சுப்புத் தாத்தா அவர்களுடைய பதிவில் சு.தா. எழுதின ஹிந்திக் கவிதையை மொழி பெயர்த்ததில் ஒரு மாதிரி கவிதை மாதிரி, மாதிரித் தான் வந்திருக்கு. அதை இங்கே பகிர்கிறேன்.
मैं ने इक ख़्वाब देखा.
रास्ते में जा रहा
कलियाँ तो बहुत मिली
कहानियाँ सुनाई
सुनते सुनते तो देखा
कलियाँ काली हो गयी.
काली रात छा गयी.
सपने के भीतर
वो होटों की मुस्कराहट
वो चहरे की इनायत
वो सफर कोई ज़न्नत की दरवाज़
वो पुकार ज्यों कोयल गाये
ख़्वाब अब नहीं.
जागूँ है मैं.
जी तरसता है
शायद कहता है.
ख़्वाब की वो चेहरा
कभी तो आएगा ही.
इक और दिन इधर
इंतज़ार में .
என் கனவு!
சாலைப்பயணம்
மொட்டுக்கள் நடனம்
கதைகளில் கவனம்
பார்க்கையில் நிழலாக
மொட்டுக்கள் கருமையில் கவிழ
பூமியைக் கவ்விய இருட்டின் கருமை
ஆழ்ந்த கனவில் ஒளிர்ந்த புன்னகை
மங்கை முகத்தில் மலர்ந்ததை
பார்த்தது சொர்க்கத்தின் திறவுகோல்
ஒற்றைக் குயிலின் அழைப்பு
கனவு கலைந்த விழிப்பு
ஏக்கத்தில் தவிக்கும் மனம்
கனவில் கண்ட முகம்
மீண்டும் வரும் நாளின்
எதிர்பார்ப்பில் காத்திருக்கும் என் பயணம்//
मैं ने इक ख़्वाब देखा.
रास्ते में जा रहा
कलियाँ तो बहुत मिली
कहानियाँ सुनाई
सुनते सुनते तो देखा
कलियाँ काली हो गयी.
काली रात छा गयी.
सपने के भीतर
वो होटों की मुस्कराहट
वो चहरे की इनायत
वो सफर कोई ज़न्नत की दरवाज़
वो पुकार ज्यों कोयल गाये
ख़्वाब अब नहीं.
जागूँ है मैं.
जी तरसता है
शायद कहता है.
ख़्वाब की वो चेहरा
कभी तो आएगा ही.
इक और दिन इधर
इंतज़ार में .
என் கனவு!
சாலைப்பயணம்
மொட்டுக்கள் நடனம்
கதைகளில் கவனம்
பார்க்கையில் நிழலாக
மொட்டுக்கள் கருமையில் கவிழ
பூமியைக் கவ்விய இருட்டின் கருமை
ஆழ்ந்த கனவில் ஒளிர்ந்த புன்னகை
மங்கை முகத்தில் மலர்ந்ததை
பார்த்தது சொர்க்கத்தின் திறவுகோல்
ஒற்றைக் குயிலின் அழைப்பு
கனவு கலைந்த விழிப்பு
ஏக்கத்தில் தவிக்கும் மனம்
கனவில் கண்ட முகம்
மீண்டும் வரும் நாளின்
எதிர்பார்ப்பில் காத்திருக்கும் என் பயணம்//
வா...்வாவ்.....வா....
ReplyDeleteஎங்கே வரது? சென்னைக்கா? வரணும் தான், வேலை இருக்கு நிறைய! :)
Deleteக வு ஜ ?
ReplyDeleteகவிதை உடனே ஜனனம் !!
சு தா.
ஹாஹா இதுவும் நல்லா இருக்கு சு.தா. கவிதைன்னால் மரபு முறையில் எழுதுவது. கவுஜன்னா என்னை மாதிரிக் கிறுக்கறவங்க எழுதறது. இதான் நான் புரிஞ்சுண்டது. இணைய மொழியான மொக்கை, ரங்கமணி, தங்கமணி போல கவுஜயும் ஒண்ணு!
Deleteஹாஹா இதுவும் நல்லா இருக்கு சு.தா. கவிதைன்னால் மரபு முறையில் எழுதுவது. கவுஜன்னா என்னை மாதிரிக் கிறுக்கறவங்க எழுதறது. இதான் நான் புரிஞ்சுண்டது. இணைய மொழியான மொக்கை, ரங்கமணி, தங்கமணி போல கவுஜயும் ஒண்ணு!
Delete'வு'க்கு 'உ' வா?.. இருந்தாலும் ஆராய்ச்சி பிரமாதம்.
Deleteவாழ்த்துகள் சகோ நானும் எழுத்துக்கூட்டி படித்துப்பார்க்கிறேன் நன்றி
ReplyDeleteஹிஹிஹி, படிச்சுட்டுக் கருத்துச் சொல்லணும், ஆமா!
Deleteதமிழில் படிக்கும்பொழுது
ReplyDeleteகடைசி அஞ்சு வரிகள் உருக்கிடுச்சு.
(வடமொழி எனக்கு எழுத, படிக்க, பேசத் தெரியாது)
நீங்கள் சென்னை வாசியா?
Deleteஉங்கள் செல் நம்பரை சொல்லுங்கள்.
சற்று நேரம் பேசுவோம்.
சுப்பு தாத்தா.
www.meenasury@gmail.com
கௌதமன் சார், நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா சொல்றீங்க? நன்னி ஹை!
Deleteசூரி சார், கௌதமன் பெண்களூர் வாசி! ஆனால் அவ்வப்போது குரோம்பேட்டைக்கு வருவார்! :)
Deleteமொழி பெயர்ப்பு என்பதே முழி பெயர்க்கும் செயல் தமிழில் எழுதியதை ரசிக்க முடிகிறது ஹிந்தி எழுத்துக் கூட்டிப்படிக்க பொறுமை இல்லை. வாழ்த்துகள்
ReplyDeleteம்ம்ம்ம்ம், மொழி பெயர்ப்புச் செய்யும் விஷயம் அது கவிதையோ, கட்டுரையோ, நாவலோ நம் மனசுக்குப் பிடிச்சிருக்கணும் என்பது என்னோட சொந்தக் கருத்து! :)
Delete'கவுஜ' என்ன மொழி வார்த்தை?.. இப்படித் தாறுமாறா புழகத்தில் இருக்கே?..
ReplyDeleteஅதானே ! எனக்கும் புரியல்ல.
Deleteஇதெல்லாம், கனியிருப்பக் காய் போல.
மொக்கை, கவுஜ, டிஸ்கி, இதெல்லாம் தமிழ் வார்த்தைகளா ?
எனக்குப் புரியவில்லை.
ஆனால் ஒன்று இவற்றை சொல்லித்தான் தீரவேண்டும் என்ற நினைப்பும் இல்லை.
மேடம் ! சுதா என்பது மோகன்ஜி சுப்பு தாத்தாவுக்கு அளித்த கொடுத்த அன்புப்பெயர்.எனக்கு ஆப்பிள் மாதிரி . எப்போதோ அவர் அப்பாதுரை சார் வலையிலே சொன்னார்.
சுப்பு தாத்தா என்பது அமேரிக்கா வாழ கவிதாயினி கவிநயா இட்ட பெயர்.2008 ல். சுப்பு ரத்தினம் எனக்கு என் பாட்டனார் தந்த பெயர்.
சுதா.
www.subbuthatha.blogspot.com
ஜீவி சார், கவுஜக்குப் பொருளெல்லாம் எனக்கும் தெரியாது. எல்லோரும் இணையத்தில் பயன்படுத்தும் சொல்!
Deleteசு.தா. மோகன் ஜி தான் முத முதல்லே உங்களை சு.தா.னு சொன்னார்னு எனக்குத் தெரியும். ஆனால் அவரோட வானவில் மனிதனிலேனு நினைவு. அம்புடுதேன். கவிநயா தான் முதல்லே உங்களை சுப்புத் தாத்தானு கூப்பிட ஆரம்பிச்சதையும் அறிவேன்.
Delete'கவுஜ'-- யாரானும் திணிச்சிருப்பாங்களோன்னு பார்த்தேன்.
Deleteஇல்லை, அது இணைய மொழி. அதே போல் மொழி பெயர்ப்பை இணைய மொழியில் முழிபெயர்ப்புனு சொல்றது, தம்பியைத் தம்ப்ரினு சொல்றது எல்லாமும் உண்டு! :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteநன்றி.
Deleteநன்றாக இருக்கிறது கவிதை
ReplyDeleteசம்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் உங்கள் கவுஜ கலக்கலா இருக்கு!
ReplyDeleteஹிஹிஹி, அது ஹிந்தி! சம்ஸ்கிருதம் இல்லை! :)
DeleteGood attempt!
ReplyDeleteமுன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாலே ஒரு காலத்திலே தாகூரின் (ஹிந்தி மொழிபெயர்ப்பு) கீதாஞ்சலியை "முழி" பெயர்த்துட்டு இருந்தேன். ஒரு சில மனக்கசப்பான அனுபவங்களால் பாதியிலே நிறுத்தினேன். :)
Deleteஉங்கள் கவிதையை சுப்புத் தாத்தா தளத்திலும் வாசித்தோம் அருமையாக இருக்கிறது...
ReplyDelete