தமிழ்த்தாத்தாவிற்கான அஞ்சலிக்கு முன்னால் சில விஷயங்களைப் பார்ப்போம். இப்போதுள்ள தனித்தமிழ் ஆர்வலர்கள் சுமார் நூறாண்டுகள் முன் வரையும்/அதற்கும் முன்னரும் பிராமணர்கள் யாரையும் படிக்க விடவில்லை என்றும் முக்கியமாய்த் தமிழ் படிக்க விடவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தெரியுமா? பிராமணரான தமிழ்த்தாத்தாவே பிராமணரல்லாதவர்களிடம் தான் தமிழ் பயின்றார் என்பது. முதலில் உ.வே.சா அவர்கள் தமிழ் பயின்றது தன் தந்தையின் நண்பரான சிதம்பரம் பிள்ளை என்பவரிடம். திருவிளையாடல் புராணத்தை அவர் தான் உ.வே.சா. அவர்களுக்குக் கற்பித்தார். மேலும் தமிழ் கற்பதற்காக அவர் அலைந்த அலைச்சல்கள்.
உ.வே.சா. அவர்களின் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராக இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.தமிழாசிரியர் எங்குக் கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாகக் குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப் பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உ.வே.சா. பதிவுசெய்கிறார்
அதன் பின்னரே அரும்பாவூர் நாட்டார் என்னும் பெரும் செல்வர் மூலம் திருவாவடுதுறை ஆதீனத்தில் அப்போது இருந்த மஹா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்கச் சிபாரிசு செய்தார். இதற்கு நடுவில் உ.வே.சா. அவர்கள் விருத்தாசலம் ரெட்டியார் என்பவரிடம் தமிழ் கற்கும்போது பாடல்கள் எழுதுவதின் நுணுக்கங்களைக் கேட்டறிந்து கொண்டார். அதன் பிறகே மஹாவித்வான் அவர்களிடம் தொடர்பு ஏற்பட்டது. அதிலும் ஆதீனத்துடன் ஏற்பட்ட தொடர்பும் அதன் மூலம் தமக்குக் கிடைத்த குருவையும் உ.வே.சா. அவர்கள் தாம் பெற்ற பாக்கியம் என்று எண்ணி மகிழ்ந்தார். ஆதினகர்த்தர்களும் அக்காலங்களில் தமிழில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் வடமொழி அறிந்தவர்களாகவும் சுயமாகப் பாடல் புனையும் தகுதி பெற்றவர்களாகவும் அமைந்தது உ.வே.சாவுக்குப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்திற்று.
இது ஒரு பக்கம் இருக்க அக்கால கட்டத்தில் அதாவது உ.வே.சா.விற்குப் பின்னரும் பல தமிழ் வித்வான்கள் பிராமணரல்லாதோராக இருந்திருக்கின்றனர். அவர்களில் சிலர்கீழே!
ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை
சி.கே. சுப்ரமணிய முதலியார்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
பாரதி தாசன்
வையாபுரிப் பிள்ளை
தாமோதரனார்
உமாமஹேஸ்வரனார்
வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலீயார்
சாமிக்கண்ணுப்பிள்ளை
பா.வே.மாணிக்க நாயக்கர்
கே.என்.சிவராஜபிள்ளை
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
திருமணம் செல்வகேசராய முதலியார்
சி.வை.தாமோதரம் பிள்ளை
கே.என்.சிவராஜப்பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அருணாசலக்கவிராயர்
மாரிமுத்துப்பிள்ளை
முத்துத் தாண்டவர்
தாண்டவராய முதலியார்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
தாயுமான சுவாமிகள்,
ராமலிங்க வள்ளலார்,
மஹாவித்வான் சபாபதி முதலியார்,
ஆறுமுக நாவலர்,
ஷோடசாவதானம். தி.க. சுப்பராய செட்டியார்,
அஷ்டாவதானம் சபாபதி முதலியார்,
சிதம்பரம் சபாபதி பிள்ளை ஆகியோர்/
இன்னும் பலர் இருந்தாலும் நினைவிலும் தேடியதில் கிடைத்தவர்களையும் மட்டும் பட்டியல் இட்டிருக்கிறேன்.
சமீப காலத்தில் டாக்டர் மு.வரதராசனார், தெ.பொ.மீனாக்ஷி சுந்தரனார்
திரு வி.கலியாணசுந்தரனார்
ம.பொ.சி
ரசிகமணி டி.கே.சி
இவர்களுக்குப் பின்னர் வந்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி யார் இருக்கிறார்கள்? தேடிப் பார்த்துக் கொள்ளவும். இவர்களில் யாருமே பிராமணர்கள் அல்ல. உ.வே.சா. அவர்கள் இவர்களில் பலருடன் நெருங்கிய தொடர்பும் வைத்திருந்திருந்தார். தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவலில் பலரையும் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தெரிந்ததைத் தாமும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். ஆகவே பிராமணர்களுக்கும் மற்றவர்கள் கல்வி கற்காமல் போனதுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பின்னால் வந்த ஆங்கிலேயன் ஆட்சியிலேயே இந்தப் பேதங்கள் எல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இரு தரப்பிலும் துவேஷங்களைப் பரப்பி இருக்கின்றார்கள். ஆங்கிலேயன் வந்தான்; நம் கல்விக்கண்களைத் திறந்தான் என்பவர்கள் எல்லோருமே அதற்கு முன்பே நம் நாட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள், கோயில்கள், மாளிகைகள் மட்டுமில்லாமல் வைத்தியத்திலும் அறுவை சிகிச்சையிலும் கூட நம் மக்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆங்கிலேயன் வந்து தான் அறுவை சிகிச்சை நம் நாட்டில் அறிமுகம் என்பவர்கள் அதற்குப் பல காலங்கள் முன்னரே சுஸ்ருதரால் அறிமுகம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முறைகள் இருந்ததையும் அந்த அறுவை சிகிச்சை நிபுணர்களே பிற்காலங்களில் ஆங்கிலேயர்களால் ஒதுக்கப்பட்டுக் கடைசியில் நாவிதத் தொழில் மட்டும் செய்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும் அறிய மாட்டார்கள். ஆனால் அந்தக் காலங்களில் சுமார் நூறு ஆண்டுகள் முன் வரையிலும் அதன் பின்னரும் சில/பல ஆண்டுகள் பிரசவத்துக்கு மருத்துவச்சி/மருத்துவன் என்று அழைக்கப்பட்ட இந்த நாவிதர்கள் வந்தே பிரசவங்கள் நடைபெறும்/நடைபெற்றிருக்கின்றன.
இன்று தமிழ்த்தாத்தாவிற்கு நினைவு நாள்.இந்த நாளில் நாம் நமக்கு முன்னிருந்து தமிழ்த் தொண்டு செய்தவர்கள் அனைவரையும் நினைவு கூர்வோம்.
நல்லதொரு அஞ்சலிக் கட்டுரை. வித்தியாசமான முறையில் இந்த முறை அமைந்துள்ளது. சுவாரஸ்யமான விவரங்கள்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம். இப்போதெல்லாம் அதாவது கடந்த ஒரு வருடமாகப் பாடப்புத்தகங்கள் மற்றவற்றில் எல்லாம் உ.வே.சாமிநாதன் என்றும் மஹாவித்வான்(அடைமொழி இல்லாமல்) மீனாக்ஷி சுந்தரம் என்றுமே குறிப்பிடுகிறார்கள். :( இவங்களுக்கெல்லாம் இதுவே ஒரு சாதனை! :(
Deleteநீங்கள் கொடுத்துள்ள பட்டியலில் 19 பெயர்களை என்னால் அடையாளம் காணமுடிகிறது!
ReplyDeleteபலருக்கும் தெரிந்திருக்கும் ஶ்ரீராம்.
Deleteதமிழ்த்தாத்தாவை நன்றி மறவாமல் நினைவுகூர்வோம்.
ReplyDeleteஆமாம். ஆனால் இந்த அரசில் நினைவு நாள் அன்று சம்பிரதாய மரியாதை கூட இல்லை!
Deleteஇன்று தமிழ்த் தாத்தா அவர்களுக்கு நினைவு நாள்.. இந்த நாளில் நாம் நமக்கு முன்னிருந்து தமிழ்த் தொண்டு செய்தவர்கள் அனைவரையும் நினைவு கூர்வோம்..
ReplyDeleteமகிழ்ச்சி.. நன்றியக்கா..
கருத்துரைப் பெட்டி பாடாய்ப் படுத்தி விட்டது. தம்பி துரையின் கருத்துக்கு நன்றி.
Deleteஅதெல்லாம் தெரிஞ்சுக்க மாட்டோம்... தெரிஞ்சாலும் சொல்லிக்க மாட்டோம்!..
ReplyDeleteஎங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் மரிக்கென் கோஷ்டி தான் சொல்லிக் கொடுத்திச்சு..
மோழி ஒயிக..
காவி ஒயிக!..
ஆமாம், இவங்க இஷ்டத்துக்குப் பேசுவாங்க. பெட்ரோல், டீசல் விஷயத்தில் தமிழகபட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் விஷயங்களை வசதியாக மறந்துட்டு பிரதமரைக் குறை கூறுகின்றனர். :( என்ன செய்ய முடியும்!
Deleteபல தளங்களில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதன் என்று குறிப்பிடப் படுகின்றார்..
ReplyDeleteசூரியனைப் பார்த்து நாய் குலைத்தால் சூரியன் ஒளி சுருங்கிப் போகுமா? இவர்கள் பயம் இப்படி எழுதவைக்கிறது.
Deleteவல்லபாய், நாகேஸ்வரன் (ராவ் என எழுதாமல்) என் டி ராமா. என்றெல்லாம் எழுதப் பயந்த கோழைகள். இவர்கள் வீரம் மற்றவர்களிடம் செல்லாது. அதனால் இவர்கள் எப்போதுமே கொத்தடிமை இனத்தைச் சேர்ந்தவர்கள்.
Deleteஆமாம், அதைப் பார்த்தால் மனம் வேதனைப்படுகிறது. ஆனாலும் இவங்க சொல்லுவது தானே சட்டம்! நாம் எதுவும் செய்ய முடியாது.
Deleteஅவரது நினைவு நாளி்ல் நல்லதொரு தகவல்.
ReplyDeleteதங்களது பட்டியலில் சிலரை மட்டுமே நான் அறிவேன்.
நன்றி கில்லர்ஜி!
Deleteதமிழ் தாத்தா பற்றிய நல்ல கட்டுரை. வணங்குகிறோம் அவரை.
ReplyDeleteநன்றி மாதேவி. உங்க நாட்டில் விரைவில் நிலைமை சகஜநிலைக்குத் திரும்பப் பிரார்த்தனைகள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. தமிழ் தாத்தாவின் நினைவு நாளில், அவரைப் பற்றிய செய்திகளோடு அறியாத பல தகவல்களையும் தொகுத்து அழகாக தந்துள்ளீர்கள். தங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அத்தனைப் பெயர்களையும் குறிப்பிட்டு சொன்ன உங்களின் நினைவாற்றலுக்கு பாராட்டுக்கள். பதிவை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. இன்னமும் நிறையப் பேர்கள் விடுபட்டிருக்கிறார்கள். பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடவில்லை என்று சொல்லப்படுவதை அப்படி இல்லை எனக் காட்டுவதற்காகவே இவற்றைத் தொகுத்தேன். சொல்பவர்களுக்கெல்லாம் இந்தத் தமிழறிஞர்களைப் பற்றித் தெரிந்திருக்கணும். :)
Deleteநல்ல தகவல்கள் கீதாக்கா. தமிழ்த்தாத்தாவை அவரது நினைவுநாளில் மட்டுமின்றி எப்போதுமே நினைவுகூர்வோம்.
ReplyDeleteகீதா
நன்றி தி/கீதா.
Deleteபட்டியலில் ஒரு சிலரையேனும் எனக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒரு சின்ன ஆசுவாசம்
ReplyDeleteகீதா
நல்லது. எல்லோரையும் தெரிந்திருக்கணும்னு கட்டாயமெல்லாம் இல்லை.
Deleteதமிழ்த்தாத்தா உ. வே. சா அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தமிழை வளர்த்திருக்கிறார். பல அறியாத தகவல்களை ஒவ்வொரு முறையும் தருகின்றீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteதுளசிதரன்
நன்றி துளசிதரன். அந்தக் காலங்களில் ஆதீனத்தின் மடாதிபதிகள் அனைவரும் பன்மொழிகளிலும் அசாத்தியத் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களில் எவரும் பிராமணர் அல்ல.
Deleteஇப்போதைய தபிழர்களுக்கு சினிமாவை விட்டால் எதுவும் தெரியாது. தன்னை திராவிடற் என்று சொன்னாலும் புரியாது. தெரிந்ததெல்லாம் கொத்தடிமைத் தொழில். அதனால் கல்வி பிராமணர்களிடம் மட்டுமே இருந்தது என்று சொன்னால், ஆமாம், உண்மைதான், குவார்ட்டருக்கு 200 ரூ தர்றீங்களா என்று கேட்பதோடு அமைதியாயிடுவான்.
ReplyDeleteஆழ்ந்த படிப்போ வரலாற்று அறிவோ இப்போது பாடம் கற்கும்/கற்பிக்கும் எவருக்கும் இல்லை.
Deleteநல்லதொரு நினைவஞ்சலி.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteஅன்பின் கீதாமா,
ReplyDeleteதமிழ்த் தாத்தாவுக்குத் தாமதமாக அஞ்சலிகள் சொல்கிறேன்.
நீங்கள் சொல்லாவிடில் நினைவுக்கு வருவது
சிரமம். என்றும் நலமுடன் இருங்கள் அம்மா.