காமாட்சி அம்மாவோட பதிவில் தயிர்க்காரியைப் பத்திப் படிச்சதும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பரே, நண்பரே! மதுரையிலும் தயிர்க்காரிகள் வருவாங்க. பலருக்கும் அக்கம்பக்கம் கிராமங்களில் சொந்தமாக மாடுகள் இருக்கும். பெரும்பாலும் பசுக்கள் தான். நான் எருமைப் பால் முத முதலாய்ச் சாப்பிட்டதே கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமாத் தான். எங்க வீட்டிலும் சரி, அக்கம்பக்கம் வீடுகளிலும் சரி, பசும்பால் தான் வாங்குவாங்க. அதிலும் அப்போதெல்லாம் நாட்டுப் பசுக்கள்! பசும்புல்லைத் தின்று வளர்ந்து பால் கொடுக்கும். அநேகமாத் தெருவுக்கு ஒரு வீட்டில் மாடுகள் இருக்கும். தெருக்காரங்க மொத்தமும் அங்கே தான் பால் வாங்குவாங்க. அல்லது எல்லாப் பசும்பாலையும் ஒன்றாகச் சேகரித்துக் கோ ஆபரேடிவ் சொசைடி மூலமும் விநியோகிப்பாங்க. சொசைட்டி பால் வாங்க கூப்பன்கள் உண்டு. நூறு மில்லி, 200 மில்லி, 500 மில்லி என்று கூப்பன்கள். இதிலே கஷ்டம் என்னன்னா 250 மில்லி வாங்கறது தான்! 50 மில்லிக்குக் கூப்பன் இருக்காது. சொசைடி பால் ஊத்தறவர் 50 மில்லி பால் ஊத்திட்டு நாலணா அல்லது இரண்டணா தனியா வாங்கிப்பார். . எல்லோரும் கொடுப்பாங்க! வேறே வழியே இல்லையே.
பால் இத்தனை கிடைத்தாலும் தயிர்க்காரிகளும் வருவாங்க. தட்டுக்கூடையைச் சுற்றிப் பிரிமணை போல் துணியைச் சுத்தி வைச்சு நடுவில் பெரிய பானையை வைத்து அது நிறையத் தயிர் கொண்டு வருவாங்க. மேலே ஒரு சின்னப் பானையில் மோர் இருக்கும். இந்த மோரானது கொஞ்சம் கட்டிகளும், கொஞ்சம் நீராகவும் இருக்கும். தயிர் அப்படி ஒண்ணும் கட்டித் தயிராக இருக்காது. என்றாலும் தினம் இதை வாங்கும் வாடிக்கைக்காரங்க உண்டு. ஓரணாவுக்குக் கால்படி தயிர் கொடுத்ததாக நினைவு! சரியாத் தெரியலை!
இது தான் தட்டுக்கூடை என்பது
படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக இலுப்பைத் தோப்புப் பதிவு!
ஆனால் எங்க வீட்டில் வாங்க மாட்டாங்க! தயிர் உறை ஊற்றித் தான் சாப்பிடுவோம். பெரியப்பா வீட்டில் தயிர்க்காரியிடம் தயிர் வாங்குவாங்க. எங்களுக்கெல்லாம் அது சட்டி வாசனை வராப்போல் தோணும். ஆனால் அதே தயிரை வட மாநிலம் போனதும் மண் சட்டியில் வாங்கிச் சாப்பிடுகையில் நன்றாகவே இருந்தது. மாறியது தயிரா, இல்லை என் மனசானு தெரியலை! :) தயிர்க்காரியே காலையில் தயிரைக் கொண்டு வந்துவிட்டு மதிய வேளைகளில் நெய் எடுத்து வருவாள். நெய்ப் பானையைத் திறக்கும்போதே நெய்யின் மணம் மூக்கைத் துளைக்கும். அந்த நெய்க்காரியிடம் நெய் எங்க வீட்டில் வாங்குவாங்க. பூரி பொரிக்க மற்ற பட்சண வகைகளுக்கு அந்த நெய்தான். சாப்பாட்டுக்கு விட்டுக்கத் தனியாய் வெண்ணெய் வாங்கிக் காய்ச்சுவாங்க! வெண்ணெயும் இந்த நெய்க்காரியிடமே கிடைக்கும்.
என் பாட்டி வீட்டில், சின்னமனூரில் சித்தி வீட்டில் எல்லாம் வீட்டிலேயே தூணில் சங்கிலி போட்டுக் கயிறு கட்டித் தயிர்ப்பானையில் மத்தோடு சேர்த்துக் கட்டி வெண்ணெய் எடுப்பாங்க. சின்ன வயசில் அதை இழுக்கிறது ஒரு வேடிக்கையாத் தோணும் என்பதால் அவங்க தயிர் கடைகையில் "நானும், நானும்!"னு சொல்லி இழுத்திருக்கேன். இப்போவும் வாரம் ஒரு முறையாவது தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கிறேன் தான். இங்கேயும் பசும்பால் தான்.
ஆச்சா, இதைப் போலவே அப்போக் கீரைக்காரியும் தெருவிலே வருவாள். அம்பத்தூரிலே இன்னமும் தெருவிலே கீரைக்காரி வராதான். ஆனால் மதுரையிலே வர கீரைக்காரிக்குக் காசு கொடுத்துக் கீரை வாங்கினதே இல்லை. அரிசி போட்டுத் தான் கீரை வாங்குவோம். கீரையோடு சேர்த்து கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், தக்காளி எல்லாமும் வைச்சிருப்பா. அதுக்கும் அரிசிதான்! ஒரு கிண்ணம் அரிசி போட்டால் வீட்டுக்கு வேண்டிய கீரை, கருகப்பிலை, கொத்துமல்லி, ஒன்றிரண்டு பச்சைமிளகாய், ஒன்று அல்லது இரண்டு தக்காளி கிடைக்கும். இதைத் தவிரவும் அந்த கீரைக்காரி பண்டிகை நாட்களின் போது மருதாணி பறித்து வந்து கொடுப்பாள். அதுக்கெல்லாம் காசு கிடையாது. அவளுக்கு வேலை இல்லைனால் அரைச்சே கொண்டு வந்து தருவாள். இல்லைனா இலைகளைப் பறித்து வந்து தருவாள். நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது கைகளுக்கு மருதாணி இட்டுக் கொண்டு போவது தனி மகிழ்ச்சி தான்.
மருதாணி இட்ட கரங்களில் மறுநாள் காலை பழைய சாதம் தயிர்விட்டுப் பிசைந்து கையில் உருட்டிப் போட்டுச் சாப்பிட்டால் நல்ல மணமாக இருக்கும். இதெல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன். இருந்தாலும் இன்று மறுபடி கொசுவத்தி சுத்தி இருக்கேன்.
பால் இத்தனை கிடைத்தாலும் தயிர்க்காரிகளும் வருவாங்க. தட்டுக்கூடையைச் சுற்றிப் பிரிமணை போல் துணியைச் சுத்தி வைச்சு நடுவில் பெரிய பானையை வைத்து அது நிறையத் தயிர் கொண்டு வருவாங்க. மேலே ஒரு சின்னப் பானையில் மோர் இருக்கும். இந்த மோரானது கொஞ்சம் கட்டிகளும், கொஞ்சம் நீராகவும் இருக்கும். தயிர் அப்படி ஒண்ணும் கட்டித் தயிராக இருக்காது. என்றாலும் தினம் இதை வாங்கும் வாடிக்கைக்காரங்க உண்டு. ஓரணாவுக்குக் கால்படி தயிர் கொடுத்ததாக நினைவு! சரியாத் தெரியலை!
இது தான் தட்டுக்கூடை என்பது
படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக இலுப்பைத் தோப்புப் பதிவு!
ஆனால் எங்க வீட்டில் வாங்க மாட்டாங்க! தயிர் உறை ஊற்றித் தான் சாப்பிடுவோம். பெரியப்பா வீட்டில் தயிர்க்காரியிடம் தயிர் வாங்குவாங்க. எங்களுக்கெல்லாம் அது சட்டி வாசனை வராப்போல் தோணும். ஆனால் அதே தயிரை வட மாநிலம் போனதும் மண் சட்டியில் வாங்கிச் சாப்பிடுகையில் நன்றாகவே இருந்தது. மாறியது தயிரா, இல்லை என் மனசானு தெரியலை! :) தயிர்க்காரியே காலையில் தயிரைக் கொண்டு வந்துவிட்டு மதிய வேளைகளில் நெய் எடுத்து வருவாள். நெய்ப் பானையைத் திறக்கும்போதே நெய்யின் மணம் மூக்கைத் துளைக்கும். அந்த நெய்க்காரியிடம் நெய் எங்க வீட்டில் வாங்குவாங்க. பூரி பொரிக்க மற்ற பட்சண வகைகளுக்கு அந்த நெய்தான். சாப்பாட்டுக்கு விட்டுக்கத் தனியாய் வெண்ணெய் வாங்கிக் காய்ச்சுவாங்க! வெண்ணெயும் இந்த நெய்க்காரியிடமே கிடைக்கும்.
என் பாட்டி வீட்டில், சின்னமனூரில் சித்தி வீட்டில் எல்லாம் வீட்டிலேயே தூணில் சங்கிலி போட்டுக் கயிறு கட்டித் தயிர்ப்பானையில் மத்தோடு சேர்த்துக் கட்டி வெண்ணெய் எடுப்பாங்க. சின்ன வயசில் அதை இழுக்கிறது ஒரு வேடிக்கையாத் தோணும் என்பதால் அவங்க தயிர் கடைகையில் "நானும், நானும்!"னு சொல்லி இழுத்திருக்கேன். இப்போவும் வாரம் ஒரு முறையாவது தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கிறேன் தான். இங்கேயும் பசும்பால் தான்.
ஆச்சா, இதைப் போலவே அப்போக் கீரைக்காரியும் தெருவிலே வருவாள். அம்பத்தூரிலே இன்னமும் தெருவிலே கீரைக்காரி வராதான். ஆனால் மதுரையிலே வர கீரைக்காரிக்குக் காசு கொடுத்துக் கீரை வாங்கினதே இல்லை. அரிசி போட்டுத் தான் கீரை வாங்குவோம். கீரையோடு சேர்த்து கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், தக்காளி எல்லாமும் வைச்சிருப்பா. அதுக்கும் அரிசிதான்! ஒரு கிண்ணம் அரிசி போட்டால் வீட்டுக்கு வேண்டிய கீரை, கருகப்பிலை, கொத்துமல்லி, ஒன்றிரண்டு பச்சைமிளகாய், ஒன்று அல்லது இரண்டு தக்காளி கிடைக்கும். இதைத் தவிரவும் அந்த கீரைக்காரி பண்டிகை நாட்களின் போது மருதாணி பறித்து வந்து கொடுப்பாள். அதுக்கெல்லாம் காசு கிடையாது. அவளுக்கு வேலை இல்லைனால் அரைச்சே கொண்டு வந்து தருவாள். இல்லைனா இலைகளைப் பறித்து வந்து தருவாள். நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது கைகளுக்கு மருதாணி இட்டுக் கொண்டு போவது தனி மகிழ்ச்சி தான்.
மருதாணி இட்ட கரங்களில் மறுநாள் காலை பழைய சாதம் தயிர்விட்டுப் பிசைந்து கையில் உருட்டிப் போட்டுச் சாப்பிட்டால் நல்ல மணமாக இருக்கும். இதெல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன். இருந்தாலும் இன்று மறுபடி கொசுவத்தி சுத்தி இருக்கேன்.
பழமையான காலங்கள் இவை இனி எதிர்கால சந்ததிகளுக்கு கிடைக்காது என்பது வேதனையான விடயமே....
ReplyDeleteஆமாம், கில்லர்ஜி! படங்களில் கூடப் பார்க்க முடியுமா, சந்தேகமே! :(
Deleteம்ம்.ஶ்ரீவில்லிபுத்தூரில பால் கணக்கு பொட்டு வைத்துக் கண்டு போவார்கள்.சுவர் முழுவதும் இருக்கும்.திருமங்கலத்தில் தயிர்காரம்மா விருந்தினர்கள் வந்தால் வாங்குவோம். அந்த அம்மாவே ரோஜா மலர்களும் கட்டிக் கொண்டு வருவார்.
ReplyDeleteஆமாம், அந்தப் பொட்டுக்கள் வைத்துக் கணக்குப் போடுவது என்னவோ பிரம்ம வித்தையாக இருக்கும். பொட்டு வட்டமாக இருந்தால் ஒரு கணக்கு, தீற்றினால் ஒரு கணக்குனு சொல்வாங்க!
Deleteநினைவுகள்......
ReplyDeleteநெய்வேலியில் இப்படி மோர்/தயிர் விற்றுப் பார்த்தது கிடையாது. வீட்டில் உறை ஊற்றி எடுப்பது தான்.
எங்க வீட்டிலேயும் தயிர் விலைக்கு வாங்கியதில்லை. இப்போதெல்லாம் உறை ஊற்ற மோர் இல்லை எனில் கடையில் வாங்குவேன். அநேகமாக அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை!
Deleteநெய்யில்தாதான் பூரி பொரிப்பா... அட... ஆனால் அது நல்லாருக்குமா? உடம்புக்குதான் நல்லதா?
ReplyDeleteஅப்போல்லாம் நெய் சுத்தமாக இருக்குமே! மேலும் இப்போச் சொல்றாப்போல் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம்னு எல்லாம் அப்போ ஜாஸ்தி யாரும் சொன்னதில்லை. நெய் உடம்புக்கு நல்லதுனு நிறையவே சேர்ப்பாங்க. ஆயுர்வேதத்தில் நெய் நாள்பட்டால் அது மருந்து! பசு நெய்யில் மூலிகைகள், பொடிகள் கலந்து மூன்று வேளையும் சாப்பிடச் சொல்வாங்க. நான் சாப்பிட்டிருக்கேன்.
Deleteதஞ்சையில் தயிர்க்காரி நானும் பார்த்திருக்கேன்.வாங்கியதில்லை.
ReplyDeleteநாங்களும் வாங்கினதில்லை. அந்தத் தயிர்க்காரியே நெய்க்காரியாக அவதாரம் எடுத்து வருகையில் வாங்கி இருக்கோம். :)
Deleteநான் தயிர்க்காரியை நினைத்தேன். நீங்கள் அந்த நாட்களுக்கே போய்விட்டீர்கள்.பிரிமணை,இந்தப் பேரே ஞாபகம் வந்ததும் ஸந்தோஷமாயிடுத்து. வீட்டில் மாடு இருக்கிறவர்கள் தூணில் கயிறுகட்டி மத்தை இணைத்துத் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். எவ்வெவ்வளவோ ஞாபகங்கள் அலை பாய்கிறது. விலைப் பாலிலும் தில்லியில் வெண்ணெய் எடுப்பேன் நான். மயூர் விஹார் பகுதியில் பால்காரன் பால் கொண்டு கொடுப்பான். மொத்தமாகக் காய்ச்சி ஆறவைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து விட்டால் திக்காக ஏடு படிந்து விடும். 2,3 நாட்கள் சேர்த்து ஏட்டை மிக்ஸியில் வைப்பரில் போட்டுச் சுற்றினால் அருமையாக வெண்ணெய் திரண்டு வரும். இப்போது எல்லாம் மறந்துபோச்சு. இப்போது பாலே பல தினுஸு.
ReplyDeleteகறிவேப்பிலைக்காரி ஒரு சாக்கு நிறைய கறிவேப்பிலை கொண்டு வருவாள். கறிப்பில்லே,கறிப்பில்லே என்று குரல் கொடுப்பாள். அதை ஒரு நல்ல சகுனமாகச் சொல்லுவார்கள். அரிசி போட்டுதான் வாங்கவேண்டும். நாங்களெல்லாம் திருவருணையில் சின்ன கிளாஸ் படிக்கும் போது L.G பெருங்காயப் பெட்டியில் அரிசி எடுத்துக் கொண்டு போய் ஸ்கூலில் களாப்பழம்,இலந்தம் பழமெல்லாம் வாங்குவோம். பண்ட மாற்றுதல்கள். ஒரு சின்ன உழக்கு அரிசி என்றால் மூன்று உழக்கு பழம் வரும். என் தயிர்காரி உங்களை உசுப்பி விட்டால் என்னையும் இன்னும் பழைய ஞாபகங்களைக் கிளறி விடுகிறது. ஓ மருதாணி வேறு கொண்டு வருவாளா? பரவாயில்லையே!!!!!!!! அன்புடன்
நீங்க சொல்கிறாப்போல் வாங்கிய பாலில் நானும் வெண்ணெய் எடுத்திருக்கேன். குஜராத், ராஜஸ்தானில் தான் அப்படிக் கிடைத்தது. மற்ற இடங்களிலும் வெண்ணெய் எடுத்தாலும் இங்கே கிடைத்தாற்போல் கிடைத்ததில்லை. வீட்டில் வெண்ணெயும், நெய்யும் மிதிபடும்! நானும் பாலைக் காய்ச்சி ஆற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஏட்டை எடுத்துவிட்டுக்கொழுப்பில்லாத பாலில் தான் காஃபி, டீ மற்றத் தேவைகளுக்குப் பாலைப் பயன்படுத்தி இருக்கேன். கையால் தான் கடைவது. ஏனெனில் கைகளுக்குப் பயிற்சி கிடைக்கும் இல்லையா? இப்போவும் வாரம் ஒரு முறை கடைகிறேன்.
Deleteஎன்னோடு ஆறாம் வகுப்பில் ( முனிசிபல் ஸ்கூலில் )படித்து கொண்டிருந்த பெண்கள் இரண்டு பேர் -LG பெருங்காய டப்பா விலும் -geometry box லும் -வெறும் புழுங்கல் அரிசி /நெருப்பில் சுட்ட
ReplyDeleteபுளியங்கொட்டை இவைகளை தின்றுகொண்டே இருப்பார்கள் -அவ்வப்பொழுது எனக்கும் கிடைக்கும் !
மாலி
ஹாஹா, வாங்க மாலி சார், என்னோட எல்லாம் இப்படி நண்பர்கள், நண்பிகள் கிடைச்சதில்லை. முழுக்க முழுக்க ஆறாம் வகுப்பிலிருந்து கான்வென்ட் என்பதால் கட்டுப்பாடு அதிகம் என்பதால் இருக்கும். வாசலில் கடை போட்டிருக்கும் ஆயாவைக் கூடக் கண்டிப்பாக எடுக்கச் சொல்லிடுவாங்க. கொஞ்சம் தள்ளிப் பக்கத்துப் பெட்டிக்கடை வாசலில் அந்த ஆயா கடை போடுவாங்க! விடுவோமா?
Deleteபுளியங்கொட்டையைச் சாப்பிட்டு நானும் பார்த்திருக்கேன். என் கடைசிச் சித்தி சாப்பிடுவார்.
DeleteI like two points : 1) The north India curd is mixed with little sugar so it is tasty. 2) kodukka vaththi sutriyadhu.
ReplyDeleteசர்க்கரையே சேர்க்காத கெட்டித் தயிரும் கிடைக்கும்.
DeleteI like two points : 1) north Indian curd is tasty because it is sweetened with little sugar. 2) Josh vaththi sutriyadhu.
ReplyDeleteகொசு வத்தி சுத்தினால் தான் கூட்டமே வருது! இல்லைனா யாரும் எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை! :) ஆனாலும் நாங்க விட மாட்டோமே!
DeleteI like two points : 1) The north India curd is mixed with little sugar so it is tasty. 2) kodukka vaththi sutriyadhu.
ReplyDeleteமுகநூலிலும் உங்களோட கருத்து கிடைச்சது.
Deleteஅந்த நாளுக்கே கொண்டுபோயிடுத்து. திருனெல்வேலில (எங்க நத்தம் கிராமத்துல), 3 சரட்டை தயிர் 10 பைசா. தயிர், பால், நெய்யுக்குத் தீட்டு இல்லை என்று பெரியவர்கள் சொன்னதைக் கேட்டதும் ஞாபகத்தில் இருக்கிறது. இது 1975-77கள்ல. ஒரு வாழக்காயும் அப்போது 3 பைசா. எங்க தாமிரபரணி ஆற்றில், வெள்ளம் வரும்போது, இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகு விடுவார்கள். படகுக்கு நாலணா காசு அல்லது, மொத்தமாகக் கணக்குப் பண்ணி, வீட்டுக்கு வந்து நெல் வாங்கிக்கொள்வார்கள். இதெல்லாம் இந்தக் காலப் பசங்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. எங்கள் வீட்டில் 1977லயும், மத்தை வைத்துத் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். இப்போல்லாம் யாராவது மத்து (கீரையைக் கடைவதற்குத் தவிர) உபயோகிக்கிறார்களா?
ReplyDeleteநான் இப்போவும் தயிர் கடைகிறேன்னு சொல்லி இருக்கேன் பாருங்க நெல்லைத் தமிழரே! மத்தால் தான் கடைவேன். அது தான் கைகளுக்குச் சிறந்த பயிற்சியும் கூட. கீரை மத்தும் இருக்கு. ஒரு தரம் படம் எடுத்துப் போடுகிறேன். ஏற்கெனவே கௌதமனுக்கு ஒரு முறை மத்தைப் படம் எடுத்துப் போடுவதாகச் சொல்லி இருந்தேன். போட முடியலை. இம்முறை தயிர் கடையும் முன்னர் கட்டாயமாய்ப் படம் எடுத்துடலாம். :)
Delete//கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமாத் தான். //
ReplyDeleteஆனாலும் மதுரை என்றால் இப்படித்தான். எல்லாவற்றையும் பெண்கள் பக்கமே சேர்க்கிறது. பெண்கள் பக்கமே சேர்த்துப் பேசுவது. 'கல்யாணம் ஆகி கணவர் வீட்டுக்கு வந்தப்புறம் தான்' என்று சொல்லக் கூடாதோ?..
ஹாஹா, பார்க்கப் போனால் அது மாமனார் வீடு! மாமியார் வேறே ஊராச்சே! இருந்தாலும் குடும்பத் தலைவிக்குத் தானே முன்னுரிமை கொடுக்கணும்! :)
Deleteஅப்ப, எங்க வீட்டுக்காரர் என்று ஏன் சொல்கிறார்கள்?..
Delete//புளியங்கொட்டையைச் சாப்பிட்டு நானும் பார்த்திருக்கேன்.//
ReplyDeleteபுளியங்கொட்டையை தரையில் தேய்த்து சூடு வைப்பது அந்தக்கால சிறுவர்கள் விளையாட்டுகளில் ஒன்று.. இப்போலாம் கணவன் காப்பிக்கொட்டை என்றால் மனைவி புளியங்கொட்டை தான்! அந்தளவுக்கு இரண்டுக்கும் ஒரு கூட்டு காம்பினேஷன் உண்டு.
ம்ம்ம்ம், இந்தச் சூடு நான் நிறைய வாங்கி இருக்கேன். எழுத வேண்டாம்னு நினைச்சேன். :) மற்றபடி காப்பிக்கொட்டை, புளியங்கொட்டை காம்பினேஷன் புரியலை! ம.ம. தானே! :)
Deleteதயிர் கடைந்து நீர் சேர்த்து மோராக்குவதை வட ஆற்காடு பக்கத்தினர் தயிர் குழப்பியாச்சா என்று சொல்கின்றனர்.
ReplyDeleteஅப்படியா?
Deleteபதிவினிலும், பின்னூட்டங்களிலும் அந்தக் கால நினைவுகள். மறக்க முடியாத பால்,தயிர்,நெய் வாசனைகள்.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteகாலி ஹார்லீக்ஸ் பாட்டிலில் ஏட்டுடன் தண்ணீர் கலந்து நன்றாகக் குலுக்கிக் கூட வெண்ணெய் எடுக்கலாம். மத்தால் கடைந்தால் தயிர்க் கடைவோமே கோபாலன் தனைமறவோமே என்றும் பாடலாம். அன்புடன்
ReplyDeleteநீங்கவேறே! ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டுக் குலுக்கினால் வெண்ணெய் வருதோ இல்லையோ, பாட்டில் வழுக்கி விழுந்திருக்கிறது! :) ஒரு முறை அப்படி ஆனப்புறமா விஷப்பரிட்சையே வைச்சுக்கறதில்லை. மத்துத் தான். பாடினால் கோபாலன் ஓடிடுவான்னு பாடறதில்லை. :))))
Deleteஎங்கள் ஊரில் இன்னமும் சில சமயம் தயிர்க்காரிகள் தயிர் விற்கின்றனர். கூடை, பானை சட்டி கிடையாது, எவர்சில்வர் தூக்கில் கொண்டுவந்து விற்கிறார்கள். இவர்கள் விற்கும் நெய் வாசனையாக இருந்தாலும் கலப்படமாக இருக்கிறது. கீரைக்காரிகள் கிடையாது இருசக்கர வாகனத்தில் கீரைக்காரர்கள் நிறைய பேர் வருகின்றனர். சின்ன வயதில் தாத்தா வீட்டில் வசித்தபோது நீங்கள் சொல்வது போல அரிசி, நெல் போன்றவை கொடுத்து பழங்கள், தயிர், காய்கறிகள் வாங்கிய நினைவு இருக்கிறது. சுவையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஆமாம், என்ன இருந்தாலும் மண்பானையில் வைச்சுக் கொண்டு வராப்போல் இருக்காது. எனக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்ச குடிநீரை விட மண்பானைக் குடிநீரே பிடிக்கும். அதான் குடிக்கிறேன். சைகிளில் கீரைக்காரங்க நிறையத் தான் வராங்க. ஆனால் இங்கே நாங்க நாலாம் மாடி என்பதால் தெரியறதில்லை! :)
Deleteசிவகாசியில் பார்த்து இருக்கிறேன் தயிர் கொண்டு வருபவரை. வெள்ளை சேலை கட்டிக் கொண்டு மண்பானையில் மண் தட்டு மூடி மேல் சிறட்டை(கொட்டாகச்சி) வழு வழு என்று கறுப்பு கலரில் இருக்கும் அதில் அளந்து ஊற்றுவார்கள். நாங்கள் வாங்கியது இல்லை பக்கத்து வீடுகளில் வாங்குவார்கள் பார்த்து இருக்கிறேன். கீரை 1969 வரை அரிசிக்கு கொடுத்தார்கள் அப்புறம் எல்லாம் காசுதான்.
ReplyDeleteமதுரையிலே கடைசியாக நீண்ட நாட்கள் நான் இருந்தது 1976 ஆம் ஆண்டிலே. அப்போக் கூட அரிசி போட்டுக் கீரை மற்றும் தக்காளி, பச்சை மிளகாய், கொம. கருகப்பிலை வாங்கி இருக்கேன். அதன் பின்னர் மதுரை வாசம் என்பது ஓரிரு நாட்கள் தான் என்பதால் தெரிஞ்சுக்கலை. இப்போ எல்லாம் மதுரை உள்நகரில் வாசம் செய்யும் மக்களே குறைந்துவிட்டனரே! எல்லோரும் வெளியே வந்தாச்சு! :(
Deleteநான் சின்ன வயதில் தயிர்காரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் நங்கள் வாங்குவதில்லை. வீட்டில் உறை ஊற்றி தான் வைப்போம். அருமையான பதிவு.
ReplyDeleteவாங்க சாரதா, முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஇந்தப் பதிவை எழுதும்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். ஏதோ கிறுக்கியாவது என் மன அழுத்தத்தைக் குறைக்கணும்ங்கற நிலைமை! அப்போ காலம்பரவே எழுதிட்டுப் பாதியிலே நிறுத்திட்டு இதெல்லாம் யார் படிக்கப் போறாங்கனு நினைச்சுட்டு அப்படியே விட்டுட்டேன். மறுபடி மாலை என்னவோ தோன்ற அதுக்குள்ளாகக் கொஞ்சம் மனநிலையும் சரியாகி இருந்தது. மாலை முழுவதும் எழுதி முடிச்சேன். அப்படியும் பப்ளிஷ் பண்ணும்போதும் கூட இதுக்கு யார் வருவாங்கனே நினைச்சேன். ஆனால் இதுக்குத் தான் நிறையப் பார்வையாளர்கள்னு கூகிளார் சொல்றார். கருத்துச் சொல்லவும் ஓரளவுக்கு வந்திருக்கின்றனர். நாம் ஒண்ணு நினைச்சால் கூகிளார் அல்லது ப்ளாகர் வேறே நினைக்கிறார். :) இன்னிக்குக் கவுஜயை யாரும் இன்னும் படிக்கலை போல! :)
Deleteநானும் தயிர்க்காரிகளை பார்த்ததில்லை... ஆனால் இப்போதும் தயிர் ஏட்டை கடைந்து தான் வெண்ணெய் எடுக்கிறேன்.. தில்லியில் திக்காக ஏடு வரும்.. கடலைமாவும் கோதுமை மாவுக்கு இலவசமா கிடைக்கும்....அவ்வப்போது ஒரு கரண்டி போட்டு மைசூர்பாகு கிண்ட வேண்டியது தான்...:))
ReplyDeleteபெட் பாட்டிலில் போட்டு குலுக்கலாம் மாமி. பத்து நிமிடத்தில் திரண்டு வந்துவிடும்..
எங்கள் வீட்டில் மாடு வைத்துக் கொண்டிருந்ததால் தினசரி தயிராய் கடைந்து வெண்ணை எடுப்போம். ஒரு தூணில் பெரிய மத்தை கயிற்றால் சுற்றி அதன் எதிரே ஒரு முக்காலியில் உட்கார்ந்து கொண்டு தயிர் கடைய வேண்டும். வெயில் வருவதற்குள் கடைந்து விட வேண்டும். இல்லாவிட்டால் வெண்ணை பந்து போல உருட்ட வராது. திரண்டு வந்த வெண்ணையை ஒரு பீங்கான் கிண்ணத்தில் போட்டு வைப்பது வழக்கம். ஒரு சிறு வெண்ணை உருண்டையை மோரிலேயே போட்டு வைக்க வேண்டும் என்பார்கள் அம்மாவும் பாட்டியும். தயிர் கடைந்த சப்தம் கேட்டு கிருஷ்ணர் வந்து மோர் பாத்திரத்தில் வெண்ணையை தேடுவாராம்!! தயிர் கடையும் பொழுது நாம் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்கள் எழுப்பும் சப்தம் இனிமை என்றால், அந்த மோரின் மணமும் சுவையும் ஆஹா! அதெற்கெல்லாம் எங்கு போவது?
ReplyDeleteசென்னைக்கு வந்த புதிதில் ஒரு பால்காரரிடம் பால் வாங்கிக் கொண்டிருந்தேன்,அப்போது blender இல் கடைவேன். கீரை மசிக்கவும் அதுவே.
ReplyDeleteபெங்களூருக்கு வந்த புதிதில் காலையில் 'சொப்பு, சொப்பு' என்று விற்றுக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். காலங்கார்த்தால யாரு சொப்பு விக்கிறதுன்னு பார்த்தா, கீரை! அரவே சொப்பு (அரைக்கீரை, தண்ட்டு சொப்பு (தண்டு கீரை) கறிபேவு சொப்பு, கொத்தம்பரி சொப்பு என்று பல்வேறு சொப்புகள்!
ReplyDeleteநானும் ஒருகாலத்தில் வீட்டிலேயே வெண்ணெய் எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் விட்டாச்சு.
எங்கள் வீட்டிலும் மோர் குழப்புவோம். என் மாமியார் மத்து என்பதை 'சிலுப்பி' என்பார். தயிரை சிலுப்பு என்பார்கள். 'கடேகோல தாரென்ன சின்ன' (மத்தை கொடுத்துவிடு தங்கமே என்று கோபியர்கள் பாடுவதாக ஒரு கன்னடப் பாட்டு!
தயிர்க்காரி வருவார். கீரைக்காரி நான் பாண்டிச்சேரியில் இருந்த வரை வாங்கியிருக்கிறேன். தயிர்க்காரி பானையில்...தலையில் வைத்துக் கொண்டு.
ReplyDeleteவீட்டிலேயெ அப்போது சுவற்றில் சங்கிலி இருக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல் அதில் மத்திட்டுக்/சிலுப்பியை இட்டுக் கடைந்து கொடுத்து வெண்ணை எடுத்துவிட்டுத்தான் நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அந்த மோர்தானே எங்களுக்குச் சாப்பாட்டிற்கு. கூட்டுக் குடும்பம் பெரிய குடும்பம் அப்போது. அது போல சுவற்றில் இருக்கும் ஓட்டையில் உலக்கை போன்று வைத்துத்தான் அப்போது சேவை பிழிவதும். நான் பாண்டிச் சேரியில் இருந்தவரை வீட்டில்தான் வெண்ணை எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் எடுப்பதில்லை இங்கு சென்னையில்தான்.
நான் சிறியவளாக இலங்கையில் இருந்த போது பானையில் தயிர் ஓலை சுற்றி வரும் ரயிலில். மட்டக்கிளப்புத் தயிர் ரொம்ப பிரசித்தி அப்போது.
கீதா