கருவிலி சுட்டி வேலை செய்யுது!
மேலே சொல்லப்பட்டிருக்கும் என்னுடைய புக்ககமான கருவிலியைப் பற்றிப் பல முறை எழுதி இருக்கேன். படிக்காதவங்க அந்தச் சுட்டிக்குப் போனால் படிக்கலாம். அதில் ஒரு பத்தியில் திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதி இருப்பேன். அந்தக் கோயிலைப் புனர் உத்தாரணம் செய்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் மாமனாருக்கு ஒரு வகையில் சகோதரர். என் மாமனாரின் பாட்டியும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள். ஒரு பெண்ணைக் கருவிலியிலும் இன்னொரு பெண்ணான என் மாமனாரின் பாட்டியைப் பக்கத்தில் இருந்த ஒரு மைல் தூரத்தில் உள்ள பரவாக்கரையிலும் அந்தக் காலத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். இதிலே என் மாமனாரின் குடும்பம் பரவாக்கரைப் பெருமாள் கோயிலுக்கும், அவரின் பெரிய பாட்டியான திரு கிருஷ்ண மூர்த்தியின் பாட்டி குடும்பம் கருவிலி சிவன் கோயிலுக்கும் அறங்காவலர்களாக இருந்திருக்கின்றனர். நாளாவட்டத்தில் திரு கிருஷ்ண மூர்த்தியின் குடும்பம் க்ஷீணித்துப் போய் ஊரை விட்டே சுமார் 1931 ஆம் ஆண்டு வாக்கிலே கிளம்பி விட்டார்கள். அதன் பின்னர் தன் மாமா , அண்ணா போன்றோர் உதவியால் படித்து முடித்த திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களும் இந்த நாட்டுக்கு எவ்வகையில் பயன்பட்டது என்பதைத் தான் நம் இனிய நண்பர் திரு ராய.செல்லப்பா அவர்கள் ஒரு புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்.
"சிகரம் பேசுகிறது" என்னும் அந்தப் புத்தகம் திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லவில்லை. கூடவே இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால நிகழ்வுகளையும் தொட்டுச் செல்கிறது. திருச்சி "BHEL" தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள் யாரும் திரு கிருஷ்ணமூர்த்தியை மறந்திருக்க முடியாது. அதன் தலைவராக இருந்து அவர் அதை ஓர் உன்னத நிலைக்குக் கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும்.
அதைத் தவிர்த்தும் திட்டக்கமிஷன், மாருதி உத்யோக், செயில் எனப்படும் ஸ்டீல் அதாரிடி போன்றவற்றிலும் அவர் பங்கு உள்ளது. அவ்வளவு ஏன்! இப்போது நடந்து வரும் ஜவகர் யோஜனா எனப்படும் நூறு நாள் வேலைத் திட்டமும் அவர் யோசனையின் பெயரில் செயலாக்கம் பெற்றது தான். இம்மாதிரிப் பலவற்றை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். கிட்டத்தட்ட அவர் வாழ்க்கை வரலாற்றையே திரு ராய.செல்லப்பா தொகுத்து அளித்திருக்கிறார். திரு ராய.செல்லப்பாவின் மனைவி திரு கிருஷ்ணமூர்த்திக்குச் சகோதரி மகள் எனக் கேள்விப் பட்டேன். இந்தப் புத்தகத்தைத் தொகுப்பதற்காக திரு கிருஷ்ணமூர்த்தியைப் பல விதங்களில் பேட்டி கண்டிருக்கிறார் திரு செல்லப்பா. நல்லதொரு தொகுப்பு.
சுமார் 420 பக்கங்கள் (சில பக்கங்கள் வண்ணப்படங்கள்) கொண்ட இந்தப் புத்தகத்தைத் "திரு கிருஷ்ண மூர்த்தி அறக்கட்டளை" வெளியிட்டுள்ளது. திரு கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள் என அனைவரையும் பற்றி அறிய முடிவதோடு இத்தனை உயர்ந்த சிகரத்துக்கு வருவதற்கு அவர் பட்ட பாடுகளையும் விவரித்துச் செல்கிறது புத்தகம். அவற்றில் இருந்து முக்கியமான சிலவற்றை மட்டும் வரும் நாட்களில் ஓரிரண்டு பதிவுகளாகக் காண்போம். புத்தகத்தின் விலை சொல்லப்படவில்லை!
கீழே உள்ள பத்தி முன்னர் கருவிலியைப் பற்றி எழுதியபோது திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கேன். சுட்டி மேலே!
சோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று "மாருதி உத்யோக்" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.
திடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.
இராய செல்லப்பா சார் பதிவில் பார்த்தேன். யார் இந்த கிருஷ்ணமூர்த்தி, மெனெக்கெட்டு மொழிபெயர்த்திருக்கிறீர்களே என்று கேட்க நினைத்துக் கேட்கவில்லை. புத்தகம் படிக்கணும்னு ஆர்வம் வருது.
ReplyDeleteஎப்படியோ ஒரு லின்க் போட்டு, உங்க உறவுன்னு வேற சொல்லிட்டீங்க. அப்படிப்பார்த்தால், நீங்க, இராய.செல்லப்பா சார், அப்புறம், பா.வெ, ஜி.எம்.பி போன்று பலர் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான் போலிருக்கு.
தொடர்கிறேன்... கொஞ்சம் சீக்கிரமா எழுதுங்க.
நெ.த. காமாட்சி அம்மாவை விட்டுட்டீங்க! அப்புறமா கௌதமன் சாரோட சம்பந்தி என் மாமனாருக்கு நெருங்கிய உறவு. ஜெயஶ்ரீ நீலகண்டன், நியூசிலாந்து வாசி அவர் என்னோட அப்பா வழிலே சொந்தம்! சூரி சாரைத் தெரிஞ்சு இருக்குமே! சு.தா என அழைக்கப்படும் சுப்புத் தாத்தா! அவரும் என் நாத்தனார் கணவரின் கூட வேலை பார்த்தவர்! இன்னும் இருக்காங்க! மெதுவா நினைவு படுத்திட்டு வரேன்! :))))))))))))
Deleteகாமாட்சி அம்மா என் அண்ணா பெண்ணின் மாமனாருக்குத் தாய்மாமா மனைவி! :)))) கல்யாணத்துக்கு வந்திருக்கணும். உடல்நிலையால் வரலைனு சொன்னாங்க!
Deleteஎன்னாதூஊஊஊ சுப்புத்தாத்தாவும் கீசாக்காவுக்குச் சொந்தமோஓஓஓஓஒ அவ்வ்வ்வ்:).
Deleteபிறகு கீசாக்காவின் பூட்டியின் சித்தியின் பெரிய தாத்தாவின் கொள்ளுப்பேரனின் தங்கையின் மகனின் மூத்த மருமகளின் கட்சி மகனின் கடசி மகளின் மூத்த மகனின் பொண்னுதான் அதிராவாக்கும்... ஹையோ சுத்திச் சுத்திப் பார்த்தா எல்லாமே உறவுக்குள் வருதே.. இந்த ரேஞ்சில போனால் கீசாக்காவின் சொத்தில அதிராவுக்கும் பங்கிருக்கே:))
நான் பிஎச் இ எல் திருச்சியில் இருந்தபோது திரு கிருஷ்ணமூர்த்தி எங்கள் இ டி யாக இருந்தார் எனக்குமவருக்கும் எந்த உறவும் இல்லை
Deleteஜிஎம்பி சார், நெ.த. என்னைத் தான் கிண்டல் செய்திருக்கார்! :)))))) எல்லோரிடமும் ஓர் உறவைக் கண்டு பிடிப்பதைச் சொல்லுவார்! ;))))
Deleteகருவிலிக்கு சென்று வந்திருக்கிறேன் அம்மன் சிலை சர்வாங்க சுந்தரி கொள்ளை அழகு திரு கிருஷ்ண மூர்தியை நன்கு அறிவேன் அவரது நினைவாற்றல் பிரமிக்க வைப்பது திருமதி கிருஷ்ண மூர்த்தி ராஜம் கிருஷ்ண மூர்த்திஎன் மனைவிக்கு நல்ல பரிச்சயம்
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், நிச்சயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். மிக்க நன்றி. இப்போ பங்குனி உத்திரம் அன்று கூட நாங்க எங்க பையர், மருமகள், பேத்தியோடு சென்றோம்.
Delete>>> இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள்... <<<
ReplyDeleteஇந்தத் தகவலுடன் தான் 97 ல் மங்கையர் மலர் புத்தகத்தில் கருவிலி கோயிலைப் பற்றிய செய்திகள் வெளியாகி இருந்தன...
ஆனால் - இன்னும் கருவிலிக் கொட்டிட்டை திருக்கோயிலைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை...
வாங்க துரை சார், 97 ஆம் வருஷம் தான் முதல் கும்பாபிஷேகம் பல்லாண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்றது. அப்போப் போட்டிருப்பாங்க! திருமதி மஞ்சுளா ரமேஷ் அப்போ மங்கையர் மலரின் ஆசிரியர். அவர் எழுதியதும் எனக்கு நினைவில் இருக்கு!
Deleteநல்ல பகிர்வு.
ReplyDeleteநாங்கள் கோவிலுக்கு இரண்டு மூன்று மூறை சென்று இருக்கிறோம்.
வாங்க கோமதி அரசு, கோயில் கும்பாபிஷேஹத்துக்கு முன்னர் 90 களில் பார்த்திருக்கிறீர்களா?
Deleteஅங்கே முதலில் சுட்டி வழியா வாசிச்சிட்டு வந்தேன் .அக்கா உங்களுக்கு ஒன்னு சொல்லணும் .நீங்க ரொம்ப அழகா எல்லாருக்கும் புரியறமாதிரி எழுதறீங்க .கண்ணு எடுக்காம வாசிச்சேன் .கருவிலி பெயர்காரணமும் அறிந்தேன் .
ReplyDeleteஇந்த கோயிலை பார்க்கும்போது அப்படியே கால் செருப்பெல்லாம் கழட்டி வீசிட்டு வெறும் பாதத்துடன் நடந்து போகணும் போலிருக்கு .அத்தனை சுத்தம் அண்ட் தெய்வீகம் .
ம்ம்ம்ம் வாங்க ஏஞ்சல், கருவிலி சுட்டியை வாசிச்சீங்களா? ஏன்னா நீங்க கருத்துச் சொல்லி இருப்பது ஶ்ரீரங்க ரங்கநாதனோனு நினைச்சுட்டேன். :))))) இந்தப் பின்னூட்டங்கள் எல்லாம் மெயில் பாக்ஸுக்கு வராமல் இங்கே awaiting moderation பக்கத்திலேயே பார்க்க வேண்டி இருக்கா! யார் எதுக்குக் கொடுத்திருக்காங்கனு ஒண்ணுமே புரியலை! இதிலே கூகிள் ஒரு வாரமாப் புது கூகிளுக்கு மாறப் போறியா இல்லையானு மிரட்டல் வேறே! :)))) யாரானும் மாறிட்டுச் சொன்னால் மாறலாம்னு இருக்கேன். பாராட்டுக்கு நன்னி ஹை! :)))))
Deleteநான் கருவிலி சுட்டியில் தான் வாசித்தேன் ..அப்புறம் ஆனைக்கு /பூனைக்கு ஒரு காலமிலும் கமெண்ட் கொடுத்தேன் :)
Deleteவாங்க ஏஞ்சல், ஆனைக்கு ஒரு காலத்தில் உங்க கருத்துக் கிடைக்கலையே! எதுக்கும் ஸ்பாமில் பார்க்கிறேன்.
Deleteஅங்கே போயும் பார்த்தேன். ஸ்பாமிலும் இல்லை! :(
Deleteஎன்ன கமெண்ட் கொடுத்தேன்னு நினைவிருக்கு .
Deleteஹை நம்ம ஏரியா .
இந்த மாதிரி ஜீவன்களுக்கு கஷ்ட காலத்தில் உதவ நல்லுள்ளங்கள் இருக்கேன்னு மனசுக்கு சந்தோஷமா இருக்கு .
எங்க அம்மாவை பார்க்க ஒரு ஆஞ்சி ரெகுலரா வருவாராம் .அம்மா கையால் தண்ணி தேங்கா வாங்கி சாப்பிட்டு போவார்னு சொல்வாங்க .அம்மா போனபின் வீடு உள்ளே வரை வந்து தேடினதாம் அப்புறம் போனது பிறகு வரலைன்னா தங்கச்சி .
வாயில்லா ஜீவன்களுக்கு உதவினா காலம் பூரா மறக்காதுங்க அதுங்க ..
இதைத்தான் அங்கே போட்டேன் .பரவால்லை அநேகமா கமெண்ட் போட்டு publish என்டர் பண்ணியிருக்க மாட்டேன் நானு நினைக்கிறன்
Deleteநான் அறியாத விடயம் அறிந்தேன் நூலை வாங்கும் ஆர்வம் மேலிடுகிறது.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, புத்தகம் விற்பதாய்த் தெரியலை. அதில் விலை போடவில்லை. தெரிஞ்சவங்க, நண்பர் வட்டத்தில் கொடுக்கிறாங்க னு நினைக்கிறேன். எதுக்கும் செல்லப்பா சார் வரட்டும்.
Deleteயாருக்கானும் புத்தகம் வேணும்னால் அனுப்பி வைப்பதாகத் திரு கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் திரு ஜி.கண்ணன் சொல்கிறார். புத்தகம் வேண்டும் என்பவர்கள் எனக்கு அவங்க விலாசத்தைத் தனியாக மெயிலில் அனுப்பி வைக்கவும். sivamgss@gmail.com
Deleteநூலுக்கு வாழ்த்துக்கள்.. கருவிலி.. வித்தியாசமான பெயர்... இபடி ஒரு மரப் பெயரும் இருக்கு.. பாதி கறுப்பு பாதி வெள்ளையாக இருக்குமே ஒரு மரம்.. ஊரில் அதில் செய்த உலக்கை இருந்தது. . அந்த மரத்தின் பெயர் கருங்காலி என நினைக்கிறேன்.
ReplyDeleteஅதிரடி அதிரா, முதல்லே சுட்டியைப் போய்ப் படிங்க! கருவிலி பெயர்க்காரணம் புரியும். கருங்காலி வேறே, கருவிலி வேறே! :)))))
Deleteநல்லதொரு அறிமுகம். கருவிலி பற்றி உங்கள் பதிவுகளில் படித்ததுண்டு. புத்தகம் பற்றி இப்போது தான் அறிகிறேன்.
ReplyDeleteவாங்க வெங்கட், நன்னி! :)
Deleteமணி ரத்தினம் டயலாக் போல சுருக்கமாக விளக்கியிருக்கிறீர்கள். என்றாலும் சுவை.
ReplyDeleteஇப்போத் தான் இதைப் பார்த்தேன். நன்றி பானுமதி!
Deleteபுத்தகம் பெயர் என்ன? சிகரம் பேசுகிறது என்று தேடினால் தென்படவில்லையே?
ReplyDeleteவாங்க அப்பாதுரை, ஆன்மிகப் பயணம் பக்கத்தில் உங்க கருத்தைப் பார்த்தேன். ஆச்சரியம் தான்! இந்தப் புத்தகம் விற்பனைக்கு இல்லை என்பதால் கிடைக்காது. உங்களுக்குத் தேவை எனில் விலாசம் எனக்கு அனுப்பினால் நான் கிருஷ்ணமூர்த்தி சகோதரருக்கு அதை அனுப்பி புத்தகம் உங்களை வந்து சேர ஏற்பாடு செய்யலாம். நன்றி
Deleteஇந்தப் புத்தகத்தை செல்லப்பா சார் எங்களுக்கும் கொடுத்திருக்கிறார். ஆமாம் திருகிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவர் மனைவிக்கு மாமா. செல்லப்பா சார் வீட்டிற்கு வந்தாலும் சரி சந்தித்தாலும் சரி நிறைய புத்தகங்கள், மனிதர்கள் பற்றி விஷயங்கள் பகிர்ந்து கொள்வார். தகவல்களும் தருவார்.
ReplyDeleteபுத்தகத்தை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். செல்லப்பா சாரின் மொழி ஆளுமை எல்லோரும் அறிந்ததே. அழகான தமிழ்.
கீதா
அட! செல்லப்பா சார் உங்க நண்பர்னு தெரியாது!
Delete