எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 10, 2012

ஸ்ரீசிருங்கேரி ஸ்வாமிகள் ஸ்ரீரங்கம் வருகை!



ஸ்வாமிகள் வரதுக்காக, அம்மா மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல புஷ்ப ரதம், யானை, குதிரைகள் அலங்கரிக்கப்பட்டுத் தயாராக இருந்தன. இங்கே நாளை சிருங்கேரி மடத்தின் சார்பில் ஒரு மருத்துவசாலையும், பள்ளியும் திறந்து வைக்கிறார் ஸ்வாமிகள்.  அதுக்காக வந்திருக்கிறார்.  கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பின்னர் வருவதால் நிறையக் கூட்டம். நெரிசல் தாங்கலை.  போக்குவரத்தையும் நிறுத்தாமையினால் கூட்டத்தைச்  சமாளிக்க முடியலை.
















யானை, குதிரைகள் மட்டும் ஊர்வலத்தில் அணிவகுத்துச் சென்றன.  அதிலே ஒரு யானையார் சும்மாவே இருக்கலை. நெளிந்து கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார்.  இன்னொருத்தர் கையிலே காமிராவோட போனால் அதைக் கொடுத்துடுனு பிடிவாதம். துதிக்கையை நீட்டிக் கையிலே இருக்கிறதைப் பிடுங்கப் பார்க்கிறார்.  குதிரைகள் மட்டும் சமத்தாய் போஸ் கொடுத்தன. குதிரைகளும் நம்மாளு யானையாரும் என் கை வண்ணம்.  ரதத்தின் அருகே கூட்டம் இருந்ததால் ரங்க்ஸ் போய் எடுத்தார்.  கடைசியில் ஸ்வாமிகள் ரதத்தில் ஏற மாட்டேன்னு போயிட்டார்.  காரிலேயே போயிருக்கார். போலீஸெல்லாம் சேர்ந்து மனித வளையம் போட்டுப் பாதுகாக்க ஸ்வாமிகள் ஊர்வலம் சென்றது. யாருக்கும் பார்க்க முடியலை.  வருத்தம். பூரண கும்பம், முத்து ஆரத்தி என வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

கூட்ட நெரிசலில் எல்லாரும் ஊர்வலத்தோட சிருங்கேரி மடம் போக நாங்க வீட்டுக்குத் திரும்பிட்டோம்.  ஏற்பாடு செய்தவர்கள் மக்கள் பார்க்கும்படியாக உயர்ந்ததொரு ஆசனத்தில் அமர்ந்து ஊர்வலம் வரவேண்டும் என சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டிருந்திருக்கலாமோ!  அல்லது அவர் தான் மாட்டேன்னு சொன்னாரா? தெரியலை.  நாளை பேப்பரைப் பார்த்தால் கொஞ்சம் புரியலாம்.





Posted by Picasa

14 comments:

  1. யானை குதிரை அலங்காரம் நல்லா இருக்குங்க.. ஆனா ஆளில்லா நாற்காலியா?

    ReplyDelete
  2. மாமி

    ஸ்ருங்கேரி ஸ்வாமிகளின் விஜய யாத்திரை - ஸ்ரீரங்கம் வர்ணனைக்கு நன்றி. தினமலரில் அவரின் யாத்திரையை தொடர்ந்து வருகிறேன்.

    மற்றபடி ஸ்ரீரங்கம் ஊர் பழகி விட்டதா? திருவானைக்காவலில் அமர்நாத் பனி லிங்கம் replica செய்து தரிசனத்திற்கு வைத்திருந்தார்களாமே. போக முடிந்ததோ?

    ReplyDelete
  3. intha weekend chennai varar. madathuku poi pakkanum

    ReplyDelete
  4. சமீபத்தில் சிவகங்கை வந்திருந்தார். அங்கே பார்த்தோம்....

    ReplyDelete
  5. சரியான மற்றும் முறையான ஏற்பாடில்லை போலேருக்கு.... யானையார் சிறு வயதோ.... கையிலிருக்கும் கேமிராவைப் பிடுங்க முயற்சிக்கும் குறும்பு பார்க்க ஜாலியாய் இருந்திருக்கும்!

    ReplyDelete
  6. அம்பத்தூரை விட ஸ்ரீரங்கம் ரொம்பவும் பிடிச்சுப் போயிடுத்துப் போல :))

    ReplyDelete
  7. வாங்க அப்பாதுரை, யானையோட விஷமம் தான் ரொம்பப் பிடிச்சது. :))) குதிரை சாதுவாத் தான் நின்னுட்டு இருந்தது. படம் எடுத்ததும் ஒரு குதிரை முகத்தை எனக்கு நேரே திருப்பிக் காமிராவுக்கு முகத்தைக் காட்டியும் படம் எடுக்கச் சொன்னது. அப்படியும் ஒண்ணு எடுத்து வைச்சிருக்கேன். கிட்டே போகலாம்னா அந்த நேரம் பார்த்து, சுஜாதாவோட, குதிரை கடிச்ச கதை நினைப்பிலே வந்து தொலைச்சது! :)))))))))

    ReplyDelete
  8. வாங்க ஸ்ரீநி, பார்க்கவே முடியலை. இந்தியா வருகை எப்போ?

    ReplyDelete
  9. வாங்க எல்கே, நீங்களா இது? ஆஆச்ச்ச்ச்ச்ச்சரியம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே. :P

    ReplyDelete
  10. வாங்க வெங்கட், சொன்னீங்க இல்லை? நினைவிலே இருக்கு! :))) சாயந்திரமாப் போகலாமோனு நினைக்கிறோம். பார்க்கலாம். கூட்டம்னா முடியாது.

    ReplyDelete
  11. வாங்க ஸ்ரீராம், ஆமாம், அமைப்பாளர்கள் சரியானபடி ஏற்பாடு பண்ணலைனு தான் நினைக்கிறோம். அவ்வளவு செலவு செய்து வீணாப் போச்சு, பாவம். உழைச்சவங்க உழைப்பு! :((((

    ReplyDelete
  12. வாங்க ஜீவி சார், ஹிஹி, சென்னை எப்போவுமே எனக்கு எட்டிக்காய் தான். 62-63-இல் முதல் முதலாய்ப் பார்த்ததிலே இருந்து. கல்யாணம் ஆனதும் புனானு நினைச்சது இல்லாமல் போனதும் ஒரு வகையில் ஏமாற்றமே. சென்னைக் குடித்தனமும் அவ்வளவாப் பிடிக்காமல் தான் இருந்தது. இப்போப் பத்து வருஷமாச் சுத்தமா மனசு ஒட்டலை! :))))

    அந்தக் கால மதுரையிலே இருந்துட்டுச் சென்னை பிடிக்காமல் இருந்திருக்கலாமோ என்னமோ. இப்போ மதுரையும் பிடிக்கலை. ஸ்ரீரங்கம் ஓரளவுக்கு மாறாமல் இருக்கு. இன்னமும் அந்த கிராமத்துச் சூழ்நிலை ஆங்காங்கே மனிதர்கள் பேச்சில், சுற்றுப்புறங்களில், மக்கள் கொண்டாட்டங்களில்னு தெரியுது. கலாசாரம் போக ஆரம்பிக்கலை. :))))))

    ReplyDelete
  13. தென்காசி தாண்டி எங்கயோ ஆளில்லாத குக்குக்குக்குக்கிராமம் இருக்கறதா சொல்றாங்க.. மொத்தமே நாலுபேர் தானாம் (வரப்போறவங்களையும் சேத்து)

    ReplyDelete
  14. Aii.. Srirangam! Ammamandapam!

    Yaar vandhaa enna/ponaa enna? Enga oor peyar ketkave/padikkave santhoshamaa irukku!

    Adikkadi intha maathiri photos eduththup podungo Geetha mam!

    ReplyDelete