இரண்டு நாட்கள் முன்னர் திடீர்ப் பயணமாக மதுரை சென்றிருந்தேன். மீனாக்ஷி அம்மாவைப் பார்க்கத் தான். மதுரைன்னாலே நம்ம ரங்க்ஸுக்கு கோபு ஐயங்கார் கடை தான் நினைவில் வரும். ஆகவே மீனாக்ஷியைப் பார்க்கும் முன்னர் நேரே கோபு ஐயங்கார் கடை தரிசனம் தான். ஶ்ரீராம் வேறே இந்தக் கடை இப்போ இல்லை இங்கே, மூடிட்டாங்கனு சொல்லிட்டு இருந்தாரா! அன்னிலே இருந்து மண்டைக்குடைச்சல் தாங்கலை. இப்போத் தான் சரியாச்சு! :) ஆனால் அந்தப் பழைய ருசியும் மணமும் இல்லைனு ரங்க்ஸின் கணிப்பு! :)
காமிராவெல்லாம் எடுத்துட்டுப் போயும் ஒன்றிரண்டு படங்கள் தான் எடுத்தேன். படம் எடுக்கும் மனோ நிலையில் இல்லை. இது கூட ஶ்ரீராமுக்குக் கடை அங்கேயே இருக்குனு காட்டறதுக்காக எடுத்த படம். :) மீனாக்ஷியை அருமையாக தரிசனம் செய்தோம். அர்ச்சனை ஒன்று செய்ததால் சற்று நேரம் நின்று தரிசனம் செய்ய முடிந்தது. அர்ச்சனை முடியறதுக்குள்ளே கோயில் ஊழியர் அவசரப் படுத்தினார். :( அர்ச்சனை இருக்குனு சொல்லிட்டு நின்று கொண்டிருந்தோம். பச்சைப்பட்டில் ஜொலித்தாள் மீனாக்ஷி! இப்போல்லாம் எலுமிச்சை மாலை வேறே போடறாங்க! முன்னெல்லாம் பார்த்தது இல்லை. இப்போத் தான் இரண்டு முறையாகப் பார்க்கிறேன். தரிசனம் முடிந்த பின்னர் சுவாமி சந்நிதி சென்று அங்கேயும் தரிசித்துக் கொண்டோம். முக்குறுணிப் பிள்ளையாரையும் வணங்கிக் கொண்டோம். கோயில் ஆனையார் சுவாமி சந்நிதிக்கும், அம்மன் சந்நிதிக்கும் இடையே உலா வந்து கொண்டிருந்தார். அர்ச்சனை செய்த தேங்காயைக் கொடுக்கலாம்னு நினைச்சால் பாகன் ஓடு இருப்பதால் கொடுக்காதீங்கனு சொல்லிட்டார். தேங்காயை மறைத்து வைத்துவிட்டுப் பழங்களைக் கொடுத்தோம். ஆனந்தமாக உண்டது.
வடக்கு கோபுர வழியாக வடக்கு ஆடி வீதியில் சென்று கல்யாண மண்டபம் வழியாக சுவாமி சந்நிதி வெளிப் பிரகாரம் போய்த் தான் உள்ளே போக முடிந்தது. முன்னெல்லாம் கோயில் கடைகளைச் சுற்றிக் கொண்டு வன்னி மரத்தடிப் பிள்ளையாரைப் பார்த்துட்டு நேரே அம்மன் சந்நிதி வாயில் வழியாகப் போவோம். இப்போல்லாம் சுவாமி சந்நிதி வழியாகச் சென்று முக்குறுணிப் பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டே அம்மன் சந்நிதி செல்கிறோம். வண்டியை நிறுத்தும் இடம் வடக்கு ஆவணி மூலவீதியில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் மைதானத்தில் என்பதால் இப்படிப் போக வேண்டி இருக்கு. வந்த வழியே திரும்பி வெளியே வந்து வண்டியில் ஏறி நம் வலை உலக சிநேகிதி கோமதி அரசுவின் வீட்டிற்குச் சென்றோம். அங்கே திரு அரசு அவர்களும், திருமதி அரசு அவர்களும் பல நல்ல தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள். நாங்கள் உடனே கிளம்பவேண்டிய அவசியம் இருந்ததால் அவங்களோட விருந்து உபசாரத்தை ஏற்க முடியவில்லை. அங்கிருந்து விடைபெறும்போது கோமதி அரசு வெற்றிலை, பாக்குடன் "தேவன்" அவர்களின் மல்லாரி ராவ் கதைகள் புத்தகமும் இன்னொன்று அவர்கள் மாமனாரின் நூற்றாண்டு விழா மலர் மற்றும் பொன்னீலனின் "அன்புள்ள" ஆகிய மூன்று புத்தகங்களைக் கொடுத்தார்கள்.
மதுரையிலிருந்து வந்ததும் நேற்று ஶ்ரீரங்கம் கோயிலில் இன்று ஜேஷ்டாபிஷேஹம் என்பதால் ரங்குவுக்குத் தைலக்காப்புச் சார்த்துவார்கள். முக தரிசனம் மட்டுமே கிட்டும். இன்று முழுவதும் ரங்குவைப் பார்க்க முடியாது. நாளை மாலை நான்கு மணிக்குப்பின்னரே ரங்குவைப் பார்க்க முடியும். ஆகையால் திடீரென (நமக்கு இப்படி திடீர் முடிவுகள் தான் ஒத்துவருது!) முடிவெடுத்து மாலை மூன்றே முக்காலுக்குக் கோயிலுக்குச் சென்றோம். தாயார் சந்நிதியிலேயே கூட்டமாகத் தான் இருந்தது. என்றாலும் தரிசனம் அரை மணி நேரத்தில் கிடைச்சுடுத்து! அங்கிருந்து பாட்டரி கார் உடனே வந்துவிட்டதால் அதில் ரங்குவைப் பார்க்க வந்தோம். கூட்டம் தாங்கலை! வழியெங்கும் மனிதர்கள், மனிதர்கள். 50 ரூ டிக்கெட் வாங்கவே நூற்றுக்கணக்கில் கூட்டம்! சரினு 250 ரூ டிக்கெட்டுக்குப் போனால் அங்கேயும் எங்களுக்கு முன்னால் 50 பேர்! டிக்கெட் கொடுக்கும் கவுன்டர் திறக்கவே இல்லை. அங்கே யாருமே இல்லை! கிட்டத்தட்ட அரைமணி நேரம் நின்ற பின்னர் கரூர் வைசியா வங்கி அலுவலர் ஒருவர் வந்து டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.
தரிசனத்துக்குப் போனால் சந்தனு மண்டப வாயிலில் 250 ரூ டிக்கெட் வாங்கினவங்களை நிறுத்தி வைத்துவிட்டு 50 ரூ டிக்கெட் வாங்கினவங்களையும் இலவச தரிசனக்காரர்களையும் உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்கள். இங்கே ஒரே களேபரம், கூச்சல், குழப்பம். கோயில் ஊழியர் ஒருவருக்கும் பக்தர் ஒருவருக்கும் கிட்டத்தட்ட அடிதடி. இந்த அமர்க்களத்தில் இங்கேயும் அரை மணி நின்ற பின்னரே உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே போனால் ரங்குவின் திருமுகத்தையும் திருவடியையும் தரிசனம் செய்து கொண்டிருக்கையிலேயே பிடித்துத் தள்ளி விட்டார்கள். நம்பெருமாளைப் பார்க்கவே முடியலை! :( ரொம்பவே வருத்தமாப் போச்சு! அரை செகன்ட் கூட நிற்கலை! இம்மாதிரி நேரங்களில் நடப்பது தான் என்று தெரிந்தும் நாங்க போயிருக்கக் கூடாது! ஏதோ போனதுக்குப் பெரிய ரங்குவைப் பார்க்க முடிஞ்சதே! அது வரை சந்தோஷம் தான். திரும்பி வருகையில் மடப்பள்ளி அருகே அன்னமூர்த்தி சந்நிதிக்கு வந்தால் அங்கே வழக்கம் போல் கதவு சார்த்தி இருந்தது. துளசிக்காகப் படம் எடுத்தேன். மக்கள் கூட்டம் இருந்ததால் கூட்டம் குறையக் காத்திருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு! மழை வரும் போல் இருட்டி இருந்ததால் குழல் விளக்கு வேறே போட்டுட்டாங்க. அந்த வெளிச்சம் வேறே! :( இம்முறை தங்க கோபுரத்தைப் படம் எடுக்கலை. அங்கே ஒரே கூட்ட நெரிசல். மேலே ஏறவே கஷ்டமா இருந்தது. மழை வேறே பயமுறுத்தல்!
ஹிஹிஹி, புது சாம்சங் செல்லில் தான் எடுத்தேனாக்கும். நாங்க யாரு! தொ.நு.நி. ஆச்சே. அதைத் தான் கீழே பகிர்கிறேன்.

"தேவன்" அவர்களின் மல்லாரி ராவ் கதைகள் புத்தகமும்//
ReplyDeleteஆஹா!
ஹிஹிஹி, இன்னும் படிக்கலை! :)
Deleteவீட்ல இருக்கிற ரங்குவை கவனிங்க போதும்! அங்கே போய் அவஸ்தை பட வேண்டாம்!
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவர் தான் கூப்பிட்டாராக்கும். நான் இதில் எல்லாம் வெறும் த.ஆ.பொ. தான். :)
Deleteசத்தமா இங்கே வந்து சொல்லுங்கோ..
Delete6 மணி லெந்து 12 மணி வரை
இந்த சீரியல் தொல்லை
தாங்கலை .
அட்ட்ரஸ் வேணும்னா....
செல் அடிச்சு கேளுங்கோ...
சுப்பு தாத்தா.
ஹிஹிஹி எல்லார் வீட்டிலேயும் சீரியல் தொல்லை தான்! :)
Deleteஅடடா! எவ்வளோ அழகான படங்கள்! கோணங்கள் என்ன, மேலே குழல்விளக்கு பாழாக்குவது என்ன. ஃபோகஸ் என்ன... அடடா!
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அந்தக் கூட்டத்தில் எடுக்க முடிஞ்சதே பெரிய விஷயம். இதிலே கோயில்காரங்க விரட்டல் வேறே! :)
Delete"ஸ்ரீராம்! உங்களுக்காகவாம்."
ReplyDelete"என்ன, 'சங்கீதா'வே பெஸ்ட்டா?.."
"ஓக்கே.. ஓக்கே.."
//ஆனந்தமாக உண்டது.//
மனுஷ கற்பனையே அலாதி தான். ஆனை வாய்க்கு சோ......ரி.
மதுரையிலே சங்கீதா இருக்கா என்ன? ஶ்ரீராம் கோபு ஐயங்கார் கடை மூடப்பட்டு விட்டதாகச் சொல்லவே எங்க ரங்க்ஸுக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்துடுச்சு! அதான் கடை இருக்குனு காட்டப் படம்! :)
Delete//மனுஷ கற்பனையே அலாதி தான். ஆனை வாய்க்கு சோ......ரி.//
Deleteஅந்தச் சோளப் பொரியையும் ரசிச்சுச் சாப்பிட்டதே! சிரிக்க வேறே சிரிச்சதே!
மதுரைலே தான் இருக்கணுமா, என்ன?.. ஸ்ரீராம் ஓட்டல் பற்றி எழுதினாலே சங்கீதா தவறாமல் வந்து விடும், அதுக்காகச் சொன்னேன்.
Deleteகோபு என்றால் எனக்கெல்லாம் ஆண்டார் தெரு கோபு சார் தான்.
இங்கே நிறைய சங்கீதா இருக்கு! :) ஆனால் எதுக்கும் போனதில்லை! அதை விடப் பிரமாதமாக என்னோட சமையலே இருக்குனு என்னை நானே சமாதானம் செய்துப்பேன்!
Deleteமீனாட்சி அம்மனைப் பார்த்து வருடங்களாகி விட்டன. அங்கு வரும் கூட்டம் ஒரு பிரச்சினை. அதை அவர்கள் சமாளிப்பதாகக் காட்டுவது ஒரு பிரச்சினை. சந்நிதியை மட்டுமே சுற்றி விட்டு வந்து கொண்டிருக்கிறேன். மேலும் மதுரை போக இனி என்ன காரணம் இருக்கிறது? எப்போ போவதோ...
ReplyDeleteவெள்ளி, சனி, ஞாயிறுகளில் பொதுவாக எந்தப் பிரபலமான கோயிலுக்கும் செல்லக் கூடாது. உற்சவ நாட்களில் கோயில் இருக்கும் திசையில் தலை வைத்துப் படுக்கலாம். கோயில் போவதை நினைக்கவே கூடாது. உற்சவம் முடிஞ்சதும் மறுநாள் கோயிலுக்குப் போங்க. காத்தாடும்! உங்க வரவை எதிர்பார்த்து மீனாக்ஷியோ, சொக்கநாதரோ, ரங்குவோ காத்திருப்பாங்க. நாங்க கிழமை பார்க்கிறதோடு அல்லாமல் காலை அம்மாமண்டபத்தில் வரும் கூட்டத்தின் அளவையும் பார்த்துப்போம். அதைப் பொறுத்துத் திட்டம் போடுவோம். நேத்து மூன்றரை மணி வரை கோயில் எண்ணமே இல்லை! அப்புறமாத் திடீர்னு திட்டம் போட்டுப் பதினைந்தே நிமிஷத்தில் கிளம்பினோம். வரும்போது ஐந்தே முக்கால் ஆகிவிட்டது! :)
Deleteகோபு ஐயங்கார் கடை அங்கேயே இருப்பது மகிழ்ச்சி. என் சகோதரர் தவறான தகவல் தந்துள்ளார் என்று தெரிகிறது.
ReplyDeleteபை பாஸ் ரோடில் இருக்கும் கிளைக்கடைக்கு இங்குள்ள சமையல் மாஸ்டர் காலை வேளைகளில் போயிடறாராம். பின்னர் மதியம் இங்கே வந்து கோபு ஐயங்கார் கடை சிறப்பு உணவுகளான பஜ்ஜி, காரச் சட்னி, வெள்ளை அப்பம், காராவடை, தவலை வடை போன்றவை போடுகிறார். ஆகவே மதியம் கொஞ்சம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க! நாம் தான் தீ.தி. குழுவைச் சேர்ந்தவங்க ஆச்சே! எல்லாம் விசாரிச்சு வைச்சுக்கிட்டோம். :)
Deleteசுவாரஸ்யமான பயண பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteஎனக்கென்னவோ பணம் கட்டி தரிசனம் செய்வது மன உறுத்தலாகவே இருக்கின்றது வேறு வழியும் இல்லைதான்.
ReplyDeleteஇப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு இப்பொழுதுதான் வந்தது.
பணம் கட்டி தரிசனம் செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை தான்! ஆனால் அன்றிருந்த கூட்டத்தில் இலவச தரிசனத்துக்கு நின்றால் குறைந்த பட்சமாக இரவு ஒன்பது மணி ஆகி இருக்கும்! :(
Deleteஅன்று அந்த கோயில் மட்டுமல்ல... எங்கும் எல்லாக் கோயிலும் இதே நிலைதான் இங்கும் துபாயில்கூட.
Deleteமீனாச்சியை விசாரிச்சுட்டு "
ReplyDeleteஎன்று படித்தபின்
ஒரு வேளை சென்னைக்கு வந்து
எங்க ஊட்டுக்காரியைத் தான்
பார்க்க வந்து இருக்கிறீர்கள்
என்று நினைத்தேன்.
வாருங்கள்.
இன்று அப்பா தினம்.
தாத்தா தினம் என்று ?
சுப்பு தாத்தா.
இங்கே வாங்க
www.subbuthatha72.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
சென்னைக்கு ஒருவேளை ஜூலையில் வரலாம். இன்னும் முடிவாகவில்லை!
Deleteம்ம்ம்.. உங்கள் பயணம் பற்றி கோமதிம்மா பதிவில் தெரிந்து கொண்டேன். இப்போது உங்கள் மூலமும்....
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்தைப் படிச்சுட்டுத் தான் கோமதி அரசுவின் பதிவுக்கே போய்த் தெரிந்து கொண்டேன். :)
Deleteநாம் இருவரும் கிட்டத்தட்ட ஒரே விஷயத்தை பதிவு செய்திருக்கிறோம். நீங்கள் மீனாட்சியை தரிசனம் செய்து விட்டு எழுதி இருக்கிறீர்கள் என்றல் நான் காமாட்சியை தரிசித்து விட்டு பதிவிட்டிருக்கிறேன். என்னவொரு ஒற்றுமை!
ReplyDeleteகாமாட்சியைத் தேடிச் சென்றேன். காண முடியவில்லை! :(
Deleteகோபு ஐயங்கார் கடை இருக்கிறதா என்று அறிவதுதான் முக்கியமா. கூடவே மீனாக்ஷியையும் தரிசித்ததாக இருந்திருக்க வேண்டுமோ .?
ReplyDeleteமீனாக்ஷி தரிசனம் குறித்தும் எழுதி இருக்கேனே! பார்க்கவில்லையா? நன்றி ஐயா!
Deleteதங்கை தரிசனம் முடிந்தவுடன், அண்ணன் தரிசனமும் செய்து விட்டீர்கள்.
ReplyDeleteஅடுத்தமுறை வரும் போது அவசியம் வாருங்கள் வீட்டுக்கு.
கட்டாயமாய் வரணும். :)
Deleteஅட ராமா..... இப்படி ஒரு கதவா? கம்பிக் கதவு போட்டுருந்தால் குறைஞ்சபட்சம் எல்லோருக்கும் கடைசிவரை ஒரு பிடி அன்னம் ஒழுங்காய் கிடைக்குமில்லையா? இந்தப் பயணத்தில் (ஃபிப்ரவரி) கூடக் கதவில்லாமல் இருந்ததேப்பா...........
ReplyDeleteஇது அந்தக் காலத்துக் கதவு! ஆகையால் நீங்க போயிருந்தப்போ உள்பக்கமாய்த் திறந்திருந்து இருக்கலாம். கதவு புதியது அல்ல! :) இன்னொரு முறை செல்லும்போது மேலே ஏறிப் படம் எடுக்கணும். அன்னிக்கு விரட்டிட்டு இருந்தாங்க. தொலைவில் இருந்து எடுத்தது! மழை வேறே! :) நொ.கு.ச.சா.
Deleteநல்ல விவரணம் தங்கள் பயணத்தைக் குறித்துக் கூடவே ஸ்ரீராமுக்குத் தேவையான தகவலும்..ஹஹஹ்
ReplyDelete