எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 11, 2008

பாரதியார் நினைவு நாள்


இந்த வருஷம் பாரதியார் நினைவுநாளுக்குத் தயார் ஆகும் முன்னரே, அவரின் பேத்தி திருமதி விஜயபாரதியின் கணவர் இறந்த செய்தி கிடைத்தது. இது இருவருக்கும் சேர்த்து அஞ்சலி. திருமதி விஜயபாரதியை நேரடியாகத் தெரியாது. கேள்விஞானம் மட்டுமே, எனினும் ஒருவரின் துக்கத்துக்கு ஆறுதல் சொல்ல அதுவே போதும் அல்லவா? கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு எந்தவித ஆறுதல் வார்த்தைகளும் போதாது. காலம் தான் மனப்புண்ணை ஆற்றி, அவர் தன் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கும் ஆற்றலை அவருக்கு இறைவன் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.
*************************************************************************************
பாரதியாரின் சிட்டுக் குருவி கட்டுரையில் இருந்து சிலவரிகள்:

"இந்தக் குருவி என்ன சொல்லுகிறது? "விடு", "விடு", "விடு", என்று கத்துகிறது. இது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது.

"விடு விடு விடு: தொழிலை விடாதே, உண்மையை விடாதே, கூட்டை விடாதே, பேட்டை விடாதே, குஞ்சை விடாதே,
உள்ளக் கட்டை அவிழ்த்து விடு, வீண் யோசனையை விடு, துன்பங்களை விடு.

சொல்லுவதற்கு இந்த வழி எளியதாய் இருக்கின்றது. இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று. உணர்ந்த பின்னர் இதை வழக்கப் படுத்துதல் அருமையிலும் அருமை!"


"தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்ச்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிகு உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ??"

இந்தப் பாட்டுத் தான் என்னை எப்போது உயிர்ப்போடு வைத்திருக்கின்றது என்றால் அதில் சந்தேகம் இல்லை. பலருக்கும் பிடித்த பாட்டும் கூட. ஆனாலும் மனம் பரிதவிப்பில் தவிக்கும்போது இந்தப் பாட்டே நினைவில் வரும். பாரதி இதை எழுதிய சூழ்நிலையும் அப்படித் தானோ என்று தோன்றும். காலத்தை வென்ற கவிஞன் என்பது மிகையில்லை. இன்னும் வரப் போகும் பல தலைமுறைகளும் பயனடையும் வகையில் குறுகிய வாழ்நாட்களுக்குள் இவற்றைப் படைத்த கவிஞனைப் போற்றி வணங்குகின்றேன்.

3 comments:

 1. //கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
  கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
  //


  அது மாயுமா?அல்லது மாளுமா? மாளும் என நினைக்கிறேன்.

  புக் இல்லை, உங்ககிட்ட இருக்குமே, செக் பண்ணிட்டு சொல்லுங்க.


  வருடம் தவறாமல் கரக்ட்டா நினைவு பதிவு போடறத்துக்கு பாரட்டுக்கள்.

  தமிழ்மணத்துல பாரதிக்கு ஒரு நினைவு பதிவாவது வருதே! என சின்ன ஆறுதல். :))

  ReplyDelete
 2. அம்பி, அது மாயும் தான், மாளும் இல்லை, என்றாலும் நீங்க சொன்னதுக்காகப் புத்தகத்தையும் பார்த்துவிட்டேன்,
  மாயும்=மாய்ந்து போகும் என்ற அர்த்தத்திலே வரும், திரும்பிப் படிச்சாப் புரியும்னு நம்பறேன். நினைவு வச்சுட்டுப் பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி. :P

  ReplyDelete
 3. கீதாம்மா, நம்பிக்கையில படிச்சிட்டு இங்க உள்ளேன் அம்மா போடறேன். எனக்கும் பிடிச்ச கவிதை :)

  ReplyDelete