தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்
போன வருஷம் இரண்டு புத்தகங்கள் வெளியிட்ட பின்னர் மறுபடி புத்தகங்கள் வெளியிட முடியாதபடி பிரச்னைகள். மோசமான உடல் நலக்குறைவு. தொகுத்துப் பிழை திருத்தம் பார்க்க முடியாமல் நேரமின்மை என்று இருந்துவிட்டது. இப்போத் தான் ஒரு பத்து நாட்களாக முனைந்து இந்தப் புத்தகத்தையும், "பாரம்பரியச் சமையல் பகுதி 2" ஆம் புத்தகத்தையும் தொகுத்துக் கொண்டேன். பாரம்பரியச் சமையல் புத்தகத்தில் வேலை இன்னும் மிச்சம் இருப்பதால் முதலில் பயணக்கட்டுரைகள் தொகுப்பை அனுப்பினேன். போன வாரமே வெளி வந்திருக்கணும். ஏதோ தொழில்நுட்பக் கோளாறினால் என் பக்கம் சரியாகச் செய்தி வரவில்லை. பின்னர் வெங்கட்டும் பயணத்தில் சென்று விட்டார். வந்துட்டாரா எனத் தெரிந்து கொண்டு இன்று மீண்டும் முயன்றதில் வெங்கட் இதை வெளியீடே செய்துவிட்டார். முன்னால் இரண்டு புத்தகங்களுக்கும் அவரே லிங்க் அனுப்பி இருந்தார். ஆகவே கொடுக்க வசதியாக இருந்தது.
இந்தப்புத்தகத்திற்கு லிங்க் எப்படி எடுப்பனு எனத் தெரியாமல் (ஹிஹிஹிஹி, அ.வ.சி.) அமேசான் பக்கத்திற்கே போய்ச் சுட்டியைக் காப்பி செய்து கொண்டு வந்து போட்டிருக்கேன். சரியாய் இருக்கும்னு நினைக்கிறேன். இலவசமான தரவிறக்கம் உண்டா என்ன என்பது குறித்துத் தெரியலை. பைசா கொடுத்துத் தான் வாங்கணுமோ என்னமோ! அடுத்ததும் "பாரம்பரியச் சமையல்கள்! பகுதி 2" புத்தகமும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம். நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் நாங்கள் சென்ற நவ திருப்பதிப் பிரயாணங்கள், நவ கயிலாயப் பிரயாணங்கள், மற்றும் குற்றாலம், தென்காசி, சங்கரன் கோயில் பயணங்கள், ஶ்ரீவில்லிபுத்தூர் சென்றது என எல்லாமும் இருக்கும். ஏற்கெனவே என்னோட "ஆன்மிகப் பயணம்" வலைப்பக்கத்தில் போட்டவை தான். அங்கேயும் போய்ப் படிச்சுக்கலாம். நன்றி.
புத்தகங்களை வெளியிடுவது மிகப் பெரிய முயற்சி அன்பு கீதா.
ReplyDeleteநம் வெங்கட் வெளியிடுவது இன்னும்
அருமை. அத்தனையையும் வரிசையாகத் தொகுத்து
பிழை இல்லாமல் பூரணமாக
அனுப்ப நிறைய உழைப்பு தேவை.
அன்பு வாழ்த்துகள்.
வாங்க ரேவதி. எடிட்டிங் செய்ய நேரம் எடுப்பது என்னமோ உண்மை. அப்படியும் ஒரு சில தவறுகள் இருக்கத் தான் செய்கின்றன.
Deleteபிறக்கும் புது வருடம் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.
ReplyDeleteவாங்க ரேவதி, அனைவருக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteவாழ்த்துகள் கீதாக்கா...
ReplyDeleteதிருநெல்வேலி என்றாலே என்னென்னவோ நினைவுகள்.
இலவசமான தரவிறக்கம் நாம் தேதி கொடுத்தால் அன்று குறிப்பிட்ட நேரத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாமே, கீதாக்கா.
கீதா
வெங்கட் தேதி கொடுத்திருந்தார். அது முடிந்து விட்டதுனு நினைக்கிறேன்.
Deleteஅடுத்த வெளியீட்டிற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
ReplyDeleteகீதா
நன்றி தி/கீதா.
Deleteஉங்கள் வெளியீடுகளுக்கு வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteநவகைலாயம் பற்றி அறிந்து கொள்ள ஆசை. என் இஷ்ட தெய்வம்.
கேரளத்தில் சிவன் கோயில்கள் பற்றி தகவல்களோடு கோயில்கள் காணொளியும் எடுக்க எண்ணம் உண்டு. எப்போது இறைவன் சித்தமோ, தெரியவில்லை.
துளசிதரன்
வாங்க துளசிதரன், உங்களால் முடியும். ஆனால் நேரம் தான் வேண்டும். விரைவில் உங்களுக்கு வாய்ப்பும் நேரமும் அமைந்து உங்கள் விருப்பப்படிக் காணொளிகளுடன் கூடிய தகவல்களைத் திரட்டிக் கேரளத்துச் சிவன் கோயில்களைப் பற்றி அறியதருமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Deleteஇரண்டு புத்தகங்களும் அமோகமாக வாசகர்களை அடைய வாழ்த்துகள். பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteவாழ்த்துகள் தொடரட்டும் மின்நூல்கள்...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteசுப கிருது வருகவே..
ReplyDeleteசுகங்கள் எல்லாம் தருகவே..
அறங்கள் எங்கும் பெருகவே..
அமுதத் தமிழ் நிறைகவே!..
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
எங்கள் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி.
Deleteதொடரட்டும் மின்நூல்கள்.. நல்வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி துரை தம்பி.
Deleteமகிழ்ச்சி, வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி முனைவரே! என்னால் தான் எல்லோருடைய பதிவுகளுக்கும் தொடர்ந்து வரமுடிவதில்லை. :(
Deleteபுத்தக வெளியீடு - வாழ்த்துகளும் பாராட்டுகளும். நீங்கள் சொன்னால் ஐந்த்து நாட்களுக்கு இலவசமாக தந்து விடலாம்.
ReplyDeleteஉண்மையில் உங்களுக்குத் தான் நன்றியும், வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Deleteவணக்கம் கீதா. நீண்ட நாட்களுக்குப் பின் உங்களுடைய புத்தகம் மூலம் உங்களுடன் தொடர்பு கொள்ளுகிறேன். தாமிரபரணிக் கரையில் புத்தகம் படித்தேன். நிறைய விஷயங்களை மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள். ஒவ்வொரு ஊரைப் பற்றியும் நிறைய தகவல்கள்.
ReplyDeleteஆழ்வார் திருவடி தொழல் அதாவது நம்மாழ்வார் மோட்சம் ஶ்ரீரங்கத்திலேயே நடைபெறுகிறதே. நீங்கள் சேவித்திருப்பீர்கள்
என்று நினைக்கிறேன்.
ஆழ்வார் திருநகரி பற்றி இன்னும் நிறைய எழுத இருக்கிறது. உங்களுக்கு எழுதி அனுப்புகிறேன். அடுத்த புத்தகத்தில் சேர்க்கலாம்.
அன்புடன் ரஞ்ஜனி
வாங்க ரஞ்சனி. நலமா? பேத்தி நலமா? புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்ததுக்கும் இப்போது விமரிசித்திருப்பதற்கும் மனமார்ந்த நன்றி. ஶ்ரீரங்கத்தில் ராப்பத்தில் கடைசி நாள் நடைபெறும் நம்மாழ்வார் மோக்ஷத்தைப் பார்க்க நான் போனால் நிஜம்மாவே மோக்ஷம் கிடைத்துவிடும். :) அவ்வளவு கூட்டம் நெரியும்/ ஆழ்வார் திருநகரி பற்றிய மேலதிகத் தகவல்களை உங்களுக்கு நேரம் இருக்கையில் எனக்கு எழுதி அனுப்பவும். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஎனக்கும் கருத்துப் பெட்டி மாறி விட்டது. ஆகவே இது எல்லோருக்கும் நடக்கிறதுனு நினைக்கிறேன்.
ReplyDelete