எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 14, 2016

நாரத்தங்காய் சாதமும், பச்சடியும் செய்முறை!

நேயர் விருப்பத்துக்கு ஏற்ப நாரத்தங்காய்ப் பச்சடி மற்றும் நாரத்தங்காய்ச் சாதம் குறித்த குறிப்புகள் கீழே!

நார்த்தங்காய் க்கான பட முடிவு

நாரத்தங்காய்ப் படம் தினகரன் பத்திரிகை கூகிளார் வாயிலாக நன்றி.

நான்கு நபர்களுக்கான நாரத்தங்காய்ச் சாதம் செய்யத் தேவையான பொருட்கள்

நாரத்தங்காய் 2 (சாறு நிறைய இருந்தால் ஒன்றே போதும்.)

தாளிக்க நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு இரண்டு டீஸ்பூன்
உ.பருப்பு இரண்டு டீஸ்பூன்
க.பருப்பு இரண்டு டீஸ்பூன்
வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் நான்கு (பொடியாக நறுக்கவும்)
கருகப்பிலை
பெருங்காயம் அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சமைத்த சாதம் மூன்று கிண்ணம் அல்லது ஒரு கிண்ணம் அரிசியைக் களைந்து பொலபொலவென்று சாதமாக வடித்துக் கொள்ளவும்.

சமைத்த சாதத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து தேவையான உப்பைச் சேர்த்துக் கொண்டு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும். நாரத்தங்காயை இரண்டாக நறுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். விதைகளை நீக்கிவிட்டுச் சாறை மட்டும் சாதத்தில் ஊற்றி நன்கு கலக்கவும். ஒரு வாணலியில் மிச்சம் உள்ள நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு எண்ணெயைச் சூடு பண்ணவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டுப் பொரிந்ததும், பருப்பு வகைகளைச் சேர்த்து வேர்க்கடலையையும் சேர்க்கவும். எல்லாம் நன்கு பொரிந்ததும் பச்சைமிளகாய், கருகப்பிலையைச் சேர்க்கவும். இந்தத் தாளிதத்தைக் கலந்து வைத்திருக்கும் சாதக் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். ஒரு பத்து நிமிஷம் வைத்திருந்து விட்டுப் பின்னர் பரிமாறவும்.

நாரத்தங்காய் பித்தமான வயிற்றுக்கும், வாய்க்கும் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். எப்படிப் பட்ட விருந்து சாப்பிட்டாலும் கடைசியில் ஒரு துண்டு நாரத்தங்காயை வாயில் போட்டுக் கொண்டால் ஜீரணம் ஆகி விடும். இனி நாரத்தங்காய்ப் பச்சடி.

இதைக் குறைந்த பட்சமாகப் பத்து நாட்களாவது வைத்திருக்கலாம் என்பதால் உங்கள் தேவைக்கேற்பக் காய்களையும், புளி போன்ற பொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு சாறுள்ள நாரத்தங்காய் பொடியாக நறுக்கவும். சாறு இருக்க வேண்டும். விதைகளை மட்டும் நீக்கவும். தனியாக வைக்கவும்.
புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து ஊற வைக்கவும். புளியைக் கரைத்துப் புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

தாளிக்க நல்லெண்ணெய் (இதுக்கெல்லாம் நல்லெண்ணெய் தான் நன்றாக இருக்கும்.) ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் எட்டிலிருந்து பத்து வரை (அவரவர் காரத்துக்கு ஏற்ப) பொடியாக நறுக்கலாம் அல்லது இரண்டாகக் கிள்ளிப் போடலாம். இரண்டாகக் கிள்ளிப் போட்டால் நாரத்தங்காய்ச் சாறிலும், புளியிலும் ஊறிக்கொண்டு மோர் சாதத்துடன் நன்றாக சுவையாக இருக்கும்.
பெருங்காயம் பொடி எனில் ஒரு டீஸ்பூன் கட்டி எனில் ஒரு சின்னத் துண்டு
மஞ்சள் பொடி
உப்பு தேவையான அளவு

கல்சட்டி அல்லது வாணலியைக் காய வைத்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டுப் பொரிந்ததும், வெந்தயம் பச்சை மிளகாய் சேர்க்கவும். பெருங்காயம் போடவும். மஞ்சள் பொடி போட்டுக் கொண்டு நாரத்தங்காய்த் துண்டங்களைப்போட்டு நன்கு வதக்கவும். நாரத்தங்காய் நன்கு வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி ஜலத்தைச் சேர்க்கவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.  நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது கீழே இறக்கி வைக்கவும். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசை, சப்பாத்தி, மோர் சாதம் போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும். துவையல் சாதம், மோர்க்குழம்பு போன்றவற்றோடும் சாப்பிடலாம்.

நேத்தே பண்ணினதாலே படங்கள் எல்லாம் எடுத்து வைச்சுக்கலை. இனி செய்தால் படம் எடுத்துப் போடறேன். :)

12 comments:

  1. நானே சுலபமாக செய்திடலாம் போலயே...? இதோ புறப்படு விட்டேன் பென்சர் ப்ளாசாவுக்கு நாரத்தங்காய் வாங்குவதற்கு.

    ReplyDelete
    Replies
    1. நாரத்தங்காய் அங்கே எல்லாம் கிடைக்குதா என்ன????????

      Delete
  2. //நேத்தே பண்ணினதாலே படங்கள் எல்லாம் எடுத்து வைச்சுக்கலை. இனி செய்தால் படம் எடுத்துப் போடறேன். :)//

    இது வழக்கம்தானே!!!

    எ.ப சாதம் போலவேதான் இருக்கிறது நாரத்தை சாதம். எ.ப சாதத்தில் வெந்தயப்பொடியும் அளவாய்ச் சேர்ப்போம். இங்கும் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது.

    பச்சடி ஒருமுறை செய்து பார்க்க வேண்டும். சாதமும்தான். நாரத்தங்காய் கிடைக்கட்டும்... புகுந்து விளையாடி விடுவோம்! மாம்பலம் செல்லும்போது வாங்கி வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. //இது வழக்கம்தானே!!!//

      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கேசரி படம் போட்டிருக்கேன் இல்ல! அப்புறமா என்னவாம்? இது அவ்வளவு முக்கியமாத் தெரியலை. அதனால் படம் எடுக்கலை! அப்புறமா எல்லோரும் கேட்கவும் பதிவிட்டேன். படம் இல்லை! :)

      Delete
  3. அருமை, நாங்களும் செய்கின்றேம்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க!

      Delete
  4. நாரத்தங்காய் ருசி பிடித்தவர்களுக்குத்தான் இந்த சாதம் என்று நினைக்கிறேன். எலுமிச்சை சாதம் போல இது இருக்காது, இல்லையா? நாரத்தங்காய் புளிப்பாகவும் இருக்காது, சாத்துக்குடி போல தித்திப்பாகவும் இருக்காது. அதனால் இந்த வித்தியாசமான ருசி பிடிக்க வேண்டும். எனக்கு இப்படித் தோன்றுகிறது.
    நாரத்தை பச்சடியும் இப்படித்தான் இருக்கும். கொஞ்சம் வெல்லம் போடுவார்களோ?
    இரண்டையுமே இதுவரை சாப்பிட்டதில்லை. நானாக இப்படி இருக்கும் என்று நினைத்து எழுதுகிறேன்.
    கேசரி நன்றாக இருக்கிறது. அடுத்தமுறை நாங்கள் வரும்போது இதே மென்யூ இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நாரத்தங்காயிலும் புளிப்பு உண்டு. ஜூஸாகக் குடிச்சுப் பாருங்க, தெரியும். அதோடு நாரத்தங்காய் வயிற்றின் ஜீரண சக்தியை மேம்படுத்தும். பல்வேறு நோய்களுக்கும் அரு மருந்து! என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் போய்ப் பாருங்க! நாரத்தங்காயின் பயன்கள் குறித்துத் தெரிய வரும்.

      Delete
  5. நார்த்தங்காய் இங்கே கிடைக்குமா எனப் பார்க்க வேண்டும். நார்த்தங்காய் பச்சடி செய்கிறேனோ இல்லையோ, சாதம் செய்துவிடலாம்!

    ReplyDelete
    Replies
    1. நாரத்தங்காய் இங்கேருந்து யாரானும் விதை எடுத்துப் போய் அங்கே போட்டிருந்தால் உண்டு. பம்ப்ளிமாஸ் கிடைக்கும். கொளுமிச்சங்காய் கிடைக்கும்.

      Delete
  6. very same recipe akka....nhaarththai sadham nan summa oru trial entru seithu parka veetil ellorukum pidichu pochu. enave athuvum veetu recipe il ontragip ponathu. maamiyaridam narthai pachadi katruk konden. athe pontru oru uravinar orange tholai thoora eriyamal ithe pontru seivar. athuvum seivathundu. narthai pachadiyilum, orange thokku or pachadi athilum vellam serpathundu engal mamiyar/uravinar.

    geetha

    ReplyDelete
    Replies
    1. எனக்குச் சின்ன வயசிலே இருந்து நாரத்தங்காய் சாதம் பழக்கம். அம்மா பண்ணிப் போட்டிருக்கார். எலுமிச்சைச் சாதத்தை விட இது தான் ரொம்பப் பிடிக்கும். ஆரஞ்சுத் தோல் பச்சடி, துவையல் எல்லாம் என்னோட சாப்பிட வாங்க பக்கத்திலே போட்டிருக்கேன். :)

      Delete