Killergee தன்னோட இந்தப் பதிவில் தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுவதைக் குறிப்பிட்டிருக்கிறார். இப்போல்லாம் 3 வயதில் இருந்தே குழந்தைகள் ஆங்கில மொழிக்குப் பழக்கம் ஆயிடறாங்க. அவங்களுக்கெல்லாம் தமிழில் சொன்னாலும் புரியறதில்லை என்பதே உண்மை! முன்னெல்லாம் வெளியே செல்கையில் அல்லது பள்ளிக்குச் செல்கையில் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு இருந்தோம். இப்போல்லாம் பை தான்! யாரும் போயிட்டு வரேன்னு சொல்றதில்லை! சொன்னால் கௌரவக் குறைச்சல். காலை ஆஹாரம் யாரும் சாப்பிடறதில்லை. ப்ரெக்ஃபாஸ்ட் தான் சாப்பிடறாங்க! மதியம் சாப்பாடு கிடையாது! லஞ்ச் தான்! இரவுக்கு டின்னர் தான்.
முன்னெல்லாம் நான் சின்ன வயசா இருந்தப்போவும் டின்னர் என்னும் வழக்குச் சொல் உண்டு. ஆனால் அது குறிப்பிட்ட சில இரவு விருந்துகளையே குறிப்பிடும். பிறந்த நாள் கொண்டாட்டங்கள், அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களை அழைத்துச் சாப்பாடு போடுவதை டின்னர் என்று சொல்வார்கள். ஆங்கில "டின்னர்" வார்த்தையின் "இரவு உணவு" என்னும் பொருளில் அப்போதெல்லாம் சொன்னதாய்த் தெரியவில்லை. எந்த நேரம் விருந்து கொடுத்தாலும் அதை டின்னர் கொடுக்கிறாங்க என்று சொல்வார்கள். ஆங்கிலம் தெரியாத பலராலும் இந்தச் சொல் டின்னர் எப்போது கொடுப்பாங்க என்ற உண்மையான பொருளில் இருந்து மாறுபட்டு மதியம் கொடுக்கும் விருந்தையே கூட டின்னர் என்று சொல்லும் வழக்கம் ஏற்படுத்தப் பட்டது. என் மாமியார், என் கணவரோட அத்தை எல்லாம் மதியம் யார் வீட்டுக்கேனும் விருந்துக்குப் போனால் அவங்க வீட்டுக்கு டின்னருக்குப், (இங்கே "டி" "T" உச்சரிப்பில் வரும். ) போனோம் என்று பெருமையாகச் சொல்வார்கள்.
அதே போல இந்த குட் நைட் என்பதும். பொதுவாக இது வீட்டில் இருப்பவர்கள் இரவு படுக்கச் செல்கையில் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வது என்றாலும் வீட்டுக்கு விருந்தினர் யாரேனும் மாலையில் வந்திருந்து சிறிது நேரம் பேசி விட்டு விடைபெற்றுச் செல்கையில் இரவு பார்க்க முடியாது என்பதால் "குட் நைட்!" என்று சொல்வது வழக்கம். இந்த குட்நைட் சொல்வதையும் ஆங்கிலம் சரளமாகத் தெரியாதவங்க ராத்திரி தான் சொல்லணும்னு நினைச்சுட்டு, அவங்க வீட்டுக்குள் வரும்போதே "குட் நைட்"னு சொல்வது வழக்கம். இப்போதெல்லாம் இதைப் பள்ளியில் முறையாகக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கெல்லாம் ஆங்கில மொழிப் படிப்பு ஆறாம் வகுப்பில் தான் ஆரம்பித்தது. நான் படிச்சப்போ ஃபார்ம் இருந்ததால் முதல் ஃபார்ம் எனப்படும் ஃப்ர்ஸ்ட் ஃபார்ம்! அப்போத் தான் லிட்டில் சில்ரன் கம் டு மீ! ஐ வில் டீச் யூ ஏபிசி! என்று குழந்தைப்பாடல்களே அப்போத் தான் ஆரம்பம்.
ஜாக் அன்ட் ஜில், ஹம்ப்டி டம்ப்டி, ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், மேரி ஹாட் அ லிட்டில் லாம்ப் எல்லாமும் அப்போத் தான் கற்றுக் கொண்டோம். ஆறாம் வகுப்பில் இப்படி இருந்ததே தவிர ஏழாம் வகுப்பில் பாடங்கள் கொஞ்சம் கடுமை தான்! அந்த வருடமே சிறப்புப் பாடப் புத்தகமும் உண்டு! அப்புறமும் ஆங்கில மொழிப் படிப்புக் கடுமையாக இருந்தாலும் ஆங்கில வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகளில் தமிழில் தான் பேசுவோம். என்ன தான் ஆங்கில வகுப்பில் ஆங்கிலத்தில் பேச முயன்றாலும் தாய்த் தமிழ் தான் முன்னணியில் நிற்கும். அதோடு ஒரு சில ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரித்ததும் இல்லை. ரென் அன்ட் மார்டின் ஆங்கில இலக்கணப் புத்தகத்தைப் பல வருடங்கள் (அதாவது கிட்டத்தட்டப் பத்தாம் வகுப்பு வரை) லண்டன் மார்டின் என்றே சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன். :) இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
இப்போவும் ஆங்கில அறிவு குறைச்சல் தான். அப்பு என்னோடு பேசும்போது நிறுத்தி நிறுத்தி ஒவ்வொருவார்த்தையாகப் புரியும்படி பேசும். ஆனாலும் நாங்கள் பேசிக் கொள்வது எங்களுக்குப் புரிகிறது! ஆகவே இது போதுமே என்னும் எண்ணம் எப்போவோ வந்தாச்சு! எங்காவது போனாலும் தமிழ் பேசும் இடங்களிலும், தமிழ் எழுதும் இடங்களிலும் தமிழ் தான் வழக்கு மொழி! வட மாநிலங்கள் சென்றால் மட்டும் ஹிந்தி! மற்றபடி ஆங்கிலப் பிரயோகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தே வருகிறேன்.
தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் எல்லாம் சர்வ சகஜமாக தங்கிலீஷ் வார்த்தைப் பிரயோகங்கள் தான் காண முடிகின்றது. முன்னெல்லாம் பத்திரிகைகள் தமிழை வளர்த்ததாகச் சொல்வார்கள். இப்போதுள்ள பத்திரிகைகள் தங்கிலீஷை வளர்த்து வருகிறது. தொலைக்காட்சி சானல்களிலும் தங்கிலீஷ் மயம் தான்! திரைப்படப் பெயர்களே ஆங்கிலப் பெயர்களோடு வந்து கொண்டிருந்தன. தமிழில் பெயர் வைத்தால் அதற்குச் சலுகை உண்டு என்று அறிவித்ததும் அவங்க இஷ்டத்துக்குப் பெயர் வைக்கிறாங்க! அர்த்தமே இருக்கிறதில்லை! சினிமா பாடல்களில் தங்கிலீஷ் தான்! வர்ணங்களைக் குறிப்பிடுகையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று சொல்வதில்லை. ரெட், க்ரீன், யெல்லோ தான்.
இந்த அழகில் சம்ஸ்கிருதம் கற்றுக்கொண்டாலோ ஹிந்தி கற்றுக் கொண்டாலோ தமிழ் அழிந்து விடும் என்கிறார்கள். முன்னெல்லாம் பள்ளி இறுதி வகுப்புப்பொதுத் தேர்வுக்கு ஹிந்தி மொழிப்பாடத்தில் குறைந்த பட்ச மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று இருந்தது. அப்போதெல்லாம் யாரும் இப்படித் தங்கிலீஷிலோ, ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ பேசிக் கொண்டிருக்கவில்லை! தமிழில் தான் பேசினார்கள். மற்ற மொழிகளை வர விடாமல் செய்ததில் தமிழ் வளர்ந்ததாகவும் தெரியவில்லை! தேய்ந்ததாகவும் தெரியவில்லை! பல்வேறு மொழிகளைச் சேர்ந்த அரசர்கள் தமிழ் மண்ணை ஆண்டிருக்கின்றனர். கன்னடம் பேசும் அரசர்கள், துளு பேசும் அரசர்கள், தெலுங்கு நாயக்கர்கள், மராட்டி பேஷ்வாக்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், முகலாய அரசர்கள் என்று பலரும் ஆண்டு வந்த இந்தத் தமிழ் நாட்டில் தமிழ் இன்னமும் வழக்கில் தான் இருந்து வருகிறது. இத்தனை மொழி பேசுபவர்கள் ஆண்டு வந்தும் தமிழ் அழியவில்லை. மாறாக மாற்று மொழி பேசுபவர்களில் பலரும் தமிழுக்குத் தொண்டு செய்திருக்கின்றனர். செய்தும் வருகின்றனர். ஆகவே தமிழர்களான நாம் தமிழில் பேசுவோம்; தமிழில் பேசுவதை ஆதரிப்போம்.

வாழ்க தமிழ். வளர்க மொழி.
ReplyDeleteநான் பார்த்ததில் பலபேர் காலை, மதிய, இரவு உணவு எல்லாவற்றையும் லஞ்ச் என்றே குறிப்பிட்டே பார்த்திருக்கிறேன்.
அரசியல் வாந்திகள் சமஸ்கிருதத்தை எதிர்க்கக் காரணம் மொழியோ பற்றோ அல்ல!!!
உள்ளே வரும்போதே வணக்கம் சொல்வதுபோல குட்நைட் சொல்வார்கள் என்பது புன்னகைக்க வைத்தது..
ஆமாம், இதிலே நாங்க கிளம்பறச்சே "குட் நைட்" சொன்னால் சிரிப்பாங்க எங்களைப் பார்த்து. நாங்க கொஞ்சம் அ.வ.சி.க் கொண்டே பேசாமல் வருவோம்! :) எனக்கும் மூன்றாவது ஃபார்ம் வரை ஹிந்தி இருந்தது. :)
Deleteநாம் தமிழர் கட்சியில் சேர்ந்துட்டீங்களா? நீங்களும் தமிழ் இலக்கண சுத்தமாக வேறு மொழி கலப்பின்றி பேசிப் பாருங்கள். பைத்தியம் என்ற பெயர் கிடைக்கும்.இவ்வாறு பல மொழிக் கலப்பு இருந்தும் தமிழ் தமிழாகவே நிலைக்கும்.
ReplyDelete--
Jayakumar
கட்சியிலே சேர்ந்தாத் தான் தமிழ்ப் பற்று இருக்கணுமா? சுலபமாப் புரியக் கூடிய சொற்களைக் கூட ஆங்கிலத்தில் சொல்வதைத் தான் கூடாது என்கிறேன். மற்றபடி ஆங்கில வார்த்தைகளைத் தமிழாக்கம் செய்ய முடியாத இடங்களில் அப்படியே விடவேண்டியது தான்! குட் மார்னிங்குக்குப் பதிலாக வணக்கம் அல்லது நமஸ்காரம் சொல்லலாம். "பை" சொல்வதற்குப் பதிலாகப் போயிட்டு வரேன்னு சொல்லலாம். இப்படி எத்தனையோ இருக்கு! :)
Deleteஅழகாக அலசி ஆராய்ந்து எழுதி இருக்கின்றீர்கள் அதற்கு எமது வாழ்த்துகள்
ReplyDeleteஉண்மையில் இன்றைய தமிழ் அழிவுக்கு பத்திரிக்கைகளே ஒரு முக்கிய காரணம் இதில் அரசு கவனம் கொள்ள வேண்டும்.
எனது பதிவை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி
எல்லாம் சரி எனது பெயரை இப்படி Killerjee பிழையாக எழுதி இருக்கின்றீர்களே.... எனது பெயர் KILLERGEE தெய்வகுற்றம் ஏற்பட்டு விடுமோ என்று பயமாக இருக்கின்றது - கில்லர்ஜி
ஹிஹிஹி, மாத்திட்டேன் கில்லர்ஜி! இன்னிக்கு முகநூலிலும் ஒருத்தர் உப்பை உப்புனு சொல்லத் தெரியாமத் தடுமாறுவது பத்தி கே.ஜி. ஜவர்லால் பதிவு போட்டிருக்கார். சிரிப்பு வந்தாலும் கொஞ்சம் கோபமும் வந்தது.
Deleteதமிழர்களான நாம் தமிழில் பேசுவோம்; தமிழில் பேசுவதை ஆதரிப்போம்.
ReplyDeleteதங்கள் சிறந்த பதிவுக்கு எனது பாராட்டுகள்
கூடியவரை எளிய தமிழில் எழுதுகிறேன். ரொம்பவே இலக்கணத் தமிழுக்கோ இலக்கியத் தமிழுக்கோ செல்வதில்லை. படிக்கிறவங்களுக்குப் புரியணும்! :)
Deleteகண்டிப்பா அம்மா ... நல்ல பதிவு ,, நான் நொய்டாவில் வேலை செய்யும் பொழுது பத்து பதினைந்து பேர் தமிழ் எங்கள் தளத்தில் .. மேலாளரை வைய்ய தூய தமிழையே நாடுவோம் :)
ReplyDeleteரொம்பத் தூய தமிழும் பேசிக் கொண்டு காஃபியைக் "குழம்பி"னு சொல்ல முடியலை நாஞ்சில் கண்ணன். அதுவே டீயைத் தேநீர் எனச் சொல்லிடலாம். ஏற்கலாம்! ஏற்கமுடியும். ஒரு சில சொற்களை அப்படியே விட்டு விடணும். :)
Deleteதங்க்லீஷ்... இங்கே ஹிந்தி கலந்த தமிழில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.....
ReplyDeleteஆமாம், என் நாத்தனார் பெண்களெல்லாம் வீடு போச்சா செய்துட்டு பர்த்தன் மாஞ்ச்னா பாக்கி ஹை! என்பார்கள். :)
Deleteதாய்மொழி தமிழ் என்பதை பலர் மறந்தேவிடுகிறார்கள். தொலைக்காட்சி தொடங்கி பலநிலைகளில் ஏற்படுகின்ற தாக்கம் பெரும் விளைவினை ஏற்படுத்துகின்றது.
ReplyDeleteஆமாம், பெற்றோர் தமிழில் பேசினால் குழந்தைகளும் பேசும்!
DeleteYa! what you have written is absolutely correct! ஓ! சாரி ! டி.வியில், சமையல் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேனா அதன் பாதிப்பு. பின்னே, வீட் பிளார் எடுத்துக்கங்க, வாட்டர் ஆடிட் பண்ணி, டோவ் பண்ணிக்கங்க, ரோல் பண்ணுங்க, ஆயில் காய்ந்ததும், டீப் பிரை பண்ணுங்க என்றல்லவா பேசுகிறார்கள்..!
ReplyDeleteநேற்று வெளியில் செல்லும்போது காரில் எப்.எம். ரேடியோவில் ஒரு உரையாடல். அதை கேட்ட என் மகன், இது தமிழ் ரேடியோவா, இங்கிலிஷ் ரேடியோவா? என்றான்..அப்படித்தான் இருந்தது.
இது ஒரு புறம் என்றால், இன்னொரு புறம் அலுவலகங்களில் இண்டெர்வியூ செய்பவர்கள், கூறும் புகார், என்னவோ, பி.இ., எம்.பி.ஏ. என்றெல்லாம் படித்து விட்டு வருகிறார்கள். ஆனால், கம்யூனிகேஷன் மஹா மோசம்! என்பதாகும். எங்கள் நண்பர் ஒருவர், இங்கிலிஷ் இழுக்கும், தமிழ் தடுக்கும் என்பார். அப்படித்தான் இருக்கிறது.
உங்களோட இந்தக் கருத்து நேற்று மாலைக்குப் பின்னர் வந்திருக்கு. பொதுவாக நான் மாலை ஏழு மணிக்கப்புறமா கணினியில் அமருவதில்லை. ஆதலால் முதல்நாள் வந்த கருத்துக்களை மறுநாள் தான் வெளியிடுவேன். இன்று வெளியே சென்றுவிட்டதால் தாமதம். ஆனால் இது ஒன்று தான் வந்திருக்கு! வேறே எதுவும் வரலை.
Deleteஎனக்கும் இங்கிலீஷ் இழுவை, தமிழ் தடவல், ஹிந்தி ஹிம்சை தான்! :) ஏதோ ஒப்பேத்திட்டு வரேன். :)
Deleteஉங்கள் தன்னடக்கம் பாராட்டுக்குரியது!
Deleteஉண்மை சொன்னால் தன்னடக்கம்??? ஹிஹிஹிஹி!
Deleteவீட்லே ஹிந்தி பெரியவரைப் பார்த்துக்கொள்ள நேபாலி, இங்லீஷ்,நான் தமிழ் எல்லா பாஷையும் சேர்ந்து பாஷைக் கொலை நடக்கிறது. வேறு வழியே இல்லை. வெளியில் வந்து விட்டவர்களின் பா,ஷையே மணிப்பிரவாளம்.
ReplyDeleteஆமாம், பல நாடுகளில் வசிப்பவர்களுக்கு மொழி என்பது மணிப்பிரவாளம் தான். என்ன செய்ய முடியும்!
Deleteஎன்னாச்சு என் பின்னூட்டத்திற்கு? வெளியிடப்படவில்லை?
ReplyDeleteவந்த ஒன்றை வெளியிட்டு விட்டேன். வேறே ஏதும் இல்லை! :)
Deleteஆமாம். நம் தமிழ் மக்களுக்கு ஆங்கில மோகம் மிக மிக அதிகம். இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டாலும், முன்பெல்லாம் (4, 5 ஆண்டுகளுக்கு முன்பு கூட) ஏதோ ஓரிரு ஆங்கிலம் பேசப்படும் இப்போது, எல்லாமே தங்கிலீஷ் தான். அதில் பெருமை.
ReplyDeleteநான் வேலை நிமித்தம் (இந்தியா முழுதும் விரட்டி விரட்டி மாற்றல் கிடைக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை-அப்படிப் பட்ட பிழைப்பு) பல மாநிலம் சென்றதில் அறிந்தது இது தான்-தமிழ்நாடு தவிர மற்ற மாநிலத்தினர் ஒருவரை ஒருவர் கண்ட பின் தங்கள் மொழியில் பேசுவது தான்.
ஆமாம், இரு தமிழர்கள் தமிழில் பேசிக் கொண்டதாகச் சரித்திரமே இல்லை! நாங்களும் அநேகமாக வட மாநிலங்களிலேயே சுற்றினாலும் வீட்டில் கட்டாயமாய்த் தமிழ் தான் பேசுவோம். யார் என்ன சொன்னாலும் சரி!
Deleteஒரு உண்மை சொல்ல வேண்டும் குழந்தைகளை அப்படிப்பேசச் செய்வதில் பெற்றொர்களின் பங்கு அதிகம் இருந்தும் நல்ல ஆங்கிலமோ தமிழோ பேசப் படுவதில்லை. அப்படி இருக்கும் போது எல்லாம் கலந்து வருகிறது சில நேரங்களில் தமிழ் வார்த்தைக்கு ஈடான ஆங்கில வார்த்தை வந்து விடும் இதையெல்லாம் பெரிசு பண்ண வேண்டாம் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை முதலில் பார்க்கும்போது குட் மார்னிங்தான் சொல்ல வேண்டும் என்பார். முதன் முதலாக இரவில் பார்த்தாலும் குட் மார்னிங் தான்
ReplyDeleteபெரிசு பண்ணவில்லை. கூடியவரை தமிழில் சொல்லக் கூடியவற்றைத் தமிழிலேயே சொல்லலாம் என்பதே என் கருத்து. வலிந்து ஆங்கிலத்தைப் புகுத்த வேண்டாம் என்பது தான் நான் சொல்வது.
Deleteஆங்கில மோகம் கூட பரவாயில்லை! ஆனால் தங்கிலீஷ் ரொம்ப கொடுமை! உங்களுக்கு சம்ஸ்கிருதம் நன்றாக வருமா? சம்ஸ்கிருத பாடம் வலைப்பூவில் வகுப்பு எடுக்கலாமே!
ReplyDeleteவாங்க சுரேஷ், தட்டுத் தடுமாறி சம்ஸ்கிருதம் படிக்க மட்டும் வரும். சொல்லிக் கொடுக்கவெல்லாம் தெரியாது. ஹிந்தி மட்டும் சுமாராக வரும். இங்கே குடியிருப்பு வளாகத்திலே கூடக் கேட்டாங்க. நான் அடிக்கடி பயணம் செய்வதால் ஒத்துக்கலை! :)
Deleteஇது ஒரு நல்ல பதிவு. தமிழ் நாட்டில் தமிழில் பேசுவது குறைந்ததற்குக் காரணம் தொலைக்காட்சிகள்தான் என்று நான் நினைக்கிறேன். மக்கள் தொலைக்காட்சியில் நிறைய தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தியபின்புதான் மற்ற தொலைக்காட்சிகளும் பொருத்தமான தமிழ் சொற்களை (பரப்புரை போன்றவற்றை) உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். ஆனாலும் தங்கிலீஷில் பேசிப்பழகுவது தமிழை அழிக்கவே செய்யும். நான் அப்போ அப்போ என் குழந்தைகளோடு, யாரு முதலில் தமிழ் கலக்காத வார்த்தை உபயோகப்படுத்துகிறார்கள் என்று பார்க்கலாம் என்று சொல்லி விளையாடுவேன். எதுவும் 5 நிமிடத்துக்குமேல் நீடித்ததில்லை ('நான் உள்பட). இது வருத்தத்திற்கு உரியதுதான். அதுக்காக 'அடுமனை', 'வடி'நீர்' என்று நம்மையே காய்ச்சிக்க வேண்டாம்.
ReplyDeleteஸ்ரீலங்கா தமிழர்கள் ஆங்கிலம் கலக்காமல் பேசுவதை நிறைய தடவை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நம்மைப்போல் போலி மொழி வெறி இல்லை போலிருக்கிறது.
"ஆங்கில "டின்னர்" வார்த்தையின் "இரவு உணவு" என்னும் பொருளில் அப்போதெல்லாம் சொன்னதாய்த் தெரியவில்லை. எந்த நேரம் விருந்து கொடுத்தாலும் அதை டின்னர் கொடுக்கிறாங்க என்று சொல்வார்கள்" - லஞ்ச் என்பது மதியம் என்றும் டின்னர் என்பது இரவு உணவு என்றும் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஹெவியான உணவு டின்னர் என்றும் கொஞ்சம் லைட் உணவு லஞ்ச் என்றும் அழைக்கப்படும். இதை வலம்புரிஜான் அவர்களுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். நம்முடைய தாட்டிலை சாப்பாட்டை (வாழை இலையில் மூன்று சாதங்களும், கூட்டு, கறியமுது, இனிப்பு உடன் சாப்பிடுவது) டின்னர் என்றுதான் அழைக்கவேண்டும்.
நெல்லைத் தமிழன், மக்கள் தொலைக்காட்சிக்கு முன்னரே பொதிகையில் தமிழ் கொஞ்சி விளையாட ஆரம்பிச்சாச்சு. பல ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்களைப் போடுவார்கள். மக்கள் தொலைக்காட்சி எல்லாம் அதுக்குப் பின்னர் தான்.
Deleteவலம்புரி ஜான் எழுதினதை நான் படிக்கலை. ஆனால் மதிய உணவை லஞ்ச் என்று சொல்லியே கேட்டிருக்கேன். இப்போதும் யு.எஸ்ஸில் அது எளிமையான மதிய உணவானாலும் "சிம்பிள் லஞ்ச்" என்றே சொல்கின்றனர்.
Deleteஹிந்தியில் வித்தியாசம் உண்டு. "தாவத்" (dhavath)என்றால் பெரிய விருந்து! கானா (khaana) என்றால் மதியச் சாப்பாடு அல்லது பொதுவாகச் சாப்பாடு. உச்சரிப்பில் வித்தியாசம் உண்டு.
Deleteஹிஹிஹிஹி, தங்கிலீஷுக்கு இது பரவாயில்லை! :)
ReplyDeletenalla pathivu. keralathil pothuvaga malayalamthan pesuvathundu. mallish ippothu athuvum miga miga kuraivuthan. aanaal thamiznatil athigamaga thanglishthan. keralathavar nalla aangilam pesa mudiyavillai enralum thai mozhiyai vittuk kodupathillai. english pesinalum athil thaimozi theriyum. aanal thamizh naattil ippothu pala idangalil aangilamum illai thamizhum illai entru thirisangu nilaithan.
ReplyDeletedinner kurithu neenga sollirukarathu appdiye than. ippothu supper entra varthaiye ubayogathil illai pola therigirathu. ilangai thamizhargal aangila sol kalakaamalaye azhagaga thamiz pesugirargal...paaratavendum avargalai..
வாங்க கீதா(தில்லையகத்து) சப்பர் என்னும் வார்த்தையை இப்போதெல்லாம் புத்தகங்களிலேயே பார்க்க முடிகிறது. ஆனால் டின்னர் என்பதை திரு நெல்லைத் தமிழன் குறிப்பிட்டிருக்கிறாப்போல் கொஞ்சம் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் மதிய உணவு என்றே சொல்கிறார்கள். சப்பர் என்று சொன்னால் இரவு படுக்கப்போகும் முன்னர் எடுத்துக்கொள்ளும் எளிய உணவு என்று பொருள். உதாரணமாக நாம் படுக்கச் செல்லும் முன்னர் எடுத்துக்கொள்ளும் பால், பழங்களைச் சொல்லலாமோ? தெரியவில்லை! :)
Deleteசப்பர் என்னும் சொல்லே யேசு பிரான் கடைசியில் உண்ட உணவைக் குறிக்கும் லாஸ்ட் சப்பர் என்பதிலிருந்து தான் வந்தது என்றும் ஒரு கருத்து இருக்கிறது. :) இதை வைச்சுப் பதிவே எழுதலாம் போல! :)
Deleteபொதுவாக டின்னர் என்றால் அது பெரு விருந்து என்பதையே குறிக்கும் என்று தெரிகிறது. சப்பர் என்பது பெரும்பாலும் விவசாயிகளின் இரவு உணவான கஞ்சியையே குறிக்கும் என்றும் தெரிய வருகிறது.
Delete