எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 09, 2018

"காலா"வதியான விமரிசனம்! :)

நல்லவேளையா இந்த சினிமா பார்க்கும் ஆவல் என்னிடம் குறைவாக இருக்கு! எப்போவோ பார்ப்பேன். அப்படிப் பார்த்தாலும் நல்ல படங்களாகப் பார்ப்பேன். இந்தக் "கபாலி" "காலா" எல்லாம் பார்க்கலைனு வருத்தமே இல்லை. இரண்டிற்கும் வந்த விமரிசனங்களைப் பார்த்தாலே புரிகிறது எப்படி இருக்கும் என்பது. அதுவும் இப்போது வந்திருக்கும் காலா! ஹூம்! என்னத்தைச் சொல்றது! ராவண காவியமாம்! விமரிசனங்களைப் படிக்கும்போதே புரிந்து விடுகிறது. ரஜினி இதைப் புரிந்து கொண்டு தான் நடித்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. எப்படியோ போகட்டும். நாங்க பார்க்கப் போவதில்லை. கடைசியாப் பார்த்த ரஜினி படம் (தியேட்டரில் எல்லாம் ரஜினி படம் பார்த்ததே இல்லை!) தொலைக்காட்சியில் முத்து? சரியா நினைவில் இல்லை. இரு மனைவிகள்! ஒண்ணு மீனா, இன்னொண்ணு ரோஜா? அதுவும் நினைவில் இல்லை! ஆனால் முடிவு என்னனு தெரியறதுக்குள்ளாக  என்ன காரணத்தினாலோ தொடர்ந்து பார்க்கலை! இந்தப் "படையப்பா"னு ஒரு படம் வந்ததே! அதை நான் இன்னமும் பார்த்ததே இல்லை! ஹெஹெஹெஹெ! கடைசியாப் பார்த்த ரஜினி படம் 2011 ஆம் வருஷம் அவர் நடிச்ச "ஜிவாஜி" மறந்தே போயிட்டேன். அப்போ அம்பேரிக்காவில் இருந்தோமா!  பொண்ணு வற்புறுத்தி அனுப்பி வைச்சா!


இன்னிக்கு மருத்துவரைப் பார்க்கப் போனோமா! அங்கே ரொம்ப நேரம் ஆச்சு! அப்போ அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில், "அன்புள்ள அப்பா!" என்றொரு படம்! இந்த மாதிரிப் பார்க்கிறது தான் நான் சினிமா பார்ப்பது! இல்லைனா இல்லை. முன்னெல்லாம் ஜீ தொலைக்காட்சியிலோ சோனி தொலைக்காட்சியிலோ ஸ்டார் மூவிஸிலோ எப்போவானும் படம் பார்ப்பேன். இப்போ கேபிள் போய் செட் டாப் பாக்ஸ் வந்ததும் அதிலே எங்கே எந்த சானல் இருக்குனு கண்டு பிடிக்கிறதே பெரிய விஷயம்! :))) ஹெஹெஹெ ஹீரோநம்ம ஜிவாஜி தான்! அவர் பெண்ணாக நதியா! நான் படம் பார்க்கிறச்சே நதியாவுக்குக் கல்யாணம் நடக்குது! யார் அந்த மாப்பிள்ளை? ரகுமானா? ஒரே புள்ளி புள்ளியாக சரியாகப் படம் வரலை! ஆனாலும் ஓரளவுக்குப் புரிஞது. கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீடு செல்லும் நதியா அப்பா நினைவில் உருகி உருகி உருகி உருகி! முதல் இரவிலேயே வீட்டுக்குத் தன்னந்தனியாத் திரும்பிடறாராம். அம்புட்டு அன்பு அப்பா மேலே! எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கையில் ரசிகர்கள் எப்படி எல்லாம் இதற்கு எதிர்வினை ஆற்றி இருப்பாங்க என்றே நினைக்கத் தோன்றியது. எல்லோரும் அப்படியே உருகிப் போய் அழுதிருப்பாங்கனூ நினைக்கிறேன். மீ வழக்கம் போல் சிரிப்பு. நல்லவேளையா யாரும் கவனிக்கலை! :)

இந்த மாதிரி முதல் இரவு அறைக்குள் விட்ட பெண்ணோ, மாப்பிள்ளையோ பாதி இரவில் திரும்பக் கூடாது எனச் சொல்லுவாங்க ஒரு காலத்திலே! அதெல்லாம் சினிமாவில் அதுவும் ஜிவாஜி ஜினிமாவில் எடுபடாது போல! அவரும் பெண்ணையே நினைச்சுட்டு உட்கார்ந்திருகாரா! திரும்பி வந்த பெண்ணைப் பார்த்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டு விடறாராம். முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதோ இப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு! அப்புறமா நதியாவுக்குக் குழந்தை பிறக்கப் போகுதுனு நினைக்கிறேன். வளை அடுக்கினாங்க! நான் மருத்துவரைப் பார்த்துட்டுத் திரும்பிட்டேன். என்ன குழந்தைனு தெரியலை. மண்டையை உடைக்குது! யாரானும் சொல்லுங்களேன். எப்போ வந்த படம்னும் தெரியலை! 

50 comments:

  1. உங்க இடுகையைப் படித்தா, இவங்க சொல்றது 'முத்து' படமா, 'வீரா' படமா இல்லை 'முத்துவீரா'ன்னு இன்னொரு படமா என்ற சந்தேகம் வருதே.

    பாதிப்படம் பார்த்துட்டு முழுக்கதையைச் சொல்லும் ஒரே விமர்சகி நீங்கதான்னு நினைக்கறேன். ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெஹெ, நான் எப்போ முழுப்படம் பார்த்திருக்கேன்! அப்போ இதிலே சொல்லி இருக்கற படம் முத்துவா? வீராவா? முத்துவீராவா? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    2. இது வீரமுத்து.

      Delete
    3. இரண்டு பொண்டாட்டி கதை வீராதான். "கொஞ்சிக் கொஞ்சி அலைகளோட" என்ற ஒரு நல்ல பாடல் உண்டு அந்தப் படத்தில்!

      Delete
    4. //tanku, tanku! :))))//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்படி ஒரு படம் இல்லையே:))

      Delete
    5. அதிரடி, அது கில்லர்ஜிக்குச் சொன்ன பதில்!

      Delete
  2. நதியாவுக்கு என்ன குழந்தை பிறந்தது இதுதான் இப்ப நாட்டுக்கு அவசியமாகி விட்டதா ?

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் என்ன நிஜத்திலே நதியாவுக்கு என்ன குழந்தைனு கேட்டேனா? சினிமாவில் தானே! அதுவும் பாதியில் பார்த்தேன்! ஆரம்பிச்சு எத்தனை நாழி ஆச்சோ! எப்போ முடிஞ்சதோ!

      Delete
  3. வெகு ஜன விருப்பங்களில் காலா இருப்பதுபோல் தோன்றுகிறது நானும் தியேட்டருக்குப்போய் படம் பார்த்தி ஆண்டுகள் ஆகி விட்டன கடைசியாக என் மூத்தமகனுடன் சென்னையில் ஒருமல்டிப்லெக்சில் கமல ஹாசன் நடித்த தூங்காநகரமோ என்னவோ நினைவில்லை படம்புரியவே நேரமாயிற்று

    ReplyDelete
    Replies
    1. இப்போதைய மனோநிலையைப் பிரதிபலிக்கலாம். தெரியலை! பொதுவாகவே நான் இந்த நடிகர்கள், நடிகைகள் மேல் அதீதமான பக்தி கொள்வதில்லை. படம்னா அதில் கொஞ்சமாவது யதார்த்தம், அர்த்தம் இருந்தால் தான் பார்க்க முடியும்!

      Delete
  4. அந்த ஜிவாஜி படத்துல -
    மரகதவல்லிக்கு மணக்கோலம்...ன்னு, ஒரு பாட்டு கொஞ்சம் நல்லாருக்கும்...

    மீசையில்லாத ரஹ்மான்!?... அது ஒரு கஷ்டகாலம்!..

    மத்தபடி - என்னா புள்ளை பொறந்தது.... எப்போ பொறந்தது... -ன்னெல்லாம் ஞாபகம் இல்லை!!!...

    ReplyDelete
    Replies
    1. மருத்துவமனைங்கறதாலே ஒலியே இல்லை. மௌனப் படம் தான். ஆனால் ஜிவாஜி மூஞ்சியைப் பார்த்துப் பாட்டுனு புரிஞ்சது! அவருக்குத் தான் தலை மயிர்,புருவத்திலே இருந்து உணர்ச்சியிலே துடிக்குமே! :)))) கடைசியில் அது ரகுமான் தானா? எனக்கு அவர் நடிப்பு சினிமாவை விட தொலைக்காட்சித் தொடர்கள் வந்தப்போ ரொம்பப் பிடிச்சது! அலட்டல் இருக்காது! சமீபத்தில் அம்பேரிக்காவில் ஒரு படம் பார்த்தேன்! அசத்தல்!

      Delete
  5. >>>> இந்த மாதிரி முதல் இரவு அறைக்குள் விட்ட பெண்ணோ, மாப்பிள்ளையோ பாதி இரவில் திரும்பக் கூடாது எனச் சொல்லுவாங்க ஒரு காலத்திலே!..<<<<

    இப்படியெல்லாம் வகுத்து வெச்சது அந்தக் காலத்து கிழவன் கிழவி....ங்க தானே!...

    Attached B/R இல்லாத அந்தக் காலத்துல -
    எப்படியெல்லாம் சின்னஞ்சிறுசுகள கொடுமைப்படுத்தி இருக்குதுங்க - இந்தக் கிழடுகள்!?...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
    Replies
    1. துரை சார்... இதுல ஒரு அர்த்தம் இருப்பதை நீங்கள் கவனிக்கலையா? பயத்துல வெளியே போயிடக்கூடாது என்பதுதான் காரணமாக இருக்கலாம். இன்னொண்ணு, அதுக்கு முன்னால ஒரு ஒழுங்கு (உணவுல) உண்டு.

      இப்போ நாகரீக காலம். எல்லாவற்றையும் சிந்தித்து அதுக்கு ஏத்தமாதிரி சவுகரியம் செய்யும் காலம். ரொம்ப வருஷமாவே, ஹோட்டல்லதான் இந்த ஃபங்ஷன்(?) பல திருமணங்கள்ல நடக்குது. அதாவது, அன்றைய மாலையிலிருந்து 3 நாளைக்கு ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிடறாங்க. அதுக்கு எல்லா ஸ்டார் ஹோட்டல்லயும் பேக்கேஜ் இருக்கு.

      Delete
    2. ம்ம்ம்ம், கழிவறை பத்தி நான் நினைக்கலை! ஒரு வகையில் இது கொடுமை தான்!

      Delete
    3. என்னோட கடைசி மைத்துனருக்கும், பெரிய மைத்துனர் பிள்ளைக்கும் ஓட்டலில் தான் முதல் இரவு! சூட் அல்லது ஸ்வீட், ஸ்யூட்? ! ஏதோ ஒண்ணு புக் பண்ணினாங்க!

      Delete
    4. //இப்படியெல்லாம் வகுத்து வெச்சது அந்தக் காலத்து கிழவன் கிழவி....ங்க தானே!... Attached B/R இல்லாத அந்தக் காலத்துல - எப்படியெல்லாம் சின்னஞ்சிறுசுகள கொடுமைப்படுத்தி இருக்குதுங்க - இந்தக் கிழடுகள்!?...//

      ஹா... ஹா... ஹா....

      Delete
    5. சுவீட் தான் கீசாக்கா.. நாங்களும் ஹோட்டேல்தான் போயிருந்தோம்.. அது ஒரு பாஸனாகி விட்டது:))

      Delete
    6. கடந்த 20 வருடங்களாகத் தான் ஓட்டல்! முன்னெல்லாம் வீட்டில் ராசியான அறை எது என்பதைப் பொறுத்தே ஏற்பாடு செய்வார்கள். அலங்காரங்களும் எங்க வீடுகளில் எல்லாம் பெண்ணின் அண்ணன், அண்ணி, தம்பி ஆகியோர் செய்வார்கள். படுக்கை போடுவதெல்லாம் பெண்ணின் உடன் பிறந்த சகோதரர்கள் இருந்தால் அவர்கள் தான் பொறுப்பு.

      Delete
    7. துரை அண்ணா ஹா ஹா ஹா ஹா...உங்க கமென்ட்...செம...

      கீதா

      Delete
  6. நாங்களும் தியேட்டர் போய் படம் பார்த்து பல வருடம் ஆகிறது.
    தொலைக்காட்சியில் பாகுபலி பார்த்தேன்.


    ReplyDelete
    Replies
    1. நாங்க பார்த்து 30 வருடங்கள் இருக்கும். ஆனால் 2011 ஆம் வருஷம் ரஜினியோட "ஜிவாஜி" படம் மெம் பிஸ் தியேட்டரில் பார்த்தோம். :))))

      Delete
  7. படம் பார்ப்பது எனக்கும் பிடிக்காத ஒன்று. இந்த முறை தமிழகம் வந்தபோது மகள் படத்திற்கு அழைத்துப் போகச் சொல்லியும் போக முடியவில்லை - எனக்கும் விருப்பம் இல்லை! :)

    முத்து வீரா! :) குழப்பம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெஹெ, வாங்க வெங்கட், ரொம்ப நாளாச்சு வந்து! நம் கடன் குழப்பம் செய்து கிடப்பதே! ஹெஹெஹெஹெ!

      Delete
  8. எங்கள் ஆஸ்தான ம.க பையன் நேற்று அலைபேசியில் கொடுத்த காலா பார்த்தேன். ரசினி தெரிந்து நடித்தாரோ, தெரியாமல் நடித்தாரோ.. வியாபாரிகள்.. அவ்வளவுதான். சொல் ஒன்று.. செயல் ஒன்று! கபாலியையே சில காட்சிகள் மட்டும் மாற்றியது போல இருந்தது..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், நான் கபாலியை மயிலாப்பூரில் தான் பார்த்திருக்கேன். :)))) நல்லவேளையா இந்தப் பைத்தியம் எல்லாம் இல்லை! :)

      Delete
    2. நிஜ வாழ்வில் மஹாராஷ்டிர விவசாயிகள் எல்லோருக்காகவும் பாடுபட்டவர் நானா படேகர்! "காலா" படத்தின் வில்லனாமே! அவரை வைத்து ஶ்ரீராமரைக் கேவலப்படுத்தி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

      Delete
  9. அன்புள்ள அப்பா படத்தின் "மரகத வல்லிக்கு மணக்கோலம்" பாடல் என் பாஸுக்கு மிகவும் விருப்பம். நதியாவுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். தமிழ் சினிமா கலாச்சாரப்படி நதியா இறந்துவிட அந்தக் குழந்தையையும் சிவாஜி வளர்ப்பாராம். பாஸ் சொன்னார். பாஸுக்கு பிடித்த இன்னொரு பாடல் "அன்புத்தாயே... அன்புத்தாயே.." இந்த இரண்டு பாடல்களுமே யேசுதாஸ்.

    ReplyDelete
    Replies
    1. சரிதான் கல்யாணத்தோடு சரியாப் போச்சா நதியாவின் பாகம்? என்ன படமோ போங்க! அந்தப் பெண் குழந்தையாக அப்போப் பிரபலமான குழந்தை நட்சத்திரம் யாரானும் நடிச்சிருப்பாங்க! ஒரே உருக்கம் தான் போங்க! நல்லவேளையா முழுப்படத்தையும் பார்க்கலை! சிரிச்சிருந்தேன் எனில் என்னைப் பைத்தியம்னு நினைச்சிருப்பாங்க! :)))))))

      Delete
  10. நானும் அந்தப் படம் பார்க்கவில்லை. பாஸ் சொன்னதுதான்! நான் தியேட்டரில் 2004 இல் ஏதோ படம் பார்த்தபின் சமீபத்தில் பாஹுபலி 2 சத்யம் திரையரங்கில் பார்த்தேன். நான் தியேட்டர் தியேட்டராகச் சுற்றி படம் பார்த்தது என் டீன் ஏஜிலேயே முடிந்து விட்டது. அப்போதும் குறிப்பிட்ட படங்கள்தான் பார்ப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், இப்போவும் ஒரு சில நல்ல படங்கள் வரலாம். நமக்குத் தெரியலை! சின்ன வயசிலேயே தியேட்டர் தியேட்டராச் சுத்தி எல்லாம் படம் பார்க்கலைனாலும் பார்க்காமலும் இல்லை. பெரும்பாலும் சின்னமனூர்ச் சித்தி/சித்தப்பா மூலம் பார்த்த ஜிவாஜி படங்கள். எங்கள் அப்பாவுக்குக் கிடைக்கும் ஃப்ரீ பாஸ் மூலம் சில படங்கள் எனப் பார்த்திருக்கோம். கல்யாணம் ஆனதும் அதுவும் இல்லை! :))) எப்போவானும் அம்பத்தூர் டூரிங் தியேட்டரில் இரவுக்காட்சி 2 படம் போடுவாங்க! அதுக்குப் போவோம். மாமியார், நாத்தனார், மைத்துனர்கள் ஆகியோருக்காக! பின்னர் தொலைக்காட்சியின் மூலமே பல படங்கள் பார்த்தேன்.

      Delete
  11. @ நெ.த.09 June, 2018

    >>> துரை சார்... இதுல ஒரு அர்த்தம் இருப்பதை நீங்கள் கவனிக்கலையா? பயத்துல வெளியே போயிடக்கூடாது என்பதுதான் காரணமாக இருக்கலாம். இன்னொண்ணு, அதுக்கு முன்னால ஒரு ஒழுங்கு (உணவுல) உண்டு...<<<

    ஒரு ஒழுங்கு - உணவும் அதைவிட குறிக்கப்படும் நேரமும்!...

    அதெல்லாம் ஆகிவந்தன ஒருகாலத்தில்!...

    இன்றைக்கு மணமேடைக்கே மது மயக்கத்தில் வருகின்றான் - மணமகன்!...

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் இது தான் நடைமுறை என ஆகிவிட்டது துரை சார். சடங்குகளை யாரும் மதிப்பதில்லை. அதன் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொள்வதில்லை. எங்கும், எதிலும் ஆடம்பரம் தான்!

      Delete
  12. @ Geetha Sambasivam09 June, 2018

    >> என்னோட கடைசி மைத்துனருக்கும், பெரிய மைத்துனர் பிள்ளைக்கும் ஓட்டலில் தான் முதல் இரவு!..<<

    அந்த காலத்தில் பெரிய குடும்பங்களில்

    ஆகி வந்த கட்டில் என்றே இருக்கும்!...
    மணமகனின் அத்தை அல்லது மூத்த சகோதரி, மணமகளின் மூத்த சகோதரி இவர்கள் தான்
    அதனை அலங்கரிப்பார்கள்...

    அந்த அலங்கரிப்பில் மிளிரும் பாசமும் நேசமும் வேறு சில சடங்குகளும்
    அவற்றின் வழியான சந்தோஷமும் ஆத்ம திருப்தியும் ஹோட்டல் அறைகளில் கிடைக்குமா?...

    கல்யாண வீட்டில் பெரியவர்கள் - குழந்தைகள் க்ஷேமமாக இருக்கட்டும் என்று பிரார்த்திப்பார்கள்..
    அந்தப் பிரார்த்தனைகளே நம்மை நல்வழியில் நடத்தும் !..

    ஹோட்டல்காரன் அவ்வாறு நினைப்பானா?...

    காலம் மாறிப் போனது என்கிறார்களே -
    அது இங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார். அதோடு மட்டுமல்ல, அறை வெளியே நின்று நல்ல நல்ல பாடல்கள் எல்லாம் பாடிக் கோலாட்டம், கும்மி எல்லாம் ஆடுவார்கள். குதூகலமான சூழ்நிலையை உருவாக்குவார்கள். நல்ல நேரம் எனக் கணித்து உள்ளே அனுப்புவார்கள். ஓட்டலில் அதற்கெல்லாம் ஏது இடம்?

      Delete
  13. கீசாக்காவுக்கு என்ன ஆச்சு.. ஹொஸ்பிட்டல் போனமா செக் பண்ண்னினோமா என வீடு திரும்பாமல்.. ஹையோ நதியாவுக்கு என்ன கொயந்தே:) என பிபி யை ஏத்திக் கொண்டெல்லோ வந்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:))..

    நாங்களும் சிவாஜி படம் வெளிவந்தபோது கனடாவில் நின்றோம்ம்.. அங்குள்ள தியேட்டரில் பார்த்தோம்ம்.. உண்மையைச் சொன்னா.. இண்டவல் வரை நல்லா உற்சாகமாகப் பார்த்தேன்.. இண்டவல் முடிந்ததும்... என்ன நடந்ததென்றே தெரியாது.. படம் முடிய ஹஸ் தட்டினார் நித்திரையோ என சிரிச்சுக் கொண்டே எழும்பினேன்.. பிக்கோஸ் நான் தியேட்டரில் நித்திரையானால் ஆராலுமே கண்டு பிடிக்க முடியாது:)) அவ்ளோ ஸ்ரெடியா.. அப்படியே படம் பார்ப்பதைப்போல வே நித்திரையாவேன் ஹா ஹா ஹா:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, அங்கே காத்திருந்த ஒன்றரை மணி நேரம் பொழுது எப்படிப் போகும்? அப்போத் தான் பார்த்தேன். இங்கே சில மருத்துவமனைகளில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தாலும் போட மாட்டாங்க! போட்டாலும் நாம் பார்க்க முடியாது! ஒரே பேச்சும், கூக்குரலுமா இருக்கும். இங்கே அமைதியா இருந்தது!

      Delete
    2. ஜிவாஜி படங்கள் தான் தூக்கத்தை வரவைக்கும்னா அந்தப் பெயர் கொண்ட படம் கூட உங்களுக்குத் தூக்கத்தை வர வைச்சதா? ஹாஹாஹாஹா!

      Delete
  14. எனக்கும் உங்களைப்போலவேதான் கீசாக்கா எந்திரன் கூட பிடிக்கவில்லை.. முடிவில் அது இயந்திரம் சண்டையிடுவது ஏதோ கார்ட்டூன் படம் போல இருந்தது.. அதன் பின் அவரின் எப்படமும் பார்க்கப் பிடிக்கவில்லை.. பார்க்கவுமில்லை:))

    ReplyDelete
    Replies
    1. "எந்திரன்" "இயந்திரன்" "யந்திரன்" எதுவும் பார்க்கலையோ பிழைச்சேன்! :)))))

      Delete
  15. சிவாஜியின் மட்டமான படங்களில் நீங்கள் பார்த்ததும் ஒன்று என்று நினைக்கிறேன். இந்த படத்தில்தானே "அன்புள்ள அப்பா,என்னப்பா?" என்று ஒரு பாடல் வரும்? பார்த்ததில்லை. இப்போது தொலைகாட்சியில் போட்டால் கூட உடனே மாற்றி விடுவேன். காரணம் நதியாவுக்கு குரல் கொடுத்திருந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினியின் மோனோடானஸ் குரலை கேட்கப் பிடிக்காது. சிவாஜி நடித்த நல்ல படங்களை பார்க்காமல் இது போன்ற படங்களை பார்த்து விட்டு அவரை குறை சொல்வது என்ன நியாயம்? கர்ர்ர்ர்.

    ரஜினிக்கு ஜோடியாக மீனா, ரோஜா இருவரும் நடித்திருந்த படம் வீரா. அந்தப் படம் இருதார மணத்தை ஆதரிப்பதாக இருப்பதால் பெண்கள் அமைப்புகள் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

    ReplyDelete
    Replies
    1. நான் பார்த்த ஜிவாஜி படங்களின் பட்டியலைச் சொன்னால் பெரிசா இருக்கும். என்ன ஒண்ணுனா இந்தப்பிரபலமான பாலும் பழமும், பாசமலர் இதெல்லாம் பார்க்கலை! அதுக்காக? ஜிவாஜி படமே பார்க்கலைனு ஆயிடுமா? உயர்ந்த மனிதன் படம் மட்டுமே சுமார் பத்துத் தரம் பார்த்திருக்கேனாக்கும்! :)))))

      Delete
  16. சிவாஜியின் மட்டமான படங்களில் நீங்கள் பார்த்ததும் ஒன்று என்று நினைக்கிறேன். இந்த படத்தில்தானே "அன்புள்ள அப்பா,என்னப்பா?" என்று ஒரு பாடல் வரும்? பார்த்ததில்லை. இப்போது தொலைகாட்சியில் போட்டால் கூட உடனே மாற்றி விடுவேன். காரணம் நதியாவுக்கு குரல் கொடுத்திருந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினியின் மோனோடானஸ் குரலை கேட்கப் பிடிக்காது. சிவாஜி நடித்த நல்ல படங்களை பார்க்காமல் இது போன்ற படங்களை பார்த்து விட்டு அவரை குறை சொல்வது என்ன நியாயம்? கர்ர்ர்ர்.

    ரஜினிக்கு ஜோடியாக மீனா, ரோஜா இருவரும் நடித்திருந்த படம் வீரா. அந்தப் படம் இருதார மணத்தை ஆதரிப்பதாக இருப்பதால் பெண்கள் அமைப்புகள் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

    ReplyDelete
    Replies
    1. திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமை இதெல்லாம் ஜிவாஜி படம் இல்லையா? வீரபாண்டியக் கட்ட பொம்மனில் ஆரம்பிச்சு எத்தனை பார்த்திருக்கேன்! எல்லாத்தையும் பார்த்ததால் தானே தெளிவாச் சொல்ல முடியுது! சிரிக்கவும் முடியுது! கல்யாணம் ஆனப்புறமும் கௌரவம், ராஜராஜசோழன் போன்ற படங்கள் பார்த்திருக்கேனே. அப்புறமும் தொலைக்காட்சி தயவால் சில, பல! அவற்றில் ஜிவாஜி நடிச்சே ஒரே படமான "முதல் மரியாதை"யும் அடங்கும்!

      Delete
  17. நானும் சினிமா தியேட்டரில் பார்த்து :) ஆச்சு 20 வருஷம் :) முந்தி ஜெர்மனில சிடி கிடைக்கும் ..யாரவது கியூரியாசிட்டி கிளப்பி விட்டு கம்பியூட்டரில் எப்பவாது பார்க்கிறதோட சரி .இங்கே பாஹுபலி தியேட்டரில் போட்டாங்களாம் இவர் நண்பர் பாக்க சொன்னார் ..30 பவுண்ட் கொடுத்து ஒரு டிக்கட்டுக்கு செலவு பண்ற ஆள் நானில்லை :)
    எங்கூர் மருத்துவமனைகளிலும் டிவி போகும் ஆனா ஒன்லி செய்தி சானல் இல்லைனா கார்ட்டூன்ஸ் .

    ReplyDelete
    Replies
    1. இங்கே பல மருத்துவமனைகள் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தாலும் போடுவதில்லை! இங்கே என்னமோ அதிசயமாப் போட்டிருந்தாங்க! :)) பாஹுபலி நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். சிடி வாங்கி ஏதேனும் நல்ல படங்கள் எனில் அபூர்வமாய்ப் பார்த்திருக்கோம்.

      Delete
  18. துளசி: நான் படங்கள் பார்ப்பதுண்டு. அதுவும் பாலக்காட்டில் இருந்தவரை பார்த்துவிடுவேன். ஆனால் இப்போது குறைந்துவிட்டது.

    கீதா: நான் தியேட்டர் போய்ப் பார்ப்பது என்பதெல்லாம் வெகு அபூர்வம். மகன் இருந்தாலாவது நல்ல ஆங்கிலப் படம் என்று சொல்லி கம்ப்யூட்டரில் பார்ப்போம். தமிழ்ப்படங்கள் நன்றாக இருக்கு என்று சொன்னாலும் கூட எப்போதேனும் தான் பார்ப்பது.

    ReplyDelete
    Replies
    1. முன்னாடி கேபிளில் தொலைக்காட்சி பார்த்தப்போ சோனி, ஜி போன்ற சானல்களில் நல்ல படங்கள் வரும். ஸ்டார் மூவீஸிலும் வரும். இப்போ செட் டாப் பாக்ஸ் வந்ததும் எந்த சானல் எங்கே இருக்குன்னே தெரியலை! போட்டாலும் சரியா வரதில்லை! தொலைக்காட்சி பார்ப்பதே நம்ம ரங்க்ஸ் வீட்டில் இருக்கும்போது தான். இல்லைனா அவரைப் "பொதிகை" சானல் போட்டுட்டுப் போகச் சொல்லுவேன். அதுவும் எப்போவானும்.

      Delete
  19. kaala - indha padam purinchavangaluku adhu pudikum; puriyalana adhu kadupa irukum.. kind of political based movie... not for common genre!!

    ReplyDelete