எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 29, 2010

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வருவார் இருங்க!

இங்கே


இங்கே

முன் இரண்டு பதிவுகளை மேலே கண்ட சுட்டியில் காணலாம். ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்ததுமே ஏமாந்துட்டார். ஹிஹிஹி, நாங்க ஏதோ தொலைதூரத்திலே இருந்து வரோம்னு நினைச்சிருக்கார். சென்னையிலிருந்து வரோம்னதும், அடுத்து மாயவரம் மிஞ்சிப்போனால் ஒரு மணிநேரம் தான் இறங்கி இருக்கணும், சிதம்பரம்னதும் அவர் சொன்னது குறைந்த பக்ஷம் ஆயிரம் கிமீ பயணத்திலே ஐந்நூறு கிலோமீட்டராவது பயணம் செய்தால் தான் நடுவில் பயணத்தை நிறுத்திக்கொண்டு இறங்கிப் பின் நாலு நாட்கள் ரயில்வே அநுமதியோடு இறங்கிய இடத்தில் இருந்து நான்காம் நாள் ஏற முன்பதிவு கிடைக்கும்னும் இந்த அல்ப விஷயத்துக்கெல்லாம் கிடைக்காது என்றும் சொன்னார். நான் என்னமோ வெங்காயம் தான் காணாமல் போச்சாக்கும்னு நினைச்சேன் என்பதே அவர் சொல்ல விரும்பி இருப்பார். கேவலம் வெங்காயம் நூறு ரூபாய் விக்கும்போது சிதம்பரம்-மாயவரம் பதினைந்து ரூபாய்க்கு வந்துட்டாளேனு பார்த்தார். அதை ஒண்ணும் வெளியே காட்டிக்காமல் முகத்தைச் சாதாரணமா வச்சுண்டு வெளியே வந்து ரங்க்ஸிடம் ஐநூறு கிமீட்டர் பயணம் செய்திருக்கணுமாம்னு மட்டும் சொன்னேன். அவரோ நான் தான் வேண்டாம்னு சொன்னேன், கேட்டியானு சொல்றார். அநுகூல சத்ரு! :P வேறே என்ன செய்யறது?

நல்லவேளையா தீக்ஷிதர் ஆட்டோ அனுப்பி இருந்தார். ஹிஹி, பயப்படாதீங்க! அவங்க வீட்டுக்குப் போகத்தான். குடும்ப ஆட்டோ! அங்கே போனதும் எனக்கு பக் பக் னு இருந்தது. எல்லாம் இந்த அறை எப்படி இருக்குமோங்கற கவலைதான். தீக்ஷிதர் வீட்டில் சாப்பாடு ரெடி சாப்பிட வாங்கனு சொல்ல, நாங்க ரயிலிலே சாப்பிட்டோம்னு சொல்ல, ஏன் வாங்கிச் சாப்பிட்டீங்கனு கோவிக்க, காலம்பர மூணு மணிக்கு எழுந்து, குளிச்சுட்டுச் சமைச்ச எனக்குக் கோபம் வர, அதைக் கண்ட ரங்க்ஸ் நிலைமை முற்றும்முன் குறுக்கிட்டு என்னைப் புகழ்ந்து பேச, மறுபடியும் என் கவலை ரூம் எப்படி இருக்குமோனு திரும்ப, அவரும் நிம்மதி அடைந்தார். ஏன்னா, இப்போ ரூம் எப்படி இருந்தாலும் பழி தீக்ஷிதருக்குத் தானே! மாட்டிக்கப் போறது அவர் தானே! பாவம் அல்ப சந்தோஷி! அநுபவிச்சுட்டுப் போகட்டுமே! :)))))))

அவங்க கிட்டே பேசவேண்டியது, கேட்கவேண்டியது முடிஞ்சதும், ஆட்டோ டிரைவரே எதிரே இருந்த லாட்ஜுக்கு சாமானை எடுத்து வந்து கொடுத்தார். அறை கீழே இருக்காக்கும்னு நினைச்சால் கீழே ஏதோ ரெஸ்டாரண்ட். அட கடவுளே, எங்கே இருக்கு லாட்ஜ்னு பார்த்தால் விண்ணிலிருந்து அசரீரி கிளம்பியது. மேலே வாங்க சார். மேஏஏஏஏஏஏஏலே பார்த்தோம். முதல் மாடியாம். அம்ம்மாடி எம்புட்டு உயரம்! பையன் யாராவது இருந்தால் அனுப்புங்களேன், சாமானைத் தூக்க முடியலைனு ரங்க்ஸ் சொல்லிட்டு, நாலு நாளைக்கு எவ்வளவு புடைவை?னு பல்லைக் கடிக்க, புடவைமடிப்புக்குள் வைச்சிருந்த புத்தகம் அவர் கண்ணில் படக்கூடாதேனு நான் கவலைப்பட பைய(ர்)ன் (60 வயசிருக்கும்)சாப்பிடப் போயிருக்காராம். வேறே வழியில்லாமல் ரெண்டு பேரும் சாமானைத் தூக்கிண்டு மாடி ஏறினால் அஜந்தா, எல்லோரா எல்லாம் கெட்டுது ஒவ்வொரு படியும் இரண்டடி உயரம். ஒரு படியிலிருந்து இன்னொரு படிக்கு ஏறப் படியைத் தேடினேன்னா பாருங்களேன்!

ஒருவழியா ஏறி மேலே போய் மானேஜரைப் பார்த்துப் பேசி அறையைப் பார்த்தா உள்ளே ஒண்ணுமே தெரியலை! வெயில்லே வந்திருக்கீங்க அதான்னு சொன்னார். அது சரிதான்னு நினைச்சுட்டு, பாத்ரூம் எப்படி இருக்குனு பார்த்தால் பாத்ரூமையே காணோம். காலைத் தூக்கி மேலே ஏதோ பரணில் வைச்சுட்டேன் போலிருக்கு. கீழே இறங்கத் தெரியலை. திகைச்சுப் போயிட்டேன். மானேஜர் அதான் மேடம் பாத்ரூம்னு சொல்றார். பக்கெட் எங்கே? குழாய் எங்கே? தண்ணீர் எங்கே?? விளக்கு எங்கே? ஒண்ணையும் காணோமே! ஹிஹிஹி, இது நானில்லை, அ.வ.சி. மானேஜர், கரண்ட் இல்லை. இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் வர. அப்போ ஜெனரேட்டர் போடலாமே? இது நான் தான் வேறேயாரு. வாயை வச்சுண்டு சும்மாவா இருக்க முடியும்? ஜெனரேட்டரா?? அப்படின்னா? இது மானேஜர்!

எங்கே உங்க முதலாளி?

ராத்திரி வருவார்! நீங்க அப்போ கோயில்லே இருப்பீங்க! இது மானேஜர்!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரெண்டு பேரும் உறுமினோம் இதென்னடா கூத்து, எடுத்த எடுப்பிலேயே ஏழாம்பொருத்தம் இந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு இரண்டு நாளைக்குக் குப்பை கொட்டணுமா?? அதுவும் போற இடமெல்லாம் துரத்தும் ஆற்காட்டார் வேறே! பேசாமல் கட்டிலில் போய் உட்கார்ந்தோம். கட்டில் விரிப்பெல்லாம் ஓரளவு பரவாயில்லை. யாரோ என்னைப் பத்திப் போட்டுக் கொடுத்திருப்பாங்கனு நினைக்கிறேன். சுத்தமாத் துவைச்சு இருந்தது. நாங்களும் இப்போல்லாம் நம்பறதில்லைகையோடு எடுத்துப் போயிடறோம். 3 ஸ்டார் ஹோட்டல்னு ஒரு ஊரிலே (புதுக்கோட்டை?? மதுரை???) தங்கிட்டு ஒரு அறைக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேலே வாடகை கொடுத்துட்டுப் பட்ட அவஸ்தை!

1 comment:

  1. சிறிய நகரங்களில் தங்கும் இடம் எப்பொழுதும் பிரச்சனைதான்

    ReplyDelete