எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 30, 2016

என்ன தான் நடக்கிறது நாட்டிலே!

எங்கு பார்த்தாலும் கூவல், புலம்பல், பணமே இல்லைனு! ஒருத்தர் அரிசி வாங்கப் பணமில்லைங்கறார். அவர் ஆட்டோ ஓட்டுநராம். ஆட்டோவை தினமும் ஓட்டுவதில்லையா? அதுக்குக் கூலி வரதில்லையானு தெரியலை! கையிலே பணமே இல்லைனு சொல்றாங்க! அதிலே சிலர் வியாபாரிகள்! வியாபாரமே ஆகலைனு சொல்றாங்க! வியாபாரம் ஆகலைனு சொன்னாலும் இன்னொரு பக்கம் காய்கறிகள், பழங்கள், நடைபாதைக் கடைகள் என்று இருக்கத் தான் செய்கின்றன. அவற்றில் வியாபாரம் செய்வோர் செய்யத் தான் செய்கின்றனர். எல்லோருமே ஐநூறு, ஆயிரம் என்று தான் வியாபாரம் செய்தார்களானு நினைக்கவும் ஆச்சரியம் தான் வருது! யாருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய்களைப் பயன்படுத்தியதே இல்லையா? அதிலே வியாபாரம் செய்ய முடியாதா? எல்லோரிடமும் கடன் அட்டை இருப்பது சாத்தியமில்லை தான்! ஆனால் வியாபாரிகளிடம் குறைந்த பட்சத் தொகை கூட இல்லாமல் இருக்குமா? அதைச் சுற்றுக்கு விட்டுத் திரும்பப் பெறலாமே!
ஐநூறு ரூபாய் நோட்டு க்கான பட முடிவு
ஒரு தோழி இன்னொரு தோழியிடம் சமையலுக்கு அரிசி பருப்பு, காய்களுக்கு எல்லாம் என்ன செய்தேனு கேட்கிறாங்க. அவங்க வீட்டில் தினம் அரிசி, பருப்பு வாங்குவாங்களோ! நாங்க மொத்தமா அரிசி வாங்கி வைச்சுப்போம். குறைந்தது பத்துக் கிலோவானும்! அதே போல் பருப்பு வகைகள் மற்றப் பொருட்கள் எல்லாமும் ஒரு மாதத்துக்குத் தேவையானதை வாங்கிப்போம். அதுவே ஒன்றரை மாதம் வந்துடும். காய்கள் ஒரு வாரத்துக்கு வாங்குவது உண்டு. அது பத்து நாட்களுக்கானும் வந்துடும். பாலுக்கு மாதா மாதம் பணம் கொடுப்போம். ஆகவே பணம் கொடுப்பதிலோ வாங்குவதிலோ சிரமங்கள் ஏற்படவில்லை. பெரிய அளவில் செய்யும் வியாபாரங்களுக்கு டெபிட் கார்டில் பணம் கட்டிடலாம்.  அப்படி வாங்குவது இப்போதைக்கு மருந்துகள் மட்டுமே. அங்கே குறைந்த பட்சத் தொகையான 150 ரூபாய்க்குக் கூட ஸ்வைபிங் மெஷின் இருக்கிறதால் பிரச்னை இல்லை. எப்படியும் மருந்து  வகைகள் ஆயிரத்தைத் தாண்டும் என்பதால் செக்கிலோ, டெபிட் கார்டிலோ தான் பணம் கொடுக்கணும். மற்றபடி இங்கே உள்ள ஆண்களுக்கான சலூனில் கூட ஸ்வைபிங் மெஷின் குறைந்த பட்சத் தொகையாக ஐம்பது ரூபாயில் ஆரம்பித்து வைத்திருக்கின்றனர். பெரிய ஹோட்டல்களிலும் 150 ரூபாய் வரை சாப்பிட்டாலோ, பார்சல்கள் வாங்கினாலோ டெபிட் கார்டிலோ, அல்லது க்ரெடிட் கார்டிலோ கொடுக்க முடிகிறது. துணிக்கடைகள் எல்லாம் எப்போதுமே கார்ட் வசதி உள்ளவை தான்.

அதோடு அரசாங்கம் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைத் தான் மாற்றச் சொல்லி இருக்கிறது. நூறு, ஐம்பது, இருபது, பத்து மற்றும் ஒரு ரூபாய் நோட்டுக்களை மாற்றச் சொல்லவில்லை. எல்லோரிடமும் ஐநூறும் ஆயிரமும் மட்டுமா இருந்திருக்கும்? நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்கள் ஒருத்தரிடமுமே இல்லையா? இங்கே கீரைக்காரர்கள், வாழை இலை விற்கும் வியாபாரிகள், பூக்கடைக்காரர்கள், பழக்கடைக்காரர்கள் என அனைவருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுகின்றனர். துணிகளை இஸ்திரி செய்யும் பெண்மணி இஸ்திரிக்குக் கொடுக்க வேண்டிய பணம் முப்பத்திரண்டு ரூபாய்க்கு மிச்சம் பதினெட்டு ரூபாய் ஐம்பது ரூபாய் கொடுத்தால் கொடுக்கிறார். அதே போல் ஆட்டோக்காரரும், இந்த ஆட்டோக்களில் மும்பை, சென்னை, திருச்சி என்று கடந்த இருபது நாட்களாகப் பயணம் செய்து பார்த்து அவர்களிடம் பேசியும் பார்த்தோம். அனைவரும் ஆதரவே தெரிவிக்கின்றனர்.

ஆனால் நேற்றுத் தொலைக்காட்சிகளில் காட்டியபோது ஆட்டோக்காரர்கள் அரிசி வாங்கவே பணம் இல்லைனு சொல்வதாகக் காட்டினார்கள். அப்போ ஆட்டோ ஓட்டி வரும் பணமெல்லாம் என்ன ஆகும்? அதோடு இப்போ யாரும் ஐநூறு, ஆயிரம்னு கொடுக்கவும் போறதில்லை. ஐநூறு, ஆயிரம் மாற்றுபவர்களும் இப்போது குறைந்திருக்கின்றனர். இன்னும் சிலர் பத்து நாட்களுக்கும் மேலாகப் பணத்தையோ, அட்டையைத் தேய்க்கவோ இல்லைனால் உடனே ஓசிச் சாப்பாடானு கேட்கிறாங்க. இவங்க கிட்டேயே இல்லைனால் ஓசிச் சாப்பாடு போடறவங்க மட்டும் எப்படிப் போடுவாங்க? புரியலை. அதோடு பணம் செலவு செய்யலைனா உடனே ஓசிச் சாப்பாடுனு அர்த்தமாகுமா? வீட்டிலே பொருட்கள் இருக்கு, சமைச்சிருக்காங்கனு எடுத்துக்கலாமே! இதெல்லாம் படித்த அறிவு ஜீவிகள் தான் சொல்றாங்க! படிக்காத ஜனங்கள் இல்லை.

படிக்காத கீரைக்காரியும், ஆட்டோ ஓட்டுநரும், வாழைப்பழ வியாபாரியும், பூக்கடைக்காரரும், காய்கறிக்காரர்களும், துணிகளை இஸ்திரி செய்து பிழைப்போரும் இது குறித்துக் குறை சொல்லவே இல்லை. பணமே இல்லை செலவுக்குனு சொல்லவும் இல்லை. சிறு வியாபாரம் படுத்துவிட்டது என்போர் எத்தனை ஊர்களில் எத்தனை கடைத்தெருவிற்குப் போய்ப் பார்த்திருக்காங்கனு தெரியலை! நான் பார்த்தவரை மாநகரங்களான மும்பை, சென்னை, மற்றும் இங்கே திருச்சியில் பாதிப்பு அதிகம் தெரியவில்லை. முன்கூட்டித் திட்டமிடவில்லை என்போர் முன் கூட்டித் திட்டமிட்டால் கறுப்புப் பணக்காரர்கள் உஷார் ஆகிவிடுவார்கள் என்பதை அறியாமலா இருப்பார்கள்? எதிர்க்க வேண்டும் என்பதே எதிர்ப்போரின் எண்ணம். காரணமே தேவையில்லை! தொலைக்காட்சிச் சானல்களிலும் சாதகமான செய்திகளைச் சொல்லுவதில்லை! பாதகமாகவே சொல்கின்றனர்.

நடைபாதை வியாபாரிகள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யத் தான் செய்கின்றனர். தள்ளு வண்டிகளில் காய்கள், பழங்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள் என்று விற்பனை ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. சாலையோரக் கடைகள் உணவுப் பண்டங்கள் தயார் செய்து விற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். எங்கும் எதிலும் இயக்கம் நிற்கவில்லை.  மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். இதுவும் கடந்து போகும்.

18 comments:

  1. கீதா மேடம்... அவரவர் பார்வையைப் பொறுத்து அவரவர்கள் விமரிசனம் பண்ணுகின்றனர். தொலைக்காட்சியிலும் பொதுமக்கள் கருத்து என்று, கட்சி சார்பான ஆட்கள் கருத்துசொல்கின்றனர். தன் கட்சி அபிமானத்திற்கேற்ப, வெறுப்புக்கேற்ப விதவிதமான நிலைகள் எடுக்கின்றனர். ஒருவேளை, துரியோதனன், தர்மன் பார்வைபோல், அவரவருக்கு ஏற்படும் அனுபவத்திற்கேற்ப எல்லோர் நிலையும் இப்படித்தான் என்று சொல்கிறார்களோ? இதுக்கு எல்லாமே பதில் 'இதுவும் கடந்துபோகும்'தான்.

    நல்லவேளை... உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கும் வங்கிக்குப் போனார். அவ்வளவு கூட்டம் இல்லைனே சொல்கிறார். ஆனால் ஏடிஎம் மையங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை! ஏனெனில் இன்னமும் திருச்சிக்கு 500 ரூபாய் நோட்டுக்கள் வந்து சேரவில்லை. திண்டுக்கல்லுக்குக் கூடப் போயிருக்காம். இங்கே வரலை! :(

      Delete
  2. எனக்கும் என் சுற்று வட்டாரத்திலும் கூட பெரிய பாதிப்பில்லை. நகர்ப்புற வங்கிகளுக்குத் தரப்படும் பண அளவு போல நகரத்தை விட்டு சற்றே தள்ளியிருக்கும் வங்கிகளுக்குத் தரப்படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அது வேண்டுமானால் பாதிக்கலாம். மளிகை முதல் மெடிக்கல் வரை இன்னமும் பழைய ஐநூறு ரூபாய் நோட்டுகள் வாங்குகிறார்கள். குறை சொல்லுலும் யாரையும் நெருங்கி நீங்கள் பாதிக்கப்பட்டீர்களா என்று கேட்டால் நானில்லை பொதுவாச் சொல்றேன் என்கிறார்கள். ம்... அவரவர் பார்வை, அவரவர் மனநிலை..

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகப் பாதிப்பில்லை என்றே சொல்கின்றனர். ஆனாலும் நேற்றுச் சம்பள நாள் என்பதால் குழப்பங்கள் இருந்திருக்கின்றன. எங்களுக்கெல்லாம் வங்கி வழிப் பணப்பரிமாற்றம் என்பதால் பென்ஷன் அதிலே வந்துடும். :) பணமாக வாங்குபவர்களுக்குப் பிரச்னை தான்! :(

      Delete
  3. அவரவர் எடுத்துக்கொள்வதைப் பொறுத்து எதுவும் அமையும். இதுவும் அப்படியே. இதை வைத்து அரசியல் செய்கின்றவரைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையே நீங்கள் சொல்வது!

      Delete
  4. கடவுள் கிருபையால் இங்கும் பாதிப்பில்லை... போன சனியன்று, கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கும் என்ற பயத்தில், காலை பத்து மணியளவில் வங்கிக்குச் சென்று, வேலைகள் முடித்து, பத்து நாற்பதுக்கெல்லாம் வெளியே வந்தாயிற்று.அத்தனை அருமையாகத் திட்டமிட்டு சௌகரியங்கள் செய்திருந்தார்கள்..

    மளிகை சாமான்கள் நீங்கள் சொல்வது போலத்தான்.. அதுவும் வீட்டுக்கே வந்து டெலிவரி, கூப்பன் கொடுத்துப் பெற்றுக் கொண்டோம்!..காய்கறிக்காரர்களெல்லாம் இங்கே பே டி எம் வைத்திருக்கிறார்கள். சின்ன சின்ன கடைகளெல்லாம், பே டி எம் வசதி உண்டென்று போர்டு வைத்திருக்கிறார்கள்.. கஷ்டமில்லை.. பூக்களுக்கு மாத்திரம் சில்லறை கொடுத்தோம்.. நீங்கள் சொல்வது போல, அன்றாட விஷயங்கள், புலம்பல்கள் இல்லாமல் தான் நான் அறிந்த வரை நடந்து வருகின்றன.. சரி தான் நீங்கள் சொல்வது.

    ReplyDelete
    Replies
    1. வங்கிக் கணக்கு இருந்தால் கவலைப்பட வேண்டாம். டெபிட் கார்ட் பெற்றுக் கொண்டு பணப்பரிமாற்றம் குறைந்த பட்சத் தொகையான 50 ரூபாயிலிருந்து செய்யலாம். எனினும் சிலர் பணமாகக் கேட்டால் பிரச்னை தான்!

      Delete
  5. உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கும் உங்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? ரூபாய் நோட்டு மாலை?(ஆங்! ரொம்ப ஆசைப்படாதீங்க. பழைய 500ரூபாய் அல்லது 1000 ரூபாய்தான்,நீங்கதான் மாத்திக்கனும்)

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொடுக்கிறது தான் கொடுக்கறீங்க! புது இரண்டாயிரம் நோட்டா இருக்கட்டும்! ஆமா, சொல்லிட்டேன்! :)

      Delete
  6. சில விஷயங்கள் இப்படித்தான். ஒன்றும் சொல்வதிற்கில்லை.....

    ReplyDelete
  7. https://villavan.wordpress.com/2016/11/30

    ReplyDelete
    Replies
    1. இந்தச் சுட்டி மட்டுமில்லை, இது போன்ற பலருடைய பதிவுகளும் பார்வைக்கு வந்தன. ஏற்கெனவே படிச்சுட்டேன்.

      Delete
    2. ஒரு வாரத்துக்கு 12,500 ரூபாய் வரை வாங்கலாம் என்று சொன்னார். நடுத்தரக் குடும்பத்தில் இது போதும் என நினைக்கிறேன். எங்களை மாதிரி கஞ்சப் பிசுநாறிகள் எனில் இதுவே அதிகம்! இன்று கரூர் வைசியா வங்கி, சிடி யூனியன் வங்கி, ஸ்டேட் வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் சென்று பார்த்ததில் எங்கும் கூட்டமோ, கூச்சலோ, குழப்பமோ இல்லை என்றே சொன்னார். :))))

      Delete
  8. வாழ்க வளமுடன் யார் எப்படிப் போனாலென்ன எனக்குப் பிரச்சனை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. முக்கியமான நகரங்களுக்குச் சென்று பார்த்து அங்கே கடைகளில் பொருட்களும் வாங்கிய பின்னர் பெற்ற அனுபவமே! எனக்குப் பிரச்னை இல்லை என்பதால் யார் எப்படிப் போனால் என்ன என்று சொல்லவில்லை. பல்வேறு ரகங்களிலும் உள்ள கீழ்மட்ட ஆட்களையும் பார்த்துப் பேசித் தான் சொல்லி இருக்கேன், மீண்டும் பதிவைப் படித்துப் பார்க்கவும். :)

      Delete
  9. முதல் இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் பிரச்சனையாக இருந்தது. அதாவது நம் கையிலுள்ள பணத்தை மாற்றும் வரை. எங்கள் இருவருக்குமே இப்போதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை.

    கீதா: என்ன சில இடங்களில் கடைகளில் ரூ 2000த்திற்குச் சில்லறை தரமாட்டேன் என்கிறார்கள். கடைகளில் ரூ 100 50 எல்லாம் தரமாட்டேன் என்கிறார்கள் ஏனென்றால் எல்லா கஸ்டமர்களுக்கும் மீதி கொடுப்பதற்கு இல்லையாம். கார்டு தேய்க்கும் கடைகள் என்றால் பிரச்சனை இல்லை. என் வீட்டருகில் இஸ்திரி தேய்ப்பவர் படு ஜாலியாக இருக்கிறார். அவர் மற்றும் பூ விற்பவர்கள் காரணம் எங்கள் வீட்டருகில் இருக்கும் மாடி வீட்டவர்கள் (பணக்காரர்கள்) எப்போதுமே அடுத்திருக்கும் இவர்களிடம் வாங்குவதற்கும் காரில் சென்றுதான் வாங்குவார்கள். அதுவும் அடுக்கடுக்காகத் துணைகளைக் கொடுத்துவிட்டு பெரிய நோட்டாகத்தான் கொடுப்பார்கள். பாவம் இஸ்திரி போடுபவர் சில சமயங்களில் திணறுவார். கணக்கு வைத்துக் கொள்வார். என்றாலும் பூக்காரி, இஸ்திரி போடுபவர்களை எல்லாம் அவர்கள் சில சமயம் பாடாய் படுத்துவார்கள். இப்போது அவர்கள் வருவதே இல்லை. காரணம் அவர்களிடம் நோட்டுகள் தான் இருக்காம்!!!!!!!! கொஞ்சம் நஞ்சமில்லை நிறைய...கணக்குக் காட்டினால் 80% போய்விடும்...இஸ்திரிக் காரர் பூக்காரி எல்லாம் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்!!! என்ன வரும்படி கொஞ்சம் குறைந்துள்ளதாகச் சொன்னார்கள். மற்றபடி அவர்கள் ஆதரவுதான் காட்டினார்கள். எங்கள் குடியிருப்பில் வீட்டு வேலை செய்பவர் எல்லாம் இதுவரை வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளாதவர்கள்...

    ReplyDelete