எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 15, 2018

சினிமாவும் நானும்!



நேத்திக்குக் காலம்பரலேருந்து மின்சாரமே இல்லை. மத்தியானம்   மூன்றரைக்கு வந்தது. இல்லாட்டி மட்டும் எழுதிக் கிழிக்கப் போறதில்லை. தொடுக்க உதிரிப்பூ நிறைய இருந்ததால் நேரம் அதிலே போயிடுச்சு. பூத் தொடுத்தாக் கொஞ்ச நேரத்துக்குக் கணினியைப் பார்க்கவோ, புத்தகங்கள் பார்க்கவோ முடியறதில்லை. அதனால் போய்ப் படுத்துட்டேன். அரை மணி கழிச்சு எழுந்து வந்தால் மின்சாரம் வரலை. சரினு நான் பார்த்த ஜிவாஜி படங்களைப் பத்தி மனசுக்குள்ளே ஒரு ரீல் ஓட்ட ஆரம்பிச்சேன். முதலில் நினைவு தெரிஞ்சு பார்த்ததுன்னா "வீர பாண்டியக் கட்ட பொம்மன்!" ஆனால் நாங்க பார்க்கப் போனது என்னமோ "கல்யாணப் பரிசு" படம் தான். அது அப்போ மதுரை கல்பனா தியேட்டரில் ஓடிட்டு இருந்தது.

அப்பாவுக்கு ஏதோ திடீர்னு எங்களை சினிமாவுக்குக் கூட்டிச் செல்ல ஆசை வந்து அங்கே போனோம். படம் மத்தியானம் இரண்டரைக்குத் தான் ஆரம்பம். ஆனால் ஒன்றரை மணிக்கே House Full Board   போட்டுட்டாங்க. அடுத்த ஆட்டத்துக்கும் அப்போவே டிக்கெட் கொடுத்து எல்லோரும் உட்கார்ந்திருந்தாங்க. சரினு அங்கே இருந்து மெல்ல நடந்து தெற்கு கோபுர வாசல் போனோம். இது ஒரு கோடி. அது இன்னொரு கோடி. அங்கே தான் நியூ சினிமா இருந்தது. அதிலே தான் வீர பாண்டியக் கட்ட பொம்மன் படம்! அப்போக் காத்தாடிட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். படம் வேறே ஒண்ணு அப்போ ஓடினதாலே அதுவும் கல்யாணப் பரிசுக்கும் டிக்கெட் கிடைக்காதவங்க இதுக்கு வருவாங்கனு இன்னும் அங்கே மாடினி  ஷோ ஆரம்பிக்கலை. அப்போல்லாம் மத்தியானம் 2 மணி ஆட்டம் தான் மாட்னி ஷோ என்பார்கள். ஆகவே நாங்க போன உடனே டிக்கெட் கிடைச்சது. எங்களுக்கு ஏதோ சினிமா பார்க்கணும்னு தான் இருந்ததே தவிர இந்தப் படம் அந்தப் படம் எல்லாம் தோணலை. இதான் எனக்கு நினைவு தெரிஞ்சு நான் ஜிவாஜி  சினிமா பார்த்த கதை!

அதுக்கப்புறமாத் தான் பாசமலர், பாலும் பழமும் எல்லாம் வந்ததோ? நினைவில் இல்லை. ஆனால் பாவமன்னிப்புப் படம் பார்த்தது நினைவில் இருக்கு. இன்னும் "ப" வரிசைப் படங்கள் நிறைய வந்தாலும் பார்க்கலை.  அப்புறமும் ஜிவாஜி படங்கள்னு பார்த்தா பல படங்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவு! அப்பாவுக்குப் பாஸ் கிடைத்தால் எந்தத்தியேட்டர் பாஸோ அதிலே ஓடும் படங்கள் தான் பார்ப்போம். ஆனாலும் சித்தப்பா மூலம் ஒரு சில ஜிவாஜி படங்கள் பார்த்தேன். மேலும் சித்ராலயா ஃபிலிம்ஸ் வீட்டுக்கு எதிரே இருந்ததால் ஶ்ரீதர் இயக்கத்தில் ஜிவாஜி நடிச்ச படங்களான, நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண், கலாட்டா கல்யாணம்,  சவாலே சமாளி, உயர்ந்த மனிதன் போன்ற சில படங்கள் பார்த்தாலும் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமைனு எல்லாமும் இதில் அடங்குமோ? அப்புறமாத் தான் கல்யாணம் ஆனப்புறமா  மூன்று தெய்வங்கள், கௌரவம், ராஜராஜ சோழன், தெய்வப்பிறவி? ஜிவாஜி மூன்று வேடங்களில் நடிப்பாரே அது! அல்லது தெய்வ மகன்? ஹெஹெஹெ ஏதோ ஒண்ணு! இப்படிப் பல பார்த்தாலும் இந்த வியட்நாம் வீடு படத்தையோ பாலும் பழமும் படத்தையோ, பாசமலர் படத்தையோ இன்னிக்கு வரை பார்த்ததில்லை என்ற பெருமைக்கு ஒரே சொந்தக்காரி நான். அந்த நாள், சபாஷ் மீனா போன்ற இன்னும் சில படங்கள் தொலைக்காட்சி உபயம். முதல் மரியாதை கூட அப்படித் தான் தூர்தர்ஷனில் போட்டப்போப் பார்த்தது. தூர்தர்ஷன் மூலம் சில ஜிவாஜி படங்கள் பார்த்திருந்தாலும் நினைவில் வரலை.

கப்பலோட்டிய தமிழன் படமெல்லாமும் தூர்தர்ஷன் தயவு தான். தூர்தர்ஷனில் படங்கள் என ஆனப்புறம் தியேட்டரில் போய்ப் பார்ப்பதே குறைஞ்சும் போச்சு. இப்போக் கொஞ்ச நாட்களாத் தொ(ல்)லைக் காட்சியிலும் படங்கள் பார்ப்பதில்லை.  அதிலும் இப்போதெல்லாம் டிக்கெட் விற்கும் விலைக்கு ஒரு மாசக் காய்/கனிச் செலவுக்குச் சரியா இருக்கும் போல! உடம்பாவது சரியாகும்.  எப்போவுமே முன் பதிவு செய்து திரைப்படம் போனதில்லை. அப்படிப் போன ஒரே படம் , "மை டியர் குட்டிச் சாத்தான்" மட்டுமே!

77 comments:

  1. சிவாஜி பிடிக்காமலியே சிவாஜி படங்கள்
    பார்த்தாச்சாக்கும். கரண்ட் போனால் இன்னும் கதைகள் கிடைக்கும் போலிருக்கு கீதாமா.

    நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, இன்னும் இருக்கு வல்லி. கௌரி கல்யாணமோ, லக்ஷ்மி கல்யாணமோ ஏதோ தெரியலை, வெண்ணீற ஆடை நிர்மலா நடிச்சது, அப்புறமா ஜிவாஜி-கே.ஆர்.விஜயா, பத்துமணீ (ஹிஹிஹி) நடிச்ச ஒரு படம்! ஜிவாஜி -கே.ஆர். விஜயா நடிச்ச இன்னொரு படம் ம்ம்ம்ம்ம்ம்? பூமாலையில் ஓர் மல்லிகைனு பாட்டுக் கூட வரும்! ராமன் எத்தனை ராமனடினு ஒரு படம்? சரியா நினைவில் இல்லை! :)))))) இந்த ஜினிமா விஷயத்தில் நான் ரொம்பவே மக்கு!

      Delete
    2. புதிய பறவை! ஜிவாஜி, சரோஜா தேவி, சௌகார்? அதை விட்டுட்டேன் பாருங்க! இதெல்லாம் பத்தாதா! ஹிஹிஹி க்ளோஸப்பில் அந்த உதடு துடிக்கிறதையும் கழுத்துப் புடைக்கிறதையும் நினைச்சுப் பார்த்தால்! சிப்புச் சிப்பா இருக்கே! :)))))))

      Delete
    3. பூமாலையில் ஓர் மல்லிகை பாடல் படம் 'ஊட்டி வரை உறவு'

      Delete
    4. ஓஹோ, அதுவும் ஶ்ரீதர் படமா? அப்போப் பார்த்திருப்பேன்! ம்ம்ம் காமெடிப் படம் இல்லையோ!

      Delete
  2. தியேட்டருக்கு போய் செலவு பண்ணாமல், டிவியில் கரண்டு செலவு இல்லாமல் மனசுக்குள்ளேயே... ரீல் ஓட்டிப்பார்க்கிறீங்களே...

    ஜிவாசி மூன்று வேடம் தெய்வமகன்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அன்னிக்கு பானுமதி சொன்னாங்களா, ஜிவாஜியோட நல்ல படங்கள் பார்க்கலைனு! அதான் ரீல் ஓட்டினேன். தெய்வமகன் பார்த்துட்டு எங்க அப்பா, அண்ணா எல்லாம் ஒரே உருக்கம்! நமக்கு எப்போவும் போல் சிப்புச் சிப்பா வந்தது! :)))))

      Delete
  3. வாய்ப்பு கிடைக்கும்போது சிவாஜியின் திரைப்படங்களைப் பார்க்க முயலுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயகோ! முனைவர் ஐயா! எனக்கு ஏன் இத்தகைய தண்டனை?? வேண்டாம், வேண்டாம்! :))))))

      Delete
  4. ஜிவாஜி ரசிகர் மன்றத் தலைவியின் பதிவைப் படித்தேன். கிட்டத்தட்ட ஜிவாஜி நடித்த எல்லாப் படங்களும் பார்த்துட்டீங்க போலிருக்கு. ஒருவேளை தியேட்டர்ல பார்த்திருந்தீங்கன்னா, படமெடுத்தவங்களுக்கு வரவு ஜாஸ்தியாகி ஜிவாஜி இன்னொரு வீடும் கட்டியிருக்கலாம். ம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நான் தியேட்டரிலே பார்த்தாலும் காசு கொடுத்தெல்லாம் பார்த்திருக்க மாட்டேனே! கௌரவம், ராஜராஜ சோழன் எல்லாம் அம்பத்தூரில் நாங்க இருந்த சபா மெம்பர்கள் அனைவருக்கும் ஃப்ரீ ஷோ போட்டாங்க! குடும்ப நபர் இருவருக்கு இலவசம். அதிகப்படி ஆள் இருந்தால் டிக்கெட்! எங்களோடு இருந்த மைத்துனருக்கு டிக்கெட் வாங்கினோம். எங்க ரெண்டு பேருக்கும் இலவசம். பேருந்து ஏற்பாடெல்லாம் செய்து அழைத்துப் போனாங்க. அயனாவரம் சயானி தியேட்டர்!

      Delete
    2. ?/ஜிவாஜி ரசிகர் மன்றத் தலைவியின் பதிவைப் படித்தேன். // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், :)))) படங்கள் பார்த்ததால் தானே விமரிசிக்க முடியுது! இல்லைனா சொல்ல முடியுமா! ;))))))

      Delete
  5. கீதாக்காக்கு அப்போ எந்த நடிகரை பிடிக்கும் :)
    வசந்த மாளிகைதான் சிவாஜி அங்கிளின் முதல் படம் நைட் ஷோ . நான் பார்த்தது எங்க வீட்டு பக்கத்தில் ஒரு தியேட்டர் இருக்கும் அதில் பழைய படங்கள் மட்டுமே போடுவாங்க ஆனா சேமியா ஐஸும் ரோஸ்மில்க் ஐஸும் பன்னீர்சோடாவும் நல்லா இருக்கும் .அதை சாப்பிட வாங்கித்தருவங்கா எங்க பெரியப்பா பிள்ளைங்க அவங்களோட துணைக்கு போனப்போ பார்த்தது :)
    அப்புறம் எல்லாம் டிவியில் பார்த்தப்படங்கள் தான் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், வசந்த மாளிகைனு தமிழிலேயும் ப்ரேம் நகர் னு ஹிந்தியிலேயும் இந்தப் படத்தைப்பார்த்துட்டு நொந்து நூலாகிட்டேன்! ஜெயலலிதாவோட, "எங்க மாமா!" இதுவும் ஹிந்தியிலேயும், தமிழிலேயும்! இப்படி எல்லாம் பார்க்க வைச்சா நொந்து போகாம என்ன செய்யறதாம்! எல்லாம் சித்தப்பா உபயம்!

      Delete
    2. ஹாஹா :) பாவம்க்கா நீங்க :) குச்சி ஐஸ் சாப்பிட்டுட்டு நான் பாதிலேயே தூங்கிட்டேன் :)
      எங்க வீட்ல இராமநாராயணன் ,தேவர் பிலிம்ஸ் அப்புறம் பரதநாட்டியம் ஸ்பெஷல் / சாமீ படங்களைத்தான் எங்களை பார்க்க அனுமதிப்பாங்க :)
      அதான் இன்னும் நாலுகால்ஸ் பின்னேயே நான் சுத்தறேன் :) பைரவர் நடிச்சார்ன்ற ரீசனுக்காக கேப்டன் படங்களெல்லாம் பார்த்திருக்கோம் :)))))))))
      எங்கப்பா தீவிர ஜிவாஜி ரசிகர் :) ஆனா எனக்கு கல்யாணம் ஆனபின்தான் ரிட்டையர் ஆனதால் வீட்டில் தினமும் டிவிடி /சிடி போட்டு உருகி உருகி டெய்லி 2 படம் பார்த்தார்னு தங்கச்சி புலம்பினா :)நல்லகாலம் அப்போ நான் வெளிநாட்டில் :)

      Delete
    3. ஏஞ்சல், எங்கே உங்க பூஸாரை இந்தப் பக்கமே காணோம்! மொக்கைனா அவங்களுக்குப் பிடிக்குமே! :) அப்புறமா எனக்கு எந்த நடிகர், நடிகையையும் பிடிக்காது. நல்ல படமாக இருந்தால் பார்ப்பேன். அப்போ அந்த நடிகர் நல்லா நடிக்கிறார்னு தோணும். அந்த வகையில் பார்த்தால் அருண் விஜய், அப்புறமாச் சில படங்களில் வரும் பெயர் தெரியாத இரு நடிகர்கள் நடிப்பும் பிடிக்கும். இயல்பாக நடிப்பார்கள். அலட்டல் இருக்காது!

      Delete
    4. கீசாக்கா நியுப் போஸ்ட் போட்டிருக்கிறாவாமே?))... ஒரு வட்சப் அனுப்பியிருக்கலாமெல்லோ என் செக் க்கு:)) எனக்க்குச் சொல்லச்சொல்லி கர்ர்ர்:)).

      கீசாக்காவின் போஸ்டில ஒரு பிரச்சனை என்னவெனில்.. எங்கள் நேரம் காலையில் கொமெண்ட் போட்டா மட்டுமே பப்ளிஸ் பண்ணுவா.. இல்லை எனில் எவ்ளோ கஸ்டப்பட்டு ஓடிவந்து கொமெண்ட்ஸ் போட்டாலும் அடுத்த அடூஊஊஊஊஊஊஊத்த நாள் காலையிலதான் வரும்.. அதனால இப்போ எதுக்கு நாளிக்குப் போடலாமே என விட்டிட்டுப் போன தருணங்களும் உண்டு:)) ஆனா இன்று அப்படியில்லையாக்கும்:))).. இந்தக் கொமெண்ட் கூட இனி 24 மணித்தியாலத்தாலதான் வெளியே வரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      Delete
    5. ஹாஹாஹா, காலை நேரம் கருத்துகள் வந்தால் பதில் சொல்ல முடியாது. காலை வீட்டு வேலை இருக்குமே. அதுக்குள்ளே உங்க நேரம் மாறீட்டா நான் என்ன செய்யறதாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    6. //ஒரு வட்சப் அனுப்பியிருக்கலாமெல்லோ// ஒரு லட்சம்னு படிச்சுட்டேன். ஹிஹிஹி

      Delete
    7. அதிரடி, நேத்தே கேட்க நினைச்சு மறந்துட்டேன், நீங்க எ.பி.யிலே பார்த்தாலே என்னோட புதுப் பதிவுகள் தெரியும்! எங்கே! ஒழுங்காப் பார்த்தாத் தானே! :))))

      Delete
    8. எப்பவுமே காசைப் பத்தியே நினைப்பூஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சேர்த்துச் சேர்த்து வச்சிருப்பது போதாது?:)

      Delete
    9. grrrrrrrrrrrrrrrrrவாட்சப் நம்பர் கொடுத்தாப்போல கேட்டால் அப்பூடித் தான் பதில் வரும்! நறநறநற

      Delete
  6. சிவாஜி கணேசனைப் பிடிக்கிறதோ இல்லையோ வீரபாண்டியக் கட்ட பொம்மன் என்றாலோ வா உ சி என்றாலோ பலருக்கும் அவரது கதாபாத்திரம்தான் நினைவுக்கு வரும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அது என்னமோ அப்படி நினைக்கிறாங்க! ராகவேந்திர சுவாமிகள் என்றாலே ரஜினி முகம் போல் வரையறாங்க இல்லைனா சிலை அப்படி இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  7. முதல்ல போட்டுருக்கிற படத்துக்கு என்ன அர்த்தம்!?...

    உங்களைப் பார்த்ததுமே ஜிவாஜி மிரண்டு போய்ட்டார்!...ன்னு நெனைக்கிறேன்!..

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அது எந்தப்படம்னு தெரியலை! நம்ம மன்னர் இருந்தாச் சொல்லி இருப்பார்! அவர் என்னமோ ஆன்மிகச் சுற்றுலாவில் மூழ்கிட்டார்.

      Delete
    2. >>> ஹிஹிஹி, அது எந்தப்படம்னு தெரியலை!..<<<

      என்னங்க நீங்க.. இப்புடிச் சொல்லீட்டிங்க?...

      கர்ணன் படத்திலிருந்து அந்தக் காட்சி...

      Delete
    3. ஹிஹிஹி அ.வ.சி. கர்ணனா அது! அந்தப் படம் என்னமோ நினைவிலேயே இல்லை! இத்தனைக்கும் ரீலுக்கு ரீல் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் என்னனு சொல்லிடலாம். உயர்ந்த மனிதன் பார்த்த மாதிரியே இதையும் பார்த்தாச்சு! நான் என்னமோ ராஜராஜ சோழனோனு நினைச்சேன். நீங்க சொன்னப்புறமாப் பார்த்தால் நெத்தியிலே சூரியப் பொட்டு! என்ன போங்க! ஜினிமா விஷயத்திலே இன்னும் படிச்சுத் தேற முயல்கிறேன். முடியலை! :)))))

      Delete
  8. @ KILLERGEE Devakottai15 June, 2018

    >>> தியேட்டருக்கு போய் செலவு பண்ணாமல், டிவியில் கரண்டு செலவு இல்லாமல் மனசுக்குள்ளேயே... ரீல் ஓட்டிப் பார்க்கிறீங்களே... <<<

    இந்த ஜாமார்த்தியம் எல்லாம் வேற யாருக்காவது வருமா!...

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெஹ், அதானே!

      Delete
  9. வணக்கம் சகோதரி

    முதல் வரவிலேயே நல்ல நகைச்சுவை பதிவின் மூலம் வருகை தருகிறேன். உங்கள் எழுத்தினில் நல்ல நகைச்சுவை உணர்வு பரிமளிக்கிறது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

    சிவாஜி யாரென்று தெரியாமலே அவர் நடித்த படங்களின் ஜோடிகளின் பெயருடன், பாடல்களும், கதையுமாக ரீல் ரீலாக பதிவு அமர்க்களம். கரண்ட் இல்லாத போது தயாரிக்கப்பட்ட பதிவை ரசித்தேன். இனியும் சிவாஜி அருளினால்
    (நான் சொல்வது வீர தீர சத்ரபதி சிவாஜி) தங்கள் பதிவுகளை தொடர்கிறேன்.

    என தளம் வந்து கருத்துக்கள் தந்தமைக்கு மிகவும் நன்றிகள். தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நன்னியோ நன்னி! ஜிவாஜியை யாருனு தெரியாமலா! அதெல்லாம் தெரியும். படங்கள் தான் குழப்பும். சில படங்கள் நினைவில் இருக்கும். :))))) வரேன், வரேன், உங்க பதிவுக்குக் கருத்துச் சொல்லாமயே படிச்சிருக்கேன். கூட்டுக் குடும்பம் பதிவில் தான் கருத்துச் சொன்னேன். :))))

      Delete
  10. நன்றாக நடிக்கும் எல்லா நடிகர்களையும் எனக்குப் பிடிக்கும் என்று நீங்கள் கூறியிருக்கலாம்.அருண் விஜய் என்றதும் நான் நிஜமாகவே வாய் விட்டு சிரித்து விட்டேன். அருண் விஜய்யெல்லாம் நேற்று பெய்த சிவாஜியின் நடிப்பு என்னும் மழையில் முளைத்த காளான்.
    ஆனால் இது காளான்களின் காலம் அல்லவா..?

    எப்படியோ நீங்கள் ஒரு பதிவு எழுத நான் காரணமாக இருந்திருக்கிறேன். நன்றியை நானே எடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, நன்னி சொல்லலையா? நன்னி, நன்னி! அப்புறமா நடிப்புன்னா இயல்பா இருந்தால் தான் நல்லா இருக்கு. அருண் விஜய் காளானோ என்னமோ தெரியாது! அவர் நடிப்பார் என்பதே அந்த ஒரு படம் பார்த்துத் தான் எனக்குத் தெரியும்! :))) பார்த்தவரை வெகு இயல்பாகச் செய்திருந்தார். அலட்டலே இல்லை. அதே போலீஸ் அதிகாரி வேடத்தில் ஜிவாஜின்னா! கடவுளே! நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது!

      Delete
    2. முதல் மரியாதை படத்தில் ஜிவாஜிக்கு பாரதிராஜா சொன்னது தான் நானும் இங்கே சொல்றேன். இயல்பாக இருந்தாலே போதும்.

      Delete
    3. அருண் விஜய்யோ, வெறும் விஜயோ.... அந்த நேரத்தில் நடித்திருந்தால் அவர்களும் இப்படிதான் நடித்திருப்பார்கள். காலத்தில் யாரும் மாற்றம்தான் இவை எல்லாம்.

      Delete
    4. க்ர்ர்ர்ர்ர்ர் விஜய் எல்லாம் ஒரு நடிகரா? அதுக்கு அஜித் பரவாயில்லை. முகத்தில் சட்டுச் சட்டுனு பாவங்கள் மாத்துவார். :)

      Delete
    5. அப்புறமா அருண் விஜய் நடிச்சு நான் பார்த்தது அந்த ஒரு படம் மட்டும் தான். அந்தப் படத்தில் தான் அவரும் நடிக்கிறார் என்பதே தெரியும். விமரிசனம் கூடப் போட்டிருந்தேன். அம்பேரிக்காவில் பார்த்தது தான். சமீப காலத்து அநேகப் படங்கள் அங்கே நெட்ஃப்லிக்ஸ் மூலம் பார்த்தவையும் கூட!

      Delete
  11. எனக்கு சிவாஜி நடிப்பு பிடிக்கும். ஆனாலும் சிவாஜி ஃபேன் என்னும் tag ஐ மாட்டிக்கொள்ள விருப்பம் இல்லை. சிவாஜியின் தீவிர ரசிகர்கள் மற்ற நல்ல நடிகர்களை புறம் தள்ளி விடுவார்கள். நான் அந்த தவறை செய்ய விரும்பவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கதை அம்சத்தையும் பார்த்துத் தான் நடிப்பு! அந்த வகையில் பல நல்ல நடிகர்கள் இருப்பாங்க தான்! ஒவ்வொரு படத்தில் அந்தப் படத்தின் கதை அம்சம், இயக்குநரின் திறமை, காமிராக் கோணம் போன்றவை மட்டுமில்லாமல் பாடல்கள் நன்றாக அமைவதும் ஒரு காரணம். அப்படிப் பார்த்தால் இப்போது வரும் படங்கள் பார்க்கும்படியாவே இல்லைனு நினைக்கிறேன். சினிமான்னா என்னனு புரியாம அவங்க அவங்க கருத்தைத் தெரிவிக்கப் படம் எடுக்கறாங்க! :)))))))

      Delete
    2. அந்த வகையில் பார்த்தால் ஹேமமாலினியை விட அவர் மகள் இஷா தியோல் அருமையாக நடிக்கிறார். நஸ்ருதீன் ஷா வெட்னஸ்டே என்றோ என்னமோ ஒரு படம்! அருமையாக நடிச்சிருப்பார். ஒரு சாதாரண ரயில் பயணீயாக வருவார். இயல்பான நடிப்பு. தொய்வே இல்லாமல் படம் போகும்.

      Delete
    3. /சிவாஜியின் தீவிர ரசிகர்கள் மற்ற நல்ல நடிகர்களை புறம் தள்ளி விடுவார்கள். //

      இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

      Delete
    4. //ஹேமமாலினியை விட அவர் மகள் இஷா தியோல் அருமையாக நடிக்கிறார். //

      ஹேமமாலினி நடிப்பாரா என்ன? ஆனால் இஷா - பார்க்க சகிக்க முடியவில்லை!

      Delete
    5. என்ன செய்யலாம்? கேமமாலினி அழகு மட்டும் தான். அதுவும் முன் தலை வழுக்கையை மறைக்கலைனாப் பார்க்கச் சகிக்காது. அந்தக் காலத்தில் ஶ்ரீதர் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு வந்தப்போ எடுத்த படங்களை ஏதோ ஒரு சினிமா பத்திரிகையில் பார்த்தேன். சகிக்காது! ஆனால் பின்னால் தன்னை முன்னேற்றிக் கொண்டார். அந்த வகையில் ஶ்ரீதேவியை அடிச்சுக்க ஆள் இல்லை. வைஜயந்தி தனி!

      Delete
    6. இஷா என்று தெரியாமலேயே அவர் நடித்த படங்கள் இரண்டு மூன்று பார்த்துட்டு அப்புறமாத் தான் தெரிஞ்சது ஹேமமாலினியின் மகள் என! :))) உண்மையில் அவர் நடிப்புத் திறன் ஆச்சரியம் அளித்தது.

      Delete
  12. // இல்லாட்டி மட்டும் எழுதிக் கிழிக்கப் போறதில்லை. //

    எழுதி கிழிக்காட்டிலும் பறவாயில்லை:)) வாற கொமெண்ட்ஸ் ஐ டக்கு டக்கெனப் பப்ளிஸ் பண்ணுங்கோ அது போதும் கர்ர்ர்:))

    ///தொடுக்க உதிரிப்பூ நிறைய இருந்ததால் நேரம் அதிலே போயிடுச்சு//

    உண்மையிலயே உதிரிப் பூக்கள் என ஒரு பூ இருக்கோ?.. உதிரிப் பூக்கள் படம் முன்பு திரும்ப திரும்ப ரிவியில் போட்டார்கள்.. நானும் திரும்பத்திரும்பப் பார்த்தனே:))

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் பதில் சொல்லும்போது நீங்க கமென்ட் போடுவதில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உதிரிப்பூக்கள் படம் நானும் பார்த்திருக்கேன், தொ(ல்)லைக்காட்சியில் தான். :) அஸ்வினி, அந்த நடிகர் பேர் என்ன விஜயனா? இப்போ இல்லைனு நினைக்கிறேன். அவர் நடிப்பும் நல்லா இருக்கும். மகேந்திரனுக்காகவே பார்த்த படம் அது!

      Delete
    2. //மகேந்திரனுக்காகவே பார்த்த படம் அது!//

      அப்போ உங்களுக்காகப் பார்க்கல்ல:) கர்:)) எப்பவுமே நான் சினிமா பார்ப்பதில்லை எனச் சொல்லிச் சொல்லியே முழுச் சினிமாவும் பார்த்திடுவா.. :) கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ரஜனி அங்கிளைப் போய்ப் பார்க்கல்லயா?:)

      Delete
    3. அதிரடி, அப்படி எல்லாம் போய்ப் பார்ப்பதில்லை. ரஜினி படம்னா ஆரம்ப காலங்கள் வந்த ஒரு சில படங்கள்! அதுவும் தொ.கா. உபயம்! இந்தப் படையப்பா, படையப்பானு சொல்றாங்க. பாட்ஷா அல்லது பாதுஷா! இதெல்லாம் பார்த்ததே இல்லை! ரஜினி படத்தில் முள்ளும் மலரும், ஆறு முதல் அறுபது வரை ரெண்டு தான் பிடிச்ச படம்.

      Delete
    4. முழு சினிமாவும் பார்த்துடுவேன். ரைட்டோ ரைட்டு! அப்படிப் பார்த்தால் தான் பிடிக்கும். தியேட்டரில் என்றால் விளம்பரங்களில் இருந்து பார்த்தாகணும்! அதுக்காகவே நம்ம ரங்க்ஸ் தியேட்டரே வேணாம்னு விட்டுட்டார்! :))))

      Delete
    5. //எழுதி கிழிக்காட்டிலும் பறவாயில்லை:)) வாற கொமெண்ட்ஸ் ஐ டக்கு டக்கெனப் பப்ளிஸ் பண்ணுங்கோ அது போதும் கர்ர்ர்:))
      .//

      ஆம்.. ஆம்... ஆமோதிக்கிறேன். கன்னாபின்னான்னு ஆமோதிக்கிறேன். கீதா ச்ச்சாம்பசிவம் மேடம் இதை எல்லாம் நீங்க கவனிக்கணும்!

      Delete
    6. //கீதா ச்ச்சாம்பசிவம் மேடம் இதை எல்லாம் நீங்க கவனிக்கணும்!//"மேடம்!" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    7. அப்போ "மேடம்"குதான் கர்ர்ர்ர்ர் ரா? ச்ச்ச்சாம்பசிவம் கு இல்லையா? நீங்க மட்டும் ச்ரீராம் ங்கறீங்க...!!!​

      :))))

      Delete
  13. //இப்படிப் பல பார்த்தாலும் இந்த வியட்நாம் வீடு படத்தையோ பாலும் பழமும் படத்தையோ, பாசமலர் படத்தையோ இன்னிக்கு வரை பார்த்ததில்லை என்ற பெருமைக்கு ஒரே சொந்தக்காரி நான்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இரண்டையும் யூ ரியூப்பில் பாருங்கோ இரண்டுமே சூப்பர்.. ஆனா கொஞ்சம் கவலையானவை.. அனைத்தும் அழகிய பாடல்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹையோ, உங்களைக் காணலையேனு கூப்பிட்டால் எனக்குத் தண்டனையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் பார்க்க மாட்டேனே! பாட்டுக்கள் பிடிக்கும், கேட்பேன்.

      Delete
  14. கீசாக்காவின் இன்றைய போஸ்ட்டை நினைச்சா எனக்கு நினைவுக்கு வரும் வசனம்..

    கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்ன்ன்ன்ன்
    காத்தடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்ன்..:))

    உங்கட பேவரிட் ஹீரோவின் படப் பாடல் கீசாக்கா.. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))

    ReplyDelete
    Replies
    1. யாரு அந்த ஹீரோ? உலக்(கை) நாயகன்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு அவர் நடிச்ச காமெடிப் படங்கள் பிடிக்கும். மை.ம.கா.ரா. பஞ்ச தந்திரம், தெனாலி போன்ற படங்கள் பார்த்திருக்கேன். ஹே! ராம் பார்த்துட்டு நொந்து போயிட்டேன். அந்த பயத்தில் தசாவதாரம், விஸ்வரூபம் எல்லாம் பார்க்கவே இல்லையே! தப்பிச்சுட்டேன்!

      Delete
    2. நீங்க பார்க்காத அந்தப்படங்களோடு ஹே ராம் உம் பார்க்கல்லியே நான்.. படக் கட்டங்கள் பார்ப்பேன் பிடிச்சால் மட்ட்டுமே படம் பார்ப்பேன்ன்..

      Delete
    3. நல்லவேளையா பார்க்கலையோ பிழைச்சீங்க! :)

      Delete
  15. நெய்வேலியில் இருந்த வரை குடும்பத்துடன் சென்று வருவோம் - முன்பதிவு செய்து! ஒரு முறை ஏற்பட்ட குழப்பத்தில் படம் பார்ப்பதை விட்டு விட வேண்டியிருந்தது!

    இப்போதெல்லாம் டி.வி.யில் கூட படம் பார்ப்பதில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,பார்க்கிறாப்போல் இருந்தால் தானே! :(

      Delete
  16. முதலில் நான் பார்த்த திரைப்படம் எது என்று யோசித்துப் பார்க்கிறேன். நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. சபதம்? சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால் கருப்பு வெள்ளைப் படம் எல்லாம் பார்த்துதான் தொடங்கினேன். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் இருக்கும் ராஜேந்திரா என்கிற டூரிங் டாக்கீஸ்தான் முதல் தியேட்டர்! அது நினைவில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சபதம் படம் கே.ஆர்.விஜயா இல்லையோ? கூட யார் ரவிச்சந்திரனா? டி.கே.பகவதி வில்லன்!

      Delete
    2. சபதம்

      அதே படம்தான்.. "தொடுவதென்ன தென்றலோ மலர்களோ என்கிற அற்புதமான பாடல் இடம்பெற்ற திரைப்படம்!

      Delete
    3. எனக்கு அந்தப் படத்தில் நினைவிருக்கும் பாடல்,"வெள்ளாட்டின் சபதம்!" தான்! படம் நல்ல விறுவிறுப்பாக இருந்தது. (அந்தக் காலத்தில்!)

      Delete
  17. கல்பனா தியேட்டர்? நான் அங்கு முதலில் பார்த்த படம் நீர்க்குமிழி! அப்பாவும் நானும்! "சைக்கிளை எடு" என்று சொல்லி அப்பா பின்னால் உட்கார்ந்துகொள்ள (சைக்கிள் நகரும்போது அவருக்கு ஏறி உட்காரத் தெரியாது) இருவரும் சினிமா போனோம். சைக்கிளுக்கு டிரைவர் வைத்துக் கொண்ட மிகச் சிலரில் அவரும் ஒருவர்.

    ReplyDelete
    Replies
    1. நீர்க்குமிழி பார்க்கும் முன்னரே "ஆனந்த்" ஹிந்தியில் பார்த்துட்டதால் நீர்க்குமிழி ரசிக்கலை. அதே போல் தான் கோல்மால் பார்த்துட்டதாலே தில்லுமுல்லு ரசிக்கலை! பாலச்சந்தரும் காபி, பேஸ்ட் தான் என்பதும் அப்போத் தான் புரிந்தது. அதன் பின்னரே இன்னும் சொல்லப் போனால் அரங்கேற்றம் படத்தில் இருந்தே பாலச்சந்தர் பிடிக்காமலும் போய் விட்டது. :))))

      Delete
  18. வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வரும்போது வெளிவந்த எம் ஜி ஆர் படம்
    எது என்று தெரியவில்லை... நானும் இதுவரை பாலும் பழமும் உட்பட நிறைய படங்கள் பார்த்ததில்லை. உயர்ந்த மனிதன் போன்ற படங்கள் எல்லாம் ஸ்ரீதர் படம் இல்லை என்று உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கட்ட பொம்மன் படம் 59 ஆம் அல்லது 60 ஆம் ஆண்டு வந்திருக்கணும். ஏன்னா நான் மூணாப்புப் படிச்சிட்டு இருந்தேன். அதற்கும் முன்னால் வந்து வெற்றிகரமாய் "மதுரை வீரன்" எம்.ஜி.ஆரோட படம் ஓடிட்டு இருந்ததுனு நினைப்பு. வெள்ளி விழாக் கண்ட முதல் எம்.ஜி.ஆர். படம்.

      Delete
    2. "உயர்ந்த மனிதன்" ஏ.வி.எம். தயாரிப்பு. நன்றாகவே தெரியும். நான் சொல்வது பொதுவாய் ஶ்ரீதர் இயக்கத்தில் வந்த படங்கள் எதுவானாலும் பார்த்திருப்பேன். அந்த வகையில் ஶ்ரீதர் இயக்கி ஜிவாஜி நடிச்ச படங்களும் அடக்கம்! :))))

      Delete
    3. உங்களுக்காக ஒரு திரைச் செய்தி.

      எம்ஜியார் ஒரே ஒரு படம்தான் ஏவிஎம்முக்காக நடித்துக்கொடுத்தார் என்று தெரியும். அந்தப் படத்தின்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதற்கு அப்புறம் எம்ஜியாரே ஆசைப்பட்டும் ஏவிஎம் எந்தப் படத்திலும் அவரை நடிக்கக் கூப்பிடவில்லை. 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிக்க எம்ஜியார் ஆசைப்பட்டார். ஆனால் ஏவி மெ. செட்டியார், இந்தக் கதை சிவாஜிக்குத்தான் என்று சொல்லிவிட்டார். (ஸ்ரீராம் - ஆதாரம் கேட்டீங்கன்னா அந்தப் பக்கங்களை வாட்சப்பில் அனுப்புவேன்)

      Delete
    4. எம்.ஜி.ஆர் படங்கள் தயாரிப்பில் ரொம்பக் குறுக்கிடுவார். எல்லாம் அவர் இஷ்டப்படியே நடக்கணும் என்பார். ஏவிஎம்மிடம் அது நடக்காது. அதனால் கூப்பிட்டிருக்க மாட்டார்கள்.

      Delete
    5. அன்பே வா தான் ஏ வி எம் பேனரில் எம் ஜி ஆர் நடித்த படம். உயர்ந்த மனிதன் படத்தை எம் ஜி ஆர் தான் இது தம்பிக்கேத்த கதை என்று சிபாரிசு செய்ததாய்ப் படித்திருக்கிறேன். மேலும் அதில் அசோகனுக்கு சிவாஜி நடிப்பு சொல்லிக் கொடுத்தபோது ஏ வி எம் சரவணனிடம் அசோகன் சந்தேகப்பட்டாராம்... ஏ வி எம் சரவணன் எழுதி படித்தது இது.

      Delete
    6. "அன்பே வா!" நிறையத் தரம் பார்த்தாச்சு! அதில் நாகேஷ் காமெடியில் கூட எம்.ஜி.ஆர். குறுக்கிட்டதாய்ச் சொல்வார்கள். ஶ்ரீராம் சொன்ன மேற்கண்ட செய்தியைக் கூட (உயர்ந்த மனிதன்) ஃபில்ம் நியூஸ் ஆனந்தன் எழுதிப் படிச்ச நினைவு.

      Delete
  19. >>> இன்னும் சொல்லப் போனால்
    அரங்கேற்றம் படத்தில் இருந்தே பாலச்சந்தர் பிடிக்காமலும் போய் விட்டது... <<<

    மிகச் சரி.. எனக்கும் இப்படித்தான் பிடிக்காமல் போனது...
    ஆனாலும் அவ்வப்போது பாலச்சந்தருடைய படங்களை பார்க்க நேர்ந்தாலும்
    வறுமையின் நிறம் சிவப்பு எனும் படத்திற்குப் பிறகு
    முற்றிலும் பிடிக்காமல் போனது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அவர் படங்கள் சொல்லும் நீதி 'அ'நீதியா இருக்கும். :( அதிலும் சிந்து பைரவி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதை நியாயப்படுத்தி வேறே சொல்லுவார்.

      Delete
  20. துளசி: நான் அப்போதெல்லாம் நிறைய படங்கள் பார்ப்பதுண்டு. சிவாஜி எம்ஜியார் என்று...அதன் பின்னும் நிறைய படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் இப்போது ஒரு சில நினைவில் இருக்கு. சிலது இல்லை.

    கீதா: நான் அத்தனை படங்கள் பார்த்ததில்லைக்கா. எனக்குப் பார்க்கப் பிடிக்கும் ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாததால். பார்த்தாலும்ஸீன் எல்லாம் நினைவு இருப்பதில்லை. மீண்டும் மீண்டும் பார்க்கும் சீன்ஸ் மட்டுமே நினைவிலிருக்கும். அப்படி நான் ரசித்து பார்த்த படங்கள் என்றால் மலையாளத்தில் மணிச்சித்திரத்தாழ், பரதம். தமிழில் கொலை இந்த இரண்டும்...

    தமிழில் சில படங்கள் நான் ரசித்துப் பார்த்ததுண்டு. த்ரில்லர் மற்றும் நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete