எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 04, 2016

நம் உரிமை! நம் கடமை! அபாரம் போங்க!

அமெரிக்காவில் சாலைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. பொதுவாக வெளிநாடுகளிலேயே சாலைப் பராமரிப்பு நன்றாகவே இருக்கின்றன. நம் நாட்டில் சாலைகளின் தரங்கள் சொல்லிக்கிறாப்போல் இல்லை தான்! சாலையைத் தரமாக மேம்படுத்த நிறையச் செலவு செய்யவேண்டி இருக்கிறது. முக்கியமாய் நம் நாட்டில் சாலைகளை மேம்படுத்துகிறேன் பேர்வழினு அதை வெட்டிக் கொத்திப் பின்னர் கனமாக ஜல்லியைக் கொட்டிச் சாலை போடாமல் ஏற்கெனவே போட்ட சாலை மேலேயே போட்டுக் கொண்டு போகின்றனர். இதனால் அந்தக் காலத்து வீடுகள், கோயில்கள் பள்ளத்தில் போய் விடுகின்றன. சாலையின் தரமும் வெகு விரைவில் பல்லை இளிக்கிறது.

அப்படியே நன்றாகச் சாலையைப் போட்டாலும் பராமரிப்புத் தேவை! அதற்காகச் சுங்கச் சாவடிகளை  ஆங்காங்கே அமைத்து வரி வசூலிக்கின்றனர். அதைக் கொடுக்கவும் நாம் மூக்கால் அழுகிறோம். தரமான சாலைகள் வேண்டும். அவை நன்றாகப் பராமரிக்கவும் படவேண்டும். ஆனால் வரி கட்ட மாட்டோம். நாம் கையை விட்டு எதுவும் செலவு செய்ய மாட்டோம். எல்லாம் அரசே செலவழிக்கணும். அரசு செலவுக்குப் பணத்துக்கு எங்கே போகும் என்றெல்லாம் சிந்திப்போமா, மாட்டவே மாட்டோம். அது எதுக்கு? சுங்கச்சாவடிக் கட்டணத்தை அரசு ரத்து செய்தே ஆகவேண்டும், ஆனால் அதே சமயம் சாலைகள் வெளிநாட்டுத் தரத்துக்குப் போடவேண்டும்.

அதே அமெரிக்காவிலோ மற்ற வெளிநாடுகளிலோ இம்மாதிரி சாலைகள் போடும் பணத்துக்கு எவ்வளவு வரி வசூலிக்கிறாங்க என்பதை அங்கே வசிக்கிறவங்க கிட்டே கேட்டால் தான் தெரியும். ஹூஸ்டனில் எங்க பையர் இருக்கும் பகுதியைச் சேர்ந்த நகராட்சி பராமரிப்புக்கு என வரி வருஷா வருஷம் கிட்டத்தட்ட ஆறாயிரம் டாலர்களுக்குக் குறையாமல் ஒவ்வொரு வீட்டுக்காரரிடமிருந்தும் வாங்குகிறது! நாமாக இருந்தால் முகம் சுளிக்காமல் கொடுப்போமா? இதைக் கட்டவில்லை எனில் அபராதம் போடுவதோடு தண்ணீர், மின்சாரம் போன்றவை நிறுத்தப்படும். ஒத்துப்போமா?

ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பரிசுப் பொருட்கள், பிட்சா ஆர்டர், பார்ட்டி, பாட்டு, நடனம் என்று கொண்டாடுவோம்! ஆனால் அதுக்காக சேவை வரி போட்டால் எதிர்ப்போம். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் செலவழிக்கும் மொத்தப்பணத்தில்  ஒரு சதவீதம் சேவை வரி என்றாலும் கொடுக்க மாட்டோம்!  பதினைந்தாயிரம் போட்டு அன்ட்ராயிட் ஃபோன் வாங்கி அதிலும் சில, பல ஆயிரங்கள் செலவு செய்து வேண்டிய ஆப்ஸ் போட்டு வைத்துக்கொள்வோம். பல திரைப் படங்களைத் தரவிறக்கி வெளியே செல்கையில் பார்த்துக் கொண்டே போவோம். அதுக்கெல்லாம் எவ்வளவு பணம் ஆனாலும் கவலையே பட மாட்டோம். ஆனால் பெட்ரோலோ, டீசலோ ஐம்பது பைசா ஏறினால் கூட அலறுவோம். விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவோம். அரசு கொடுமைப்படுத்துகிறது என்போம். அரசுக்குப் பணம் எங்கிருந்து வரும்? யோசிப்போமா? மாட்டவே மாட்டோம்!

ரயில் பயணம் சுகமாக இருக்கவேண்டும் நமக்கு. கொடுக்கப்படும் உணவுப் பொருட்களும் தரமாக இருக்க வேண்டும். கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக நாம் எந்த அளவுக்கு ஒத்துழைப்போம் என்றால் நிச்சயமாய் நம்மிடமிருந்து எந்த ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கக் கூடாது! ரயிலில் வாங்கிச் சாப்பிடும் உணவுப் பொருட்களின் குப்பையை நம் காலடியிலேயே போடுவோம். யாரும் அங்கே கால் வைத்து நடக்கக் கூட முடியாத வண்ணம் செய்வோம். கழிவறையைப் பயன்படுத்தினால் சுத்தமாக வைத்துவிட்டு வர மாட்டோம். கை கழுவும் இடத்தில் கீழே குப்பையைப் போட்டு வைப்போம். நாம் காஃபி, தேநீர் வாங்கிக் குடித்த கோப்பைகளை அப்படியே கீழே போட்டிருப்போம். வாழைப்பழங்களைத் தின்றுவிட்டுத் தோலைக் காலடியில் போட்டிருப்போம். நாமே வழுக்கி விழுந்தாலும் சரி! அதைத் தனியாக எடுத்துப் போட மாட்டோம்.

நாம் கொஞ்சம் கூட ஒத்துழைக்க மாட்டோம். ஆனால் ரயிலைச் சுத்தமாகப் பராமரிப்பதும் ரயில் நிலையத்தைச் சுத்தமாகப் பராமரிப்பதும் ரயில்வே துறையின் பொறுப்பு. சுத்தமாக இல்லை எனில் குற்றம் சொல்வோம். ஜப்பானைப் பாருங்கள்! அமெரிக்காவைப் பாருங்கள்! லண்டனைப் பாருங்கள்! என்றெல்லாம் கூப்பிட்டுக் காட்டுவோமே ஒழிய அது சுத்தமாவதற்கு நம் தரப்பிலிருந்து ஒரு சின்னப் பேப்பர் துண்டை அகற்றிக் கூட ஒத்துழைக்க மாட்டோம். இது பொதுச் சொத்து என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் நாசம் பண்ணலாம்! அது நம் உரிமை! ஆனால் குப்பைகளை அகற்றுவது நம் கடமையே அல்ல!

விவசாயிகளின் கடனா அப்படியே தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் கொள்முதல் விலையை மட்டும் அரசு கூட்டிக் கொடுக்க வேண்டும். பயிர்க்கடனைக் கட்டவே மாட்டோம். மின்சாரம் மட்டும் இலவசமாகக் கொடுக்க வேண்டும். அது எப்படி எங்கிருந்து வரும் என்ற சிந்தனை எங்களுக்குக் கிடையாது! கொடுக்க வேண்டியது அரசின் கடமை! விவசாயிகள் வயிற்றில் அடிக்கக் கூடாது! எப்படியோ வெளிமாநிலங்களில் கடன் வாங்கியாவது மின்சாரம் கொடுத்துவிட வேண்டும். ஆனால் அந்தக் கட்டணத்தைக் கட்டும் பொறுப்பு எங்களுடையதல்ல!

கல்விக்கடனா! தள்ளுபடி செய்யுங்கள்! நாங்கள் இங்கே கடன் வாங்கிப் படிச்சுட்டு வெளிநாட்டுக்குப் போவோம். இந்தியாவுக்காக ஏதும் செய்ய மாட்டோம். அது எங்கள் உரிமை! கல்வியைக் கொடுக்க வேண்டியது தான் உங்கள் கடமையே தவிர எங்களிடமிருந்து பதிலுக்குத் திறமையையும் ஆற்றலையும் எதிர்பார்ப்பது உங்கள் உரிமை அல்ல. அதுக்காக நீங்கள் ஆசைப்படக் கூடாது.

ஆனால் நாங்கள் வெளிநாடுகளுக்குப் போய் இந்தியாவா! சுத்த மோசம்! ஒரே அழுக்கு, குப்பை! எதுக்கெடுத்தாலும் இலவசம்! மக்களை ரொம்பக் கெடுக்கிறாங்கனு சொல்வோம்! அங்கே யார் திரும்பிப் போய் இருப்பாங்க என்றும் சொல்வோம். அது எங்கள் உரிமை!

இது  சும்ம்ம்ம்ம்மா கொஞ்சம் போல் உதாரணம் தான்! 

42 comments:

  1. வொய் பொலம்பிங் டுடே? :-))

    ReplyDelete
    Replies
    1. பொலம்பல்லாம் இல்லை தம்பி! ஒரு சிலரின் பதிவுகளைப் படித்ததில் விளைந்த வருத்தம்! :(

      Delete
  2. ரொம்பக் கோவமா இருக்கீங்க போல!

    ReplyDelete
    Replies
    1. கோபமெல்லாம் இல்லை!

      Delete
  3. மாற்றங்களை நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும், அதைத் தொடர்ந்தும் கடைப் பிடிக்க வேண்டும் என்பதையும் உணரவே மாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. நாம் சொன்னாலும் கேட்பவர்கள் இருக்கணும். ரயிலில் போகையில் சகபயணிகளிடம் குப்பைகளை இங்கே போடாதீங்கனு சொன்னால் அவங்க பார்க்கும் பார்வை இருக்கே! ஒரு சிலரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன்! :(

      Delete
  4. எல்லாத் தவறுகளுக்கும் பழியை அடுத்தவர்கள் மேல் போட்டே காலம் காலமாகப் பழகி விட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இதற்கு அரசும் ஒரு காரணம், எல்லாவற்றுக்கும் சலுகைகள் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக்கியது அரசுகள் தான்!

      Delete
  5. Yaar ange intha pathivarukku oru saalvaiyum thanga padhakkamum kondu vaa
    Subbu thatha

    ReplyDelete
    Replies
    1. சு.தா. மிக்க நன்றி. மாற்றுக் கருத்துடையவர்களும் இருக்கிறாங்க என்பதை ஜேகே அண்ணாவின் கருத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கே நான் வற்புறுத்தி இருப்பது சிவிக் சென்ஸ் எனப்படுவதைத் தான்!

      Delete
  6. உங்களுடைய ஒவ்வொரு பாயிண்டுக்கும் என்னால் விவரமாக மறுப்புக் கூற முடியும். ஆனால் செய்யவில்லை. எதற்கு வீண் சர்ச்சை.

    ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். பெரிய பணக்காரர்கள் மற்றும் சிறிய ஏழைகளும் எப்படியாவது வரிகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.ஆனால் இந்த கிழ்த்தர மேல்த்தர நடு வர்க்கம் மட்டும் தான் எல்லா வரியையும் கட்டி விட்டு அவதிப்படுபவர்கள். ஒரு நடுத்தர வர்க்க மனிதன் தனது சம்பாத்தியத்தில் சுமார் 50% வரியாக செலுத்துகிறான்.

    வருமான வரி : சுமார் 15% (சராசரி)
    வாங்கும் பொருட்களின் கலால் வரி சுமார் 25% ( சராசரி 50 % செலவு பொருள் வாங்குவதில் தான்)
    விற்பனை வரி சுமார் 15%( சராசரி 50 % செலவு பொருள் வாங்குவதில் தான்)
    சேவை வரி 15% இன்சூரன்ஸ் தபால் போன் ரயில் டிக்கெட் இணையத் தொடர்பு ஹோட்டல் பில் மற்றும் கணக்கில் அடங்கா சேவைகள்.

    இதற்கு மேல் சொத்து இருந்தால் சொத்து வரி நிலவரி மற்றும் வாகனங்களின் வரி.

    இன்னும் முடியவில்லை. இத்தனை வரிகள் கொடுத்தும் செஸ் எனப்படும் வரிக்கு மேல் வரி கொடுக்க வேண்டும். அவை education cess higher education cess satcha bharat cess krishi kalyaan cess என்று பலவும் உள்ளன.

    சரி இந்த வரிகள் இவ்வளவும் எங்கே போகின்றன என்று ஆராய்ந்தால் பெரும்பகுதி பாதுகாப்பு மற்றும் அரசு ஊழியர் சம்பளம்.

    வளர்க்க விரும்பவில்லை. நீங்கள் கூறியவை யாவும் உண்மை என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவ்வளவே.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வரி கட்டுவது எங்குமே நடுத்தர வர்க்கம் தான். நீங்கள் மறுப்புச் சொல்லி இருந்தால் நானும் ஆதாரங்களோடு மறுத்திருப்பேன். பெரிய பணக்காரர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை எனக்கும் உகந்தது அல்ல! அதை எதிர்க்கவே செய்கிறேன். மற்றபடி வரிகள் எங்கும் உண்டு! ஒரு உதாரணத்துக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரின் ஒரு பகுதியில் கட்டவேண்டி இருக்கும் வரியைச் சொல்லி இருக்கிறேன். இங்கே அந்த அளவுக்கெல்லாம் வரி போடுவதில்லை. போடவும் முடியாது! ஆனால் வரி போடுவது போல் அங்கே எல்லாம் ஒரு குடியிருப்பு வளாகமோ, காலனியோ ஏற்படுத்தினால் முதலில் சாலை வசதியில் ஆரம்பித்துக் குடியிருப்புக்களுக்குக் குடிநீர் வசதி, மின்சார வசதி, சாக்கடை வசதி, கேபிள் வசதி, இன்டர்நெட் வசதி என எல்லாவற்றுக்கும் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதன் பின்னரே நிலங்களைப் பிரித்துக் குடியிருப்புகள் கட்டுகின்றனர். கட்டும்போதும் மேல் குறிப்பிட்ட வசதிகளை எல்லாம் அந்த அந்தக் குடியிருப்புக்குச் சரியாக இணைப்பும் கொடுத்துவிடுகின்றனர். இவை எல்லாம் இருந்தால் தான் அந்த வீட்டை அங்கே எல்லாம் விற்கவோ, வாங்கவோ முடியும். நம் நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் அப்படி ஏதும் இல்லை என்பது பெரும் சோகம்! பெங்களூரில் ஓரளவுக்குக் கடைப்பிடிக்கிறார்கள். அங்கே ஒரு கிரவுன்ட் நிலத்தில் அதாவது 2,400 சதுர அடி நிலத்தில் குடியிருப்புக்கள் இரண்டுக்கு மேல் இருக்கக் கூடாது. அனுமதி கிட்டாது. ஆனால் தமிழ்நாட்டிலோ 2,400 சதுர அடி நிலத்தில் எட்டுக் குடியிருப்புக்கள் கட்டுகின்றனர். ஒரு தளத்துக்குக் குறைந்தது மூன்றாவது கட்டுகின்றனர். :( அத்து மீறல்கள் இங்கே அதிகம்! :(

      Delete
    2. நம் நாட்டில் சேமிப்புக் கணக்குக் கொடுக்கப்படும் வட்டி விகிதம் வெளிநாடுகளில் கொடுப்பதில்லை! நம் நாட்டுப் பொருளாதாரம் ஸ்திரமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். மக்களின் சேமிக்கும் மனப்பாங்கு! என்னதான் க்ரெடிட் கார்ட் மோகம் இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் சேமிப்பிலேயே அதிகம் ஈடுபாடு காட்டுகிறார்கள். இது ஒரு விரும்பத்தக்க அம்சம்.

      Delete
    3. நம் நாட்டில் சேமிப்புக் கணக்குக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதம் ஒரு மாய மான்! வாங்குகிற வட்டி+முதலில் கொஞ்சம் என்று பணவீக்கத்தில் அத்தனையும் ஸ்வாகா! இதை உங்களுக்குத் தெரிந்த பொருளாதார வல்லுனரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். அல்லது உங்களவரிடம் இந்த பாயிண்ட்டை டிஸ்கஸ் பண்ணுங்கள். பிஸினஸ்ஸில் முடக்க வக்கில்லாத முதியவர்களுக்கு அரசு வங்கிகள் தான் ஒரே பாதுகாப்பு9 அரண். மும்பாய் போனற பிரதேசங்களில் இளையர்களிடட்மிருந்து 95 வயது கிழவர் கூட ஏதோ வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதால் வங்கியில் மூலதனத்தை முடக்குவது குறைவே. குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்குத் தான் அவர்களுக்கு வங்கிகள் உபயோகமாகிறது.

      தமிழகத்திலோ, வங்கியில் தங்கள் பிச்சாத்து காசை சேமிக்கும் மத்தியர் (நன்றி: சுஜாதா) நிலை வேறு. ரிடையர் ஆகிவிட்டால் போதும், ஈஸிச்சேரில் சாய்ந்தபடி ஹிந்து பேப்பரை பிரித்து வைத்துக் கொண்டு அரசியல் பேசிக் கொண்டிருப்பார்கள். அது என்னவோ தெரியவில்லை ரிடையர் ஆகிவிட்டால், 'ஆளை விடு, நான் ஃப்ரி' என்ற மனப்பான்மை இங்கு பலருக்கு. அதனால் மாநிலத்திற்கு மாநிலம் கூட வங்கியில் சேமிப்பது வித்தியாசப்பட்டிருக்கிறது.

      வெளிநாடுகளில் வட்டியை (மிஞ்சிப்போனால் 1%) எதிர்பார்பதில்லை. விரும்பியோ அல்லது விரும்பாமலேயோ வங்கியில் தான் பணத்தை வைத்திருக்க வேண்டும். எல்லாமே அங்கே பிளாஸ்டிக் அட்டை செலாவணி என்பதால் சம்பளத்திலிருந்து அத்தனையும் வங்கிக் கணக்கில் தான் போடப்படுவதால் விரும்பியோ அல்லது விரும்பாமலேயோ வங்கிக் கணக்குக்குத் தான் பணம் சேரவேண்டிய நிர்பந்தம். சொல்லப்போனால் அங்கே பணத்தை வங்கியில் வைத்திருப்பதற்களிடம் நாளாவட்டத்தில் அதற்கான பாதுகாப்பு செலவுகளுக்காக வங்கி நிர்வாகம் ஒரு தொகை கேட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை! இங்கு வங்கி லாக்கர்களுக்காக வாங்குகிறார்களே, அதைப் போல!

      அங்கு அத்தனையும் தனியார் வங்கிகள். அதனால் இயல்பாகவே வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கு நம் நாட்டில் தான் பாதுகாப்பு அதிகம். (நம் நாட்டில் கூட நிரந்தர வைப்புகளுக்கு ஒரு லட்சம் வரை தான் அரசாங்கம் கேரண்டி கொடுக்கிறது)
      அரசு வங்கிகள் ஆயுசுடன் வாழ்ந்தால் தான் அரசியலாளர்கள் சாதாரண மக்களின் பணத்தை கையாள முடியும். அதனால் எக்காரணம் கொண்டும் அரசு, பொதுத்துறை வங்கிகள் திவாலாவதைப் பார்த்துக் கொண்டிருக்காது. ஏனெனில் பொதுத்துறை வங்கிகள் பொன் முடடையிடும் வாத்துக்கள்! ஒரேடியாகக் கீறி விட்டால் அடிப்படைக்கே ஆபத்தாகி விடும்.

      சில வருஷங்களுக்கு முன் இந்தியன் வங்கிக்கு நேர்ந்த கதியை நினைத்துப் பாருங்கள். கடைசியில் அரசு உதவி+ வங்கி ஊழியர்களின் கடுமையான உழைப்பு மூலமாகத் தான் அதை எடுத்து நிறுத்த முடிந்தது.

      Delete
    4. ஆரம்ப வரி:

      //நம் நாட்டில் சேமிப்புக் கணக்குக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதம்..//

      நம் நாட்டில் நிரந்தர வைப்புக்கு (Fixed deposit) கொடுக்கப்படும் வட்டி விகிதம் ---- என்று திருத்தி வாசிக்கக் கோருகிறேன். தற்போது 7.50%

      Delete
    5. வட மாநிலங்களிலும் வங்கிகளில் சேமிப்பவர் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். எல்லோருக்குமா பிசினஸ் இருக்கும்? பலருக்கும் பிசினஸ் என்பது குடும்பரீதியாக வருவதே என்பது தான் நான் அதிகம் கண்டது. என்றாலும் அங்கே ரொம்ப அலட்டிக்க மாட்டாங்க. இங்கே ரொம்பவே சிரமப்படுவாங்க, சிரமப்படுத்துவாங்க! ரெண்டும் உண்டு. மற்றபடி பணி ஓய்வு பெற்றதும் திரும்ப அதே அலுவலகத்தில் தொகுப்பு ஊதியத்துக்கு வேலை செய்பவர்கள் இங்கேயும் உண்டு. ஒரு சிலர் உடல்நிலை காரணமாகவோ அல்லது ரொம்பச் சின்ன வயசிலேயே வேலைக்குப் போக ஆரம்பித்ததாலோ வீட்டில் போதும்னு உட்காரலாம்.

      Delete
    6. நான் குறிப்பாக மும்பை என்று அந்த வர்த்தக பூமியைக் குறிப்பிட்டேன். அம்மாடி!.. சொந்தக் கடை வைத்து விட்டார்கள் என்றால், (பெரும்பாலும் டெக்ஸ்டைல்ஸ்) தாத்தாவிலிருந்து பேத்தி வரை.. என்ன உழைப்பு என்கிறீர்கள்?.. ஷிப்ட் போட்டுக் கொண்ட மாதிரி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் என்று செய்யும் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். சென்னையில் கூட இந்த குடும்ப வியாபார நேர்த்தியைப் பார்க்கிறேன்.

      படிப்பது என்பது ஒரு Educational qualification-க்காக என்பது மாதிரி இருக்கும். என்ன படித்தாலும் முடங்குவது என்னவோ சொந்த வியாபாரத்தில் தான்.

      பணி ஓய்வு பெற்றதும் திரும்ப அதே அலுவலகம் என்பது ரொம்பவும் ஓவர். மரியாதை கெட்டு விடும். அசட்டுச் சிரிப்பு, கூழைக்கும்பிடு என்று அதிகாரிகளிடம் குமைந்து..
      நிரன்கர வேலையில் இருப்பவர்களுக்கு இந்த மாதிரி பணி ஓய்வு கேஸ் என்றால் இளப்பம். அவர்கள் வேலையையும் இவர் தலையில் சுமத்தி விட்டு காணாமல் போய்விடுவார்கள்.
      அதுவும் ஜபர்தஸ்தாக, கெடுபிடியாக மேலதிகாரிகளாக் இருந்தவர்கள் எனறால் கேட்கவே வேண்டாம்.. வகையாக மாட்டிக் கொண்டவர்கள் ஆவர்கள்.

      பணி ஓய்வு பெற்றவர்களைப் பற்றி நான் சொல்ல வந்தது வேறே. வீட்டுக்குள்ளேயே முடங்காமல், வெளியே போக வர, நாலு பேருடன் பேசி சிரித்து கலகலப்பாக இருக்க, ஏதாவது சமூக சேவைகளில் ஈடுபட, தனக்கென்று ஒரு பொழுது போக்கை வைத்துக் கொள்ள... இப்படி.. இது தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிற போக்கை மாற்றும். உடல் ஆரோக்கியத்திற்கு உற்சாகம் கூட்டும். அதற்காகச் சொன்னேன்.

      Delete

  7. /ஸ்ரீராம்.04 June, 2016
    மாற்றங்களை நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும், அதைத் தொடர்ந்தும் கடைப் பிடிக்க வேண்டும் என்பதையும் உணரவே மாட்டோம்./அப்ப்டியே ஏற்றுக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சொல்பவர்கள் பைத்தியக்காரர்களாக ஆகிவிடுவார்கள்.

      Delete
  8. நீங்கள் கூறியவை அனைத்தும் சரி.வெளிநாட்டில் வசதிகள் அதிகம் ஆனால் கலாசாரம்? மற்றும் பல விதமான பழக்க வழக்கங்கள் இவற்றை பார்க்கும் போது நாம் வாழும் இடம் சொர்க்கம் என்ற நினைப்பு வருகிறது,எவ்வளவு குறைகள் இருந்தாலும்.

    ReplyDelete
    Replies
    1. நான் இந்தியாவைக் குறை சொல்லவில்லை விஸ்வா! என்றாலும் இந்தியக் கலாசாரமும் மெல்ல மெல்லச் சீரழிந்தும் வருகிறது. ஆகவே வெளிநாட்டவரைத் தோற்கடிக்கும் வண்ணம் இந்தியாவிலும் மோசமான கலாசாரம் பரவிப் பல ஆண்டுகள் ஆகின்றன!

      Delete
  9. Replies
    1. ம்ம்ம்ம்ம்ம்??????????????

      Delete
  10. //நாங்கள் வெளிநாடுகளுக்குப் போய் இந்தியாவா சுத்த மோசம்! ஒரே அழுக்கு, குப்பை! எதுக்கெடுத்தாலும் இலவசம்! மக்களை ரொம்பக் கெடுக்கிறாங்கனு சொல்வோம்! அங்கே யார் திரும்பிப் போய் இருப்பாங்க என்றும் சொல்வோம். அது எங்கள் உரிமை//

    மாறுபட்ட கோணத்தில் யோசித்து சரியாகவே விளக்கம் சொல்லி இருக்கின்றீர்கள் என்னிடமிருந்து மாற்றுக்கருத்து இல்லை
    அனைத்தும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! சிந்திக்கவெல்லாம் இல்லை! பல வெளிநாட்டு வாசிகள் என்னிடம் சொல்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் கையில் எப்போதும் மினரல் குடிநீர் பாட்டிலை வைத்திருப்பார்கள். நம்ம வீட்டில் அக்வா கார்ட், ஆர்வோ சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர் என்றாலும் குடிக்க மாட்டாங்க. சாப்பிடும்போது பேப்பர் டிஷ்யூ கட்டாயம் வேண்டும். மூக்குத் துடைக்கக் கூடப் பேப்பர் டிஷ்யூ! :( கை கழுவிக் கொண்டே இருப்பாங்க! எங்கே போனாலும் இந்த ஹான்ட் வாஷ் எடுத்துப் போவாங்க! இப்படி எத்தனையோ இருக்கு! :(

      Delete
  11. எதுவுமே சொல்றாப்லெ இல்லை. ரோட்லெ எதிர்சாரி மோட்டார் சைகிள் வருது. தண்டல்காரன் பாத்துக்க்கிணு இருக்கான்.
    இந்த மாவார்த்த பிர்ச்னைக்குக் காரணம் நம்ம காசு செலவாகாம, நம்ம காரியம் நடக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எல்லாம் சுயநலம் தான்!

      Delete
  12. ம்ம்ம்ம்ம், நாங்களும் அப்படித் தான் செய்கிறோம். சொல்லப் போனால் சக பயணிகளின் குப்பைகளைக் கூடப் பொறுக்கிப் போட்டுடுவேன். ஆனால் அவங்க உடனே அதை ஒரு சலுகையாக எடுத்துக் கொள்வதைப் பார்த்ததும் விட்டு விட்டேன். :(

    ReplyDelete
  13. நீங்கள் சொல்வதை 100% ஒப்புக்கொள்கிறேன். வெளி நாடுகளில் மக்கள் கட்டும் வரிப் பணம் முறையாக செலவிடப் படுகிறது. நம் நாட்டில் அது கேள்விக் குறி. கடமையைச் செய், பலனை எதிர் பார்காதே என்னும் உங்கள் வாசகத்தை அதாங்க கீதா வாசகத்தை கடை பிடிக்க வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நம் நாட்டில் நீண்ட கால நன்மைக்கு யாரும் ஒத்துக்கறதில்லை. உடனடி பலன் தான் எதிர்பார்ப்பது! அதான் இலவசங்களைக் கொடுத்து அப்போதைக்கு மக்களைத் திருப்திப் படுத்திடறாங்க. மக்களும் அதில் மகிழ்ந்து போகிறார்கள். மொத்தத்தில் உழைப்புன்னா என்னனு ஆயிடுது!

      Delete
  14. நீங்கள் சொல்வதை 100% ஒப்புக்கொள்கிறேன். வெளி நாடுகளில் மக்கள் கட்டும் வரிப் பணம் முறையாக செலவிடப் படுகிறது. நம் நாட்டில் அது கேள்விக் குறி. பொது மக்கள் கடமையைச் செய், பலனை எதிர் பார்காதே என்னும் உங்கள் வாசகத்தை அதாங்க கீதா வாசகத்தை கடை பிடிக்க வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்போ விவசாயிகளையே எடுத்துக்கோங்க. நிலத்தில் நெல் பயிரிடாத காலங்களில் காய்கறிகளைப் போடலாம். அல்லது தரிசு நிலங்களைப் பண்படுத்தி காய்கறிகள் பயிரிட்டு லாபம் பெறலாம். ஆனால் இதற்கெல்லாம் பாடுபட அவங்களுக்கு மனமில்லை. பயிர்க்கடன் எனில் அரசாங்கம் கிட்டே கூட்டுறவுச் சங்கம் மூலமாக் கடன் வாங்கி உரம் இலவசமாக வாங்கி இலவச மின்சாரத்தில் எல்லாவற்றையும் செய்து லாபம் பார்க்க வேண்டும். பின்னர் பயிர்க்கடனையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.அதே சமயம் கொள்முதல் விலையையும் ஒவ்வொரு வருஷமும் ஏற்றித் தரவேண்டும்.

      Delete
  15. இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) சிவிக் சென்ஸ் (இதற்குத் தமிழில் என்ன) சுத்தமாகக் கிடையாது (எல்லோரும்தான். இதில் விதி விலக்கு என்று யாரும் கிடையாது). இது எனது ரோடு, இது எனது பள்ளி, இது எனது நகரம் என்ற எண்ணம் கொஞ்சம்கூடக் கிடையாது. இது வெளிநாடுகளில் நிரம்ப உண்டு. 'நாம் "வீணில் பழம்பெருமை பேசியே' காலத்தைக் கழிப்பவர்கள். வெறும்ன "எந்த ஊரு என்றாலும் நம்ம ஊரு போல வருமா" என்று சொல்லுவோம். அதன் காரணம், ஒரு ரூலும் இல்லாமல் இஷ்டப்படி இருக்கலாம் என்பதுதான். நீங்கள் எழுதியிருப்பது குறைவுதான். 1. நாம வெளியில் குப்பை போடாமல் இருக்கோமா? யாரும் பார்க்காதபோது, பிஸ்கட் பாக்கெட் கவரை விசிறி அடிப்பது, பழத்தின் கொட்டையை ரோடுகளில் துப்புவது போன்றவை 2. நாம வரிசையில்தான் பொருட்களை வாங்குகிறோமா அல்லது வரிசையைத்தான் எங்கும் கடைபிடிக்கிறோமா? 3. சக மனிதனுக்கு முன்பு, அவனின் உரிமையை அழிக்கும் விதமாக, அவனுக்கு முன்பாக வாங்கத் துடிக்கிறோமா? - க்யூவில் ஜம்ப் பண்ணுவது, இடையில் 'நுழைவது போன்றவை 4. நாம, சமூக விதிகளை மதிக்காதவர்களிடம் அவர்களை ஆதரிப்பதுபோல் நடந்துகொள்கிறோமா - 'நடைபாதை வியாபாரிகளிடம், பாலத்தின் அடியில் இடத்தை ஆக்கிரமித்துக் கடை போட்டவர்களிடம், சப் வேயில் காய்கறி மற்றும் எல்லாக் கடைகள் வைத்திருப்பவர்களிடம் (அவர்கள் நம் சொத்தை ஆக்கிரமித்துக் கடை போட்டிருக்கிறார்கள்) எதை நாம் வாங்கினாலும், நாமும் அவர்களின் கிரைமுக்குத் துணைபோனவர்கள். இது பழக் கடையாகட்டும், இளனி கடையாகட்டும். நாம் அவர்களுக்கு, அந்த எளிமையான மக்களுக்கு உதவ நினைத்தால், நம் சம்பளத்தையோ, சொந்தப் பணத்தையோ கொடுக்கலாம். 5. சாலை விதிகளை, யாரும் இல்லாதபோதும் (கண்காணிக்க) மதிக்கிறோமா? 6. நமக்குக் காசு இருப்பதால் அரசு தரும் தண்ணீர், மின்சாரத்தை வீணாக்குகிறோமா 7. சுய மரியாதை இல்லாமல், இலவசமாக அரசு கொடுப்பதை (எளியவர்களுக்கு) நாம் உபயோகப்படுத்துகிறோமா (இது அம்மா கடையாகவும் இருக்கலாம், அம்மா தண்ணீராகவும் இருக்கலாம், அய்யா தொலைக்காட்சிப் பெட்டியாகவும் இருக்கலாம் அல்லது வாக்குக்குக் கொடுக்கிற பணமாகவும் இருக்கலாம்) 8. கண்ட இடங்களிலெல்லாம் போஸ்டர் ஒட்டுவதை வேடிக்கை பார்க்கிறோமா? கிடைத்த இடத்தில் கிறுக்கி வைக்கிறோமா? அல்லது கிடைத்த இடத்தில் நம் விசிட்டிங்க் கார்டுகளைச் சொருகிவைக்கிறோமா ('நான் திருப்பதி கோவில் கியூவில் நிறையப் பார்த்திருக்கிறேன்) 9. தெரிந்தே அடுத்தவரின் உரிமையை அபகரிக்கிறோமா (ரயில், பஸ்ஸில் நிறைய இடத்தை ஆக்கிரமிப்பது, அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக நடந்துகொள்வது, காசு கொடுத்து இடம் வாங்குவது...) 10. நம் தொகுதி/வார்டு Representative நமக்கு நல்லது செய்வார் என்று எண்ணித் தேர்ந்தெடுக்கிறோமா? (அவர் வெற்றி பெறுகிறார் அல்லது தோல்வி அடைகிறார். இது நமக்குச் சம்பந்தமில்லாதது. நாம் எண்ணுவதை மெஜாரிட்டி மக்கள் எண்ணினால், அது தானாக நடக்கும்) - இந்த பேஸிக் விதிகளை நாம் கடைபிடிக்கவில்லையென்றால், நமக்கு யாரையும் கேள்வி கேட்க யோக்கியதை கிடையாது. We deserve what we have today. 'நம்ம மன ஆறுதலுக்கு (அவனுக்கு இப்போ கிரகம் சரியில்லை.. ஆவணி வந்தால் டாப்புக்கு வந்துடுவான் போன்று), இந்தக் கட்சிதான் மோசம், அந்தத் தலைவர்தான் மோசம் என்று நம்முடைய குறைகளுக்கு மற்றவர்களைக் காட்டிவிடும் இந்தப் போக்கே நம் இன்றைய நிலைக்குக் காரணம். (ஜீவி inflation & interest பற்றி எழுதியுள்ளது சரி. ஆனால், தனியார் வங்கிகளில் நாம் சேமிப்பது நம் ரிஸ்க். நம் பேராசைக்கு அரசைக் குறை சொல்லும் யோக்கியதை யாருக்கு இருக்கிறது?)

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன்,

      //(ஜீவி inflation & interest பற்றி எழுதியுள்ளது சரி. ஆனால், தனியார் வங்கிகளில் நாம் சேமிப்பது நம் ரிஸ்க். நம் பேராசைக்கு அரசைக் குறை சொல்லும் யோக்கியதை யாருக்கு இருக்கிறது?) //

      என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஜீவி என்று குறித்திருப்பதால் இதைக் கேட்க வேண்டியதாகி விட்டது.

      inflation & interest பற்றி ஜீவி எழுதியுள்ளது சரி என்றால் எங்கிருந்து பேராசை வரும்?..
      நீங்கள் சொல்லியிருப்பது முரண்பாடில்லையா?

      தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கி வகுத்திருக்கிற வட்டி விகிதம் தான் கொடுக்க வேண்டும். அவர்கள் ஒன்றும் அதிகம் கொடுத்து விட முடியாது.

      நான் தனியார் வங்கிகளைப் பற்றிக் குரிப்பிடவே இல்லையே! அப்படியிருக்க எங்கிருந்து இந்த பேராசை வந்தது?.. யாரின் பேராசையைப் பற்றிச் சொல்கிறீர்கள்?.. எழுதுவதை சரியாக புரியும்படி எழுதுஙகள்.

      Delete
    2. அவர் தனியார் நிதி நிறுவனங்களைச் சொல்கிறார் என்றே எண்ணுகிறேன். தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுப் பணத்தை முதலீடு செய்துவிட்டுப் பின்னர் இழந்தவர்கள் எண்ணிக்கை சொல்ல முடியாது! அது பேராசை தானே! மற்றபடி தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே வங்கிகளை நிர்வாகம் செய்ய முடியும்; செய்ய வேண்டும்.

      Delete
    3. 'தனியார் நிதி நிறுவனங்களை' என்றால் அதைச் சரியாகச் சொல்ல வேண்டும் தானே?..
      அதுவும், மற்றவர்கள் யோக்கியதையைப் பற்றி எழுத வேண்டுகிற நேரங்களில் அதில் இன்னும் கூடுதலான கவனம் தேவை, இல்லையா?..


      Delete
    4. (ஜீவி inflation & interest பற்றி எழுதியுள்ளது சரி. ஆனால், தனியார் வங்கிகளில் நாம் சேமிப்பது நம் ரிஸ்க். நம் பேராசைக்கு அரசைக் குறை சொல்லும் யோக்கியதை யாருக்கு இருக்கிறது?) - வங்கி என்று எழுதியது தவறு. கீதா மேடம் சொன்னதுபோல், நிதி நிறுவனங்கள். 'நாம எப்போதும் இதுல பணத்தைப் போட்டுட்டு (அது சீட்டுக் கம்பெனியாக இருக்கலாம்) அப்புறம் அரசைக் குறை சொல்லிப் போராட்டம் நடத்துவோம்.

      Delete
  16. நாம, எவனோ தேவ தூதன் வந்து எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிடுவான் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அந்த தேவதூதனே நாட்டைத் திருத்தமுடியாமல் உயிர் விட்ட கதைதான் எல்லா மதத்திலும் இருக்கிறது. சொல்லும் ஆளைப் பார்க்காதே.. சொல்ல வந்த கருத்தைப் பார் என்பதுதான் சரியாக இருக்கும். (East Ham, UK - பல வருடங்களுக்கு முன்பு, 70 சதவிகிதம் ஆங்கிலேயர்கள்-British. பாகிஸ்தானிகளும், பஞ்சாப்/குஜராத்தியர்களும் அங்கு வந்தபின், அவர்கள் கண்ட இடங்களில் பான் துப்பும் கலாச்சாரம் போன்றவற்றினால், இப்போது 30 சதவிகிதம் ஆங்கிலேயர்கள். அவர்கள் வேறு கவுன்டிக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள்). மோடி "சுவச் பாரத்" என்று சொன்னால், எங்கே 'நீங்கள் தருவதாகச் சொன்ன 15 லட்சம் கருப்புப் பணம் எங்கிறோம். மழை நீர் சேகரிப்பு கட்டாயம் என்று சொன்னால், மிரட்டினால் ஒழிய நாம் செய்வதில்லை. அரசை எதிர்த்துப் பேரணி நடத்துபவர்கள், வீட்டிற்கு அருகிலுள்ள டாஸ்மாக்குக்குச் செல்பவர்களை எதிர்த்துப் பேரணி நடத்தினால் என்ன? அவர்கள்தானே சமூக அவலத்துக்குக் காரணம்.. இதைப் போன்று நிறைய unpopular விஷயங்களை எழுதலாம்.

    சிங்கப்பூரோ, சீனாவோ, மலேசியாவோ முன்னேறியதற்கு முழுமுதல் காரணம், அங்கிருந்த சர்வாதிகாரிகள் (மக்கள் நலத்தை முதன்மையாக மனத்தில் கொண்ட). அதைவிட, தலைவர்கள் தன் நல்லதுக்குத்தான் சொல்லுவார்கள் என்று பொறுமையாக அவற்றை ஏற்றுக்கொண்டு, அதனால் பயன் பெற்ற மக்கள். இந்தியா, மற்றவர்கள் மதிக்கும் அளவுக்கு முன்னேறாததற்குக் காரணம், நாம்தான். வேறு யாரும் காரணம் இல்லை.

    நாம் திருந்தாத வரை, நம் தலைவர்களைக் குறை சொல்லும் யோக்கியதை 'நமக்கு நிச்சயம் கிடையாது. நம் தலைவர், நம்முடைய குணம் உள்ளவரே. அது யாராகிலும் சரி.

    ('நானும் உங்களில் ஒருவனே. அதனால் என் மீது பாயாதீர்கள். உங்கள் மீதே பாய்ந்துகொள்ளுங்கள்)

    உங்கள் இடுகையையும், பின்னூட்டங்களையும் பார்த்துவிட்டு எழுதவேண்டும் என்று தோன்றியதால் எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது முழு உண்மை. வடமாநிலங்களில் இந்த பான், ஜர்தா பீடா போட்டுக்கொண்டு ஆங்காங்கே புளிச் புளிச் என்று துப்பும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. மோதியின் ஸ்வச்ச பாரத் பேச்சைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு இந்த நினைவு தான் வரும். அதுவும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கடும் கூட்டத்திடைப் பிரயாணம் செய்ய நேர்ந்தால் அவ்வளவு தான்! நொந்து நூலாகிவிடுவோம். காலடியிலேயே துப்புவார்கள். காலைக் கீழே வைக்க யோசனையா இருக்கும். :(

      Delete
  17. மிக நல்ல பதிவு என்போம். நாம் எதற்குமே அரசையும், பிறரையும் குற்றம் சொல்லிப் பழக்கிக் கொண்டோம் அதாவது சுட்டு விரலை நீட்டியே...அதுவும் நிரந்தரமாக. அடுத்த மூன்றும் நம்மை நோக்கி என்பதை உணர்ந்தாலும் அலட்சியம்.

    மாற்றம் என்பது நம்மிலிருந்து தொடங்காத வரை பயன் இல்லை. அதனால் மக்களும் அரசும் சேர்ந்து ஒத்துழைத்தால் நல்ல பலன் கிடைக்கும். வெளிநாட்டில் அதுதான் அரசும் மக்களை மதிக்கின்றது மக்களும் அரசை கொள்கைகளை மதிக்கின்றார்கள்...அதுவும் குறிப்பாக ஜப்பானில்...மக்களுக்கு பிறக்கும் போதே நாட்டுப்பற்றுத்தான் முதலில் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது நடைமுறையாக....

    ReplyDelete