முன்னெல்லாம் ஞாயிற்றுக் கிழமை எங்கள் ப்ளாக் படங்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டு போட்டு வந்தேன். அப்புறமா அது மெல்ல மெல்ல விட்டுப் போச்சு. இப்போ இந்த வாரம் அவங்களுக்குப் போட்டியா "திங்கற" கிழமைக்குப் பதிவு போடலாம்னு ஒரு எண்ணம். அதுவும் இது நேயர் விருப்பம். நம்ம சிநேகிதி நியூசியில் வசிக்கும் ஜெயஶ்ரீ நீலகண்டன் அவங்க மிளகாய்த் தொக்கு செய்முறை பத்தி கேட்டிருக்காங்க! எங்க பொண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அப்புறமா அவளால் அது சாப்பிட முடியாமல் போச்சு! ஆகவே வீட்டில் செய்யறதில்லை. எனக்குக் காரமே ஒத்துக்காது. ரங்க்ஸுக்குப் பிடிக்கவே பிடிக்காது! ஆதலால் மிளகாய்த் தொக்கே பண்ணி வருஷங்கள் பல ஆகி விட்டன. இதுக்குத் தேவையான பொருட்கள் முதலில் பார்ப்போம்.
பச்சை மிளகாய் கால் கிலோ
புளி ஒரு எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கேற்ப
வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது (வெல்லம் கட்டாயம் தேவை)
நல்லெண்ணெய் ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம் இருக்கலாம்.
தாளிக்க
கடுகு, உ,பருப்பு, பெருங்காயம்
முதலில் பச்சை மிளகாயை நன்கு கழுவி நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணம் நல்லெண்ணெயில் இருந்து அரைக் கரண்டி நல்லெண்ணெயை அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாயைப் போட்டு நன்கு சுருள வதக்கவும். மிளகாய் நன்கு வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும். புளியைக் கொஞ்சம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். வதக்கிய மிளகாயோடு உப்பையும் ஊற வைத்த புளியையும் சேர்த்து அரைக்கவும். ஒரு கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டு நன்கு அரைக்கவும். பின்னர் கரண்டியாலேயே அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். (கை எரியும் கையால் தொட்டால்)
பின்னர் மிளகாய் வதக்கிய அதே கடாயில் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் போதவில்லை போல் தோன்றினால் இன்னும் ஒரு கரண்டி ஊற்றலாம். நன்கு எண்ணெயில் வதங்கணும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டுப் பொரிந்ததும் உளுத்தம்பருப்புச் சேர்க்கவும். பெருங்காயத் தூள் அல்லது கட்டிப் பெருங்காயம் ஊற வைத்தது சேர்க்கவும். மிளகாய் வதக்கும்போதே கூடப் பெருங்காயத்தையும் பொரித்துச் சேர்த்துக் கொண்டு வதக்கிய மிளகாயோடு அரைக்கலாம். கடுகு, உ.பருப்பு தாளித்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறவும். மிக்சி ஜாரில் நீர் விட்டுக் கரைத்திருந்தால் அதையும் ஊற்றலாம். நன்கு கிளறும்போது கெட்டியாகி விடும். நன்கு கெட்டிப் பட்டு வரும் சமயம் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் சேர்த்துக் கிளறியதும் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். அப்போது கீழே எடுத்து ஆற வைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். தோசை, சப்பாத்தி, மோர் சாதம் போன்று எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். வெல்லம் போடாவிட்டால் காரம் அதிகமாகத் தெரியும்.
வெல்லம் போட்டாலுமே சாப்பிட்டு முடித்ததும் அடி நாக்கில் ஒரு தீயுணர்வு (எ)தெரியும்!! சில நாட்களுக்கு முன்னர் கூடச் செய்தோம். எனினும் மிளகாயை மிக்சியில் அரைப்பதில்லை. எனக்கு மிளகாய் உருவமாக வேண்டும்!
ReplyDeleteவெல்லம் கொஞ்சம் அதிகமாப் போட்டுப் பாருங்க. தெரியாது. அதோடு நீங்க அரைக்கிறதில்லை என்பதாலும் தெரியலாம்.
Deleteநான் வெல்லம் போட்டதில்லை!!
Deleteஇதுக்குக் கட்டாயமா வெல்லம் சேர்க்கணும். இல்லைனா வயிறு பிச்சு வாங்கும்! :( எனக்கும் வெல்லம் போடுவது பிடிக்காது தான். ஆனால் இதில் கட்டாயமாப் போட்டுடுவேன். ராஜஸ்தான் மிளகாய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கீங்களா? :)
Deleteநாங்களே எதிர்பார்க்காத வகையில் எங்கள் பிளாக்கில் சமையல் பகுதிக்குத்தான் நிறைய வாக்கு விழுந்திருக்கிறது!!
ReplyDeleteஆமாம், சாப்பிடலாம் வாங்கனு தனி வலைப்பக்கம் திறந்து கூப்பிட்டாலும் இங்கே எழுதும் குறிப்புகள் தான் அதிக அளவில் வரவேற்புப் பெறுகின்றன.
Deleteஎன் அம்மா பச்சை மிளகாயையும் சிறிது உப்பையும் சேர்த்து நசுக்கிக் கொண்டு மோர் சாதத்துக்குத் தொட்டுக்க கொள்வார். "இப்பல்லாம் பச்சை மிளகாய்ல காரமே இல்ல" என்பார்!
ReplyDelete:))
ஹாஹா, ஒரு காலத்தில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு நசுக்கிப் பழைய சாதத்துக்குத் தொட்டுக் கொண்டது உண்டு. ஆனால் அந்த மிளகாயில் உண்மையிலேயே காரம் இருக்காது. நாட்டு மிளகாய் என்பார்கள். சின்னச் சின்னதாக இருக்கும். காரமே இருக்காது. அதில் பிஞ்சு மிளகாயில் தான் எங்க வீட்டில் புளி மிளகாய் போடுவாங்க.
Deleteதஞ்சாவூர் பக்கம். சின்ன மிளகாய் எல்லாம் இல்லை. இளம் பச்சையில் நீளமான மிளகாய்.
Delete:))
நீங்க புரிஞ்சுக்கலை, அல்லது நான் புரியறாப்போல் சொல்லலை! நீள மிளகாய்க் குடும்பம் தான். ஆனால் ஓர் குறிப்பிட்ட நீளத்துக்கு மேல் வளராது. அதை நாட்டு மிளகாய் என்பார்கள். இப்போவும் இங்கே கொஞ்சம் அரிதாகக் கிடைக்கிறது. அதை வைத்துத் தான் நாரத்தங்காய்ப் பச்சடி செய்தேன். மிளகாயில் காரமே இருக்காது. கும்பகோணத்திலேயே கிடைச்சுப் பார்த்திருக்கேன். ஆகவே தஞ்சைப்பக்கமும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
DeleteathE athE.....sriram atharku engal veetil vandikaran chatni enru solvathundu. athil geetha akka solli irupathu pol chinna vengayam potum naan seivathudnu...pazhaiya sathathirku..super combo
Deletegeetha
sorry en tamil font strike il irupathal ippadi adikiren...poruththuk kollavum
காரம் அதிகமாக இருக்கும் என்பதால் எனக்கு வேண்டாம்! :) பிடித்தவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்!
ReplyDeleteராஜஸ்தானின் மிர்ச்சி அசார் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீங்களா? :)
Deleteபச்சை மிளகாய் பேசிக்கலி ஒரு anti inflammatory . வலி நிவாரணி.
ReplyDeleteஎனினும் it can ulcerate inner membranes of intestines.
புளி க்கு பதிலாக எலுமிச்சை பழம் சேர்த்தால் நன்றாக இருக்குமே !!
சமயத்துக்கு சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.
கூட கத்திரிக்காய் வதக்கல் இருந்தால் ஜோர்.
என்னிக்காவது ஒரு நாளைக்கு ஸ்ரீராம் வீட்டிலே செஞ்சு வச்சுண்டு தாத்தா வாங்கோ அப்படின்னு கூப்பிடாமயா இருக்கப்போறார் ?
சுப்பு தாத்தா.
பச்சை மிளகாயில் ஒரு சில சத்துக்கள் இருப்பது உண்மைதான். ஆகவே தினம் அரைப் பச்சை மிளகாயாவது சேர்ப்பேன். குடமிளகாயிலும் சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இந்த மிளகாய்த் தொக்குக்கு எலுமிச்சைச் சாறு அவ்வளவாக ருசியாக இருக்காது. புளி சேர்த்தால் தான் வாசனை, சுவை எல்லாமும். :)
Deleteஎலுமிச்சை சேர்த்தால் இதன் மீது எழும் இச்சை குறையலாம்!!
Deleteபச்சை மிளகாய் தொக்கா, கத்தரிக்காய் வதக்கலா? எதைச் செய்து வைத்துக் கொண்டு கூப்பிடணும் சுப்பு தாத்தா? செய்துட்டாப் போச்சு!
:))
ஆமாம், எலுமிச்சை சேர்த்தால் சுவை குறையும்.
Deleteநாங்களும் அரைப்பதில்லை. அம்மியில் தட்டிப் போடுவதுண்டு. புளி மிளகாய்
ReplyDeleteசாப்பிட்டு பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. சுவை நினைவு இருக்கிறது.
ஆனால் மிளகாய் அப்ப எல்லாம் கூட இத்தனை காரமாக இருந்ததா நினைவில்லை.
இந்தத் தொக்குக்கு நன்னாவே அரைச்சுடுவோம் வல்லி. ஊறுகாய் மற்றும் மிளகாய்ப் பச்சடி எனில் காம்பை எடுத்துட்டு இரண்டாகக் கீறி விட்டுச் சேர்ப்போம். மிளகாய் இப்போக் கிடைப்பது எல்லாமே ஹைப்ரிட் எனப்படும் கலப்பினம் தான். அரிதாக நாட்டு மிளகாய் எப்போவானும் வருது.
Deleteஇதை சப்புக்கொட்டிண்டு சாப்பிட்டது போக இப்போதெல்லாம் ப.மிளகாய் என்றாலே பயமாக இருக்கிறது
ReplyDeleteநாட்டு மிளகாய் கிடைத்தால் செய்யலாம்.
Deleteஎனக்கு இஞ்சிப்புளியே காரம்னு கொஞ்சமா தொடுவேன், இதுல மிளகாயா?.
ReplyDeleteஇஞ்சிப் புளியையும் பச்சடி பதத்துக்குச் செய்தால் சாப்பிட முடியும். தொக்காகச் செய்தால் கொஞ்சம் காரமாகத் தான் இருக்கு!
Deleteநானும் செய்வேன். ஆனால் மிளகாயை அரைப்பதில்லை. வெல்லமும் போடுவேன். தொக்கு என்பதால் அரைக்க வேண்டும் போலிருக்கிறது. தோசை, இட்லிக்குத் தொட்டுக்கொள்ளும் போது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுவோம். அப்படியும் நான் அந்த மிளகாயை சாப்பிட மாட்டேன்.
ReplyDeleteஅடுத்தமுறை அரைத்துப் பார்க்கிறேன்.
தொக்குன்னா அரைச்சுட்டுத் தான் செய்யணும். தக்காளித் தொக்கு கூடத் தக்காளியை வதக்கி அரைச்சுடுவேன். :)
Delete////ராஜஸ்தானின் மிர்ச்சி அசார் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீங்களா? :)////
ReplyDeleteஇல்லைம்மா.. எப்படி செய்யறதுன்னு சொல்லுங்க..
போடறேன். எங்கே உங்களை ரொம்ப நாட்களாக/மாதங்களாகக் காணோம்?
Deleteஇருக்கேனே இங்கே..! :)!!. முன்போல் தீவிரமாக இல்லை...சில பிரச்னைகள்.. சீக்கிரம் சரியாயிடும்னு நினைக்கறேன்!..
Deleteஉங்களுக்குத் தெரியாத, சமையல் செய்து பார்த்திராத ஏதாவது இருந்தால் எழுதுங்கள்.
ReplyDeleteகற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு! நிறையவே இருக்கு! :)
Deleteengal veetil engal style (kerala) puli inji seivom athil pachai milagai potu. araikkaamal...ellaa kalyanangalilum ithu kandipaga irukkum.
ReplyDeletegeetha : puLimilagai entrum , keralathu style il puli inji entru seiyum pothum milagai potu...
neenga sollirupathu pola araithum, araikamalum seivathundu. vellam kandipaga undu...
ellavatrirkum nalla combo.
புளி இஞ்சி பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்துப் புளிக்கரைசலில் பச்சடி போலவும் செய்வேன். வதக்கிப் புளியோடு சேர்த்து அரைத்துத் தொக்காகவும் செய்வேன். பச்சை மிளகாய்க்குப் பதிலாக மி.வத்தலும் போடுவது உண்டு. (எப்போவானும், பச்சை மிளகாய் குறைவாக இருந்தால்)
Delete