எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 08, 2018

என்ன நடக்கிறது? :(

திருச்செந்தூர்க் கோயிலின் மண்டபம் இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளம்மா நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். தொடர்ந்து விஜயேந்திரர் மாட்டிக் கொண்டார். அதன் பின்னர் மதுரைக் கோயில் பற்றி எரிந்தது! அந்த வேதனையே இன்னும் அகலாமல் இருக்கும்போது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல விருக்ஷம் பற்றி எரிகிறது என்று செய்தி!


மொத்தத்தில் நடப்பவை எதுவும் நல்லதுக்கல்ல. மீனாக்ஷியைப் போய்ப் பார்த்தே நாட்கள் ஆகி விட்டன. போகணும்னு இருந்தோம். அதுக்குள்ளே கோயிலில் தீ என்னும் செய்தியைக் கேட்டதும் எந்த முகத்தோடு அந்தப் பழைய இடங்களை எல்லாம் பார்க்க மனசு வரும்னு தோணுது! மதுரைக்குப் போகவே மனசு வராது போல இருக்கு! அதிலும் மீனாக்ஷியைப்    பார்க்கவே மனசுக்குக் கஷ்டமா இருக்கும் போல! ஏற்கெனவே வீர வசந்தராயர் மண்டபமும், பசுபதிராயர் மண்டபமும் இடிந்து விழுந்து விட்டதாகச் சொல்கின்றனர்.

நெருப்புத் தோன்றிய உடனே ஏன் யாரும் அதை அணைக்க முயற்சி செய்யவில்லை? இந்த அளவுக்கு நெருப்புக் கொடூரமாகப் பற்றிக்கொள்ளும்வரை எல்லோரும் ஏன் பேசாமல் இருந்தார்கள்? இதிலே அறநிலையத் துறையின் பொறுப்பு என்ன? அவங்க ஏன் வாயே திறக்கலை? நெருப்புப் பற்றிக் கொண்டது எதனால்? இவ்வளவு மோசமான பாதிப்பு இருந்தும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது? ஒண்ணும் புரியலை! அறநிலையத் துறை அமைச்சர் ஏன் இன்னும் வந்து பார்க்கலை? அடுத்தடுத்துக் கோயில்களுக்குக் கேடு நடந்து வருவது நல்லதல்ல! ஆனால் நாம் கையாலாகாமல் உட்கார்ந்து புலம்புவதைத் தவிர வேறே ஏதும் செய்ய முடியலை! :(

19 comments:

  1. ஒன்றிரண்டு நடந்தால் தற்செயல் என்று சொல்லலாம். திருச்செந்தூர், மதுரை, இப்போது இது.. இயற்கை ஏதாவது சேதி சொல்கிறதா? அடுத்தது என்னவோ என்ற பதைப்பும் இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், மதுரைக்கோயிலில் வெள்ளம் புகப் போகிறது எனவும், தீ விபத்து ஏற்படும் எனவும் பஞ்சாங்கத்தில் சொல்லி இருப்பதை ஸ்கான் செய்து தினசரிகளில் போட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே தெரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என மனம் அடிச்சுக்கறது! :(

      Delete
  2. ///நாம் கையாலாகாமல் உட்கார்ந்து புலம்புவதைத் தவிர வேறே ஏதும் செய்ய முடியலை!///

    இதுதான் உண்மை நாம் இப்படியே இருந்தால் நமது சந்ததிகளுக்கு புலம்புவதற்குகூட தைரியம் வராது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, அதிகாரம் உள்ளவர்களிடம் தான் நாம் முறையிட முடியும். அவர்களே அலட்சியமாக இருக்கையில் என்ன செய்ய முடியும்?

      Delete
    2. நண்பர் சொல்வது மிக மிகச் சரியே,

      Delete
    3. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  3. இறைவனுக்கு எந்த அளவு நாம் உயர்ந்த இடம் கொடுத்திருக்கிறோமோ அந்த அளவு, அவனுடைய கர்ப்பக்க்ரஹம், கோவில் சுற்றுக்கும் கொடுக்கவேண்டும். அங்கங்கே எண்ணெய் வழிசல்கள், பழைய துணிகள், கற்பூரங்கள் சிதறிக்கிடப்பது, விளக்குகளிலிருந்து எண்ணெய் கன்னங்கரேலென்று மொத்தமாக வழிந்து கிடப்பது என்று, உழவாரப்பணிகள் செய்ய யாருக்கும் நேரமில்லை. நேரடியாக கடவுளைப் பார்த்து அவரிடமிருந்து லாட்டரிச் சீட்டு வாங்கத்தான் எல்லோருக்கும் நேரமிருக்கிறது.

    கோவில்கள், நம்பிக்கையும், நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற அக்கறை உள்ளவர்களிடம் போகும்போதுதான், நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. இப்போதைய அரசாணையின்படி எந்தக் கோயிலிலும் கற்பூர ஆராதனை என்பதே இல்லை! மேலும் கர்பகிரஹம் எல்லாம் மதுரை போன்ற பெரிய கோயில்களில் சுத்தமாகவே பராமரிக்கப்படுகிறது. இப்போது கட்டப்படும் புதிய கோயில்களில் எண்ணெய் வழிசல்கள், பழைய துணிகள் எனக் காணப்படும். ஓர் சில கிராமத்துக் கோயில்களிலும் சுத்தம் பராமரிக்கப்படுவதில்லை. பரம்பரை அறங்காவலர் யாரோ அவர்களிடம் விடலாம் கோயில் நிர்வாகத்தை!

      Delete
    2. என் புக்ககமான கருவிலி சிவன் கோயிலில் இப்படித் தான் பரம்பரை தர்மகர்த்தாவான திரு வி.கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டதும் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாகக் கோயில் நன்கு செயல்பட்டு வருகிறது. இதுவும் இந்து அறநிலையத் துறைக்குக் கீழ் வந்தாலும் இவர்கள் கண்காணிப்பால் செயல்பாடு செம்மையாக இருக்கிறது. குருக்களின் சம்பளமும் இவர்களே கொடுக்கிறார்கள். எங்க பூர்விக ஊரான பரவாக்கரைப் பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்கும் நாங்கள் தான் சம்பளம் கொடுத்து வருகிறோம். அரசு சார்பில் 750 ரூ கிடைக்கிறது. அதற்கும் பத்தாயிரம் முன்பணம் கட்ட வேண்டும். அதையும் நாங்களே கட்டி பட்டாசாரியாருக்கு 750 ரூ கிடைக்கும்படி செய்திருக்கோம்.

      Delete
  4. எத்தனையோ விபத்துகள் நிகழ்கின்றன அரசும் அவ்வப்போது விசாரணைக்ம்கமிஷன் உருவாக்கி காரணம் காண முயற்சிக்கிறார்கள் அதனால் எந்தபலனும் நேர்வதில்லை கோவில்களில் நெருப்பு விபத்து நேரும்போதுமட்டும் மனம் ஏன் அச்சானியமாக நினைக்க வேண்டும் தீயை அணிக்க நேரம் வேண்டி இருந்திருக்கும் யாருமணைக்காமலா நெருப்பு அணைந்ததுபழைய கட்டுமானங்களென்றுவேண்டுமானாலும் விழலாம் நடப்பவை நடந்தே தீரும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு நன்றி ஐயா!

      Delete
  5. இதுக்கெல்லாம் காரணம் நான் வைக்கும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றாததால இருக்குமோ?:).. வைர மூக்குத்தி, ஒட்டியணம் வைர அட்டியல் என எல்லாக் கோயில்லயும் நேர்த்தி இருகே மீக்கு:)).. ஆராவது ஜெல்ப் பண்ணுவார்கள் எண்டால்ல் ம்ஹூம் ஆருமே ஜெல்ப்புக்கு வர மாட்டினமாம்:)..

    //என்ன நடக்கிறது?///
    ரெண்டு கால் மனிசர்தேன்ன் நடக்கினம்:)..

    ReplyDelete
    Replies
    1. அதிராமியாவ், இன்னும் என்னென்ன நேர்த்திக்கடன்கள் என்பதைச் சொல்லிடுங்க! எந்த எந்தக் கோயில்கள்னும் சொல்லுங்க! ஜெல்ப் எல்லாம் தன்னால் பிடிச்சுக்கும்! சேச்சே, ஹெல்ப் எல்லாம் தன்னால் கிடைக்கும். ஜெல்ப் னதும் நான் ஜலதோஷம்னு நினைச்சுட்டேன். ஹிஹிஹிஹி! ரெண்டு கால் மனிசர் மட்டுமா நடக்கினம்? நாலு கால் பிராணிங்க? அதை விட்டுட்டீங்களே!

      Delete
    2. கோயிலுக்குள் 4 லெக்ஸ் நஹி:)))

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிராமியாவ், எங்கே ஆளையே காணோமே! ரெண்டு பேரும் பேசி வைச்சுட்டு ஒளிஞ்சுடு இருக்கீங்களா? போரடிக்குது! சீக்கிரமா வாங்க! :))) நான் கோயிலுக்குள் 4 லெக்ஸ்னு சொல்லலை! பொதுவாம நடப்பவர்களைச் சொல்றேன். :)))

      Delete
  6. தொடர்ந்து நடப்பவை ஏதோ செய்தி சொல்வது போல் தெரியுது...எனக்கு இதில் நம்பிக்கை கொஞ்சம் உண்டு...நல்லது நடக்கப் பிரார்த்திப்போம்.

    கீதா: ம்ம்ம்ம் என்னவோ..கீதாக்கா நீங்க சொல்லியிருப்பது போல்...முன்னரே தெரியும்னா கவனமாக இருந்திருக்க வேண்டாமோ....நெல்லை சொல்லுயிருப்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை என்று சொல்வேன்....மெயின்டெனான்ஸ்...அதுவும் பக்தியுடன் இல்லை என்றால்?...அற நிலையத் துறையிலும் ஊழல்...நீங்க சொல்றாப்புல நம்மால் புலம்ப மட்டுமே முடியுது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி, பிரார்த்தனைகள் தான் நம்மால்செய்ய முடிந்தது. :(

      கீதா, அறநிலையத் துறைக்குக் கீழ் இந்தக் கோயில்கள் எதுவுமே வரலை! ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு இந்தக் கோயில்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கு! என்ன சொல்ல முடியும்! :(

      பஞ்சாங்கக்காரங்களும் இப்படி விபத்துக்கள் ஏற்பட்டதும் தான் எங்க பஞ்சாங்கத்திலே போட்டிருக்கோம்னு சொல்றாங்க! அதுவரைக்கும் நமக்கு எங்கே தெரியுது?

      Delete
  7. 1. பிரதமரின் அனுமதி இல்லாமல் பிரதமர் பெயரில் மீம்ஸ் போட முடியாது.

    2. அப்படி போடப்பட்ட மீம்ஸுகளுக்கு அவரே பொறுப்பு.

    3. போடப்பட்ட மீம்ஸ் தவறு என்று சுட்டிக்காட்டப்படும்போது தவறை ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மை வேண்டும்.

    4. பிரதமருக்கு ஆங்கிலம் சரியாக வராது என்பது ஒத்துக் கொள்ள முடியாத ஒன்று. அவர் MA political science பாஸ் செய்தவர் என்று degree certificate எல்லாம் காட்டினார்.

    இதுவரையில் அவர் எந்த ஒரு தவறுக்கும் மன்னிப்பு கேட்டதில்லை. மன்னிப்பு கேட்டதெல்லாம் அவருடைய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளே.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஜேகே அண்ணா, கருத்து இடம் மாறி வந்துள்ளது!

      Delete