எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 10, 2022

சுண்டல், பாயசம், பானகம், நீர்மோர் சாப்பிடுங்க!

 கலக்கல் படம்! மறுபடி, மறுபடி பார்த்து ரசித்தேன். 



தற்செயலாக விமரிசனம் வலைப்பக்கத்தில் காவிரி மைந்தன் மாயாபஜார் படத்தின் டிஜிடல் வண்ணப் படத்தின் இரு காட்சிகளை இணைத்திருந்தார். அதைப் பார்த்ததும் எனக்கும் ஆசை வந்து படம் பார்க்கலாம்னு போனேனா! காவிரி மைந்தன் இணைத்திருக்கும் பாடல் காட்சியை மறுபடி பார்த்துட்டு அதற்கு இணைப்புக் கொடுத்தேன். கூடவே நமக்கு ரொம்பப் பிடிச்சக் கல்யாண சமையல் சாதம். இதற்கெல்லாம் ஈடு, இணை ஏது இந்தக் காலத்தில்! விருப்பம் உள்ளவர்கள் பார்த்து மகிழுங்கள். 

இன்றைய ஶ்ரீராமநவமிப் படங்கள்! கீழே!



இன்றைய அலங்காரத்தில் ஶ்ரீராமர். மல்லிகைப்பூச் சரம் மட்டும் நான் கைகளால் தொடுத்தது. எப்போவும் கதம்பமும் தொடுத்து மாலையாக்கித் தான் போடுவது உண்டு. ஆனால் இப்போல்லாம் உட்காருவது சிரமமாக இருப்பதால் கட்டிய கதம்பமாகவே வாங்கிடறார். 


இந்த உம்மாச்சிங்கல்லாம் ரோஜாப்பூ வைச்சுண்டு இருக்காங்க.  தினம் தினம் எல்லா உம்மாச்சிங்களுக்கும் பூ வைச்சு முடிப்பதற்குள்ளாக ஒரு மணி நேரம் ஆயிடும். அதுக்கப்புறம் விளக்கேற்றி ஸ்லோகம் சொல்லிக் கொண்டே நிவேதனம். சில நாட்களில் ஸ்லோகம் ஷார்ட் கட் ஆயிடும். பசி மிகுதியால்! :) உம்மாச்சி கோவிச்சுக்க மாட்டாரே!


இன்றைய நிவேதங்கள். கோலப்பலகை பக்கத்துப் பாத்திரத்தில் பாசிப்பருப்புச் சுண்டல், பக்கத்தில் பாயசம், மஹாநிவேதனம் என்று சொல்லப்படும் அன்னம். பக்கத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், உடைத்த தேங்காய்களுடன் பச்சை மஞ்சள். அதர்குப் பின்னால் சொம்பில் பானகம், பக்கத்துக்கிண்ணத்தில் நீர் மோர். இன்னிக்கு வடை எல்லாம் தட்டலை. நேத்திக்கு அப்பாதுரை வந்ததாலே அவருக்காகச் சிறப்பு உணவு ஏதும் பண்ணணுமேனு  முருங்கைக்கீரை அடை பண்ணினேன்.  ஆகவே இன்னிக்கு நோ வடை. முருங்கைக்கீரை அடையை எங்கள் ப்ளாக் குழுமத்தில் போட்டிருந்தேன். யாருமே கண்டுக்கலை. சாப்பிட்ட அப்பாதுரையைத் தவிர்த்து! :( க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நெல்லை கூட வரலை. :(



அடுப்பிலே அடை வேகும் படம் கூட இருக்கு. ஆனால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு மாதிரிக்கு இந்தப் படம் மட்டும் போட்டிருக்கேன். 

33 comments:

  1. சுண்டல், பாயசம், பானகம், மோர் எல்லாம் எடுத்து கொண்டேன். சுவாமி அலங்காரம், கோலம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    முருங்கை கீரை அடை நன்றாக இருக்கிறது.
    அப்பாதுரை சார் உங்கள் வீட்டுக்கு வந்து சென்றது மகிழ்ச்சி.
    பாடல்கள் பிடித்த பாடல். முதல் பாடல் வண்ணத்தில் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. எட்டாம் தேதிய பதிவுக்கு உங்களை எதிர்பார்த்தேன். ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க. நீங்க கவனிக்கலை போல. அல்லது உங்களுக்கு அப்டேட் ஆகி இருக்காது.

      Delete
    2. பார்க்கிறேன்

      Delete
  2. இரண்டு பாடல்களும் கேடாடு இரசித்தேன்.

    உம்மாச்சிகளின் அலங்காரம் நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி! பாடல்கள் என்றென்றும் ரசிக்கக் கூடியவை ஆச்சே!

      Delete
  3. பதிவின் ஆரம்பமும் நிறைவும் சாப்பாட்டில்! சாமியை விட சாப்பாடு ரசிக்கத்தான் செய்கிறது! ஓ..  பொறுமையாக ஒரு படம் பார்த்திருக்கிறீர்கள்!  ரசிக்கக் கூடிய படம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பாருங்க ஶ்ரீராம். இந்தப்பதிவு போட்ட உடனே எல்லோரும் வந்தாச்சு! :))))

      Delete
  4. அடிக்கடி பார்ப்பதால் உங்கள் உம்மாச்சி அறை மிகவும் பழக்கப்பட்டு விட்டது. பானகம், நீர்மோர் இங்கும் செய்தோம். செய்தோம் என்ன, பாஸ் செய்திருந்தார்! ஸ்ரீராம நவமி இனிதே நிறைவுற்றது!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், குழந்தை பிறப்புக்குப் பாயசம் வைக்க வேண்டாமோ? பானகம், நீர்மோரோடு நிறுத்திட்டீங்க போல!

      Delete
    2. அடடா...   அதை சொல்ல விட்டு விட்டேன்! பாயசம் இல்லாமலா?!

      Delete
  5. முருங்கைக்கீரை அடை பார்க்க கவர்ச்சியாக இருக்கிறது.  அப்பாதுரை ஸ்ரீரங்க விஜயமா?  எங்கள் பிளாக்கில் நன்றாகத்தானே கண்டுகொண்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடவும் நன்றாகவே இருந்தது ஶ்ரீராம். "எங்கள் ப்ளாகில் நன்றாகத்தானே கண்டுகொண்டார்கள்!" விம் போட்டு விளக்கவும்.

      Delete
  6. அன்பின் கீதாமா,
    அற்புதமான படங்கள். ஸ்ரீராம நவமிக்கு கீதாவின் படங்கள் இல்லாமலியா!!!

    துரை அங்கே வந்திருக்கிறாரா. அட!!
    முருங்கை அடை. சூப்பரா இருக்குமா.

    இராமனுக்கு நைவேத்யம் குறையாமல் செய்திருக்கிறீர்கள்.
    இங்கே இனிமேல்தான் ஆரம்பம்:)
    ஸ்ரீராம பரிவாரம் நம் எல்லோரையும்
    பரிந்து வந்து காக்க வேண்டும்.
    நலமுடன் இருங்கள் அன்பு கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. எங்க வீட்டுக்கு எதிரேயே இருக்கும் ஓட்டலில் தங்கிக் கொண்டு அங்கே இருந்து ஆட்டோவில் வர ஆட்டோக்காரரைக் கூப்பிட்டிருக்கார். :)))) ஹிஹிஹி, நல்ல ஆட்டோக்காரர். எதிர்த்தாப்போல் பாருங்க சார்னு சொல்லிட்டாராம். இதே சென்னையா இருந்தா வேறு வழியாகச் சுத்திக் கொண்டு கொண்டுவிட்டுவிட்டு ஐம்பது ரூபாயாவது வாங்கிக் கொள்வார்கள்.

      Delete
  7. இன்று நான் மாயாபஜார் கலர் படம் பார்க்க எடுத்துவைத்துள்ளேன். நீங்களும் அதனைக் குறிப்பிட்டிருக்கீங்க.

    ராமர் பட்டாபிஷேகம் படத்தைப் பார்த்தேன். என்றைக்காவது ஒரு நாள் பளிச்சுன்னு படம் எடுக்க அவர் அனுமதிக்கத்தான் போகிறார்.

    நான் நேற்று மல்லேஸ்வரம் கோவிலில் ஸ்ரீராம நவமிக்கான பாராயணங்களில் கலந்துகொண்டேன்.

    பிரசாதங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! க்ரேட் பீபிள் திங்க் அலைக்! :))))) மாயாபஜார் படம் பார்த்தீங்களா? நீங்க வந்து தான் அந்த வெளிச்சப் பிரதிபலிப்பு இல்லாமல் எடுக்கணும். எட்டாம் தேதிப் பதிவை நீங்களும் பார்க்கலைனு நினைக்கிறேன். அதிலே பழைய வீட்டிலே எடுத்ததில் பிரதிபலிப்பு வந்திருக்காது.

      Delete
  8. அடடே...அப்பாத்துரை சார் விஜயமா? முருங்கை அடைக்குத் தொட்டுக்கொள்ள என்ன?

    அடை பார்க்க நன்றாக இருக்கிறது. ஒரு மாதத்திற்குப் பிறகு, கடந்த பத்து நாட்களுக்குள் நான்கு தடவை அடைக்கு, தவலடைக்கு அரைத்துப் பண்ணிச் சாப்பிட்டாயிற்று.

    எபி வாட்சப் நிறைய மெசேஜ்களைப் பார்ப்பதில்லை. உடனுக்குடன் கிளியர் செய்துவிடுகிறேன். ஒரு முக்கியமான வேலையாக இருப்பதால் நேரம் கிடைப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். 2013 ஆம் வருஷம் வந்தார். அதுக்கப்புறமா நிறையத் தரம் கூப்பிட்டும் வரலை. இப்போத் தான் நேரம் வந்திருக்கு. நான் அவ்வப்போது ஒரு தரமாவது வாட்சப், மெசேஜ் பார்த்துடுவேன். முக்கியமானது எதுவும் வந்திருக்கும்.

      Delete
    2. சொல்ல மறந்திருக்கேன் நெல்லை. முருங்கைக்கீரை அடைக்குத் தொட்டுக்க வெண்ணெய், வெல்லம், மணத்தக்காளி வற்றல் குழம்பு.

      Delete
  9. முருங்கை அடை சூப்பர் கீதாக்கா..

    மாயாபஜார் படக்காட்சிகள் ரசித்தேன் கீதாக்கா. ரொம்பப் பிடித்த படம்.

    கீதா


    ReplyDelete
    Replies
    1. மாயாபஜார் பிடிக்காதவங்களும் உண்டா? அடையும் நன்றாகவே இருந்தது.

      Delete
  10. இங்கும் நீர் மோர், மற்றவை கோசுமல்லி, பழங்கள்,

    உங்கள் மல்லிப்பூ மாலை நீங்கள் தொடுத்தது அழகா இருக்கு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில் மல்லிகைப்பூச் செண்டு, மாலை என்றெல்லாம் கட்டிக் கொண்டிருந்தேன். இப்போ இந்த அளவாவது தொடுக்க முடியுதேனு சந்தோஷப் பட்டுக்கறேன்.

      Delete
  11. உங்கள் பிரசாதங்கள் பிரமாதம்!!! இங்கும் தள்ளிக் கொண்டேன்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க.

      Delete
    2. அவங்க நீர் மோர் தவிர வேறு எதைச் சாப்பிடப்போறாங்க. சும்மா அடிச்சு விடறாங்க கீர (க்கா)

      அது சரி... புதிதா எதுவும் இனிப்பு பண்ணலையா ஸ்ரீராமநவமிக்கு? எப்போப்பாத்தாலும் இதுதானா?

      Delete
    3. ஶ்ரீராமநவமிக்குப் பாயசம், வடை, நீர்மோர், பானகம் தான். எங்க அப்பா வீட்டில் வடைப்பருப்புப் பண்ணுவாங்க. இங்கே அது வழக்கம் இல்லை என்பதால் பாசிப்பருப்புச் சுண்டல்.

      Delete
  12. நல்லதொரு தரிசனம்..

    இல்லங்கள் தோறும் இறையருள் துலங்கட்டும்..

    ஸ்ரீராம ராம ராம..

    ReplyDelete
  13. சில ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட மாயாபஜார் (தெ) யூட்யூப்பில் பார்த்திருக்கின்றேன்...

    எத்தனை எத்தனை அர்ப்பணிப்பு உணர்வுடன் அந்தப் படத்தைச் செய்திருக்கின்றார்கள்..

    சாவித்ரி அவர்களும்
    SV ரங்காராவ் அவர்களும் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்..

    சேடிப் பெண்களாக நடிப்பவர்கள் கூட நம் மனதைக் கவர்ந்து விடுகின்றனர்..

    அந்தக் காலத்திலேயே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய படம்..

    வாழ்க அதன் கலைஞர்கள்!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இது எப்போ வந்ததுனே தெரியாது. சின்ன வயசில் நான் திருப்பாவை வகுப்புக்குப் போனப்போ அங்கே இந்த்ப் படத்தை ஓர் மார்கழி மாதம் இலவசமாக மதுரை கல்பனா திரை அரங்கில் காட்டினார்கள். என் தம்பியையும் அழைத்துப் போயிருந்தேன். இரண்டு பேருக்கும் நல்ல ஜூரம். அது நினைவில் இருக்கு. ஆனால் பின்னாட்களில் தொலைக்காட்சி மூலமே இந்தப் படத்தை நன்கு ரசித்தேன். அதன் பின்னரும் சில/பல முறைகள் தொலைக்காட்சி மூலம் பார்த்தாச்சு.

      Delete
  14. இணைத்த பாடல்கள் இரண்டுமே பிடித்த பாடல்கள். மீண்டும் கேட்டு/பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete