எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 29, 2016

புடைவைகள் பார்க்கவும்!

நாவல் பழமே காசிக்குப் போய் விட்டாச்சு. நாவல் பழக் கலரிலே புடைவை எங்கேருந்து எடுக்கிறது! ஜேகே அண்ணாவுக்கு என்னோட புடைவை செலக்‌ஷனே பிடிக்கலை! ஹிஹிஹி, ஏனெனில் புடைவைகளோட நிறத்தை அப்படியே ஃபோட்டோவில் பார்க்க முடியறதில்லை. இப்போக் கிட்டே வைச்சுப் படம் எடுத்திருக்கேன். ஒரு புடைவை பன்னீர் ரோஜாப் பூவின் ரோஸ் நிறம். குலாபி பிங்க் என்றும் சொல்வார்கள். இன்னொன்று அழுத்தமான ஆரஞ்சு (?) மெரூன் கலந்தது. ஆனால் படத்தில் வேறே மாதிரித் தெரியுது. அதான் ஏன்னு புரியலை! :)

குலாபி பிங்க் மெரூன் பிங்க் மாதிரித் தெரியுது! :)


தலைப்பின் ஒரு பகுதியும் உடல் பாகமும். நல்ல ரோஜா நிறம் ஆனால் இங்கே நிறம் மாறித் தெரியுது! :) பச்சை நிற பார்டர், இங்கே நீலமாத் தெரியுது! ஒருவேளை எனக்குக் கலர் பார்க்கத் தெரியலையோனு நினைச்சால் அப்படி இல்லைனு புரிஞ்சது. :)



தலைப்பு நடுவில் உள்ள டிசைன்

உடல் பாகமும் கீழுள்ள பார்டரும்


இன்னொரு புடைவையின் தலைப்பின் ஒரு பகுதி



உடலும் தலைப்புக்கு அருகிலுள்ள பகுதியும். போடலாமா, வேண்டாமானு ரொம்ப யோசிச்சேன். அப்புறமா கோ ஆப்டெக்சுக்கு ஒரு விளம்பரமா இருக்குமேனு போட்டிருக்கேன். 

22 comments:

  1. கோ-ஆப் டெக்ஸில் எவ்வளவு கொடுத்தாங்க ?

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே கில்லர்ஜி! அதெல்லாம் ஒண்ணும் கொடுக்கலை! நான் தான் நம்ம நெசவாளிங்களுக்காக வருஷா வருஷம் புடைவைகளைக் காட்டி விளம்பரம் கொடுக்கிறேன். :)

      Delete
  2. புகைப்படங்களில் ஒரிஜினல் கலர் பலசமயங்களில் தெரிவதில்லை! காசியில் நாவல் பழம் விட்டால் அந்த நிறத்தில் கூட துணிகள் எடுக்கக் கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஶ்ரீராம், நாவல் பழக் கலரே பிடிக்காதுனு சொல்றதுக்காகச் சொன்னேன். :) என்னிடம் இருந்த நாவல் பழக் கலர்ப் புடைவையை எல்லாம் தானம் பண்ணிட்டேன், புத்தம்புதிதாக இருக்கிறச்சேயே! :)

      Delete
  3. Enakkum Co optex sarees pidikkum. Photo la color change happens. Saree remdum nanna irukku . Happy Deepawali !

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் ஃபோட்டோவிலே ஒரிஜினல் கலர் கொண்டு வரலாம்னு தான் நினைக்கிறேன். எப்படினு தெரியலை! :) நன்றி ஷோபா.

      Delete
  4. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கீதா மேடம்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாட்கள் கழிச்சுப் பார்க்கிறேன். வருகைக்கு நன்றி. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

      Delete
  5. lovely cotton saris. where are they from? are these the negamam saris ? happy Diwali

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயஶ்ரீ. இவை நெகமம் புடைவைகள் தான். உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். கோ ஆப்டெக்ஸில் கிடைக்கும். சென்னையில் ரத்தன் பஜார் ஹான்ட்லூம் ஹவுஸில் கிடைக்கும். சென்னையில் இருந்தவரை ஹான்ட்லூம் ஹவுஸ் தான் போவேன். ஏனெனில் அங்கே எல்லா மாநிலக் கைத்தறிகளும் கிடைக்கும். :)

      Delete
  6. தீபாவளி நேரமில்லையா பெண்களையும் புடவைகளையும் பிரித்துப் பார்க்க முடியுமா சற்றே தாமதமான தீபாவளி நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா, உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

      Delete
  7. புடவைகள் மட்டும் போட்டால் பட்சணங்கள் யார் போடுவார்களாம்?

    ReplyDelete
    Replies
    1. நீங்க லேட்டா வந்துட்டு பக்ஷணம் கேட்டால் எங்கே போறது? அதுவும் போட்டு எல்லோரும் சாப்பிட்டாச்சு. முந்தின பதிவுக்குப் போய் ஏதானும் கிடைக்குதானு பாருங்க! :)

      Delete
  8. காமிராவில் மோட் அட்ஜெஸ்ட் பண்ணி னால் ஒரிஜினல் கலர் வரும்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், அப்படியா? அது தெரியாது,. எப்படினு கத்துண்டு செய்து பார்க்கிறேன். :) நன்றி தகவலுக்கு.

      Delete
  9. பிடித்தகலர். கட்டிக்கொண்டபிறகு மற்றவர்கள் சொல்லுவார்கள். ரொம்ப அழகாயிருக்கு. உனக்குப் பொருத்தமா இருக்கு என்ன விலை என்பார்கள். பொருத்தமாக இருந்தது இல்லையா அன்புடன் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. கோஆப்டெக்ஸுக்கு விளம்பரம் செய்யும் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, வாங்க சிவகுமாரன். உங்களுக்கும் பழக்கம் ஆகணும் இல்லையா! :)

      Delete
  11. புடவையைப் பற்றி எழுதி, அதற்கு ஆம்பளைங்க பின்னூட்டம் இட வைப்பது, உங்கள் தனித் திறமைதான். கோஆப்டெக்ஸில் வாங்குவது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. உங்க "ஹஸ்பண்டு"க்கு நீங்க தைரியமா வாங்கலாம் பாருங்க அதான்! அதோட இந்தப் பதிவுக்குப் பெண்களும் தானே வந்திருக்காங்க! :)

      Delete