எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 18, 2022

கடமையை ஆத்திட்டு வந்தாச்சு!

 இன்னிக்கு ஒரு முக்கியமான கடமையை ஆத்திட்டு வந்தோம். என்னங்கறீங்களா? பூஸ்டர் டோஸ்! வெள்ளி அன்றே மொபைலுக்குச் செய்தி வந்தது. வழக்கமாய்ப் போட்டுக் கொள்ளும் தனியார் மருத்துவமனைகளை விசாரித்ததில் ஒன்றில் இப்போப் போடுவதில்லைனு சொல்லிட்டாங்க. இன்னொன்றில் போடுவதாகச் சொன்னார்கள். சரினு நேற்று ஞாயிறன்று பதிவு செய்யத் தொலைபேசினால் தொலைபேசியே எடுக்கலை. அதுக்குள்ளே சிலர் ஜி..எச்.சில் போடுகிறார்களே என்றும் சொன்னார்கள். முதல் முறை போட்டுக்கொண்ட ஊசிக்கும் இரண்டாவதாகப் போட்டுக் கொண்ட ஊசிக்கும் ஜி.எச்சுக்குப் போகலை. ஏனெனில் அப்போக் கூட்டம் அதிகம் இருந்த காரணத்தால். இப்போக் கூட்டம் இல்லை போட்டுக் கொண்டு உடனே வந்துடலாம்  என்றார்கள்.

ஆனாலும் இன்னிக்குக் காலம்பரத் தனியார் மருத்துவமனைக்கே போக முடிவு செய்தோம்.  வந்து சமைக்க வசதியாக ஏற்பாடுகளைப் பண்ணிட்டு வேலை செய்யும் பெண்மணி வந்துட்டுப் போனதும் கிளம்பலாம்னு முடிவெடுத்தோம். இன்னிக்கு அந்தப் பெண்மணி தாமதமாக எட்டேமுக்காலுக்குத் தான் வந்தாள்.

அவங்க வேலையை முடித்துக் கொண்டு கிளம்ப ஒன்பதே கால் ஆகிவிட்டது. உடனடியாக நாங்களும் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினோம். வாசலில் எப்போதும் ஆட்டோ நிற்குமிடத்தில் இப்போத் தடுப்புகள் போட்டிருப்பதால் ஆட்டோவே எதுவும் கண்களில் படலை. 

சென்றுகொண்டிருந்த ஒர் ஆட்டோவைக் கூப்பிட்டு பேரம் பேசி ஏறிக் கொண்டோம். தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் செல்லாமல் கோபுரத்தை நோக்கி ஆட்டோ செல்லவும் எனக்குள் சந்தேகங்கள். நம்மவரோ இப்படியும் போகலாம் போல என்றார். எப்படி? இது சுத்து இல்லையோ என்றேன். அவருக்கும் குழப்பம் தான். கடைசில் அந்த ஆட்டோகாரர் ஜி.எச்.சில் நிறுத்திவிட்டு இங்கே தான் போடறாங்க போங்க என்றார். நாங்க இறங்க மறுத்துவிட்டுத் தனியார் மருத்துவமனைக்கே போகச் சொன்னோம். சுத்த்த்த்த்தி வளைச்சுக் கொண்டு அங்கே கொண்டுவிட்டார்/எங்களைத் திட்டிக் கொண்டே என்பது உபரித்தகவல்.

அங்கே போகையிலேயே வாசலில் இருந்த செக்யூரிடி கிட்டத்தட்ட என் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்ல முயன்றார். மறுத்துவிட்டு நானே உள்ளே போனேன். அங்கே ஊசி போடும் அறை முன்னாலேயே இருந்தது. வாசலில் ஒரு செவிலிப்  பெண்மணி நின்று கொண்டு மருந்துகள் கையிருப்பில் இல்லை என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார். எங்க இரண்டு பேருக்கும் பேஸ்து அடித்து விட்டது.


ஒரு மாதிரியாகச் சமாளித்துக் கொண்டு வெளியே வரும்போதே நான் ஜி.எச்.சில் போய்ப் போட்டுக் கொண்டு விடுவோம் எனச் சொல்ல அவரும் சம்மதித்து அங்கே அப்போது வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி ஜி.எச்.சில் கொண்டு விடச் சொன்னோம். அவருக்குச் சரியாக இடம் தெரியாததால் முக்கியக் கட்டிடத்துக்குப் போக, நாங்க அங்கே இல்லைனு சொல்லி ஊசி போடும் ஆரம்பசுகாதார நிலையக் கட்டிடத்தைக் காட்டினோம்.


பின்னர் அங்கே சென்று அவங்க கிட்டே ஆதார் கார்டு, இரண்டு ஊசி போட்டுக் கொண்ட சான்றிதழ், இப்போ வந்திருக்கும் செய்தி எல்லாவற்றையும் காட்டினோம். ஊசி போட்டு அனுப்பினாங்க.  வாசலிலேயே ஆட்டோ பிடித்து சரியாகப் பத்து/பத்துக்கு வீட்டுக்கு வந்து சமையல் தொடங்கியாச்சு! இதுவே வேறே ஏதானும் ஊர் எனில் குறைந்தது ஆட்டோ பிடித்துப் போய் வர ஒன்றரை மணி நேரமாவது ஆகி இருக்கும். இங்கே போகும் இடங்கள் மட்டும் பக்கம் னு இல்லை/ மற்ற ஊர்களைப் போல் கூட்ட நெரிசலும் இல்லை. 

ஆக மொத்தம் முதல் ஊசி ஒரு தனியார் மருத்துவமனையிலும் இரண்டாவது ஊசி இன்னொரு தனியார் மருத்துவமனையிலும், மூன்றாவது ஊசி அரசு செலவில்/தயவில்  ஓசியிலும்  போட்டுக் கொண்டாச்சு. 


35 comments:

  1. வாய்ப்பிருந்தும் இன்னமும் நான் போட்டுக் கொள்ளவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்க வயசுக்கெல்லாம் இப்போத்தானே அறிவிப்பு வந்திருக்கு. எங்களுக்கெல்லாம் எப்போவோ சொல்லிட்டாங்க. ஆனால் எங்களுக்கான தேதி தாமதமாக வந்ததால் நாங்களும் இப்போத் தான் போட்டுக் கொண்டோம். இல்லைனா 3 மாசம் முன்னரே முடிஞ்சிருக்கும். எங்க பையர்/மருமகளெல்லாம் எப்போவோ பூஸ்டர் டோஸ் முடிச்சாச்சு.

      Delete
    2. இதற்கு பதில் வாட்ஸாப்பில் சொல்கிறேன்!!!

      Delete
    3. ஓகே, ஒண்ணும் அவசரம் இல்லை.

      Delete
    4. //வாட்சப்பில் சொல்றேன்// னா என்ன அர்த்தம்? நானெல்லாம் உங்களுக்கு 20-30 வயசு இருக்கும்னு நினைச்சுக்கிட்டிருக்கோம். உண்மை வயதை வாட்சப் மூலமா கீசா மேடத்துக்கிட்ட சொல்லப்போறீங்களா?

      Delete
  2. பேசாமல் முதல் ஆட்டோக்காரர் ஜி ஹெச்சில் விட்டதும் உள்ளே சென்று முயன்று பார்த்திருக்கலாம்.  அப்போதே முயன்றிருந்தால் உடனே சென்றதால் போட்டுக்கொண்டிருந்திருக்கலாமோ என்னவோ...

    ReplyDelete
    Replies
    1. என்னவோ அரசாங்க ஆஸ்பத்திரியாச்சே எப்படி இருக்குமோனு கவலை. ஆனால் போய்ப் பார்த்ததும் தான் தெரிகிறது. ஆனால் இங்கெ எல்லோருமே சொன்னார்கள், நன்றாய்க் கவனிப்பதாய்.

      Delete
    2. முதலில் அவர்களுக்குத்தான் சப்ளை வரும்.  அவர்கள்தான் தனியாருக்கும் பிரித்துக் கொடுப்பார்கள்.  என் கட்டுரையில் சொல்லி இருந்தேனே...  குறிப்பாக மாநகராட்சி மருந்தகங்கள்...

      Delete
    3. ஓஹோ, நான் கவனிச்சிருக்க மாட்டேன்/அல்லது மனதில் பதிந்திருக்காது.

      Delete
    4. சாப்பிடப் போறேன்.

      Delete
    5. ஆமாம் ஸ்ரீராம் சொல்லியிருந்தார்.சப்ளை பற்றி

      ஸ்ரீராம் சென்னையில் ஓரிடத்திலிருந்து ஓரிடம் சொல்றீங்களே.......இங்கு அதைவிட மோசமோ மோசம்...ட்ராஃபிக்....தூரம் எல்லாம்...

      கீதா

      Delete
  3. முடியாத நிலையிலும் இரண்டு இடங்கள் நழுவி மூன்றாவதும் முயற்சித்த உங்கள் பொறுமை வியக்க வைக்கிறது.  என்னால் அண்டஹ்ப் பொறுமை கடைப்பிடிக்க முடியாது.  அதிகபட்சம் ரிஅனாவது டியதில் முஐன்றதும் திரும்பியிருப்பேன்.  மேலும் சென்னையில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது என்பது....!

    ReplyDelete
    Replies
    1. நான் பொதுவாகவே விடாக்கண்டி/கொடாக்கண்டி. வீட்டுக்குப் போயிடலாம்னு யோசனை ரங்க்ஸ் முகத்தில் ஓடுவதைப் புரிந்து கொண்டு உடனே ஜிஎச். போய் ஊசியைப்போட்டுக்கொண்டே போகலாம்னு அறிவிப்பும் கொடுத்துட்டேன். ஆமாம், நானும் சென்னையில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் போவதைப் பற்றிய கஷ்டங்களை அனுபவித்திருக்கேன். அதனால் தான் சொன்னேன், அரை மணியில் இங்கே நாங்க திரும்பி வந்தாச்சு. மதுரையிலும் முன்னர் அப்படித் தான் இருந்தது. இப்போச் சுத்திச் சுத்திச் சுத்திச் சுத்திப் போக வைக்கிறாங்க. நேரம் எடுக்கிறது.

      Delete
  4. சூப்பரோ சூப்பர் கீதாஅக்கா....போட்டுக் கொண்டது. நாங்களும் மே மாதத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். இஇதுவரை மூத்தக் குடிமக்கள் என்பதால் நான் பின்னாடி எனக்கு ஊசி போட முடியாது என்று சொல்லிவிட்டாலோ என்று இருந்தோம். இப்போது போடலாம் என்று வந்துவிட்டதால் மே மாதம் அப்பா, நான் கணவர் எல்லாருமாகப் போலாம் என்று...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா. எங்களுக்கு இந்த ஏப்ரல் பதினெட்டாம் தேதி தான் போட்டுக்கணும் என்பது முன்னரே தெரிந்து கொண்டோம். இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டதில் இருந்து ஏதோ மாதக் கணக்கு வைத்திருந்தனர். இப்போ ஏப்ரல் பதினைந்தாம் தேதியில் NHPSMS செய்தியும் எங்க இருவருக்கும் அவரவர் பெயரில் வந்தது. இந்தச் செய்தியைக்காட்டியாகணும் ஊசி போட்டுக்கும் முன்னர். செய்தி வராமல் போனால் திருப்பி அனுப்பறாங்க இங்கே எல்லாம். ஆகவே தான் நேற்றுத் தேதிக்குப் போட்டே ஆகணும் என்பதால் போட்டுக் கொண்டு வந்துவிட்டோம்.

      Delete
  5. அக்கா அரசாங்க ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் செம கூட்டம் நாங்கள் அங்குதான் போட்டுக் கொண்டோம் போட்டுக் கொண்ட 3 வது நாள் கொரோனா தொற்றிக் கொண்டது. கூட்டத்தில் சிக்கிக் கொண்டதால்...அதன் பின் இரண்டாவது டோஸ் நான் சென்னையில் மாமியார் வீட்டில் இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் போட்டதால் அங்கு போட்டுக் கொண்டேன். கொரோனாவ்க்குப் பிறகு இத்தனை நாட்கள் ஆகியிருகணும் என்ற கணக்குப்படி.

    பாருங்க அரங்கன் சரியாத்தான் உங்களை கூட்டுக் கொண்டு சென்றிருக்கிறார் அரசு ஆஸ்பத்திரிக்கு!

    நாங்களும் இங்கு அரசு மருத்துவமனை போடுகிறதா என்று பார்க்கிறோம் ஏனென்றால் அங்குதான் சப்ளை வரும் அதன் பின்னர்தான் மற்ற மருத்துவமனைகள். இப்போது கூட்டமே இருக்காது என்பதால் அரசு மருத்துவமனை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் பார்ப்போம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாங்க முதல் ஊசி போட்டுக் கொண்டதும் ஒரு தனியார் மருத்துவமனை. இரண்டாவது ஊசியும் அப்போலோ மருத்துவமனையின் ஏற்பாட்டில் இன்னொரு தனியார் மருத்துவமனை. இப்போதும் முதலில் போட்டுக் கொண்ட தனியார் மருத்துவமனைக்குத் தான் போனோம். ஒரு ஊசிக்கு 950 ரூபாயோ என்னமோ சொன்னாங்க. அரசாங்கம் 250 ரூபாயில் போட்டுக்கலாம்னு சொல்லி இருக்கேனு கேட்டதுக்கு எங்களுக்கு அந்த உத்தரவு எல்லாம் வரவில்லைனு சொல்லிட்டாங்க. பரவாயில்லைனு தான் போனோம். ஆனால் பெருமாளுக்கு நாங்க செலவு செய்வது பிடிக்கலை போல! அங்கே மருந்து ஸ்டாக் இல்லைனு சொல்லிட்டாங்க.ஜிஎச்சுக்கு வந்து போட்டுக் கொண்டோம். ஊசி போடும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பளிச்சென்று வைச்சிருந்தாங்க. இத்தனைக்கும் பழைய நாள் கட்டிடம் தான். எனக்கு முக்கியமா இந்தச் சுத்தம்/சுகாதாரம் காரணமாகவே அரசு ஆஸ்பத்திரினா வேண்டாம்னு இருந்தேன். நேரில் போனால் எல்லாவற்றையும் முறியடிச்சுட்டாங்க. அத்தனை சுத்தம்.

      Delete
  6. என் மகன் போட்டுக் கொண்டுவிட்டான். முதல் வட்டத்திற்குள் வந்துவிடுவதாலும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எங்க பையர், மருமகள் எப்போவோ போட்டுக் கொண்டு விட்டார்கள். அவங்க கம்பெனி சார்பில் இதெல்லாம் ஏற்பாடு செய்துட்டாங்க. பெண், மாப்பிள்ளை, பேத்திகளும் போட்டுக் கொண்டாச்சு. சின்னப் பேத்திக்குத் தான் ஜூரம் வந்து அவதிப் பட்டாள்.

      Delete
  7. பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டாயிற்றா. நல்லதாயிற்று. எனக்கும் ட்யூ போட்டுக் கொள்ள வேண்டும். முதல் டோஸ் போட்டுக் கொஞ்ச நாட்களில் கொரோனா வந்தது. எனவே இரண்டாவது டோஸ் அதற்கேற்ப போட்டுக் கொண்டேன். இப்போது பூஸ்டர்.

    இங்கு அரசு ஆஸ்பத்திரியில் தற்போது போடுகிறார்கள். கூப்பிட்டுச் சொல்லி டோஸ் இருக்கா என்று கேட்டுவிட்டுச் சென்றால் போட்டுக் கொண்டுவிடலாம்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன். எங்க பையருக்கெல்லாமும் ஜூரம் வந்தது. நல்லவேளையாக நாங்க எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி விடுவதற்கான கை வைத்தியங்களைத் தினமுமே உட்கொள்ளுகிறோம். பப்பாளிப்பழம், மாதுளை போன்றவையும் அவ்வப்போது எடுத்துப்போம் அதனாலோ என்னமோ பிரச்னை அதிகம் வரலை. கைவலி மட்டும் தாங்க முடியாமல் இருந்தது. இப்போவும் இருக்கு. கை தூக்கக் கஷ்டம்.

      Delete
  8. நான்20ம் தேதி, வளாகத்திலேயே போட்டுக்கொள்ள ரெஜிஸ்டர் செய்திருக்கிறேன் (றோம்). மறுநாள் தொட்டமளூர் இரண்டு நாட்கள் பயணமாகச் செல்வதால் ஒரு தயக்கம் இருந்தது. பூஸ்டர் டோஸினால் பிரச்சனை இல்லைனு சொல்றாங்க. பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வளாகத்திலேயே ஏற்பாடு செய்தால் நல்லது தானே! நீங்கள் தொட்டமளூர் செல்வதற்கும் ஒண்ணும் பிரச்னை இருக்காது. ராம அப்ரமேயர் பார்த்துப்பார். மலையில் நரசிம்மரையும் பாருங்க நதிக்கரையிலேயும். எங்களுக்கு இருட்டிப் போச்சு என்பதால் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

      Delete
  9. நல்லது. அரசாங்க மருத்துவமனைகளில் கூட இந்த தடுப்பூசி வசதிகள் நன்றாகவே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. நன்றாகவே இருந்தது.

      Delete
  10. அன்பின் கீதாமா,
    நல் வாழ்த்துகள் மா. நல்ல படியாக விடாமுயற்சி செய்து
    தடுப்பூசி போட்டுக் கொண்டது., உங்கள் பொறுமையையும்
    தைரியத்தையும் மனம் நிறையப் பாராட்டுகிறேன்.
    கால் கைவலியோடு மாடியிலிருந்து இறங்கி விட்டால்
    ஏதாவது நல்லது நடக்க வேண்டுமே.

    அரசு மருத்துவமனை சிறப்பாக இருப்பது சந்தோஷம். நான் முந்தைய நாட்கள்
    நினைவில் சரியாக மதிப்பிடவில்லை.

    நாங்களும் ஜனவரியிலேயே போட்டுக் கொண்டு விட்டோம்.
    சின்னவனுக்குக் கூட போட்டாச்சு.
    எல்லாம் நன்மைக்குத் தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. உங்க உடம்பு இப்போ எப்படி இருக்கு? எங்களுக்கான மூன்றாவது டோஸ் போட்டுக்கொள்ளும் தேதி நேற்றே வந்தது. ஆகையால் கட்டாயமாய்ப் போட்டுக்கணும்னு போய்ப் போட்டுக் கொண்டு வந்துவிட்டோம். அவருக்குக் கொஞ்சம் சோர்வாகவும் களைப்பும் இருக்கு. எனக்குக் கைவலி இருக்கு. அவர் படுத்துக் கொண்டே இருக்கார். நல்லவேளையா ஜூரம் இல்லை. பெருமாள் அருள்.

      Delete
  11. பூஸ்டர் இப்போதுதான் போட்டுக் கொள்கிறீர்களா? நான் ஜனவரி 18ம் தேதியே போட்டுக் கொண்டு விட்டேன். அறுபது வயதிற்கு மேலானவர்களுக்கு நான்காவது டோஸும் போடத் தொடங்கி விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நான்காவது டோஸுக்கான விஷயம் இன்னமும் எங்களுக்கு வரலை. பூஸ்டர் டோஸுக்கு நேற்றுத் தான் தேதி கொடுத்திருந்தார்கள். நினைவூட்டல் செய்தியும் வந்தது.

      Delete
  12. தடுப்பூசி போட்டு வந்து விட்டது மகிழ்ச்சி.
    நானும் அமெரிக்காவில் போட்டு விட்டேன்.

    முதலில் அரசு மருத்துவமனை போய் போடாமல் வந்தாலும் மீண்டும் அங்கேயே போட்டு வந்து விட்டீர்கள்.

    மீண்டும் எப்போது போடுவார்கள் தனியார் மருத்த்வமனையில் என்று காத்து இருக்காமல் அரசு மருத்துவமனையில் ஊசி போட வேண்டிய நேரத்தில் போட்டு வந்தது நல்லது. காலவலி நேரத்தில் அலைச்சல் மிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! ஆமாம், முன்னரே சொல்லி இருந்தீங்க. பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டு விட்டதை. அரசு மருத்துவமனை என்பதால் கொஞ்சம் அலர்ஜி. அதான் யோசனை. அதோடு இல்லாமல் குறிப்பிட்ட தேதியையும் விட்டுவிடக் கூடாது அல்லவா!

      Delete
  13. வணக்கம் சகோதரி

    எவ்வளவு தடைகள் வந்தாலும், விடாப்பிடியாக தாங்கள் மூன்றாவது தடுப்பூசி போட்டு வந்ததற்கு வாழ்த்துகள். தாங்கள் கடமையை சரிவர செய்ய உறுதுணையாக இருந்து அதை நிறைவேற்றித் தந்த அந்த இறைவனுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. நீங்களும் போட்டுக் கொண்டாச்சா? சீக்கிரம் போட்டுக்கோங்க. உங்கள் மகன்/மருமகள் ஆகியோர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பார்கள் என நம்புகிறேன். வீடே வெறிச்சென்று இருக்கும். நாளாக ஆகச் சரியாகிவிடும்.

      Delete
  14. நீங்களே போட்டுக்கொண்டபிறகு நான் சும்மா இருக்கலாமா? நேற்று அப்போலோவில் போய் பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்டேன். 386 ரூபாய். பெங்களூரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நல்லது நெல்லை. இப்போத் தான் எந்த வயதுக்காரங்களும் போட்டுக்கலாம்னு அறிவிச்சுட்டாங்களே! இங்கே தனியார் மருத்துவமனையில் 900 ரூபாய்க்குக் கொஞ்சமே குறைவு. அரசு மருத்துவமனையில் தான் முழுக்க முழுக்க இலவசம். எதிர்பார்த்ததுக்கும் மேலே சுத்தமும் கூட.

      Delete