எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 14, 2006

அதிர்ச்சித் தகவல், திடுக்கிடும் உண்மைகள்

வ.வா.சங்கத் தலைவர் திரு கைப்புள்ளயின் புகழ் திக்கெட்டும் பரவியிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த வாரம் கல்கி பத்திரிகையில் கூட சங்கப் புகழ் பாடி வந்துள்ளது. 21-5-06 தேதியிட்ட கல்கியில் 35வது பக்கத்தைப் பார்க்கவும். கைப்பு என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் தலைவரின் புகழும் அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சங்கப் புகழும் பாரெங்கும் புகழ் மணம் பரப்பி வருவது நாமறிந்ததே.இந்தப் புகழ் பற்றியும் அவர் தம் ஆற்றல் பற்றியும் பொறாமை கொண்ட சில துன்மதியாளர்கள் நம் கைப்புள்ள மற்றும் கைப்பொண்ணு இருவரையும் மறைத்து வைத்து சரியாக வெள்ளி அன்று காவலில் வைத்து உள்ளதாகச் சில நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அவர்களுக்கு முன் ஜாமீன் எடுக்கக்கூட வகை செய்யப் படாமல் இருக்கவே இந்த முறை பின்பற்றப்படுத்தப் பட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இது ப.ம.க உடன் இணைந்து செயல்பட்ட சில வ.வா.சங்க நிர்வாகிகளின் துரோகம் என்றும், அதைக் கண்டு பிடித்த மகளிர் அணித் தலைவியைச் சரிக்கட்டத்தான் அவருக்குப் பட்டமளிப்பு விழா நடத்தப்போவதாகவும் தகவல்கள் கசிந்தன.
மகளிர் அணித்தலைவி ஏற்கெனெவே சங்கப் பிரசாரத்திற்காகச் சுற்றுப் பயணம் செய்து வந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. தலைவர் இல்லாத நேரத்தில் கட்சியின் கட்டுக்கோப்பைக் காப்பாற்ற வேண்டித் தான் மெளனியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் தற்சமயம் உள்ள நிலைமையை உத்தேசித்துப் பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்றும் அவர் யோசிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ராக்கம்மா என்ற புதிய நபரைக் கொண்டு வந்தது கூடத் தலைவரின் பெயரைக் கெடுக்க ஏற்பட்ட சூழ்ச்சி என்று தெரிகிறது. நம் கொ.ப.செ. செல்வி. பொன்ஸ் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பார்த்ததுவும் அவருக்கு வேர்க்கடலை கொடுத்ததுவும் இந்த ராக்கம்மா தான் என்பதும் தெளிவாகி உள்ளது. இதில் யார், யார் கூட்டு என்பது போகப்போகத் தெரியும் என்று சவால் விடுகிறார் மகளிர் அணித் தலைவி. தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டு வாடும் தலைவர் கைப்புள்ள மற்றும் கைப்பொண்ணு இருவரும் இருக்குமிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரை எப்படியும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த வேண்டும். அதுவரை சங்கத் தொண்டர்கள் அமைதி காக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

5 comments:

 1. அனியாயம் பண்றீங்கக்கா.. ஆளாளுக்கு கைப்புவைப் பத்தி ஒரு பதிவு போடறீங்க.. பெருசு என்னடான்னா அவரு பெருவில் இருப்பதாகச் சொல்லி இருக்காரு..

  ReplyDelete
 2. கைப்புள்ள உங்க காவலில் இருப்பதாக எனக்கு நம்பகத் தகவல் வந்துள்ளது. கூடவே இருந்து குழி பறிப்போரை வலை உலகு கண்டு கொண்டது.
  (அது சரி, இன்னிக்கு என்ன ஓவர் டைமா? ஞாயிற்றுக்கிழமை கூடக் கணினி கூட இருக்கு. கழுத்தில் டாலராகப் போட்டுக் கொண்டு இருப்பீர்கள் என்று சந்தேகம்.)

  ReplyDelete
 3. 40 பதிவு போட்டு விட்டேன். என்ன பிரயோசனம்? ஈ ஓடுது.

  ReplyDelete
 4. muthal riilla irunthu padam paarththavangka yaaraavathu kathai sollungka :jamp:

  ReplyDelete
 5. மனம் தளராதிங்க.......

  ReplyDelete