எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 19, 2010

பிள்ளையாருக்கு நன்றி.

இரண்டு மாதமாகவே கூகிளார் உள்ளே நுழையும்போதெல்லாம் மிரட்டிட்டு இருந்தார். உள்ளே நுழைந்து பாஸ்வேர்ட் போட்டால் போதாது. உடனேயே வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்பார். அதை லக்ஷியம் செய்யாமல் மீண்டும் மீண்டும் பாஸ்வேர்ட் மட்டும் போட்டாலோ, முதல்லே வேர்ட் வெரிஃபிகேஷனை கிளியர் பண்ணு, சரியான பாஸ்வேர்ட் போட்டாலும் வேர்ட் வெரிஃபிகேஷனிலும் பாஸாகணும்னு சொல்லிடுவார். சரினு அப்படியே போயிண்டு இருந்தேன். இரண்டொருவர் கிட்டே கேட்டும் பார்த்தேன். அவங்க எல்லாம் பாஸ்வேர்ட் தப்பாய்ப் போட்டிருப்பேனு தான் சொன்னாங்க. ஆனாலும் எனக்கு நிச்சயமா பாஸ்வேர்ட் தப்பில்லைனு தெரியும். சரி, அதான் மெயில் திறக்குதேனு பேசாமல் இருந்தேன். இன்னிக்குக் காலம்பர மெயில் பார்க்கும்போது ஒண்ணும் பிரச்னை இல்லை.

மத்தியானமா ஒரு முக்கியமான மெயில் பார்த்துட்டு பதில் கொடுத்துவிட்டு அதை அனுப்பும்போது நீ லாக் அவுட் பண்ணியாச்சு திரும்ப லாகின் பண்ணுனு மெசேஜ் வருது. சில சமயம் கூகிளில் இப்படி வரும். ஒருவேளை நெட் கனெக்ஷன் சரியில்லையோனு பார்த்தால் எப்போதையும் விட வேகம். சரினு மறுபடியும் லாகின் பண்ணினால் அக்கவுண்ட் டிசேபிள்னு செய்தி வருது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு திரும்பத் திரும்ப முயன்றால் அரைமணிக்கப்புறமா temporarily disabled அப்படினு வருது. சரினு கொஞ்சம் சமாதானம் ஆச்சு. அதிலே கூகிளார் சொன்னபடி எல்லாம் பண்ணி அவங்க கொடுத்த கோட் நம்பரைப்போட்டால் எரர்னு சொல்லுது. மறுபடி மறுபடி அதே கோட் நம்பர், போடப்போட அதே எரர்னு பதில். மெளலியும் அந்த நம்பரைப் போட்டால் சரியாகும்னு தான் சொன்னார்.

மறுபடி உதவிக்குப் போய் அவங்க கேட்டதை எல்லாம் சொன்னேன். அப்படியும் ஒண்ணும் பிரயோஜனமில்லை. அதுக்குள்ளே எல்கே தொலைபேசி உதவிக்கு வந்தார். அவரும் அவர் இடத்தில் இருந்து முயன்று பார்த்தார். இப்போ என்னடான்னா ப்ரொஃபைலே இல்லைனு வருது. பதிவுகள் எல்லாம் எடுத்தாச்சுனு மெசேஜ் வருது. அது போகட்டும், மெயில் திறந்தால் போதும், சில முக்கியமான வேலைகள் இருக்கே! வெறுத்துப் போய்க் கணினியை மூடிட்டேன். வீட்டில் வேலையை எல்லாம் முடிச்சுட்டு மறுபடி பார்த்தால் இப்போ எல்கே பதிவுகள் தெரியுது, சாயந்திரமா மறுபடி முயற்சி பண்ணுங்கனு மெசேஜ் கொடுத்தார். உடனே ஒரு நப்பாசை. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு. மறுபடிமுயன்றேன். மறுபடி எல்லா விபரமும் கேட்க எல்லாத்தையும் கொடுக்க இப்போ வேறே கோட் நம்பர். சரினு அதையும் விடாமல் போட்டுப் பார்த்தால் என்ன ஆச்சரியம்? கூகிள் மெயிலுக்குப் போச்சு. அங்கே பழைய பாஸ்வேர்டைக் கொடுத்தால் உடனேயே பாஸ்வேர்ட் மாத்தச் சொல்லி அந்தப் பக்கத்துக்குப் போச்சு. கூடவே கூகிளாரின் மெசேஜும். We detected some unauthorised phishing in your mail id. அப்படினு. அதனால் மூடினாங்களாம். என்னவோ தெரியலை. அப்படி எல்லாம் நடக்காதுனு சொல்றாங்க. ஆனால் எனக்குத் தான் எல்லாமே அதிசயமா நடக்குமே. நடந்துடுச்சு! பாஸ்வேர்ட் மாத்தினதுமே என்ன ஆச்சரியம்? அந்த மெயில் இன்பாக்ஸும் திறந்தது. ஆனால் பார்த்தவரைக்கும் அதிலே சில ப்ரைவேட் மெயில்களைக் காணோம். அது ஒண்ணும் அவ்வளவு முக்கியம் இல்லைனு விட்டுட்டேன். மத்தது இன்னும் நல்லாப் பார்க்கணும். பஸ்ஸில் ஒரு மெசேஜ் கொடுத்திருந்தேன். அதையும் காணோம். போனால் போகட்டும். இந்த மட்டும் திரும்பக் கிடைச்சதே அதுவே அதிர்ஷ்டம் தான். உதவிக்கு வந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

9 comments:

  1. பயமால்ல இருக்கு.. இதென்ன மெயில் உதிர் காலமோ?..

    சூர்யாகண்ணனுக்கும் இது நடந்திருக்கே..

    :((

    ReplyDelete
  2. அனேகமா நான் சொன்ன மாதிரி யாரோ உங்க பாஸ்வோர்டை களவாடி இருக்கணும். அப்படியோ கொஞ்சம் கடினமணா பாஸ்வோர்ட வைங்க

    ReplyDelete
  3. வாங்க புன்னகை தேசம், என்ன செய்யறது?? ஆனால் சூர்யா கண்ணன் அளவுக்கு என்னோடதையும் முக்கியமா நினைச்சிருக்கிறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு. என்னவோ போங்க! :(

    ReplyDelete
  4. எல்கே, சாயந்திரமா நீங்க சொன்னாப்போல் மறுபடி முயன்று பார்த்தபோது வந்த விண்டோவில் சொன்னபடிக்கு எல்லாம் செய்ததும் பழைய பாஸ்வேர்டை மாத்தச் சொல்லி மெசேஜ் வந்தது. அது செய்ததும், எல்லாம் சரியாய் ஆச்சு. ரொம்ப நன்றிப்பா சமயத்துக்கு வந்து உதவியதற்கு.

    ReplyDelete
  5. :)))) athe mathiri mattha idukum paasword mathirunga

    ReplyDelete
  6. ippa unga blogla comment potta user id password kekuthu?? appuram error varuthu appuramthan comment poda mudiuthu

    ReplyDelete
  7. //யாரோ உங்க பாஸ்வோர்டை களவாடி இருக்கணும்.//

    எனக்கு சிரிச்சு முடியலை.. ம்ம் அப்புறம்.. :))

    பிள்ளையாருக்கு எப்படியெல்லாம் சோதனை வருது பாரேன். :p

    ReplyDelete
  8. எல்கே, எல்லாத்துக்கும் பாஸ்வேர்ட் மாத்தியாச்சு, இன்னும் யாஹூவைப் பார்க்கலை, அதையும் பார்த்துடணும்! :( ரொம்ப நன்றிப்பா ஆலோசனைகளுக்கு.

    ReplyDelete
  9. எனக்கு சிரிச்சு முடியலை.. ம்ம் அப்புறம்.. :))

    பிள்ளையாருக்கு எப்படியெல்லாம் சோதனை வருது பாரேன். :ப//

    Of Course Ambi, still I am wondering! I know am not a VIP or writing meaningful articles. Even then it happened to me. I am glad, atleast you are still enjoying by this episode. Bless You. Take Care! Thank You for taking pain to visit my blog.

    ReplyDelete