எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 31, 2006

176, மறுபடியும் ஹூஸ்டன்

சுருங்கிப் போய் முறுக்கிக் கொண்டிருக்கும் என்னுடைய நுரையீரல் போன்ற புடவையைக் கையில் வைத்துக் கொண்டு திகைத்துப் போன நான் செய்வதறியாது முழிக்கையிலே சமையல் அறையில் இருந்து வந்த தீய்ந்த வாசனையும், புகையும் மேலும் திகைக்க வைத்தது. எனக்குப் புகை அலர்ஜி வேறே உண்டு. உடனேயே exhaust fan முழு வேகத்தில் சுழல வைக்கப் பட்டது. என் கணவர் சமையல் அறையின் ஜன்னல் கதவுகளையும், பால்கனிக் கதவுகள், மற்ற ஜன்னல் கதவுகள் எல்லாத்தையும் திறந்து வைத்தார். ஒரு வழியாகப் பதினைந்து நிமிஷங்கள் போராட்டத்திற்குப் பின் புகை வெளியேறியதும், நான் சமையல் அறைக்கு வந்து குக்கரைத் திறந்தால் கன்னங்கரேல் என்று சாந்து மாதிரி ஏதோ ஒன்று. நான் வைத்தது என்னவோ சாதம் தான். இது எங்கிருந்து வந்தது? வியந்தபடியே மூக்கைச் சுற்றித் துணி கட்டிக் கொண்டு (பின்னே தீஞ்ச வாசத்தை என்ன செய்யறது?) எல்லாவற்றையும் எடுத்து அங்கே தொட்டி முற்றத்தில் போட்டு விட்டு, disposer-ஐத் திறந்து விட்டு விட்டு, வெந்நீர்க் குழாயையும் திறந்து விட்டேன். அமெரிக்காவில் இது ஒரு வசதி. எல்லாத்தையும், தொட்டி முற்றத்திலேயே டிஸ்போஸ் செய்து விடலாம். குக்கரை என் கணவர் தான் தேய்ப்பதாய்ச் சொல்லவே நான் நேரடியாக மறுபடி சாதம் வைத்தேன். அதற்குள் ரொம்பக் கஷ்டப் பட்டுத் தேய்த்து வைத்த குக்கரை எடுத்துப் பார்த்தேன். பளீரென இருந்த குக்கர் உள்ளே கொஞ்சம்கொஞ்சம் கறுப்புப் பொட்டுக்கள் இருந்தது. பையன் ரொம்பவே உஷாரான பேர்வழி. ஹிஹிஹி, என் பையன் ஆச்சே? கட்டாயம் கண்டு பிடிப்பான். என்ன பதில் சொல்றது? மணி 12-ம் ஆச்சு. ஒருவழியாய்ச் சமைத்து விட்டு, என் கணவருக்குச் சாப்பாடு போட்டு விட்டு, நானும் சாப்பிட ஆரம்பிக்கும் போது பையன் வந்தான். வரும்போதே கேட்டுக் கொண்டு வந்தான். "என்ன ஏதோ தீஞ்ச வாசனை வருது? இங்கேயெ? வேறே எங்கேயுமா?" என்று. நான் வேறே எங்கேயும் இருக்கும் என்று சொல்வதற்குள் அவன் கண் குக்கரின் மேல் போனது.

ஏன் குக்கரில் சாதம் வைக்கலியா? என்று கேட்டான். நான் அது ரொம்ப வெயிட்டாக இருக்கு, என்னால் தூக்க முடியலை என்று சொல்லி முடிப்பதற்குள் அதைக் கையில் எடுத்து மேலே வைக்கப் போனவன் கண்களில் கறுப்புப் பொட்டுக்கள் பட்டிருக்கிறது. உடனே "என்ன இது?" என்று கேட்டுக் கொண்டு பார்த்தான். நான் அ.வ.சி. பேசாமல் ஜெட்லாக் இன்னும் தெளியலை (நிஜமும் அது தான், இல்லாட்டி இந்தியாவில் கையால் துவைக்கக் கூட வேலைக்கார அம்மா கிட்டே போடமாட்டேன் புடவையை, இங்கே வந்து மெஷினில் போடுவேனா?) ன்னு சொல்லிட்டுப் போய்ப் படுத்தேன். பையன் சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போய் விட்டான். இன்னொரு புடவை தூய கைத்தறிப் புடவை, கலாக்ஷேத்திரா காட்டன் புடவை, சற்று விலையும் அதிகம் தான், அதைக் கையால் துவைத்துக் காயப் போடலாம் என்று போனேன். துவைத்துப் பிழிந்து அதை உதறிக் குளிக்கும் தொட்டியைச் சுற்றித் திரை போட்டிருந்த குழாயில் திரையை விலக்கி விட்டுப் போட்டேன். அவ்வளவு தான். மறுபடி தொப்! குழாயோடு சேர்ந்து புடவையும் விழுந்து விட்டது. குழாய் சுவரில் பதித்திருக்க வில்லை. Vaccuam Fitting. இது தெரியாமல் போட்டிருக்கிறேன். இது என்ன பிரமாதம்? நம்மளே மாட்டலாம் என்று நினைத்துக் கிட்டத் தட்ட 1/2 மணி நேரம் முயன்றாலும் வரவே இல்லை. அங்கே அபார்ட்மெண்டில் வெளியே பால்கனி இருந்தாலும் துணி எல்லாம் காய வைக்க முடியாது. இந்தப் புடவையை மெஷினில் போடவும் முடியாது. குஞ்சம் எல்லாம் வைத்த முந்தி உள்ளது. குஞ்சம் வீணாகி விடுமே?

அதற்குள் உள்ளே போன என்னைக் காணோமே என்று என் கணவர் சற்றுப் பயத்துடனேயே வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவரும் கவலையுடனும், சந்தேகத்துடனும் முயற்சி செய்தார். அவராலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் முயன்றும் முடியவில்லை. அமெரிக்காவின் அபார்மெண்ட் ரூல்ஸ் எல்லாம் அங்கே இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆகவே ரொம்பவே பயமாய் இருந்தது. நம்ம ஊரில் என்றால் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு எவ்வளவு தொந்திரவு என்றாலும் கவலையே படாமல் அவங்க வீட்டுப் பக்கம் துணியைப் போட்டுவிட்டுப் போவாங்க. எனக்குத் தெரிஞ்சு "Archie Comics"ல் தான் Archie and Juggie இரண்டு பேரும் துணிகளைக் கொடி கட்டி க்ளிப் போட்டுத் தோட்டத்தில் உலர்த்திப் பார்த்தேன். அமெரிக்காவில் தனிவீட்டுக் காரங்க கூட யாரும் உலர்த்துவது இல்லை. புடவையை உள்ளே படுக்கை அறையிலேயே கதவில் கட்டி உலர்த்தினோம். மின் விசிறியைச் சுழல வைத்தால் கூட இங்கே மாதிரி அங்கே வேகமாய்ச் சுற்றாத மின் விசிறிகள் அங்கே. அநேகமாய் வீடு முழுக்க குளிர்வசதி இருப்பதால் மின் விசிறியின் தேவை கம்மி. என் பையன் பயந்தது ஸ்விட்சுகள் எல்லாம் இந்தியா மாதிரி இருக்காமல் மாறி இருக்கும்.எனக்கு உபயோகிப்பதில் குழப்பம் வரும் என்று பயந்தான். மிக்ஸி, லைட், ஃபான், ஏ.சி., மின் அடுப்பு என்று எல்லாமே. அதில் எல்லாம் குழப்பம் வரவே இல்லை. இந்த மாதிரி வந்துடுச்சே என்று கவலையாக இருந்தது. சாயந்திரமும் வந்தது. பையனும் வந்தான். எங்கள் முகத்தைப் பார்த்து விட்டே ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகித்துக் கொண்டு,"என்னம்மா? இப்போ என்ன விஷமம் பண்ணினே?" என்று கேட்கவே நாங்கள் விஷயத்தைச் சொன்னோம். அவன் என்னைப் பார்த்த பார்வையில் உடனேயே சென்னைக்கு விமானம் இருக்குமா? என்று யோசிப்பது போல் இருந்தது எனக்கு. அப்புறம் ரொம்ப நேரம் அப்பாவும், பிள்ளையும் முயன்று குழாயை மாட்டினார்கள். எனக்கு உயிரும் வந்தது. (இதோட போச்சா? மெம்பிஸில் பெண்ணோட வீட்டில் smoke detector வாயை அடைக்க முடியாமல் நான் பட்ட பாடு, அப்புறம் அங்கே இருந்த ஒரு தமிழ்க்காரர் யோசனைப் படி அதை எடுத்துக் கழட்டி வைத்ததும் தான் அது வாயை மூடிக் கொண்டது. இல்லாட்டி தாளித்தால் கூட அலற ஆரம்பிக்கும்.) கடவுளே எல்லாம் என் HEAD LETTER தான் வேறே என்ன? அப்புறம் முதல் வேலையாக வால் மார்ட், அதோட தம்பி வால் க்ரீன், அதோட அண்ணா சாம்ஸ் க்ளப் என்று அலைந்து திரிந்து ஒரு ரைஸ் குக்கரை வாங்கி விட்டுத் தான் மறு வேலை.

20 comments:

 1. Wish you a Wonderful New Year!!!

  appaalika vandhu meet panren....

  ReplyDelete
 2. //மெம்பிஸில் பெண்ணோட வீட்டில் smoke detector வாயை அடைக்க முடியாமல் நான் பட்ட பாடு, அப்புறம் அங்கே இருந்த ஒரு தமிழ்க்காரர் யோசனைப் படி அதை எடுத்துக் கழட்டி வைத்ததும் தான் அது வாயை மூடிக் கொண்டது.//
  Thats what I have done at my place.
  Dangerous.panna koodadhu.summa summa kathittae irundha enna sairadhu?---SKM

  ReplyDelete
 3. so after all the troubles,you got adjusted.unga paiyan and maamakku niraya porumai.Very interesting.
  Happy New Year Maami.--SKM

  ReplyDelete
 4. கொஞ்சம்கொஞ்சம் கறுப்புப் பொட்டுக்கள் இருந்தது. பையன் ரொம்பவே உஷாரான பேர்வழி. ஹிஹிஹி, என் பையன் ஆச்சே? கட்டாயம் கண்டு பிடிப்பான்

  அதான் கொங்சம் ஆச்சரியமா இருக்கு
  எங்கே போனாலும் ஒரே அட்வென்சர் போல இருக்கு. ஆனால் சொன்ன விதம் படிக்க ரசமாக இருக்கு

  ReplyDelete
 5. ச்யாம், ரொம்பவே பிசியா? இருக்கட்டும், வச்சுக்கறேன், கலிஃபோர்னியாவிலே இருந்து திரும்பி வந்ததும், அடுத்து உங்களைப் பத்தித் தான். யாரையும் விடறதா இல்லை.

  ReplyDelete
 6. SKM, SKM, திருஷ்டிப் பட்டுடுச்சு போல் இருக்கே? ஒண்ணும் பதிலைக் காணோம்? ஹிஹிஹி,Take your own timeனு சொல்றது எல்லாம் சும்மா உள உளக்கட்டிக்குத் தான்னு புரியாம ரொம்பவே அப்பாவியா இருக்கீங்களே? :D புது வருஷத்திலே மாட்டிக்கிட்டது நீங்களும் ச்யாமும் தான்.

  ReplyDelete
 7. நிறைய இருக்கு சார், அட்வென்ச்சர், இதுக்கே இப்படிச் சொன்னா எப்படி? நான் ரொம்பவே அடக்கமாக் கொஞ்சமே கொஞ்சம் சொல்லி இருக்கேன், தெரியுமா?

  ReplyDelete
 8. நல்லா இருக்குங்க....எழுதுங்க......எல்லா அனுபவங்களையும்....ரொம்பவே பழக்கமாகிவிட்டது உங்கள் எழுத்து.....

  ReplyDelete
 9. //திருஷ்டிப் பட்டுடுச்சு போல் இருக்கே? ஒண்ணும் பதிலைக் காணோம்? ஹிஹிஹி,Take your own timeனு சொல்றது எல்லாம் சும்மா உள உளக்கட்டிக்குத் தான்னு புரியாம ரொம்பவே அப்பாவியா இருக்கீங்களே?//

  இரண்டு கமென்ட் போட்டும் போடலை என சொன்னா நிஜமாவே புரியலை.நான் நிஜமாலுமே அப்பாவிதான்.நீங்க ஈ-மெயில் பற்றி சொல்றீங்களா?அது கூட உடனுக்குடனே அனுப்பறேனே.---SKM

  ReplyDelete
 10. //சுருங்கிப் போய் முறுக்கிக் கொண்டிருக்கும் என்னுடைய நுரையீரல் போன்ற புடவையைக்//

  சுருங்கி போய் ,, முறுக்கி கொண்டு .

  படித்து நினைத்து பார்த்து ரசித்தேன்..

  இவ்வளவு பன்னியும் உங்க பையன் ஒரே ஒரு பார்வை மட்டுமே பார்த்திருக்கிறார்னா

  அவர் ரொம்ம்ம்ப நல்லவர்ர்ர்ர்//

  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..

  ReplyDelete
 11. அமெரிக்காலயும் இவ்ளோ ஆட்டமா?:)

  ReplyDelete
 12. மதுரையம்பதி,
  வேறே வழியே இல்லை, என்னோட எழுத்தின் மகிமை இவ்வளவுதான். என்ன செய்யறது? சகிச்சுக்க ஆரம்பிச்சதை இவ்வளவு நாசூக்கா வெளிப்படுத்தி இருக்கீங்களே! :D

  ReplyDelete
 13. SKM,
  விவரமாச் சொல்றேன். வரேன் யாஹூவிற்கு. நான் சொன்னது எறும்பு மெயிலைத் தான். நீங்க பார்க்கலை, அல்லது வரலைன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 14. இது என்ன மணிப்ரகாஷ், எல்லாரும் சகட்டு மேனிக்கு என் பையனையும் என் கணவரையுமே புகழ்ந்தால் எனக்கு ரொம்பப் பொறாமையா இருக்கே, என்னையும் புகழ்ச்சிலே சேர்த்துக்குங்க.

  ReplyDelete
 15. வேதா(ள்). கொஞ்ச எழுதினதுக்கே ஆட்டம்னால் எப்படி?

  ReplyDelete
 16. Maami,I have sent a reply to your mail.I do send reply immediately. Teacher pola miratureenga romba.
  Nan romba pavam.Absent aagaama varen.Saw unga new post about the photos.But sorry,didn't comment there. Take care--SKM

  ReplyDelete
 17. //புடவை, சற்று விலையும் அதிகம் தான், அதைக் கையால் துவைத்துக் காயப் போடலாம் என்று போனேன். துவைத்துப் பிழிந்து அதை உதறிக் குளிக்கும் தொட்டியைச் சுற்றித் திரை போட்டிருந்த குழாயில் திரையை விலக்கி விட்டுப் போட்டேன். அவ்வளவு தான். மறுபடி தொப்! குழாயோடு சேர்ந்து புடவையும் விழுந்து விட்டது. குழாய் சுவரில் பதித்திருக்க வில்லை. Vaccuam Fitting. இது தெரியாமல் போட்டிருக்கிறேன். இது என்ன பிரமாதம்? நம்மளே மாட்டலாம் என்று நினைத்துக் கிட்டத் தட்ட 1/2 மணி நேரம் முயன்றாலும் வரவே இல்லை.//

  சிவ சிவா...இதுவும் எமது தலைவியின் திருவிளையாடல்களில் ஒன்று அன்றோ? அதை படிக்கும் பேறு பெற்ற யான் பெருஞ்செல்வன். தலைவியின் லீலையே லீலை.
  :)

  ReplyDelete
 18. ஹா, ஹா, கைப்புள்ள உண்மைத் தொண்டரும் நீங்க தான், குண்டரும் நீங்க தான்னு நிரூபிச்சுட்டீங்க.

  ReplyDelete
 19. எஸ்.கே.எம். சும்மா மிரட்டல் எல்லாம் செல்லமாத் தான் இருக்கும். மெயிலும் வந்தது, மயிலும் வந்தது.

  ReplyDelete
 20. ஆஹா நீங்களும் புடவையைப் போட்டீங்களா. கம்பி விழுந்ததா. வி வி வி சி. எஞ்சாய்.

  ReplyDelete