எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 27, 2006

174. சில, பல, எண்ணங்கள்.

ஒரு தாமதமான வரவேற்பு:

ஐ.நா. சபை இந்தியாவிற்காக அனுப்பிய நல்லெண்ணத் தூதுவர், சூடான் புலி, திரு நாகை சிவா அவர்கள், தன்னுடைய களப்பணிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி உள்ளார். அவருடைய செய்தியைத் தலைவி தாமதமாகப் பார்க்க நேர்ந்த காரணத்தால் வரவேற்பு விழாவிற்கும் தாமதமாகி விட்டது. என்றாலும் இதைப் பொருட்படுத்தாமல் ரத்தத்தின் ரத்தங்களும், கண்மணிகளும், பிள்ளைகளும், தொண்டர்களும், குண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்கும்படித் தலைவியின் ஆணை.அது சரி, புலி இப்போ எங்கே இருக்கு?

ஒரு அறிவிப்பு:

தலைவியின் கணினி வெற்றிகரமாய் வந்து விட்டாலும், நேற்றுத் தொண்டர் "கார்த்திக்"அவர்களின் பெரு விருப்பத்தினை ஒட்டித் தலைவி "வரலாறு" திரைப்படம் பார்த்ததால் இணையத்திலும் இருக்க முடியவில்லை, களப்பணியும் ஆற்ற முடியவில்லை. "வரலாறு" படத்தில் அசின் பாத்திரப்படைப்பு ஒரு தண்டம் என்று தலைவி பெருமகிழ்ச்சியுடன் (:D) தெரிவித்துக் கொள்கிறார். மேலும் கணினியின் ரிப்பேருக்காகத் தலைவியின் உதவிக்கு வந்த கார்த்திக், கைப்புள்ள இவர்களுக்குத் தலைவி தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதுக்கு அப்புறம் தலைவியின் தலையைக் கண்டாலே ஒளிந்து கொள்ள முயற்சி செய்யும் இருவரையும், மற்றும் மதுரையின் மைந்தர், "ராம்" அவர்களையும் சேர்த்துத் தலைவி கடுமையாகக் கண்டிக்கிறார். அதுவும் கார்த்திக் தூங்கும்போது கூடக் கணினியில் "sleeping" என்று போட்டு விட்டுத் தூங்குவதையும் வன்மையாகக் கண்டிக்கிறார்.

தலைவியின் தொழில் நுட்பக் கேள்விகளாலும், பதில்களாலும் திகைப்படைந்த கைப்புள்ள தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்ததையும், தலைவியால் அவரைச் சமாதானப் படுத்த முடியாமல் தோல்வி அடைய நேரிட்டதையும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளும் தலைவி பின் கைப்புள்ள என்பதால் அவர் தானே அழுது ஓய்ந்து சமாதானம் அடைந்ததையும் பாராட்டுகிறார். தான் ஒரு கைப்புள்ள தான் என்பதை நிரூபித்த அவர் தனக்குப் பதிலாக மண்ணின் மைந்தர் "ராமை" மாட்டிவிடப் பார்த்ததையும், "ராம்" மாட்டிக் கொள்ளாமல் நாளது வரை தப்பித்ததையும் மன்னிக்கவே முடியாது என்கிறார். ஏற்கெனவே கணினியின் "RAM"-ஆல் வெறுப்புற்றிருந்த தலைவி மேலும் மன வேதனை அடைந்தார். "ராமா, ராமா, என்று நாம ஜபம் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாகி விட்டதாயும் தெரிவித்துக் கொள்கிறார். ஆகவே தொண்டர்களே, உங்கள் கணினி நல்லா வேலை செய்யணும்னா நீங்களும் "ராமா, ராமா" என்று சொல்லவும். (ஆன்மீகத்துக்கு ஆன்மீகமும் ஆச்சு, அறுவைக்கு அறுவையும் ஆச்சு, அம்பியோட கண்ணோட்டத்திலே ஒரு மொக்கையும் ஆச்சு.)ஹூஸ்டன் பயணம் தொடரும். அதுக்குள்ளே, டாடா இண்டிகாம் காரங்களுக்கு என்னவோ வந்துடுச்சு. எல்லாம் இந்த அம்பியோட கண்ணுதான். வேறே என்ன? :D

18 comments:

  1. //அசின் பாத்திரப்படைப்பு ஒரு தண்டம் என்று தலைவி பெருமகிழ்ச்சியுடன் (:D) தெரிவித்துக் கொள்கிறார்//

    poruthathu pothum karthik, pongi ezhu! itha padicha enakee evloo kobam varuthu, unakku ratham thidikka villaya? singame seeri vaa! :)

    *narayana! *narayana!

    ReplyDelete
  2. //நேற்றுத் தொண்டர் "கார்த்திக்"அவர்களின்//

    //கணினியின் ரிப்பேருக்காகத் தலைவியின் உதவிக்கு வந்த கார்த்திக்//

    //அதுவும் கார்த்திக் தூங்கும்போது கூடக் கணினியில் //


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. மேடம்..கார்த்தி கார்த்தின்னு போட்டு என்னை பாராட்டு பாராட்டுன்னு பாராட்டி...அவ்வ்வ்வ்வ் மேடம் உங்க பாசத்தை என்னான்னு சொல்ல..

    ReplyDelete
  3. என்னோட இந்தப் போஸ்ட் எந்தப்பக்கத்திலே வந்திருக்குன்னு எனக்கே புரியலை, ஹிஹிஹி, SKM, உங்க கமெண்ட் எங்கே போச்சுனு புரியலை. கிடைக்கட்டும், போடறேன். என்னோட மத்த போஸ்ட் கூட இது போகலை, error-ம் காட்டலை, அப்படியும் என்ன ஆச்சுன்னு புரியலை.

    ReplyDelete
  4. ஏதோ உங்க கம்பியுட்டர் ரிப்பேர் ஆனதும், சரியானதும், புரியுது...மற்றபடி அதிகம் புரியல....என்ன உங்க குழுவுக்கு மட்டுமான பதிவோ?....(தவறாக இருந்தால் மன்னிக்கவும்)

    ReplyDelete
  5. வரலாறு நானும் பார்த்தேன்.அஸின் படு வேஸ்ட்.அப்பா டான்ஸர் அஜித் தான் கதையே.உங்கள் கருத்துக்கு வழிமொழிகிறேன்.இப்போ இங்கேயும் கமெண்ட் போட்டாச்சு.டாடா இன்டிகான்னு சொல்லியே மொக்கை போஸ்ட்.நீங்க நடத்துங்க ஜோரா.எனக்கும் பொழுது போகும் நல்லா.--SKM

    ReplyDelete
  6. அம்பி, நானே அசின் அசிங்கப்பட்டத நீனச்சு வருத்தப் பட்டு கண்டுக்காம இருந்த இப்படி கலாய்கிறியேப்பா கண்ணு

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அம்பி, நீங்க என்ன சொன்னாலும், சொல்லிக் கொடுத்தாலும் கார்த்திக் எனக்கு மாறாகப் பேச மாட்டார். உங்க கனவு இங்கே பலிக்காது.

    ReplyDelete
  9. கார்த்திக், ரொம்பவே நன்றி, உங்களோட பெருமைக்கும், தலைவியின் மேல் கொண்ட பக்திக்கும், உண்மைத் தொண்டர்னா உங்களைப் போல் தான் இருக்கணும். வாழ்க! வளர்க!

    ReplyDelete
  10. மதுரையம்பதி, குழுவுக்கான போஸ்ட் தான். என்னோட பழைய போஸ்ட்டை எல்லாம் நேரம் இருந்தா படிச்சுப் பாருங்க, ஓரளவு புரியும், உங்க கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. SKM, நிஜமாவே என்னோட இணைய இணைப்பு ஒரு வாரமாச் சரியில்லை. போயிட்டுப் போயிட்டு வந்தது புதனன்றில் இருந்து நிரந்தரமா வரலை. வியாழன் அன்று ஏதோ தர்மத்துக்கு வந்துட்டுப் போயிடுச்சு. மூன்று நாளாக டாடா இண்டிகாம் காரங்களை வறுத்து எடுத்தாச்சு. இப்போ வந்திருக்கு. எத்தனை மணி நேரமோ தெரியலை.

    ReplyDelete
  12. உமாகோபு, உங்களோட போஸ்ட் எல்லாம் அப்போ அப்போ படிச்சுட்டுப்பின்னூட்டம் கொடுக்கிறேனே, பார்க்கலியா? நீங்க கொடுக்கிறதும் எனக்கு வரது.

    ReplyDelete
  13. ரொம்ப நன்றி டுபுக்கு, உங்களுக்கும், உங்க தங்கமணிக்கும், குழந்தைகளுக்கும் எங்களோட மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. //தான் ஒரு கைப்புள்ள தான் என்பதை நிரூபித்த அவர் தனக்குப் பதிலாக மண்ணின் மைந்தர் "ராமை" மாட்டிவிடப் பார்த்ததையும், "ராம்" மாட்டிக் கொள்ளாமல் நாளது வரை தப்பித்ததையும் மன்னிக்கவே முடியாது என்கிறார்.//

    மேடம்,

    நான் எங்கேயும் தப்பித்தெல்லாம் ஓடலை. உங்களுக்கு எந்த உதவியும் பண்ணக்கூடாதுன்னு உத்தரவு.

    அந்த உத்தரவை மிக ரகசியமா வேறே வைச்சிருக்கனுமின்னு வேறே 'தலை'யாய கடமை வேறே இருந்துச்சு, அந்தவொரு காரணத்தினாலதான் உங்களுக்கு காலத்தினாற் உதவி செய்யமுடியாமால் போயிவிட்டது..... :-((((

    ReplyDelete
  16. சதி, சதி, சதி, மாபெரும் சதி, எதிர்க்கட்சியினரா? எதிரிக்கட்சியினரா? புரிந்து விட்டது யார் அந்தப் புல்லுருவி என்று(யாருன்னு தெரிஞ்சாச் சொல்லுங்க. சும்மா உடான்ஸ் தான் விட்டேன்.) ராமை, மண்ணின் மைந்தரை எனக்கு உதவக் கூடாது என உத்தரவிட்ட அந்த நபரைத் தலைவி(வலி) கட்சிப் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கிறார். இனிப் பின்னூட்டம் மட்டுமே கொடுப்பார் என்பதைப் பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  17. //சதி, சதி, சதி, மாபெரும் சதி, எதிர்க்கட்சியினரா? எதிரிக்கட்சியினரா? புரிந்து விட்டது யார் அந்தப் புல்லுருவி என்று(யாருன்னு தெரிஞ்சாச் சொல்லுங்க//

    ஏய்! யார்ரா அது கிராஸ் ரிமூவர்(புல்லுருவி)? எங்க தலைவிக்கு ஒதவக் கூடாதுன்னு சொன்னது? வெளில வாடா டேய்! கீச்சிருவேன் கீச்சீ...

    ReplyDelete
  18. //ஏய்! யார்ரா அது கிராஸ் ரிமூவர்(புல்லுருவி)? எங்க தலைவிக்கு ஒதவக் கூடாதுன்னு சொன்னது? வெளில வாடா டேய்! கீச்சிருவேன் கீச்சீ... //

    தல,

    இதுக்கு பேரு'தான் தனக்கு தானே பேசிக்கிறது'ன்னு சொல்லுறதா???

    ReplyDelete