எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 05, 2006

80.கல்யாண சமையல் சாதம்

"கல்யாண சமையல் சாதம்
அந்தக் காய்கறிகளும் பிரமாதம்,
இந்தக் கெளரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்."

கடோத்கஜன் மாதிரி போயிட்டு வரலாம்தான். ஆனால் முடியலையே? என்ன செய்யறது? கல்யாணத்துக்கு போயிட்டு நேத்து மத்தியானம் வந்தோம். கூடவே விருந்தினர் வந்ததால் நேத்து ஒண்ணும் பார்க்க முடியலை. சும்மா பின்னூட்டம் மட்டும் பார்த்தேன். இனிமேல் தான் எல்லாரையும் குசலம் விசாரிக்கணும். அம்பியோட ஐஸ்குட்டியும், அசினும் செளக்கியமா? மனசோட 9தாரா, நமீதா, நவ்யா நாயர் இன்னும் "ந"விலே ஆரம்பிக்கிற எல்லாரும் செளக்கியமா? மின்னல் தாத்தாவுக்கு என்னோட பின்னூட்டம் காரண்டி. அப்புறம் trc Sir, பதிவிலே எனக்குப் புதிசாக ஒரு பட்டம் கிடைத்து இருக்கிறது. தெரியாதவங்க அவர் பதிவிலே போய்ப் பார்த்துக்குங்க. ஏதோ நம்மால் ஆனது அவர் பதிவுக்கு ஒரு விளம்பரம். மனு(வல்லி), துளசி, நுனிப்புல் உஷா எல்லாரும் என்ன எழுதி இருக்காங்கனு தெரிஞ்சுக்கணும். பெனாத்தலாருக்கு ஒரே ஆச்சரியம். அவர் மத்தவங்க கிட்டே சொன்னது எனக்கு எப்படித் தெரியும்னு? அவர் சொல்லும்போது கேட்டேனே? நான் கேட்டேனே? மத்தபடி "Brutus" ஆக மாறின நாகை சிவா, வேதா, நன்மனம் எல்லாருக்கும் ஜூலியஸ் சீஸர் back to the pavilion. கைப்புள்ள, கவலை வேண்டாம், தலைவலி கொடுக்க வந்தேன் நிரந்தரத் தலைவலி. பொன்ஸ் சோறு வடிச்சுப் பழகி இருப்பாங்கனு நினைக்கிறேன். சங்க வேலை எல்லாம் எப்படி இருக்கு?

எல்லாருக்கும் என்னோட
"வணக்கம் பலமுறை சொன்னேன்,
சபையினர் முன்னே, தமிழ்மகள் கண்ணே"

தங்கையோட கல்யாணத்தை நல்லபடி முடிச்சுட்டு வந்த கார்த்திக் முத்துராஜன், மற்றும் நான் வந்ததில் ரொம்ப சந்தோஷப் படும் (ரம்பம்னு தெரியாமல்) ச்யாமுக்கும் என் நன்றி.

25 comments:

  1. எல்லாம் சரி, கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தீங்களே, அத பத்தி ஒரு பதிவ தட்டித் தூக்குங்கக்கா.ரொம்ப நாளா யாரையாவது அக்கான்னு கூப்படனும்னு நெனச்சேனா, நீங்க என்னோட வயசுல பெரியவங்க(உங்களோட 2 வயசு கம்மி பண்ணினா என் வயசு:) அதனால இனிமே கீதாக்கா தான்(ரொம்ப பிகு பண்ணினீங்க, அப்புறம் கீதா அக்கா, கீதா மாமி ஆயிடும் :)

    ReplyDelete
  2. //அம்பியோட ஐஸ்குட்டியும், அசினும் செளக்கியமா? //

    potti romba balama irukku. neenga thaan oru nalla theerpu sollanum thayi! intha karthik romba torture panraar.. :)

    murukku, laddu ellam engaa? postla anupuvelaa?

    ReplyDelete
  3. வாங்க கீதாக்கா

    என்னை மறந்துட்டீங்களே.

    சும்ம்ம்ம்ம்மா.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. வேதா, வேதா, வேதா, வேதா,வேதா,பேச்சே வரலை! இது என்ன போட்டிக்கு இத்தனை பேர்? ஒரு மூன்று நாள் வரலைனா இத்தனை போட்டியா? நான் அக்காவாஆஆஆஆஆஆஆஆஆஆ?

    ReplyDelete
  5. அப்புறம் வேதா, கல்யாணம் பத்திப் பதிவு தனியா வரும். இன்னிக்கே எழுதினா சுவாரசியம் போயிடும் இல்லையா? அதான் எழுதலை.

    ReplyDelete
  6. அம்பி,
    முறுக்கு , லட்டு எல்லாம் அனுப்பி இருக்கேன். வரும். அசினோட போட்டிக்கு இப்போ கார்த்திக்கும் வந்தாச்சு போலே இருக்கே! வாழ்த்துக்கள். ஒரு ஜல்லிக்கட்டிலே ரெண்டு பேரும் மோதுங்க. யார் ஜெயிக்கிறாங்கனு பார்ப்போம்! ஜெயிக்கிறவங்கதான் அசினைப் பத்திக் கனவு, கவனிக்கவும், கனவு மட்டும்தான் காணலாம்.

    ReplyDelete
  7. பெருசு,
    அதெல்லாம் ஒண்ணும் மறக்கலை. நீங்க ரொம்ப நாளா வரலையா? அதான் வேலையா இருக்கீங்களோனு! உங்களைச் சேர்க்கலை. இனிமேல் பாருங்க! நல்லா வசமா மாட்டிக்கிட்டீங்களே!

    ReplyDelete
  8. வாங்க வாங்க. ஊஞ்சல் பாட்டேல்லாம் நீங்க தானாமே:-))

    :-))

    ReplyDelete
  9. கீதா கல்யாணம் எங்கேப்பா/
    போறாப்பிலே போயிட்டு வந்துவிட்டீங்களா.உங்க பின்னூட்டம் பார்த்தேன்.உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மறந்துடுங்க அந்தப் பதிவை. அவனுக்கே அது பிடிக்காது.

    ReplyDelete
  10. போச்சுடா வந்துட்டாங்களா

    அந்த ரெண்டு நாள் சந்தோசம் இனி எப்ப கிடைக்கும் :::)))

    ReplyDelete
  11. //(உங்களோட 2 வயசு கம்மி பண்ணினா என் வயசு:) //
    வேதா உங்களுக்கு வயசு கம்மி ன்ல நினைத்தேன். :((((

    ReplyDelete
  12. //Brutus//
    என்னா இது, எனக்கு "BRUT" body spray தான் தெரியும். BRUTUS னு ஏதும் புதுசா வந்து இருக்கா என்ன. நான் உங்களை விட ரொம்ப சின்ன பையன் நீங்க எனக்கு சொல்லி தரனும். என்ன கீதாக்கா நான் சொல்லுரது சரிதானா..

    ReplyDelete
  13. "ந" வில் தொடங்கும் நடிகைகள் என்று சிறிய வட்டத்திற்குள் அடைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    (எல்லா நடிகைகளின் பெயரும் நாவிலிருந்துதான் வரும்!)

    ReplyDelete
  14. என்னமோ சந்தோச படுர மாதிரி காட்டுதுனால தான் என்னோட பேர் தனியா வந்து இருக்கு....

    நானும் அம்பி கூட போட்டி போடலாம்னு பார்த்தேன்...ஜல்லிக்கட்டா???? நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்ல்ல்ல்லுலுலுலு..... :-)

    ReplyDelete
  15. வாங்க கீதா.. உங்க தளத்துக்கு வந்து வந்து பாத்து என் கண்களே பூத்து போயிடுச்சு.. கல்யாணமெல்லம் நல்ல படியா முடிஞ்சதா..

    அம்பி கிட்ட சொல்லி வைங்கோ.. அசினுக்காக நம்ம கிட்ட போட்டி எல்லாம் போட வேண்டாம்னு.. அம்பிக்கு ஜெயிக்கிற வழியே கிடையாது..

    ReplyDelete
  16. @சிவா,
    //வேதா உங்களுக்கு வயசு கம்மி ன்ல நினைத்தேன். :(((( //
    என்ன இப்படி சொல்டீங்க, நம்ம கீதாக்கு 15 வயசு தான் ஆகுதுன்னு சொல்றாங்க, அப்படீன்னா, எனக்கு 13 தான்:)

    ReplyDelete
  17. ஏதோ நான்கு நாட்கள் "தேசிய விடுமுறை" விட்ட மாதிரி இருந்தது. அதற்குள் என்னுடைய பதிவைப் போட்டுவிட்டேன். இல்லையென்றால் என்பதிவுக்கு யார் வருவார்கள்.61 விட 16துக்குதான் மதிப்பு ஜாஸ்தி.இலவச விளம்பரத்திற்கு நன்றி. தி ரா ச

    ReplyDelete
  18. //என்ன இப்படி சொல்டீங்க, நம்ம கீதாக்கு 15 வயசு தான் ஆகுதுன்னு சொல்றாங்க, அப்படீன்னா, எனக்கு 13 தான்:) //
    என்னத்த சொல்ல.....

    கீதாக்கா, கட்டு சாதம் என்னாச்சு. Still waiting

    ReplyDelete
  19. //15 வயசு தான் ஆகுதுன்னு சொல்றாங்க, அப்படீன்னா, எனக்கு 13 தான்:)//

    அப்படீன்னா சிவா,நான் எல்லாம் இன்னும் பிறக்கவே இல்லயா? :-)

    ReplyDelete
  20. நன்மனம்,
    ஊஞ்சல்லே பாடித்தான் தொண்டையெல்லாம் கட்டிப்போச்சு.

    மனு, கல்யாணம் இங்கே தி. நகரில் தான். உங்களோட அந்தப்பதிவின் பாதிப்பு இன்னும் இருக்கு.

    மின்னல் தாத்தா,
    திரும்பவும் சந்தோஷம் வரும் பாருங்க.(நற நற நற).

    ReplyDelete
  21. நாகை சிவா,
    இப்படியெல்லாம் சொல்லி வேதாவையும் உசுப்பி விட்டு என்னை வயசு என்னனு சொல்ல வைக்க முடியாது. ஒரே நிரந்தர வயசுதான் 16. வேணும்னா ஒர் 2 வயசு குறைச்சுக்கறேன். சரியா?

    மனசு,
    உங்க "நா"வில் இருந்து மட்டும் இல்லை "நெஞ்சிலும்' இருக்காங்க, தெரியும். பார்த்துக்கறேன். நல்லா வசமா மாட்டிக்கிட்டீங்க.

    ச்யாம்,
    ஏதோ கொஞ்சம் ஆசைப் படறீங்கனு நினைச்சா, நானும் "Brutus" தான்னு காட்டறீங்களே?

    கார்த்திக்,
    நீங்களும் அம்பியும் ஜல்லிக்கட்டிலே முதலில் மோதுங்க பார்ப்போம்.

    ReplyDelete
  22. வேதா,
    ரொம்ப மோசம். போட்டிக்கு வராதீங்க. சொல்லிட்டேன்.

    ReplyDelete
  23. தி.ரா.ச. சார்,
    தேசிய விடுமுறை எல்லாம் இனிமேல் கிடையாது. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஏது தேசிய விடுமுறை? நேத்துக் கொஞ்சம் வெளியே போயிட்டேன். இதோ இன்னிக்குப் புதுப் பொலிவோடும், உற்சாகத்தோடும் உங்களை எல்லாம் அறுக்க வந்துவிட்டேன். தாங்கிக்குங்க.

    ReplyDelete
  24. சிவா,
    அதெல்லாம் வேதாவுக்கு 13 எல்லாம் இல்லை. இந்த வலை உலகிலே ஒரே சின்னப்பொண்ணு நான் தான்.
    அப்புறம் கட்டுச்சாதத்துக்காகவா இன்னும் காத்துட்டு இருக்கீங்க? அடப்பாவமே? சூடானுக்கு அனுப்பும்போது வழிலே எதியோப்பியாவுக்குப் போயிடுச்சோ என்னமோ?

    ReplyDelete
  25. ச்யாம்,
    என்ன இது? ஆளாளுக்குச் சின்னப்பையன், சின்னப்பொண்ணுனு சொல்லிக்கிட்டு? உங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்குது. ஞாபகம் இருக்கட்டும். எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவவவவவவவவளளளளளளளவுவுவுவுவுவுவுவுவுவுவுபெரியவர் நீங்க?

    ReplyDelete