எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 17, 2018

குழந்தைப் பாடல்கள்




நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் "ஆனை, ஆனை" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள பெற்றோருக்குத் தெரியாது எனவும் சொல்லி இருந்தார்.அப்போது என்னிடம் சில பாடல்கள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அங்கே ஓர் சிநேகிதி அவற்றைப் பகிரச் சொல்லி இருந்தார்.ஃபேஸ் புக் மட்டுமில்லாமல் பதிவின் மூலம் பலரும் தெரிஞ்சுக்கலாம்னு இங்கே பதிவாப் போட்டிருக்கேன். குழந்தை பிறந்து ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பாட்டு உண்டு. குழந்தை குப்புறத்திக் கொண்ட பின்னர் சுத்திச் சுத்தி வரும். அதன் பின்னர் ஆறு மாதத்தில் இடுப்பில் வைத்தால் குதிக்கும். அப்போது தான் "சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு குதிச்சதாம்!" பாடுவார்கள். குழந்தையும் அதற்கேற்பக் குதிக்கும்.

பின்னர் தவழ முயற்சி செய்யும் முன்னர் யானையைப் போல் முன்னும், பின்னும் ஆடும். அப்போது

"ஆனை, ஆனை, அழகர் ஆனை" பாடுவார்கள்.


சங்குசக்கர சாமிவந்து
ஜிங்கு ஜிங்குனு குதிக்குமாம்!

கொட்டு கொட்டச் சொல்லுமாம்-அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!

உலகம் மூன்றும் அளக்குமாம்!--அது
ஓங்கி வானம் அளக்குமாம்!

கலகலன்னு சிரிக்குமாம்!--அதைக்
காணக்காண இனிக்குமாம்!

தவழ முயலும்போது ஒரு பாடல்!

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஆடும் ஆனை
கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை
காவேரி நீரைக் கலக்கும் ஆனை
எட்டிக் கதவை உடைக்கும் ஆனை
ஆனையைக் கண்டியா கோலத்தம்பி
கண்டேன் பண்டாரத்தோப்பிலே
சின்ன யானை வருது
சின்னக் கதவைச் சாத்துங்கோ
பெரிய யானை வருது
பெரிய கதவைச் சாத்துங்கோ
கொம்பன் யானை வருது
கொல்லைக் கதவைச் சாத்துங்கோ
குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுதாம்.
பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்.


இன்னும், குழந்தை உட்காரும்போது பெண் குழந்தைக்கு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாயக் கிளியே சாய்ந்தாடு!
குத்துவிளக்கே சாய்ந்தாடு!
கோவில் புறாவே சாய்ந்தாடு!

ஆண் குழந்தை எனில்

ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம்
அது ஐந்து கொழுக்கட்டைக்கு ஆடுமாம்
குட்டிப் பெருச்சாளி ஆடுமாம்
கொழுக்கட்டை கொண்டான்னு கேட்குமாம்


பொதுவான பாடல்கள்

யானை வந்தது யானை
எங்கே வந்தது யானை
சண்டைக்கு வந்தது யானை
சறுக்கி விழுந்தது யானை

பொதுவான பாடல்

காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு பம்பாயி
குந்தோ குந்தோ தலகாணி
குதிரை மேலே சவாரி
ஏன்டி அக்கா அழறே
காஞ்சிபுரம் போகலாம்
லட்டு மிட்டாய் வாங்கலாம்
பிட்டு பிட்டு தின்னலாம்
கண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு
வேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு


தாலாட்டுப் பாடல்கள்

கண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ
செங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ

முத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி
கொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்
நித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்
நூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ?

ஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி
தைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ

யாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது
மானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ
தானோடி வந்து தந்த திரவியமோ
தேனோ திரவமோ திலகமோ சித்தடியோ

சித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்
சுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா

பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே
சித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே
அம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே
அம்மா அடிச்சாளோ அரவணாஇக்கும் கையாலே
மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே


இதுவும் ஒரு வகைத் தாலாட்டுப் பாடல் தான்

செட்டியாரே செட்டியாரே செம்பவழ செட்டியாரே
வைக்கத்து செட்டியாரே கண்டீரோ அம்மானை
கண்டேன் கடையிலே கற்கண்டு வாங்கச்சே
பார்த்தேன் கடையிலே பால் பசுக்கள் வாங்கச்சே

அம்மான் கொல்லையிலே அவலுக்கு நெய் கேட்டு
அம்மான் தன் பொன்னான வாயாலே போவென்று சொன்னானோ
ஆரடிச்சு நீ அழறே உன் அஞ்சனக்கண் மை கரைய
தானே அழுகிறாய் உன் தாமரைக்கண் மை கரைய

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகறது
இது தாய் அடிச்ச கண்ணீரு தாரையா ஒடுறது

ஆறாப் பெருகி ஆனை குளிச்சேறி
குளமாப் பெருகி குதிரை குளிச்சேறி
வாய்க்காலா ஓடி வழிப்போக்கர் காலலம்பி
என் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மலறாய்.

குழந்தை சாப்பிட ஆரம்பிக்கையில்

பச்சைக்கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
கவலையெல்லாம் நீங்கவே
களிப்பெழுந்து பொங்கவே
பவள வாய் திறந்து நீ
பாடுவாயே தத்தம்மா
பையப் பைய பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா


நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்குப் பூக் கொண்டு வா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா


ஒரு வயசுக் குழந்தைக்கு

கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கை வீசு
கம்மல் வாங்கலாம் கை வீசு
காதில் போடலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய்ப் போடலாம் கை வீசு
பள்ளிக்குச் செல்லலாம் கை வீசு
பாடம் படிக்கலாம் கை வீசு
கோயிலுக்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு
தில்லிக்குப் போகலாம் கை வீசு
திரும்பி வரலாம் கை வீசு

குழந்தையைத் தூங்க அழைக்கையில் பாடும் பாடல்

சுக்கான் குத்தறதும், சோறு கொதிக்கறதும்
பிள்ள அழறதும், பேசாதே என்கிறதும்
வா வா என்கிறதும், மாட்டேன் போ என்கிறதும்
சண்டை போடறதும், மண்டை உடையறதும்!

வரகரைக்கிறதும்...
வந்து நிக்கிறதும்...

வாவா என்கிறதும்...
வரமாட்டேன் போ என்கிறதும்..

சுக்கான் குத்தறதும்..
சோறு கொதிக்கிறதும்...

பிள்ளை அழுவதுவும்
பேசாதே என்கிறதும்...

பலர் அழறதும் தாச்சுக்க அழைக்கறதும்

மாட்டேன் என்னறதும் மல்லுக்கு நிக்கறதும்.

இன்னும் குழந்தை வளர்ந்த பின்னர் பாடும் பாடல்கள்

ஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள். அவங்க பெயர் மறந்து போச்சாம். அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.


கொழு கொழு கன்னே
கன்னின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கை கோலே
கோலிருக்கும் கொடி மரமே
கொடிமரத்திலிருக்கும் கொக்கே
கொக்கு வாழ் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டி
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே
என் பெயரென்ன??


ஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.

அம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது. ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது. வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் "கொழுக்கட்டை எங்கே?" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.


அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி?

இதைப் பாடினால் எங்க பட்டுக் குஞ்சுலு கண், கை ஆகியவற்றைக் காட்டும்.

பட்டம் பறக்குது,
பள்ளிக்கூடம் திறக்குது
கோனார் வீட்டிலே
கொய்யாப்பழம் காய்க்குது!



அம்மா பொண்ணுக்கு கல்யாணம்
அவா அவா வீட்டுல சாப்பாடு
கொட்டுமேளம்கோயில்ல
வெத்தலபாக்கு கடையில
சுண்ணாம்பு சுவத்தில

இதுவும் குஞ்சுலுவுக்குப் புரியும். இன்னும் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொன்னால் பல குழந்தைகளும் கை தட்டும். கையை மேலே தூக்கிக் கோவிந்தா போடும். இவை எல்லாம் எட்டு மாசக் குழந்தைக்கான பாடல்கள். எங்க குஞ்சுலுவுக்கு இப்போ விபரம் புரிய ஆரம்பிச்சுடுத்தா! சமயத்தில் மாட்டேன்னு தலையை ஆட்டிட்டுச் சிரிக்கும்.

தாலாட்டுப் பாடல்கள் இன்னும் இருக்கின்றன. 

78 comments:

  1. இதெல்லாம் குஞ்சுலுவுக்கு புரியுமா ?
    ஒருவேளை அம்பேரிக்காவில் இருப்பதாலோ...

    இப்பொழுது செல்லில் டப்பாங்குத்து பாடலை போட்டு பழக்கி விட்டு குழந்தைக்கு சோறு ஊட்டுகின்றார்கள்.

    என்ன செய்வது காலத்தின் கோலம்.

    ReplyDelete
    Replies
    1. ///இப்பொழுது செல்லில் டப்பாங்குத்து பாடலை போட்டு பழக்கி விட்டு குழந்தைக்கு சோறு ஊட்டுகின்றார்கள்//

      karrrrrrrrrrrrrrrrrrகில்லர்ஜி... பெற்றோரைக் குறை சொலாதீங்கோ.. ஆ எண்டலும் ஊ எண்டாலும் இந்தக் காலத்தைக் குறை ஜொள்றதே வேலையாபோச்சு:)... இங்கே பாருங்கோ வீடியோவை:)).. குழந்தை எதுக்குச் சிரிக்குது என:).. அப்போ பெற்றோர் என்னதான் பண்ணுவாங்க:))

      https://www.youtube.com/watch?v=-QaNR-COKCQ

      Delete
    2. வாங்க கில்லர்ஜி! நீங்க சொல்வது உண்மை தான். அதோடு அதிரடி சொல்லுவது போலப் பல பெற்றோர் இப்படித் தான் செய்ய வேண்டி இருக்கோ என்னமோ!

      Delete
    3. என்னுடைய தங்கையின் பேத்திக்கு ஒன்பது மாதமாகிறது. செல்லை அருகில் கொண்டு வந்தால் இவள் அதைப் பார்த்து பயங்கரமாக போஸ் கொடுக்க ஆரம்பிக்கிறாள்!

      Delete
  2. சில பாடல்கள் கேட்டதில்லை. தொகுப்பு இங்கே பகிர்ந்து கொண்டது நல்லது.

    பாடல்கள் அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். இன்னமும் வைச்சிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா வரும்! :)

      Delete
  3. தெரியாத பல பாடல்களைத் தெரிந்துகொண்டேன். நல்ல மொகுப்பு. பலருக்கும் உபயோகப்படும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. உங்களுக்குத் தெரியாது என்பது ஆச்சரியம்!

      Delete
  4. ம்ம்ம் கொழு கொழு கன்னே அப்படி இல்ல. ஒவ்வொண்ணா சொல்லிண்டு போகணும்.
    கொழு கொழு கன்னே என் பேரென்ன? எனக்குத்தெரியாது என் அம்மாகிட்ட கேளு.
    கொழு கொழு கன்னே கன்னின் தாயே என் பேரென்ன?
    எனக்குத்தெரியாது என்ன மேய்க்கிற ஆயன்கிட்ட கேளு.
    கொழு கொழு கன்னே கன்னின் தாயே தாயை மேய்க்கும் ஆயா என் பேரென்ன? இப்படியே கடைசி வரை போகும். நாலு வரி சொன்னதும் குழந்தையும் கூடவே சொல்ல ஆரம்பிக்கும். மனப்பாடம் பண்ண இப்படி ஒரு பயிற்சி!

    ReplyDelete
    Replies
    1. அட! வா.தி. நம்மை எல்லாம் நினைவு வைச்சுட்டு வந்திருக்கீங்க? அதான் ஶ்ரீரங்கத்தில் மழையா? நீங்க சொன்னாப்போல் தான் குழந்தையோடு விளையாடுவோம். இங்கே போடறதைச் சேர்த்தே போட்டேன். :)))))

      Delete
  5. ஆகா...
    கொழந்தையோட கொழந்தையாகிட்டீங்க!...

    பதிவிலுள்ள பாடல்களில் பலவற்றைச் சிறூவயதில் கேட்டிருக்கின்றேன்... அருமை!...

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. துரை சார், மீ எப்போவும் குழந்தை தானே!

      Delete
  6. உங்கள் வீட்டு குழந்தைகளுக்குப் பாடி இருக்கிறீரா பல பாடல்கள் கேட்டது கொழு கொழு கனறே பதிவே எழுதி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டுக் குழந்தைகளுக்கு இவை எல்லாமும் பாடிக் காட்டி இருக்கேன். என்னன்னா குழந்தைங்க நான் பாடிக் காட்டும்போது குரலைக் கேட்டுப் பயந்துக்கும்! :)))))

      Delete
    2. எங்க அம்மா தெரியாத இன்னும் நிறைய பாடல்கள் பாடிய நினைவு இருக்கு. வரிகள் நினைவில் இல்லை. என் மகனுக்கு கூட பாடி இருக்கிறார். இப்போதெல்லாம் யாரும் இதெல்லாம் பாடுவதில்லை என்றே நினைக்கிறேன்.

      Delete
    3. நினைவில் வருவதைப் பகிருங்க, ஶ்ரீராம்.

      Delete
  7. கொழுகொழு கன்றே.. - பாடலை எனது தளத்தில் போட்டிருக்கின்றேன்..
    இணைப்பைத் தேடித் தருகின்றேன்...

    அவசியம் படித்துவிட்டு சாக்லேட் வாங்கித் தரவும்..

    ReplyDelete
    Replies
    1. வரேன், வரேன், இந்த வாரம் முழுசும் கொஞ்சம் பிசி!

      Delete
    2. // அவசியம் படித்துவிட்டு சாக்லேட் வாங்கித் தரவும்..//

      ஹா.... ஹா... ஹா... பல்லி முட்டாய் தான் கிடைக்கும்!

      Delete
    3. / அவசியம் படித்துவிட்டு சாக்லேட் வாங்கித் தரவும்..//

      ஹா ஹா ஹா ஹா இது நல்லாருக்கே துரை அண்ணா அஸ்கு புஸ்கு கீதாக்காவே கொயந்தை நீங்கதான் பாட்டையும் போட்டு பாடிக் காட்டி கொயந்தை கேட்கணுமே அதுக்கு கொயந்தைக்கு சாக்கலேட் கொடுக்கணுமாக்கும்....ஹா ஹா ஹா ரசித்தேன் அண்ணா

      கீதா

      Delete
  8. பல பாடல்கள் கேட்டது கொழு கொழு கன்றே பதிவே எழுதி இருக்கிறேன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் பாடி இருக்கிறீர்களா

    ReplyDelete
    Replies
    1. ஈயின் பெயர் வந்த கதை /http://gmbat1649.blogspot.com/2011/12/blog-post_21.html

      Delete
    2. வாங்க ஜிஎம்பி சார், கொழு கொழு கன்னே தெரியாதவங்களே இருக்க முடியாது!

      Delete
  9. இதுதான் அந்தப் பதிவு...

    என் பெயர் எது?..

    http://thanjavur14.blogspot.com/2015/09/blog-post28bloggersmeet2015.html

    சாக்லேட்டுடன் வரவும்!..

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு வரேன் எப்படியானும். :)

      Delete
  10. சங்கு சக்கரப் பாடல்.. ஆனை அழகர் பாடல் எல்லாம் கேட்டதில்லையே...

    சாய்ந்தாடம்மா தெரியும்.. பெருச்சாளிப்பாட்டுத் தெரியாது..

    ஆனா பெண்குழந்தை என்றால் குத்து விளக்கு:)).. ஆண்கொயந்தை என்றால் பெருச்சாளியா ஹா ஹா ஹா நான் இங்கு யாருக்கும் ஐடியா எடுத்துக் குடுக்கல்லே:)).. அப்போ இங்கு வரும் எதிர்ப்பாலார் எல்லோரும் பெபெபெபெருச்சாளியாஆஆஆஆஆ?:))

    ReplyDelete
    Replies
    1. காகாகா ஆண் குழந்தைன்னா பெருச்சாளினு எல்லாம் சொல்லலை. ஆடறதைத் தான் சொல்றாங்க. எப்படியோ பெண்களை உயர்த்திச் சொன்னால் சரி தானே. ஆணாதிக்கம்னு சொல்ல மாட்டாங்க இல்ல! :)

      Delete
    2. சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுதாம் என்று ஒரு மலேஷியா வாசுதேவன் பாடிய பாடல் உண்டு. ஆனால் அது குழந்தைப் பாடல் இல்லை!

      Delete
  11. யானைப்பாட்டு.., காக்கா காக்காப் பாட்டு தெரியாது.

    //பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே
    அத்தை அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே
    சித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே
    அம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே
    அம்மா அடிச்சாளோ அரவணாஇக்கும் கையாலே
    மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே//

    இது நீங்க வேறு ஒரு பாட்டின் வரிகளைக் கொண்டு வந்து இங்கின ஜொயின் பண்ணியிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    இதன் ஆரம்பம்..
    ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீ அழுதாய்
    அடிச்சாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் பண்ணி வைப்போம்.
    அத்தை அடிச்சாளோ...
    இப்பூடித்தான் வருமாக்கும்..

    ReplyDelete
    Replies
    1. அடிச்சாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்போம்
      தொட்டாரைச் சொல்லி அழு தோள் விலங்கு பூட்டி வைப்போம்

      அ.அ. நேத்திக்குக் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது எத்தனை முறை முயன்றாலும் சில வரிகள் விடுபட்டே போகி விட்டன. அதைச் சரி செய்யறேன் இன்னிக்கு மத்தியானமாவது. மூன்று தாலாட்டுக்களை ஒன்றாகப் போட்டதால் நான் எங்கேயோ இருந்து சேர்த்திருப்பதாய்த் தெரிஞ்சிருக்கு உங்களுக்கு. தனித் தனி எனக் குறிப்பிடவில்லை! :))))

      Delete
    2. //ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீ அழுதாய்
      அடிச்சாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் பண்ணி வைப்போம்.
      அத்தை அடிச்சாளோ...//

      இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று மகுடி திரைப்படத்தில் இடம்பெற்ற "கரத்தோரம் மூங்கில்காடு.." படத்தின் இடையில் வரும் இளையாராஜா பேசுவது.."அடடடா... குழந்தியைப் போட்டு ஏன்மா அடிக்கிறே? அது அழுவுது... அழாதடா ராஜா அக்கா அடிச்சா அண்ணன் இருக்கான் அழுவாத... அண்ணன் அடிச்சா அத்தை இருக்கா அழுவாத... அத்தை அடிச்சா அம்மா இருக்கா அழுவாத... அந்த அம்மாவே போட்டு அடிச்சுப்புட்டான்னு ஆழ்வாரியாடா கண்ணா.. கவலைப்படாதடா ராஜா... என் பாட்டு இருக்கு அழுவாத... அதைக்கேட்டு உறங்கு பொழுதோட...."

      Delete
    3. இரண்டாவது பாடல் ஏலே இலங்கிலிய இன்னும் உறக்கமென்ன.. பாலே பசும்கிளியே ..

      Delete
    4. அதே போல பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக்கிளியே பழம் கொண்டா என்றொரு பழைய திரைப்பாடல் உண்டு...

      Delete
    5. பசுவே பசுவே பால் கொண்டுவா காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா... இது மகனுக்குப் பாடியிருக்கேன். கீதாக்கா நிலா நிலா, சாய்ந்தாடமா. கைவீசம்மா. ஆனை ஆனை, சங்கு சக்கர சாமி எல்லாம் மகனுக்குப் பாடியிருக்கேன்.

      நல்ல தொகுப்பு....கீதாக்கா

      கீதா

      Delete
    6. ஆமாம், ஶ்ரீராம், தி/கீதா, பசுவே பசுவே பால் கொண்டு வா என ஒரு குழந்தைப்பாடல் ஏதோ ஒரு திரைப்படத்தில் வரும்.

      Delete
  12. பச்சைக்கிளி.. நிலா நிலா.. கைவீசம்மா எல்லாம் தெரியும்..

    அதுக்குக் கீழே எதுவும் தெரியாது.. அழகிய பாடல் தொகுப்பு.

    ReplyDelete
  13. எல்லா பாடலும் நன்றாக இருக்கிறது.
    கொஞ்சம் மாறுதல் இருக்கும் பாடலில்.
    நகரத்தார் வீடுகளில் தாலட்டு பாடலை எழுதி படித்து காட்டச் சொல்வார்கள் கல்யாணத்திற்கு முன். பக்கத்து வீட்டு அக்கா நிறைய பாடல் பாடுவார்கள்.
    உங்கள் இனிமையான குரலில் பாடி பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள்.
    பேத்திக்கு பாடி காட்டுகிறீர்களா ஸ்கைப்பில்?
    கேட்டு மகிழ்வாள் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு மாவட்டம் ஒவ்வொரு இனத்தார் எனக் கலெக்‌ஷன் இருக்கு கோமதி. கொஞ்சம் கொஞ்சமா எடுத்துப் போடறேன்.

      Delete
    2. //உங்கள் இனிமையான குரலில் பாடி பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள்.
      பேத்திக்கு பாடி காட்டுகிறீர்களா ஸ்கைப்பில்?
      கேட்டு மகிழ்வாள் இல்லையா?// எனக்குப் பாட்டே/பாடவே வராது. ஆர்வம் உண்டு. ஶ்ரீராம், தி.கீதா, நெ.த. ஆகியோர் பாடல்கள் பத்திப் பேசுகையிலே மௌனமாகப் படித்துக் கொள்வேன். அவங்க சுவாரசியமாப் பேசிப்பாங்க! எவ்வளவு ஞானம் என ஆச்சரியமா இருக்கும்.
      எங்க குட்டிக் குஞ்சுலு எங்களைப் பார்த்ததும் கை தட்டும். சரினு நாம பாடினா மாட்டேன்னு தலையை ஆட்டிட்டுக் கையாலேயும் மாட்டேன்னு சொல்லிட்டுச் சிரிக்கும். அதுக்கா மனசு வரணும். இப்போதைக்குக் கந்த சஷ்டி கவசமும், ஹனுமான் சாலீஸாவும் தான் அதோட விருப்பம்!

      Delete
  14. நான் கூட குழந்தைப் பாடல் பகிர்ந்ததாய் நினைவு. இதில் பல பாடல்கள் புதுசு எனக்கு. எங்கள் வீட்டில் வேறு சில பாடல்கள் பாடுவார் அம்மா. சட்டென நினைவுக்கு வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நினைவு வரும்போது பகிருங்கள் ஶ்ரீராம்.

      Delete
  15. நல்ல விஷயங்களை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

    குழந்தைகள் கை கொட்டும் பருவத்தில்,
    அச்சா பங்கா சோபனமாம்
    அம்மணி பங்கா சோபனமாம்
    அத்தைக்கும் பாட்டிக்கும் சோபனமாம்
    அங்குள்ள பேருக்கும் சோபனமாம்
    சித்திக்கும் அத்தைக்கும் சோபனமாம்
    சின்ன குழந்தைக்கு சோ..பணமாம்
    என்று கையை தட்டி நாம் பாடினால் குழந்தை கை தட்டும்.

    ReplyDelete
    Replies
    1. இது எனக்குத் தெரியாது பானுமதி. இதையும் சேர்த்துக்கறேன்.

      Delete
  16. ஆஹா. நிரம்ப நாட்களுக்கு ஏன் மாதங்களுக்கு பின் வலைப்பக்கம் வந்தேன், அருமையான பாடல்கள் தொகுப்பு. நானும் இதே போல் ஐந்து தொடர்களில் பாடல்களை பகிர்ந்திருந்தேன். நேரம் கிடைத்தால் நான் சின்னவளாய் இருந்த போது எனும் தலைப்பின் கீழ் தொடரும் இப்பதிவுகளை பாருங்கள். முதலிரண்டும் சொந்த அனுபவக்கட்டுரை. அதன் பின் தொடர்வது

    நான் சின்னவளாய் இருந்த போது எனும் சிறுவர் பாடல்கள். https://alpsnisha.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81

    ReplyDelete
    Replies
    1. வாங்க நிஷா, நீண்ட காலம் கழிச்சு வந்தமைக்கும், ரசித்ததுக்கும், மற்றும் சுட்டிக்கும் நன்றி. மத்தியானமாக் கட்டாயமா வரேன்.

      use tinyurl.com for the longest urls.

      Delete
    2. https://tinyurl.com/ycexp3k9

      உங்களோட நீண்ட சுட்டி சுருக்கப்பட்டுக் காணலாம்.

      Delete
    3. உங்கள் பதிவுகளைப் படித்து மனம் நெகிழ்ந்து போனேன்.

      Delete
  17. கீதாக்கா மலரும் நினைவுகளா :) தமிழ் மழலை பாடல்கள் ரொம்ப இனிமை இதில் சாய்ந்தாடம்மா பாட்டு என் குட்டிக்கு பிடிக்கும் .பாடினா கலகலன்னு சிரிப்பா பொக்கை வாயில் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், பிசி? சுருக்கமான கருத்து! ரசனைக்கு நன்றி. :))))

      Delete
    2. சண்டே நைட் அட்டெண்டன்ஸ் வைக்க போட்ட கமெண்ட் .நீங்க மலரும் நினைவுகளை கிளப்பினத்தில் ஓடிப்போய் படங்களை தேடிட்டிருந்தேன் :)
      இருங்க அரிசி வடைய சாப்பிட்டு மீண்டும் வருவேன் :)

      Delete
    3. அரிசி வடை? ஓகோ, இன்னிக்குத் திங்கற கிழமையா! மறந்தே போயிட்டேன். எபிக்கே போகலை இன்னமும். காலையிலிருந்து வேலை சரியா இருக்கு! இப்போ வெளியே போறேன்.

      Delete
  18. அருமையான படைப்பு

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு நன்றி.

      Delete
  19. நேத்து கைவீசம்மாவும் நிலா நிலாவும் கவனிக்கலை :) அது ரெண்டும் பாடிகாட்டியிருக்கேன் .மற்ற பாடல்கள் அவ்ளோ பரிச்சயமில்லை .இப்படி உங்களை மாதிரி யாரவது பகிர்ந்தால்தான் தெரியுது இப்படிலாம் அழகிய பாடல்கள் இருப்பதே எங்களுக்கு .
    என் செல்லம் இங்லீஷ் ரைம்ஸை விட இந்த தமிழ் பாட்டுகளுக்கு குலுங்கி சிரிப்பா .அதான் சாக்குன்னு சாப்பாடு ஊட்டிவிடுவேன் .
    தூங்க வைக்க ரொம்பவே கஷ்டப்படுவேன் இவளை .காலில் போட்டு ஆடி பாட்டுப்பாடி கண்ணுக்குமேலே துணி போட்டு மறைச்சி :)
    ஏழரைக்கட்டை வாய்ஸில் பாட்டுப்பாடி சரி தூங்கியிருக்கும்னு பார்த்தாரெண்டு கன்னங்கள் விரியும் :) உள்ளே மலர மலர கண் விரிச்சி அழுத்தமா சிரிப்பா :)

    ReplyDelete
    Replies
    1. நல்லா ரசிச்சுச் சொல்லி இருக்கீங்க! ஆமா, எட்டு மாசக் குழந்தை துணியை முகத்தில் மூடிக் கொண்டு விளையாடும். செல்லமாக அழும்! அதுக்குத் தெரியும் விளையாட்டுன்னு! சின்ன வயசிலே இருந்து எனக்குத் தோழர்கள், தோழிகள் சின்னக் குழந்தைகள் தான். என் வயசுக்காரங்களோடு அதிகம் பழக அப்பா விட்டதில்லை. பள்ளிச் சிநேகிதம் தான்! அது பள்ளியோடு மட்டும். வீட்டில் அக்கம்பக்கத்துக் குழந்தைங்க தான் என்னோட விளையாட்டுத் தோழர்கள், தோழிகள். யாராக இருந்தாலும் என்னிடம் தைரியமாக் குழந்தைகளை விட்டுட்டுப் போவாங்க!

      Delete
  20. நான் இந்த மாதிரி பாட்டுங்கள நானே இட்டுக்கட்டி பாடுவேன் :) அண்டா குண்டா சட்டி பானைன்னு :) ஒருவேளை அந்த வார்த்தைகள் படு காமெடியா இருந்துச்சோ தெரில என் பொண்ணு விழுந்து சிரிப்பா :) நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு :)
    நான் அடிக்கடி ஒரு சினிமா பாட்டு அது
    பூப்பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா பாட்டு அதை மட்டும் கம்பியூட்டரில் போட்டு விடுவேன் ஆசையா கேப்பா என் பொண்ணு .

    ReplyDelete
    Replies
    1. நீங்க இட்டுக்கட்டிப் பாடிய பாடல்களையும் பகிருங்கள். எல்லோரும் சொல்லிச் சொல்லி அதுவும் பிரபலம் ஆகும்.

      Delete
  21. நினைவுக்கு வரும் சில திரைத் தாலாட்டுப் பாடல்கள் (பழசு)

    அன்பில் மலர்ந்த நால்ரோஜா..
    கண்ணே பசுங்கிளியே
    சிங்காரப்புன்னகை கண்ணார
    பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
    அத்தைமடி மெத்தையடி

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், இவை எல்லாமும் நானும் கேட்டிருக்கேன் என்றாலும் ஒரிஜினல் பாடல்கள் மாதிரி வராதுனு தோணும்.

      Delete
  22. ஆஜர் வரேன் பின்னர்.....ஆழ்ந்து வாசிக்கணும்...மிஸ் செய்த பதிவுகளையும் சேர்த்து...

    கீதா

    ReplyDelete
  23. மிக அருமையான தொகுப்பு...மா


    ஒவ்வொரு பாடலும் ...ஆஹா ...

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு நன்றி.

      Delete
  24. இந்தப் பாட்டெல்லாம் எங்கள் வீட்டிலும் பேரன் பேத்திகள் வரை உண்டு. தூளியில் போட்டு ஆட்டும்போது நீலவண்ணக்கண்ணா வாடா பாடு என்று எங்கள் பசங்க கேட்பார்கள். கண்ணே,கண்மணியே கண்ணுறங்காயோ இப்பவும் மனதில் ஓடுகிறது. நினைவுகளை உசுப்பி விட்டுவிட்டீர்கள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவும், கருத்க்டும் சந்தோஷம் அளிக்கிறது அம்மா. மிக்க நன்றி.

      Delete
    2. கருத்தும், கருத்க்டும் என வந்து விட்டது. மன்னிக்கவும். :(

      Delete
  25. எனக்குத் தமிழ்ப்பாடல்களில் கை வீசம்மா, நிலா நிலா மட்டுமே தெரியும். எங்கள் வீட்டில் மலையாளப் பாடல்கள் தான் ஒலிக்கும். அதுவும் அவ்வளவு இப்போது நினைவில்லை. நல்ல தொகுப்பு சகோதரி.

    துளசிதரன்

    கீதாக்கா ஸாரி தெரியாம துளசியின் கமென்ட் போடும் போது பழக்க தோஷத்தில் என் பெயரை அடித்துவிட்டேன் அவர் கமென்டை தமிழில் டைப்பும் போது...அதை வெளியிட வேண்டாம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. @துளசிதரன்/ எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்மணி மலையாளத்தில் குருவாயூரப்பன் மேல் ஓர் தாலாட்டுப் பாடல் பாடுவார். மிக அருமையா இருக்கும். அந்தப் பெண்மணி இப்போது இல்லை. அடிக்கடி நினைச்சுப்பேன்.

      Delete
  26. என் மகனுக்கு அப்புறம் நிறைய கர்நாடக சங்கீத தமிழ்ப்பாடல்கள் தான் பாடுவேன். அவனைத் தூங்க வைக்க. ஒரு வேளை அதுகாரணமோ என்னமோ அவனுக்கு சங்கீதத்தில் நல்ல ஆர்வமும், கொஞ்சம் ஞானமும் உண்டு. நிறைய கேட்பான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறதுதானே.

      நான், குழந்தைகளை மடியில் போட்டுக்கொண்டு, 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' பாடலையும், 'வெற்றி எட்டுத் திக்கும் என்றும் கொட்டு முரசே' என்ற பாடலையும்பாடுவேன். வீடியோ கிளிப்பில் எடுத்திருக்கிறேன். (இதெல்லாம் பஹ்ரைனில்)

      Delete
    2. தி/கீதா, எனக்குப் பாட்டே வராது. ஆனாலும் என் குழந்தைகள் தாலாட்டுப் பாடலில் "ஆறிரண்டும் காவேரி, அதனடுவே ஶ்ரீரங்கம்" என்ற பாட்டினை ரசிப்பார்கள். அதிகம் ஆக்‌ஷன், கதைகள் தான் அவங்க என்னிடம் தெரிந்து கொண்டது.

      Delete
  27. உங்கள் தொகுப்பைக் குறித்துக் கொண்டேன்....கீதாக்கா

    பயணம் சிறப்பாக அமையட்டும்....நல்லபடியாக அமையட்டும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி, நன்றி தி.கீதா

      Delete
  28. வணக்கம் சகோதரி

    அழகழகான குழந்தை பாடல்கள். மிக அழகாக வரிசைப்படுத்தி தொகுத்துள்ளீர்கள். இதில் சிலவற்றை நான் என் குழந்தைகளுக்கு பாடியுள்ளேன்.
    ஈ கதையாக நான் சிறுபருவத்தில் சொல்ல கேட்டு நானும், அதே கதையை எத்தனையோ கதைகளுடன் குழந்தைகளுக்கும் சொல்லியுள்ளேன்.
    தங்கள் பதிவை படிக்கும் போது பழைய நினைவுகள் வந்தன. சிறப்பான தொகுப்பினை அழகாக, விளக்கமாக பதிந்திருக்ககிறீர்கள். அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவாகவும் இருக்கும்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா ஹரிஹரன்! உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஈ கதை தெரியாதவங்க ரொம்ப அபூர்வம்! எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் ஓரிரு மாற்றங்களோடு!

      Delete
  29. அனைத்தும் அருமை.

    சுக்காங் குத்தறதும்
    சோறு கொதிக்கிறதும்
    பிள்ளை அழுகிறதும்
    பேசாதே எங்கிறதும்

    பாடலில் ”தாலாட்டு பாடறதும்” என்று ஒரு வரி வரும். அதற்கு முதலில் என்ன என்பது மறந்துவிட்டது. உங்களுக்கு தெரியுமா

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரீநி,நினைவில் வரலை. எதுக்கும் இன்னும் யாரையேனும் கேட்டுச் சொல்கிறேன்.

      Delete