எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 02, 2018

மீனாக்ஷி கல்யாணம்! இப்படியும் ஒரு கோணம்!

சமீபத்தில் நடந்த மீனாட்சி கல்யாணத்தைப் பற்றிக் குழுமத்தில் யாரோ போட்டிருந்ததைப் படித்த இன்னொரு நண்பர் அவர் கோணத்தில் கீழ்க்கண்ட கருத்தைச் சொல்லி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நான் முன்னர் எழுதிய மதுரை பற்றிய பதிவைக் கொடுத்துவிட்டு என் கருத்தையும் பகிர்ந்திருந்தேன். இங்கே பகிரலாமா வேண்டாமா என நினைத்தபோது பகிர்ந்தால் புரியாதவங்களும் புரிஞ்சுக்கலாமே எனத் தோன்றியதால் இங்கேயும் பகிர்ந்தேன். சில விஷயங்கள் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அதில் இதுவும் ஒன்று. சாதாரணப் பாமர மக்கள் (என் போன்றவர்கள்) இவற்றை ஏற்றுக் கொண்டு கடந்தாலும் பலரால் முடிவதில்லை. அவர்களில் ஓரிருவருக்காவது இதன் தத்துவம் புரிந்தால் நல்லது. நன்றி.

மீனாக்ஷி திருக்கல்யாணம் க்கான பட முடிவு

 இது குழுமத்தில் சிநேகிதி ஒருவர் பகிர்ந்த கருத்து!

//தமிழ் அர்ச்சனை சொல்லவும் கேட்கவும் நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பெயரில் மனிதன் தன் மன அவசங்களை எல்லாம் தெய்வத்தின் மேலேற்றி ......கொடுமைதான் புரிகிறான்.
ஆயிரமாயிரம் பெண்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று திரண்டு தம் கழுத்தில் உள்ள தாலியைத் தாமே மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தாலி கட்டும் வேளையில் ஐயர் தும்மி விடுவார் .
அபசகுனம் ஆகிவிட்டதென்று சிவனார் மனைவியைப் பிரிந்து பிரியாவிடை எனும் ஆசைநாயகியிடம் சென்று விடுவார்.
தேரோட்டத்தின்  போது கூட சிவனும் பிரியாவிடையும் ஒரே தேரில் வலம் வருவர்.
மீனாட்சி சினத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு தனியாகத் தான் தேரில் வருவாள்.அவள் முகத்தை நேரில் யாரும் பார்க்க முடியாது. தேரில் அதற்காகவே ஒரு கண்ணாடி இருக்கும் .அந்தக் கண்ணாடியில் தான் மீனாட்சியின் முகம் தெரியும்.
சிவன் கதை இப்படி என்றால் ;பெருமாள் கதை இன்னும் கொஞ்சம் காமெடியானது.
தான் வருவதற்குள் தன் தங்கை திருமணம் முடிந்து விட்டதென்று கோபித்துக் கொண்டு வைகையாற்றிலிருந்து அப்படியே திரும்பி விடும் அழகர் தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் துலுக்க நாச்சியாரிடம் சென்று அங்கேயே தங்கி விடுவார்.//

எதையும் நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தில் அம்பிகை தனியாகப் பூப்பல்லக்கில் வருவது அவள் வெட்கம் இன்னமும் குறையவில்லை என்பதாலேயே என்று தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். வெட்கம் மாறாத மீனாட்சி அனைவரையும் நேர்ப்பார்வையால் பார்க்க நாணி, பக்கப்பார்வையால் பார்க்கிறாள் என்பார்கள். அதோடு எப்போதுமே சுவாமி தரிசனம் என்பது சுவாமிக்கு நேருக்கு நேர் நிற்பது அல்ல என்றொரு ஐதீகமும் உண்டு. சிலாரூபங்களின் கடைக்கண் பார்வை மட்டுமே நம் மேல் பட வேண்டும் என்றே சந்நிதியின் இருபக்கமும் அணி வகுத்து நின்று தரிசனம் செய்வது உண்டு.

நானும் மதுரையில் பிறந்து வளர்ந்து மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்த்து வந்திருக்கிறேன். இப்படி ஒரு கதையை எங்களுக்கு யாரும் இன்று வரை சொன்னதில்லை. இப்போது தான் முதல் முதலாகப் பார்க்கிறேன். பிரியாவிடை எப்போதுமே சுவாமியுடன் இருப்பார். எல்லாச் சிவன் கோயில்களிலும் பார்க்கலாம். ஏனெனில் சக்தி இல்லை எனில் அங்கே சிவம் இல்லை. வெறும் சவம் தான். அதைத் தத்துவ ரீதியாகச் சுட்டிக் காட்டவே எல்லாச் சிவன் கோயில்களிலும் அம்பிகை தனியாகவும், ஈசன் எப்போதும்பிரியாவிடையுடனும் வருவார்கள்.


இது ஒரு தத்துவரீதியான காட்சி! அன்னையும் அப்பனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை. ஓருடல், ஓருயிர் தான்! ஆனாலும் உலக க்ஷேமத்துக்காகவும் சில தவிர்க்க முடியாத காரண காரியங்களூக்காகவும் அன்னை மானுட ரூபத்தில் வந்து அருளாட்சி செய்ததாகச் சொல்கிறோம். அப்போது தான் நம்மைப் போலவே அன்னைக்கும் திருமணத் திருவிழா நடத்துகிறோம். ஆனாலும் அப்பனைப் பிரியாத அன்னை அவன் கூடவே இருப்பதாகச் சொல்வதால் அர்ச்சாவதாரங்களீலும் அன்னை உருவில் அப்பனுடன் அமர்ந்திருப்பாள்.

மீனாக்ஷி அம்மன் கோயிலில் கூட சொக்கநாதர் சந்நிதியில் கர்பகிரஹத்தில் அன்னை அப்பனைப் பிரியாமல் மனோன்மணீ என்னும் பெயருடன் சிலாரூபத்தில் இருப்பாள். இவள் வெளீயே வர மாட்டாள். கும்பாபிஷேஹ சமயம் பாலாலயம் எடுப்பிக்கையில் மனோன்மணீயையும் சேர்த்துப் பிரதிஷ்டை செய்வார்கள்.

http://marudhai.blogspot.in/2009/04/blog-post_7637.html   பிரியாவிடை அன்னையின் கிளியும் பிரியாவிடையும் என்னும் இந்தப் பதிவில் விளக்கங்களைக் காணலாம்

நாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம். இதன் உள்ளார்ந்த தத்துவம் யோகத்துடன் சம்பந்தப்பட்டது. விபரமாக எழுதினால் பாலாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எழுத எழுத முடியாத ஒரு விஷயமும் கூட!

32 comments:

 1. நம்பினோர்க்கு நாராயணன், நம்பாதோர்க்கு வில்லன் நம்பியார்.

  இந்து மதத்தில் கதைகளுக்கு பஞ்சமா ? ஒருபுறம் உண்மையை சொல்லி வைக்க, மறுபுறம் அதை திறித்து சொன்னவர்களும் இருந்தார்கள். ஆதி முதல் இன்றுவரை...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, இது கதை அல்ல. உண்மையில் கோயிலில் வேலை செய்யும் முதிர்ந்த பட்டர் கூறியவை! கீழே கோமதி அரசும் விளக்கம் கொடுத்திருப்பதைப் பார்க்கவும். இதை அடுத்த பதிவுக்கு வைத்திருந்தேன். :)

   Delete
  2. கில்லர்ஜி இந்தி மதம் என்றில்லை எல்லா மதங்களிலும் கதைகள் உண்டு.

   கீதா

   Delete
  3. ஆமாம். எல்லா மதங்களிலும் கதைகள் உண்டு.

   Delete
 2. புது கோணம்.

  ReplyDelete
 3. மிகவும் நல்ல தகவல். நாங்கள் திருவண்ணாமலையில் இருந்த பொழுது என் மகளிடம் அவள் அலுவலகத்தில் பணி புரிபவர்கள்,"தேரில் அண்ணாமலையாரோடு பவனி வருவது உண்ணாமுலையம்மன் கிடையாது, அண்ணாமலையாரின் சின்ன வீடு(சின்ன வீடாம்), அதனால் கோபம் கொண்ட உண்ணாமுலையம்மன் தனியாகத்தான் தேரில் பவனி வருவார்" என்று கூற அவள் என்னிடம் வந்து கேட்டாள். நான் அதற்கு, "இதற்கெல்லாம் தத்துவார்த்த விளக்கம் இருக்கும்." என்று கூறினேன். இன்று தெரிந்து கொண்டேன். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, இந்தச் சர்ச்சை மின் தமிழ்க் குழுமத்தில் இன்னும் முடியலை! :( எல்லோரும் தனித் தமிழர்கள்! தாலி கட்டிக் கொள்வதையும், திருமண சம்பிரதாயங்களையும் எதிர்ப்பவர்கள். :)

   Delete
 4. உங்கள் பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் ஆசிகளும். இறையருளால் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 5. ஆன்மீகம் என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் விளக்கத்திற்கும் சந்தேகத்திற்கும் இடமில்லை. அதன் தத்துவம், நன்கு ஆழ்ந்து இதில் படிப்பும் பிடிப்பும் உள்ள பெரியவர்களிடம் கேட்டால் தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. இது யோகமும் சேர்ந்தது. ஒரு பக்கம் ச்ரீவித்யா தந்திரம் எனில் இன்னொரு பக்கம் சித்தர்களின் சிவனைக் காணும் தத்துவம். இன்னொரு பக்கம் மேலே குடியிருக்கும் "ஸ்கந்தனை"த் தேடும் வைபவம். ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்தது இதில் உள்ள தத்துவம். தத்துவம் என்னமோ பொதுவானது! கடைப்பிடிப்பது அவரவர் வழியில்!

   Delete
 6. ஸ்ரீ ராமபிரான் ஆஞ்சநேயரிடம் "நான் உனக்கு கிடைத்தற்கரிய ஒரு மந்திரோபதேசம் செய்கிறேன். அதை உனக்கே வைத்துக்கொள். தகுதியானவர்களுக்கு மட்டுமே சொல்லலாம்" என்றாராம். மறுநாள் காலை பார்த்தால் ஆஞ்சநேயர் பறையறைந்து ஊர் முழுவதும் அந்த மந்திரத்தைச் சொன்ன படியே வந்தாராம். கோபம் அடைந்த ராமன் அனுமனை அழைத்து, "நான் சொன்னதென்ன? நீ செய்ததென்ன?" என்று கேட்டாராம். "சரியாகத்தான் செய்கிறேன் பிரபு" என்றாராம் அனுமான். "ஊர் மக்களை அழைத்துக் கேளுங்கள்.. உங்களுக்கே புரியும்" என்றாராம். ராமனும் ஊர் மக்களை அழைத்துக் கேட்கையில் நிறைய பேர்கள் அனுமன் உளறுவதாகச் சொன்னார்களாம். இன்னும் சிலர் "என்னவோ சொல்கிறார், எங்களுக்குப் புரியவில்லை" என்றார்களாம். மிக மிகச் சிலர் மட்டுமே "கிடைத்தற்கரிய மந்திரோபதேசம் கிடைக்கப் பெற்றோம்" என்றனராம். ராமனும் தெளிந்தானாம். அது போலத்தான்...

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் ஶ்ரீராம்! என்ன போங்க! சுரதாவிலும் தட்டச்சிக் கொண்டு அதில் வராததை கலப்பை மூலம் கொண்டு வந்து! :))))))

   Delete
  2. ஸ்ரீராம் செம கதை!!! இதுவரை அறியாதது!

   கீதா

   Delete
  3. ஒரு காலட்சேபத்தில் கேட்ட நினைவு. மற்றபடி அதிகம் வழக்கத்தில் இல்லாதது தான். ஶ்ரீராமானுஜரைத் தான் திருக்கோஷ்டியூரில் உபதேச மந்திரத்தைச் சொல்லக் கூடாதுனு குரு சொல்லி அவர் கோபுர உச்சியில் ஏறீ உலகறீயச் சொன்னார் என்பார்கள்.

   Delete
 7. பிரியவிடைக்கு நீங்கள் சொன்ன விளக்கமும் நன்றாக இருக்கிறது.

  இறைவனோடு இருக்கும் போது பிரியாவிடை, தனித்திருக்கும் போது மீனாட்சி.
  பிரியாவிடையும், மீனாட்சியும் வேறு வேறு சக்தி இல்லை இறைவனை விட்டுபிரியாத சக்தி என்பதால் பிரியாவிடை என்று அழைக்கிறோம்.

  கோயில்களில் சக்திஇறைவனோடு இணைந்து போக சக்தியாகவும், தனித்திருக்கும் போது யோகசக்தியாக இருப்பதாய் ஐதீகம்.

  மதுரையில் போகசக்தி பிரியாவிடை என்றும், யோக சக்தி மீனாட்சி என்றும் அழைக்கபடுகிறார்கள்.
  இப்படி விளக்கம் தருவது நம் தெய்வீக பதிவர் மறைந்த இராஜராஜேஸ்வரி அவர்கள்.

  அவர்களை ஒவ்வொரு விழா அன்றும் நினைத்து கொள்வேன், அவர்கள் பிரியாவிடை பற்றி சொன்ன நினைவு அதனால் அவர்கள் தளம் சென்று படித்தேன்.

  http://jaghamani.blogspot.com/2013/04/blog-post_24.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு! அடுத்த பதிவுக்கு வைத்திருந்தேன். :)

   Delete
 8. கதைகளும் விளக்கங்களும் கற்பனைக்கேற்ப கிடைக்கும்

  ReplyDelete
  Replies
  1. எனக்குக் கற்பனை வளமே இல்லை ஐயா!

   Delete
 9. அப்புவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

  எங்கள் பிளாகில் சினிமா பேர் ஒன்னும் தெரிலையீனு பார்த்திட்டே வரும்போது அங்கே அப்புவின் பிறந்தநாள் பற்றி பார்த்து வந்தேன் :)


  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், வாழ்த்துகளூக்கு நன்றீ. வேலைகள் எல்லாம் முடிந்ததா? இன்னும் உங்க தலைவியைக் காணலை! :)

   Delete
 10. // நாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம்.//

  அதே அதே ..அதேதான் என் கருத்தும் .
  இந்த குதர்க்கவாதிகள் எதையாவது சொல்லி தாங்கள் தங்கள் கருத்து சிந்தனைதான் உண்மைன்னு சொல்ல துடிப்பாங்க . இதனால் என்ன அற்ப சந்தோஷமோ தெரில . ஒருவரின் நம்பிக்கையை சிறுமைப்படுத்துவது அவமதிப்பது பெரிய தவறு .
  கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கதான் இப்போல்லாம் ரொம்பவே ஆன்மீக ஆராய்ச்சி செய்றாங்களோன்னு தோணுது .

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். இறை நம்பிக்கை இல்லாதோர் தான் இத்தகைய கேள்விகளை முன் வைக்கின்றனர்.

   Delete
 11. நல்ல விளக்கம். நன்றி.

  ReplyDelete
 12. துளசி: குழுமத்தில் பகிர்ந்திருப்பது போன்ற ஒன்றை இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. உங்கள் விளக்கம் அருமை. எதுவுமே நாம் பார்ப்பதில்தான் இருக்கிறது சரியே. இறைவனும் இறைவியும் பிரியவே மாட்டார்களே. பிரிக்கவே முடியாதே. அர்த்தநாரீஸ்வரர் ஆயிற்றே. சிவனும் சக்தியும் பிரிந்தால் உவ்வுலமே இல்லையே. அந்தத் தத்துவத்தில்தானே இவ்வுலகமே இயங்குகிறது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இறைவனுடன் இருக்கும் போது அவர் பிரியாவிடை என்றும் மற்றபடி மீனாட்சி என்றும் தான் அறிந்திருக்கிறோம்

  துளசி, கீதா

  கீதா: //நாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம். // யெஸ் யெஸ்...அதே. அப்புவுக்குப் பிறந்தநாள் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் என்னடா நமக்கு எப்படித் தெரியாம போச்சு எங்க கொடுத்திருக்காங்க இங்க இல்லையேனு பார்த்தா ஏஞ்சல் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் மீண்டும் எபி போய்ப் பார்த்தா அங்கயும் இல்லை...அப்புறம் புதன் தான் நம்ம கமென்ட் எல்லாம் வரவே இல்லையே மாடரேஷன் ல இருக்கு போல நு பார்த்தா இப்பா அங்க எல்லாம் இருக்குது....

  அப்புவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் கீதாக்கா...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், துளசிதரன். உண்மையில் எனக்குக் கோபமும் வருத்தமும் மேலிட்டது. அவங்க ஆசிரியர் அப்படிச் சொல்லிக் கொடுத்தாராம். எந்த ஊர்க்காரரோ தெரியலை! இதிலே இன்னொருத்தர் சைவ சித்தாந்தத்தில் இம்மாதிரி வழிபாடு கிடையாதுனு சொல்லி இம்மாதிரிப் புராணங்களை அனுசரித்து விழாக் கொண்டாடுவதெல்லாம் சைவத்தில் இல்லைனு சொல்லி நிலை நாட்டுகிறார். என்ன சொல்ல! :( நான் எதுவும் சொல்லாமல் வந்துட்டேன். ஒரு முறை சொல்லிப் பார்ப்பேன். கேட்கிறவங்க புரிஞ்சுக்கலைனா விலகி விடுவது தான் ஒரே வழி! விலகி வந்தாச்சு! :)

   Delete
 13. அப்புவுக்கு இங்கும் வந்து பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் நன்றி அப்புவிடம் தெரிவித்து விட்டேன். அவளும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.

  ReplyDelete
 14. நன்றி தி/கீதா, உங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 15. வருடா வருடம் ,வரும் வாதங்கள்.
  இறைவன் இறைவி தத்துவங்களை சீரில்லாமல் புரிந்து கொள்வதால்
  வரும் சந்தேகங்கள்.
  படைத்தவனைக் கேலி செய்வதில் அப்படி என்ன சந்தோஷம் இருக்க முடியும்.
  உங்களுக்கும் ,கோமதி அரசுவுக்கும், மறைந்த திருமதி ராஜ ராஜேஸ்வரிக்கும்
  என்றும் என் நன்றிகள்.

  ReplyDelete
 16. எதையுமே அபத்தமாகக் காண்பவர்களை, புரிந்துகொள்பவர்களை யாரும் ஏதும் செய்வதற்கில்லை. அவர்கள் பக்தர்கள் இல்லை. அபத்தர்கள்! பழித்துத் திரிதலே அபத்தர்களுக்கு அழகு!

  ReplyDelete