வேறே யாருக்குன்னு நினைக்கறீங்க? எல்லாம் நம்ம அம்பியோட கனவுதான். நனவாயிட்டது. என்னோட கணினி வர இன்னும் குறைஞ்சது 10 நாளாவது ஆகும். அவர் எந்தப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைச்சாரோ தெரியலை. ஆனால் என்னோட ரசிகர்கள்தான் ரொம்பக் கஷ்டப் படறாங்கன்னு நினைக்கிறேன். ஹிஹிஹி, எனக்கும் ரசிகர்கள் எல்லாம் இருக்காங்கன்னு ஆச்சரியப் படறீங்களா? முதல் ரசிகர்கள் நம்ம கைப்புள்ளையும், கார்த்திக்கும். 2 பேரும் என்னவோ நான் எழுதறது தமிழ்னும் நான் தமிழில் ரொம்பத் தேர்ச்சி பெற்றவள்னும் நினைக்கிறாங்களே? அதான் சொன்னேன். அதிலும் நம்ம கைப்புள்ள அதியமான் என்றால் நான் ஒளவை. அவர் பாரி வள்ளல் என்றால் நான் கபிலர். அவர் கோப்பெருஞ்சோழன் என்றால் நான் பிசிராந்தையார். (இந்த அம்பியோட மாத்தையார் வேலை எல்லாம் பலிக்காது.) கார்த்திக்கைப் பத்திச் சொல்லவே வேணாம். பதிவுக்குப் பதிவு ஏதாவது ஒரு விஷயத்தில் எனக்கு இலவச விளம்பரம் தரத் தவறுவது இல்லை. அதான் ரொம்பப் பெருந்தன்மையோட அவரோட முதல் அமைச்சர் பதவியை ஏத்துக்கிட்டேன். எல்லாம் அவரோட பக்தி உணர்வைப் பாராட்டறதுக்குத் தான். அப்புறம் நம்ம SKM, உமாகோபு, சமீபத்தில்தான் சிநேகம் ஆனாலும் இரண்டு பேரும் ஏதோ சொந்தம் போல ஆயிட்டாங்க. ரொம்பவே என்னோட பதிவைக் கொண்டாடறாங்க. (இல்லைனு சொல்லி மானத்தை வாங்கிடாதீங்க).
அப்புறம் நம்ம வேதா(ள்) கேட்கவே வேணாம், 2 நாள் எழுதலைன்னாக் கூட உடனே தொலைபேசுவாங்க. அவ்வளவு பாசம். உடம்பு முடியாதப்போக் கூடத் தொலைபேசிக் கேட்டாங்கன்னா பாருங்களேன். இந்தப் பாசமழை மட்டும் இல்லைன்னா என்னால் எழுதவே முடியாது. இதைத் தவிர, என்னோட அண்ணா பையன் ஒருத்தன் துபாயிலே இருக்கான். அவன் என்னடாவென்றால் தீக்குளிக்கிற ரேஞ்சுக்கு ஒரு தொண்டர் படையே திரட்டி வச்சிருக்கான். நான் அனானி பின்னூட்டம் ஏத்துக்கறதில்லை. இல்லாட்டி அனானி பேரிலே பின்னூட்டம் கொடுப்பான், பாவம் என்னைக் கேட்டுப் பார்த்தான். அதெல்லாம் அனானிக்குக் கொடுக்கப் போறதில்லைனு சொல்லிட்டேன். விட்டால் துபாயிலே இருந்து வரதுக்குள்ளே எனக்குச் சிலை எடுப்பான்னு நினைக்கிறேன். நான், " சிலை எல்லாம் வேண்டாம்பா, சும்மா குஷ்பூ கோவிலை விடப் பெரிசாவோ அல்லது எம்.ஜி.ஆர். கோவிலை விடக் கொஞ்சம் சின்னதாவோ ஒரு கோவில் கட்டிடு. நானே வந்து மூலஸ்தானத்திலே உட்கார்ந்து அருள் பாலிக்கிறேன்"னு சொல்லலாம்னு இருக்கேன்.
ஆகையால் அம்பி, ச்யாம் போன்றவர்கள் அதிகம் சந்தோஷப்படவேண்டாம். எனக்குத் தொண்டர் படையில் இருந்து குண்டர் படை வரை இருக்கு. சீக்கிரம் வந்து உங்களை எல்லாம் ஒரு கை இல்லை இரண்டு கை பார்க்கிறேன். அது வரை enjoooooooooyyyyyyyy!
என்னது? தலைவி, தனிப்பெரும் தலைவியான எனக்குக் கொ.ப.செ.வா?? வேதா, நற நறநற நற
ReplyDeleteஎன் பெயரை விட்டு விட்டதற்கு மிகவும் வன்மையாக வருத்தப்படுகிறேன்.எதோ அந்த unsung லிச்டுலாயாவது இருப்பேன்னு நினைக்கிறேன்.சரி சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன் சுப்பிரமணிய சுவாமி உனை மறந்தேன்.......
ReplyDelete//முதல் ரசிகர்கள் நம்ம கைப்புள்ளையும், கார்த்திக்கும்//
ReplyDeleteஹிஹி..ரொம்ப நன்றிங்கோவ்..
//அவரோட முதல் அமைச்சர் பதவியை ஏத்துக்கிட்டேன்//
உங்க பெருந்தன்மை யாருக்கு வரும் மேடம்
என்னா ஆச்சு..கணினி சரியில்லை என்றால் நிறைய பேருக்கு அப்படியே நடக்கிறது.. உடம்பு சரியில்லை என்றால் பல பேருக்கு அப்படியே நடக்கிறது.. உண்மையில் நீங்க தான் தலைவியே
ReplyDelete//அவர் எந்தப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைச்சாரோ தெரியலை//
ReplyDeleteanumaaruku thaan vendinden! enna vazhakkam pola kapaathittar! :)
nalla rest edunga, naangalum thaan! :)
சரியான மொக்கைப் பதிவு.ஆனாலும் அதையும் இன்ட்ரெஸ்டிங் ஆ கொண்டுப் போறது உங்க ஸ்பெஷாலிட்டி.உங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை.:D--SKM
ReplyDelete//என்னது? தலைவி, தனிப்பெரும் தலைவியான எனக்குக் கொ.ப.செ.வா?? வேதா, நற நறநற நற//
ReplyDeleteதலைவியின் டிரேட்மார்க்கான இந்த நறநறவைக் கேட்டு பார்த்து ரசிக்க, அவங்களை எத்தனை வாட்டி வேணாலும் வெறுப்பேத்தலாம் போலிருக்கு!
:))
ஹிஹிஹி, தொண்டர் படையிலே மத்தவங்க எல்லாம் எங்கே காணோம்? வர வர, இந்த ச்யாம் போக்கே சரியில்லையே? எல்லாரும் போய் நூத்துக் கணக்கில் பின்னூட்டம் போடறீங்க இல்லை, அதான் தலைவி யாருன்னு மறந்துட்டார். மத்தபடி ஆதரவு தெரிவிச்ச எல்லாருக்கும், (அம்பியைத் தவிர மத்தவங்களுக்கு)நன்றி, அம்பிக்கு வழக்கம்போல் ஆப்பு வைக்கப்படும். இப்போ என்னோட கணினி இல்லாததால் தனித்தனியாக பதில் கொடுக்கலை. கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்குங்க.
ReplyDeleteதலைவி, தனிப்பெரும் தலைவி வாழ்க வாழ்க :)
ReplyDeleteரொம்ப நாளா இந்த பக்கம் வராம நிறைய மிஸ் பண்ணிட்டேனே :(