எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 24, 2018

ஊரைச் சுத்தின கதை!

புதன்கிழமை அன்னிக்குக்  குலதெய்வம் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பெருமாளுக்கு அபிஷேஹம் ஏற்பாடு செய்திருந்தோம். நான் வீட்டிலிருந்து வடைமாலைக்கு வடை தயார் செய்துகொண்டு போனேன். வழக்கம் போல் நம்ம ஆளுக்குக் கொழுக்கட்டையும் உண்டு.  காலம்பர ஐந்து மணிக்கே கிளம்பிட்டோம். ஏனெனில் முதலில் பரவாக்கரை போய்ப் பெருமாள் அபிஷேகம் முடிச்சுட்டு, பின்னர் மாரியம்மனைத் தரிசனம் செய்து கொண்டு பின்னர் கருவிலிக்கு மண்டலாபிஷேகம் வரணும். இம்முறை எங்களுடன் என் கணவரின் உறவினர் (அத்தை பையர்) வந்திருந்தார். அவருக்கு இம்மாதிரிப்பயணம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது என்று சொன்னார்.   கும்பகோணம் தாண்டியதுமே காரைக்கால் வழியாகப் பரவாக்கரை செல்கையில் ஓர் நிழலான இடத்தில் வண்டியை நிறுத்திக் கொண்டு போயிருந்த இட்லியைச் சாப்பிட்டுக் காஃபியையும் குடித்தோம். என்ன தான் சீக்கிரமாகக் கிளம்பினாலும் நாங்கள் போய்ச் சேர எட்டரைக்கு மேல் ஆகிவிட்டது. போகும்போதே பொய்யாப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு ஹெலோ சொல்லிக் கொழுக்கட்டையைக் கொடுத்துட்டுப் பின்னர் பெருமாள் கோயிலுக்குப் போனோம். அங்கே ஏற்கெனவே பட்டாசாரியார் வந்து தயாராக இருந்தார். நாங்க போய் அபிஷேஹ சாமான்கள் மற்றும் பூ, வஸ்திரங்கள் கொடுத்ததும் அபிஷேஹம் ஆரம்பித்தார். ஏற்பாடுகள் செய்து கொண்டு அபிஷேஹம் ஆரம்பிக்க ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது.  அபிஷேஹம் செய்த பட்டாசாரியாருக்கு வேலை புதுசோனு நினைக்கும்படி ரொம்பவே மெதுவாக எல்லாம் செய்தார். அது முடிச்சு வடைமாலை சாத்திப் பிரசாதம் நிவேதனம் செய்து ஆரத்தி காட்டிவிட்டுப் பின்னர் அர்ச்சனை செய்துப் பிரசாதம் கொடுக்கையில் பத்தரைக்கு மேல் ஆகி விட்டது. அதற்குள்ளாகக் கருவிலியில் இருந்து தொலைபேசி அழைப்பு! அவசரம் அவசரமாக மாரியம்மன் கோயிலுக்குப் போனோம்.

பூசாரியிடம் முன்னரே சொல்லி வைத்திருந்ததால் அவர் தயாராகக் காத்திருந்தார். போனதும் ஒரே ஆச்சரியம். அங்கே ஏற்கெனவே நாங்க வந்தால் குளிக்க, கழிவறை பயன்பாட்டுக்கு என ஓர் அறை கட்டிக் குழாய் இணைப்புக் கொடுத்து வைக்கச் சொல்லி இருந்தோம். போன வருஷமே அறை கட்டி இருந்தார்கள். ஆனால் மேலே ஏறப் படிகள் இல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரம் மேலே ஏறிப் போகணும். இப்போ அதெல்லாம் சுத்தமாகப் படிகள் வைத்துக் கட்டி உள்ளே பிரகாரம் முழுதும் கீழே தளம் போட்டு கோயில் சமையலறையை ஒட்டிப் பெரிய ஷெட் போட்டு மிக அழகாகக் கட்டி இருந்தார்கள். ஷெட் போட்டது மிகவும் அருமையாக இருந்தது. படங்கள் எடுக்கணும்னு நினைச்சு எடுக்க முடியலை. சரியா வரலை! :( காமிராவைத் தான் இனிமேல் எடுத்துப் போகணும்! செல்லில் சரியா வரது இல்லை! கோயிலில் அர்ச்சனை முடித்துக் கொண்டு கருவிலிக்குக் கிளம்பினோம்.


கருவிலிக் கோயிலில் நல்ல கூட்டம். கோயிலுக்குள் நுழைந்ததுமே நம்ம ரங்க்ஸின் பழைய உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிக்கத் திரு கண்ணனையும் பார்த்துப் பேசினோம். முகம் தெரியாத நண்பர் ஒருவர் எனக்கு மின் மடல் அனுப்பித் திரு கிருஷ்ணமூர்த்தி பற்றிய "சிகரம் பேசுகிறது" புத்தகம் அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார். திரு கண்ணனுக்கு அவர் விலாசத்தை அனுப்பி இருந்தேன். அவருக்குப் புத்தகம் போய்ச் சேர்ந்து விட்டது. இப்படிச் சில உறவினர்கள், நண்பர்கள் கலந்துரையாடலுக்குப் பின்னர் சுவாமி தரிசனத்துக்குக் கிளம்பினோம்.  மண்டலாபிஷேகம் முடிந்து நடராஜருக்கு அன்றைய தினம் ஆனித் திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோயிலில் இருந்த நடராஜரை யாரோ தூக்கிச் சென்று அவர் எங்கேயோ இருக்கார் இப்போ! கண்டுபிடிக்க முடியலை. இப்போ இருப்பவர் முதல் கும்பாபிஷேகம் ஆனதும் திரு கிருஷ்ணமூர்த்தியின் முயற்சிகளால் புதிதாக வடிக்கப்பட்டது. முன்னே இருந்தவர் கொடுகொட்டித் தாளத்துக்கு ஏற்ற அபிநயத்தில் இருந்திருக்கலாம். இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தக்கொடுகொட்டி திரிபுரத்தை  ஈசன் எரித்தபோது வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலே கைகொட்டி நின்று அட்டகாசம் என்னும் சிரிப்புடன் ஆடிய ஆட்டம் எனப் படித்திருக்கேன். (சிதம்பர ரகசியம் எழுதும்போது) கொடுகொட்டி, கொடுங்கொட்டி என்னும் பெயரில் வழங்கப்படும் இந்த ஆடல் எம்பெருமானின் 108 தாண்டவ வகைகளில் ஒன்று. பழந்தமிழர் இசைக்கருவி ஒன்றுக்கும் கொடுகொட்டி என்னும் பெயர் உண்டு. எட்டுக்கைகளுடன் ஈசன் ஒரு கையில் துடியையும் இரண்டு கைகளில் தோளில் முழவையும் மாட்டிக் கொண்டு பல்வேறு உருவங்களில் நடனம் ஆடியதாகச் சொல்லுவார்கள். இந்தக் கொடுகொட்டி பற்றிச் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிகிறது. மாதவி ஆடிய பதினோரு வகை ஆடல்களில் கொடுகொட்டியும் ஒன்று எனக் குறிப்பிடப் படுகிறது.

கலித்தொகையில் நச்சினார்க்கினியர் இந்த ஆடலைப் பற்றிக் கீழ்க்கண்ட பாடலில் தெரிவிக்கிறார்.  இந்த ஆடலில் அச்சம், வியப்பு, விருப்பம், அழகு ஆகிய நுண்ணுணர்வுகள் காணப்படும் எனவும் நச்சினார்க்கினியர் தெரிவிக்கிறார்.

கொட்டி யாடற் றோற்றம் ஒட்டிய
உமையவள் ஒருபா லாக ஒருபால்
இமையா நாட்டத்து இறைவன் ஆகி
அமையா உட்கும் வியப்பும் விழைவும்
பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க
அவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம்
பொலிய ஆடினன் என்ப"

இத்தகைய அபூர்வமான தோற்றத்தைக் காட்டும் நடராஜர் இப்போ எங்கே இருக்காரோ! நடராஜர் அபிஷேகம் முடிந்ததும் ஈசனுக்கும், நடராஜருக்கும் தீப ஆராதனைகள் நடந்தன. நாங்க அதற்குள்ளாக அம்மன் சந்நிதிக்குப் போனோம். அங்கே சர்வாங்க சுந்தரிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தபடியால் சற்று தாமதித்தே தரிசனம் கிடைத்தது. அங்கே பெண்கள் பலரும் அம்பிகையின் லட்சார்ச்சனையில் பங்கு பெற்று அடுத்து லலிதா சகஸ்ரநாமபாராயணத்துக்குக் காத்திருந்தார்கள். அவர்கலோடு என்னையும் பங்கெடுக்கச் சொன்னாலும் என்னால் கீழே உட்கார முடியாது என்பதால் நான் உட்காரவில்லை. அம்மனைத் தரிசனம் செய்து கொண்டு மீண்டும் சுவாமி சந்நிதி திரும்பி வந்து தரிசனம் முடித்துக் கொண்டு நடராஜரையும் பார்த்தோம். கோயிலில் சாப்பாடு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னதால்  அங்கே இருந்த கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் கோயிலில் சாப்பாடு போட ஒன்றரை மணியில் இருந்து இரண்டு மணி வரை ஆகும் என்றார். திரு கண்ணன் அம்மன் சந்நிதியில் இருந்ததால் நாங்கள் கோயிலுக்குப் போனதும் பேசியது தான். அப்புறம் அவரைப் பார்க்க முடியவில்லை. அவரிடம் விடை பெற முடியவில்லை!

திரு கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் சாப்பாட்டுக்கு நேரம் ஆகும் என்பதோடு கீழே உட்கார்ந்து தான் சாப்பிடவேண்டும் என்பதும் தெரிந்தது. ஆகவே நாங்கள் அங்கே சாப்பாட்டுக்கு உட்காரவில்லை. அதோடு நம்ம ரங்க்ஸுக்குப் பசிக்க ஆரம்பித்து விட்டது. மாத்திரை வேறே போட்டுக்கணும். கூட வந்த அத்தை பையரும் எங்களை விட வயசானவர். அவரும் எத்தனை நேரம் பசி தாங்குவார்! நாங்க பரவாக்கரைக் கோயிலில் பட்டாசாரியார் கொடுத்த தயிர் சாதப் பிரசாதத்தைச் சாப்பிட்டுக்கலாம்னு கிளம்பிட்டோம். கிளம்பும்போது ஒரு மணி ஆகி விட்டது. கும்பகோணத்தில் கோர்ட் வாசலில் வண்டியை நிறுத்திச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அத்தை பையரைத் திருவானைக்காவில் விட்டு விட்டு எங்க வீட்டுக்கு வர நாலு மணி ஆகிவிட்டது.  அதுக்கப்புறமாத் தான். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓ.சா. இன்னிக்கு யாரும் கூப்பிடலை! நான் தான் சமைக்கப் போறேன். :)))))))))

58 comments:

 1. //நான் வீட்டிலிருந்து வடைமாலைக்கு வடை தயார் செய்துகொண்டு போனேன். //

  உங்களுக்கு அங்கிருந்து பக்கம். இதெல்லாம் செய்யலாம். நாங்கள் தூரத்திலிருந்து வந்ததால் அங்கு செங்காலிபுரத்தில் சொல்லிச் செய்யச் சொன்னோம். (வடைமாலை அல்ல, சர்க்கரைப்பொங்கல், வடையும். புளியோதரை உடனே ஏற்பாடு செய்ய முடியாதுன்னுட்டார்.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், சென்னையிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த சமயங்களிலும் மாவிளக்கு மாவு, நெய்க்கொழுக்கட்டை, வடைமாலை வடை தயார் செய்து கொண்டு விடுவேன். முன்னெல்லாம் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் போய்க் கும்பகோணத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு ஊருக்குப் போய் அங்கேயே குளித்து (பால் வாங்கி வைக்கச் சொல்லி இருப்போம்,) காஃபி சாப்பிட்டு விட்டு கொழுக்கட்டை நிவேதனம், மாவிளக்குப் போடுதல், வடைமாலை எல்லாம் செய்துட்டு பட்டாசாரியாரிடமே புளியோதரை, தயிர் சாதம் சொல்லி வைச்சுடுவோம். அதை வாங்கிக் கொண்டு (கூடுதலா சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி செய்திருப்பார்) அங்கே பெருமாள் கோயில் வாசலிலேயே சாப்பிட்டு விட்டுக் கும்பகோணம் திரும்பி ஸ்டேஷனில் ராக்ஃபோர்ட் கிளம்பும் வரை தேவுடு காத்துவிட்டுப் பின்னர் திரும்பிச் சென்னை வருவோம். அன்றிரவுக்கு மாமா கும்பகோணம் ஸ்டேஷனில் டிஃபன் வாங்கிப்பார். நானும், மாமியாரும் மாவிளக்கு, தேங்காய்க் கீற்றுகள், பழங்கள் சாப்பிட்டுப்போம். :)

   Delete
  2. அதன் பின்னர் மெயின் லைனில் வண்டிகள் செல்ல ஆரம்பித்ததும் வெள்ளிக்கிழமை மாவிளக்குப் போட புதன்கிழமையே மாவு தயார் செய்து, கொழுக்கட்டை, வடைமாலை தயார் செய்து கொள்வோம். வியாழனன்று காலை சீக்கிரமே எழுந்து கைக்கு இட்லி, மி.பொடி, சட்னி(நம்ம ரங்க்ஸுக்கு திடீர்னு சட்னி மசக்கை வரும்) பு.சாதம், த.சாதம் இல்லைனா எ.சாதம், த.சாதம் தயார் செய்து கொண்டு டே எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் சோழனில் மதியம் இரண்டரை மணி சுமாருக்குக் கும்பகோணம் வந்து ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கிப்போம். இரவுக்குக் கொண்டு போயிருக்கும் சப்பாத்தி, தேப்லா அல்லது காரபூரி! காலையில் காஃபி சாப்பிட்டுவிட்டுக் குளித்து ஊருக்குக் கிளம்பி மேலே சொன்ன மாதிரி டிட்டோ, டிட்டோ. அன்று உடனே கிளம்பாமல் ஹோட்டலில் வெள்ளியன்று தங்கிவிட்டு மறுநாள் சனிக்கிழமை டே எக்ஸ்பிரஸில் கிளம்பி வருவோம். 2011 ஆம் ஆண்டு வரை இப்படித் தான் நடந்தது. 2012 ஆம் ஆண்டு இங்கே வந்த பின்னர் தான் பேருந்துப் பயணம் ரொம்பவே தாமதம் ஆவதால் நேரடியாக ஃபாஸ்ட் ட்ராக்கில் பயணித்துப் போகிறோம். பேருந்துப் பயணச் சீட்டு, கும்பகோணத்திலிருந்து ஆட்டோவில் கிராமத்துக்குச் செல்லக் கேட்கும் பணம் எல்லாத்தையும் கணக்கிட்டால் இங்கிருந்து நேரே காரில் போவது தான் மலிவு. கும்பகோணத்தில் இருந்து கிராமம் செல்ல 2011 ஆம் ஆண்டே போக வர 800 ரூ கொடுத்தோம். ஆகவே இது சௌகரியமா இருக்கு! முதல்நாளே எல்லாத்தையும் பண்ணிப்பேன். கொழுக்கட்டை நெய்க்கொழுக்கட்டை. வடை மிளகு போட்ட வடை. மி.வத்தல், பெருங்காயம் போடுவதில்லை! மிளகும் உப்பும் மட்டும்.!

   Delete
 2. எங்க குலதெய்வம் கோவிலிலும் அர்ச்சகர் புதுசு. மெதுவா செஞ்சு ங்கள் அடுத்தடுத்த கோவில்களின் பயணத்தைக் தாமதிக்க வைத்தார்!)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வழக்கமான பட்டாசாரியார் ஏதோ கும்பாபிஷேஹத்துக்குப் போயிட்டார். அதனால் எங்களுக்குப் புதுசா வந்திருந்தார். மற்றபடி நன்கு எல்லாம் செய்து தரிசனம் செய்து வைத்தார். பிரசாதமும் இரவு வரை நன்றாக இருந்தது.

   Delete
 3. //படங்கள் எடுக்கணும்னு நினைச்சு எடுக்க முடியலை. சரியா வரலை! //

  ஹீஹீஹீஹீஹீஹீஹீ... எடுத்துட்டாலும்...! எங்களுக்குத் தெரியாதா என்ன!

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கேயும் அதே தானா? :P :P

   Delete
 4. //இந்தக் கோயிலில் இருந்த நடராஜரை யாரோ தூக்கிச் சென்று அவர் எங்கேயோ இருக்கார் இப்போ! கண்டுபிடிக்க முடியலை.//

  திரு பொன். மாணிக்கவேல் அவர்களிடம் சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் சொல்லலாம். 2009/10 ஆம் ஆண்டுகளில் தான் பெருமாளைத் தூக்கிச் சென்று விட்டார்கள். பின்னர் சித்தப்பா மூலம் திலகவதியைப் பிடித்து ஒரே மாதத்தில் மீட்டோம். ஆனால் இவர் இந்த நடராஜர் நான் கல்யாணம் ஆகிப் போகும் முன்னரே காணாமல் போய்விட்டார் என்பார்கள்.

   Delete
 5. //இந்தக்கொடுகொட்டி திரிபுரத்தை ஈசன் எரித்தபோது வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலே கைகொட்டி நின்று .........//

  ஆஹா... நேரமில்லாததால் நீங்கள் சொன்ன இந்த இடத்தை எல்லாம் பார்க்காமல் வந்துவிட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம், முன்னாடியே சொல்லி இருந்தால் பயணத்திட்டம் தயாரித்துக் கொடுத்திருக்கலாம். நாச்சியார் கோயில் வரை போயிட்டு இங்கே போகாமல் வந்துட்டீங்க! அங்கிருந்து அரைமணி நேரப் பயணம் தான்!

   Delete
 6. ஆன்மீக பயணத்தை மூச்சு விடாமல் சொல்லிவிட்டீர்கள்.
  கருவிலிக் கோயில் நடராஜர்பற்றியும், கொடுகொட்டி ஆட்டத்தைப் பற்றியும் அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, அப்பர் தேவாரத்திலே சொல்லி இருக்கார். ஞானசம்பந்தர் சொன்னதாய்த் தெரியலை. என் கல்யாணம் நிச்சயம் ஆகும் முன்னரே இந்தக் கோயில் பத்திக் கேள்விப் பட்ட என் அப்பா இது தேவாரப் பாடல் பெற்ற் ஸ்தலம் என்று சொன்னார். அப்புறமா ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள சித்திரத்தில் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இந்த ஊரின் பெயரும் இருப்பதைக் கண்டு கொண்டோம்.

   Delete
  2. பாடல்பெற்ற தலமானதால் நாங்கள் இரண்டு மூன்று முறை போய் இருக்கிறோம், நாங்கள் போய வந்த பின் உறவினர்களுடன் அவர்களுக்கு காட்ட என்று போய் இருக்கிறோம்.

   Delete
 7. தரிசனம் நலமுடன் முடிந்ததில் மகிழ்ச்சி.

  வண்டியை கும்பகோணம் "கோர்ட் வாசலில்" எப்படி நிறுத்தமுடியும் ?

  அது பெரிய பிரச்சனையாகி விடுமே...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, கில்லர்ஜி, வாகனங்கள் நிறுத்தும் இடம் அதான் அது! இடம் பார்த்துத் தான் ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார்.

   Delete
 8. இனியதான பயணம். இப்படி பயணம் போவது பிடித்த விஷயம்....

  இறைவன் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வெங்கட், மிகவும் இனிய பயணமாக அமைந்தது.

   Delete
 9. உங்களுடன் நானும் தரிசனம் செய்தேன்..

  கருவிலி கொட்டிட்டை அம்பிகையையும் பெருமானையும் தரிசிக்க ஆவலுள்ளவனாக இருக்கின்றேன்..
  மங்கலம் வாழ்க எங்கெங்கும்!...

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை சகோதரரே! நீங்க இன்னும் பார்க்கலை என்பது ஆச்சரியம் தான்!

   Delete
 10. ஊரைச் சுத்தின கதை ரசிக்கும்படி இருந்தது.

  எத்தனை வடைகள் உள்ள மாலை?

  கிட்டத்தட்ட 12 மணி நேரப் பிரயாணம். அலைச்சல்தான், ஆனால் நீங்கதான் சின்னக் குழந்தையாயிற்றே. ஹாஹாஹா

  அடுத்து ஓசிச் சாப்பாட்டுக் கதை வருதா?

  ReplyDelete
  Replies
  1. நெ.த. பனிரண்டு மணி நேரம் சென்னைக்கே ஆகறதில்லை. காலை ஐந்தரைக்குக் கிளம்பி ஏழரைக்குக் கும்பகோணம் போயாச்சு. வழியில் சாப்பிட அரைமணி நேரம் நிறுத்தியதால் எட்டரைக்குப் பரவாக்கரை போனோம். திரும்பும்போதும் அப்படியே ஒரு மணிக்குக் கிளம்பி ஒன்றரைக்குச் சாப்பிட நிறுத்திட்டுப் பின்னர் ஒரே ஓட்டம் தான்! மூன்றரைக்குத் திருவானைக்கா! அங்கே அத்தான் வீட்டில் கொஞ்சம் தாமதம். காஃபி குடிச்சோம். வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு கிளம்பி சரியா நாலேகாலுக்கு வீட்டுக்கு வந்தாச்சு! :))))

   Delete
  2. ஓ.சா. கதை இப்போப் போடலை! இன்னும் கொஞ்சம் ஏதேனும் விஷமங்களோடு ரசிக்கும்படி வந்தால் போடறேன். :)))))

   Delete
  3. 108 வடைகள் கொண்ட முழுமாலை போடணும்னு எனக்கு எண்ணம். ஆனால் அங்கே ஆஞ்சி ஒரு அடி உயரத்துக்குள் தான் இருப்பார். ஆகவே 54 வடைகள் கொண்ட அரைமாலை (மதுரைப்பக்கம் இப்படித் தான் சொல்வோம்) தயார் செய்தேன். வீட்டில் நிவேதனத்துக்கு ஒரு 30 வடைகள். திரும்பி வந்து அக்கம்பக்கம் விநியோகம் செய்தாச்சு.

   Delete
 11. உங்கள் ப்ளானிங்கும் எக்ஸிகியூஷனும் அபாரம்!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, நன்னி, நன்னி, திட்டம் போட்டுப்பேன் என்பது என்னமோ சரிதான். நடத்திக் கொடுப்பது என் கைகளில் இல்லை! :)))) நடத்திக்கிறான் அவனாக! பொதுவா இந்த வேலைக்கு இந்த நேரம்னு ஒதுக்கிட்டுச் செய்வதால் அதிகம் தடுமாறும்படி இருக்காது.

   Delete
 12. கர்ர்ர்ர் 4 கீதாக்கா :) அந்த வடை மாலையை எங்க கண்ணில் காட்டவேயில்லியே ??
  பொய்யாபிள்ளையாருடன் அந்த செல்லப்பிள்ளையாரையும் பார்த்தீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, வடை மாலையைக் கண்ணில் காட்டி இருந்தால் மிஞ்சுமா? :)))))))

   Delete
 13. சொன்ன மாதிரி ஆஞ்சிக்கு வடைமாலை சாத்தினீங்க.எனக்கு வடை அனுப்பலையே.சரி போட்டோ வடையாவது அனுப்புங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஞ்சியை எடுத்த ஃபோட்டோ சரியா வரலை! (எது தான் சரியா வந்திருக்கு? ம.சா. குத்தல், குடைச்சல்) அதனால் போடலை! வடை ஃபோட்டோ கீரை வடை ஃபோட்டோ இருக்கும். அதை எடுத்து வேணாப் போடறேன்.:))))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  3. ஹிஹிஹி மிளகு வ்டையா, வடை நல்ல மொறு மொறு. :)))))

   Delete
 14. /எங்க குலதெய்வம் கோவிலிலும் அர்ச்சகர் புதுசு. மெதுவா செஞ்சு ங்கள் அடுத்தடுத்த கோவில்களின் பயணத்தைக் தாமதிக்க வைத்தார்!)/ அவருக்கென்ன பக்தி சிரத்தையுடன் நின்று நிதானமாகச்செய்தார் கர்மமே கண்ணாயினார் போலும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார், அப்படியும் சொல்லலாம். ஆனால் இங்கே தேவையான அபிஷேஹப் பொருட்களை முன் கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை எல்லாம் எப்படினு தெரியாமல் தடுமாறினார். மற்றபடி அலங்காரம் முடிந்ததும் தீபாராதனை எல்லாம் சரியாகச் செய்தார்.

   Delete
 15. ஆவ்வ்வ்வ் கீசாக்கா எப்போ ஆன்மீகத்தில் குதிச்சாஆஆஆஆ?:).. அப்போ அதிராவைப்போல ஞானி ஆகிட்டாவோ?

  நான் கீசாக்கா இன்றுகூட புளொக் பக்கம் வருவதில்லை என இருந்தேன்[கொஞ்சம் நேரப் பிரச்சனை].. ஆனா என் குறிப்பு திடீரென வந்ததால வேறு வழி?:).. என்னில் ஒரு பழக்கம் புளொக் பக்கம் வருவதில்லை என நினைச்சால் திறந்து பார்ப்பதில்லை:) பார்த்தால் மனம் கேட்காமல் ஜம்ப் பண்ண்டிடுவேன், பின்பு ஒருவரிடம் மட்டும் போனால் அது முறையல்லவே எல்லொரிடமும் போக வேணும். அதுக்கு நேரம் போதாமல் போயிடும் என்பதால்..

  ///பூசாரியிடம் முன்னரே சொல்லி வைத்திருந்ததால் அவர் தயாராகக் காத்திருந்தார். போனதும் ஒரே ஆச்சரியம்.///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரத்தில் பூஸார் எனப் படிச்சிட்டேன்ன்ன்ன்ன்:))..

  பூசாரி எனச் சொல்லாதீங்கோ அது என்னமோ கொஞ்சம் தரக்குறைவான சொல்லாக நினைப்பேன் நான்.. அர்ச்சகர் அல்லது ஐயர் எனச் சொல்லுங்கோ இனிமேல்.

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, தமிழ்ப் புலவி, ஞானி, ஆன்மிகம் வேறே, பக்தி வேறே! எனக்கு பக்தியே அரைகுறை! இதிலே ஆன்மிகத்தில் எங்கேருந்து குதிக்கறது! :))))) உங்களை ரெண்டு நாளாக் காணோமேனு தான் கேட்டேன். நானும் இப்படி எல்லாம் வரக் கூடாது இன்னிக்குனு நினைச்சுட்டு அதே போல் வராமல் இருப்பேன். பதிவு எழுதக் கூடாதுனு நினைச்சுட்டு எழுதாமலும் இருப்பேன்! ஹெஹெஹெ! நீங்களும் நானும் ஒரே ராசியோ? நீங்க என்ன ராசி?

   Delete
  2. பூசாரி தரக்குறைவான சொல் எல்லாம் இல்லை அதிரடி! இங்கெல்லாம் கிராமக் கோயில்களின் அர்ச்சகர்களை கிராமப் பூசாரிகள் என்றே சொல்கின்றனர். பூசாரிகளுக்கு எனத் தனிச் சங்கமே இருக்கு!

   Delete
  3. பின்பு ஒருவரிடம் மட்டும் போனால் அது முறையல்லவே எல்லொரிடமும் போக வேணும். அதுக்கு நேரம் போதாமல் போயிடும் என்பதால்..// ஹைஃபைவ் அதிரா...எனக்கும் இதே எண்ணம்தான்....

   நானும் பூசாரியை முதலில் பூஸாரிடம் என்று படித்தேன் ஹிஹிஹிஹிஹி....

   கீதா

   Delete
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அது என்ன சொல்லி வைச்சாப்போல பூஸார் நினைப்பே ரெண்டு பேருக்கும்!

   Delete
  5. சில கோவில்களில் பூசாரிகள் பூஜகர் என்று தனக்குத் தானே பெயரிட்டு கொள்கின்றனர்.எங்கள் குலதெய்வம் கோவில் பூசாரி பூஜகர் என்றுதான் பிரசாதம் அனுப்புகிறார்.

   Delete
  6. பூசாரோடு சில சமயம் சேம் சைட் கோல்...சில சமயம் எதிரணி...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  7. வாங்க ஜேகே அண்ணா! பூஜகர் என்றும் சிலர் சொல்கின்றனர். கிராமக் கோயில் அர்ச்சகர்களைப் பொதுவாகவே "பூசாரி" என்றே அழைப்பார்கள். கூப்பிடுவதும் அப்படியே கூப்பிடுவது உண்டு. இது இங்கே தமிழ்நாட்டில் சகஜம்.

   Delete
 16. //அதுக்கப்புறமாத் தான். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓ.சா. இன்னிக்கு யாரும் கூப்பிடலை! நான் தான் சமைக்கப் போறேன். :)))))))))//

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு நாள் வெளியே சாப்பிட்டதில் நேத்திக்குச் சாதம் வைக்கப் பாத்திரத்தில் அரிசியைப் போட்டுத் தண்ணீரையும் ஊத்திட்டுக் கடைசியில் அடுப்பை மூட்டவே இல்லை. மோர்க்குழம்பு, தே.துவையல், மிளகு ரசம், புடலங்காய்த் துவட்டல் தயார்! சாப்பிடவரலாம்னு ரங்க்ஸ் கிட்டே அனவுன்ஸ் பண்ணிட்டே சாதப் பாத்திரத்தைத் தூக்கினா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜில்லுனு வைச்சது வைச்சபடியே! :)))) அப்புறம் என்ன! அ.வ.சி. தான்! அடுப்பை மூட்டிப் பெரிசா எரிய விட்டுச் சாதத்தை வடித்தேன். :)))))

   Delete
 17. கீதா சகோதரி/ அக்கா உங்க பயணம் அதுவும் கோயிலுக்கு பிரசாதம் எல்லாம் வீட்டிலிருந்தே செய்து எடுத்துச் சென்று தரிசனம் செய்தது எல்லாம் நல்லபடியாக் முடிந்தது நல்ல விஷயம். மகிழ்ச்சி.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரெண்டு பேருக்கும்.

   Delete
 18. அருமை அருமை. ஒவ்வொரு பயண வர்ணிப்பும், நடந்த விதமும்,
  பதிந்த விவரங்களும் அற்புதம்.
  வெகு அழகு அந்தப் பழைய நடராஜரைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. எங்கே இருக்கிறாரோ கீதாமா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, சிகாகோ தானே! கொஞ்ச நாட்களாக் காணலை. நானும் பிசியா இருந்ததிலே கேட்டுக்கலை. உடம்பு எப்படி இருக்கீங்க?

   அந்தப் பழைய நடராஜரை என் கணவரே பார்த்ததில்லையாம். அவர் குழந்தையா இருந்தப்போவே தூக்கிட்டுப் போயிருக்காங்க போல!

   Delete
 19. வணக்கம் சகோதரி

  தங்கள் ஊரைச் சுத்துன கதை மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. குலதெய்வக் கோவிலுக்குச் சென்று தரிசனம் பெற்று வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  தங்கள் திட்டமிட்டு பயணித்து வந்ததால், கோவில்களுக்கு அந்தந்த நேரத்தில் சென்று தரிசனம் பெற்று வர முடிந்தது. தாங்கள் சென்ற பயணத்தை அழகாக விவரித்து சொன்னதினால், நானும் தங்களுடன் பயணித்து அனைத்து கோவில்களில் தரிசனம் பெற்ற உணர்வை அடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா ஹரிஹரன், உடம்பு தேவலையா? நானும் ஆயுர்வேத மருந்துகளே சாப்பிட்டு வந்தேன். 2005 ஆ ம் ஆண்டு ரொம்ப மோசமான உடல்நிலையில் அலோபதிக்கு வர நேரிட்டது. அதன் பின்னர் அலோபதி தான். ஆனாலும் சில உடல் நோய்கள் ஆயுர்வேதம் அல்லது சித்தாவிலோ தான் தீரும்!

   Delete
  2. மிகவம் முடியாமல் இருக்கும் சமயத்தில் நானும் அலோபதிக்கு மாறியுள்ளேன். ஆனால் இடையிடையே வரும் சில பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதம் பக்க விளைவுகள் தராத மருந்துகளை தொடர்ந்து வருகிறேன் விசாரிப்புக்கு நன்றி சகோதரி.

   Delete
 20. வடையைக் கண்ணுலயே காட்டலை...கொழுக்கட்டையையும் காட்டலை....இதெல்லாம் ஓவர்....கீதாக்கா...எங்களுக்கு கொடுக்காம டிஸ்ற்றிப்யூஷன் வேற செஞ்சுருக்கீங்க...உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....இதை வன்மையாகக் கண்டிக்கிறோம் எபி திங்க கிச்சன் க்ரூ!!!! ஹா ஹா ஹா

  கீதா

  இது நேற்றே அடிச்சு போடும் போது நெட் போச் இபட்த்தன்...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, கீரை வடை ரெசிபியோட போட்டேன். யாருக்கும் தெரியலையே! ஹிஹிஹி, இப்போக் கொழுக்கட்டையும், வடையும் ஃபோட்டோ எடுக்கலை! மறந்துட்டேன். ஆனால் வடைமாலை சாத்தினப்போ எடுக்க முயன்றேன். சரியா வரலை, பட்டாசாரியார் வேறே எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டா! ஜந்தேகமா இருந்தது. முன்னே ஒரு தரம் மூலவரை எடுத்தப்போ எடுக்கக் கூடாதுனு சொன்னாங்க!

   Delete
 21. நீங்கள் விறுவிறுவென்று ஊருக்குச் சென்று வந்தது போலவே பதிவும் விறுவிறுப்பு.!
  கொடுகொட்டி நடனம் பற்றிய தகவல் புதிது.வேறு ஏதாவது கோவிலில் அந்த நடன கோல நடராஜர் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, சிதம்பரம் கோயிலில் ஈசனின் 108 ஆடல் பாவங்கள் இருக்கு. அதிலே பார்க்கணும்னு நினைக்கிறேன். அது எப்படி இருக்கும்னு தெரியாததால் என்னால் கண்டுபிடிக்க முடியலை! என்றாலும் 108 ஐயும் பார்த்தால்/திரும்பத் திரும்பப் பார்த்தால் ஒரு வேளை புரியலாம். வேறே எங்கும் இந்த நடராஜர் இருந்திருக்க வாய்ப்பில்லை. எங்கெங்கு எந்த எந்தத் தாளத்துக்கு ஆடினாரோ அந்தக் குறிப்பிட்ட கோயில்களில் மட்டுமே பார்க்கலாம். ஊர்த்துவ தாண்டவம் எனில் திருவாலங்காடு! ஆனந்த நடனம், சிதம்பரம்! கால் மாறி ஆடியது மதுரை, இப்படி! சில திருக்கோலங்கள் பற்றிச் சிதம்பர ரகசியத்தில் எழுதி இருக்கேன்.

   Delete
 22. ஆன்மிக பயணம் நல்லது. இறைவனை காண்பது மனதுக்கு நிறைவை தரும்.வடை மாலை செய்வது எப்படி என கூரவும்.தெரியாதவர்களுக்கு உதவுமே.

  ReplyDelete