எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 25, 2008

தொல்காப்பியர் செய்த உதவி!

2 நாட்கள் முன்னர் சொந்த வேலையாகச் சிதம்பரம் சென்றிருந்தோம். என்னோட சிதம்பர ரகசியம் தொடரைப் படிச்ச தீட்சிதர் ஒருத்தர் எனக்குத் தனி மடல் அனுப்பி இருந்தார், சிதம்பரம் வந்தால் சந்திக்கச் சொல்லி. நானும் அவர் நம்ம நண்பருக்குத் தெரிஞ்ச தீட்சிதராக இருக்கும்னு நினைச்சு அவர் கிட்டேயும் அதைப் பத்திச் சொல்லி இருந்தேன். ஆனால் அங்கே போனதும் தான் தெரிஞ்சது, தொல்காப்பியரின் நண்பர் ஆன இந்த தீட்சிதர் கிட்டே இணைய இணைப்பே கிடையாது, இனிமேல் தான் வாங்கப் போறார்னு. எனக்கு மெயில் கொடுத்த தீட்சிதர் யாருனு புரியாமலேயே, திரும்பவும் வந்து சேர்ந்தாச்சு. வந்து அவருக்கு ஒரு மெயில் போட்டேன். இன்னும் பதில் வரலை. ஆனால் நான் அங்கே பார்த்ததும், பேசினதும் நம்ம தொல்காப்பியருக்குத் தெரிஞ்சவர் தான். ஆகவே அவர் பெயரைச் சொன்னதுமே புரிந்தும் கொண்டார். மேலும் நம்ம தொல்காப்பியர் சும்மா இருக்காமல், பழைய ஆபிச்சிலே இருக்கும்போது ஈ ஓட்டிக் கொண்டிருந்த போதிலே நம்ம சிதம்பர ரகசியம் தொடரைப் பிரிண்ட் அவுட் எடுத்து சிதம்பரம் பூராவும் பிட் நோட்டிஸ் மாதிரி விநியோகித்திருக்கின்றார். ஆகவே நம்ம பெயரையும், புகழையும் அங்கே பிரபலம் அடையச் செய்த தொண்டர்களில் முதன்மை ஸ்தானத்தையும் அடைந்து இருக்கின்றார்.

ஆகவே அங்கே போனதும், தொல்காப்பியரின் நண்பர்கள் எனத் தெரிந்ததும், ராஜ உபசாரம். இத்தனைக்கும் நாங்க இன்னும் இந்தத் தொல்காப்பியரைப் பார்த்ததே இல்லை. அதுவும் அவருக்குத் தெரியும். அந்தக் கால ராஜாக்களுக்கு நடக்கும் உபசாரத்தைச் சொன்னேன். தெரிஞ்சால் சாப்பிடாமலாவது போயிருக்கலாம். எங்க கட்டளை தீட்சிதர் வீட்டிலே நாங்க போனப்போ மாப்பிள்ளைக்கு விருந்து என்று தடபுடலாய்ச் சமைத்திருக்க அங்கே சாப்பிட்டதே ஜீரணம் ஆகலை. ராத்திரிக்கு வேறே கையிலே கொடுத்திருந்தாங்க. காபி மட்டும் சாப்பிட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். என்னோட பதிவுகளிலே அவர் படிச்ச வரைக்கும் அலசிப் பிழிந்து, காயப் போட்டுட்டு, இப்போ எழுதிக் கொண்டிருக்கும் விஷயத்தையும், நம்ம கேஆரெஸ் என்னைக் கசக்கிப் பிழிய நினைப்பதையும், நான் கழுவின மீனில் நழுவுகிற மீனாய் நழுவுவதையும் எடுத்துச் சொன்னேன். நானும் என் பங்குக்கு ப்ரிண்ட் அவுட் எல்லாம் கரண்ட் இருக்கிற நேரமாய்ப் பார்த்து எடுக்க முயன்றால், ஆற்காட்டாரின் சதியினால் பாதி கூட முடியலை. ப்ரிண்டர் இன்னும் வெயிட்டிங்குனு அலறிட்டு இருக்கு.

மற்ற விஷயங்களைப் பேசிட்டுக் கிளம்ப ஆயத்தம் ஆகும்போது என் கணவர் திடீர்னு இன்னிக்கு ஸ்ரீமுஷ்ணம் போகலாம்னு இருந்தோம். உடம்பு முடியலை, அதனால் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கப் போறோம்னு சொல்லவே, அந்த தீட்சிதர் கொஞ்ச நேரம் யோசித்தார். ஸ்ரீமுஷ்ணம் இங்கே இருந்து 30 கி.மீ.க்கு மேலே இருக்கு, விருத்தாசலம் போகும் பாதையில் இருக்கு. இங்கே இருந்து பஸ்ஸில் போனால் திரும்ப ராத்திரி பத்து ஆகலாம். என்று சொன்னார். ஆகவே பயணத்தைக் கைவிடும் திட்டத்துடன் இருக்கும்போது திடீர்னு மொபைலில் யாருக்கோ தொலைபேசினார். பின்னர் வண்டியை எங்கேயே எடுத்துக் கொண்டு போனார். கொஞ்ச நேரத்தில் ஒரு அம்பாசடர் கார் வந்தது. ஸ்ரீமுஷ்ணம் அழைத்துப் போவார் டிரைவர், வந்தாச்சு என்று அறிவிக்கின்றார். அப்போதே மணி மாலை ஆறு ஆகி விட்டது. ஆகவே வண்டியில் போனால் ஒழிய சீக்கிரம் திரும்ப முடியாது என்று புரிந்து கொண்டு நாங்களும் கிளம்பினோம்.

அருமையான வண்டி, டிரைவருக்குச் சொந்த வண்டி.அருமையான டிரைவர். ரொம்பவே பெரும்போக்கான தன்மை. மிக மிக உயர்ந்த மனிதர், உருவத்தில் மட்டுமில்லாமல் உள்ளத்திலும். சாலை தான் சில இடங்களில் வழக்கமான நடைமுறையில் இருந்தது. மற்றபடி பெரும்பாலும் தேசீய நெடுஞ்சாலையாக இருந்ததால் வண்டியும் சீக்கிரமாய்ப் போனது. தரிசனமும் நல்லபடி ஆகித் திரும்பவும் 8-30க்குச் சிதம்பரம் வந்து சேர்ந்துவிட்டோம். ஏற்கெனவே தொல்காப்பியரின் நண்பரான தீட்சிதர் சொன்னபடிக்கு அவரைக் கோயிலில் சந்தித்தோம். டிரைவருக்குப் பணம் கொடுக்கவில்லை என்பதால் அவர் மூலம் செட்டில் பண்ணலாம் என்று போனால் வாங்கவே மறுத்துவிட்டார், அந்த தீட்சிதர். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. தொல்காப்பியருக்காக நான் இது கூடவா செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார். கடைசியில் தோற்றது நாங்கள் தான்.

இனி சிதம்பரம் பற்றிய மற்ற தகவல்கள் வழக்கம்போல் சிதம்பர ரகசியம் பதிவுகளிலும், அங்கே போனப்போ பார்த்த கோயில்கள் பற்றிய தகவல்களும் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். இந்த தீட்சிதரும் சில புத்தகக் குறிப்புகளும்,ஒரு புத்தகமும், மற்ற தகவல்களும் கொடுத்தார். மேலும் காலையில் இரண்டாம் கால பூஜையின் போது அங்கே தேவாரம் இசைத்த ஓதுவாரிடமும் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன். அவர்களைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். மற்ற வழிபாட்டுக்கு வந்த சாதாரண மக்களிடமும் கொஞ்சம், கொஞ்சம் பேசினேன். தேவாரப் பாடசாலையில் வழக்கம்போல் தேவாரம் கற்றுக் கொடுக்கப் படுவதையும் முதல்நாள் மாலை சென்றபோதும் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதில் ஒரு சில தீட்சிதர் பையன்களும் இருக்கின்றனர். விசாரித்ததற்கு நன்கு பாட வரும் இளைஞர்கள் சிறிய வயதில் இருந்தே கற்றுக் கொள்வதாய்த் தெரிவித்தனர். மேலும் தீட்சிதர்களிலும் பலருக்கு தேவாரம் பாட நன்கு தெரியும் என்பதையும் நேரில் கண்டிருக்கின்றேன். ஆகவே வரும் தலைமுறைக்கும் அதைச் சொல்லிக் கொடுக்க அவர்கள் நினைப்பதில் தவறில்லை.

அருஞ்சொற்பொருள்:

தொல்காப்பியர்= அபி அப்பா!

21 comments:

  1. அட இத்தனை நடந்திருக்கா! நான் ஏற்கனவே சொன்னேனே சிதம்பரம், மாயவரம் பக்கம் போனா எனக்கு ஒரு மெயில் தட்டிட்டு போங்கன்னு சொன்னேனே! எப்படியோ நம்ம தீட்ஷதருக்கு நன்றி சொல்லி இப்பவே போன் பண்ணிடுறேன்!!

    ReplyDelete
  2. //ஆகவே நம்ம பெயரையும், புகழையும் அங்கே பிரபலம் அடையச் செய்த தொண்டர்களில் முதன்மை ஸ்தானத்தையும் அடைந்து இருக்கின்றார்//

    அட கடவுளே! இன்னுமா உங்களை இந்த ஊர் நம்பிட்டு இருக்கு..? :))

    ஆக, சிதம்பரம் போகறதுக்கு முன்னாடி அபி அப்பாவுக்கு தகவல் குடுத்துட்டு போகனும்! என்பது தான் மாரல் ஆப் தி பதிவு. :))


    எனக்கும் சிதம்பரம் பாக்கனும்னு ரொம்ப நாளா ஆசை. ம்ம், திரு நாளை போவார் கதி தான் எனக்கும்.

    ReplyDelete
  3. //ஸ்ரீமுஷ்ணம்//

    கேள்விபட்ட மாதிரி இருக்கே? என்ன சுவாமி அங்க..?

    எப்படியும் ஒரு பத்து பதிவா இழுக்க போறீங்க.

    ReplyDelete
  4. அபி அப்பா, உங்க கிட்டே சொன்னால் உலகம் பூராவுக்கு தெரிஞ்சுடுமேன்னு தான் சொல்லலை, ஆனால் கோபிக்குத் தெரியும், சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தேனே!! :)))))))))

    @அம்பி, சிதம்பரம்னு ஒரு பேப்பரில் எழுதிட்டு, அப்புறமா அதை எடுத்துண்டு, மாநரகப் பேருந்துகள் ஏதாவது ஒன்றில் போயிட்டு வாங்க, பங்களூரில் தான், சிதம்பரம் போயிட்டு வந்ததாய்ச் சொல்லிக்கலாம்.

    ReplyDelete
  5. //அட கடவுளே! இன்னுமா உங்களை இந்த ஊர் நம்பிட்டு இருக்கு..? :))//

    சரியாப்போச்சு போங்க, எஸ்கேஎம் திரும்பி வந்தாச்சு தெரியுமில்ல??? நம்மளை நம்பி இருக்கிறதாலே தானே பின்னூட்டம் வந்திருக்கு?? :P :P புகை?????? நறநறநற

    ரெண்டு பேரும் சேர்ந்து உங்களைக் கதி கலங்க அடிக்கிறோம், பாருங்க, உ.பி.ச. வேறே வரேனு சொல்லி இருக்கா. புகை விடாமல் சமர்த்தா இருங்க! :P :P :P

    ReplyDelete
  6. ////ஸ்ரீமுஷ்ணம்//

    கேள்விபட்ட மாதிரி இருக்கே? என்ன சுவாமி அங்க..?

    எப்படியும் ஒரு பத்து பதிவா இழுக்க போறீங்க.//

    அம்பி, சரியாப்போச்சு,போங்க, கேஆரெஸ்ஸைக் கூப்பிடறேன். இருங்க,

    கேஆரெஸ், இந்த அம்பியை என்னனு கேட்கிறதில்லை, ஸ்ரீமுஷ்ணத்தில் என்ன ஸ்வாமினு கேட்டுட்டு, சரியான வைணவத் துரோகியா இருக்காரே?? கொஞ்சம் வந்து பாருங்களேன்! :P :P :P

    ReplyDelete
  7. அபி அப்பா சிதம்பரம் போய்விட்டு அங்கிருந்து ஊட்டிக்கு போகலாம் என்று இருக்கேன், உங்க நண்பரிடம் சொல்லிவிடவும்.

    ReplyDelete
  8. இவ்வளோ நடந்திருக்கு! கொஞ்சம் மருவாதியா தொல்காப்பியர் ன்னு எழுதக்கூடாதா?
    ப்ரொபைல் படத்த மாத்தினதுக்கு அவரை வன்மையா கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  9. குசும்பரே, முதல்லேயே தெரிஞ்சிருந்தா நாங்களும், வேறே எங்கேயானும் போகணும்னு தான் சொல்லி இருப்போம், மனுஷன், கடைசியிலே இல்லை சொன்னார்! கொஞ்சம் ஏமாத்தம் தான் போங்க!

    அது சரி, இன்னுமா ஹனிமூன் போகலை?? :P:P:P:P

    ReplyDelete
  10. @திவா, மாத்திடுவோம், சரியா???

    ReplyDelete
  11. @திவா, மாத்திட்டோம்ல??? :))))

    அபி அப்பா, வந்து பாருங்க மறுபடியும்! :))))))

    ReplyDelete
  12. தனிப் பதிவுகளுக்கே மேட்டர் கிடைக்காம அலையறோம்! உங்களுக்கு தொடர்களுக்கான விஷயம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது பாருங்க! ம்!

    ஒரு சிறு வேண்டுகோள்: தொடர்களில் தலைப்பிலேயே எண் போடுங்கள். ஒரே தலைப்பில் நிறைய இருந்தால் குழப்பமாக இருக்கிறது. ஏனென்றால் நானெல்லாம் அன்னின்னிக்குப் படிக்காமல், திடீரென்று மூடு வந்து பக்கம் புரட்டிப் படிக்கிற சோம்பேறி.

    சும்மா ஆர்க்காடு வீராசாமியையே குறை சொல்லிட்டிருக்காமல், கோயில் குளம்னு வெட்டியா செலவு பண்ற பணத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து, வீட்டில் ஓர் இன்வெர்ட்டர் வாங்கி வைக்கிற வழியைப் பாருங்க.

    ReplyDelete
  13. \\ஆக, சிதம்பரம் போகறதுக்கு முன்னாடி அபி அப்பாவுக்கு தகவல் குடுத்துட்டு போகனும்! என்பது தான் மாரல் ஆப் தி பதிவு. :))\\

    அம்பி அண்ணனுக்கு ஒரு ரீப்பிட்டே ;))

    \\கீதா சாம்பசிவம் said...
    அபி அப்பா, உங்க கிட்டே சொன்னால் உலகம் பூராவுக்கு தெரிஞ்சுடுமேன்னு தான் சொல்லலை, ஆனால் கோபிக்குத் தெரியும், சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தேனே!! :)))))))))
    \\

    அவ்வ்வ்வ்வ்வவ்வ்...இது எப்போ!!!?? ;)

    ReplyDelete
  14. //சும்மா ஆர்க்காடு வீராசாமியையே குறை சொல்லிட்டிருக்காமல், கோயில் குளம்னு வெட்டியா செலவு பண்ற பணத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து, வீட்டில் ஓர் இன்வெர்ட்டர் வாங்கி வைக்கிற வழியைப் பாருங்க//

    grrrrrrrrrகோயில், குளம் வெட்டிச் செலவாப்போச்சா உங்களுக்கு??? :P:P:P:P இன்வெர்டரிலே கணினியை இணைக்கலை, இணைத்தாலும் DNS Server அடிக்கடி down ஆயிடுதே?? அதுக்கு என்ன செய்யலாம்னு யோசனை சொல்லிட்டுப் போங்க, என்ன ஒரு சந்தோஷம்னா எத்தனை நாள் இணைப்பு வரலையோ அதுக்கு compensation கிடைக்குது, அதுக்காகவே இந்த இணைப்பை விடறதில்லை. மத்தவங்க தரதில்லை, பணமும் அதிகம் செலவாகுது, மத்த சேவையிலே! :))))))

    ReplyDelete
  15. சொன்னேன், மறந்துட்டீங்க போலிருக்கு கோபி, ஒரு விதத்தில் நல்லது தான் போங்க, அபி அப்பா கிட்டே சொல்லாமல் இருந்தீங்களே?? இல்லைனா தினத்தந்தியிலோ, தினமலரிலோ தலைப்புச் செய்தியாக் கொடுத்திருப்பார். :P:P:P:P

    ReplyDelete
  16. அட சிதம்பரத்து தீட்சிதர் எல்லாம் ஒன்லி தூரத்து நட்பு மட்டுமே!

    இன்னும் ஒரு 40 கி.மீ எங்க ஊருக்கு போயீருந்தீங்கன்னா அப்புறம் தெரிஞ்சுருக்கும் எங்க தொல்காப்பியரு எம்புட்டு வெயிட்டுன்னு! (நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா போகணும்!)

    ReplyDelete
  17. ஓ, இவ்வளவு நடந்திருக்கா?...

    தொல்ஸ், 2 வாரத்தில் நான் சிதம்பரம் போகிறேன்...ஹிஹிஹி இந்த ஏற்பாடு எல்லாம் எனக்கு,...ஹிஹிஹி

    [சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்..சீரியஸா எடுத்துக்காதீங்க]

    ReplyDelete
  18. அம்பி, மௌலி எல்லாருமே வாங்க அப்படியே மாயவரமும் வாங்க! கண்டிப்பா நல்லா "கவனிச்சு" அனுப்பறேன்:-))

    ஆஹா என்னது திடீர்ன்னு "ர்" பட்டம் எல்லாம். வேண்டுமானா பெயருக்கு முன்னாலே "சர்" பட்டம் கொடுங்க:-))

    குசும்பா! சொல்லிட்டீல்ல ஊட்டிக்கு போறத, கவனிப்பு பலமா செஞ்சுடலாம்:-))

    கோபி! என்கிட்டயே மறச்சுட்டியா, இருக்குடீ உனக்கு!!!

    திவா, உங்க ரெக்கமண்டேஷன் தானா? நடத்துங்க!!!

    ReplyDelete
  19. அம்பி, மௌலி எல்லாருமே வாங்க அப்படியே மாயவரமும் வாங்க! கண்டிப்பா நல்லா "கவனிச்சு" அனுப்பறேன்:-))

    ஆஹா என்னது திடீர்ன்னு "ர்" பட்டம் எல்லாம். வேண்டுமானா பெயருக்கு முன்னாலே "சர்" பட்டம் கொடுங்க:-))

    குசும்பா! சொல்லிட்டீல்ல ஊட்டிக்கு போறத, கவனிப்பு பலமா செஞ்சுடலாம்:-))

    கோபி! என்கிட்டயே மறச்சுட்டியா, இருக்குடீ உனக்கு!!!

    திவா, உங்க ரெக்கமண்டேஷன் தானா? நடத்துங்க!!!

    ReplyDelete
  20. ஆயில்யன்,
    மாயவரம் போகிறதைத் தனியா வச்சுக்கணும்னு தான் இப்போ அவசரப் பயணத்திலே எல்லாம் வச்சுக்கலை, போவோம் அங்கேயும், பார்க்க நிறைய இருக்கு, கோடிக்கரை குழகர் கோயிலில் இருந்து பார்க்கணும், வந்தியத் தேவனும், பூங்குழலியும் மறைந்து நின்று பேசிக் கொண்ட தாழம்புதர் இருக்கானு தேடணும், குழகர் கோயிலில் மதில் சுவர் மீது உட்கார்ந்து கொண்டு பூங்குழலி தேங்காயைப் பல்லால் சுரண்டிச் சாப்பிட்டாப்போல் உட்கார்ந்து சாப்பிட முடியுமானு பார்க்கணும், புதைகுழி எல்லாம் அப்படியே இருக்கானும் பார்க்கணும். இன்னும் எத்தனையோ!!!!!!

    @மெளலி, வாங்க, வாங்க, அதெல்லாம் அபி அப்பா கோவிச்சுக்க மாட்டார். போயிட்டு வாங்க! :)))))

    ReplyDelete