குலபதி என்றால் என்ன அர்த்தம்? ஆசார்ய ஹ்ருதயம் வலைப்பக்கம் 2008 ஆம் ஆண்டு முடிந்து 2009 ஆம் ஆண்டு பிறக்கையில் எழுதியதன் மீள் பதிவு. இப்போதைய சூழ்நிலைக்கேற்பச் சிற்சில வாக்கியங்கள் மாற்றத்துடன். அதோடு இன்று தெலுங்குப் புத்தாண்டு. என் அப்பா வீட்டில் கொண்டாடுவாங்க. இப்போ எப்படினு தெரியலை. :)
குலபதி என்றால் என்ன அர்த்தம்னு சிலர் நினைப்பாங்க. நம் நாட்டிலே திரு கே.எம். முன்ஷிஜி அவர்களுக்கும் குலபதி ஶ்ரீபாலகிருஷ்ண ஜோஷி அவர்களுக்கும் இந்தப் பட்டம் அவரவர் பெயருக்கு முன்னால் வரும். அதுக்கு பதில் எழுதி நிறைய நாட்கள் ஆகியும் போடமுடியலை. இன்னிக்குத் தெலுங்கு புது வருஷப் பதிவாகவும், அதே சமயம் ஆசார்ய ஹ்ருதயத்திலே வலைப்பக்கம் வாராவாரம் வியாழனில் குருவைப் பற்றிய பதிவுகள் போடுவோம். ஆகவே அந்தக் குறிப்பிட்ட வாரம் வியாழக் கிழமைப் பதிவுகள் தவறக் கூடாது என்பதாலும் அதிலே போட்டிருந்தேன்
முன் காலத்தில் ஆசாரியர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பெயர்ந்து கொண்டே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். படகுகளிலே தங்கள் சிஷ்யர்கள் கூட்டத்தோடு போய்ச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலை நகரையோ, அல்லது முக்கிய நகரையோ அடைந்ததும் அங்கே தங்கி இருந்து கொண்டு அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும், தங்களால் இயன்ற கல்வி போதனை செய்திருக்கின்றனர். இம்மாதிரி ஒரு ஆசாரியரிடம் பத்தாயிரம், இருபதாயிரம் மாணாக்கர்களுக்கு மேல் பயின்றதுண்டு. இப்போ எல்லாம் இருக்கிற Residential System of Schools and Colleges ஏதோ அதிசயமா நினைக்கின்றோம். ஆனால் அந்தக் காலங்களில் அது தான் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது. எந்த ஆசாரியரிடம் மாணாக்கர்கள் கற்றுக் கொள்கின்றனரோ அவர்களே தங்கள் மாணாக்கர்கள் எத்தனை பேர் இருந்தாலும், உணவும், உடையும் கொடுத்துத் தங்கள் மாணாக்கர்களை அறிவிலும், வீரத்திலும், விவேகத்திலும் சிறந்த குடிமக்களாய் ஆக்கி இருக்கின்றனர். இதற்கெல்லாம் அந்த நாட்டின் அரசர்களும் உறுதுணையாய் இருந்திருக்கின்றனர்.
பள்ளியின் பிரின்சிபால் என்பவர் எல்லா வகுப்புகளுக்கும் தினமும் நேரிடையாய்ப் பாடம் எடுக்க மாட்டார் அல்லவா? அதுபோல் இங்கேயும் முக்கிய ஆசாரியராய் இருப்பவர் பல வருஷங்கள் படித்துத் தேர்ந்த மாணாக்கர்களுக்கு மட்டுமே கடைசியில் குருகுல வாசம் முடியும் முன்னர் தன்னுடைய போதனையை நேரிடையாகத் தருவார். அது வரையில் அவரால் பயிற்றுவிக்கப் பட்ட சிஷ்யப் பரம்பரையினர் குருவாய் இருந்து பாடம் சொல்லித் தருவார். இம்மாதிரி சிஷ்யர்களுக்கு உணவும், உடையும் கொடுத்துக் கல்வியும் கொடுக்கும் ஆசாரியர்களே அக்காலத்தில் குலபதி என அழைக்கப் பட்டனர். வசிஷ்டர் ஒரு குலபதி என ரகுவம்சத்தில் சொல்லி இருப்பதாய்ச் சொல்கின்றார் நம் பரமாசாரியார். அதே போல் கண்வ ரிஷியையும் குலபதி என சாகுந்தலத்தில் சொல்லி இருக்கின்றார்களாம். இவை எல்லாம் பெரிய அளவிலான வித்யாசாலைகள். நமது பல்கலைக் கழகங்கள் மாதிரி இருக்குமோனு நினைக்கிறேன். இது தவிர சிறிய அளவிலான குருகுலங்களும் இருந்து வந்திருக்கின்றன
குலபதி திரு கே.எம். முன்ஷி. இவரால் எழுதப்பட்ட "கிருஷ்ணாவதாரம்" ஏழு/எட்டு பாகங்களையும் தான் நான் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்தேன். "பாரதிய வித்யா பவன்" ஆரம்பிக்கப்படக் காரணம் ஆனவர். பல பள்ளிகள், கல்லூரிகள் நடத்தியவர்.
குலபதி டாக்டர் ஶ்ரீ எஸ், பாலகிருஷ்ண ஜோஷி!
மிகப் பெரிய சம்ஸ்கிருதப் புலவர்/ தமிழகத்தைப் படிப்பில் முன்னேற்றம் காண வைத்ததில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. மஹாபெரியவர்/பரமாசாரியார் இவரைப் போற்றி இருப்பதோடு திரு ஜோஷி அவர்களும் பெரியவரிடம் ஈடுபாடு கொண்டவர். இவர் மூலம் வந்ததே தற்போதைய சிபிஎஸ்சி பாடத்திட்டம்.
"யோ அன்ன தானாதி போஷணாத் அத்யா பயதி" என்று ஆசார்ய லட்சணம் கூறுவதாயும் தெரிய வருகின்றது. இங்கே ஸ்ரீபாலகிருஷ்ண ஜோஷியையும், கே.எம். முன்ஷியையும் குலபதி என்றதற்குக் காரணமும் அவர்களால் நிறையப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வித்யாசாலைகள் ஏற்படுத்தப் பட்டதும், நல்ல முறையில் ஸ்ரீ ஜோஷி அவர்களால் தியாலஜிகல் பள்ளி ஆசிரியப் பதவி திறம்பட நிர்வகிக்கப் பட்டதாலும் கெளரவப் பட்டமாய்க் கொடுக்கப் பட்டது என்றும் தெரிய வருகின்றது. இது வே ஆசார்ய லட்சணம் என்று தெய்வத்தின் குரல் நாலாம் பாகத்தில் பரமாசாரியாரின் அருள் வாக்கில் இருந்து தெரிய வருகின்றது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
குலபதியை அறிந்து கொண்டேன் நன்றி.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் இப்பொழுது எதற்கு ? இன்று பங்குனி 18 தானே...
தெலு(ங்)கு வாழ்த்துகளோ...
வாங்க கில்லர்ஜி, ஆமாம், யுகாதி வாழ்த்துகள் சொல்லி இருந்தேன். எப்படியோ டெலீட் ஆகி இருக்கு. இப்போ அதைத் தமிழில் தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்துகள்னு மாத்திச் சேர்த்துட்டேன். கேட்டதுக்கு நன்றி.
Deleteஆமாம் கீதாக்கா இன்று தெலுங்கு வருஷப் பிறப்பு. நம் வீட்டில் கொண்டாடுவதுண்டு. இரு வீட்டிலும்.
ReplyDeleteஅப்பா இங்கு இருப்பதால் திருக்குறுங்குடி செல்லவில்லை அக்கோயிலில் தெ வ பி சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நம் வீட்டு உபயம் உண்டு. ஊரில் இருந்த வரை அப்பா இரவு புளியோதரை பிரசாதத்துடன் வரும் வரை நாங்கள் குழந்தைகள் (கூட்டுக் குடும்பம்) எல்லாரும் காத்திருப்போம். கொஞ்சமேனும் சாப்பிட்டுவிட்டுத்தான் படுப்போம் மீதியை அடுத்த நாள் காலை சாப்பிடுவோம். பல நினைவுகள்
கீதா
வாங்க தி/கீதா, என் மாமியார் வீட்டில் எல்லாம் கொண்டாடுவதே இல்லை. பார்க்கப் போனால் எங்க வீட்டில் அமர்க்களப்படுவதைப் பார்த்துச் சிரிப்பாங்க. :)))
Deleteகுலபதி என்பது தெரியும் உங்கள் பதிவிலிருந்து இன்னும் அறிந்துகொண்டேன் கீதாக்கா
ReplyDeleteநம் வீட்டிலும் குலபதி உண்டு ஹிஹிஹிஹி.....(அதாவது இப்போதைய கல்வியில் குலபதி!!!!) அதாவது ஊர் ஊராகப் போவதினால் சும்மா தமாஷ்!
கீதா
ரொம்ப நன்றி தி/கீதா.
Deleteஅசாத்தியம் கீதாக்கா நீங்கள் திரு முன்ஷி அவர்களின் கிருஷ்ணாவதாரம் பாங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நீங்கள் மொழிபெயர்த்திருப்பது மிகப் பெரிய விஷயம் சாதனை. பாராட்டுகள் வாழ்த்துகள் கீதாக்கா.
ReplyDeleteதிரு முன்ஷி பற்றியும் திரு பாலகிருஷ்ண ஜோஷி அவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டேன். எப்படியான உயர்ந்த மாமனிதர்கள்!!! நன்றி கீதாக்கா
கீதா
அது ஆச்சு ஒரு நாலைந்து வருஷம். ஆரம்பிச்சும் நாலைந்து வருஷம் ஆச்சு எல்லாப் பாகங்களும் முழுசாக முடிக்க. எட்டாம் பாகம் மட்டும் பாதியில் நின்றுவிட்டது. திரு கே.எம். முன்ஷி அவர்களின் எதிர்பாரா மரணத்தால். அச்சுப்புத்தகம் போட முடிஞ்சவரை முயற்சி செய்துட்டுப் பின்னர் விட்டுட்டேன். :(
Deleteநல்ல தகவல்கள். நன்றி. யுகாதி வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி.
Deleteஇனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள் மா.
ReplyDeleteஇனிமையான செய்திகளே காதில் விழவேண்டும்.
குலபதி என்ற சொல்லுக்கான விளக்கங்கள் மிகப் பயனளிப்பவை. அதுவும் பவான்ஸ்
ஜர்னல் நம்மை எத்தனை விதத்தில் வழிகாட்டி இருக்கிறது
என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
மறக்க முடியாத பத்திரிக்கை.
மனம் நிறை நன்றி.
ஆமாம், பவன்ஸ் ஜர்னல் விட்டுட்டேனே! நல்ல புத்தகம். இப்போ வருதானு தெரியலை.
Deleteகுலபதி என்று சாண்டில்யன் கதையிலோ, எதிலோ படித்திருக்கிறேனே தவிர விவரம் அறிந்திருக்கவில்லை. இன்று அறிந்தேன்.
ReplyDeleteதெலுங்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.
சாண்டில்யன் தான்னு நினைக்கிறேன் ஶ்ரீராம்.
Deleteகுலபதி குறித்த தகவல்கள் சிறப்பு. அனைவருக்கும் யுகாதி தின சிறப்பு வாழ்த்துகள்.
ReplyDeleteகுலபதி!..
ReplyDeleteஉங்கள் பதிவிலிருந்து இன்று அறிந்து கொண்டேன் கீதாக்கா.
புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்..