திரும்ப வந்துட்டேன். கொஞ்சம் போர் அடிக்கப் போறேன் வழக்கம்போலே. பொறுத்துக்குங்க. திடீர்னு 23-ம் தேதி காய்ச்சல்னு வந்ததும், சரி, வழக்கமான bronchitis fever தான். இனிமேல் ஒரு 2 மாசத்துக்கு "லொக், லொக்" தான்னு நினைச்சேன். ஆனால் டாக்டர் கிட்டேப் போனால் அவர் இல்லை வைரல் ஜுரம்தான்னு சொல்லிட்டார். 3 நாளிலே சரியாப் போயிடும்னு நினைச்சுத் திங்கள் அன்று கொஞ்சம் உட்காரமுடிஞ்சதுன்னு நினைச்சு வழக்கம்போல் வீட்டு வேலைகளைப் பார்த்தால் முடியவே இல்லை. செவ்வாய் அன்றும் சரியாக இல்லை. அப்புறம் ஆரம்பிச்சது பாருங்க ஒரு தொந்திரவு என் ஆயுளில் அனுபவிக்கலை இது மாதிரி. Severe food poisonஎன்று டாக்டர் சொல்லி விட்டார். புதன், வியாழன் என்ன நடந்ததுன்னே தெரியலை. அவ்வளவு மோசமா இருந்தது. டாக்டர் பார்த்துட்டு நாளைக்குள் சரியாகலைன்னா in-patientஆ வச்சுத் தான் பார்க்கணும்னு சொல்லி இருக்கிறார். வியாழன் அன்று இரவு கொஞ்சம் சுமாராக இருந்தது, வெள்ளி அன்று மறுபடி மோசமாக மருந்துகள் மாற்றப்பட்டன. ஊசிகள் குத்தப்பட்டன. எத்தனைன்னு கணக்கு எல்லாம் கேட்கமுடியாது. அப்புறம் சனி அன்று கண் விழித்துத் தமிழ் சினிமா மாதிரி, "நான் எங்கே இருக்கேன்னு கேட்கலாம்"னு பார்த்தால், என் கணவரும் படுக்கையிலே.
கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்னு படுத்திருக்கார்னு நினைச்சு, "என்ன ஆச்சு? ஏன் படுத்திருக்கீங்க?"னு கேட்டா எனக்கும் 2 நாளாகக் காய்ச்சல் இருந்ததுன்னு சொல்றார். சரி, மெல்ல எழுந்து சமையல் அறைப்பக்கம் போகலாம்னு பார்த்தாக் கை, கால் எல்லாம் ஒரே நடுக்கம், நடக்கவே முடியலை. அவர் நீ படுத்துக்கோனு சொல்லிட்டு அவரே எழுந்து எல்லா வேலையும் செய்தார். காய்ச்சல் இருக்கேன்னு கேட்டதுக்கு, 2 நாளா இருந்தது. நேத்திலே இருந்து பரவாயில்லைனு சொல்றார்.என்னத்தைச் சொல்றது? அது கூடத் தெரியாமல் இருந்திருக்கேன். அதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு. அவர் எடுத்துக் கேட்டுவிட்டு, ஸ்ரீராம், பேசறதுன்னு சொல்லிக் கொடுக்கவும், இப்போதானே வந்துட்டுப் போனான், பங்களூரில் இருந்து நம்மைக் கூப்பிட்டுப் பேசும்படி என்ன விஷயம்?னு ஆச்சரியமா தொலபேசியை வாங்கினேன். கடைசியில் பார்த்தால், இல்லை, இல்லை, முதலில் இருந்தே அது அம்பி தான். அவர் ரொம்ப ஸ்டைலாக, "நான் ஸ்ரீராம் பேசறேன்" னு சொன்னதும் என் கணவர் பங்களூரில் உள்ள எங்க சொந்தக் காரப் பையன்னு நினைச்சிருக்கார். 2 நாளாக தி.ரா.ச. சார் வீட்டில் டேரா என்று சொன்ன அம்பி, குண்டர் படைத் தலைவர், தி.ரா.ச. சார் எல்லாரும் என்னிடம் ஏதேதோ பேச நான் வேறே ஏதோ உலகத்தில் இருந்து அவர்கள் பேசற மாதிரி நினைச்சேன். ஒருமாதிரி, ஒரு மாதிரித் தான் சமாளிச்சுப் பேசி முடிச்சேன்.
இப்போ வானம் நல்லாத் தெளிஞ்சிருக்கிறதாலேயும், வந்து இரண்டு நாள் தான் ஆனதாலேயும்,என்னை வந்து பார்க்க முடியலைன்னு அம்பி சொன்னார். அதனால் என்ன பரவாயில்லை, நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் சமயம் எங்க தெருவிலே தண்ணீர் மேடு, பள்ளம் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தால் அப்போ நீங்களே என்னை அம்பத்தூரில் இருந்து கிளம்பி தி.ரா.ச. சார் வீட்டில் உங்களை வந்து பார்க்கும்படிச் சொல்லி இருப்பீங்களேனு சொன்னேன்.(:D) பாவம், எனக்கு மெயில் கொடுத்து விசாரிச்சிருக்கார். நான் அப்புறம் தான் பார்த்தேன். அதிலே தன்னோட சென்னைப் பயணத்தையும் குறிப்பிட்டுவிட்டு என்னை அவசரப்பட்டு எழுத ஆரம்பிக்க வேண்டாம், நாங்க எல்லாம் ரொம்பவே சந்தோஷமா இருந்துக்கிட்டிருக்கோம்னு வேறே குறிப்பிட்டிருந்தார். அதான் கொண்டாட வந்திருக்கார் போல் இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன். கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சு பங்களூர் போயிருப்பார்னு நினைக்கிறேன். அன்னிக்குத் தற்செயலா மெயில் பார்த்தது, அப்புறம் இன்னிக்குத் தான் வரேன்.இந்த வேதா தான் நான் ஒரு 2 நாள் எழுதலைன்னா கூட தொலைபேசுவாங்க. அவங்க என்னமோ இந்த முறை மூச்சு விடவில்லை. ஏதோ ஊருக்குப் போகப் போறதா அவங்க பதிவிலே பார்த்தேன். போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். என்னைப் பதிவில் விசாரித்த அனைவருக்கும் என் நன்றி. மற்றபடி தனிப்பட்ட முறையில் விசாரித்த அம்பி, அவரோட தம்பி, தி.ரா.ச. சார், கைப்புள்ள, பாசிட்டிவ் ராமா, காழியூரார், உமாநாத் மற்ற முத்தமிழ்க் குழும நண்பர்கள் எல்லாருக்கும் ரொம்பவே நன்றி. இப்போ கொஞ்சம் பரவாயில்லை, இன்னும் normal diet ஆரம்பிக்கவில்லை. அதனால் என்ன, பரவாயில்லை! இப்படியே இருக்கட்டும். இதுவும் கடந்து போகும்.
கார்த்திக், நாளைக்குக் கட்டாயம் உங்க tag மட்டும் தான். கொஞ்சம் பொறுத்துக்குங்க.
ReplyDelete@SKM, உங்க அன்பான விசாரிப்புக்கு ரொம்பவே நன்றி. அநேகமாத் தினம் வந்து பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
நலமாய் திரும்ப வந்தது மகிழ்சியாய் இருக்குங்க தலைவியே..
ReplyDeleteஎன் டேக் அவசரமில்லை மேடம்..பொறுமையா போடுங்க..
நல்லா ஓய்வு எடுங்க..இப்போதைக்கு அது தான் முக்கியம்
கீதா மேடம்,இவ்வளவு படுத்திடுத்தா உங்களை?இப்போ பரவாயில்லைன்னு சொல்றீங்க.நிதானமா வாங்க. அதுக்குள்ளே சுறுசுறுப்பா 2 போஸ்ட், ஊர்(Blog)சுத்தல் ஆரம்பிச்சிட்டீங்க. உடம்பைப் பார்த்துக்கோங்க.--SKM
ReplyDeleteஇவ்வளவு படுத்திடுத்தா உங்களை?இப்போ பரவாயில்லைன்னு சொல்றீங்க.நிதானமா வாங்க.
ReplyDeleteonnum avasaram illai. nenachen, ph panroome! ithu oru mokkai post aaga poguthe!nu. :)
take care, :)