நாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் போவோம். முக்கியமாய்க் கருவிலி கோயிலில் சென்ற வருடம் மூன்றாம் முறையாகக் கும்பாபிஷேகம் நடந்தது. அதுக்கு எங்களால் போக முடியலை. ஆகவே இந்த வருஷம் மண்டலாபிஷேகத்துக்குக் கலந்து கொள்ளலாம் என்னும் எண்ணத்தில் நாளைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எப்படியும் சாயந்திரம் ஆகும் வர. ஆகவே பதிவில் கருத்துக்களுக்குப் பதில் சொல்லலைனு யாரும் நினைக்க வேண்டாம். சாயந்திரம் வந்து கணினியில் உட்கார நேரம் கிடைக்குமா என்று தெரியலை. ஆகவே முக்கியமா அதிரடி, அதிரடியா வந்து கமென்ட்ஸை வெளியிடவில்லை எனப் பொயிங்க வேண்டாம்! செரியா?
நலமுடன் தரிசனம் கண்டு வந்து பகிர்க...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு! - தொடர்ச்சி
ReplyDeleteகோவிலுக்குப் போய்விட்டு வந்தவுடன், 'மாவிளக்கு' பதிவும் போடுவேன். ஜாக்கிரதை.
ஹாஹாஹா, மாவிளக்கு அடுத்த மாசம்! இந்தத் தரம் ஃபோட்டோ எடுக்கப் பார்க்கிறேன்.
Deleteபத்திரமாகச் சென்றுவாருங்கள். பிரசாதம் ரெடி பண்ணிக்கொண்டே செல்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஆமாம், அதான் சொல்லிட்டுத் தான் வந்தேன்!
Deleteஇப்படி முன்பே அறிவிப்ப்தால் யாரும் கவலையுடன் காத்திருக்க மாட்டார்கள்
ReplyDeleteஹிஹிஹி, சில சமயம் சொல்லக் கூடாதுனு சொல்லாமல் போயிட்டு வந்து சொல்லுவேன். :)
Deleteசந்தோஷமா போயிட்டு வாங்க கீதாக்கா ,வரும்போது கும்பகோணம் ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் மறக்கவேணாம் :))
ReplyDeleteஏஞ்சல், அது என்ன கும்பகோணம் சிறப்பு? காஃபி தான் சொல்வாங்க! ஸ்நாக்ஸ்? என்ன அது?
Deleteநல்லபடியா போயிட்டு வாங்க... கொஞ்சம் முன்னாலேயே பிளான் பண்ணியிருந்தால் நாம் குடந்தையில் சந்தித்திருக்கலாம்...
ReplyDeleteஎங்களோடது ஒரு மாசம் முன்னாடியே போட்ட ப்ளான். ஏன்னா நேத்துத் தான் கருவிலி கோயிலின் மண்டலாபிஷேஹம். அதை ஒட்டித் தான் குலதெய்வக் கோயிலும் போனோம். நீங்க வாரக் கடைசியில் போனீங்க போல! அப்போக் கருவிலி கோயிலில் விசேஷம் ஏதும் இல்லையே!
Deleteபயணம் சிறக்க வாழ்த்துகள்! எஞ்சாய்...
ReplyDeleteவாங்க வெங்கட், போயிட்டு வந்தாச்சு!
Deleteஹா ஹா ஹா ... சே..சே..சே.. இந்த அதிரடியால:)) கீசாக்காவுக்கு நிம்மதியே இல்லை:)) ஆசையா குலதெய்வத்தைப் பார்க்கப் போகும்போதுகூட நிம்மதியாகப் போக வழியில்லையே ஹா ஹா ஹா:))
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, எத்தனையோ பார்த்தாச்சு! நீங்க ஜுஜுபி!
Deleteஹா ஹா ஹா அப்பூடி எனில் சந்தோசம், இன்னும் தெகிறியமா ஓட்டலாம் கீசாக்காவை:)
Deleteசெய்ங்க! :)))))
Delete///ஆகவே முக்கியமா அதிரடி, அதிரடியா வந்து கமென்ட்ஸை வெளியிடவில்லை எனப் பொயிங்க வேண்டாம்! செரியா?//
ReplyDeleteஹா ஹா ஹா இம்முறை போஸ்ட்டில எதுவுமே இல்லயே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) காலையில போய் ஈவினிங் வருவதை எல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கொண்டு.. ஏதோ தானும் மோடி அங்கிளைப்போல ஃபேமஸ் எனும் நினைப்பு:)) ஹா ஹா ஹா:)) கீசாக்கா கோயிலால திரும்பி வருவதற்குள் நான் ஓடிப்போய் ஒளிச்சிடுவேனே:)) அவவால ஸ்பீட்டா ஓட முடியாதே:))
இப்போல்லாம் வேகமா நடக்க ஆரம்பிச்சுட்டேனாக்கும்! அது ஒரு ரகசியம். சொல்ல மாட்டேனே! :)
Deleteநல்ல படியாகப் போய் வாருங்கள்.
ReplyDeleteநன்னி ரேவதி!
Deleteநீங்கள் சொல்வது கருவிலிக்கொட்டை என்னும் ஊரா? கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்
ReplyDeleteசற்குணநாதேஸ்வரர்-சர்வாங்கநாயகி (நாவுக்கரசர் பாடியது) கும்பகோணத்திலிருந்து 20 கிமீ தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது. அக்கோயிலுக்கு நாங்கள் கோயில் உலாவின்போது சென்றுள்ளோம்.
வாங்க முனைவர் ஐயா. ஆம், கொட்டிட்டைக்கருவிலி! கொடுகொட்டி என்னும் தாளத்துக்கு ஈசன் இங்கே ஆடினானாம். அந்தத் தாளத்துக்கு ஏற்ப ஆடின நடராஜர் எங்கேயோ இருக்கார். இப்போ திரு கிருஷ்ணமூர்த்தி அவருடைய முயற்சியால் வேறே நடராஜர் செய்து வைச்சிருக்காங்க!
Deleteசர்வாங்க சுந்தரியும் கொட்டிட்டை ஈசனும்
ReplyDeleteகுலங்காத்து அருள்வார்களாக!...
வாங்க துரை சார், நன்னி!
Deleteபயணம் நன்றாக அமைந்ததா கீதாக்கா/சகோதரி
ReplyDelete----இருவரின் கருத்தும்...
நல்லா இருந்தது துளசி/கீதா!
Deleteபயணம் இனிதே அமைக !
ReplyDeleteநன்னி, நன்னி!
Delete