எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 13, 2016

அம்பியின் விஜயம்!

நேற்று மதியம் சுமார் மூன்றிலிருந்து நான்குக்குள் இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு. அடுப்பில் பாலை வைச்சுட்டுக் காவல் காத்துக் கொண்டிருந்தேன். ரங்க்ஸ் எடுக்கிறதாத் தெரியலை. சரினு வந்து எடுத்தால் அந்தப் பக்கம் ரங்க்ஸும் எடுத்திருக்கார். கூப்பிட்டவர் என்னிடம் பிரபலமான பப்ளிகேஷன்ஸ் பெயரைச் சொல்லி அங்கிருந்து கூப்பிடுவதாகச் சொல்லவும். நாம தான் சந்தேகப் பிராணிகளாச்சே! சந்தேகம் ஜனித்து விட்டது. ரங்க்ஸுக்கும் ஏதோ விஷயம்னு புரிஞ்சது. நீ ஃபோனை வை, நான் பேசறேன்னு சொன்னார். எதிர்முனையில் பேசறவர் மேலும் மேலும் பேசினார். என்னோட எழுத்துக்களைப் புத்தகமாய்ப் போட ஒரு லக்ஷம் தரதாகச் சொல்ல ரங்க்ஸ் விடவில்லை. நீங்க பணமே தர வேண்டாம். அந்தப் பணத்தை வைச்சுக் கண்ணன் கதைகளைப் புத்தகமாப் போட்டு வியாபாரம் பண்ணுங்கனு ஒரே போடாப் போட்டுட்டார்.

நானும் கவனமாப் பேசுங்கனு சொல்லிட்டுப் பாலைப் பார்க்கப் போயிட்டேன். எதிர்முனையில் இருந்தவருக்கு என்ன சொல்றதுனு புரியாமல் மறுபடி என்னோடு பேசணும்னு சொல்ல நான் உடனே பாலை இறக்கி வைச்சுட்டு ரங்க்ஸ் கிட்டேருந்து தொலைபேசியை வாங்கி எதிர்முனையில் இருந்தவரை நீங்க யாரு? எங்கிருந்து பேசறீங்க? என்னோட வீட்டு எண் எப்படிக் கிடைச்சதுனு கேட்டேன். அப்போத் தான் முகநூலில் மோகன் ஜி வேறே செய்தி அனுப்பி இருந்தார். ஒருவேளை அவரா இருக்குமோ! ஆனால் அவர் இப்படி எல்லாம் பேச மாட்டார். அவர் குரல் மாதிரியும் இல்லை. ஆனாலும் தெரிந்த குரல் தான்! எங்கேயோ எப்போதோ கேட்ட குரல்! மேலும் மோகன் ஜிக்கு என்னோட அலைபேசி எண் தான் தெரியும்.

ஆனாலும் வந்தவர் விடாமல் பேசிக் கொண்டே போக மூளை கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்ய ஆரம்பித்தது. அதற்குள்ளாக எதிர்முனையில் இருந்தவருக்கே போர் அடிச்சதோ என்னமோ, "நான் தான் அம்பி!" என்றாரே பார்க்கலாம். என்ன அம்பியா? குரல் பார்த்தால் அம்பி மாதிரி இல்லையே என்றேன். அப்புறமாச் சத்தியம் செய்யாத குறையாய் நான் அம்பிதான் என்று பல நிரூபணங்கள் செய்துட்டு நாளைக்குக் குடும்ப சமேதரா உங்க வீட்டுக்கு வரேன். விலாசம் கொடுங்கனு கேட்டு வாங்கிக் கொண்டார்.  காலை ஆகாரம் வேண்டாம், சாப்பாடு வேண்டாம்னு எக்கச்சக்க பிகு! அட, அம்பியே நீங்க மாப்பிள்ளை ஆகிப் பத்து வருஷம் ஆகப் போகுது. இப்போப் போய் மாப்பிள்ளை பிகு பண்ணினால் மாமனாரே வரவேற்க மாட்டாரேனு மனசிலே நினைச்சுண்டு சரினு சொன்னேன்.

நேத்தேக் கடைக்குப் போய் நல்ல பச்சரிசியாக வாங்கிக் கொண்டோம். இன்று காலை வைகையில் சுமார் பத்து மணி அளவில் வருவதாக அம்பி சொல்லி இருந்தபடியால் எங்களோட காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு அம்பியோட விருப்ப உணவான கேசரியைச் செய்து முடித்தேன். இட்லி எல்லாம் வேண்டாம் என்கிறாங்க. அப்படியே வேணும்னாலும் மாவு இருப்பதால் வந்ததும் செய்து கொடுக்கலாம் என்னும் எண்ணம். ஆகவே கேசரியைச் செய்துட்டு உட்கார்ந்ததுமே சிறிது நேரத்தில் குடும்ப சமேதராக அம்பி ஆஜர். அம்பியோட இத்தனை வருஷப் பழக்கத்தில் அவங்களோட கல்லிடைக்குறிச்சி வீட்டுக்கு மட்டும் நான் ஒரே ஒரு முறை ரங்க்ஸோடு போயிருக்கேன். பெண்களூரில் இருந்தப்போப் போனதில்லை. அம்பியும் பெண்களூரு-சென்னை என்று ஷட்டில் அடிச்சாலும் என்னை வந்து பார்த்தது இல்லை. அந்த சுபயோக சுப முஹூர்த்தம் இன்று காலை வாய்ச்சது.

வழக்கம் போல் கீழே உள்ள உணவு விடுதியிலிருந்து சூடான வடை வாங்கப் போன ரங்க்ஸுக்கு ஆறிப் போன வடையையே கொடுத்து அனுப்பிட்டாங்க. பரவாயில்லைனு கேசரியோடு வடையை வைச்சுக் கொடுத்தேன். சாப்பிட்டுக் கொண்டு கூடவே பத்து வருஷக் கதைகளைப் பேசிக் கொண்டு இருந்தோம். அப்புறமா அவங்க நம்ம ரங்குவைப் பார்க்கணும்னு சொன்னதாலே கோயிலுக்குச் சீக்கிரமாப் போங்கனு சொல்லி அனுப்பி வைச்சோம். போகும் முன்னர் மதியம் சாப்பாடு குறித்துக் கேட்டுக் கொண்டேன். பல்வேறு அலைச்சல்களினால் வயிறு கொஞ்சம் பிரச்னை என்றார்கள். ஆகவே நாரத்தங்காய் சாதம் செய்து மிளகு ரசம் வைக்கிறேன் என்று சொல்லி விட்டேன். வெள்ளைப் பூஷணிக்காய் இருந்தது. கூட்டுச் செய்தேன். இன்னிக்கு மாதாந்திர மின் வெட்டு என்பதால் மின்சாரம் இல்லை. கூட்டு என்பதை முன் கூட்டியே முடிவு செய்யாததால் அரைச்சு வைச்சுக்கலை! எப்படியோ சமாளித்தேன்.  சாப்பாடு தயார் ஆனது.

ஒரு மணி போலக் கோயிலில் இருந்து வந்தாங்க. வந்ததும் சாப்பாடு போட்டேன். நாரத்தங்காய் சாதம் சாப்பிட்டதே இல்லைனு ரசிச்சுச் சாப்பிட்டாங்க. நாரத்தங்காய்ப் பச்சடியும் செய்திருக்கேன்னு அதையும் போட்டேன். ரொம்பவே பிடிச்சது. வயிற்றுக்கும் நல்லது. பின்னர் சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் பேசிக் கொன்டிருந்து விட்டுத் தஞ்சை செல்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றனர். இப்போத் தஞ்சையில் இருப்பாங்க. அம்பி அமெரிக்காவின் சீதோஷ்ணத்தில் கறுத்துப் போயிருக்கிறார் என்பது என் எண்ணம். முன்னிருந்த கலகலப்பும் குறைந்திருக்கிறது. குடும்பப் பொறுப்பு மட்டுமில்லாமல் பல்வேறு அனுபவங்களும் காரணமாக இருக்கலாம். இன்னும் பேச முடியவில்லை என்ற குறை இருக்கத் தான் செய்தது. ஆனால் அவங்க நாளை சென்னை திரும்ப வேண்டும். ஆகவே மனமில்லாமல் தான் விடை கொடுத்து அனுப்பினேன்.  என்னென்னவோ பேசணும், கத்திரிக்காய் சமைத்துக் கிண்டல் செய்யணும்னு நினைச்சதெல்லாம் செய்ய முடியலை! :) அம்பியும் மீண்டும் முன்னைப் போல் வலைஉலகில் பங்கெடுப்பார்னு தோணலை! :(

அம்பிக்காகச் செய்த கேசரிப் படம் கீழே!







20 comments:

  1. கடைக்குப் போய் நல்ல பச்சரிசியா வாங்கினீங்களா? அப்போ அதுவரை வீட்டில் இருந்தது நல்ல பச்சரிசி இல்லையா? அல்லது வாய்வுத் தொந்தரவுன்னு புழுங்கலரிசி சமைக்கறீங்களா!

    அம்பி என்பது தக்குடுவின் மூத்த சகோதரார்தானே?

    நாரத்தங்காய் சாதம்? அது எப்படி? லிங்க் கொடுக்காமல் சுருக்கமாகச் சொல்லவும்!

    :)))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாங்க எங்களுக்காகச் சமைப்பது பாஸ்மதி அரிசி இல்லைனா புழுங்கல் அரிசி! பலருக்கும் பாஸ்மதி அரிசியில் சாம்பார், ரசம், மோர் பிடிக்கிறதில்லை. அதனால் யாரானும் சாப்பிட வந்தால் பொன்னி பச்சரிசி வாங்கி வைச்சுப்போம்.

      Delete
    2. நாரத்தங்காய் சாதமும், பச்சடியும் விரைவில் எழுதறேன்.

      Delete
  2. Aha kesari das vijayam. Kesariyum pramadham!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தி.ரா.ச.சாரின் பொண்ணு கல்யாணத்தில் அம்பியைப் பார்த்தது. அப்புறமா நேத்தித் தான் பார்த்தேன்.

      Delete
  3. அம்பி பதிவர் என்று அறியும் சந்திப்பு வாழ்த்துகள்
    ஏதோ டிவியில் நாடகம் பார்த்தது போன்ற உணர்வு....

    ReplyDelete
    Replies
    1. அம்பி 2010 ஆம் ஆண்டு வரை பிரபலமான பதிவர். இப்போதெல்லாம் எழுதுவதில்லை. என்றாலும் தொடர்பில் இருக்கிறார். பத்து வருட நட்பு!:)

      Delete
  4. அருமை, அந்த நாரத்தங்காய் சாதமும், பச்சடியும் குறிப்பு விரைவில் கொடுங்கள். அப்புறம் அந்த இனிப்பு பசை சாப்பிட்ட அப்புறம் பேசினாரா சொல்லவில்லையே. கேசரி படம் அருமை. வாணலியோடு பார்சல் அனுப்பவும்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பித்தனின் வாக்கு, இனிப்புப் பசை? நீங்க வரச்சே நெய்யே விடாமல் அப்படியே பண்ணிடுவோம். இதிலே சுத்தமான வெண்ணெய் (வீட்டில் எடுத்த வெண்ணெய்) காய்ச்சின நெய்யாக்கும் விட்டிருக்கேன். கேசரியைச் சுத்திப் பாருங்க நெய் கசிஞ்சு வந்திருக்கிறது தெரியும். :)

      Delete
    2. ஆமாம் நெய் தொக்கி நிக்குது, அருமை. எங்க அம்மாவும் இப்படித்தான் நெய் சேர்ப்பார்கள். அவங்க மைசூர்பா மற்றும் கேசரிக்கு விடும் நெய்யைப் பார்த்தாலே, நாவு ஊறும். நன்றி.

      Delete
  5. எங்கே! அம்பி தொலைபேசி, அலைபேசி எண்ணே கொடுக்கலை! அவர் தொடர்பு கொண்டால் சொல்றேன். :)

    ReplyDelete
  6. பதிவைப் படித்துமுடிக்கும்போது எங்களுக்கும் ஏதோ மனதில் ஓர் ஏக்க உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, அதுவும் நீங்க அம்பி முன்னால் இருந்தப்போப் பழகி இருந்தால் நிச்சயம் மாற்றங்களும் தெரிந்திருக்கும். எங்க மனதிலும் வருத்தமும் ஏக்கமும் இருந்தது.

      Delete
  7. அடடா. அம்பி வந்திருந்தாரா. அட்லாண்டா போயே அம்பியைப் பார்க்க முடியவில்லை. அத்தனை கலகலப்பும் எங்க போச்சு. கேசரியாவது ருசி மாறாமல் சாப்பிட்டாரா.
    அவரும் சீதாவும் வீட்டுக்கு வந்தது நினைவுக்கு வருகிறது. கூகிள் ப்ளஸ்ஸில் பார்க்க முடிகிறது சிலசமயம். குடும்பத்தோடு நன்றாக இருக்கட்டும்.

    கீதாவின் அன்புக்கை கொடுத்த சாப்பாட்டில் அம்பி வயிறு சரியாகி இருக்கும் மா.

    ReplyDelete
    Replies
    1. உங்களைச் சந்திக்க முடியாமல் போனது குறித்து இருவரும் வருத்தப்பட்டாங்க வல்லி. ஜி+இல் தான் நானும் அவ்வப்போது அம்பியைப் பார்க்கிறேன்.

      Delete
  8. தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்......

    ReplyDelete
  9. Oh! ambi pathivara!! engaLukku ithuthaan muthal arimugam...nalla santhipugal pala samayangalil ippadithan ekathai varavazhaikum..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பழைய பதிவர்!

      Delete
  10. He told me about his srirangam house visit and your pooshanikai kootu. He was very happy to meet you and mama.

    ReplyDelete