இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில் நான் இந்திய நேரப்படி இரவு(மாலை) ஏழு மணிக்குப் பின்னர் இணையத்தில் இருக்க மாட்டேன் என்பதை அறிக! நீங்க அனுப்பும் மின் மடல்கள், பதிவின் சுட்டிகள், என்னோட பதிவுக்கான கருத்துகள் மற்றத் தனிமடல்கள் ஆகிய எதுவானாலும் மறுநாள் தான் பார்ப்பேன். அதுவும் தினம் தினம் காலை வேளையில் உட்கார மாட்டேன். ஆகவே என்னிடமிருந்து தாமதமான பதில் வந்தாலோ, பின்னூட்டங்கள் வெளியிடப்படவில்லை என்றாலோ கவலைப்பட வேண்டாம். செரியா?
நேற்றுக் கும்பகோணத்துக்கு ஒரு முக்கியமான கல்யாணத்துக்காகப் போயிருந்தோம். கல்யாணம் முடிந்ததும் அங்கிருந்து எங்கள் குலதெய்வமான மாரியம்மனைப் பார்க்கப் போனோம். நாங்கள் போவதற்கு முதல் நாள் தான் மாரியம்மன் புறப்பாடு கண்டருளி இருக்கிறாள். அலங்காரம் அப்படியே இருந்தமையால் அங்கே வைத்திருந்ததைப் படம் பிடிச்சேன். ஹிஹிஹி, அலைபேசியில் தான்! இப்போத் தான் மெல்ல மெல்லக் கத்துட்டு இருக்கேன். ஆகவே படம் நல்லா இல்லைனு சொல்லப் போகும் தொ.நு.நி.களுக்கு முன் கூட்டிய க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
அங்கிருந்து பக்கத்து ஊரான கருவிலி என்னும் சற்குணேஸ்வரபுரம் போயிருந்தோம். நான் கல்யாணம் ஆகிப் புக்ககம் வந்தது கருவிலிக்குத் தான். மாமனாரின் நிலங்கள் அங்கே தான் இருந்தன. ஆகவே அங்கே இருந்த வீடு ஒன்றில் அவங்க குடும்பம் இருந்தது. அங்கே உள்ள சற்குணேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலம். கொட்டிட்டைக் கருவிலி என நாவுக்கரசர் பாடி இருக்கிறார்.
மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.
5.69.1
692
ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.2
693
பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.3
694
வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்
வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
காட னாருறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.4
695
உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்
கையி னானுறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
5.69.5
696
ஆற்ற வும்மவ லத்தழுந் தாதுநீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.
5.69.6
697
நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.
5.69.7
698
பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக்
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே.
5.69.8
699
நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே
கம்ப னாருறை கின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.
5.69.9
700
பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.
5.69.10
அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது நேற்று ஆனித்திருமஞ்சனத்திற்காக நடராஜருக்கு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. முன்னால் இருந்த நடராஜர், பாலூர் நடராஜரோடு வெளிநாடு சென்று விட்டார்! ஆகவே இப்போது கும்பாபிஷேஹம் செய்தபோது திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (பெல்) புதிதாக நடராஜரை ஸ்தாபிக்கச் செய்தார், அவருக்குத் தான் இப்போது வழிபாடுகள் நடந்து வருகின்றன.
கோயிலின் வெளிப்பிரகாரச் சுற்று மதிலில் ஓர் இடத்தில் நர்த்தன கணபதி சின்ன உருவமாக இருப்பார். அவர் தலைப்பக்கம் ஒரு சின்ன ஓட்டை.பள்ளி நாட்களிலே எல்லாம் அந்தப் பிள்ளையாருக்கு அபிஷேஹம் செய்து தலைப்பக்கம் இருக்கும் சின்ன ஓட்டையில் பூ செருகி வழிபடுவாராம் நம்ம ரங்க்ஸ். ஒவ்வொரு முறையும் அவரைப் படம் எடுப்பேன். நேற்று எடுத்த படங்கள் கீழே!
பக்கத்தில் இன்னொரு சிற்பத்தில் யாரோ எதையோ தலையில் தூக்கிச் செல்வது வடிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் சேர்ந்து கீழே!
ஆஹா....
ReplyDeleteஎன்ன, ஒண்ணுமே சொல்லலை! :)
Deleteகாலையில் வரமாட்டேன். ராத்திரிவர மாட்டேன் என்றெல்லாம்
ReplyDeleteகண்டிஷனே போடாமல் நான் வருவதே இல்லை என்று எனக்கே
கண்டிஷன் போட்டுவிட்டேன். கீதா.
அம்மன் மிக அழகு. பெருமாளைக் கண்டுபிடித்தீர்களே. இந்த நடராஜரும் வந்தாலும் வருவார்.
நிறையப் பேர் கேட்கிறாங்க. ஒரு சிலர் இரவில் மின்மடல் கொடுத்துட்டு நான் பதில் சொல்லலையேனு நினைக்கறாங்க. அதுக்காகப் போட்டேன். முக்கியமாக் கண்களுக்கு ஓய்வு கொடுக்கணும்னு தான் இரவில் கணினி முன் அமர்வதில்லை! :) பெருமாளையும் படம் எடுத்திருக்கேன். சரியா வந்திருக்கானு பார்த்துட்டுப் போடறேன். :)
Deleteவயசாகிறது. என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்... வல்லிம்மாவை பாருங்க... அப்பப்போ ஓய்வா இருக்கும்போது வர்றாங்க... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா பழைய மாதிரி ரெஃப்ரெஷ் ஆகி விடுவீர்கள்.
ReplyDeleteஇந்தப் படங்களை ஃபேஸ்புக்கிகில் பார்த்தேனே...
அட? வயசாயிடுச்சா உங்களுக்கு? பணி ஓய்வு பெற்றாகி விட்டதா? ஹை! சொல்லவே இல்லையே! இது எப்பூடி இருக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! யாருக்கு வயசாச்சு? நான் கொஞ்சம் பிசி என்பதாலும் கண் பிரச்னை இருப்பதாலும் தான் மாலை நேரம் கண்களுக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம்னு வைச்சிருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஆமாம், பொண்ணு பார்க்கிறதுக்காக முகநூலிலும் போட்டேன். அவளுக்கு வலைப்பக்கம் வந்து படிக்க முடியாது! :)
Deleteதாமதமான பதில் வந்தாலோ, பின்னூட்டங்கள் வெளியிடப்படவில்லை என்றாலோ கவலைப்பட வேண்டாம். செரியா?
ReplyDelete// :-))))))))))))))))))))))))))
என்ன சிரிப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteமுன்னறிவிப்பு எச்சரிக்கை போலவே இருக்கின்றதே......
ReplyDeleteதிருச்சி ஏர்போட்டிலிருந்து........
கர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கில்லர்ஜி, நீங்க க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னதுக்கு எனக்கு ராயல்டி தரணும்! :)
Deleteபடங்கள் நன்றாகவே வந்துள்ளன! தகவல்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி! பதில் சொல்லவில்லை என்றாலும் கோபித்துக்கொள்ள மாட்டேன்! நானும் என் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை! அதனால் எனக்கு வருத்தம் இல்லை!
ReplyDeleteநன்றி சுரேஷ், நான் பொதுவாக பதில் சொல்லி விடுவேன். சில சமயங்களில் அபூர்வமாக தாமதம் ஆவதும் உண்டு; சொல்லாமல் இருந்ததும் உண்டு. மற்றபடி உங்களுக்கு மட்டும் தனியாக பதில் சொல்வதில்லையே! எல்லோருக்கும் தானே சொல்கிறேன்.
Deleteபடங்களும் தகவல்களும் நன்று....
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...
நன்றி வெங்கட்.
Deleteவலைத் தளத்தில் நமக்கு நாமே எல்லாம்
ReplyDeleteபுரியலையே!
Deleteஅழகு....
ReplyDeleteநன்றி.
Deleteஉங்கள் பயணப்படங்களை ரசித்தோம். தங்களின் கலை ரசனைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteபதிவையும் பாடல்களையும் ரசித்தேன். என்ன அருமையான தமிழ். பக்தியும் பழுத்துவிட்டதால், அருமையான பாடல்களாக நாவுக்கரசரிடமிருந்து வெளிப்போந்திருக்கிறது.
ReplyDeleteவெறும் கல்தூணை நிறுத்தாமல், அதிலேயும் கலை உணர்வோடு சிற்பங்கள் செய்த சிற்பியையும் அவர்களை ஆதரித்தவர்களையும் காலம் சென்றும் நினைவுகூறவைக்கிறது.
தான் சிறுவனாக இருந்தபோது உள்ள இடங்களுக்குச் செல்லும்போது, நம் நினைவுகளும் அந்தக் காலத்துக்குச் சென்றுவிடும்.
ஆமாம், மலரும் நினைவுகள் தான்! :)
Deleteசிறுவயதில் நாம் இருந்த ஊருக்குப் போவது எப்போதுமே மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒருமுறை போய்விட்டு வந்தால் நம் எனெர்ஜி ரீச்சார்ஜ் ஆகும்.
ReplyDeleteதிருநாவுக்கரசரின் பாடல்களில் என்ன ஒரு எளிமை! எல்லாப் பாடல்களையும் ரசித்தேன்.
பின்னூட்டம் இன்னும் சுவாரசியம்! ஸ்ரீராம்.....!
ம்ம்ம்ம் ஒரு காலத்தில் மதுரை போவதென்றாலே மனம் துள்ளிக் குதிக்கும்! இப்போதெல்லாம் தவிர்க்க நினைக்கிறது! :( ஆனால் மீனாக்ஷி மட்டும் இழுக்கிறாள்!
Deletepadangal thagavalgal arumai. naanga puthiya pathivualum parthache so unga condition ippo illaiye..hehehe...sari nangalum pala pathivugaluku bathil tharuvathu kasthamagividugirathu
ReplyDeletepaadalgal romba rasithom...
எனக்கு நேரம் தான் ஒரு பிரச்னை. சில நாட்கள் காலையில் உட்கார முடியும். பல நாட்கள் முடியாது! :)
Delete