில காணொளிகளை பார்த்த பொழுது தெரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி. நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவராக இருப்பதால் மற்றப்படங்களை ஒப்பிடுகையில் இது நன்றாகத் தோன்றி இருக்கலாமோ என்னமோ!

      Delete
  8. வணக்கம் சகோதரி

    நலமா? உங்களை பார்க்கவே முடியவில்லையே? தீபாவளி படங்களை பார்த்த அசதியிலிருந்து இன்னமும் மீண்டு வரவில்லையா?:) தீபாவளி சிறப்பு படங்களை பார்த்து (படித்து) விமர்சனம் செய்தது நன்றாக உள்ளது. இப்போதுள்ள படங்களை பார்க்கும் ஆவலே எனக்கில்லை. அப்போதும் தீபாவளி ரீலீஸ் படங்களை உடனடியாக பார்த்தது கிடையாது. எப்போதுமே சூடு ஆறிப்போன அவல்தான் ருசியாக இருக்குமென விட்டு விடுவோம்..:) உங்களின் பதில் கருத்தும் அப்படித்தான் போலும் என நீங்கள் நினைக்கலாம். ஹா ஹா. ஹா தாமதமாகி விட்டது மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நான் ஒரு நாலைந்து நாட்களுக்கு ஊரில் இல்லை. தம்பி பிள்ளை கல்யாணத்திற்காகச் சென்னை சென்றிருந்தோம். மற்றபடி எப்போவுமே தீபாவளி ரிலீஸ் படங்களைப் பார்த்ததே இல்லை. சூடெல்லாம் ஆறிப்போனப்புறமாத் தான் பார்ப்போம், அதுவும் தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் நேரமாக வந்தால் மட்டுமே.

      Delete
  9. எப்படி எல்லாம் பதிவு தேத்த வேண்டியதா இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் இல்லை கொத்து! "சூரரைப் போற்று" படத்திலும் சூரியா செய்திருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டி எழுதி இருந்தேனே. எரிச்சல் வருது இம்மாதிரிப் படங்கள் வருவதைப் பார்த்தால்!

      Delete