எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 24, 2006

173. சோதனை மேல் சோதனை

வேறே யாருக்கு? எனக்குத் தான். உண்மையிலே திருஷ்டி முதலில் எனக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது. அதுக்கு அப்புறம் தான் வேதா(ள்)வுக்கு. அதுவும் என்னோட இலக்கிய நயம் மிகுந்த(ஹிஹிஹி, நான் சொல்லிக்கலைன்னா வேறே யார் சொல்வாங்க?) கட்டுரைகளைத் தினம் ஒண்ணாகவும் சிலசமயம் இரண்டிரண்டாகவும் போட்டு வந்ததை யாரோ பார்த்துட்டு பயங்கர திருஷ்டி போட்டதினாலேயோ அல்லது எதிர்க்கட்சியினரின் சதியினாலோ என்னோட கணினி இன்னும் வரவே இல்லை. நேத்து வரும்னு சொன்னாங்க, தொலைபேசினால் இன்னும் நேரம் ஆகும்னு சொல்றாங்க. அதிர்ஷ்டம் இருந்தால் நாளை வரும். அதுவரை அடாது தொந்திரவு கொடுத்தாலும் விடாமல் பதிவு போடும் எண்ணம் இருப்பதால் என் அண்ணா வீட்டிலேயே வந்து எழுதுகிறேன். இதிலே என்ன கஷ்டம்னால் நம்ம கைவண்ணம் அவங்களுக்கும் தெரியும். அண்ணா பெண்ணுக்கோ கல்லூரியில் ப்ராஜெக்ட் வேலைக்குக் கணினி தேவை. இந்த லட்சணத்திலே நாம் வேறே வந்து கை வண்ணத்தைக் காட்டறோமேன்னால் என்ன செய்யறது? எல்லாம் அவங்க Head Letter இப்படி இருக்கே? என்னோட பெண்ணும், பையனும் என்னை accident prone என்று சொல்வதுண்டு. எல்லாம் ARCHIE COMICS அதிகம் படிச்சதாலேன்னு நினைக்கிறேன். ஹிஹிஹி, நானும் போட்டி போட்டுக்கிட்டு படிக்கிறதுண்டு. இப்போக் கூட பழைய ARCHIE அதுவும் teen age ARCHIE தான் எனக்குப் பிடிக்கும். ஏன் என்றால் என்னோட வயசு இல்லையா? அதான்.

சில நாள் முந்தி மிஸ்டர் பீன் பார்த்துக்கிட்டு இருக்கும்போது ஒரு நாள் வந்தது பாருங்க மிஸ்டர் பீன் துணி துவைக்கும் விஷயம் பத்தி. Common Laundryயில் அவர் துணி துவைப்பதைக் காட்டினார்கள். அதிலே சிலசமயம் தவறுவது சகஜம் தான். ஆனால் நான் ஹூஸ்டன் போனப்போ துணி துவைச்சேன் பாருங்க, அதுக்கு ஈடு ஏதும் கிடையாது. 2004-ம் வருஷம் அக்டோபரில் 25-ம் தேதி ஹூஸ்டன் போய்ச் சேர்ந்தோம். 3 வருஷம் கழிச்சுப் பையன் எங்களைப் பார்க்கிறான். அபார்ட்மெண்ட் டைப் வீடுகள். ஹூஸ்டனின் இருதயப் பகுதியில் அமைந்திருந்தது. எல்லாம் நல்லாத்தான் இருந்தது. பெரிய பாத்ரூம், நம்ம ஊரிலே இரண்டாய்ப் பிரித்து வாடகைக்கு விட்டிருப்பாங்க. போனதும் பையன் நான் சமைக்கிறேன், நீ ரெஸ்ட் எடுத்துக்கோன்னு சொல்லிட்டான். எனக்கும் jetlog ரொம்பவே இருந்தது. சாயங்காலம் போனோம் ஹூஸ்டனுக்கு. இந்தியாவில் அப்போ காலை என்பதால் எனக்குத் தூக்கமே வரலை. என்னத்தை ரெஸ்ட் எடுக்கிறது? சாப்பிட்டுப் படுத்தோம். விடிகாலையிலே தூக்கம் சொக்கியது. கொஞ்ச நேரம் தூங்கி விட்டுப் பையன் அலுவலுக்குச் செல்லும் சமயம் எழுந்தேன். அவன் சமையல் அறையில் மின் அடுப்பை எப்படி உபயோகிப்பது என்று சொல்லிவிட்டு, ஓரளவு தெரியும் என்றாலும், கொஞ்சம் பயம்தான். "மற்றப் படி நீ பார்த்துக்கோ, மத்தியானம் சாப்பிட வருவேன்"னு சொல்லிப் போனான். நான் தூக்கக் கலக்கத்தோடேயே குளிக்கப் போனேன்.பாத்ரூமிலேயே வாஷிங் மெஷின் இருந்தது. முதல்நாள் சாயங்காலம் குளித்துவிட்டுப் பட்டுப் புடவை கட்டி இருந்தேன். அதைத் துவைக்க எடுத்து வைத்து விட்டுக் குளித்து விட்டு வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டேன்.அங்கே வாஷிங் முடிந்து, துணிகள் எல்லாம் spin ஆகி அரை ஈரத்துடன் வந்ததும் drier-ல் போட்டால் துணி நன்கு காய்ந்து சூடாக வெளியே எடுக்கலாம். Washer, drier தனித் தனியாக இருக்கும்.

துணிகளைப் போட்டு விட்டு வந்து குக்கரை வைத்தேன். நல்ல சேலம் ஸ்டீல் குக்கர். இங்கே எல்லாம் இந்த மாதிரி அழுத்தமான தரமான குக்கர் வருவது இல்லை. சாதம் அதிலே வைத்து விட்டுப் பருப்பை ஒரு நான் -ஸ்டிக் பாத்திரத்தில் நேரடியாகப் போட்டு விட்டு மற்றவேலைகளைக் கவனிப்பதற்குள் வாஷிங் மெஷின் கூப்பிட்டது. சரினு உள்ளே போய்த் துணிகளை எடுத்தால் என்னோட பட்டுப் புடவையைக் காணோம். அதுக்குப் பதிலாய்ச் சின்னதாய் ஒரு ஜரிகை போட்ட சிவப்புக் கைக்குட்டை வடிவத்தில் ஒரு துணி இருந்தது. இது என்னன்னு யோசித்துக் கொண்டே எல்லாத்தையும் டிரையரில் போட்டேன். சற்றுப் பொறுத்து வந்து ட்ரையரில் இருந்து துணிகளை எடுத்தால் சிவப்புக் கலரில் நீளமாய் ஒரு ரிப்பன் வருகிறது. நான் போட்ட சத்தத்தில் பயந்து போன என் கணவர் ஓடி வந்தார். "ஏன், என்ன ஆச்சு?" "என்னோட புடவையைக் காணோம்." இது நான். "என்ன புடவை? நேத்துக் கட்டினாயே, அந்தப் பட்டுப் புடவையா?" அவர். "ஆமாம், இங்கே யார் ரிப்பன் வச்சுக்கறாங்க? இதோ பாருங்க, சிவப்புக் கலரில் ஒரு ரிப்பன் வந்திருக்கு"ன்னு சொன்னேன். அவர் வாங்கிப் பார்த்து விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். நான் முறைத்தேன். "நேத்தே உன்னைப் பட்டுப் புடவை வேண்டாம்னு சொன்னேனே?" என்றார். இந்தக் கலாட்டாவில் சாதம் வைத்ததே மறந்து போச்சா? ஏதோ தீயற வாசனை வந்தது. வந்து பார்த்தால் குக்கர் புகை விடுது. கடவுளே!ன்னு தலையில் கை வைத்து உட்கார்ந்தேன். இப்போவே மணி 11-00 ஆகி விட்டது. 12 மணிக்குப் பையன் சாப்பிட வருவானே?

19 comments:

 1. யார், யார் என்ன கமெண்ட் கொடுப்பாங்கன்னு இப்போவே எழுதிடறேன்.

  அம்பி: வழக்கம்போல் மொக்கைப் பதிவு. இதுக்குத் தி.ரா.ச. வேறே வந்து பின்னூட்டம் கொடுக்கணுமா?

  தி.ரா.ச.: அம்பி, இதுக்குப் பின்னூட்டம் கொடுக்கலாமா? வேண்டாமா? நீ சொல்லு.
  (அது சரி, சார், அம்பி எப்போவிலே இருந்து உமா மேடத்துக்குப் போட்டியா மாறினார்?)

  வேதா(ள்): ம்ம்ம், இருந்தாலும் நீங்க தலைவி, தலைவிதான், இப்போ கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறமா வரேன்.

  கார்த்திக்: மேடம், என்னோட இத்தனை வேலையிலும் கடமை மறக்காமல் வந்து உங்களுக்குப் பின்னூட்டம் கொடுக்கத் தவறுவதில்லை. என்னைப் போய் நீங்க...

  ச்யாம்: இதெல்லாம் எந்த சினிமாவிலே வந்திருக்கு? நான் பார்க்கவே இல்லையே? இல்லாட்டி TBI Newsஆ?

  SKM:இத்தனை பிரச்னையிலும் நீங்க பதிவு எழுதறீங்களே? நிஜமாவே உங்களைப் பாராட்டறேன். Hats Off to You.

  கைப்புள்ள: அம்பி, வேதா, சும்மா இப்படித் தலைவியைக் கொஞ்சம் கலாய்ச்சோம்னால் நமக்கும் பொழுது போகும், அவங்களும் அதை வச்சு ஒரு பதிவு போடுவாங்க.
  (கைப்புள்ள, உங்களைப் பாரி வள்ளல், அதியமான், கோப்பெருஞ்சோழன் ரேஞ்சுக்குத் தூக்கி வச்சிருக்கேன். அதனால் உங்க ஆதரவை எனக்குக் கட்டாயம் கொடுத்துடுங்க.)

  உமாகோபு: மாமி, நான் இப்போ தான் ஊரிலே இருந்து வந்தேன். நான் உங்க வீட்டுப் பக்கத்திலே தான் இருக்கேன். அப்புறமா வரேன்.

  நாகை சிவா: நல்லவேளையா, நான் கொஞ்ச நாளாப் பதுங்கிட்டேன். இங்கே எல்லாம் வரதே இல்லை, பிழைச்சேன்.

  ஹரிஹரன்: கீதாஜி, நீங்க சொன்ன சோதனை மாதிரி தான் எல்லாருக்கும் வருது. நீங்க சொல்றது ரொம்பச் சரி.

  மஞ்சூர் ராஜா: ரொம்ப நாளாச்சே இந்தப்பக்கம் வந்துன்னு பார்க்க வந்தேன். ம்ம்ம்ம், நான் உடனேயே போய்ச் சிவசங்கரைப் பார்க்கிறேன்.

  நுனிப்புல் உஷா: கீதா, பத்தி பிரிக்கிறது, எடிட் செய்யறதுன்னு இரண்டு விஷயம் இருக்கு. தெரியுமா? பத்தி பிரிச்சு, அப்புறம் எடிட் பண்ணி வெளியிடுங்கள்.
  (இவங்களுக்கு என்னமோ என்னோட சொல்படி என்னோட ப்ளாக் கேட்பதாக எண்ணம். 4 வரி கொண்ட போன பதிவைக் கிட்டத்தட்ட 10 நிமிஷம் எடுத்துக் கொண்டது வெளியிட. இந்தப் பதிவு 2 நிமிஷத்திலேயே வந்துடுச்சு. இந்த லட்சணத்திலே நான் எழுதறதெ வெளியே வரதே நான் செஞ்ச புண்ணியம், உங்களுக்கெல்லாம் கஷ்டம்)

  படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுக்காமப் போற லிஸ்ட்லே கடல் கணேசன், மணிப்ரகாஷ், அருண்குமார், ராம், துளசி, வராங்களா என்ன?), வல்லி சிம்ஹன் ஆகியோர் தலையில் அடிச்சுக் கொண்டு போகிறார்கள். இதை ஒரு பதிவாத் தான் போட நினைச்சேன். பின்னூட்டம் இருக்குன்னால் உடனே வந்து பார்ப்பாங்க இல்லை, அந்த அல்ப ஆசை தான். :D

  ReplyDelete
 2. கீதா , இது ரொம்ப மோசம் பா. நானே 3 நாளைக்கு ஒரு தடவை கணினி பக்கம் வெரேன். இன்னிக்கு கரெக்டா உங்க பதிவு கண்ணிலே பட்டுது. இதொ பின்னூட்டம் போட்டாச்சு.

  ரிப்பனைத் தலைக்கு வச்சுக்கலையா>//:-))

  ReplyDelete
 3. என்னடா!மொக்கை போஸ்ட் இல்லாம ஒரு போஸ்டா?நு யோசிச்சுகிட்டே கமெண்ட் பக்கம் வந்தா,அப்பாடா!பெரிய திருப்தி.பட்டுப் புடவைப் போய் பட்டு ரிப்பன் வந்ததா?கடவுளே!இன்னும் என்னென்ன செய்தீங்க?தாளிக்கிறேன் என புகைய விட்டு அலாரம் உயிர் போற மாதிரி கத்த விட்டேளா?எழுதுங்கோ.நீங்க போடுகிற மொக்கையெல்லாம் படிக்கலைனா எனக்கு பொழுது போறதில்லை.புதிய வருட வாழ்த்துக்கள் மாமி.--SKM

  ReplyDelete
 4. //சிலசமயம் இரண்டிரண்டாகவும் போட்டு வந்ததை யாரோ பார்த்துட்டு பயங்கர திருஷ்டி போட்டதினாலேயோ அல்லது எதிர்க்கட்சியினரின் சதியினாலோ //

  எதுக்கு சுத்தி வளைக்கனும்? அம்பி கண்ணு வெச்சதுனால!னே சொல்லி இருக்கலாம். ஹிஹி அது தான் உண்மையும் கூட! :)

  computer problem - இப்படி எல்லாம் அண்ணா வீட்டில போய் டார்ச்சர் பண்ண கூடாது!

  //அம்பி: வழக்கம்போல் மொக்கைப் பதிவு. இதுக்குத் தி.ரா.ச. வேறே வந்து பின்னூட்டம் கொடுக்கணுமா?
  //
  ROTFL :)
  //பின்னூட்டம் இருக்குன்னால் உடனே வந்து பார்ப்பாங்க இல்லை, அந்த அல்ப ஆசை தான்.//

  அதானே பார்த்தேன்! எதோட வாலை நிமித்தவே முடியாதாமே! :))))

  ReplyDelete
 5. நீங்க "(கைப்புள்ள, உங்களைப் பாரி வள்ளல், அதியமான், கோப்பெருஞ்சோழன் ரேஞ்சுக்குத் தூக்கி வச்சிருக்கேன். அதனால் உங்க ஆதரவை எனக்குக் கட்டாயம் கொடுத்துடுங்க.)" இப்படியெல்லாம் சொன்னதுனால துறுதுறுங்கிற என் கைகளுக்கு நானே விலங்கிட்டுக் கொண்டு "பட்டுக் கைக்குட்டை நெய்த பங்கஜவல்லி", "குக்கரைத் தீய்த்த குமுதவல்லி" ஆகிய இந்த இரு பட்டங்களை மட்டும் தலைவியின் மணிமகுடத்திற்கு வைரங்களாக சமர்ப்பித்து விட்டுச் செல்கிறான் இந்த ஏழைச் சிறுவன்.
  :)

  //இதை ஒரு பதிவாத் தான் போட நினைச்சேன். பின்னூட்டம் இருக்குன்னால் உடனே வந்து பார்ப்பாங்க இல்லை, அந்த அல்ப ஆசை தான். :D//
  சே! உங்களைப் போய் மொக்கை போஸ்ட் போடறவங்கன்னு சொல்றாங்களே? அவங்களை அந்த கடவுள் மன்னிக்கட்டும்.
  :D

  ReplyDelete
 6. //கார்த்திக்: மேடம், என்னோட இத்தனை வேலையிலும் கடமை மறக்காமல் வந்து உங்களுக்குப் பின்னூட்டம் கொடுக்கத் தவறுவதில்லை. என்னைப் போய் நீங்க...//

  ஆஹா..மேடம் என்னது என்னை போய் சத்தாச்சு இருக்கீங்கா..

  ReplyDelete
 7. //இதை ஒரு பதிவாத் தான் போட நினைச்சேன். பின்னூட்டம் இருக்குன்னால் உடனே வந்து பார்ப்பாங்க இல்லை, அந்த அல்ப ஆசை தான்.//

  இருந்தாலும் உங்களுக்கு இந்த பேராசை கூடாது மேடம்..

  ஆனாலும் அடாத மழையிலும் விடாது பதிவைப் போடும் உங்கள் கடமை உணர்ச்சியை என்னான்னு சொல்றதுங்க மேடம்

  ReplyDelete
 8. இப்போ கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறமா வரேன்.
  இது கொஞ்சம் டூ மச் தான்:)ஹிஹி நாம எப்ப வேலையெல்லாம் செஞ்சோம் ஆனாலும் பாருங்க உங்க பதிவை படிக்கும் போது தான் நம்ம கணினியில் எல்லா ப்ரச்னையும் வருது:) அடுத்த வருடம் சந்திப்போம்:)

  ReplyDelete
 9. வந்துட்டேன் மேடம்,, பின்னுட்டமும் போட்டுட்டேன்..

  என்னோட பெயர கூட நாபகம் வச்சு இருக்கீங்களே.. நன்றி,,


  சதியிலிருந்து மீண்டு, திரும்பவும் சாதனை படைக்க அரியணை ஏறும் தலைவிக்கு வாழ்த்துகள்...

  என் ஆதரவு உங்களுக்குத்தான்..

  (ஆனா அம்பி,நாட்டாமை,தலைவர் கார்த்தி சொன்னாங்கன மட்டும் யோசிக்கனும்)

  ReplyDelete
 10. ஹிஹிஹி, பின்னூட்டம் கொடுத்த எல்லாருக்கும் தனித்தனியாப் பதில் ஏற்கெனவே கொடுத்ததினாலே திரும்ப சோதனை செய்யலை.
  @அம்பி, ஒரு வருத்தமான விஷயம், உங்களுக்கு மட்டும் தான். என்னோட கணினி வந்துடுச்சு. அதான் எல்லாம் சரியா இருக்கா இல்லையானு பார்க்க வந்தேன். பதிவு அப்புறம். இப்போ போய்ச் சமைக்கணும், வர்ட்டா? என்ன? வழக்கம்போல் கத்திரிக்காய் தான், கூரியரில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மட்டும்.
  மத்த நண்பர்களுக்கு எல்லாம் ஆதரவு தெரிவிச்சதுக்கு நன்றி. ஹூஸ்டன் பயணத்துக்கு அப்புறமும், இருக்கு, விஷயம்.

  ReplyDelete
 11. //"பட்டுக் கைக்குட்டை நெய்த பங்கஜவல்லி", "குக்கரைத் தீய்த்த குமுதவல்லி" ஆகிய இந்த இரு பட்டங்களை மட்டும் தலைவியின் மணிமகுடத்திற்கு வைரங்களாக சமர்ப்பித்து விட்டுச் செல்கிறான் இந்த ஏழைச் சிறுவன்.
  //

  @kaipulla, ha haaaa :))
  ithukku directaaave geetha amdama nakkal vuttu irukkalaam!
  sabaash kaipulla! vazhakkam pola kalakiteenga! :)

  //வழக்கம்போல் கத்திரிக்காய் தான், கூரியரில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மட்டும்.
  //
  Grrrrrrrrr. neenga samaikkum pothu gas theenthu poganum anjeneyaa! :)

  ReplyDelete
 12. நிஜமாகவே இப்போது தான் வந்தேன்.இதென்ன அமெரிக்காலேயும் போய் எல்லாரையும் படுத்தியாச்சா?? மாமா வேற‌ பட்டுப்புடவை வாங்கித் தந்தாரா? இல்லே ஜீன் போட்டுண்டேளா??

  ReplyDelete
 13. எப்படி மாமி இப்படி கோர்வையா, ஒரு கதை மாதிரி எழுதறீங்க...

  ReplyDelete
 14. உங்க கதையை(பதிவை) தினமும் படிக்கிறென்.ஆனா, என்ன கமெண்ட் எழுதறதுன்னுதான் தெரியலே. எனக்கு கமெண்ட் எழுதறதுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, நீங்கள்ளாம் எப்படி பதிவு எழுதறீங்களோ.
  <---- மதுரையம்பதி சொல்றார்
  எப்படி மாமி இப்படி கோர்வையா, ஒரு கதை மாதிரி எழுதறீங்க...
  --->
  இதைத்தான் நானும் கேட்க நினைச்சேன்.

  ReplyDelete
 15. ஹிஹிஹி, மதுரையம்பதிலே பிறந்துட்டு இது கூடத் தெரியலியே? :D

  @சிவப்ரகாசம், கமெண்ட் நல்லாத்தான் இருக்கு, இப்படியே எழுதுங்க, வந்துடும்.

  @அம்பி, நீங்க கண் வச்சதாலேத் தானா இங்க காஸ் தீர்ந்து போய்ப் புது சிலிண்டர் போடும்போது திறக்கவே வரலை? என்னடாப்பான்னு பார்த்தேன்? அப்படியும் விடாது மைக்ரோவேவில் கத்த்ரிக்காய்க் கூட்டுச் செய்து உங்களுக்கு அனுப்பினேனே வந்ததா?

  ReplyDelete
 16. 174 வது போஸ்ட் இரு முறை பதிவாகி உள்ளது.நீங்கள் எதைத் தூக்குவீர்கள் என்பதுத் தெரியாததால் இங்கு கமெண்ட் போட்டு உள்ளேன்.புது வருட வாழ்த்துக்கள் மாமி.தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.--SKM

  ReplyDelete
 17. SKM, எனக்கு மேலே முன் ஜாக்கிரதை முத்தக்காவா இருக்கீங்க, உங்க கமெண்டைத் தேடிட்டே வந்தா இங்கே இருக்கு, அந்த 2 போஸ்ட்டும் தனியா எங்கேயோ போயிடுச்சு. முதல் முறை கொடுத்து பப்ளிஷ் ஆகலைன்னு 2 வது முறை கொடுத்தேன். இப்போ கூட்டத்தோட சேராமல் தனிக்கட்சி ஆரம்பிச்சிருக்கு. என்னத்தைச் சொல்ல?

  ReplyDelete
 18. மிக நல்ல பதிவு. எதுக்கு வம்பு. புது வருசம் அதுவுமா ஏன் வாங்கிகட்டிக்கொள்ள வேண்டும்

  ReplyDelete
 19. என்ன சார் இது? அபிப்பிராயமே சொல்லலை? உங்க சிஷ்யன் வேண்டாம்னு சொல்லிட்டாரா? சரி, சரி, இந்த வாரம் சென்னை விசிட்டிலே கேட்டு வச்சுக்குங்க. தங்கமணியைப் பார்க்கப் போற பிசிலே அவர் மறந்துடுவார்.

  ReplyDelete